கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும் பிரேமவதி மனம்பேரியின் கதை தமிழில் : ஃபஹீமாஜஹான் ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினர் 1951ம் ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு 'பிரேமவதி மனம்பேரி' எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக 'பிரேமவதி மனம்பேரி' நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள். இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தா…
-
- 25 replies
- 3.3k views
-
-
என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது. என் முகத்தை தொட்டிலுக்கு மேலே கண்டதும் உடம்பை தூக்கி தூக்கி அடிப்பாள். தன்னைத் தூக்கவேண்டும் என்ற செய்தியை அப்படித்தான் முழு உடம்பாலும் சொல்வாள். வெகு சீக்கிரத்திலேயே நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாமல் போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த திசையில் திரும்பி பார்த்து அழத் தொடங்குவாள். நான் வெளியே போகிறேன் என்பது அவளுக்கு எப்படியோ தெரிந்துவிடும். அதன் பின்னர் அவள் தூங்கும் சமயமாக நான் வெளியே புறப்படும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். மகளுக்கு இரண்டு வயது நடந்தபோது என்னை ஆச்சரியப்படுத்த ஆரம்பித்தாள். நான் எப்போவாவது பயணம் புறப்பட ஆரம்பித்தால் உடனேயே அழத் தொடங்கி திரும்பி வரும்வரை நிறுத்…
-
- 17 replies
- 2.2k views
-
-
ஆசான் 1988..... இதுதான் அந்த ஆண்டு. சரியாக இருக்கும். என் வாழ்நாளில் நான் சந்தித்த இன்னொரு ஆளுமையின் கதை இது. யாழ்ப்பாணத்து நரக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், இவை எல்லாவற்றிற்கும் புதியவனாக நான் என்று என்னை நான் நிலைபெறச்செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்திகொண்டிருந்த நாட்கள் அவை. சித்தியின் தயவில் அநாதைகள் விடுதியில் சேர்க்கப்பட்டு, மறுநாளே மிக்கேல் கல்லூரி வாசலில் கட்டைக் காற்சட்டை அணிந்துகொண்டு கமலா டீச்சரின் வரவிற்காக காத்திருந்த அந்தக் காலை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. விசாலமான பாடசாலை, இரைச்சலான மாணவர் கூட்டம், உயர்ந்த இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் தெரிந்த …
-
- 35 replies
- 4.7k views
- 1 follower
-
-
கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! ம.காமுத்துரை ‘‘நா ப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்... என்னா?’’ புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாச…
-
- 1 reply
- 919 views
-
-
கரண்டி ஏந்திய... 3000 பேர். குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கான்டிராக்டர் திடீரென்று ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது. துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது. இனி மண்வெட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்? துரத்தி விட்டார். 40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள். 2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள். புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது. வேகமாக வேலை செய்தது. "புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மண்வெட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியி…
-
- 1 reply
- 572 views
-
-
நீக்கல்கள் – சாந்தன் அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் அதுவுங்கூட அரும்பொட்டு நேரம்… வீட்டிலிருந்தே ‘ஸ்பெஸிம’னை எடுத்துக் கொண்டு போக முடியாது. கொஞ்சம் முந்திப் பிந்தினால், இவ்வளவு பாடும் வீணாகி…
-
- 5 replies
- 3.6k views
-
-
