Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. சிவனடிபாத மலை யாத்திரை - பொன் குலேந்திரன். உலகில் இமயமலை போன்று பல மலைகள் முக்கோண வடிவத்தில் அமைந்துளன வடிவத்தின் பின்னால் மர்மம் என்ன ? மலைகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன மற்றும் டெக்டோனிக் சக்திகள், ஈர்ப்பு, உராய்வு சக்தி, அரிப்பு போன்ற பல்வேறு சக்திகள் உள்ளன, அவை மலைகள் உருவாக வழிவகுக்கிறது. ஆரம்பத்தில், மலைகள் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கிய சக்திகள் உள்ளன, இவை ஈர்ப்பு விசை மற்றும் உராய்வு ஆகியவை மணல் துகள் மீது செயல்படுகின்றன. ஈர்ப்பு மணலை தரையை நோக்கி இழுக்கிறது மற்றும் உராய்வு இரண்டு துகள்களும் ஒன்றையொன்று சரியச் செய்கிறது. இந்த இரண்டு சக்திகளும் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது, இங்கு ஈர்ப்பு விசையின் தீவ…

  2. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காஅத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கு…

  3. தெய்வானை-சிறுகதை-கோமகன் February 8, 2020 நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று ஐந்து பரப்பில் அமைந்திருந்த அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில் ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில் மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்த…

  4. பெற்றதும்... கற்றதும்... சுஜாதா கோவிச்சுக்க மாட்டார் (என்று நம்புகிறேன்) திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார். அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் தூ…

  5. களத்தினர் மன்னிக்கவும்... தற்போது குறிப்பிடும் படியான செய்திகள் எதுவும் இல்லை... செய்திகள் வரும் பொழுது தெரிவிக்கபடும்... ஆவலோடு வந்தவர்களுக்காக... சில மாதங்களுக்கு முன்னால் நடந்தது... கடந்த ஏழு வருடங்கள் திரியில் "சார்ட்டில் எழுதி வைத்த பாடங்கள் (Subject) மறைந்து போனது" என்ற கால கட்டத்தில் நடந்தவை... அந்த திரியில் போன வருடம் என்று தவறுதலாக குறிப்பிட்டிருப்பேன்... அது ஒரு ஆறேழு மாதங்களுக்கு முன் நடந்தவை... இன்னும் தெளிவாக கால நிலையை கூற வேண்டும் என்றால் அமெரிக்கா, சீனா தாங்கள் உருவாக்கிய ராக்கெட் ஏவுவதில் பிரச்சனை என்று செய்திகள் வந்த சமயம்... கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம்... சரி, செய்திக்கு என்பதை விட நிகழ்வுக்கு வருவோம் என்று ஆரம்பிக்கிறேன்... …

  6. தேநீரா? தேநீர் கோப்பையா? ஊருக்கு வெளியில் ஆசிரமம் அமைத்து தன் மாணவர்களுக்கு வாழ்கையை பாடமாக சொல்லி கொடுத்து வாழ்ந்து வந்தார் ஜென்துறவி ஒருவர். அறிவும் அனுபவமும் மிக்க அந்த துறவியிடம் பாடம் கற்க நிறைய மாணவர்கள் வந்து விரும்பி கற்றனர். அவர்களில் சிலர் தாங்கள் முழுவதும் கற்று அறிந்து விட்டதாகவும் எனவே தங்கள் ஊர்களுக்கு திரும்பிபோக முடிவு செய்துவிட்டதாக துறவியிடம் சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றனர் . அந்த ஜென்துறவியோ எதுவுமே நடக்காதது போலப் புன்முறுவல் புரிந்தார். சில வருடங்களுக்கு பிறகு சொல்லாமல் சென்ற அந்த மாணவர்கள் மீண்டும் குருவை தேடி வந்தனர். அவர்களை குரு அன்புடன் வரவேற்றார் . தாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் இருந்தும் மன ந…

