கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
வலி தெரியாக் காயங்கள்.... முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம். அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொ…
-
- 120 replies
- 14.6k views
-
-
காதல் சொல்ல… வா… – சிறுகதை கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டில்தான் சந்தித்தான் வளவன். வழக்கமாய் சினிமாக்களிலும், கதைகளிலும் வருவது போல் மோதல் இல்லை. அந்த மழை நாளில், நனைந்து விடாமலிருக்க கல்லூரி பேருந்துக்குள்ளே நெருக்கியடித்து ஏறிக் கொண்டிருந்தனர் மாணவர்களும் மாணவிகளும். கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் நின்று கொண்டிருந்தாள் குழலி. மழைத்தண்ணீரின் ஈரத்தில் செருப்பு நழுவ, கீழே விழவிருந்தவளை, பின்னால் நின்று கொண்டிருந்த வளவன்தான் கைகொடுத்து நிலை நிறுத்தினான். உடனே, பாரதிராஜா படத்தில் வருவது போல் தேவதைகள் புடைசூழ “தந்தன.. தந்தன தாளம் வரும் வரும்..” என்றெல்லாம அவன் மனம் பாட்டு படிக்கவில்லை. அவளைத் தேடி அலையவில்லை. நண்பர்கள் மூலம் இருப்பிடம் அறிய முய…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் https://www.vikatan.com
-
- 0 replies
- 1.7k views
-
-
கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார். கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக் கலாச்சாரம் வந்தபோது அவரது ஐயா ஊரில் முதலாவதாகக் கட்டிய கக்கூசு அது. கிணற்றடியில் இருந்து இத்தனை முழத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென சுகாதார அலுவலர்கள் அப்போது அறிவுறுத்தினார்கள். அருகாக இருந்தால் தண்ணீரில் மலக்கிருமிகள் பரவுமாம். கனகுராசரின் ஐயா அதற்கேற்ப பின்கோடியின் மூலையில் அதனைக் கட்டினார். அதற்குப் பின்புறத்தே வேலியிருந்தது. வேலிக்கு …
-
- 14 replies
- 1.6k views
-
-
பாடைக்கம்புகள் இரண்டையும் எடுத்து வளம் பார்த்து கல்லின் மேல் வைத்துவிட்டு, தலைமாடு கால்மாடு என இரண்டு இரண்டு கம்புகளாக அளவு எடுத்து வெட்டி சணல்கயிறால் கட்டத்தொடங்குகிறேன். திடீரென பறைமேளச்சத்தம் உச்சத்தொனியில் ஒலிக்க, முகத்தைத் திருப்புகிறேன். கொஞ்சம் மங்கலாக தெளிவில்லாமல் உருவங்கள் தெரிகிறது. வாசலில் கட்டிய வாழைக்குட்டி மட்டும் இலையை அசைத்துக் கொண்டு நிற்பது தெளிவாக தெரிய, பாடைக்கு கட்ட நான்கு வாழைக் குட்டி வெட்டனும் என நினைத்தபடி கத்தியை எடுக்க கையை நீட்டுகிறேன். உடல் அசைவினால் கழுத்தில் இருந்து நீர்க் கோடு மெல்லிய வெப்பத்துடன் உருண்டு ஓடியது. உடலெங்கும் ஒருவித கசகசப்பாய் இருக்கவே கையால் கழுத்தை துடைத்துக் கொண்டே கண்களைத் திறந்தேன். பக்கத்து கட்டிலில் நண்பன் மூச்சின…
-
- 7 replies
- 1.9k views
-
-
இது ஒரு கதை அல்ல...நடந்த சம்பவங்களின் தொகுப்பே..... அந்த காலத்தில்- 80 களில், 5 வகுப்பு கொலர்ஷிப் இப்பமாதிரி, பேப்பர்ல படம் எல்லாம் போட்டு, "எங்கட பாடசாலையில் இருந்து 302 பேர் தோற்றி அதில் 4 யாழ்பாணத்தின் முதல் பத்து இடத்தில வந்திருக்கினம், 87.3 பேர் சித்தியடைந்திருக்கினம், இன்னும் 33.21 பேர் தசம் 33 மார்க்கால பெயல் விட்டிருக்கினம்", அவைகளை நாங்கள் வாழ்த்துகிறோம், அவர்கள் பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ்த்துகிறோம் என்று வராதகாலம், நானும் எனது "சக்சவிவ்" பிள்ளை பிராக்காட்டல், பிராக்கு பார்த்தல் கோர்ஸ் எல்லாம் முடித்து, அந்த காலத்தில் கொலஷிபிக்கு பெயர் போன டீச்சரிடம், ஒருமாதமோ, இரண்டு மாதமோ இருக்கையில் சேர்ந்தேன், ஐந்தாவது ஆளாய்.... யார் யார் எனக்கு முன்னம்...அவ…
