கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்ணைச் சுழட்டிக்கொண்டு வந்தது. மூன்று நாளாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமில்லை. ஒழுங்கான குளிப்பு முழுக்கு கக்கூசு என்று ஒன்றுமில்லை. ரவியண்ணை வீட்டு விறாந்தையில் கிழங்கு அடுக்கின மாதிரி படுக்கிற இருபது இருகைத்தந்து பேர்களில் போன இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவணைக் கண்ணயரவே விடுவதில்லை என்று பிளான் பண்ணியிருந்தார்கள். க்ர்.. புர்.. என்ற அவர்களின் குறட்டைக்கு கவிண்டு படுப்பதும் காதுகளைப்பொத்திப்படுப்பதும் என்று இவனும் உள்ளநாட்டு ட்ரிக்சுகளைப் பாவித்துப்பார்த்தான். தீபன் அப்பப்ப தன் காலைத்தூக்கி இவனின் தொடைக்குமேல போட்டு அவ்..உவ்.. என்று புரியாத ஏதோ மொழியில் …
-
- 4 replies
- 1.4k views
-
-
அறை எண் 22 சோவென விழும் அருவியின் இரைச்சல் பொங்கியெழும் ஆனந்தத்தையும் தரவல்லதாக இருந்தது. நீண்ட நேரம் அதன் நீரலையில் ஆடியிருக்க வேண்டும். தலைமுடி பிடரியோடு ஒட்டியிருந்தது. ஆடைகள் ஈரமாக உடலைக் கவ்விக் கொண்டிருந்தன. ஈரத்தை உதறி முடிக்கும் முன் நீர்ச்சுழி மலை முகட்டின் எல்லை நோக்கி உந்தத் தொடங்கியது. மாபெரும் உந்தலால் திடீரென கீழே விழ... பள்ளம் பள்ளம்... விழுகையில் ஒரு கணம் மூச்சு நின்றுவிடுவது போல் ஒரு நெஞ்சடைப்பு. திடீரென சுவாசம் முட்டித் திரும்புகையில் ஒரு நீண்ட ஆற்றின் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் சொப்னா. ஆற்றின் இரு மருங்கிலும் புதர்கள், நாணல்கள், கோரைப்புற்கள். நீரின் நடு நடுவே பாறைத்திட்டுக்கள். பாறைகளின் மேல் மோதிக் கொள்ளாம…
-
- 1 reply
- 1.4k views
-
-
வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான். “டேய்! சின்னத்தம…
-
- 2 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் டெக்னாலஜி... டெக்னாலஜி! `கண்டேன் சீதையை...’ என்ற ஹனுமனிடம், `வாட்ஸ்அப்ல பிக்சர் அனுப்பறதுக்கு என்ன?' என அலுத்துக்கொண்டார் ராமர்! - பர்வீன் யூனுஸ் ஆட்டம்... அதிரடி! தனக்காக அமைக்கப்படும் கடுமையான ஃபீல்டிங்கைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான், அடுத்த பாலில் ரன்அவுட் ஆக பெட்டிங் புக்கிகளிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த அந்த அதிரடி பேட்ஸ்மேன்! - தினேஷ் சரவணன் திருடன் ``சார்... சார்... அடிக்காதீங்க. செத்துடப்போறான்’’ என பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி, கூட்டிப்போய் திருடனிடம் மாமூல் வாங்கினார் போலீஸ்! - பெ.பாண்டியன் ஏட்டு சுரக்காய் ``ஏம்பா... நம்ம மாட்டுக்கொட்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமயந்தியைத் தேடுகிறேன். அவளைச் சந்தித்ததும், அச்சந்திப்பு பின்பு தொடர்கதையாகியதும் அதுவே எனது இளமைக்காலத்தில் பல இராசாயண மாற்றங்களை என்னுள் கொண்டுவந்ததும் தற்செயலானதே ஆனால் அதன்பின்பான நினைவுகள் மட்டும் நிரந்தரமானவை . யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டுமைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி நடக்கும்போது வேம்படிமகளிர் கல்லூரி உட்பட யாழ்நகரப்பகுதி தவிர குடாநாட்டின் முண்ணணிப்பாடசாலைகள் கலந்துகொள்ளும் போட்டியாதலால் எம்போன்ற இளவட்டப் பாடசாலை மாணவர்கள் அங்கு ஆயராவதில் தவறேதும் இருப்பதாக அப்போது மட்டுமல்ல இப்போதும் எனக்குத்தோன்றவில்லை. ஓரிரு நாள் நடைபெறும் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டியில் அவ்வேளைய ரோமியோக்கள் நாங்கள் அழையா விருந்தாளிகள…
