நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
இராணுவ பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் இன்றும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ…
-
- 3 replies
- 509 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்த முடியாது என ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. விசாரணைகளை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதன் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும் என கருத முடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சில வேளைகளில் இந்த விசாரணை முடிவுகள் நீதியின் மறுபக்கத்தையே பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆங்கில ஊடகமான பொஸ்டன் க்ளோப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள் காட்டி, ஐக்கிய நாடுகள் கண்காணிப்பகம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. விசாரணைகளை நடத்தும் பொறுப்பை கண் மூடித்தனமாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 509 views
-
-
யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன் December 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாநகர சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 45 உறுப்பினர்களுக்கும், அவர்களது செழுமைக்காகவும் பாதீட்டில் 47.37 மில்லியன் ரூபார் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, யாழ்.மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 07.12.2018 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளும் தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டினை எதிர் தரப்பு எதிர்…
-
- 2 replies
- 509 views
-
-
WELL DONE SUMANTHIRAN பாராட்டுகள் சுமந்திரன். - வ.ஐ.ச.ஜெயபாலன்.குற்றம் செய்த தரப்பு விசாரிக்கமுடியாது சர்வதேச விசாரணை அவசியமென சுமந்திரன் 10.1.2019 அன்று நாடாளுமன்ற உரையை ராஜதந்திர அவசியங்களை உணந்து வரவேற்கிறேன். . இன்று இலங்கை அரசின்மீது அழுத்தங்களை உருவாக்கி தாயக தமிழ்பேசும் மக்களைக் பாதுகாக்க மேற்குலகையும் இந்தியாவையும் அனுசரித்து கருமமாற்றுவதைத்தவிர வேறு மார்கங்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்தவகையில் சுமந்திரனின் 10.1.2019 நாடாளுமன்றப் பேச்சு விமர்சனங்களுடன் இராஜதந்திர அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டியதாகும். . இலங்கையில் நிகழ்ந்த மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணையும், போர்குற்றங்கள் தொடர்பான விசாரணையும் செர்பிய போர்குற்ற விசாரணை மற்று…
-
- 0 replies
- 509 views
-
-
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை – நியூசிலாந்து சிற்சபேசன் நியூசிலாந்து சிற்சபேசன் அதியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது. சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதே…
-
- 0 replies
- 507 views
-
-
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான ‘எழுச்சிக்குயில் 2014′ நிகழ்வானது 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவில் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இளைய தலைமுற…
-
- 0 replies
- 507 views
-
-
வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். வடக்கில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், வடக்கில் ஆளுனராகத் தற்போது பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்குவது தொடர்பாகவும், முன்னுரிமை கொடுத்து பேசப் போவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணையை தமிழ்த் …
-
- 0 replies
- 507 views
-
-
சென்ற இதழ் கட்டுரையைப் படித்தவுடன் வழக்கறிஞர் விஜயகுமார் தொடர்புகொண்டு கட்டுரையில் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டிய செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டினார். நீதியரசர் விக்னேஸ்வரனின் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நேர்க்காணலில், அவரிடம் கேட்கப்படும் ஒரு கேள்வியில், அந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது. 2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் - என்கிற உண்மையை, இவ்வளவு காலமாக தேசிய ஊடகங்கள் மூடிமறைத்து வந்தன. இங்கேயிருந்து ஐந்தாயிரம் ஆறாயிரம் மைலுக்கு அந்தப்புறம், பெயர் கூட வாயில் நுழையாத ஒரு நாட்டில், ஒரு பத்து பேரை அந்த நாட்டு அரசு சுட்டுக் கொன்றால்கூட, அய்யோ அய்யோ என்று அலறி, மனித உரிமைக்காக வரிந்துகட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிற 'மனிதாபிமான ப…
