எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
யுத்தத்தின் வடுக்கள் : ஒட்டுசுட்டான் பகுதியில் தொடரும் அவலம்..! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் வறுமையால் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார். கிழவன்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் யுத்தத்தில் ஒரு காலை இழந்தநிலை…
-
- 0 replies
- 746 views
-
-
(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது). நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்...... …
-
- 0 replies
- 746 views
-
-
இலங்கைப் பிரதமருக்கு ஒரு கடிதம் இந்தக் கடிதம்தான் நான் உங்களுக்கு நேரே உங்கள் சொந்த முகவரிக்குத் தமிழில் எழுதும் கடிதமாகும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு நேராக எழுதிய முதலாவது தமிழ்க் கடிதம் இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். நீங்கள் பாராளுமன்றத்தில் 23-3-67 அன்று பேசும்பொழுது ஆங்கிலம் தெரிந்த நான் உங்களுக்குத் தனித் தமிழில் கடிதம் எழுதுவதாகவும் நீங்கள் எனக்குத் தனிச் சிங்களத்திற் கடிதம் எழுதுவதாகவும் குறிப்பிட்டீர்கள். நீங்கள் இவ்வாறு பேசும்பொழுது நான் சபையில் இருக்கவில்லை. இருந்திருந்தால் உங்கள் கூற்று பிழையான கூற்று என உடனே சுட்டிக் காட்டியிருப்பேன். நான் பிரதம அமைச்சர் என்று முகவரியிட்டுத் தமிழில் கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன் . . . நீங்கள…
-
- 0 replies
- 746 views
-
-
"மாவீரரே துயில்கொள்ளும்" மாவீரர் நாள் வாரத்தை முன்னிறுத்திய சிறப்புப் பாடல்
-
- 0 replies
- 746 views
-
-
“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்” Selvaraja Rajasegar - on May 26, 2015 “ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது வரை இந்தப் பாடசாலையில் 540 பிள்ளைகளைகள் படித்துவருகிறார்கள். இங்கு படிக்கின்ற அனைவரும் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது அதை நேரடியாக அனுபவித்தவர்களாகவும் கருவில் இருந்து உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். சிரித்து, பேசி அவர்கள் விளையாடுவதை என்னால் பார்க்கமுடிந்தாலும் அவர்களிடம் உளரீதியான பிரச்சினைகள் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். …
-
- 0 replies
- 746 views
-
-
https://aaivuu.wordpress.com/2010/11/13/விடுதலைப்-புலிகளிடம்-இரு/ --------------------- விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் 21 நீண்டதூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகளும்(Howitzer), சுமார் 800 பல்வேறு வகையான கணையெக்கிகளும்(Mortar) கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஐலன்ட்‘ நாளிதழ் தகவல் வெளியிடுகையில், புலிகளிடம் கைப்பற்றப்பட்ட தெறோச்சிகளில்(Howitzer) ஆறு 152 மி.மீ வகையைச் சேர்ந்தவையாகும். ஒன்பது 130 மீ.மீ தெறோச்சிகளும், ஆறு 122 மி.மீ தெறோச்சிகளும், இரண்டு 85மி.மீ தெறோச்சிகளும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட…
-
- 4 replies
- 746 views
- 1 follower
-
-
சதம் Editorial / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:39 Comments - 0 -ஜெரா ‘அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன்’ என்று, வேலை வெட்டியில்லாதவர்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில், ஐந்து சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே, இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல, ஐந்து சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும் ரூபாய்களின் அறிமுகமும், அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும், காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்…
-
- 0 replies
- 745 views
-
-