-
- 8 replies
- 1.4k views
-
-
மரியாதை இருப்பதிலே நல்ல சட்டையாகப் பார்த்து இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். ‘‘என்னம்மா… கல்யாணத்துக்குக் கிளம்பலயா…?’’ வெளியே அப்பாவின் குரல் கேட்டது. வாசலில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த சாந்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கட்டாயம் ‘இல்லை’ என்று தலையாட்டி இருப்பாள், என்று யோசிக்கும்போதே அப்பாவின் குரல் சத்தமாக ஒலித்தது. ‘‘ஏன்டா… கூட்டிட்டு போல?’’ ‘‘நா மட்டும்தான் போறேன்...” ‘‘ஏன்? அது எங்க போவுது வருது. இந்த கிராமத்திலே பிறந்து இங்கேயே வாக்கப்பட்டு கிடக்கு. அதுக்கும் ஆசை இருக்காதா? புள்ளைகளுக்கும் பராக்கா இருக்கும்...’’ ‘‘வேணாம்ப்பா. வெயில் ஜாஸ்தியா இருக்கு. ஞாயிற்றுக்கிழமை வேற… பஸ்ஸெல்லாம் கூட்டமா இருக்கும்...’’ பேசிக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டேன். பாத்தி…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனசுக்குள் என்ன..?! "என்ர அப்பு ராசா. நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியாது மோனை, நல்லாய் இருப்பாய்." கொடுத்த சாப்பாட்டை கையில் வாங்கிய படி அந்த ஆச்சி தன்னை அறியாமலே எங்களைப் பாராட்டுறார். ஏன் ஆச்சி சாப்பிடாமல் இருக்கிறீங்கள். சாப்பிடுங்கோ. " கன காலமப்பு இப்படிச் சாப்பாடுகள் கண்டு.. நீ நல்லாய் இருப்பாய் மோனை" மீண்டும் மீண்டும் ஆச்சியின் வார்த்தைகள் எங்களைப் பாராட்டுவதிலையே குறியாய் இருக்குதே தவிர கொடுத்த உணவை கையால் தொட்டுக் கூடப் பார்க்க முயலவில்லை. இதை அவதானித்தப்படியே நான் சற்று அப்பால் நகர்ந்தேன். அப்படி என்ன தான் இருக்கு அந்த ஆச்சிக்கு எங்களில பாசம் காட்ட, மனதுக்குள் நானே எனக்குள் பேசி ஏக்கத்தை வளர்த்தப்படி மற்றவர்களுக்கும் சாப்பாடு பரிமாறினேன். அவை பரிமாறப…
-
- 4 replies
- 1.4k views
-
-
அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம். அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெ…
-
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
டிட்வாலின் நாய் சாதத் ஹசன் மண்ட்டோ ஆங்கிலத்தில்- காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர் ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே அரணாக அவரவர் நிலைகளில் இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது. காட்டுமலர்களின் வாசனையால் காற்று நிரம்பிக் கனத்திருந்தது. இயற்கை தன் வழியே போய்க் கொண்டிருந்தது. படைவீரர்கள் பாறைகளுக்குப் பின்னே மலைத்தாவரங்களைச் சூடித் தங்களை உருமாற்றிக் கொண்டு ஒளிந்திருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பறவைகள் எப்போதும் போல பாடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. தேனீக்கள் சோம்பேறித்தனமாக இரைந்தன. ஒரு குண்டு வெடிக்கும்போது தான் பறவைகள் திடுக்கிட்டு பறந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
- --- ----------- XXXXX --------------- - --- ----------- XXXXX ---------------
