அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ஜேர்மனியின் வீழ்ச்சிக்கு பிறகு பதைபதைக்க வைக்கும் செய்திகள் பல ஒவ்வொன்றாக வெளிவந்தன. வதை முகாம்கள் பற்றி. இறைந்து கிடக்கும் யூதர்களி்ன் சடலங்கள் பற்றி. சிறைகளில் எலும்பும் தோலுமாக கிட்டத்தட்ட விலங்குகளைப் போல் சுருண்டு படுத்திருந்த யூத கைதிகள் பற்றி, யூத இனவொழிப்பு பற்றி. அதுவரை யூத ஒழிப்பை ஜேர்மனியின் உள்நாட்டு பிரச்சனைகளில் ஒன்றாகவே மேற்குலகம் கருதி வந்தது. ஜுலை 23,1944 அன்று சோவியத் போலந்தில் உள்ள Majdanek என்னும் வதை முகாமை முதல் முதலாக கண்டுபிடித்தபோது அதிர்ச்சியடைந்தது ஐரோப்பா. பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் படைகள் மேலும் சில முகாம்களை பின்னர் விடுவித்தனர். ஹிட்லரின் இனவழிப்பு பற்றி ஐரோப்பா முழுமையாக தெரிந்து கொண்டது. இவரையா ரைம் பத்திரிகை 1938ன் தலைசிறந்த மனிதரா…
-
- 3 replies
- 1.4k views
-
-
இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் – இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா ‘இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா’ கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வ…
-
- 3 replies
- 2.4k views
-
-
கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும் 06/12/2018 இனியொரு... விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை நெருக்கடி இன்னும் மோசமாகும்: ரணில் விக்ரமசிங்க பிபிசிக்கு பேட்டி 4 மே 2022, 04:29 GMT பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். வரும் மாதங்களில் நாட்டில் விலைவாசி உயர்ந்து நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் ரணில் கூறினார். இலங்கையில் 4 முறை பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, அதிக காலம் அந்தப் பதவியில் இருந்தவர். கடைசியாக 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை பிரதமராக இருந்தார். தற்போதைய அரசை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்ற…
-
- 3 replies
- 493 views
- 1 follower
-
-
OPEN LATTER FOR SAMPANTHAN AIYA சம்பந்தன் ஐயாவுக்கு திறந்த கடிதம். - வ.ஐ.ச.ஜெயபாலன் . மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா, நாடாளு மன்றில் மகிந்தவுக்கு எதிராக வாக்களியுங்கள். ஆனால் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை உட்பட்ட வாக்குறுதிகள் பெறாமல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம். அத்தகைய துரோகத்துக்கு இடமளிக்கவும் வேண்டாம். அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு போன்ற பிரச்சினைகளில் ரணில் கடும்போக்காளராக இருந்தார் என்பதை தயவு செய்து நினைவுகூரவும்.
-
- 3 replies
- 861 views
-
-
அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும் - வீ.தனபாலசிங்கம் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. அதிகாரத்தை தொடருவதற்கு வழிவகுக்கக்கூடிய சூழ்ச்சித்தனமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவர்கள் அவற்றுக்கு " அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் " என்று நாகரிகமாக நாமம் சூட்டியும் விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தாங்கள் பதவியில் இல்லாதபட்சத்தில் எளிதில் குழப்பநிலைக்கு உள்ளாகிவிடக்கூடிய ஒரு ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கண்ணும் கருத்துமாகச் செயற்படுவதையும…
-
- 3 replies
- 525 views
-
-
வடக்கில் வாக்கு மோசடிக்கு முயற்சியா? வெளிக்கிளம்பும் குற்றச்சாட்டுக்களும் அதற்கான வலுவான காரணங்களும் August 2, 2020 தாயகன் இலங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு தினங்களே உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக மக்களின் வாக்குகளையும் பாராளுமன்றக் கதிரைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இனவாத,மதவாத,கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க பிரசாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டன. இந்த ஒருமாதமும் வேட்பாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ,எதிர்காலத் திட்டங்கள்,மக்கள்சேவைகள், தொடர்பில் நன்றாக சிந்தித்து தமது வாக்கை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கவே வாக்காளர்களாகிய மக்களுக்கு இந்த இருநாள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமது வாக்குகள்…
-
- 3 replies
- 589 views
-
-
பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக, இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஒத்துழைப்போடு, தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார். கடந்த சில வ…
-
- 3 replies
- 568 views
-
-
அதிகாரப்போட்டியின் உச்சக்கட்டம்! நாட்டின் முதுகெலும்பாகிய அரசியலமைப்பை முறையாகப் பேணி ஆட்சி நடத்த வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். அதேபோன்று அரசியல்வாதிகளும், பொதுமக்களும் அரசியலமைப்புக்கு உரிய மதிப்பளித்து, அதற்கேற்ற வகையில் ஒழுக வேண்டியதும் நல்லாட்சிக்கு அவசியமாகும். ஆனால் இத்தகைய போக்கை ஆட்சித் தலைவர்களிடம் காண முடியவில்லை. இந்த அரசியலமைப்பு நாட்டின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுடைய இறைமைக்கு உரிய அங்கீகாரமளித்து, தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கப்பட வேண்டும். பல்லினங்களும், பல மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில், அந்த அர…
-
- 3 replies
- 682 views
-
-
நீங்கள் தொடர்ச்சியாக தெனிந்திய ஊடகங்களை வாசிப்பவராயின், திடீரென்று இவர்கள் எமக்கு ஆதரவு போல் இப்ப எழுதுறாங்கள் என்பதைக் கவனித்து இருப்பீர்கள். எனக்கு என்னவோ "ரா" எங்களை திரும்ப முட்டாள் ஆக்க முயற்சிக்கிறாங்கள் போல இருக்கு. நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீங்கள்? எம்மக்களுக்கு அநியாயம் மிக அளவில் செய்தது இந்தியாதான் என்பது என் அபிப்பிராயம். சிங்களவங்கள் கூட இந்த "naa1kaLu88u " சற்று குறைவாகத்தான் அநியாயம் செய்தாங்கள்.
