கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்... மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் அன்று பாரிஸிலும் எட்டிப்பார்த்துக்கொண்டி…
-
- 15 replies
- 2.6k views
-
-
ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்...... சிறுகதை: யோ.கர்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் ஆதிரைக்குவிரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ? இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது. இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப…
-
- 6 replies
- 1.6k views
-
-
துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் 1 இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன், எல்லா TV காரரும் தங்களின்ர தலைப்புச் செய்தியில பிரபாகரனின்ர சடலத்தையும், மூளையையும் தகட்டையும், பிஸ்டலையும் பல்வேறு கோணங்களில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சி குறைந்தது ஐந்து பத்து நிமிடங்கள் நீடித்தது. இதற்கு அடுத்ததாக, பிரபாகரனது மகன் சாள்ஸ் அன்ரனியினது உடலைக் காண்பித்தார்கள். மூன்றாவதாக பிரபாகரனது மகள் துவாரகா என ஒரு உடலைக் காண்பித்தார்கள். இவ்வளவு சங்கதிகளையும் எங்கட தமிழ் ஆக்கள் TV-யில பார்த்துக்கொண்டிருக்கினம் - என்ன செய்யிறதென தெரியாத பதகளிப்புடன். கொஞ்சப் பேருக்கு சந்த…
-
- 8 replies
- 3.3k views
-
-
நான் கனவுகள் காண்பவன் என நீங்கள் கூறலாம். ஆனால் நான் ஒருவன் மட்டுமே கனவுகள் காண்பவனல்ல.” மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர் ஜான் லெனான் எழுதிய இந்த வரிகள் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஜான் கண்ட கனவுகள் பலவற்றை, ஏன் அனைத்தையும் நனவாக்கிக் காட்டியவர். அவர் நனவாக்கிக் காட்டிய முயற்சியின் பலன்கள் நமக்கு நன்றாக தெரிந்தவை. பலரும் அன்றாடம் பயன்படுத்துபவை. ஆனால் அவற்றைப் பற்றித் தெரிந்த அளவு நமக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவரது வாழ்க்கை, கனவிலும் கற்பனை செய்ய முடியாத திருப்பங்களையும் விசித்திரங்களையும் கொண்டது. நம் வீட்டில் கணிப்பொறி இருப்பதற்குக் காரணமானவர் பில் கேட்ஸ் என்று முடிவுக்கு வர வேண்டாம். பில் கேட்ஸ் நடை பழகிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒலிம்பிக்ஸ் ஒட்டத…
-
- 6 replies
- 2.2k views
-
-
இலங்கையில் நான் இருந்தபோது போலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. காரணம், அங்கே அந்தக் கட்டமைப்புகள் அரிது. ஆனால் ராஜீவ் வழக்கில் சிக்கி, அனுதினமும் போலீஸின் கையில் நான் அனுபவித்த சித்ரவதைகளும், ஏறி இறங்கிய நீதிமன்ற அவஸ்தைகளும் கொஞ்ச நஞ்சம் அல்ல. 'குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய தகுந்த, நம்பகமான உண்மைகளை சாட்சியச் சான்றுகளை முன்வைத்து நிரூபணம் செய்ய வேண்டும்!’ என்பதுதான் உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் குற்ற நடைமுறைச் சட்டங்களின் அடிப்படைக்கூறு! ஆனால், எமது விடயத்தில் இந்த அதிமுக்கியமான மனித சமூக விழுமியத்தினைப் பாதுகாக்கும் இந்த சட்டக் கோட்பாடு, கருணை இன்றி தவறாகக் கையாளப்பட்டது. சட்டக் கோட்பாடு மீறப்பட்டதற்கும், அதன் குரூர நாக்குகள்…
-
- 1 reply
- 795 views
-
-
வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருட…
-
- 9 replies
- 1.2k views
-
-
சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றா…
-
- 22 replies
- 3.6k views
