கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?' இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அ…
-
- 1 reply
- 1k views
-
-
புதிய வருகை கே.எஸ்.சுதாகர் உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை வேளையிலும் அசதியாக இருந்தது. வைத்தியசாலைக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன். “சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!” சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் கழிவறைக்குமாக, தனது பென்னாம் பெரிய வயிற்றையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். செல்வாவிற்கு அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது. சாந்தினி வெளிக்கிடுவதற்கு அரைமணி நேரமாவது எடுக்கும் என்று நினைத்தவாறே ரெலிவிஷனிற்கு முன்னால் அமர்ந்தான் செல்வா. நேற்றைய தினம் ‘சிற்றியில்’ நடந்த ஊர்வலமொன்று செய்தியினூடாகப் போய்க் க…
-
- 1 reply
- 960 views
-
-
இரண்டு சம்பவங்கள் சம்பவம் ஒன்று---இன விரோதம் மே மாதம் 1983. பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்---ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு---முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம். மலையின் உச்சியில் இருக்கும் 'ஜே.பி' விடுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாங்கள் அதில் ஏறி இறங்குவதற்கு இரண்டே இரண்டு பாதைகள…
-
- 1 reply
- 745 views
-
-
தமிழில் எத்தனையோ வரலாற்றுப் புதினங்கள் இருந்தாலும் 67 ஆண்டுகளாகத் தன்னுடைய இடத்தை விட்டு அகலாமல் இருப்பது கல்கியின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் மது குடித்த வண்டுகளைப் போல அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவந்துவிட முடியாது. நாவல் தொடர்பான விஷயங்களைத் தேடவைக்கும், படிக்கவைக்கும் சக்தி அந்த நாவலுக்கு இருக்கிறது. அப்படியொரு தேடுதல் பயணத்தை மேற்கொண்டு, வித்தியாசமான அனுபவங்களோடு திரும்பியிருக்கிறார்கள் நான்கு தோழிகள். ஆசிரியர் ஜெயபிரியா ஆதிமுருகன், பட்டயக் கணக்கர் நித்யா சீதாராமன், யோகக்கலை நிபுணர் பத்மா கணபதி, மனிதவள அதிகாரி தீபா நவீன் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தோழிகள். ஜெயபிரியா திருவண்ணாமலையிலும் மற்றவர்கள் சென்னையிலும் வசி…
-
- 1 reply
- 734 views
-
-
சமையல் கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்த ‘சமையல் திலகம்’ சரஸ்வதி, அரக்கப் பரக்கக் குளித்து ஒரு வாய் காபி மட்டும் போட்டுக் குடித்தாள். நேற்று இரவு ஒரு சமையல் போட்டிக்கு நடுவராகச் சென்றவள் வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமில்லை. முகம் உப்பியிருக்க, மிதமான மேக்கப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். சரஸ்வதியின் கார் அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைந்தது. அவசர அவசரமாய் அடுத்த வார ‘நளபாகம்’ எபிசோடுக்கு ஆயத்தமானாள். கேமரா முன் சிரித்தபடியே, ‘மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?’ என்று செய்து காட்டினாள். முடித்ததும் மணியைப் பார்த்தால் மதியம் பன்னிரண்டு. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது தலையைச் சுற்றியது. ஸ்டூடியோவில் கொடுத்த கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிறை நிலா சிறுகதை பிறை நிலா நியதி வரதன் காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள் அவனை தயார் படுத்த வேண்டும் .மகனை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றி விட்டு ,கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு சற்று ஓய்வாக இருக்கையில் மணி எட்டு என்பதை காட்ட அவள் பரபரப்பு இன்னும் அதிகமானது . சட்டென்று ஒரு குளியலை போட்டு விட்டு கைக்கு கிடைத்த புடவையை கட்டினால் ப…
-
- 1 reply
- 2.6k views
-
-
காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது. அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல் அவனுடைய தூக்கத்தை கலைத்தது. ‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள் எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன். எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ தொடர்கதையை ஒரு அத்தியாயம் விடாம படித்துக் கொண்டிருக்கிறேன். அசத்துறிங்க ஸார்...’’ மூச்சுவிடாமல் பேசினாள். ‘‘ரொம்ப நன்றி!’’ ‘‘உங்களை ஒரு முறை... ஒரே ஒரு முறை நேரில் பார்க்கணும் ஸார். இதுவரை உங…