    • 9 replies
    • 1.3k views
  7. அவளைக் கொன்றவர்கள் அகரமுதல்வன் 1 பண்டைய எகிப்திய மக்கள் பூனைகளை வணங்கினர் என்கிற வரலாற்றை இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்டேன். நிர்வாக மோசடிக் குற்றச்சாட்டில் தண்டனைக்காலம் முடிவடைந்து வெளியே வந்திருந்த அந்த பொறுப்பாளர் பூனைகள் இரண்டினை வளர்க்கத் தொடங்கியிருந்தார். அதன் நிமித்தம் எழுந்த உரையாடலில்தான் எகிப்தில் பூனைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தெய்வ அந்தஸ்து குறித்தெல்லாம் கதைத்தோம். அந்தச் சந்திப்பிற்கு பிறகு பூனைகள் மீதும் ஒரு மரியாதை. எகிப்தியர்களின் கடவுளாவது எங்களை இந்த யுத்தத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று பூனைகளைப் பார்த்து கும்பிடவெல்லாம் தோன்றியது. ஆனால் எந்தக்கடவுளாலும் காப்பாற்றமுடியாதென்கிற உண்மையை அதே பொறுப்பாளர் சொல்லி…

    • 4 replies
    • 1.3k views
  8. குருவின் சதி! … தாழையடி சபாரத்தினம். September 23, 2018 சிறப்புச் சிறுகதைகள் (12) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – தாழையடி க.சபாரத்தினம் எழுதிய ‘குருவின் சதி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். அடர்ந்த காட்டினூடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைசூழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன். திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் – அவன் வீரன் மட்டுமல்ல;…

  9. 5. அரசி "......பசிக்குப் பிச்கை கேட்க யா¡¢டமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்...." - மெளனி நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க…

  10. மானிப்பாய் மருதடி பிள்ளையார் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைவரும் அறிந்திருப்பார்கள்.மானிப்பாய் சந்தியில் நடுநாயகமாக ,வயலும் வயல் சார்ந்த இடத்தில் வயலை பார்த்தபடி சிவனே என இருந்தார் ,இருக்கின்றார், இருப்பார்.எனது பெற்றோருக்கு அவர்களின் பெற்றோர் அறிமுகம் செய்து வைக்க அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.சிறு வயதிலிருந்து சென்று வருகின்றேன். அந்த ஊருக்கு அவர் சைவ மன்னர்களால் அறிமுகமானாரா அல்லது தனிநபரகளின் மூலம் அறிமுகமானாரா என ஞான் அறியேன் பராபரனே. பயம் இருக்கும் வரை பக்தி இருக்கும்.அது தனிநபர் ஆகட்டும் சமுகமாகட்டும்.யாழ்நகரில் பல கோவில்கள் போரினால் பாதிக்கப்பட்டது.மீண்டும் அவை புனர்நிர்மானம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றது.இதில் புலம்பெயர்ந்த மக்களின…

  11. Started by கோமகன்,

    வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்ற…

  12. திட்டம் ‘‘என்னது... பில்லு கட்ட பணமில்லையா? அப்போ ஒருநாள் ஓட்டல்ல வேலை செய்... என்ன வேலை தெரியும் உனக்கு?’’‘‘நல்லா பரோட்டா போடுவேன் சார். ஊர்ல நான் பரோட்டா மாஸ்டர்...’’ என்றான் கணேசன்.‘‘அப்போ உள்ளே போய் பரோட்டா போடு...’’ என்றார் முதலாளி. கணேசன் உள்ளே போய் பரோட்டா போட ஆரம்பித்தான். ஒரு மணி நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்தது. ‘‘என்ன சார்... உங்க கடை பரோட்டா இன்னைக்கு வழக்கத்தைவிட சூப்பரா இருக்கு. ரொம்ப ஸாஃப்ட், செம டேஸ்ட்...’’ என்று வரிசையாக கஸ்டமர்கள் பாராட்டினார்கள். அங்கிருந்த மேனேஜர், ‘‘சார்... பரோட்டா போட்டுட்டு இருந்த மணி ஒரு வாரமா வர்றது இல்லை... இவனையே நம்ம கடையில வேலைக்கு வச்சுக்கலாமே!’’ என்றார். ‘ஒரு வாரம் முன்னால இதே ஓட்டல்…