-
-
தமிழ்க் கதை யோ.கர்ணன் ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும், பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள் போட்டுத் தள்ளிய கலைஞர் அப்புக்காத்துவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாவிட்டாலும் பாதகமெதுவுமில்லை. சிலர் அவரது புத்தகங்களில் ஓரிரண்டாவது படித்திருக்கக் கூடும். இந்த இரண்டு நிபந்தனைகளிற்கும் நீங்கள் உட்படுவீர்களெனில் இதற்கடுத்த பந்தியை வாசிக்கத் தேவையில்லை. கடந்து சென்று விடலாம். அவரை அறியாதவர்களிற்காக இதற்கடுத்த பகுதியை எழுத நேர்கிறது. முத்தமிழையும் கரைத்துக் குடித்த முத்தமிழறிஞர்கள் பரம்பரையில் கலைஞர் கருணாநிதிக்கு பின்பாக பெயர் சொல்லத்தக்க நபர்க…
-
- 19 replies
- 2.3k views
-
-
கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்... இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம். மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்... அவர்களின் கவனம் எங்களின் இரண்டரை மாத சிசுவின் மீது திரும்பியது. 'இதுவரை நடந்த விசாரணைகள் எல்லாம் சாதாரணம்தான்... இனிதான் மொத்தச் சித்ரவதைகளும் இருக்கு. மரியாதைய…
-
- 3 replies
- 1.3k views
-
-
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ? என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு. ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே! ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார். என்ன செந்தோழன், வழமையா ட்ரெயினிங்கிற்கு நீர் தான் முன்னுக்கு நிற்கிறனீர். இன்னைக்கு மட்டும் எழும்ப(எந்திருக்க) லேட்டாகிட்டு. என்ன காரணம்? "ஓ...அது வந்தண்ணை, இன்னைக்கும் வழமையான நேரத்திற்கு தான் எழும்பினேன். திடீரென என்ர அம்மாவின் நின…
-
- 9 replies
- 2k views
-
-
ராங் காலும் ரங்கமணியும் (டெலிபோன் மணி அடிக்கிறது) தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்… ச்சே… ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து) ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்) எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க (ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்) எதிர்முனை : நை நை தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு எதிர்முனை : நை நை ஜி… (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்) தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உ…
-
- 6 replies
- 1.2k views
-
-
சித்திரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்திரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும் எனக் குரூரத்தோடு யோசித்து, பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்தினார்கள். இரவு 10 மணிக்கு ஒரு அதிகாரி என்னை அழைத்தார். ஈரக்குலை நடுங்க உயிரைக் கையில் பிடித்தபடி நின்றேன். 'அந்தக் கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்’ என்று மிரட்டினார். இதேபோல் எத்தனையோ தடவை அதிகாரிகள் என்னை விசாரித்து இருக்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களைக் கண்ணீரோடு அவர்களிடம் சொல்வேன். புதுமுக இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் போல் அலட்டிக்கொள்ளாமல் கேட்பார்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுகமே….. சுவாசமே…….. ஆப்பிள் பூக்களின் நறுமணத்தைச் சுமந்தபடி இதமான தென்றல் சாளரத்தினூடாக அந்த