Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by கிருபன்,

    அகல்யா ஆர். அபிலாஷ் நானும் சில நண்பர்களும் கருத்தரங்குக்கு முந்தின நாளே சென்றுடைந்த போது விடாது மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ஒரு நாய் உடலை குறுக்கி புட்டத்தை லேசாய் தூக்கி ஒரு குட்டை அருகே மலம் கழிக்க முயன்று கொண்டிருந்தது. நீராய் கழிந்த மஞ்சள் மலம் மெல்ல அந்த குட்டையின் கறுப்புநீரில் ஓவியனின் தூரிகையை முக்கும் போது கரையும் சாயம் போல் கலந்து ஓடத் தொடங்கியது. தன் அவஸ்தை முடிந்து நாய் எங்களை தலைதூக்கிப் பார்த்தது. சந்தீப்பும் பார்த்திவ் ஷர்மாவும் என்னை நோக்கி சிரித்தனர். நாங்கள் அப்பகுதியில் பார்த்த நாய்களை கணக்கெடுத்து வந்தோம். அதன் செவியின் நுனி கத்தரிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் எ.பி.சி எனும் கருத்தடை செய்யப்படாத ஒன்று என குறித்துக் கொண்டோம…

  2. Started by Theventhi,

    இது சுனாமி தாக்கம்

  3. Started by அபராஜிதன்,

    எனக்கு 'அகிலா'வைப் பிடிக்கும் ரிஷபன் திருவானைக்காவல்வாசியான எனக்கு 'அகிலா'வைப் பிடித்துப் போனதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. புதிதாய் டிரையினிங்கிற்கு வந்திருந்த நான்கு பெண்களில் அகிலாவும் ஒருத்தி. ரோஸ்மேரி, அகிலா, வனஜா, தமிழ்செல்வி நான்கு பேரும் எதிரில் நிற்க என்னை அறைக்குள் அழைத்த என் பாஸ் அகிலாவைக் காட்டினார். "யூ டேக் கேர் ஆஃப் ஹர்" என்றார். பார்த்த உடன் முதலில் பதிவான தகவல்கள் இரண்டு. அகிலா சற்று அமைதியான சுபாவம். பெரிய அகலமான ஆழமான கண்கள். "உங்களுக்கு ஏதாச்சும் நிக் நேம் உண்டா, ஸ்கூல் டேய்ஸ்ல " என் அறைக்கு வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி. மனசுக்குள் 'முட்டைக் கண்ணு' அகிலா கேள்வி புரியாமல் விழித்தபோது கண்கள் இன்னும் அழகாய்…

  4. வணக்கம் சகோதரர்களே, இத்துடன்"புபாள ராகங்கள் சிறுகதைப் போட்டியிலே பரிசுபெற்ற என்னுடைய அக்கரைப் பச்சை என்ற சிறுகதையை இணைக்கிறேன். உங்களுடைய கருத்துக்களை ஆஆஆஆவலுடன் (அடேயப்பா எவ்வளவு ஆவல்) எதிர்பார்க்கிறேன் அன்புடன் மணிவாசகன் அக்கரைப் பச்சை இருளரக்கனை விரட்டியடிப்பதற்கான கதிரவனின் இறுதிக் கட்டத் தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம். விடிந்தும் விடியாத அந்தப் பொழுதின் குளுமையை, அமைதியை, அழகை ஒரே நொடியில் அஸ்தமிக்கச் செய்த அந்தச் சத்தம் ஊரையே பரபரப்படையச் செய்கிறது. உயிர்ப்பலி எடுப்பதற்காய் யமதர்மன் 'பொம்மர்' உரு எடுத்து வந்து விட்டான். "தம்பி சத்தம் கேக்குது. எழும்பி பங்கருக்கை ஓடடா" சொல்லிக் கொண்டே ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் வீராங…

