கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
திருந்தா உள்ளங்கள் எம் தொப்புள் கொடி உறவுளகின் அவலங்களை இந்த சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் எம்மவர்களின் உரிமைப் போராட்ட நிகழ்வு ஒன்று ஆர்த்தி வாழும்நாட்டிலும் முன்னெடுக்கப் பட்டிருந்த செய்தியை அவள் அறிந்து அதில் தன்னையும் முழு ழூச்சாக அர்ப்பணித்தவள் மற்ரவர்களையும் அதில் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்பற்காகவும் பல இன்னல்கள் மத்தியில் தன் பள்ளிப் படிப்பையும் கவனிக்காது அயராத பணியை செய்ய தொடங்கினாள். இதனால் வீட்டிற்கு வரும் நேரம் தாமதமாகவே அவள் அம்மா அவளை பார்த்து உனக்கு சோதினை வருகுது சும்மா ஊர் உத்தியோகத்தில திரியுறாய் நாளைக்கு உதே உனக்கு சோறு போட போகுது.... சும்மா விட்டிட்டு உன்ர அலுவலை பார் என திட்டினாள். அவளுக்கு அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் …
-
- 4 replies
- 1.7k views
-
-
ரமணன் அன்று தான் ஊருக்கு வருகிறான் வந்து தான் வைத்திருந்த பணத்தை வைப்பிலிடுவதற்க்காக வங்கிக்கு செல்கிறான் அன்று அவன் கண்டது ஒரு வேதனையான காட்சி அந்த காட்சியை பார்த்ததும் அவனது மனதுக்குள் ஆயிரம் கேள்வி அலைகள் அவனுள் எள மொனமாகி முகாமையாளரான அவனது நண்பன் ரவி சந்திரனை அணுகி அங்கே எதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என கேட்க அவனும் அடகு வைப்பதற்க்காக வரிசையில் நிற்கிறார்கள் என்று கூற அவனை அறியாமலேயே கண்ணீர் துளிகள் அவனது சட்டையை நனைக்கிறது . அங்கு பார்த்தது அவனுடன் கல்வி பயின்ற கலை பிரிவு மாணவி லோஜினியை தன்னுடன் சில வார்த்தைகள் பேசியதால் அவள் வாழ்க்கையில் இன்று இந்த நிலைமையா ? என்று அங்கிருந்து வெளியே வந்து தனது ஊர்மைதானத்தில் இருக்கும் ஆல மரத்தின் நிழலில் இருந்து பழ…
-
- 16 replies
- 3k views
-
-
திருந்தி விட்டான் ஓர் தமிழன்...... சிறு கதை.... கிருபாவும், ஜீவனுமாக அவசர அவசரமாக வெளிக்கிட்டுக் கொண்டிருக்க தொலைக்காட்ச்சியில் 6 மணி செய்தி தொடங்கும் சத்தம் கேட்க கிருபா... '' ஜீவன் நேரமாச்சு பொம்பிள்ளைபோல வெளிக்கிடாம கெதியென்று வெளிக்கிடடா..'' என்று கிருபா அவனை அவசரப்படுத்தினான். '' மச்சான் தெரியும் தானே... நீ ஏன் அவசரப் படுகிறாய் எண்டு...அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுப் போடு பெட்டையளோடையும் சேட்டைவிட்டுட்டு... வந்து பிரண்டு கிடக்கிறத்துக்குத் தானே..'' என்றான் ஜீவன் சிரித்தபடி. '' தெரிஞ்சாய் சரி..அனுபவிக்கத்தானே போறது வேற என்னத்துக்கு மச்சான் போறது சரி..சரி இறங்கு மச்சான்...'' என்று சொல்லியவண்ணம் கிருபா காரை நோக்கி நடக்க ஜீவனும் அவனைத் தொடர்…
-
- 6 replies
- 1.9k views
-
-
திருமதி. பெரேரா: இஸுரு சாமர சோமவீர පෙරේරා මහත්මිය | ඉසුරු චාමර සෝමවීර | தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் திருமதி. பெரேரா விழித்துக் கொண்ட போது விடிந்து விட்டிருந்தது. மின்விசிறியின் காற்றுக்கு நுளம்பு வலை இலேசாக அசைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பறவைகள் கீச்சிடுவது கேட்டது. ஜன்னல் அருகேயிருக்கும் பிச்சிக் கொடியின் கிளைகள் தோற்றுவித்த நிழலானது அறையினுள்ளே ஒரு சுவரில் படிந்து ஆடிக் கொண்டிருந்தது. அலாரம் வைக்காவிட்டாலும் கூட ஏனைய நாட்களிலென்றால் இந் நேரத்தில் திருமதி. பெரேரா விழித்தெழுந்து வீட்டில் நிறைய வேலைகளை செய்து முடித்திருப்பார். இப்போது என்ன நேரமிருக்கும் என்பதை திருமதி. பெரேராவால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஜன்னலின் கண்ணாடி வழியே மிகக் கடுமையான வெயில் உள்ளே …