அறைக்குள் நுழைந்துகொண்டிருந்த்து. சாளரத்தின் திரைச்சீலைகளை ஒதுக்கிய மைதிலி முகிலுக்குள் ஒளிந்தும் தெரிந்தும் விளையாடும் வெண்ணிலவை இரசித்தபடி ஆப்பிள் பூக்களின் நறுமணத்தில் சொக்கிப் போய் நின்றாள். மைதிலி என்னை நேசித்த ஒரே காரணத்திற்காக தனக்கான அனைத்தையும் துறந்தவள். பெற்றோர் கூடப்பிறந்தவர்கள், மதம் , அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வசதிகள் குறைந்த என்னை மட்டுமே ஏற்று இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவள். கடந்த ஆறு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த மழலைச் செல்வம் இன்னும் சில மாதங்களில் எங்கள் கைகளில் தவழும். உப்பி மேடு கட்டிய வயிற்றைத் தடவியப…
-
- 35 replies
- 4k views
-
-
ஐ.நாவில் மங்காத்தா..! மங்காத்தாவா… மகிந்தாத்தாவா மன்மோகன் சிங் குழப்பம்.. போர்க்குற்ற விசாரணை கண்டிப்பாக நடாத்தப்பட வேண்டுமென பான் கி மூன் பிடிவாதமாகச் சொன்னதால் மகிந்த உறக்கமின்றி துடித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு காலமும் மகிந்தாஜி மகிந்தாஜி என்ற மன்மோகன் சிங் கொஞ்சநாளாக மங்காத்தாஜி, மங்காத்தாஜி என்றபடி தன்னைப் பார்த்து தலைப்பாகையை தடவுவதை நினைத்தால் சினமாக இருந்தது.. இதற்குள் யாரோ ஒரு கேடுகெட்ட புத்தபிக்கு வந்து 600 தமிழ் பெண்களின் முலைகளை விராண்டி இரத்தம் எடுத்துவிட்டு ஐ.நா போனால் போர்க்குற்றம் விலகுமென்று சொல்ல, கிறீஸ் மனிதனை அனுப்பி முலைகளை விராண்டியதுதான் மிச்சம்.. பிரச்சனை தீர்ந்தபாடில்லை.. அப்போதுதான் கெகலிய ரம்புக்கல ஒரு பெ…
-
- 5 replies
- 1.7k views
-
-
’விடியாத இரவு ’ - நளினியின் தொடர். 27 செப்டம்பர் 2011 அன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். அன்பான சகோதர சகோதரிகளே! இந்தத் தொடரின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். 21 ஆண்டுகளாக, சிறைக் கம்பிகளும், கான்கிரீட் சுவர்களுமே எனக்கு நண்பர்கள். வெளி உலகத்தை பார்த்தது கிடையாது. வெளி உலகம் எப்படி வாழ்கிறது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை தினந்தோறும் எனக்கு வரும் செய்தித் தாள்களை வைத்தே தெரிந்து கொள்கிறேன்.‘எனக்கு விடுதலை உண்டா, இல்லையா?’ என்பதே தெரியாமல் நான் தவித்துகொண்டிருந்தபோது, பேரிடியாக வந்தது, என் கணவர் முருகன் உள்ளிட்டோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட செய்தி. இந்தச் …
-
- 2 replies
- 1.4k views
-
-
லால் அங்கிள்.. கண்டியில் இருந்த தன் வீட்டில் லால் கட்டைக்காற்சட்டையும் அரைக்கை ரீ சேட்டும் போட்டு கதிரையில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்ச்சிப்பெட்டியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.அருகிலிருந்த சோபாவில் சஞ்சையும் துசியும் சதீஸும் எதுவும் பேசாது அமைதியாக தொலைக்காட்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்தனர்.மூவர் முகத்திலும் கவலையுடன் கூடிய அமைதி குடிகொண்டிருந்தது.தெரணை ரீவியில் செய்தியறிக்கையில் படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை கைப்பற்றிவிட்டதாகக்கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும் பொடியங்கள் மூவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது.லாலிற்க்குப் பயந்து லாலின் முன்னால் அவர்…
-
- 22 replies
- 2.4k views
-
-