-
- 1 reply
- 507 views
-
-
இரண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலம் மின்னம்பலம்2021-10-18 ராஜன் குறை சில மாநிலங்களில் ஆட்சி செய்தாலும், தேசிய அளவில் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும், தமிழ்நாட்டில் முதன்மை எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவுக்கும் கடந்த சனிக்கிழமை - 2021அக்டோபர் 16 - முக்கியமான நாள். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட செயற்குழு, அதிருப்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அன்று கூடியது. அ.இ.அ.தி.மு.க கட்சி தொடங்கப்பட்டு பொன்விழா காணும் நேரம் அதன் முன்னாள் (தற்காலிக) பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி அந்தக் கட்சியின் மீது உரிமைகோரும் தன் அரசியல் செயல்பாட்டை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தலைவர் யாரென்று தெரியும்; அது நடைமுறைய…
-
- 0 replies
- 507 views
-
-
விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும் பொதுவான மக்களின் பிரச்சனைகளிலிருந்தும், உண்மைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்புவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஆளும்வர்க்கங்களின் தந்திரோபாயங்களில் ஒன்று. அவ்வாறான தகவல்கள் வியாபாரமயபடுத்தப்பட்ட சமூகப் பிரக்ஞையற்ற ஊடகங்களால் மக்கள் மத்தியில் எந்தக் குறிப்பான ஆதாரங்களுமின்றி பரப்பப்படும். அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் என்பது ஆபத்தான பின் விழைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறானவற்றுள் ஒன்றே விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முதலில் சந்தேகத்திற்குரிய அரசியல்வாதிகளாலும், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களாலும் பரவவிடப்பட்ட வதந்தி. இலங்கையின் தேசிய இன ஒடுக்குமுறை வரலாற்றில் இன்றைய இலங்கை அரசு மிகவு…
-
- 0 replies
- 507 views
-
-
நீங்கள் நாடாளுமன்றத்திற்கு நியமித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள். 01) நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் - ரூபா. 54,285 02) துணை அமைச்சரின் சம்பளம் - ரூபா. 63,500 03) மாநில அமைச்சர் அமைச்சரவை அமைச்சரின் சம்பளம் - ரூபா. 65,000 04) சபாநாயகரின் சம்பளம் - ரூபா. 68,500 05) பிரதமரின் சம்பளம் - ரூபா. 71,500 * அலுவலக கொடுப்பனவு - ரூபா. 100,000 * போக்குவரத்து கொடுப்பனவு - ரூபா.10,000 * தொலைபேசி கொடுப்பனவு - ரூபா. 50,000 (தனியார்) * நிலையான மற்றும் மொபைல் தொலைபேசி கொடுப்பனவு - ரூபா. 50,000 (அலுவலகம்) * இலவச அஞ்சல் கொடுப்பனவு - ரூபா. 350,000 (மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம்) * ஓட்டுநர் மற்றும் விரு…
-
- 3 replies
- 507 views
-
-
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் : இலங்கையில் ஏன்? (ஸ்டான்லி ஜொனி) கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் க்ரைஸ்ட் சர்ச் பகுதியில் இரு பள்ளிவாசல்களில் வெள்ளை இனப் பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 50 இற்கும் அதிகமானவர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான சம்பவத்திற்குப் பதிலடியாகவே ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று 350 இற்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. சர்வதேச இயக்கத் தொடர்புகளிடமிருந்து கிடைத்திருக்கூடிய உதவியுடன் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற உள்நாட்டு இஸ்லாமிய இயக்கமே தாக்குதல்களை மேற்கொண்டதாக விசாரணையாளர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்குத் தாங்களே பொறுப்ப…
-
- 0 replies