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் - ரிஷபன் கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள். டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல" கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை. "வேற எடம் பாரு" என்றான் முறைப்பாக. "பஸ்ஸுல எடம் இருந்திச்சுன்னா.. நான் ஏன் ஒங்களைப் பிரிக்கப் போறேன்.. தயவு பண்னுப்பா..…
-
- 5 replies
- 7.4k views
-
-
(1) குப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. ´´செத்து விட வேண்டும்´´. இடுப்பிலிருக்கும் குப்பியை எப்படிக் கடிப்பது ? வீடு கொடுத்தவர்களின் கதி என்னாயிற்றோ தெரியவில்லை. அவர்களையும் அள்ளியிருப்பார்கள். என்னைப் போலவே கைகளைப் பின்னால் முறித்து தலையைத் தேய்த்து… ´´எங்கு பிசகியதெனத் தெரியவில்லை. ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ? அருள் இடத்தைவிட்டு அகன்றிருப்பான் என்றே தோ…
-
- 5 replies
- 1.5k views
-
-
நிலையற்ற வாழ்வுடன்..... [ கதை கருத்துக்களம் அரட்டை பகுதிக்கு அல்ல...! ] பாகம்-1 தொடர்கதை ::... நெற்றியில் சுரக்கும் வியர்வைத்துளிகளை தனது சேலைத்தலைப்பினால் துடைத்து விட்டுக்கொண்டு வீதியின் ஓரமாக இருந்த அம் மரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டாள் கமலம். தனது சேலை முடிப்பில் இருந்து கொஞ்சப்பணத்தினை எடுத்து எண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவளின் கண்களில் அவ்வளியாக ரோந்தில் வந்த இராணுவத்தினர் கண்களில் பட்டனர். தனது எண்ணும் பணியினை இடையிலையே கைவிட்டவளாக நிமிர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று நிமிடங்களில் அருகில் வந்தவர்கள் "ஏ அம்மா இங்க இருக்கக் கூடாது எழும்பி அங்கால போய் இருங்க.…
-
- 1 reply
- 954 views
-
-
[size=4]எனக்கு தெரிஞ்ச நாட்களிலேயே எங்கட அப்பா படு சுழியன்.[/size] [size=4]அப்பாவுக்கு முந்தி ஒழுங்கான வேலை கிடையாது.பிறகு [/size] [size=4]புலிகளின்ர காலத்தில அவங்கட அலுவலகம் ஒன்றில [/size] [size=4]வேலை செய்தார்.அப்ப புலி என்ற நினைப்பிலேயே இருப்பார்.[/size] [size=4]இப்ப தாடிக்காரரோட வேலை செய்யுறார்.இப்ப இந்த நினைப்பில [/size] [size=4]இருக்கிறார்.[/size] [size=4]நான் வெளிநாட்டுக்குப்போனதுக்கு இப்பதான் ஊருக்கு வந்திருக்கிறன். [/size] [size=4]நான் இன்றைக்கு கனக மாமாவிட்ட போகக்கேட்டன்.அப்பா வேணாம் [/size] [size=4]என்றிட்டார்.முந்தி அப்பாவும் கனக மாமாவும் நல்ல ஒட்டு.எங்களுக்கு [/size] [size=4]அவை நிறைய உதவி செய்திருக்கினம் .நாங்களும் வீட்டுல இரண்டு [/size] …
-
- 10 replies
- 921 views
-
-
ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இரகசியமாக உங்களுக்குமட்டும் பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன். எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன். சில நொடி தாண்டியிருக்காது. அண்ணை! அண்ணை! என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்? எதிர் வீட்டிலிருந்து குரல் வந்தது. அது.... எதோ யோசனையில கவனிக்கேல்லை என்று சமாளிச்சன். பரவாயில்லை. நான் வீட்டிற்குப் புதுத் தொலைபேசி இணைப்பு எடுத்திட்டன் அதுதான் உங்களுக்கும் இலக்கத…
-
- 11 replies
- 2.2k views
-
-
போனவாரம் அப்பாவிடம் தொலைபேசி அழைப்பு . "வாற சனி ஒரு முதியோர் நிகழ்வு இருக்கு நேரம் இருந்தா வா தம்பி " சனி வெளிக்கிட்டு போனேன் ,மண்டபம் நிரம்பிய சனம் .முக்கால்வாசி முதியோர்கள் .மிகுதி அவர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் .ராதிகா சிற்சபேசன் பிரதம விருந்தினர் ,அதைவிட வேறு சில அரசியல் பிரமுகர்கள் . பேச்சு ,நடனம் ,பாட்டு ,வில்லுபாட்டு ,நாடகம் என்று நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது .முதலில் சிற்றுண்டியும் தேநீரும் தந்தார்கள் .பின்னர் இரவு உணவும் பரிமாறினார்கள் .மிக சிறப்பாக முதியோர்கள் இந்த நிகழ்த்தியதை பார்க்க மிக சந்தோசமாக இருந்தது . அங்கு பேசியவர்களின் உரையை கேட்க எனது அப்பாவை பற்றியும் பெருமையாக இருந்தது . முதியவர்கள் தங்கள் பொழுதை கழிக்க mall இல் பின்னேரம் கூடும் போது அதன் …