ஹேமா அக்கா -இளங்கோ 'ஐயோ, ஹேமா அக்கா கிணத்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று கத்திக்கொண்டு நாங்கள் கிணற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். பின்னேரம் நான்கு மணியிருக்கும். வெயிலில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளை குதிப்பதைப் பார்த்தோம். மலைகளும் நதிகளுமில்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி. இந்தியன் ஆமி வந்தகாலத்தில் கூட, இப்படி அள்ள அள்ளக்குறையாத நல்ல தண்ணியும், தாரளமாய் லக்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன சனியனுக்கு நீங்கள் சண்டை பிடிக்கிறியள் என்றொரு ஆமிக்காரன் சனத்தை செக்பொயின்றில் வைத்து பரிசோதித்துப் பார்க்கும்போது கேட்டதாயும் ஒரு கதையிருந்த…
-
- 5 replies
- 4.5k views
-
-
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்......... ஏதாவது எழுதுவோம் என்று உட்கார்ந்தால் மூளை நரம்பு மண்டலம் ஏதோ ஒரு அமுக்கத்திற்குள் சிறைப்பட்டதுபோல் விடுபட முடியாத.. வார்த்தைகளால் புனைய முடியாதவையாக மூழ்கடித்துவிடுகின்றன. எழுத்து வெளிகளில் அப்பட்டமாக தோல்விகளைச் சந்திக்கும் பொழுதுகளாகவே இக்காலம் நகர்கிறது. மனதின் ஆழத்தில் புதையுண்டிருக்கும் ஒரு பேரவா முறுக்கெடுத்து சிலசமயங்களில் தொண்டைக்குழியை திருகுவதுபோல் உயிரையே உலுப்பி விடுகிறது. அடடா கதைகதையாம் பகுதில் வந்து என்னுடைய புலம்பலை எடுத்துவிடுகிறேன் மன்னிக்கவும். தொடர்கிறேன், இனி, இங்கு எழுதப்போது எழுத்துக் குவியலுக்கு பொதுத் தலைப்பாக "தொலையா முகம்" இருக்கும் மற்றப்படி அதற்கு உட்பட்டுவரும் ஆக்கங்கள் அதனதற்குரிய தலைப்புகளு…
-
- 27 replies
- 7k views
-
-
திரும்பி வந்தவன் யோ.கர்ணன் வெட்கத்தை விட்டிட்டு உண்மையை சொன்னாலென்ன. அம்மா இதைச் சொல்லேக்க எனக்கு பெரிய சந்தோசமாயிருந்தது. ஏதோ இவ்வளவு நாளும் இந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்து, அது இப்பதான் அம்மாவின்ர வாய்க்குள்ளயிருந்து வெளியில வருது என்ற மாதிரியான ஒரு சந்தோசம். எனக்கு ஒரு நிமிசம் என்ன செய்யிறதென்டே தெரியேலை. இது மட்டும் பாக்கியராஜ்சின்ர பட சிற்றிவேசனாக இருக்க வேணும், இந்த கணத்தில இளையராஜாவின்ர மியூசிக்கில இரண்டு வரிசையில இருபது பொம்பிளையள் கையில பூத் தட்டோட ஒரு பரத நாட்டிய ஸ்ரெப் எடுக்க, பின்னணியில ஒரு கிராபிக்ஸ் தாமரை வரும். அதுக்குள்ளயிருந்து நானும், கச்சை கட்டிக் கொண்டு என்னை கலியாணம் கட்டப் போற பொம்பிளையும் வந்திருப்பம். …
-
- 35 replies
- 5.3k views
-
-
'கந்தசாமி எம்.எல்.ஏ., பதவியிலிருந்து விலகல். கட்சியிலிருந்தும் விலகினார்' என்று டி.வி-யில் பிளாஷ் நியூஸ் ஓடியது. தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என கந்தசாமியின் வீடே நிரம்பி வழிந்தது. கந்தசாமி வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் மொய்த்தனர். "ஏன் சார் திடீரென்று இந்த ராஜினாமா?" "நான் கடந்த மூன்று வருடமா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கேன். ஆனால், என்னை நம்பிவாக்களித்த மக்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியல. மக்களுக்கு பயன்படாத இந்த பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று முடிவு செய்து ராஜினாமா செய்து விட்டேன்." "கட்சியிலிருந்தும் விலகியிருக்கீங்களே?" "நான் என் முடிவை என் கட்சி தலைமையிடம் சொன்னபோது என் தலைமை அதை ரசிக்கவில்லை. மாறாக, நான…
-
- 2 replies
- 1.3k views
-
-
இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைங்கோ.. அண்மையில விக்கிலீக்ஸில வந்த ஒரு கேபிள்தான் இந்தப் பகுதியை எழுத வைக்குது.. (தொடரும்..)