    • 27 replies
    • 5.6k views
  5. அக்கா யோ.கர்ணன் அக்காவிற்கு துப்பரவாக அசோக்கை பிடிக்கவில்லை. ஏதோ பெரிய அரியண்டமொன்றை பார்க்கிற மாதிரித்தான் பார்த்தாள். அவள் ஏற்கனவே நுட்பம் பார்க்கிறவள். அசோக் வேற கொஞ்சம் ஊத்தையாக இருந்தது. அசோக்கை முதல்முதல் காணேக்க, அவள் முகம் கோணலாததை பார்க்க மாட்டியள். அவளின்ர இந்த சிடுசிடுத்த முகத்தை பார்த்திட்டுதான், சிறுவன் குரங்கென்று ஆளை கூப்பிடுறனான். அவளுக்கு அசோக்கை பிடிக்காமல் போனதற்கு படிக்கிற காலத்தில நடந்த சம்பவமொன்றும் காரணமாயிருக்கலாமென்று நினைக்கிறன். அக்காவோட படிச்ச பொடியள்ளயே வலு காவாலிப் பொடியன் ஒருத்தன் இருந்திருக்கிறான். அவனின்ர பெயரும் அசோக்தான். அவனுக்கு என்ன காத்துக் கறுப்படிச்சதோ தெரியாது, அக்காவில காதல் வந்திட்டுது. அவன் எங்கட றோட்டா…

  6. எனக்கு அவவை பார்க்கும் போது திக் என்றது. அவவுக்கும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது என்பதை அவவின் முகத்தில் தெரிந்து கொண்டேன். முந்தைய நாள் இரவு தான் எனக்கு அவவை அறிமுகம் செய்து வைத்தார்கள். பார்த்தவர்களை திரும்ப பார்க்க செய்யும் அழகு அவ. எனது அக்காவின் உயிர் நண்பி அவ. பழைய நினைவுகளை ஒருமுறை மீட்டி பார்க்கிறேன். தலையை பின்னியபடி, கைகளிலே சொக்கிலேட்களுடன், நெஞ்சிலே கோல்சரும், கைகளிலே இறுக்க பிடித்தபடி சுடுகருவிகளும் அவர்கள் நடந்துவரும் அழகே தனி அழகுதான். அக்கா ஏ எல் படிக்கும்போது, ஒரு நாள் அம்மாவிடம் பயித்தம் பணியாராம் சுட்டு தர சொல்லிவிட்டு, எப்படியும் அம்மா எடுப்பா என்று மா பேணிக்குள் கடிதம் எழுதி வைச்சிட்டு இயக்கத்துக்கு போனவ தான். அன்றைய நாள் வ…

  7. அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும். 19வது வருடத்தை இவ்வருடத்தோடு நிறைக்கிறது காலம். மகனுக்கு இப்போ 18வயது ஆரம்பமாகப் போகிறது. அவன் எப்படியிருப்பான் என்னென்ன கனவுகளுடன் பறந்துதிரிவான் என்றதெல்லாம் அறிய வேணும் போலும் அவனைப் பார்க்க வேணும்போலையும் இருக்கும். எல்லா அம்மாக்களைப் போலவும் அவளது குழந்தையைப் பற்றி ஆயிரமாயிரம் ஆசைகள். ஆனால் எல்லா ஆசைகளும் உள்மனசுக்குள் சுனாமியலையாய் அடிக்க கண்ணீரால் நனையும் அவளது கனவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தனை வருடங்களிலும் எத்தனையோ பேர் உள்ளே வந்தார்கள் போனார்கள். அவளும் தனக்கும் ஒருநாள் விடியுமென்றுதான் காத்திருந்தாள். தீர்ப்பு ஆயள்தண்டனையென்றாகிய பின்னர் எல்லாக் கனவுகளும் ஒரேயடியாய் சாம்பலாகிப்போச்சு. இருளுக்…

    • 8 replies
    • 2k views
  8. கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார். 2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விட…

  9. அக்கினிச் சிறகுகள் அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள். “கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது. குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந…

  10. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் …

  11. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காஅத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கு…

  12. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது... மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் …

  13. நன்றி: விகடன் இணைப்பு: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90628 எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும். 35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங…

  14. அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1 “அக்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர். நுகர்வு கலாசாரம் "ரெ…