-
- 1 reply
- 2.1k views
-
-
கடவு திலீப்குமார் குறைவாகவே எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா என்று நினைக்க வைப்பவர்களில் ஒருவர். அவருடைய கடிதம், மூங்கில் குருத்து சிறுகதைகள்தான் எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை இதுதான். அடுத்தபடியாக தீர்வு. பிறகுதான் மிச்சம் எல்லாம். விவரிக்க விருப்பமில்லை, படித்துக் கொள்ளுங்கள்! - ஆர்வி திலீப் குமார் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து: •••••••••••••••••••••••••••••••••••• இந்த முறை கங்குப் பாட்டி யாரையும் ஏமாற்றாமல் செத்துத்தான் போவாள் என்று தோன்றியது. ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்போதும் போல அன்றும் நள்ளிரவுக்கு மேல் மூன்றாம் ஜாமத்தில்தான் கங்குப் பாட்டிக்கு மூச்சு முட்டியது. வழக்கம் போல கால்களை நீட்டி…
-
- 1 reply
- 1.1k views
-
-
'எதுவும் தெரியாது!' உள்ளே எட்டிப் பார்த்தார் ராகவன். சமையலில் மும்முரமாக இருந்தாள் ஜானகி. அவர் கோபம் இன்னும் குறையவில்லை. இளைய தலைமுறை இப்போதெல்லாம் பெரியவங்களை மதிப்பதில்லை. கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்து, விரல் நுனியில் எல்லா தகவல்களை வைத்திருந்தாலும், பெரியவர்களின் அனுபவத்திற்கு ஈடாகுமா? மகனுக்கும், அப்பாவுக்குமான சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்தது. கையில் காபியுடன் வந்தாள் ஜானகி. ''எனக்கு வேண்டாம்; எடுத்துட்டு போ...'' ''நீங்க என்ன சின்ன குழந்தையா... எதுக்கு தேவையில்லாமல் கோபப்படறீங்க?'' ''ஆமாம்... எனக்கு எதுவும் தெரியாது. இந்த குடும…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஓரு கப் டீ காலையை பின்னுக்குத்தள்ளி மதியத்திற்கு கடிகாரம் நகர்ந்திருந்தது. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கூடிக் கலைந்திருந்தன. அந்த பிரம்மாண்ட மாலில் கூட்டம் ட்யூப்பில் அடைக்கப்பட்ட பேஸ்ட்டைப் போல அடர்த்தியாய் இருந்தது. ஏற்றிவிடுவதும் இறக்கி விடுவதுமாய் எஸ்கலேட்டர் ஓய்வில்லாமல் மடங்கிக் கொண்டிருந்தது. பத்தடிக்கு ஒரு ஜோடி. கமிட் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் கண்களில் கனவு விதைத்து உதடுகளில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். மாலில் நுழைந்த அவன் ஜீன்ஸ் அணிந்திருந்தான். பொருந்தா ஆஃப் ஸ்லாக்கை தாறுமாறாக இன் செய்திருந்தான். ஸாக்ஸ் தவிர்த்து ஷூ அணிந்திருந்தான். செக்யூரிட்டிகளுக்கு நல்ல பிள்ளையாய் கைதூக்கி, மெட்டல் டிடெக்டர்களில் அமைதி காத்து வேகமாய் லானில் ந…
-
- 1 reply
- 987 views
-
-
கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள் "சொல்லச் சொல்ல இனிக்குதடா - முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை...' அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்த பாட்டு ஒலியில் சுசீலா அம்மாவின் குரலில் உருகி நின்றோம். "முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும் அழகன் எந்தன் குமரன் என்று...'' "வாங்க சார் !''- பாடலை விழுங்கிக் கொண்டு அமுது அண்ணன் கதவைத் திறந்தார்.. "என்னண்ணே படக்குனு கதவத் தெறந்துட்டீங்க ?'' ஏக்கத்துடன் சொன்னேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த செந்தில் வீ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆனந்தி வீட்டு தேநீர்! - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் முருகேசன். எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள், எந்தெந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்கள், அங்கு இருந்த தகவல் பலகையில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தன. பலத்த இரைச்சலுக்கு இடையிலும் இவன் காதினுள் தேனை ஊற்றுவது போல் ஒரு பெண்ணின் குரல், 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு’ என்று ஆரம்பித்து ஊற்றியது. எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் என்பதுபோல, பயணிகள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ய…