ஒரு நாள்….. ஒரு நகரம்…. கிளிநொச்சி…. நடந்து முடிந்த போரில் அதன் முடிவினை முன்கூட்டியே அறிவித்த நகரம் கிநொச்சி…. ஆனால் அதைப் புரிந்திருக்க நாம் அன்று (இன்றும்) விழித்திருக்கவில்லை… விளைவு மே 18 முள்ளிவாய்க்கால். இது நடந்து மூன்று வருடங்களின் பின்… சற்று முன் விழித்துக் கொண்ட நகரின் மத்தியில் கால் பதித்தேன்… இந்த நகரத்திற்கு இதற்கு முன்பு வந்ததுமில்லை… இங்கு யாரையும் தனிப்பட பழக்கமுமில்லை… முகநூலின் மூலமாக அறிமுகமான நண்பரின் அழைப்பினை ஏற்று வந்தேன்… இந்த நகரம் இராணுவ முகாம்களால் சுழப்பட்டு இருந்ததை ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த நகரத்தைக் கடந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணிக்கும் போது கவனித்திருந்தேன்….. மக்கள் நடமாட்டம் குறைந்த அதிகாலைப் பொழுது… இராணுவத்…
-
- 1 reply
- 745 views
-
-
நெஞ்சை உறைய வைத்த சிறிலங்கா கடற்படையினர் நடத்திய குமுதினிப் படுகொலை! குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 36 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்ப…
-
- 1 reply
- 745 views
-
-
தமிழ்நாட்டு தேர்தலுக்கான இறுதியுத்தம் http://www.tamilsforobama.com/Final_War.html
-
- 0 replies
- 744 views
-
-
அன்று மே 17ம் திகதி அதிகாலை மூன்றுமணியிருக்கும். ஊடறுப்பு அணிகளுடன் நந்திக்கடல் நடுவே கழுத்துமட்டத்தண்ணீருக்குள் சில நூறு தலைகளில் நானுமொருவன் நின்றுகொண்டிருந்தேன். அங்கு சிறியரக படகில் இயந்திரம் இல்லாமல் கேப்பாப்கேப்பாப்பிலவுலவு இராணுவ முன்னரங்கம் நோக்கி தடை உடைக்க அனுப்பப்பட்ட எமது அணிகளின் தொடர்பிற்காய் காத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்ததிற்கு நேரெதிர்மாறாக அதிகாலையில் நான்கு பக்கத்திலும் முப்படைகளின் உதவியுடன் அணல்பறக்கும் உக்கிரமான சண்டை தொடங்கியது. ஊடறுத்து முன்நகரமுடியாதவாறு உடைப்பு நடவடிக்கை அசாத்தியமானது. இறுதி யுத்தத்தின் எமது கடைசி ஊடறுப்பு நடவடிக்கையும் முறியடிக்கப்பட்டுவிட்டதால் எமது ஆயுதப்போராட்டத்தின் அடுத்தகட்ட நிலை என்ன? என்ற வலிசுமந்த ஏக்கத்தோட…
-
- 0 replies
- 744 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பு, கிழக்கு ஈழ மக்களிள் நெஞ்சில் மாத்திரமின்றி ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக படிந்துள்ளது. செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது. என்ன நடந்தது? 1990 ஆ…
-
- 0 replies
- 742 views
-
-
-
- 3 replies
- 742 views
-
-
இன்னொரு ஆயுதப் போருக்கு துணை போகுமா சர்வதேசம்? - சுவிசில் இருந்து துருவாசன் - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுக்குமாறு சர்வதேசத்தைக் கெஞ்சிக்கொண்டிருந்த இலங்கை அரசு- இப்போது சர்வதேச சமூகத்தின் தலையிலேயே மிளகாய் அரைக்கும் அளவுக்குப் போய்விட்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு உரிமையில்லை என்று கூறும் அளவுக்கு வந்திருக்கிறது இலங்கை அரசு. போருக்குப் பிந்திய இலங்கை அரசின் நிலைப்பாடுகள்- தமிழ்மக்களின் உரிமைகள், பாதுகாப்பு நியாயமாக அரசியல் தீர்வு என்பவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. போரினால் இடம்பெயர்ந்த வன்னிப் பகுதியைச் சேர்ந்;த மூன்று இலட்சம் மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம். …
-
- 0 replies
- 742 views
-
-
யாழ்ப்பாணத்தில் கறுவா , கொக்கோ , கோப்பி, வனிலா
-
- 0 replies
- 741 views
-
-
இது நான் வாசித்து கொதித்துப்பொன ஒரு உண்மை சம்பவம் இதை உங்களுக்கும் கொடுக்கின்றேன் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது. 1) உரும்பிராய் 1987 Oct 16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வ…
-
- 0 replies
- 741 views
-
-
-
- 0 replies
- 740 views
-
-
நேற்று, இன்று, நாளை தாயக மேம்பாட்டு பணிகள் – தாஸ் 42 Views யுத்த சூழ்நிலையாக இருந்தாலும், அன்று தாயக மேம்பாட்டு வேலைத் திட்டங்களில் உணவு உற்பத்தி முறையில் முழுமையான தன்நிறைவு நிலையிலேயே இருந்தது. விதை, தானியங்கள் உள்ளீடுகள், உரங்கள், கிருமிநாசினி வகைகளுக்கு அரச கட்டுப்பாடற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தடைகள் காணப்பட்டபோது, பொருண்மிய கட்டமைப்பானது கட்டியெழுப்பப்பட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்புச் செய்யும் நோக்கில் மாற்றுவகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பிலும் சிறுதானிய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதுடன், சகல வீடுகளிலும் வீட்டுத்தோட்டம், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. விவச…