    • 25 replies
    • 5.9k views
  15. ஏன்டா உந்த படிகளிற்க்கு கீழ் நீங்கள் நின்று கதைக்கிறீயள்,எல்லோரும் வகுப்பு அறைக்குள் செல்லுங்கோ என ஆசிரியர் சொன்னவுடன் எல்லோரும் உள்ளே சென்றுவிட்டோம்.அந்த பாடசலை ஒரு கலவன்(ஆண் பெண் இரு பாலரும்)பாடசாலை.பிரித்தானிய காலத்தில் உருவாக்கபட்டது,அதன் பின்பு அமெரிக்கன் மிசனால் நடாத்தப்பட்டது.அது ஒரு இரு மாடிகள் கொண்ட கட்டிடம்.அதன் படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதுக்கு என்று ஒரு கூட்டம் அந்த பாடசாலையில் இருந்தது.10ஆம்,11 ஆம் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அந்த படிகளுக்கு கீழ் நின்று கதைப்பதற்க்கு அடிபடுவதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகமானோர் ஒன்று கூடுவோம். வகுப்பு பாடங்கள் தொடங்குவதற்க்கு 10 நிமிடத்திற்க்கு முதல் அந்த படிக்கட்டுக்கு கீழ் போய் நிற்போம்.வகுப்பறைக்க…

  16. அங்கீகாரம்: ஒரு நிமிடக் கதை இரவு 11 மணி. நல்ல தூக்கத்தில் இருந்த சரவணனுக்கு ஏதோ சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தது. லைட் வெளிச்சம் கூச வைக்க கண்களைக் கசக்கியவாறே பார்த்தான். அருகில் உட்கார்ந்து தபால் கார்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவி லதா "சாரிங்க.." என்று கீழே விழுந்த தண்ணீர் டம்ளரை எடுத்தாள். எரிச்சலுடன் அவளைப் பார்த் தான். இவளுக்கு வேறு வேலை கிடையாது. கடையில் காசு கொடுத்து வாங்கும் வார, இரு வார, மாத இதழ்கள் தவிர அலுவலகத்திலிருந்து அவன் கொண்டு வரும் பத்திரிகைகளை யும் ஒன்றுவிடாமல் படித்து விடுவாள். படிப்பதோடு, அதில் அவளுக்கு பிடித்த விஷயங்களைப் பாராட்டி அந்தப் பத்திரிகைக்கு எழுதிவிட்டுத்தான் ஓய்வாள். …

  17. Started by கிருபன்,

    அசங்கா அனோஜன் பாலகிருஷ்ணன் மிக உக்கிரமாக மழை பெய்யத்தொடங்கியிருந்தது. கார் கண்ணாடியூடாக வெளியே பார்த்தேன். மழைத்துளிகள் ஈயக்குமிழ்கள்போல் காரின்மேல் பட்டுச்சிதறின. காருக்குள் ஓரளவு சூட்டுடன் இருந்தாலும், குளிர் உடம்பின் தசைகளுக்குள் முட்டிமோதி நுழைவதினை உணரத்தொடங்கியிருந்தேன். தலைமுடிகளை கோதிக்கொண்டு காரின் வேகத்தினை குறைத்துக்கொண்டு முன்செல்லும் வாகனத்தின் நகர்தலுக்காகக் காத்திருந்தேன். மெல்லமெல்ல முன்னால் இருக்கும் நீண்ட தொடர்வாகனங்கள் புகையிரதப்பெட்டிகள்போல் பிரமாண்டமாக ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு மெல்ல அசைந்துகொண்டிருந்தன. மெதுவாக நகரும் நீண்ட ராட்சத அட்டையைப்போல் கற்பனைசெய்துபார்த்தேன். கார் இருக்கையில் சுதந்திரமாக சாய்ந்து விழிகளை இடப்புற கார் கண்ணாடி…

  18. Started by நவீனன்,

    அசுரன் மைசூரில் இருந்து கிளம்பும்போதே முதல் வகுப்புப் பெட்டியில் மூன்று பேர்களுடன் காற்றுதான் பிரயாணம் செய்தது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் விடுவது பற்றி எழுந்த உணர்ச்சிப் பிழம்பு கார்களையும், பஸ்களையும், கடைகளையும் எரித்துத் தள்ளி விடும் தீவிரத்தில் இருந்ததுதான் காலி வண்டிக்குக் காரணம். சுமாராக நடந்த அறிமுகப் பேச்சில் மற்ற இருவரும் சகோதரர்களென்றும் அவர்கள் பெங்களூரில் இறங்கி விடுவார்களென்றும் தெரிந்தது. சென்னை வரைக்கும் காலி வண்டியில் ஒற்றை ஆளாகப் பிரயாணம் செய்யும் பாக்கியம் பெற்றவன் என்பதை விட பயம்தான் அதை மீறி நின்றது. பெங்களூரில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று மனது அடித்த…

