கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
குசலாம்பாள் என்னும் செயின் புளொக் யதார்த்தன் Yulanie ஆயிரத்தித்தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி, “நடுவில்” என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி, கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ எப்போதும் நிறையப்பக்கங்களைச் செலவழித்து வெய்யோன் எழுதிக்குவிப்பதை அம்மான் …
-
- 1 reply
- 1.5k views
-
-
தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான். ‘‘பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு. கொஞ்சம் இரு... உன் பையன் பேசுறான்!’’ சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான். ‘‘அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க. நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க. பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!’’ - அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெட்போனில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோகுலின் முகம் பிரகாசமானது. உடனே கிளம்பியவர், இரண்டு மணி நேரத்தில் பையன் சங்கரோடு வந்தார். நடந்ததை செல்வராகவனிடம் விளக்கி…
-
- 1 reply
- 1.4k views
-
-
உங்கள் வாழ்க்கையில் இறைவனை உணர்ந்து உள்ளீர்களா? சிறு கதைதான் பேருண்மையை உணரவைக்கிறது. அன்றைக்கும் வழக்கம் போல் பாட புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஆங்காங்கே உடலில் அரிப்பு ஏற்படுவதை போன்ற உணர்வு.பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவசரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் பள்ளிக்கு சென்று விட்டேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து உடலில் மீண்டும் அரிப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் பொறுக்க மு…
-
- 1 reply
- 832 views
-
-
காளி - சிறுகதை ச.விசயலட்சுமி - ஓவியங்கள்: செந்தில் விடியக் காத்திருக்கும் வானத்தின் ஒளிக்கீற்றுகள், மெல்லிய நிழலைப் படரவைத்தபடி எட்டிப்பார்க்கக் காத்திருக்கின்றன. இந்தப் பிரதேசத்தின் அமைதியைக் கைவிடப்போகும் மக்களில் சிலர் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தனர். கடற்கரை, கூடைகளோடும் மூன்று சக்கர வண்டி வைத்திருப்பவர்களோடும் கல்யாணக்கோலம் பூண்டிருந்தது. ஏமாந்தவர்களிடமிருந்து தனக்கான உணவை அபகரிக்கக் காத்திருந்தன காகங்கள். அவை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச்செய்தது. ``அட சனியனே, ஏன்டா இப்படி என் உயிர எடுக்குற?’’ பட்டென அறைந்தாள். இன்னும் வேகமாக …
-
- 1 reply
- 3.3k views
-
-
ஆசை கனவே... அதிசய நிலவே! ஆசை கனவே... அதிசய நிலவே! ஜி.ஆர்.சுரேந்தர்நாத் க ண்களை இறுக மூடிக்கொண்டு, தூங்க முயற்சித்தேன். தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனம் வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு எண்ணிட்டிருந்தா தூக்கம் வரும்’ என்று யாரோ கூறியது ஞாபகத்துக்கு வர, மனதுக்குள் எண்ண ஆரம்பித்தேன். ‘‘ஒண்ணு...’’ …
-
- 1 reply
- 1.3k views
-
-