-
- 1 reply
- 3.4k views
-
-
மஞ்சள் நிறத்தில் சிறிய புட்டி ஒன்றைக் கொடுத்தேன். "குடிக்கும் பானத்தில் கலந்து கொடு. மாறவசியம். கண்டிப்பா உன்னையே சுத்துவா" என்றேன். பணம் வாங்கிக்கொண்டு திரும்புகையில் நால்வர் வருவதை கவனித்தேன். சிங்கபூரில் கடை வைத்திருக்கிறேன். 'ஒரே வாரத்தில் காதல்' என்று கூட்டு வகுப்பு, சுற்றுலா, மாறவசியம் எல்லாம் கலந்தடித்து பேகெஜாக விற்கிறேன். ஆயிரம் வெள்ளி. ஒரே வாரத்தில் காதல் கைகூடாவிட்டால் இன்னொரு மஞ்சள் நிற மாறவசிய புட்டி இலவசம். நிறைய கிராக்கி வருகிறார்கள். பெரும்பாலும் சீன, மலேசிய வாடிக்கை. வெள்ளையர்கள், தென்னிந்தியர்கள் என்று அவ்வப்போது சிலர். மாறவசியம் ஒரு வித சிலேடை. மனம் மாற வசியம். மாறன் பேரில் வசியம். என் தமிழ் ஆசிரியர் பெருமைப்படுவார். வாராவாரம் வரு…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
கனாக் கண்டேன் தோழா கதைகள் கனாக் கண்டேன் தோழா - ராஜேஷ்குமார், சிறுகதை ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் நியூஜெர்ஸி வெள்ளை வெளேரென்ற உறைபனியில் இருக்க, என் மனதும் அடிவயிறும் நூற்றுப் பத்து டிகிரி உஷ்ணத்தில் தகித்துக்கொண்டு இருந்தது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
வனாந்திர ராஜா மிகைய்ல் பிரிஸ்வின் (ருஷ்யா) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ஒரு கோடைநாளில் நடந்தது இது! மழைக்கு முந்தைய வனாந்திரம் பற்றி இப்போது சொல்கிறேன்! ஒவ்வொரு சின்ன இலையும், பைன்மரத்தின் ஒவ்வொரு ஊசியும் முதல்மழையின் முதல்துளியை அனுபவிக்க ஆவேசப் பட்டன. ஒவ்வொரு சிற்றுயிரும்கூட மழை பற்றிய சுத்த சுயமான பிரக்ஞையில் உறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்தபடி நான் போனேன். எல்லாமே, மனிதர்களைப் போலவே, என்னைத் திரும்பிப் பார்த்தன, ஏதோ நான்தான் கடவுள்போல!.... மழையை அனுப்பச் சொல்லி என்னிடம் அவை கெஞ்சுவதாய் எனக்குள் சொல்லிக் கொண்டேன்! "வாங்க பெரியவரே...." நான் மழையிடம் பிரார்த்தனை செய்தேன். "நாங்க காத்துக் காத்து அலுத்துப் போனம்யா. எப்பிடிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
வாய்க்கால் - வண்ணதாசன் ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது தண்ணீர் கலங்காமல் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகமாக இன்றைக்கு வெயிலும் இல்லை. சுத்தமாக ஆனி முடிந்து ஆடி மாதம் பிறந்துவிட்டது. போன மாதம் பூராவும் மழையும் இல்லை; சாரலும் இல்லை. காற்று மட்டும் அடிக்கவா செய்தது? இன்றைக்கு என்னவோ மூடாக்குப் போட்டதுபோல இருக்கிறது. காற்றும் இருக்கிறது. எதிர்த்த அரச மரத்தடியில், இடுப்பில் சுற்றினவாக்கில் பெட்டிக் கடைக்காரி ராஜாமணி காயப்போட்டு நிற்கிற மஞ்சள் பூப்போட்ட சேலை லேசான படபடப்புடன் சுவர் மாதிரி. எப்போதும் ஒரு கிழட்டுச் சடைநாயைக் கூட்டிக்கொண்டு வருவாள். முதலில் அதைக் குளிப்பாட்டிவிட்டபிறகுதான் அவளுக்கு மற்றது எல்லாம். மற்றது என்பதில், உச்சிப்படை வெயிலாகிவிட்டால்கூட …
-
- 1 reply
- 882 views
-
-
உரத்துக் கேட்கும் மௌனம்: சக்கரவர்த்தி ஓவியம் எஸ். நளீம் மெக்சிக்கோ வளைகுடாவில் உருவாகிய தாழ் அமுக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு அலபாமா பகுதிக்குள் பெரும் புயலாக மாறிக் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. கரோலினா கரையோரமாக நகரும் டகோடா புயல், நியூயோர்க் மாநிலத்தைக் கடந்து, ஒன்டாரியோவில் எங்கள் பகுதியூடாகச் சற்று வலுவிழந்து வடபுலம் போகப் போகிறது. ரொறன்டோவில் பலத்த காற்றுடன் கூடிய பெருமழைப் பெய்யுமென எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். சிறிதான காற்றுடன் காலையில் இருந்தே தூறல் தூவிக் கொண்டிருக்கிறது. சிகப்பியை எண்ணித்தான் கவலையாக இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்புதான் கோதுடைத்துக் குஞ்சுகள் வெளிவந்தன. அவள் கூடு சிறு காற்றைத் தாங்கும். டகோடா போன்ற பெரும்புயலை எதிர்த்த…
-
- 1 reply
- 738 views
-
-