  19. அசோகன் மாமாவை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்று நீண்ட நேரமாக கீ போர்ட்டுக்கு முன்னால் இருந்து சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்,இப்படி அறிமுகப்படுத்துவது தான் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்,"ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னொரு குடும்பம் ஆதர்சனமாக , முன்னோடியாக , வழிகாட்டியாக இருக்கும் அப்படி எங்களின் குடும்பத்துக்கு இருந்தவர்கள் தான் "நடராஜா" மாமா குடும்பம்,மாமா என்றால் எனக்கு மாமா அல்ல,எனது அப்பாவிற்கு மாமா,சரியாகச் சொன்னால் எனது அப்பம்மாவின் கூடப் பிறந்த தம்பி தான் நடராஜா,எங்களுடைய குடும்பம் நடராஜா மாமா குடும்பத்தை முன்னோடியாக , ரோல் மாடல் ஆக எடுத்து முன்னேறியவர்கள் என்பதில் எந்த விதமான மிகைப் படுத்தல்களும் இல்லை,நடராஜா மாமாவின் மூத்த மகன் தான் இந்தக் கதையின் …

  20. அச்சக் காடு - கிருஷ்ணா டாவின்ஸி கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது. படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில்…

  21. புதுக்குடியிருப்பு மாவீரர் மயானத்தை அடைந்ததும். விறு விறுவென என் கால்கள் காந்தி அக்காவின் கல்லறையை நோக்கி நடைபோட்டது. பையினில் இருந்த மலர்கள் அவளிற்கு அஞ்சலி செலுத்த மலர்ந்து கொண்டன. இங்கு வருகிறோம் என்று தெரிநதவுடன். அவசர அவசரமாய் பறித்த மலர்கள். இதைப்போல ஒரு நாள் தான் நான் விரும்பாத அந்த நிகழ்ச்சி நடந்தேறியது. அன்று மழை பெய்து கொண்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி எங்கள் 'வான்' நகர்ந்து கொண்டிருக்கிறது. 'பாண்ட்' வாத்திக்குழுவில் நானும் இணைந்ததில் இருந்து ஒவ்வொரு முறை இங்கு வரும்போது என் வயிற்றிற்குள் புதுப்புது நோய்களை உணர்வேன். மாவீரர் வித்துடல்களிற்கு அஞ்சலி செலுத்தும் போது என் நெஞ்சம் எதையோ நினைத்து ஏங்கும். இது காந்தியக்காவாய் இருக்கக…

    • 1 reply
    • 602 views
  22. அஞ்சாமால் தனி வழியே ............ காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடி விட்டது .பிரபாலினி தன் ஆறு பையனுடன் பேரூந்துக்காக காத்திருந்தாள் ...நினைவலைகள் தாயகம் நோக்கி .........அந்த நாள் ஞாபகம் .ராணுவ கேடு பிடிகள் காரணமாக மோகன் அண்ணா ஒழுங்கு செய்த ஜேர்மனிய பயணம் .கட்டு நாயக்காவில் தொடங்கியது . முதலாவது சோதனை க்காலம் ,கெடு பிடியான் கேள்விகளுக்கு பின் boarding பாஸ் (நுழைவு அனுமதி ) பெற்று விமானம் ஏறினாள் பிரபா . முதலாவதாக சிங்க பூர் எனும் தரிப்பு . இவளை போலவே அங்கும் ஏழு பேர் வரை இருந்தார்கள் . முதலில் ஒரு பகுதி அண்ணாவும் அண்ணியும் மைத்துனியும் என்ற நாடகத்தில் , மலசியா போய் திரும்பி வந்தனர் . அடுத்தது இவளது முறை . இவளை மனைவி என்ற புத்தகத்தில் கூடி சென்றான் கணவன் (ஏஜன்ச…