தாயகக் கனவுடன்… (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்) ஸ்டோர்ரூம் சுவரில் சாய்ந்தபடி நான் விம்மியழுததை சுவேதா கவனித்திருக்க வேண்டும். ‘அப்பா, ஏன் அழுவுறீங்க?’ என்றாள் ‘இல்லை, ஒன்றுமில்லை.’ என்று தலையை அசைத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டேன். ‘அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க.’ ஏன்று தனது அறிவுக்கேற்ற அறிவுரை த…
-
- 1 reply
- 619 views
-
-
மஞ்சள் குருவி! - சிறுகதை சிறுகதை - அனுராதா ஆனந்த் - ஓவியம்: ராஜேந்திரன் அந்தக் குறுகிய தார் சாலையில் நடக்கும்போது ஒரு விடுபடலை உணர முடிந்தது அவளால். ஒவ்வோர் அடியிலும் மேலே அப்பியிருந்த ஏதோ ஒன்று நெகிழ்ந்து விழுவது போல லேசாக உணர்ந்தாள். இரு பக்கமும் ஆசீர்வாதமாக ஆரஞ்சு வண்ண இலைகளைச் சொரிந்த மரங்கள், மாலை என்றாலும் கோடையின் உக்கிரத்துடன் அடிக்கும் வெயில், பாட்டொன்றை மெல்லியதான தன் அடிக்குரலில் பாடிக்கொண்டும், இடையிடையே நிறுத்தி பறவைகளின் கூப்பிடு ஓசையை அவளுக்கே உரிய பிரத்யேக நெற்றிச்சுருக்கலுடன் கேட்டுக்கொண்டும் உடன் நடந்து வரும் நிவேதா... இவையெல்லாம் சேர்ந்து அந்தப் பள்ளியின் உள் உள்ள இச்சாலைக்கு ஒரு சிறப்புத் தொனியை ஏற்றின. எப்படியாவது நிவேத…
-
- 1 reply
- 2.2k views
-
-
உள்ளங் கவர் கதை . இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது. "நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்று எப்போது நம்மால் உணரமுடியவில்லையோ, அப்போது நாம் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டும்' என்று ஒருவாறு விளக்கம் சொல்லிக்கொண்டான். இறந்துவிட்டபின் எப்படி நினைத்துக் கொள்ளமுடியும்? என்று திருப்பிக்கேட்டது அவன் மனம். 'சே' என்று அலுத்துக்கொண்டு, விரல்களால் பவுடரைத் தொட்டு கண்ணாடிக்குள் ஊடுருவிப் பார்த்து முகத்தில் பூசினான். கருப்பாக இருந்தாலும் சதைப்பிடிப்பான முகம் அழகாகவே தெரிந்தது. தலைமுடியைச் சீவி, கிருதாவை வருடியபோதுதான் கவனித்தான். இடது கிருதாவில் ஒரு வெள…
-
- 1 reply
- 740 views
-
-
ஓரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்ல…
-
-
- 1 reply
- 336 views
-
-
“என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும். நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும். நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை. என் மரணத்தின் பத்து நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்.” மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை. தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகி…
-
- 1 reply
- 1.5k views
-
-
அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை லக்ஷ்மி சரவணகுமார், ஓவியங்கள்: ஸ்யாம் இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு... வெறுப்பு... வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு துர்சகுனமாகவோ அல்லது விபத்தாகவோதான் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும், அம்மா அவரை நேசித்தாள். …
-
- 1 reply
- 1.6k views
-
-