  13. ஒரு நிமிடக் கதை பழக்கம் காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது. ‘‘எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?’’ - பொங்கலைத் துப்பியபடி கேட்டான். ‘‘இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!’’ என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான். ‘‘ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?’’ - போனில் கேட்டான். ‘‘மூக்கை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க!’’ என்று ‘கட்’ ஆனாள் சுசீலா. அலுவலகம் முடிந்து திரும்பிய ராகவனை, சூடான மெதுவடைகள் வரவேற்றன. ‘‘ஆஹா!’’ என்று எடுத்துக் கடித்தவன், கோபத்தில் வ…

    • 1 reply
    • 1.3k views
  14. ஒரு நிமிட கதை: பிரேஸ்லெட் வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே போகிறது. இரவில் இரண்டாவது காட்சி சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை உருட்டிக்கொண்டு சென்றேன். இரவு 2 மணி ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும். அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்! சில அடிதூரம் ஓட…

    • 1 reply
    • 1.3k views
  15. அடேலினா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் பா.விஜயலட்சுமி ஓவியம்: ஸ்யாம் ஆல்ப்ஸ் மலையின் மிதமிஞ்சிய குளிர், கணப்புச் சூட்டைத் தாண்டி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அடேலினாவின் உடலை சன்னமாக குலுங்க வைத்தது. கண்கள் மூடி தூக்கத்தில் கனவுகண்டு புன்னகை புரிந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் கைதொடும் தூரமாகக் கிடப்பதைப் போல விரிந்துகிடக்கும் ஆல்ப்ஸ் மலையின் பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கெவின். கெவின்... நாற்பது வயதைத் தொட 1,460 நாட்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவன். ஆல்ப்ஸ் மலையின் பனிப்படுகைகளில் உருண்டு, புரண்டு ஐஸ்கட்டிகளை ஆராய்ச்சி செய்பவன் - ‘கிளேசியர் ரிசர்ச் சயின்ட்டிஸ்ட்’. அவனிடம் பயிற்சியாளினியாக வேலைக்குச் …

  16. ஒரு நிமிடக் கதை- ஏக்கம் உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார். “என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆ…

  17. Started by அபராஜிதன்,

    19th Sepதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள். சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்க…

  18. Started by நவீனன்,

    மறுபிறவி! எனக்கும், வாணிக்கும் நிச்சயதார்த்தம் நடந்த பின் நிகழ்ந்த சந்திப்புகளில், நான் அதை அவ்வளவாக கவனித்ததில்லை. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக, ஏற்காடு போயிருந்த போது தான், ஓட்டல் அறையின், எல்.ஈ.டி., பல்ப் வெளிச்சத்தில், அவள் கழுத்தில் மின்னிய அந்த மெல்லிய தங்கச் சங்கிலி, என் கண்ணில் பட்டது. நான், கிரிதர்; வயது, 27. சென்னையில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனத்தில் வேலை. பெற்றோருக்கு ஒரே மகன். வாணியும், ஒரு ஐ.டி., நிறுவனத்தில், ஹெச்.ஆர்., அலுவலராக பணிபுரிகிறாள்; வீட்டிற்கு ஒரே பெண். என் எதிரே புன்னகையுடன் நைட்டியில் வந்தமர்ந்த அவள், என் வாலிப கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள். அருகே இழுத்து அணைத்த போது தான், அந்த தங்கச் சங்கிலியை மிக அருகில் பார்த்தேன்; நேர்த்…

