அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இந்தியாவை நோக்கிச் செல்லுதல் ? - யதீந்திரா இந்தியா ஒரு பிராந்திய சக்தி. ஈழத் தமிழர்களுக்கான உடனடி அயல்நாடு. இது ஒரு மாறாத, ஒரு போதும் மாற்றவே முடியாத பிராந்திய யதார்த்தமாகும். இந்தியா தொடர்பில் இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றார். ஆனாலும் இந்தியாவை புரிந்து கொள்வதில் எப்போதுமே ஒரு குழப்ப நிலை இருக்கவே செய்கின்றது. இதற்கு என்ன காரணம்? பொதுவாகவே அரசியல் விவகாரங்களை எங்களின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து நோக்கக் கூடாது. மாறாக, யதார்தத்திலிருந்து நோக்க வேண்டும். குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர், அப்துல்லா ஒச்சலான் கூறுவது போன்று, ‘நேற்றையவற்றுடன் இன்றையவற்றை ஒப்பிடுவதை விட, அது இன்றெப்படி ஒரு யத…
-
- 0 replies
- 464 views
-
-
இந்தியாவைச் சமாளித்த ஜே.ஆர், சீனாவைச் சமாளிக்கும் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ இந்தியா தானாகவே உருவாக்கிய போர் என்கின்ற பொறியிலிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது போன்றே, சீனாவும் தன்னால் உருவாக்கப்பட்ட கடன் பொறிக்குள்ளிருந்து சிறிலங்காவைப் பாதுகாப்பதில் விருப்பங் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. 1987இல் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ராஜீவ் காந்தி சிறிலங்காவிற்குப் பயணம் செய்த நிகழ்வுக்கும், சீனாவின் கடன்பிடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அண்மையில…
-
- 0 replies
- 390 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் உள்ளேயும் வெளியேயும் சூடான வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்று வருகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அதிகாரபூர்வ கூட்டத்தொடருக்குப் புறம்பாக, பக்க நிகழ்வுகளும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா வளாகத்திலேயே நடைபெறுவதுண்டு. கடந்தமுறை இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. அதற்காகப் பல பக்க நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்திருந்தது. தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா உலக வல்லரசாக இருந்த போதிலும், உலக வரைபடத்தில் எள்ளளவு சிறிய நாடான இலங்கை, அப்போது அமெரிக்காவுடன் கடுமையான இராஜதந்திர மோதலில் ஈடுபட்டது. தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டுவதற்காக சீனா, ரஷ்யாவின் துணையுடன் இலங்கை எல்லா முயற்…
-
- 1 reply
- 656 views
-
-
16/11/1978 இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு நேர்காணல். தேம்ஸ் டெலிவிஷன்ஸ் ஜொனாதன் டிம்பிள்பி, இந்திய அரசியல் மற்றும் அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து திருமதி காந்தியிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்டார். திருமதி காந்தி எவ்வளவு லாவகமாக அவரின் பேட்டி காண்பவரின் குறுக்கு விசாரணை போன்ற கேள்விகளை கையாள்கிறார் பாருங்கள். 👌 Indira Gandhi Interview | TV Eye | 1978 https://youtu.be/q8aETK5pQR4
-
- 3 replies
- 692 views
-
-
இந்தியாவுக்கு வருகை தரும்போது எல்லாம் சிங்கள அரசுத் தலைவர்கள் தங்களை இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்வதும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்திய மண்ணையும் அரசையும் வளைக்க நாடகமாடுவதும் இயல்பாகிவிட்டது. குறிப்பாக பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் இந்த நாடகத்தை ஆடி, ஆட்சியாளர்களை அவர்கள் குளிர்விக்கிறார்கள். திருப்பதி கோயிலுக்குப் போவதும் ஏழுமலையானைக் கும்பிடுவதும் இந்த நாடகத்தில் வழமையான ஒரு காட்சியாய் அமைகிறது. முன்பு மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்தார். இப்போது மைத்திரிபால சிறீசேன வருகிறார். இலங்கையில் சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பே 'பஞ்சேஸ்வரங்கள்’ எனப்படும் ஐந்து பழம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன. ஆனால் இன்று இந்தச் சிவாலயங்களின் நிலை என்ன? சிங்க…
-
- 1 reply
- 760 views
-
-