-
- 5 replies
- 1.6k views
-
-
அதிர்ஷ்டம் ‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத் தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன். ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார். ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன். ‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என்…
-
- 1 reply
- 1k views
-
-
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.) பக்தா ஏன் அழுகிறாய்? கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன். சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம். இதுவா…
-
- 61 replies
- 7.1k views
-
-
கௌரியின் சிநேகிதன் உடல் முழுவதும் வியர்வையில் ஊறித் திளைக்க, தன்னை கடந்துச் செல்லும் பேருந்துகளை எதையும் கவனியாதவனாய் பதற்றத்துடன் நின்றிருந்தான் நாராயணன். அவனது கால்கள் ஓரிடமென்றில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அலையோடியபடியே இருந்தன. கண்கள் தொலைவில் பேருந்து நிலையத்தின் மைய வாயிலில் நிலை கொண்டிருந்தது. தனது செல்பேசியை எடுத்து நேரத்தை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டான். கௌரி வருவதாக சொல்லியிருந்த நேரத்திற்கு இன்னும் கால்மணி நேரம் மீதமிருந்தது. நாராயணன் வகுப்பில் பயின்றவள்தான் கௌரி. வயதில் நாராயணனுக்கு இரண்டு ஆண்டுகள் மூத்தவள் என்றாலும் சிறுவயதில் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டவள் என்பதால் அவளும் நாராயணனின் வகுப்பில் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
குசலாம்பாள் என்னும் செயின் புளொக் யதார்த்தன் Yulanie ஆயிரத்தித்தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி, “நடுவில்” என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி, கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ எப்போதும் நிறையப்பக்கங்களைச் செலவழித்து வெய்யோன் எழுதிக்குவிப்பதை அம்மான் …
-
- 1 reply
- 1.6k views
-
-
மீனாச்சிபாட்டி(சிறுகதை) பாட்டிக்கு ராத்திரிபூராம் தூக்கம் வரல பொறண்டு பொறண்டுபடுக்குது குளிருவேற வீட்டுல எட்டாவது மகனோடபொண்டாட்டியும் ரெண்டுபேரப்புள்ளைகளும் நாளைக்கி ஆர் ஆரெல்லாம் வருவாக அப்பத்தான்னுகேட்டு தேஜா வருவாளா கோபிவருவானான்னு கேட்டுகளைச்சுப்போயி இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சுதுக மருமக அவ பேத்திதான் அம்மாயி உங்கமகன் அதான் என் வீடுக்காரரு நாளைக்கி வரலயாம் நு சொல்லிட்டு படுக்கப்போனா. ஏம்மா மாவெல்லாம் ஆட்டிவைச்சிட்டயா சட்ணிக்கி சாமானெல்லாம் வாங்கிவைச்சிட்டயான்னு கேட்டுக்கிட்டே இருந்துச்சு மீனாட்சிபாட்டி அதுக்கு உன் பிள்ளக பேரம்பேத்தி அம்புட்டுப்பேரும் வாராகன்னவன்ன ஒன்னபுடிக்கமுடியல வீ…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
"பாட்டி சொல்லைத் தட்டாதே" நான் இப்ப வளர்ந்துவிட்டேன். பொறியியலாளராக வேலை செய்கிறேன். ஊர் உலகம் எல்லாம் சுற்றி திரிகிறேன். எத்தனையோ விதம் விதமான மனிதர்களையும் பண்பாடுகளையும் சந்திக்கிறேன். என்றாலும் நான் கண்ட, அனுபவித்த பாட்டி - பேரன் தொடர்பை எனோ எங்கும் முழுமையாக காணவில்லை? நான் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறக்கும் பொழுது என் அம்மம்மாவோ அல்லது அப்பம்மாவோ இல்லை. என்றாலும் எங்கள் உறவினரான ஒரு பாட்டி, தன் மகன் மருமகளுடன் எம் அருகில் வாழ்ந்து வந்தார். அவருக்கு பேரனோ பேத்தியோ இல்லை, ஆகவே நாம் எல்லோரும் அவருக்கு பேரன் பேத்தியே!. நாம் அவரை அப்பாச்சி என்றே அன்பாக கூப்பிடுவோம். நான் சின்னவனாக இருக்கும் பொழுது, பெரிய குழப்படி இல்…