-
- 2 replies
- 840 views
-
-
திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின் அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்துப் பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழு…
-
- 0 replies
- 911 views
-
-
திரும்பி வந்தவன் யோ.கர்ணன் வெட்கத்தை விட்டிட்டு உண்மையை சொன்னாலென்ன. அம்மா இதைச் சொல்லேக்க எனக்கு பெரிய சந்தோசமாயிருந்தது. ஏதோ இவ்வளவு நாளும் இந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்து, அது இப்பதான் அம்மாவின்ர வாய்க்குள்ளயிருந்து வெளியில வருது என்ற மாதிரியான ஒரு சந்தோசம். எனக்கு ஒரு நிமிசம் என்ன செய்யிறதென்டே தெரியேலை. இது மட்டும் பாக்கியராஜ்சின்ர பட சிற்றிவேசனாக இருக்க வேணும், இந்த கணத்தில இளையராஜாவின்ர மியூசிக்கில இரண்டு வரிசையில இருபது பொம்பிளையள் கையில பூத் தட்டோட ஒரு பரத நாட்டிய ஸ்ரெப் எடுக்க, பின்னணியில ஒரு கிராபிக்ஸ் தாமரை வரும். அதுக்குள்ளயிருந்து நானும், கச்சை கட்டிக் கொண்டு என்னை கலியாணம் கட்டப் போற பொம்பிளையும் வந்திருப்பம். …
-
- 35 replies
- 5.3k views
-
-
திரும்பி வராத குரல் – யோ.கர்ணன் ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளின் மத்திய பகுதியில் அது நடந்தது. யாழ்ப்பாணத்தின் இருபாலையிலுள்ள முகாமொன்றின் சமையல்கூடத்திற்கு பக்கத்தில், ஒரு பின்மதியப் பொழுதில் சத்தியப்பிரமாணத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியாமல், நானும் என் வயதையொத்த இன்னும் இரண்டு நண்பர்களுமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். அது நாங்கள் இயக்கத்திற்கு சேர்ந்த புதிது. சத்தியப்பிரமாணத்தை மனனம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடெல்லாம் அப்பொழுதில்லை. எங்களைத்தான் ஆர்வக் கோளாறு விடவில்லை. முகாமிலிருந்த சீனியர்கள் காலையில் சத்தியப்பிரமாணமெடுப்பதைப் பார்த்ததும் பெரும்பாலானவர்களிற்கு இருக்க முடியாமல் போய்விட்டது. சீனியர்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கவனித…
-
- 6 replies
- 1.1k views
-
-
தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வரு…
-
- 3 replies
- 1.9k views
-
-
திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும் கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது. ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுக…
-
- 0 replies
- 819 views
-
-