-
- 1 reply
- 1.4k views
-
-
மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -1 ) இந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். அது ஏன்? அறிந்து கொள்ள ஆழ்கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்... கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் 'இல்லை' என்ப…
-
- 4 replies
- 1.4k views
-
-
மீண்டும் ஒரு தொலைபேசி மணி அடித்து நல்ல நித்திரையை குழப்பியது .கதைத்து கேட்கிறது .ஏதோ பதட்டம் .தெரிகிறது.. அவர்களின் வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தில். சந்தோச செய்தியோ துக்க செய்தியோ .என்னவோ என்று ஏக்கம் என்னுள்.இப்படித்தான் ஒரு முறை நடு இராத்திரி தாண்டி ஒரு விடியலில் இலங்கைக்குள் கடல் புகுந்து விட்டதாம்.அது ஏதோ புதிதாக சுனாமியாம் என்னவாமோ என்று ....செய்தி வந்தது .அது போல இப்பவும் வெள்ளம் மழை காற்று புயல் சனம் என்ற சொற்கள் அங்கு அடுக்கப்பட ..என்னையும் மீறி என்னை அமிழ்த்தி வைத்திருக்கும் போர்வையை விலக்கிக் http://sinnakuddy.blogspot.com/2008/12/blog-post.html
-
- 5 replies
- 1.4k views
-
-
நண்பனா பகைவனா பரனும் சுபனும் ஆருயிர் நண்பர்கள். நண்பர்கள் என்றால் ஒன்றாகப்படித்து ஒன்றாக குறும்புகள் செய்து ஒன்றாக வாழ்ந்த இவர்கள். ஒரே நாட்டில் பிறந்து ஒரே தாய்மொழியை கொண்டு ஒரே தாயக பிரச்சனையால் ஒரே நாட்டில் இரண்டு காலகட்டத்தில் ஏதிலிகளாக குடிபெயர்ந்தவர்கள். அவர்களின் அதிஸ்டம் அவர்கள் ஒரே ஊரான டொராண்டோவிலேயே வாழும் சந்தர்ப்பமும் கிடைத்தது. நட்பு மேலும் வளர்ந்து கிளைவிட்டது. ஆளுக்கு ஒருவர் நாளாந்தம் கதைப்பது, உதவுவது,.. வார இறுதிகளில் ஒன்று சேர்வது என நட்பு தொடர்ந்தது. நட்புக்கு, இடையில் வந்த மதுப்பழக்கமும் ..., உரமூட்டியது. வாக்குவாதங்கள் நடந்தாலும் தண்ணி ...... நட்பு வென்றது. காலம் உருண்டது. இருவரும் ஒருவருட காலத்திற்குள் மணவாழ்க்கைக்குள் புகுந்தனர்…
-
- 9 replies
- 1.4k views
-
-
நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல இலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி. 1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்? மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி…
-
- 2 replies
- 1.4k views
-
-
விசித்ரி என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின் மதியப்பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறார்கள் எனவும் சொன்னார்கள். அந்த மதியப் பொழுதில் என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை. அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில்கூட காற்றில்லை.வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக்கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில்.வீட்டுக் கூரைகள், அலுமினியப் பாத்திரங்கள் வெயிலேறிக் கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை. சித்ரலேகா தெருவில் நிர்வாணமாக ஓடிவந்ததையும் அவள் கேசத்தில் தூசியும் புழுதியும் படிந்து போயிருந்ததையும் முத்திருளன் வீட்டின் திண்ணையில் இருந்தபடியே திருகை அரைத்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஆனந்தியும் அவனும் 'தனி'த்துவ காதலும்! என் மௌனத்தைப் புரிந்துகொள்கிறாய் என் அமைதியையும் மகிழ்ச்சியையும் ரசிக்கிறாய் என் அழுகையைச் செவிமடுக்கிறாய் என் விம்மலைக் கூர்ந்து கவனிக்கிறாய் என் பதற்றத்தை உணர்ந்து கொள்கிறாய் நிராகரிக்கப்பட்டு வலியில் துடிப்பதை உணர்ந்து பதறுகிறாய் ஒவ்வொரு முறையும் நேசித்தவர்களால் நேசிக்கப்பட்டவர்களால் கைவிடப்படுகையில் எனக்காக கண்ணீர் சிந்துகிறாய். எ…