-
- 8 replies
- 1.4k views
-
-
இந்நாடகத்திற்காக youtubeஇல் வந்த சில பின்னூட்டங்கள் 1.எமது கலைஞர்களின் வலியை சொல்லும் ஒரு அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி சித்தப்பா.ஒவொரு ஈழத்து கலைஞனின் கஷ்டங்களையும் அற்புதமாக காட்டியுள்ளீர்கள்.வாழ்க உங்கள் கலைப்பணி .எனது சிறு கருத்து இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.உண்மையான ஒரு விடயத்தை வழங்கியமைக்கு நன்றிகள் 2.அருமை பாஸ்கி! உங்களைப்போன்ற யதார்த்தமான கலைஞர்கள் எங்கள் சமூகத்துக்கு மிக மிக அவசியம். நகைச்சுவையாக அதேசமயம் சிந்திக்க வைக்கும் அற்புதமான படைப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள்! தொழிநுட்பத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மிக மிக அபாரமாக இருக்கும். எதிர்காலத்தில் கவனிக்கவும்! 3.ஸ்ரீ அண்ணா மிகவும் அருமையா …
-
- 2 replies
- 1.5k views
-
-
நாணயம் ”நாளைக்கு பீசு கொண்டாரலைன்னா டியூசனுக்கு வர வேண்டாம்னு சார் சொல்லிட்டார்” ஏழு வயது தங்கராசு அம்மா அருக்காணியிடம் சொன்னான். அருக்காணி வருத்தத்தோடு காலண்டரைப் பார்த்தாள். இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல் அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில் அட்வான்சாக இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது. மூன்றாவது வீட்டு எசமான் வேலைக்கு சேரும் போதே அட்வான்ஸ் எல்லாம் கேட்கக் கூடாதென்று கறாராகச் சொல்லி இருந்தார். அவள் கணவன் குடிகாரன். ஜேப்படித் திருடனும் கூட. இப்போது ஜெயிலில் இருக்கிறான். வெளியே வர ஆறு மாதமாகும். ஆனால் வந்தும் அவளுக்குப் பெரிய உபகாரமாகப் போகிறதில்லை. அவனுக்கும் சேர்த்து அவள் தான் செலவு செய்ய …
-
- 3 replies
- 1.2k views
-
-
திருவையாறு -எஸ். சங்கரநாராயணன் கண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல… என்ன ஸ்வரம் அது, என்று மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவற்றின் துல்லியம் கவிதைத் திவலைகள். மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. …
-
- 0 replies
- 1.4k views
-
-
அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே ...என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை பேசுகிறவர்கள் நாங்கள்..எனவே உங்களை நான் சிறீலங்கா தமிழர் என்று அழைத்தால் நான் இங்கு துரோகியாகி விடுவேன். உயிரிற்கு உத்தரவாம் உண்டு .அதே போல நீங்கள் உங்களை ஈழத் தமிழர் என்றழைத்தால் உங்கள் உயிரிற்கு உத்தரவாம் இருக்குமா என்பது சந்தேகமே. .எனவேதான் பொதுவாக ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியிலும்..பின்னர் 70கள் வரை சிலோன…
-
- 86 replies
- 10.5k views
-
-