என்னடா கடைசியா இவனும் அறுகக்க வெளிக்கிட்டான் என்று யோசிக்காதையுங்கோ இப்பகொஞ்ச நாளா ஊர் சம்பந்தமான பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் சநதர்ப்பங்கள் கிடைத்ததன் விளைவுதான் இது. ஊரில பொதுவாக கோயில் திருவிழாக்கள் தான் பெரியோர் முதல் சிறியோர் வரை கொண்டாட்டங்களின் மையம்.கலை நிழச்சிகளை ரசித்தால் என்ன,கச்சான் தும்பு மிட்டாய் போன்றவை வாங்கி சாப்பிட்டால் என்ன,பெரிசுகள் தங்கள் மலரும் நினைவுகளை மீட்ப்பதும் இளசுகள் உயிர்ச்சிலைகளை ரசிப்பதும் சிறுசுகள் தேர்முட்டியில் நித்திரையிலிருக்கும் தங்கள் சகாக்களுக்கு மீசை வைப்பது தொடக்கம் வால் கட்டுவது என்று சகல திருவிளையாடல்களுக்கும் என்று இந்த திருவிழாக்கள் களைகட்டும். இதை விட தமது வசதி வாய்ப்புகளை மற்றவர்களுக்…
-
- 17 replies
- 8.6k views
-
-
திருவேட்கை by ப.தெய்வீகன் 01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட். வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்க…
-
-
- 2 replies
- 773 views
-
-
திருவையாறு -எஸ். சங்கரநாராயணன் கண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல… என்ன ஸ்வரம் அது, என்று மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவற்றின் துல்லியம் கவிதைத் திவலைகள். மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. …
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை - சிறுகதை ஜா.தீபா, ஓவியங்கள்: ஸ்யாம் சுபலன் அமைதியாக அமர்ந்திருந்தார். சிக்கலான முடிவுகள் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் அன்று, அவரது மனம் கொதிப்பில் இருந்தது. தூரமாகத் தெரிந்த மலைச்சிகரங்களை இலக்கு இன்றி பார்த்துக்கொண்டே இருந்தார். குரு நாட்டில் இருந்து காந்தார தேசத்துக்கு, இதுவரை திருமணத்துக்கான அழைப்புகள் மட்டுமே வந்திருக்கின்றன; முதன்முறையாக திருமணச் சம்பந்தம் தொடர்பாக தூது வந்திருக்கிறது. `இது சரிப்படாது. இல்லை... ஏன் சரிப்படாது? குரு வம்சத்தின் பட்டத்து மகிஷியாகும் யோகம் காந்தாரிக்கு இருக்கக்கூடும். ஆனால்...' நினைக்கும்போதே அவர் அடிவயிற்றை என்னவோ செய்தது. அப்போதுதான் அந்த அலறலும் கேட்டிருக்க வேண்டும். ஆழ…
-
- 0 replies
- 2k views
-
-
திரை மறைவில் ! அம்மா இதுதானா அப்பா படிக்கும் பள்ளிக்கூடம்? தோளில் சால்வை சாரம் சண்டிக்கட்டு சவரம் செய்யாத முகம். அருணன் கூடாரத்தின் முன் நிற்கிறான். பின்புறமாக கைக்குள் மேல் கைவைத்து ஆழ்ந்து யோசனை கதிரவன் கண்திறந்து இரு மணித்தியாலம். செங்கதிர்கள் சுடத்தொடங்கின. "எட்டு மணியாச்சு வேலைக்கு போக இல்லையே..? " மனைவி மதியின் குரல். 'ம்.. போகத்தான் வேணும்" தொடராமல் முடித்துவிட்டான். அருணன் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயர் பதவி வகித்தவன். இப்போ ச.தொ.ச வியாபார நிலையத்தின் விற்பனையாளர். ஜுன்ஸ் அணிந்து கீரோ கொண்டாவில் அலுவலகம் சென்றவன் இன்று மரக்கறி, மா மூடைகள் சுமக்கிறான். வெற்றிலை சுவை தெரியாதவன் இன்று அது இல்லாமல் இருக்கமாட்டான். சிகரட் வாசம் அறியாதவன் இப்போ அதற்க…
-
- 0 replies
- 967 views
-
-
http://www.orupaper.com/issue55/pages_K___7.pdf
-
- 3 replies
- 1.7k views
-
-