-
- 2 replies
- 1.4k views
-
-
----------------------------------------------- -----------------------------------------------
-
- 0 replies
- 1.4k views
-
-
பறவைகள் கத்தின பார் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... க.சீ.சிவகுமார், ஓவியம்: டிராட்ஸ்கி மருது தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும் அம்மாவையும் ஏற்றிக்கொள்கிறார். அங்கிருந்து கிழக்கு சென்று, வடக்கு திரும்பி மேலும் மேற்கு நோக்கிப் போகிற கார், 10-ம் நாள் காரியத்துக்குப் போகும் அஞ்சலி மௌனத்தை அவ்வப்போது சுமக்கிறது. அம்மாவின் ஊரைச் சமீபித்தாயிற்று. வேலுச்சாமி மாமாவின் இழவுக்குப் போக முடியாத நான், 10-ம் நாள் காரியத்துக்குப் போகிற விதமாக இந்தப் பயணம் நேர்ந்திருக்கிறது. ''அண்ணன எரிச்சது இந்த இடத்துலதான்'' - கார், கணக்கன்பரப்பைக் கடக்கும்போது ராம…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஹாட்லிக் கல்லூரியின் லண்டன் கிளையினர் 24.04.11 அன்று நாத வினோதம் என்ற நிகழ்ச்சியை நடத்திருந்தினர். london croydon இல் உள்ள fairfield hall உள்ள பிரமாண்டமான அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர் , இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு பிரபல பாடகர் உன்னிக்கிருஸ்ணன் வருகை தந்திருந்தார்.இந்த பிரமாண்டமான அரங்கம் நிறைந்ததின் காரணமாக பலர் டிக்கட் கிடைக்காமால் திரும்ப வேண்டி இருந்தது.இந்நிகழ்ச்சிக்கு போகும் போது நாத வினோதம் என்ற பெயரை பார்த்த பொழுது ஏதோ சங்கீதக் கச்சேரி நடக்க போகுது அலுப்படிக்க போகுது என்று நினைத்து போனேன் .ஆனால் சினிமா பாடல்களை பாடி அரங்க நிறைந்த கரகோசங்களுடன் நிகழ்ச்சி நடந்தது. எனது வகுப்பு தோழனும் நண்பனுமாகிய சிறிக்குமார் நிகழ்ச்சிய…
-
- 2 replies
- 1.4k views
-
-
வழித்துணை நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிக்கொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்க்கு காரணமாக இருக்கும் குடிசைகள், குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்ன சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட், அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர் பைக்கில் வந்த இருவரும். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே தாயபாஸ் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு கும்பலில் இருந்து இரண்டு பேர் இவர்களை நோக்கி வந்தனர், வேகமாக வண்டியில் வருபவார்களை நிறுத்துவது போல கையை அசைத்தனர். “சார் நிற…
-
- 5 replies
- 1.4k views
-
-