அழகுக்குட்டி செல்லம் சென்ற வார விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டுக்கு சென்று இருந்தேன்..அவளுக்கு பெண குழந்தை கிடைத்து பத்து மாதங்கள் ஆகின்றன. முதற்குழந்தை, அவளது தாயார் தாயகத்தில். இடையில் நானும் அவளது ம ச்சாளும் (கணவனின் தங்கை) உதவியாய் இருந்தோம். . கணவன் காலயில் வேலைக்குபோயவிடுவார். நம்ம செல்லக் குட்டி எழும்பிவிடுவாள். காலையில் டாட்டா பாய் சொல்லி ..அப்பாவை அனுப்பி வைப்பாள். அக்கா மகள் தன் வேலைகள் ஆரம்பிப்பாள் .அடிக்கடி நப்பி மாற்றுதல்,( diaper )தூங்க செய்தல் ...நேரத்துக்கு பாலூட்டுதல் என்று தனியாகவே எல்லாம் செய்வாள். கற்றுக் கொண்டுவிடாள். சில சமயம் வீட்டில் எல்லோரும் தூங்கக் செல்லக்குட்டி மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் இருப்பாள். . இதனால் தாயும் காலயில் சேர…
-
- 6 replies
- 1.8k views
-
-
கடிபட்ட பொழுதுகளின் உத்திரவாதங்கள்,,, சுற்றிக் கொண்டிருக்கிற ஒற்றைக்கொசு கடிக்கும் என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நீண்ட நேரமாய் சுற்றிக்கொண்டிருக்கிறது, ”என்ன வேணும் உனக்கு,எனது ரத்தம்தானே உட்கார்ந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு போ” என உடல் முழுவதையும் திரை விலக்கி காட்டிவிட முடியாது தான், ”எத்தனையோ விதங்களில் யார்யாரோலோ என்னனென்ன விதமாகவோ ரத்த மும் வியர்வையும் வேர்வையும் உழைப்பும் உறிஞ்சி எடுக்கப்படும் பொழுது நீ உட்கார்ந்து கொஞ்சம் உன் உணவுக்கான தேவையாய் எடுப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லைதான்.” கொசு சொல்கிறது,”குறைந்து விடப்போவதில்லை என்பது வாஸ்தவம்தான். அதற்காக ஒரேயடியாய் உறிஞ்சி கொண்டே இருக்க முடியாதுதா…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாடுபட்ட சிலுவையள்-சிறுகதை-தமிழ்க்கவி காலையில் பனிபெய்து நனைந்திருந்த வயல் வரம்பு. கால்களை அவ்வப்போது வழுக்கிக் கொண்டிருந்தது. அதென்ன, புல் இல்லாத இடத்தில் கால் பட மண் ஒட்டுது. அந்தக்காலை புல்லில வைக்க பனி நனைக்குது. வழுக்கத்தானே செய்யும் என்றாலும், அவளுடைய நடையில் ஒரு கொஞ்சமும் வேகம் குறையவில்லை. அதுமட்டுமல்ல அவளுடைய தலையில் ஏற்றியிருந்த சுமைகூட அப்படியே இருந்தது. அவளுடைய ஒருகையில் அரிவாள் அவளுடைய கைவீச்சுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தது. மறுகையில் தண்ணீர்க்கலயம். அதன் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கில் பிடிக்கப்பட்டிருந்தது. தலைச்சுமை சுருட்டி வைத்த சும்மாட்டில் சிவனேயென்று கிடந்தது. என்னதான் வேகமாக நடந்தாலும் அவளுடைய உடலில் இன்றைக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.[/size] [size=4] [/size] [size=4]அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங…
-
- 2 replies
- 676 views
-
-
அண்மையில் உளுறு என்ற மத்திய அவுஸ்திரெலியாவின் நகரமொன்றுக்கு சென்றிருந்தேன். மாலைநேரம் அங்கு தங்கிய விடுதியில் இருந்த நீச்சல் குளமொன்றினைச் சுற்றி அமைந்துள்ள கதிரையொன்றில் இளைப்பாறிக்கொண்டிருந்தேன். ஒரு 7 வயதுடைய அவுஸ்திரெலியா ஆதிவாசிகளின் இனமான அபோரிஜினல் இனத்தினைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி , ஒரு வெள்ளைக்கார சிறுவனுடன் நீரினில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுவனுக்கும் 7 வயது இருக்கும். அவர்களின் உரையாடலின் மூலம் அச்சிருமியை, வெள்ளைக்காரக் குடும்பம் சொந்தப்பிள்ளையாக வளர்த்து வருவதை அறிந்தேன். சிறுவனும் சிறுமியும் அங்குதான் முதலில் சந்தித்ததை உணர்ந்தேன். அவர்களின் உரையாடல்களில் சில சிறுவன் - அவுஸ்திரெலியா தினத்தினை நீ கொண்டாடுகிறாயா?. சிறுமி --…