  19. பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும் டிசே த‌மிழ‌ன் ப‌குதி-01 1. பொலித்தீன் பையைத் த‌ன்னுட‌ல் முழுதும் சுற்றிக்கொண்டு எரிந்துகொண்டிருக்கும் ந‌ண்ப‌னைப் ப‌ற்றிய‌ க‌ன‌வு அவ‌னைத் திடுக்குற‌ச்செய்து விழிப்ப‌டைய‌ச் செய்த‌து. நேர‌ம் என்ன‌வாயிருக்குமென‌ சிவ‌ப்பு ஒளியில் மிளிர்ந்துகொண்டிருந்த‌ அலார‌மைப் பார்த்த‌போது 3.25 A.M என்றிருந்த‌து. இனி விடியும் வ‌ரைக்கும் நித்திரை வ‌ராது என்ற‌ நினைப்பு அவ‌னுக்கு இன்னும் எரிச்ச‌லைக் கொண‌ர்ந்த‌து . இப்போதுதான் முத‌ற்த‌ட‌வையாக‌ ந‌ண்ப‌ன் எரிந்துகொண்டிருக்கும் க‌ன‌வு வ‌ருகின்ற‌து என்ப‌த‌ல்ல‌; முன்ன‌ரும் ப‌ல‌முறை வ‌ந்திருக்கின்ற‌துதான். ஒவ்வொருமுறையும் அல‌றிக்கொண்டு அத‌ல‌பாதாள‌த்திற்கு விழும் க‌ண‌த்தோடு ஓர் உறைநிலை…

  20. ஒருநிமிடக் கதை: ஏமாறு... ஏமாற்று! சதாவிற்கு மிகவும் அதிகமாகக் கோபம் எட்டிப்பார்த்தது. வெளியில் காட்ட முடியாத இயலாமை, கார்க் கதவை ஒரு ஆர். டி. எக்ஸ் வெடியின் சத்தத்தோடு அடித்துச் சாத்துவதில் வெளிப்பட்டது. பின்ன ...கோபம் வருமா வராதா..? இந்த டிரைவர், அவர் கத்திக்கொண்டேதான் இருக்கிறார்.. இங்கே வேண்டாம் தள்ளிப்போ என்று.... கேட்காமல் காரை மிகச்சரியாக... இந்தத் தெரு குப்பை எடுக்கும் பையன். என்ன பேர்...ஆங்.குமார்... அவன் பக்கமாக நிறுத்தித் தொலைக்கிறான். டிரைவரிடம் சத்தம் போட முடியாது மாசக்கணக்கில் லீவ் போட்டுவிடுவான். அதான் வாயில்லா அந்த கார் கதவு, அடியை வாங்கிக்கொண்டது. சதாவு…

    • 1 reply
    • 1.3k views
  21. நந்தினி என்றொரு தேவதை ரிஷபன் ஞாயிறு காலை எட்டுமணிக்கு மீனாட்சி மெஸ்ஸில் எதுவும் கிடைக்காது என்று சின்னக் குழந்தைக் கூடத் தெரியும்.இருந்தாலும் சங்கர் மெஸ் வாசலில் வந்து நின்றான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தொங்குகிற வாசல் திரைச் சீலை பற்றாக்குறையாய் காற்றில் ஆடியது. "ஸா... ர்" வாய் 'ஸாரை' அழைத்தாலும் மனசு நந்தினிக்காக ஏங்கியது. "யா... ரு?" ஆண் குரல் கேட்டது. நடராஜன், நந்தினியின் அண்ணன்.மெஸ்ஸுக்குச் சொந்தக்காரன் .. "நான்தான்..." "நான்தான்னா யாரு... ஏய் நந்தினி.. போய்ப் பாருடி..." நடராஜனின் இரைச்சல் வாசலுக்குக் கேட்டது. "ஹாய்...!" கிசுகிசுப்பாய் கையாட்டினான். "என்ன...?" "இன்னிக்கு ஊருக்குப் போகலே. மீல்ஸ…