இலங்கையில் நான் இருந்தபோது போலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. காரணம், அங்கே அந்தக் கட்டமைப்புகள் அரிது. ஆனால் ராஜீவ் வழக்கில் சிக்கி, அனுதினமும் போலீஸின் கையில் நான் அனுபவித்த சித்ரவதைகளும், ஏறி இறங்கிய நீதிமன்ற அவஸ்தைகளும் கொஞ்ச நஞ்சம் அல்ல. 'குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய தகுந்த, நம்பகமான உண்மைகளை சாட்சியச் சான்றுகளை முன்வைத்து நிரூபணம் செய்ய வேண்டும்!’ என்பதுதான் உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் குற்ற நடைமுறைச் சட்டங்களின் அடிப்படைக்கூறு! ஆனால், எமது விடயத்தில் இந்த அதிமுக்கியமான மனித சமூக விழுமியத்தினைப் பாதுகாக்கும் இந்த சட்டக் கோட்பாடு, கருணை இன்றி தவறாகக் கையாளப்பட்டது. சட்டக் கோட்பாடு மீறப்பட்டதற்கும், அதன் குரூர நாக்குகள்…
-
- 1 reply
- 795 views
-
-
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான். “உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி, “சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்…
-
- 1 reply
- 3.9k views
-
-
மின்னல் - இசையும் கதையும் எழுதியவர் - லண்டனிலிருந்து வீ.எஸ்.குமார் தயாரிப்பு - தமிழ்வெப்றேடியோ தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 1 reply
- 1.4k views
-
-
கானகி - அகரமுதல்வன் கானகி என்னைப் பத்து மணிக்கெல்லாம் வவுனியா நீதிமன்றத்துக்கு வரச் சொன்னவள். இப்ப அரை மணித்தியாலம் பிந்திட்டுது. நேற்று இரவு பொலிஸ்காரியிட்ட நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் குடுத்து போனில கதைக்கும் போதே பிந்தாமல் வரச் சொன்னவள். நீதிமன்றத்தில விடுதலையான பிறகும் தேவையில்லாமல் நிற்க கூடாது. நான் இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவன், மன்னிச்சுக் கொள்ளும் கானகி. என்னோட தாமதம் உமக்குத் தெரியும் தானே. ஆனால் நான் இண்டைக்கும் கொஞ்சம் முந்தியே வந்து நின்றிருக்கலாம். நீர் என்னைக் கோபிக்க மாட்டீர், ஆனாலும் எனக்கே என் மேல கோபம் வருது. பிள்ளையள் யாரோடையாவது அம்மாக்களோட நில்லும். நான் வந்திடுவன். வவுனியா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இப்ப தான் இறங்கிறன். இரண்டு நாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! ம.காமுத்துரை ‘‘நா ப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்... என்னா?’’ புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாச…
-
- 1 reply
- 915 views
-
-
கரண்டி ஏந்திய... 3000 பேர். குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கான்டிராக்டர் திடீரென்று ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது. துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது. இனி மண்வெட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்? துரத்தி விட்டார். 40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள். 2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள். புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது. வேகமாக வேலை செய்தது. "புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மண்வெட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியி…
-
- 1 reply
- 569 views
-
-
நிலையற்ற வாழ்வுடன்..... [ கதை கருத்துக்களம் அரட்டை பகுதிக்கு அல்ல...! ] பாகம்-1 தொடர்கதை ::... நெற்றியில் சுரக்கும் வியர்வைத்துளிகளை தனது சேலைத்தலைப்பினால் துடைத்து விட்டுக்கொண்டு வீதியின் ஓரமாக இருந்த அம் மரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டாள் கமலம். தனது சேலை முடிப்பில் இருந்து கொஞ்சப்பணத்தினை எடுத்து எண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவளின் கண்களில் அவ்வளியாக ரோந்தில் வந்த இராணுவத்தினர் கண்களில் பட்டனர். தனது எண்ணும் பணியினை இடையிலையே கைவிட்டவளாக நிமிர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று நிமிடங்களில் அருகில் வந்தவர்கள் "ஏ அம்மா இங்க இருக்கக் கூடாது எழும்பி அங்கால போய் இருங்க.…
-
- 1 reply
- 949 views
-
-
அதிர்ஷ்டம் ‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத் தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன். ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார். ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன். ‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என்…
-
- 1 reply
- 1k views
-