-
- 7 replies
- 2.2k views
-
-
நீ அமைதியாக உறங்க… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து நீ அமைதியாக உறங்க… வியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது. கம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இருட்டில் பார்த்தால் எதுவுமே தெரியாது. நெஞ்சத்தை ஏதோவொன்று அழுத்தும். ஆனால் நிலவில் இனிமைதான். எங்கும் வெண்ணிறப் படிமங்கள். மரங்களின் நிழல்கள் மறைக்க முயன்றன; முடியவில்லை. நாலாவது வரிசையில் கடைசியா…. இடம் அடையாளம் தெரிந்தது. அங்குதான் அவனின் அண்ணன் உறங்குகின்றான். பின்பக்கம் சத்தம் கேட்டது. சமையற்கட்டைவிட்டு அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். இண்டைக்…
-
- 0 replies
- 655 views
-
-
சுமை சாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து காற்று குளிரேறி அக்ரகாரத்தை வருடிக் கொண்டிருந்தது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து மனசுக்குள் பிரயாணம் செய்து கொண்டிருந்த சர்மா, முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டுத் தன்னுள்ளே கலைந்தார். ‘யாரது?’ ‘நான் அப்பாசாமி, சர்மா’ இருட்டும் கொஞ்சம் வெளிச்சமும் வந்து கொண்டிருந்த அப்பாசாமி மேல் விழ, பார்வைக்கும் மனசுக்கும் அடையாளம் தெரிந்தது. ‘வாங்க அப்பாசாமி, ரொம்ப அதிசயமா இருக்கு! அஞ்சரை மணிக்குக்கூடக் கோயில்லே பார்த்தேனே? குருக்களோட பேசிட்டு இருந்தீங்க…’ …
-
- 1 reply
- 558 views
-
-
வடுகநாதம் சிறுகதை: என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு இருள் அடர்ந்த பனி இரவு. நடுச்சாம வேளை. தோட்டத்து வீட்டின் உள் அறையில் படுத்திருந்த நான் ஏதோ சத்தம் கேட்டு, கண்விழித்தேன். நாய்கள் குரைப்பதும், ஆட்கள் விசில் அடிப்பதும் மாறி மாறிக் கேட்கத் தொடங்கின. கிழக்குப்புறத்தில் இருந்துதான் சத்தம். நான் அவசரமாக எழுந்து ஆசாரத்துக் கயிற்றுக்கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினேன். எழுந்ததும் ஏதோ ஆபத்து என உணர்ந்துகொண்டார். வெளித்திண்ணை விட்டத்தில் செருகியிருந்த குத்தீட்டியை உருவி எடுத்துக்கொண்டு, விசில் சத்தம் கேட்கும் கிழப் புறத்துத் தோட்டத்தை நோக்கி ஓடினார். அதற்குள், வடக்கே செங்கா…
-
- 0 replies
- 2k views
-
-
ஒரு மனைவியின் கதை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி. அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அரசியல், சமூகச் சிந்தனைகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