-
- 0 replies
- 775 views
-
-
" ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்தி…
-
- 6 replies
- 2.9k views
-
-
தொழுவத்திலிருந்து கட்டியிருந்த மாட்டின் அழுகுரல் கேட்டு நினைவு திரும்பினார் கந்தர். எண்ணக்கோவைகள் எங்கொங்கோ சுழன்று சம்பந்தம் சம்பந்தமில்லாத இடத்துக்கு சென்று திரும்பவும் தொடங்கிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தன. யோசிச்சு யோசிச்சு மண்டையை உடைச்சாலும் தீர்வில்லாமல் தவித்தார். இறந்த போன மனிசியையும் நினைத்து http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post_21.html
-
- 22 replies
- 3.8k views
-
-
பங்குனி மாதம் என்றாலே எனக்கு கொஞ்சம் பயம் தான். பயம் மட்டுமல்ல படபடப்பு, வெறுப்பு, சோகம், தனிமை என அனைத்தும் ஒன்றாக வந்து கொல்லும். "பள்ளிக்கூடத்துக்கு போகாமல் ஊர் சுத்தி கொண்டு திரியுங்கோ" என அப்பாச்சி பேசும் போது; எனக்கும் புரியவில்லை. என்னை அழைத்து சென்ற அப்பாவுக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்த மாதம் தரவிருந்த பரிசு. பொதுவாக ஆண்டின் இறுதி மாதங்களில் ஊருக்கு செல்வது தான் வழக்கம். அப்பொழுது தானே எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கும். அந்த வருடம் ஆண்டின் இறுதியில் அப்பாவிற்கு வேலையில் விடுமுறை கிடைக்காததால் பங்குனி மாதத்தில் சென்றோம். ஊரில் கொஞ்சம் போரின் கோரம் அதிகமாக இருந்ததால் அண்ணன்களும் தங்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் பங்கர் அருகே நாட்களை கழித்து கொண்டிருந்தார்…
-
- 20 replies
- 3.7k views
-
-
நம்பிக்கையாளன் – ஜெயமோகன் திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ! ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் இருக்கிறது. ‘ ‘ இளைஞன் திடம்பெற்று மெல்ல சொன்னான். அதை அவன் மீண்டும் மீட்டினான். வெறும் ஒலி மட்டும்தான் கேட்டது . ‘ ‘இந்த ஒலியைக்கேட்டு சொற்கத்துக்கா போகப்போகிறாய் ? ‘ என்றார் ஒருவர். பிறர் புன்னகை செ…
-
- 0 replies
- 399 views
-
-
-
தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான். ‘‘பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு. கொஞ்சம் இரு... உன் பையன் பேசுறான்!’’ சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான். ‘‘அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க. நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க. பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!’’ - அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெட்போனில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோகுலின் முகம் பிரகாசமானது. உடனே கிளம்பியவர், இரண்டு மணி நேரத்தில் பையன் சங்கரோடு வந்தார். நடந்ததை செல்வராகவனிடம் விளக்கி…
-
- 1 reply
- 1.4k views
-
-
வேலை ‘பேசாம வி.ஆர்.எஸ் கொடுத்துடப் போறேன்!’’ - வசந்தன் சொன்னான்.‘‘உங்களுக்கு இன்னும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கே?’’‘‘இருந்துட்டுப் போவுது. அந்த நாலு வருஷ சம்பளத்தையும் கம்பெனில மொத்தமா கொடுத்துடுவாங்க. நமக்கு லாபம்தானே?’’‘‘பெரிய தொகையா வருமே! அப்படியே சேமிப்பில போட்டா வட்டி வரும். இல்லீங்களா?’’‘‘அது மட்டுமில்ல... பென்ஷனும் வரும்!’’‘‘கேட்கவே சந்தோஷமா இருக்குங்க. நாளைக்கே வி.ஆர்.எஸ் கொடுத்துடுங்க!’’ என்றாள் வசந்தனின் மனைவி. சொன்னபடியே செய்தான் வசந்தன். கை நிறைய பணம் வந்தது. ‘‘அப்பாடா! இனிமே அதிகாலை எழுந்து அவசர அவசரமா கம்பெனிக்குப் போக வேண்டாம். ஜாலியா தூங்கலாம், டி.வி பார்க்கலாம்’’ என மகிழ்ச்சியாகத் தூங்கிப் போனான் வசந்தன்.‘‘என்…
-
- 0 replies
- 1.2k views
-