-
- 3 replies
- 899 views
-
-
ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 1 கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons) கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள் (constitutional princ…
-
- 3 replies
- 709 views
-
-
ராஜபக்ஷர்களின் வீழ்ச்சியில் கற்க வேண்டியது புருஜோத்தமன் தங்கமயில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது, தென் இலங்கையில் சில இடங்களில் வெடி கொளுத்தி மக்கள் ஆர்ப்பரித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சுதந்திர இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சித் தலைவர் ஒருவர் மரணித்த போது, இவ்வாறான சம்பவங்கள் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அப்படியானதொரு நிலை தனக்கு என்றைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடிக்கடி கூறுவாராம். புலிகளிடம் இருந்து நாட்டை சிங்கள மக்களுக்கு மீட்டுக் கொடுத்த தலைவராக தான் என்றைக்குமே மகா வம்சத்தில் அடையாளம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவ…
-
- 3 replies
- 488 views
-
-
உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாரின் திருவுருவப் படமும் 8 Sep 2025, 7:12 AM ராஜன் குறை தொன்மையான தமிழ் பண்பாடு உலக சிந்தனைக்கு அளித்த எத்தனையோ கொடைகளில் இரண்டினை முதன்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அது ஐயன் திருவள்ளுவரின் திருக்குறளும், பெரியாரின் சிந்தனைகளும் எனலாம். திருவள்ளுவர் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறார். லண்டனில் முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை 1886-ஆம் ஆண்டே மொழியாக்கம் செய்த ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அதனால் திருக்குறள் உலகில் பரவலாக அறியப்பட்டது. பெரியாரைப் பொறுத்தவரை அவர் தன் சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதவில்லை. ஒரு சில பிரசுரங்கள் அவ…
-
-
- 3 replies
- 416 views
- 1 follower
-
-
சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியுள்ளது - இந்திய அதிகாரி கடும் சாடல் By T YUWARAJ 30 AUG, 2022 | 06:20 AM (நா.தனுஜா) சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக சீனாவினால் பின்பற்றப்பட்டுவந்த கொள்கையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புப் பிரதி ஆலோசகர் பங்கச் ஷரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மைக்கால இராஜதந்திர விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த வார இறுதியில் மிகவும் காட்டமான கட்டுரையொன்றை வெளியிட்டிருந்த இலங்கை…
-
- 3 replies
- 412 views
- 1 follower
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை அண்மையில் 'தமிழ் அமெரிக்கா'த் தொலைக்காட்சியில் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கான காணொளி. இலங்கைத் தமிழ் அமைப்புகள் பல இதில் கலந்துகொண்டு தம் கருத்துகளை வழங்கியிருந்தன. குறிப்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பில் ரவிகுமார் (ஆனந்தகுமார்), நாடு கடந்த தமிழீழம் சார்பில் அதன் பிரதமர் வி.ருத்திரகுமாரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் பல்வேறு நாடுகளிலிருந்து தம் கருத்துகளைத் தெரிவித்தார்கள். கலந்துரையாடலின் பின்னர் கேள்வி -பதில் இடம் பெற்றது. மேற்படி கலந்துரையாடலைத் தலைமையேற்று நடத்தியவர் 'டொரோண்டோ'விலிருந்து ஞானி ஞானேசன் அ…
-
- 3 replies
- 708 views
-
-
காற்றுவெளிக் கிராமத்தில் ஒரு கண்ணகியம்மன் நிலாந்தன் கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள். 1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை நோக்கி இவ்வளவு தொகையான மக்கள் திரண்டு வந்தமை இதுதான் முதல் தடவை. அண்மை ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இவ்வாறு வெவ்வேறு நிகழ்வுகளை நோக்கி ஒன்றுதிரளக் காணலாம். அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டுக் கொண்டாட்டம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, பரியோவான் கல்லூரி,சில நாட்களுக்கு முன் மெத்தடிஸ்ட் மகளிர் கல்லூரி போன்றன தமது இருநூறாவது ஆண்டு விழாவை கொண்டாடியபோது பழைய மாணவர்களும் உட்பட ப…
-
- 3 replies
- 928 views
- 1 follower
-
-
தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா? ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது.போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். இதற்கு முன்னதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் பல்வேறு விதமான எச்சரிக்கைக…
-
- 3 replies
- 762 views
-
-