டெலிபோன் கால் - எஸ்.கே. மூர்த்தி பாழாய்ப் போன டெலிஃபோன் அடிக்கொரு தரம் கைகடிகாரத்தைப் போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த சியாமளாவின் இனிய கற்பனைகளை அதன் காரசாரமான ஒலி கலைத்தது. அவளது அழகு முகத்தில் ரவுஜ் மெருகையும் கலைத்துக் கொண்டு எள்ளும் கொள்ளும் வெடித்தன. வேண்டா வெறுப்போடு விரைந்து சென்று ரிஸீவரை எடுத்தாள். ‘ஹலோ’ ‘டியர் சியாமள்! வில் யூ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ?’ போலியான பரிவு ததும்பும் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குச் சப்பென்றாகிவிட்டது. ஒரேடியாய்த் துள்ளிக் கொண்டிருந்த மனம் சோர்ந்து போய்விட்டது. ‘டோண்ட் பீட் எபெளட் த புஷ்! சினிமாவுக்கு வர முடியாதபடி ஒரு கேஸ் …
-
- 0 replies
- 759 views
-
-
பிலோமி டீச்சர் கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, தன்னுள் புதைத்துக் கொள்ளவோ முடியாமலே போகிறது. அதற்கும் மேலே போகலாம் என்றாலும் சூன்யம் தாக்குகிறது. மரணபயம் வந்து விடுகிறது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் எல்லையை வைத்தது யார்? எல்லோருக்குமே இப்படித்தானா? இல்லை, என்னை மட்டும்தான் அந்த உச்சநிலைக்கு மேல் மரணம் கவ்விக் கொள்ள முயற்சிக்கிறதா? இருட்டு சூழ்ந்து வரும் சமயம் கண்கள் சுழன்று களைத்துப்போய் விடுபட்டு மூச்சு வாங்கிக் கொள்வதுதான் தொடர்ந்து நடக்கிறது! பின் இதற்கா? இதற்குத்தானா? இந்த அசிங்கத்துக்குத்தானா? என்று கலவியின் மீது வெறுப்புப் போர்வை உடனே போர்த்திக் கொள்கிறது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
-
நிலமை.(நிமிடக்கதை) அசோவனச் சிங்கங்கள் முயல்களையும் மான்களையும் அழைத்து நாமெவரும் மாமிசம் உண்ணக்கூடாது. அது பாவமான செயலென்று, இரத்தம் காயாத வாய்களோடு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றன.
-
- 2 replies
- 1.1k views
-
-
சாய்வு அனோஜன் பாலகிருஷ்ணன் நான் உனைச் சந்தித்தது ஒரு குளிர்காலப் பொழுதில். மரங்கள் இலைகளை உதிர்த்து அலுமினியக் கம்பிகள் போல் விறைப்பாக சலனம் அற்று நின்றிருந்தன. என் அறை ஜன்னலுக்கால் எட்டிப்பார்க்க துமிக்கும் பனித்துளிகள் பருத்திப் பஞ்சுபோல் வீழ்ந்து கொண்டிருந்தன. சோர்வுடன் தலையை போர்வைக்குள் உள்ளீர்த்து அமிழ்ந்தேன். அப்போது தான் உன் வருகைக்கான சத்தம் கேட்டது. பீடித்திருந்த தூக்கம் கலைந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை. சோம்பலோடு கைகளை உதறி ஜன்னலுக்கால் வெளியே பார்த்தேன். வெண்ணொளி என் கண்களை கூசச் செய்தது. தடுமாறி எழுந்து கதவை இழுத்துத் திறந்தேன். காலுக்குள் நேற்று இரவு அருந்திய ஹனிக்கேன் பியர் டின்கள் இடறியது. என் முன்னே நீ நீண்ட சூக்கேசோடு நின்றிருந்தாய். நீரில் அலைய…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதைகள்! ராஜேஷ்குமார் இரண்டாவது இன்னிங்ஸ் நியூ ஜெர்ஸியில், ஃபைனல் சொல் யூஷன் சாஃப்ட்வேர் கம்பெனி. லன்ச் இடை வேளை. கேன்ட்டீனில் உட்கார்ந்து சிக்கன் சீஸையும், யோகார்டையும் கொறித்துக் கொண்டு இருந்தபோது, மெர்ஸி வந்தாள். ‘‘என்ன ஷிவா… ரீட்டாவைக் காதலிக்கிறி யாமே, நிஜமா? உன்னோட பி.சி&யில் அவ போட்டோ, அவளோட பி.சி-யில் உன் போட்டோ..! டூயட் பாடாதது ஒண்ணுதான் குறையாம்! ஆபீஸே புகையுது!’’ ‘‘பேத்தல்!’’ ‘‘நம்ப மாட்டேன். இன்னிக்கில்லேன் னாலும் என்னிக்காவது ஒரு நாள் பூனைக்குட்டி வெளியே வந்துடும்…’’ என்றபடி மெர்ஸி எழுந்து போக, அந்த இடத்தில் வந்து உட்கார்ந்தாள் ரீட்டா. ‘‘மெர்ஸி பேசியதை நானும் கேட்டேன். எனக்குத் தெரிஞ்சு அதுல பாதி நிஜம்! ந…
-
- 0 replies
- 507 views
-