உலகச் சந்தியில்… விமானம் யேர்மனியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. எனது மனைவி தலையை என்மேல் சாய்த்தபடி நித்திரையாகி இருந்தாள். எனக்குமட்டும் நித்திரை வரவில்லை. விமானம் எமது நாட்டை விட்டு வெகுதூரம் விலகி, வேகமாக வரவர, என் நினைவு மட்டும், எதிர் திசையில் அதைவிட வேகமாகத் தாயகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் நித்திரைப் பாயில் எதை எதையோ யோசித்தபடியே கிடப்பன். "அம்மா, வெய்யில் குண்டியில படும்வரைக்கும் படுத்துக்கிட, என்ன பொறுப்பிருக்கு… பகல் பகலா ஊர் சுற்றுறது… இரவிரவாக காவாலியள் கடப்புளியள் மாதிரி சந்தியில நிண்டு வம்பளக்கிறது,,," என்று பேசியபடி என்னைக் கடந்து சென்றுவிடுவார். சிறிது நேரம் செல்ல… "டே... தேத்தண்ணி வைக்கவா…." "ஓமணையம்மா வை…" என்றபடி…
-
- 5 replies
- 1.4k views
-
-
குடந்தை பஸ் நிலையம். மார்க்கட் இழந்த நடிகையைப் போல சீந்துவார் இன்றி, நின்று கொண்டிருந்தது.அந்த டப்பா பஸ். ஓட்டுநர் ராசு வண்டிக்கு அடியில் அமர்ந்தவாறு கவலையுடன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தான். ஹூம்.. அடுத்த எஃப்.சி. வரை வேற ஒரு ஸ்பேர் பார்ட்டும் மாத்தாம இந்த டப்பாவை ஓட்டியாகணும்...! சுப்பய்யர் பஸ் சர்வீஸ் ஒரு காலத்தில் ஓஹோ என்று ஓடியது. 12 வண்டிகள். ஆனால் சுப்பய்யருக்கு ஏகப்பட்ட பொண் குழந்தைகள். எல்லாத்தையும் கட்டிக் கொடுக்க கொட்டிக் கொடுத்தும் வட்டிக் கொடுத்தும் அழிச்சது போக இந்த டப்பா மட்டும் மீதி. இன்னொரு பொண்னு இருக்கு. அதுக்காக இந்த ரூட்டை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காரு சுப்பய்யரு. ராசுவோட அப்பாவும் இந்தக் கம்பெனியில டிரைவரா இருந்தாரு. அப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒருசொட்டுக் கண்ணீர் - சயந்தன் 02.12.2012 பனிகொட்டிய காலை தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும் இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை. அவன் மழையின் ஓசையைத் திரும்பவும் நினைவுபடுத்தினான். நரம்புகளில் சில்லிட்டது. அறையின் ஹீற்றரைச் சற்று அதிகரித்துப் பஞ்சுப்பொதி போலான போர்வையால் மூடிக்கொண்டால் கதகதப்பாயிருக்கும். எழும்பிச் செல்லத்தான் அலுப்பாயிருந்தது. விழிப்பு வந்துவிட்டதால் இனிஅலார்ம் கிணுகிணுக்கும். உடலை முறுக்கி வீசியதுபோல …
-
- 6 replies
- 1.4k views
-
-
றெயில் பயணம் http://fr.wikipedia.org/wiki/Fichier:Attentat_du_RER_B_%C3%A0_la_station_Saint-Michel_2.jpg 1995 ல் ஓர் அதிகாலை நேரம் மனோவினது நித்திரைக்கு உலை வைத்தது அவனது அலாரம் . மனோ வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு , இதனால் மனோ பூனைத் தூக்கத்தை சர்மிளாவின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு . அவனது கை கட்டிலின் மறுபுறம் துளாவியது . அந்த இடம் வெறுமையாகவே இருக்க இந்த நேரத்தில் சர்மி எங்கே போய்விட்டாள் ? என்று நினைத்தவாறே அவன் கட்டிலில் இருந்து விலுக்கென்று எழுந்தான் மனோ . வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது , சர்மை முழுகிவிட்டு பல்கணியில் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் தெரிந்தது . அவனுக்கான கோப்பி ஆவி பறந்தபடி குசின…
-
- 10 replies
- 1.4k views
-
-
”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் புனைவு ! நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். தனது நாளேட்டின் தலையங்கத்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊடக நேர…
-
- 0 replies
- 1.4k views
-