இந்தக்கேள்விக்கு என் தமிழகத்து நண்பர்கள் சிலருடனும் எனக்கு அடிக்கடி தர்க்கம் ஏற்பட்டுள்ளது.. இன்னும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது... அதனால் குறிப்பாக தமிழக நண்பர்களுக்கு இதை கூற விழைகிறேன். மக்கள் எப்பொழுதும் மக்கள் தான். அவர்களைத் தலைமை தாங்கும் அரசாங்கத்தைக்கொண்டு அல்லது சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நாம் எண்ணிக்கொள்ளும் சில குழுக்களைக்கொண்டும் அந்த மக்களைக் கணிப்பது முற்றிலும் தவறாகிறது. கால காலமாக நாம் பட்டு வந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் சிங்கள பேரினவாத அரசாங்கமே தவிர மக்கள் அல்ல. எல்லா இனத்தவர்களிடையேயும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இருக்கத்தான் செய்கிறார்கள். அது தமிழர்களிடத்திலும் கூட இருக்கிறது மறுக்க முடியாத உண்மை. இப்படியிருக்க சில துவே…
-
- 3 replies
- 869 views
-
-
தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65வது குடியரசுதின வைபவம் வழமைபோல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தன. கொழும்பு நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர், இலங்கையிலுள்ள அனைத்து தரப்புக்களின் கூட்டு அணுகுமுறையே நேர்மையான நல்லிணக்கத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், உறுதிப்பாட்டோடும், பங்குதாரர்கள் என்ற உணர்வோடும், பரபஸ்பர நல்லிணக்கப்பாட்டோடும் இருதரப்புக்களும் செயற்பட வேண்டும் என்றும், இதனையே …
-
- 3 replies
- 785 views
-
-
தமிழர்களை ஆதரிக்குமா இந்தியா ? By Digital Desk 2 11 Dec, 2022 | 02:44 PM (என்.கண்ணன்) “இலங்கையில் தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா விரும்பினாலும், தமிழர்களின் பக்கம் மட்டுமே அது நிற்கும் என்றில்லை” “சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவினதும், மக்களினதும் நலன்களை உறுதி செய்வதாயின், இலங்கையில் எந்த தரப்பையும் முன்னிலைப்படுத்தக் கூடாது என்று கருதுகிறது இந்தியா” இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த புதன்கிழமை ராஜ்ய சபாவில் உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அவரது அந்த உரை, இந்தியாவி…
-
- 3 replies
- 412 views
-
-
-
-
- 3 replies
- 868 views
- 1 follower
-
-
இது, அந்தக் கோரச் சம்பவத்தின் இன்னொரு முகம்! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த நாளில் அவருடன் 15 அப்பாவி உயிர்களும் பலியாகின. ''தூக்குமேடைக்குப் போனவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் தலைவர்கள், அந்த சம்பவத்தில் இறந்துபோன தமிழர்களின் குடும்பங்களுக்காகக் குரல் கொடுத்தார்களா?'' எனக் கொந்தளிக்கிறார்கள் பலியானவர்களின் குடும்பத்தினர். ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்…
-
- 3 replies
- 4.1k views
-
-
சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள் தேசங்களை மதம் ஆளுகிறதா அல்லது மதங்களைத் தேசங்கள் ஆளுகின்றனவா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கூறுவது கடினம். மதம், தேச அலுவல்களில் செலுத்தும் செல்வாக்கை நாமறிவோம். அதற்கு எந்த மதமும் விலக்கல்ல; பல தேசங்களுக்கு மதம் நல்லதொரு கவசமாகிறது. மறுபுறம், அவ்வாறு கவசமாதல், அம்மதம் அத்தேசங்களில் வரன்முறையற்று நடந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மதத்துக்கும் தேசத்துக்குமிடையிலான உறவைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மதத்தின் பெயரால், நேற்று நிராகரித்ததொன்று, இன்று ஏற்கப்பட்டலாம்; நாளை அது மதத்தின் ஓர் அம்சமாகவும் மாறலாம். இவ்வாறு மதம் ஆட்சியாளர்க…
-
- 3 replies
- 829 views
-
-
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார். அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார். இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்ப…
-
-
- 3 replies
- 589 views
-
-
புலம்பெயர் தமிழர்களுக்கான இந்தியாவின் செய்தி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பலதரப்பினருக்குமான செய்திகளை கொண்டு வந்திருக்கிறது. ஈழத்திலுள்ள தமிழ் மக்கள், தமிழ் அரசியற்கட்சிகள், இலங்கை அரசாங்கம், புலம்பெயர் தமிழர்கள் என்று எல்லோருக்குமான விசேட செய்திகளை நரேந்திர மோடி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்திகளில் அநேகமானவை இந்தியாவினால் ஏற்கனவே சொல்லப்பட்டதுதான். இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக, ‘இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் அதற்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிரல்’ என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோள்க…
-
- 3 replies
- 872 views
-