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றி ஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு இந்துசமுத்திரம் ஈழத் தமிழரின் இரத்தத்தால் சிவந்து அது வல்லரசுகளுக்கு உரம்பாய்ச்சும் ஒன்றாய் காணப்படுகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகாலங்களாக கடற்பிராணிகளின் சமுத்திரமாக விளங்கும் இந்துசமுத்திரம் கிபி 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப்பேரரசின் எழுச்சியோடு அரசியல் சமுத்திரமாக மாறியது. சோழப்பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அராபியரின் கை இந்து சமுத்திரத்தில் ஓங்கியதுடன் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீன…
-
- 1 reply
- 621 views
-
-
இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி! ___________________ ஞானேஷ்வர் தயாள் ___________________ இலங்கை பல வருடங்களாக ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு பெருந்தோல்வி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளீர்த்துக்கொள்ளாத அதன் சித்தாந்தமே இதற்குக் காரணம் . சரியான நேரத்தில் இந்தியா பாடம் கற்பது நல்லது. இலங்கையின் துயரங்கள் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள…
-
- 0 replies
- 259 views
-
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நான்கு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக கடந்த ஜூன் முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இந்திய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவையெல்லாம் இந்தியாவுடன் தரைவழி எல்லைகளைக் கொண்ட நாடுகள் என்ற வகையில், தரைவழி எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள இராணுவத்தின் தளபதி என்ற வகையில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இலங்கையுடன் தரைவழி எல்லை எதையும…
-
- 1 reply
- 976 views
-
-
"Let China sleep, for when she wakes, she will shake the world." -Napoleon Bonaparte 200 வருடத்துக்கு முதல் நெப்போலியன் சொன்னான் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் சீனாவை அப்படியே தூங்க விடுங்கள். அது எப்பொழுது முழித்து எழும்புகிறதோ அப்போது உலகம் தாங்காது என்றான்.சீனாவின் ரகன் இப்போது முழித்துக் கொண்டது.ஏனைய அதிகார பலம் மிக்க நாடுகளாய் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டார்கள்.மீண்டும் ஒரு பனிப் போர் ஆரம்பமாக இருக்கிறது. இந்து சமுத்திரத்தின் வாசலில் இருந்து இலங்கையோடு சேர்த்து இந்து சமுத்திரத்தின் குரல் வளையை இறுக்கப் பிடித்து விட்டது சீன கம்யூனிச பூதம். இனி இதிலிருந்து விடுபடுவதென்பது இலகுவல்ல.பண இராயதந்திரத்தின்(money diplomacy)மூலம் பல ஆசிய நாடுகளை வளைத்து விட்டது சீ…
-
- 0 replies
- 633 views
-
-
க.சர்வேஸ்வரன் ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை சுட்டுக்கொண்டுள்ளது. இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விடயத்தில் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து (75 ஆண்டுகளாக) மோதல் நிலவி வருவது உலகறிந்த விடயம். காஷ்மீர் விடுதலை போரும் பல ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு பாகிஸ்தான் 75 ஆண்டுகாலமாக பயிற்சிகள் வழங்கி இந்தியாவிற்குள் அனுப்பி பல்வேறு காலகட்டங்களில் பெரியதும் சிறியதுமான தாக்குதல்களை நடத்தி வருவதும் இந்தியா பதில் நடவடிக்கைகள் எடுத்து வருவதும் அனைவரும் அறிந்ததே. மேற்கண்ட பாகிஸ்தான் பயிற்சியளித்து அனு…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறானால் தமிழரின் நிலை? -இலட்சுமணன் தேசிய அரசியலில் (தமிழர்களின்) என்றுமில்லாத அளவுக்குப் பிரிவினைகள் தோன்றியுள்ளன. சுயலாப நோக்கிலான அரசியல் மேலோங்கி உள்ளதே, இதற்கான பிரதான காரணமாகும். ஆனால், சிங்கள தேசியவாதத்தை நிலைநிறுத்தும் அரசியல் மாத்திரம், பலமான சக்தியாக மேலெழுந்து செல்கிறது. இத்தகைய சூழ்நிலை ஒன்றின் உருவாக்கத்துக்கு, இராணுவ மேலாதிக்கப் போக்கும், இலங்கை, சிங்கள தேசம் என்ற இனவாதச் சிந்தனையும் அடிப்படையாக அமைந்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி மோதல்களும் அதற்குள்ளே முகிழ்ந்துள்ள வர்க்கவாத சாதியவாதச் சிந்தனைகளும் ஐ.தே.கவின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கேள்விக்குறியை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. இந…
-
- 5 replies
- 978 views
-
-