தீட்டுத்துணி -யதார்த்தன் எது வரவே கூடாதென்று நேர்ந்திருந்தேனோ அது எனக்கும் வந்துவிட்டது.எலோரும் அதன் பெயரைச்சொல்வதைக்கூட தவிர்த்துவந்தார்கள் . தெய்வ நம்பிக்கை மீது எழுதப்பட்ட நோய் அது . கோடை வெயிலின் வெம்மை முகாம்களின் தறப்பால் கூடாரங்கள் மீது காய்ந்தது.வெய்யில் வலுக்க வலுக்க ஒவோரு நாளும் பலர் பூவரசங்குளம் வைத்திய சாலைக்கு ஏற்றப்பட்டனர். பூவரசங்குளம் வைத்திய சாலை நலன்புரி முகாம்களில் பெரியம்மை வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.எல்லா முகாம்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தனர்.உடல் முழுவதும் கொப்பளங்களும் எரிச்சலும் வேதனையும் அங்கே இயல்பான ஒன்றாய் மாறிக்கிடந்தது. எனக்கு உடலில் அவ்வளவாக கொப்பளங்கள் போடவில்லை .உடலில் நான்கைந்…
-
- 11 replies
- 2.5k views
-
-
தீமையை தடுக்காததும் பாவமே! கருத்துகள் மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 5:45 AM IST பதிவு செய்த நாள்: திங்கள் , டிசம்பர் 21,2015, 6:06 PM IST மகாபாரத போரில் போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருந்தார். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தின் காரணமாக, அவர் உயிர் பிரியவில்லை. காலம் சென்று கொண்டே இருந்தது. பலர் வந்து பார்த்த வண்ணம் சென்றனர். அப்போது அங்கு வந்த வியாசரிடம், 'நான் என்ன பாவம் செய்தேன்?. என் உயிர் போகவில்லையே' என்று மனம் வருந்தினார். அதற்கு வியாசர், 'ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் செய்வது மட்டுமே தீமை இல்லை. பிறர் செய்யும் தீமை…
-
- 0 replies
- 2.1k views
-
-
அன்றொரு நாள் ஒருவன் தனிவழிப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்க, அப்பொழுது ஆங்கொரு பாறையின் கீழொரு பாம்பு சிக்கிக்கொண்டிருக்க, அவனதைக் காக்க, பாறையை நகற்றினால் பாம்பு கடிக்குமா அன்றி நன்றி சொல்லி நகருமாவென யோசித்து, பின் அப்பாறைதனை நீக்கி பாம்பைக் காப்பற்ற, அப்பாம்பானது அவனை நோக்கி, "இவ்வளவு நேரம் எனைக் காப்பாற்றாமல் ஏன் சிந்தித்தாய்? நானுன்னை கடிக்கப்போகிறேன்!" எனக் கூறி அவனை நெருங்க, அவனோட, அது விரட்ட, அவ்வழிவந்த நரியொன்று, "ஏனய்ய ஓடுகின்றனை? அரவமே ஏனவரைத் துரத்துகின்றனை?" என வினவ இருவரும் தங்கள் வழக்கை முறையிட, தனக்கு விளங்கவில்லை ஆரம்பமுதல் தெளிவாகச் செய்து காட்டுங்கள் என கேட்க, அவனோ மறுபடியும் பாம்பை அந்தப் பாறையின் இடுக்கில் வைத்து விட்டு தான் முதலில் வந்த பாதைவழியே…
-
- 4 replies
- 1.6k views
-
-
தீர்ப்பு! ஒரு நிமிடக் கதை தீர்ப்பு! அவசரமாகக் கிளம்பிக்கொண்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
தீவாளி ஒரு பேப்பரிற்காக தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு. அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கெ…
-
- 20 replies
- 4.6k views
-
-
தீவிரவாதி -இளங்கோ இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன்-லிபரேஷன் தாக்குதல்இடைநிறுத்தப்பட்டதற்கும், இந்திய அமைதிப்படையோடுஇயக்கம் சண்டையைத் தொடங்குவதற்குமான இடையிலானமாதங்கள் சொற்பமே இருந்தபோதும், அந்தக் குறுகிய அமைதியைஎங்கள் ஊர் ஏதோ ஒருவகையில் வரவேற்கத்தான் செய்தது. ஊர்வைரவர் கோயில் திருவிழா விமர்சிகையாகக்கொண்டாடப்பட்டது. புளியமரத்தடியில் கிளித்தட்டும், பிள்ளையார் பேணியும் வயது வித்தியாசமின்றி குதூகலமாகவிளையாடப்பட்டது. இப்படி இன்னும் பலவற்றில், ஊர் தன்உயிர்ப்பை மீளவும் கண்டுகொள்ளத்துடித்தது. ஒருகாலத்தில் ஆடுகள் காவுகொடுக்கப்பட்டு வேள்விகள் நடந்தவைரவர் கோயிலில், இயக்கங்கள் பல்கிப்பெருகிக் காலத்தில்மார்க்ஸைப் படித்த ஏதோ ஒரு இயக்கம் வேள்விகளுக்கு இனி…