-
- 83 replies
- 11.4k views
-
-
'என்ரை நாடு, எங்கடை மக்கள், எங்கடை வயல் இதனை ஒரு போதும்..... அடச் சீ, இந்த ட்ரக் வேறு இடத்துக்கெல்லோ போகுது, என்பதை உணர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மிருதுளனைப் பார்த்து, அவனது வகுப்பு டிச்சர், ’’தம்பி, மிருதுளன், நான் உமக்கு காதல் என்ற தலைப்பில் தானே பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தனான். பிறகென்ன நாடு மக்கள், நிலம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்? உமக்கு வர வர மைண்ட் ஒரு இடத்தில நிற்குதில்லைப் போல கிடக்கு, நேரத்தை வீணடிக்காமல் நான் சொன்ன தலைப்பில பேசும் பார்ப்போம்!! மிருதுளன் மீண்டும் அபையோர் வணக்கம் சொல்லி, காதல் எனும் தலைப்பில் பேச வந்திருப்பதாகத் தொடர்ந்தான். காதல், கேட்கும் போதே உணர்வுகளைக் கட்டிப் போடக் கூடிய சொல். பசிக்கும் …
-
- 1 reply
- 1.3k views
-
-
(இது சிறுகதைதான் ஆனால் நீளமான சிறுகதை) வேலை முடித்து வீட்டுக்குள் கால் வைத்த போது * காதுக்குள் நுளைந்த பாடல் அது….வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்*. இதயக்கோவில் படத்தில் மோகன் அம்பிகாவின் நடிப்பில் வெளியான படம். இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. எனது 13வது 14வது வயதில்1987 – 1988 வரையான காலத்தில் கேட்ட பாடலென்றுதான் ஞாபகம். அந்தப்பாடல்களை அந்தப்படங்களை எனக்கு வரிதப்பாமல் சொல்ல ஒருத்தியிருந்தாள். படிப்பு அது தவிர்ந்தால் எதுவும் அனுமதியில்லாத எனது வீட்டுச் சூழலிலிருந்து அவளது வீடு வித்தியாசமானது. அவளது அயல்வீட்டில் வாரஇறுதி நாட்களில் விடிவிடிய சினிமாதான். அந்தக்கால அமலா , நதியா ,மோகன் , சுரேஸ் , கார்த்திக் என எல்லாருடைய படங்களும் ஓடும். அவளது அம்…
-
- 20 replies
- 1.8k views
-
-
காலம் வெகு வேகமாக ஓடிவிட்டது போல் இருந்தது அவனுக்கு . சோமசுந்தரம் தன் தாய் நாட்டை விட்டு வெளியேறி இருபது வருடங்கள் . எல்லோராலும் " சோமு "என்று அன்பாக் அழைக்கபட்டவன். வீட்டுக்கும் ஊருக்கும் நல்ல பிள்ளை .காரணம் மூன்று பெண சகோதரிகளுக்கு இளையவனாக் பிறந்தவன். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தந்தை அயலில் உள்ள பட்டணத்தில் , பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியர். வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவார். தாயார் வீட்டு வேலைகளை யும் மக்களையும் கவனித்து கொள்வார். பெண்கள் பள்ளியில் கவனமாய் படித்து .வந்தனர். .தாயார் ஆண்பிள்ளை என்று அவனில் மிகுந்த பாசம் வைத்தது இருந்தார். வேண்டியதெல்லாம் எப்படியாவது காசு சேர்த்து வாங்கி கொடுப்பார்.அவனுக்கு துணி துவைப்பது , அக்கா மார்தான். சில சமயம…
-
- 13 replies
- 1.8k views
-
-
தொடரும் துயரங்கள்…..! இரவு ரண்டு மணியிலிருந்து அந்த அழைப்பு வந்து வந்து கட்டாகிக் கொண்டிருந்தது. சத்தத்தை நிறுத்தி வைத்திருந்த தொலைபேசியின் வெளிச்சம் அடிக்கடி மின்னி மின்னி மறைந்தது. இரவு பகல் என வித்தியாசம் பாராமல் இப்படித்தான் இப்போது வீட்டுத் தொலைபேசியும் கைபேசியும் புதியபுதிய குரல்களால் நிறைகிறது. பகல் பலரது இலக்கங்களுக்கு அழைத்து அவர்களது தேவைகள் அவசரங்களை பதிவு செய்து கொண்டேன். ஆனால் அந்த இலக்கத்தை மறந்து போனேன். அன்று மாலை 17.44மணிக்குத் திரும்பவும் அந்த இலக்கம் வந்தபோதுதான் ஞாபகம் வந்தது. 000 000 000 எதிர்முனையில் ஒரு பெண்குரல்... நான் யேர்மனியிலிருந்து***……என நான் ஆரம்பிக்க….. நான் உங்கடை ******* பெறாமகள் *****…. அவள் தன்ன…
-
- 16 replies
- 2.2k views
-