    • 1 reply
    • 1.3k views
  22. என்னடா பயல் இப்படி கதை விட்டுட்டு போறானே என்ற பாவனையில்..அங்கு கூடி நின்றவர்கள் ஒருதரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .இப்படித்தான் பத்து பேர் வருவான் பத்து கதை சொல்லுவான் இதெயல்லாம் நம்பி கொண்டு இருக்க முடியுமா ..அண்டைக்கொரு நாள் பாருங்க ....இப்படித்தான் ஒருவன் வந்து ....என்று கொண்டு ...அங்கு சிறிது நேரம் நீடித்த இனம் தெரியாத அமைதியை இல்லாமால் ஆக்கி கொண்டு அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவன் பேச்சை தொடங்க கல்லா பட்டையில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான் கதையை விட்டுட்டு கஸ்டமரை கவனியடா என்று . .இப்படி வாறவர் போறவர் கதைக்கறவர் சிரிக்கிறவர் கேலி செய்கிறவர் சாப்பிடுறவர் குடிக்கிறவர் பத்திரிகை பார்க்க வருகிறவர் வெட்டி கதை அழப்பவர் எல்லாரோயும் வேடிக்கை பார்த்து பொழுது போக்…

  23. Started by நவீனன்,

    மனைவி சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியா…

  24. ஏமாற்றம் தன் காதலி மல்லிகாவின் அப்பாவுக்கு தன் நண்பனை விட்டே போன் போடச் சொன்னான் சீனு. ‘‘உங்க பொண்ணு ஒரு பையனோட கேவலமா ஊர் சுத்துறா!’’ என்று சொல்லச் சொன்னவன், இவர்கள் வெளியிடங்களில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டான். ‘‘எந்த அப்பனுக்கும் கோவம் வரும். நிச்சயமா வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடுவார்!’’ - சீனு சொல்லிச் சிரித்தான். ‘‘டேய், மல்லிகாவைப் பிடிச்சுதானே காதலிச்சே? அப்புறம் ஏன்டா இப்படி கழட்டி விடறே?’’ - நண்பன் கேட்டான். ‘‘காதலிக்கப் பிடிச்சுதுடா. கல்யாணம்னா அது பணக்காரப் பொண்ணா இருக்க வேண்டாமா? இந்த அயிரை மீனை ஆத்துலயே விட்டுருவோம். கண்டிப்பா ஒரு விலாங்கு மீன் மாட்டும்!’’ என்றான் வில்லத்தனமாக. அன்று மாலை... சீனு …

    • 1 reply
    • 1.3k views
  25. Started by shanthy,

    இது கதையில்லை அக்கா வணக்கம் ! நான் இந்தியாவிலயிருந்து கதைக்கிறன். ஆதவன் உங்களோடை கதைக்கச் சொன்னவர்....என்னெண்டா அக்கா இங்கை ஒருத்தர் கால்காயம் பிரச்சினையாகி ராமச்சந்திராவில ஒப்பிறேசன் செய்திருக்கிறார்....லண்டனிலயிருந்து ஒராள் உதவி செய்யிறனெண்டு கனமுறை கதைச்சு ஒப்பிறேசனை செய்யுங்கோ காசனுப்பிறனெண்டு சொன்னதை நம்பி ஆளும் செய்திட்டார். உதவிறனெண்டவர் ஒளிச்சிட்டாரக்கா....ஒரு தொடர்புமில்லை....பாவம் இந்தாள் படுக்கையில கிடக்குது.....தெரிஞ்சாக்களிட்டை கடன்வாங்கி காசைக்கட்டீட்டு வீட்டை வந்து கிடக்கிறார்.....கடன் குடுத்தவை பொலிசில குடுத்திருவமெண்டு நிக்கினமக்கா....ஏதும் உதவேலுமோக்கா.....? வியாழமாற்றம் எனக்கும் சரியில்லப்போல.... கடந்த 4நாளா இப்படித்தான் ஆசுப்பத…

    • 6 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.