முகம் - போகன் சங்கர் நான் அவளை உணர்வதற்குள் மிக நெருங்கியிருந்தேன். சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு, மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்து கொண்டு நேராகப் பார்க்கையில், ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாகத் துலங்கினாள். தெருவில் அவ்வப்போது யாராவது எச்சரிப்பது உண்டுதான். “சார் ராத்திரியில அந்தியில சூச்சிச்சிப் போணும். அந்தப் பாலத்துலே ஒரு சூலி வாதை உண்டாக்கும்.’’ “சூலி வாதைன்னா?” “நிறைகர்ப்பத்துல செத்துப்போன பொண்ணு.” “செத்தா போனா? கொன்னு தாழ்த்தியது” என்பார் ஒருவர். “யார் கொன்னது?” “யாரு கொல்வா?அவளோட தந்தையோ உடம்பிறந்தானோ பர்த்தாவோ காமுகனோ அரசனோ...” “எப்போ ந…
-
- 1 reply
- 1.9k views
-
-
பிரசன்னம் சிவநேசனுக்கு வயது அறுபத்தி நான்கு முடிந்து ஏழு மாதம் பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டன. அன்றுதான் அந்த பிரசித்தி பெற்ற சம்பவம் நிகழ்ந்தது. நாம் நேரடியாகவே கதைக்குள் நுழைந்து விடலாம். சிவநேசனுக்கு கடவுள் நம்பிக்கை நிரம்பவே இருந்தாலும், சாமியார்கள், மந்திரவாதிகள் இன்னபிற‘கள்’ மேல் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் எந்த சாமியார் எங்கே உதயமானாலும், கைக்காசில் பஸ் டிக்கெட் செலவழித்துப் போய் பார்ப்பார். ஆனால் அந்த சாமியார்/ரிணி ஏதாவது அற்புதங்கள் செய்து காட்டுபவராக இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் அற்புதங்களை திரும்பத் திரும்ப கூர்ந்து கவனிப்பார். சில மணி நேரங்களில், சில சமயம் சில நாட்களில், அந்த அற்புத வித்தையின் சூட்சுமம் என்னவென்று தெரிந்து போ…
-
- 1 reply
- 568 views
-
-
மசாஜ் ம. நவீன் மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும் மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும் கூச்சம் வந்து தடுத்துக் கொண்டிருந்தன. நான்கு மாதங்களுக்கு முன் திரு என்னை முதன…
-
- 1 reply
- 1.6k views
-
-
2 ஆண்டுகளில் 9 கொலைகள்! விஷ ஊசி வழக்கு! தொடரும்
-
- 1 reply
- 1.9k views
-
-
ப்ரியம் என்பது.. என்னைப் பொறுத்தவரை ப்ரியத்தை சொல்லாமலிருப்பது. அம்புட்டுதான்.. இளம் பிராயத்தில் ஏதேனுமொரு காரணத்துக்காக வீட்டில் பட்டினிப் போராட்டம் நடத்துவதுண்டு. உன் வயிறு.. உன் பசி.. என்று பேசாமல் போகாமல் அம்மா எப்போதும் என்னை சாப்பிடச் சொல்லி கெஞ்சியபடியே இருப்பாள். என் அம்மாவை பிளாக் மெயில் பண்ண வேண்டுமென்றால் உண்ணாவிரதம் இருந்தால் போதும். பலவாறாக கெஞ்சுவாள். நாம்தான் பெரிய கிரிமினல் ஆச்சே. எந்த கெஞ்சலுக்கும் எப்படிப்பட்ட கண்ணீருக்கும் மசிந்ததில்லையே.. நான் செத்தா நீ சாப்புடுவியாடா என்று கூட கெஞ்சுவாள். ம்ஹூம். சாப்பிட மாட்டேனே.. ஒரு முறையாவது எதற்காக நீ என்னை சாப்பிட வைக்க இத்தனை மெனக்கெடுகிறாய். ஒரு வேளை சாப்பிடாவிட்டால் நான் செத்தா போய்விடுவேன் என்று ஒர…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிபாரிசு ‘‘போப்பா, என்னை ரொம்ப ஏமாத்திட்டியே!’’ என்றபடியே வந்தார் நீண்ட நாள் நண்பர் சண்முகம்.‘‘என்னப்பா... வரும்போதே குறை சொல்லிக்கிட்டு வர்றே..?’’ என்றார் ரமணி.‘‘என் உறவினர் பையன் ஒருத்தனை சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு உன்கிட்ட அனுப்பினேன். பார்க்கலாம்னு சொல்லி அனுப்பிட்டியாமே. இதுதான் நீ எனக்குக் கொடுக்குற மரியாதையா?’’ - படபடத்தார் சண்முகம். ‘‘நீ அனுப்பின பையன் எம்.ஏ படிச்சவன், அழகா டிப் டாப்பா இருக்கான், நாகரிகமா டிரஸ் பண்றான். அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு ஒத்து வர மாட்டானே!’’‘‘எப்படிச் சொல்றே?’’‘‘இன்டர்வியூவுக்கு வந்தவன் நெத்தியில விபூதி, குங்குமம் எதுவும் இல்ல. என் அறை முழுக்க இருந்த படங்களைக் காட்டி, ‘இங்குள்ள சாமி படங்களைப் பத்தி என்ன நினைக்கிறே?’னு…