  23. by யோகு அருணகிரி. by யோகு அருணகிரி. பாரிஸ் வந்து பலவருடம் ஆகிட்டு இன்னும் முசு ..சவாவுடன்(தமிழில் வணக்கம்,எப்பிடி இருக்கிறியள் என்று அர்த்தப்படும்) வாழ்க்கை சிரிச்சு கையை காலை காட்டி ஓடுது.வெளியில நிண்டு பார்க்குறவனுக்கு அவன் நல்லா பிரெஞ்ச்சு கதைப்பான் என்கிற எண்ணம் வரும் நாங்க கண்ணாடி ரூமில நிண்டு செய்யும் கைஅசைவு ஒரு கோலிவுட் பட டைரட்டர் கணக்கா அக்க்ஷன் போட்டு கதைப்பம். காரணம் சைகையிலதான் நம்ம பாசையே கதைக்குறம் என்பது எப்படி புரியும் வெளியில் நிக்கும் நபருக்கு. இப்படியே ஊரை பேய்க்காட்டி கொண்டு திரியிற நமக்கு ஒரு சூப்பர் மாக்கெட் வேலை. சரி எவளவோ பண்ணிட்டம் இதை சமாளிக்க மாட்டமா எண்டு தலையை ஆட்டி எனக்கு வேலை தெரியும் மொழி அத்துப்படி எண்டு உள்ள போயாச்சு. முதல்நா…

  24. கடந்த 500 வருடத்தில் உலகம் கண்ட பெரும் கொடூரன் என்பது ஹிட்லருக்கு இடபட்ட முத்திரை அடையாளம். இன்னும் 500 வருடத்திற்கு அவர்தான் உலக அயோக்கியன் எனும் அளவிற்கு அவன் யூத அழிப்பு வரலாறு ஆயிற்று செங்கிஸ்கான், தைமூருக்கு பின் மிக பெரும் கொடூர மனிதனாக உலகம் அவனைத்தான் சொல்கின்றது ஒரு சிறந்த ஓவியன் ஹிட்லர், உணவில் கூட சுத்த சைவம். ஆனால் மகா திறமைசாலி அதற்குமேல் நாட்டுபற்றாளன். முதல் உகலப்போரில் சாதாரண சிப்பாய், அதன் பின் நாட்டிற்கு நடக்கும் அநீதிகளை பார்க்கிறார் அதில் சில உண்மையும் இருந்தது. ஆசியா,ஆபிரிக்கா,லத்தீன் அமெரிக்கா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வரை பாருங்கள் ஜெர்மனியின் காலணி என ஒன்று காட்டமுடியுமா? நிச்சயம் முடியாது தானுண்டு தன் தேசமுண்டு என இருந்தநாடு. ஆ…

  25. ரிங்.. ரிங்.. என்று ரெலிபோன் மணியடிக்க எதிர்பார்ப்போடு ஓடிச் சென்று ரிசீவரை தூக்கி காதில் வைத்தார் பார்வதியம்மா. மறுமுனையில்.. யார் மாமியே.. இது நான் சிவானி கனடாவில் இருந்து பேசுறன். உங்கட மிஸ் கோல் வந்திருந்திச்சு அதுதான் அடிக்கிறன் மாமி. ஏதும் அவசரமே..??! அதற்கு பார்வதியம்மா.. இல்லைப் பிள்ளை.. உவன் சங்கரின்ர அலுவலா தம்பியோட கதைப்பம் என்றுதான் எடுத்தனான். தம்பி நிற்கிறானே பிள்ள ? அவர் இப்பதான் உந்தக் குளிருக்க.. இரவு வேலை முடிச்சிட்டு வந்து குளிக்கிறார். ஊரில பிரச்சனை கூடிப்போச்சுது என்றும்.. சங்கரை இஞ்சால கனடாப் பக்கம் எடுக்கிறது பற்றியும் நேற்றுக் கதைச்சவர் மாமி. இப்ப அவருக்கும் கஸ்டம் மாமி. வேலையெல்லாம் திடீர் திடீர் என்று பறிக்கிறாங்கள். எனி நாங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.