-
- 4 replies
- 2k views
-
-
அவர்கள் ஏன் அந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினமோ என்று தெரியவில்லை என்று புலம்பினார்கள்.. அந்த புலம்பலில் அவர்களுக்கு பட்ட மனரீதியான வேதனை உடல் ரீதியான வேதனை இல்லாமால் போனது என்று இல்லை, வாடகை விடும் வாகனத்தின் நிறுவனத்தின் முதலாளி தான் இவர்களுக்கு சாரதியாக லண்டனிலிருந்து பிரான்ஸ் போகும் வரை .அதுவே அவர்களின் பிரச்சனையாக உருவெடுத்து அலைக்கழித்து சீரழிந்த பிரயாணமாக முடிவுற்றது. இந்த 17 பேர் கொண்ட குழுவினர் பாரிஸ் நகரத்தில் உள்ள உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளுவதற்க்காகவே இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர் ,பொதுவாக இறுதி நிகழ்வுக்காக கலந்து கொள்ள போவதால் அவர்களுக்கு முகத்தில் ஒரு இறுக்கம் மற்றும் சலனம் இருப்பது வழமை அதை ஏற்றுக்கொள்ளலாம் .ஆனால் அந்த வாகனத்த…
-
- 7 replies
- 1.7k views
-
-
புகழ் பெற்ற ஜப்பானியத் தளபதி தனது வீட்டுக்கு ஒரு ஜென் துறவியை அழைத்திருந்தார். துறவி வந்தவுடன் தனது கலைப் பொருட்களின் சேமிப்பைக் காட்டி அவற்றைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார். துறவி அதை லட்சியம் செய்யவே இல்லை. முடிவில் துறவி அங்கிருந்த சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு கிண்ணத்தைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்தார். அதைக் கண்ட தளபதியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் துடித்துக் கத்த ஆரம்பித்தார். துறவி அமைதியாகச் சொன்னார், ''உன் கண் முன்னாள் ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்கியதை உன் மனத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வளவு உயிர்கள் கை கால் துண்டாகி வேதனையுடன் போர்க்களங்களில் வலியுடன் இறந்து போயின? உன் கண் …
-
- 4 replies
- 1.1k views
-
-
துணிச்சல் நாங்கள் நான்கு பேர்... மூர்த்தி, வாசு, ராஜேந்திரன் மற்றும் நான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தினம் மாலை கடற்கரையில் சந்திப்போம். மூர்த்தி நான்கு நாட்களாக வரவில்லை. அவருடைய அண்ணன் மகன் மரணத்துக்குப் போயிருந்தவர் இன்றுதான் வந்தார்.‘‘ப்ச்... 35 வயசுதான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு படுத்ததும் இல்லை. ஆனாலும் திடீர் ஹார்ட் அட்டாக். பாவம், மூணு பொட்டப் புள்ளைங்க, பொண்டாட்டி எல்லாரையும் அம்போனு விட்டுட்டுப் போயிட்டான்!’’ - அவர் சொன்னதும் சாவின் நிதர்சனம் எங்களுக்கும் உறைக்க, நிசப்தம் நிலவியது. நான் மௌனம் கலைத்து, ‘‘ஓகே... என்னுடைய எல்லா கடமைகளும் முடிஞ்சுடுச்சு. நான் ரெடியாயிட்டேன். எ…
-
- 2 replies
- 1.5k views
-
-
துணையானாள் சித்தி கருணானந்தராஜா இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முதியவர் தனது பக்கத்திற்கிடந்த பத்திரிகையை வாசிக்க எடுக…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-