இந்துசமுத்திர பிராந்தியத்தில் மையச் சுழலச்சாக மாறும் மாலைதீவும் இலங்கையும் : இதயச்சந்திரன் முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் இம்மாதத்தில் , அந்த அழிவில் பங்காளிகளாக இருந்த வல்லரசாளர்கள் ,வேறொரு மோதல் களத்தினை இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் திறந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர். அந்தக் களம், கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 200 மைல் தொலைவில் இருக்கும், 1191 தீவுக்கூட்டங்களை கொண்ட மாலைதீவாகும். அமெரிக்காவின் அணுவாயுதப் படைத்தளமான தியாகொர்காசியா ,இந்தத் தீவிலிருந்து சற்றுத் தொலைவில்தான் இருக்கிறது. பிரித்தானியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு ,2014 டிசம்பரில் காலாவதியாகிப்போவதால் ,மாலைதீவில் மாற்றுத் தளத்தை அமெரிக்கா தேடு…
-
- 0 replies
- 627 views
-
-
இந்துசமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா? கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதியும் புரட்டாதி 1ஆம் திகதியும் கொழும்பு நகரில் இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாடு இந்து சமுத்திர ஓரத்தில் அமைந்துள்ள நாடுகளினதும் இந்து சமுத்திர நாடுகளினதும் அவதானத்தையும் கரிசனையையும் பெற்றுள்ளது. இந்து சமுத்திர மாநாட்டினை 1970களில் இலங்கை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இந்து சமுத்திரத்தை யுத்த சூன்யமற்ற வலயமாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் குழப்பக் கூடாது. இரண்டும் சாரம்சத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபட்டவை இந்து சமுத்திர மாநாடு தனியொரு அரசாங்கத்தினாலோ அல்லது அர…
-
- 1 reply
- 788 views
-
-
இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டி – கைமாறியது மியான்மார் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 4 Views கடந்த வாரம் மீண்டும் நான்காவது தடவை இராணுவ ஆட்சியினுள் சென்றுள்ளது மியான்மார். முன்னர் மூன்று தடவைகள் அங்கு கொண்டுவரப்பட்ட இராணுவ ஆட்சி என்பது 51 ஆண்டுகள் நீடித்திருந்தது. கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியை சேர்ந்த ஆங் சாங் சூகி மற்றும் அரச தலைவர் யூ வின் மியின்ற் ஆகியோர் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறைப்பிடித்த இராணுவம், கடந்த முதலாம் நாள் அன்று அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது. மியான்மாரில் இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், …
-
- 0 replies
- 470 views
-
-
' உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக......' என்று அடைத்தகுரலில், திரைப்படம் ஒன்றிக்கு விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது நாம் பார்க்கப்போவது திரைப்பட விளம்பரமல்ல. சீனாவின் ஆட்சியாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் சிந்தனைச் சிற்பிகள், இந்துசமுத்திரப்பிராந்தியம் குறித்து முதன்முறையாக வெளியிட்டுள்ள நீலப் புத்தகம் (Blue Book)பற்றிப் பார்க்கப்போகிறோம். இந்தப் பிராந்தியத்தில்தான் நம் தேசமும் இருப்பதால், சீனா நமது பிராந்தியம் குறித்து என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பற்றி அறிவதற்கு, நாம் அக்கறைப்படுவதில் தப்பேதுமில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு எம்முள் விதைத்துவிட்டுச் சென்ற பெருவலி, எம்மினத்தை அழிக்க உதவியோர், எமது நிலத்திலும், ஆகாயத்திலும், கடல் பரப…
-
- 0 replies
- 469 views
-
-
இந்துத் தேசியமும் இலங்கையின் யதார்த்த அரசியலும். சுயாந்தன் Labels: இந்துத் தேசியம் May 05, 2018 வடமாகாணத்தில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டவன் என்ற முறையிலும், அங்குள்ள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்ற அபிலாஷையையும் கொண்டு இந்துத் தேசியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் இலங்கைக்கான தேவை பற்றிய சில பதிவுகளைக் கடந்த காலங்களில் எழுதியிருந்தேன். அதனைத் தமிழகக் கட்சி அரசியல் மனநிலையிலும் இந்து என்பதே இல்லை என்ற தற்குறி மனநிலையிலும் அணுகிய பலரைக் காணமுடிந்தது. இன்னொருசாரார் இந்து-முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் சாத்தியம் என்றும் பகற்கனவு காண்கின்றனர். அப்படிக் கனவு காண்பவர்கள் யாரென்று பார்த்தால் தமது புத்தகங்கள் அதிகளவில…
-
- 5 replies
- 1.2k views
-
-
இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு (கூர்மை தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனில் சூக்லால் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர். ஜப்பான் சார்பில் கொழும்பில் உள்ள தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவார்கள். இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை இலங்கை அரசு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களினால் இந்த மாநட்டை இலங்கை அரசு ஏற்பாடு செய்ததாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. …