-
- 1 reply
- 1k views
-
-
ஸ்டீயரிங் வீல் சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு அந்தப் பாதை, வண்டிக்குப் பழகிப்போன ஒன்று. அவள் ஸ்டீயரிங் வீலில் கையை வைத்திருக்கக்கூடத் தேவை இல்லை என்று தோன்றும். தினமும் காலை 7 மணிக்கு அவள் அமர்ந்து, காரேஜ் பொத்தானை அமுக்கி அது திறந்துகொண்டதும், வண்டி சிலிர்த்துக்கொண்டு தன்னிச்சையாகக் கிளம்புவதுபோல இருக்கும். வேடிக்கை... அதற்கும் ஓர் ஆன்மா உண்டு; உணர்வு நிலை உண்டு என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். அவள் சோர்ந்திருந்தால், அது வண்டியையும் தொற்றிக்கொள்ளும். லேசில் கிளம்பாது. ஆனால் கிளம்பிவிட்டால், பாதி வழியில் என்றும் நின்றது இல்லை. சரியாக அவள் வீட்டை அடையும் வரை காத்திருக்கும். பிறகு ஆளைவிடு என்பதுபோல பெர…
-
- 1 reply
- 1.5k views
-
-
கடிபட்ட பொழுதுகளின் உத்திரவாதங்கள்,,, சுற்றிக் கொண்டிருக்கிற ஒற்றைக்கொசு கடிக்கும் என்கிற எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நீண்ட நேரமாய் சுற்றிக்கொண்டிருக்கிறது, ”என்ன வேணும் உனக்கு,எனது ரத்தம்தானே உட்கார்ந்து உறிஞ்சி எடுத்துக் கொண்டு போ” என உடல் முழுவதையும் திரை விலக்கி காட்டிவிட முடியாது தான், ”எத்தனையோ விதங்களில் யார்யாரோலோ என்னனென்ன விதமாகவோ ரத்த மும் வியர்வையும் வேர்வையும் உழைப்பும் உறிஞ்சி எடுக்கப்படும் பொழுது நீ உட்கார்ந்து கொஞ்சம் உன் உணவுக்கான தேவையாய் எடுப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லைதான்.” கொசு சொல்கிறது,”குறைந்து விடப்போவதில்லை என்பது வாஸ்தவம்தான். அதற்காக ஒரேயடியாய் உறிஞ்சி கொண்டே இருக்க முடியாதுதா…
-
- 1 reply
- 1.2k views
-
-
சுமை சாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து காற்று குளிரேறி அக்ரகாரத்தை வருடிக் கொண்டிருந்தது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து மனசுக்குள் பிரயாணம் செய்து கொண்டிருந்த சர்மா, முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டுத் தன்னுள்ளே கலைந்தார். ‘யாரது?’ ‘நான் அப்பாசாமி, சர்மா’ இருட்டும் கொஞ்சம் வெளிச்சமும் வந்து கொண்டிருந்த அப்பாசாமி மேல் விழ, பார்வைக்கும் மனசுக்கும் அடையாளம் தெரிந்தது. ‘வாங்க அப்பாசாமி, ரொம்ப அதிசயமா இருக்கு! அஞ்சரை மணிக்குக்கூடக் கோயில்லே பார்த்தேனே? குருக்களோட பேசிட்டு இருந்தீங்க…’ …
-
- 1 reply
- 551 views
-
-