-
- 0 replies
- 740 views
-
-
Tamil Naatham March 6, 2005 தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information And Communication Technology) ஒரு தேசத்தின் எழுச்சியையும், இருப்பையும் தீர்மானிக்க வல்லது. இந்த வகையில் எங்கள் தமிழ்த் தேசமும் உலகின் தகவல் தொடர்பாடல் வளர்ச்சி வேகதிற்கு ஈடுகொடுத்து தனது தேவைகளை தனது சொந்தக் காலில் நின்று பூர்த்தி செய்யக் கூடிய வகையில் வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியின் ஒருபடியாக "வன்னிரெக்" 2003 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் ITTPO எனப்படும் சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கில் புகழ் பூத்த தகவல் தொழில் நுட்பவல்லுநரும், வன்னி ரெக்கின் முகாமை நிறுவனமான ITTPO வின் தலைவரும…
-
- 0 replies
- 740 views
-
-
தமிழனே உனக்கு சூடு சுரணை உள்ளதா…? – அருட்திரு. சுந்தரிமைந்தன் [ஒடியோ] நம்மினம் நம் கண் முன்னால் செத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் போராடாமல் இருக்கிறோமே தமிழா உனக்கு சூடு சுரணை சிறிதாவது உள்ளதா என்று தமிழகத்திலுள்ள கத்தோலிக்க பணியாளர் அருட்திரு. சுந்தரிமைந்தன் உரையாற்றியுள்ளார். உரையினை கேட்க : http://www.meenagam.org/?p=13134
-
- 0 replies
- 740 views
-
-
வெலிக்கடை சிறைக்குள் நடந்தது கலவரம் அல்ல - இனப்படுகொலையே... : ச.ச.முத்து (1983 யூலை 25,28ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலை இனக்கொலை நினைவாக) முப்பத்தி ஒரு வருடம் கடந்து விட்டிருக்கிறது. அந்த இனப்படுகொலை மிகவும் திட்டமிட்ட முறையில் வெலிக்கடை சிறைக்குள் நிகழ்தப்பட்டு, அது மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு இனக்கொலை அங்கமே. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் மொழியை, இலக்கியத்தை, நிலத்தை அபகரி, அழி என்று சொல்லப்பட்ட தத்துவங்களில் சொல்லப்படாத ஆனால் மறை முகமான ஒன்று அதுதான் மிகமிக முக்கியமானது. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் போராட்ட கருத்துக்களை அதன் வீரத்தை அழித்தாலே போதும். மற்றவை எல்லாவற்றையும் இலகுவாக எதிரியால் செய்துவிட…
-
- 0 replies
- 740 views
-
-
சித்திரை மாதத்துக்கே உரிய பறவைகளின் கீதங்களில் குயில் பாடல் முக்கியமானது. இன்று மதியம் நானும் குயிலும் சந்தித்தபோது ......
-
- 5 replies
- 739 views
-
-
குத்துவிளக்கு திரைப்படம் 1970 களில் உருவான சூழல் மிகவும் முக்கியமானது. டட்லி சேனா நாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்து ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க) - என். எம். பெரேரா (சமசமாஜி) - பீட்டர் கெனமன் (கம்யூனிஸ்ட்) கூட்டணியில் அரசு அமைந்த பின்னர் பல முற்போக்கான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. உள்நாட்டு உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. வடக்கில் வெங்காயம் - மிளகாய் பயிர்செய்கையாளர்களின் வாழ்வில் வசந்தம் வீசியது. உள்நாட்டு ஆடைத்தொழிலுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தரமற்ற வணிக இதழ்கள் மீதான கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை ஊக்குவிப்ப…
-
- 0 replies
- 739 views
-
-
பல வாத்தியங்களை அனாசயமாக வாசிக்கின்றார் - பாராட்டுக்கள் துவாரகன் -
-
- 0 replies
- 739 views
-
-
புலிக்கொடியுடன் உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்திய தமிழ் இளைஞர் [செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2007, 21:16 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியின் போது புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இலங்கையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக தமிழீழத் தேசியக் கொடியுடன் துணிச்சலாக வந்த உறவுக்கு தாயகத்தில் இருந்து தமிழீழத் தாயக மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழத் தாயக…
-
- 0 replies
- 739 views
-