-
- 0 replies
- 409 views
-
-
இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு ஈழத் தமிழர்களின் திருகோணமலைத்துறைமுகம், வடக்கு- கிழக்குக் கடற் பிரதேசங்களை பிரதானமாகக் கருதி, இலங்கை இந்தியாவை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 11ஆம் 12ஆம் திகதிளில் இடம்பெறவுள்ள மாநாட்டில், இந்தியா, சீனா, ஜப்பான் அமெரிக்க, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பிரதான இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவர். இந்தியப் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்த…
-
- 1 reply
- 726 views
-
-
இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பங்குபற்றியது ஏன்? — ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்புடையதாக இருக்குமென்ற நோக்கில், அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் 480 மில்லியன் டொலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான எதிர்ப்பை பௌத்த குருமார் கைவிடக்கூடும். —- அ .நிக்ஸன்- இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு …
-
- 0 replies
- 426 views
-
-
இந்தோ- பசுபிக்கில் பட்டுப்பாதையும் ஈழத் தமிழரின் எதிர்காலமும். முன்னாள் யாழ் பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு.
-
- 0 replies
- 552 views
-
-
இந்தோ-பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றியது ஏன்?மிலேனியம் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்! சீன உறவு என்னாகும்? தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமீபகாலமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளதை ஜோ பைடன் தெரிவிக்கும் கருத்துகள் கட்டியம் கூறுகின்றன. இந்த இடத்திலேதான் இலங்கையுடனான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாப…
-
- 0 replies
- 410 views
-
-
லியோ நிரோஷ தர்ஷன்) "மனித உரிமைகளுக்கான மதிப்பு, ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதை இலக்காக் கொண்ட முயற்சிகளுக்கு ஒத்தழைத்தல் என்பதன் பின்னணியிலேயே இலங்கையுடனான எமது பாதுகாப்பு உறவை முகாமைத்துவம் செய்கிறோம். " இந்தோ-பசுபிக் பிராந்திய உறவில் இலங்கையின் இருப்பிடத்தை பிரதிபலிக்கும் மற்றும் இந்த தனித்துவமான நிலை வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் இலங்கையின் பிராந்திய தொடர்புக்கான தமது நோக்கத்தை இலங்கை தலைவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசிய பொது இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதி செயலர் ஹெனிக் ஜொனதன் தெரிவித்தார். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு பங்களிப்புச் செய்வதற்…
-
- 0 replies
- 360 views
-
-
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். பேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். பேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு: நாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் …
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து இந்தோ-பசுபிக் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்காவில் கலந்துரையாடல் அமெரிக்க இலங்கை உயர்மட்டக்குழுவினர் பங்கேற்பு - இந்தியாவுடனும் உரையாடல் இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச இராணுவப் புலனாய்வாளர்கள் தடையப் பொருட்கள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணை நடத்துகின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமும் மற்றும் பலரிடமும் வாக்குமூலங்கள் பதியப்பட்டு தாக்குதலுக்கான அடிப்படைக் காரணங்கள், பின்னணிகள் குறித்தும் தீவிரமாக …
-
- 0 replies
- 394 views
-
-
இன அரசியலில் தமிழ்த் தேசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.. தமிழ்த் தேசியம் தேசிய இனப் பிரச்சினை இன்று தமிழினம் ஈழத்திலும் தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தமிழகத்தில், கவலை கொள்வதாகத் தெரியவில்லை. நம்மால் மக்களிடையே ஓர் எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே. அதற்கான நமது சிந்தனைகள் எல்லாம் அடிப்படையில் பகுத்தறிவின் மீது கட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மக்களுக்கு சிக்கல்களைப் பகுத்தறிவைக் கொண்டு விளக்கிப் …
-
- 0 replies
- 965 views
-