BY: லதா சரவணன் என் நேர் எதிர் கூடத்தில்தான் நேற்று அவள் இருந்தாள். எத்தனை நாள் பழக்கம் எனக்கும் அவளுக்கும். ஒருவருடம் அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அர்த்தமில்லா அறிமுகங்களை தினமும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கடந்து அவள் முகம், நான் இந்த வீட்டுக்கு வந்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அலங்காரப் பொருள்களில் ஒன்றாகிப்போனேன். ஏனோதானோவென்று என் பசி தீர்க்கப்படும், ஆனால் அவள் வந்த இந்த ஒரு வருடத்திற்குள் நான்தான் எத்தனை பாந்தமாய் இருந்தேன். என்னை குளிக்க வைத்து அவளின் தளிர் விரல்களால் மஞ்சள் பூசி, குங்குமப்பொட்டிட்டு உச்சியில் இரண்டு துளி பூ வைத்துவிடாமல் அவள் காலை தொடங்கியதே இல்லை. அதன்பிறகு தான் அவள் மற்ற வேலைகளை கவனிக்கச் செல்வாள். …
-
- 1 reply
- 994 views
-
-
எதிர்ப்பு - ஈழநாதன் "...இந்தக் கதைக்கும் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல..." காட்டிலே கூடியிருந்த மரங்களிலிருந்து தனியாக,கிளையும் கொப்புமாக பரப்பி பசுமையோடு நின்றிருந்தது அந்த மரம். அதனைக் கடந்து போகும் பறவைக் கூட்டங்கள் கூட சிறிது நேரம் தங்கிப் போக விரும்பின அந்தளவு வனப்பும் வளமும் கொண்டு விளங்கியது அந்த மரம் காலங்காலமாக பலவித பறவைக் கூட்டங்கள் கிளைகளில் கூடமைத்துத் தங்கின,கிளைகளின் உச்சியில் கூட்டமாக வாழ்ந்து வந்த காகம்,மரப் பொந்துகளில் வசித்த ஆந்தை இவை தவிர சிறு குருவிகள் அணில்கள் எல்லாவற்றிற்கும் மரம் நிழலும் பழமும் கொடுத்தது. காகங்களின் கூடு ம…
-
- 1 reply
- 559 views
-
-
ஒரு நிமிடக் கதை பொண்டாட்டிதாசன் ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா. அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக! இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா. அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா,…
-
- 1 reply
- 1.6k views
-
-
என்று சொந்த ஊரைவிட்டு புறப்பட்டோமோ அன்றே உணர்விளக்கத் தொடங்கிவிட்டன எமது சம்பிரதாயங்களும் பண்பாடுகளும்.....! அதற்கு கார்த்திகை விளக்கீடு ஒன்றும்விதிவிலக்கல்ல. நான் கடைசியாக விளக்கீட்டை விளக்கீடாக கொண்டாடி 15 வருடங்கள் கடந்துவிட்டன. மாலை 5 மணிக்கே அயலவர் வீடுகளில் "மாவிலி சங்கிலி இராசாவே வருசம் வருசம் வந்து போ..." என்ற பாடல்களுடன் விளக்கீடு அமர்க்களப்படும். குறைந்தது இரண்டு நாட்களுக்கு முதலே சீமைக் கிழுவையில் தடிகள் வெட்டி ஒன்றரை அடி உயரத்தில் பந்தம் சுற்றி விளக்கீட்டை வரவேற்கத் தயாராவோம். நீங்கள் எல்லோரும் எப்படியோ நானறியேன். நான் வளர்த்த பொன்வண்டுக்கு சாப்பாட்டுக்கு சீமைக்கிழுவை குருத்து வேணும் எண்டு சண்டைபிடித்து குருத்து பிடுங்கிய ஞாபகம் இன்னு…
-
- 1 reply
- 1k views
-
-
மனிதாபிமானம் காலை 6.30, ராஜு அவசர அவசரமாக குளித்து விட்டு பூஜை அறைக்கு வந்தான், சாமியை கும்பிட்டுக் கொண்டே “சுக்கலாம் பரதரம் விஷ்ணும் . . . . அம்மா டையம் ஆச்சு சீக்கிரம் டீபன் எடுத்து வை . . .சசிவர்ணம் சதுர்புஜம் . . .” “டேய் சாமி ரூம்ல சாமியை பத்தி மட்டும் நன” என்றாள் அம்மா புன்சிரிப்புடன். வீட்டு ஹாலில் தூக்க கலக்கத்தில் உக்கார்ந்து இருந்த சொந்தகாரர்கள் அனைவரும் சிரித்தனர். ராஜுவும் பொய் கோபத்தோடு “ஏன் சொல்லமாட்டிங்க இன்னைக்கு ஆபிஸ் வேலையா பாண்டி போணும், காலை சீக்கிரம் எழுப்ப சொன்னா எழுப்பாம நக்கல் வேற” என்று சாப்பிட டைய்னிங் டேபிலில் உக்கார்ந்தான். அதுவரை அமைதியாக இருந்த ராஜுவின் தங்கை மதி வந்து “இங்க பார்டா” என்று அவள் தலையை ராஜுவிடம் காட…
-
- 1 reply
- 1.1k views
-