- 506 views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மென்மையான போக்குடையவர் என்பதை அவரின் செயற்பாடுகளில் இருந்து உணர முடிகின்றது. இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி அறிவித்தமை ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பைக் காட்டுவதாகும். இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரி அறிவித்த நேரம், காலம் என்பன மிகவும் பொருத்தமானவை. இந்த அறிவிப்பு அவர் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது. அதேநேரம் கண்டி தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் சாந்தமும், நிதானமும் தெரிகிறது. எனினும் அதீத நல்ல குணம் பலவீனமாகக் கருதப்படும் என்பதன் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமாகவும் தீர…
-
- 0 replies
- 506 views
-
-
ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் முக்கிய விடயங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த சூட்டோடு, அவருடைய முதலாவது விஜயம் அமைந்திருந்தது. முள்ளிவாய்க்கால் என்ற கடலோரப் பிரதேசத்தில் ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் மீது மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருந்தன. அவர்களும் அந்தத் தாக்குதலை எதிர்த்து மூர்க்கமாகப் போரிட்டிருந்தார்கள். இந்த மோதல்களுக்கிடையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கி சின்னாப…
-
- 0 replies
- 506 views
-
-
சிறீலங்காவில் 2009 ஆண்டுக்கு முன்னர் எந்தொரு மூலைமுடுக்கிலும், யாரோ செய்யும் கொலைகளை இலகுவாக விடுதலைப் புலிகள்தான் செய்துள்ளார்கள் அக்கொலைக்கு அவர்களே பொறுப்பென தொடர்ந்து குற்றஞ்சாட்டிய சிங்கள அரசாங்கங்கள், இன்று வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு முழுப் பாதுகாப்பையும் தனது கையில் வைத்துள்ள நிலையில், தமிழர்கள் பால்வேறுபாடின்றி மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்படுகின்றார்கள். முற்றுமுழுதாக சிறீலங்கா படைகளின் கண்காணிப்பிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கொலைகள் சாதாரண முறையில் இடம்பெறுகிறன. படைகள் மற்றும் படைத்துணைக்குழுக்கள் ஆகியவற்றைத் தவிர வேறெந்தத் தரப்பினரிடமும் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில், ஆய…
-
- 0 replies
- 506 views
-
-
-
- 0 replies
- 506 views
-
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறாதது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் சீன மொழியின் ஆதிக்கம் இலங்கை மண்ணில் ஓங்குகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு, பல்வேறு சந்திப்புக்களை நடத்திய பிறகு உடனடியாக அவரது தாயகத்துக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு …
-
- 4 replies
- 505 views
-
-
தமிழ் மக்களின் அரசியல்த் தீர்வுத் திட்டத்தைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஒன்றான கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்காக கொழும்பு மகிந்த அரசாங்கம் பல்வேறு கைங்கரியங்களைக் கையாண்டுவருகின்றது. கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களைக் கொண்ட பகுதி, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை அது மேற்கொண்டுவருகின்றது. கடந்த கால மாகாண சபைத் தேர்தலில் ஆயுதக்குழுவுக்கு ஆதரவுகளை வழங்கிய இந்தியா இன்று, சர்வதேச நாடுகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடியுள்ளது. இந்தியா இன்று இத் திட்டத்தைக் கொண்டுவரவில்லை. இந்திய - சிறீலங்கா ஒப்பந்தத்தினுடாகவே தமிழர்களின் ஈழ சாம்ராஜ்யத்தை அழிக்க முற்பட்டது. இங்குத…
-
- 0 replies
- 505 views
-
-
Wednesday, 25 January 2017 ட்ரம்ப் ஜனாதிபதி காலமும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரவிருக்கின்ற மோதலும் The Trump presidency and the coming conflict between Europe and America source from internet அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போருக்குப் பிந்தைய உறவுகளில் முன்னொருபோதும் இல்லாத சீரழிவுக்கான முன்னறிவிப்பாகும். ஜனவரி 20 பதவியேற்பு விழா முன்னதாக பிரிட்டனின் சண்டே டைம்ஸ் ம…
-
- 0 replies
- 505 views
-
-
மோடி - மகிந்தா சந்திப்பு. இலங்கை, இந்தியா சம்பந்தமான பல விடயங்களை செப்டெம்பர் 26ம் திகதி காலை 10:30 மணிக்கு, இலங்கை பிரதமர், இந்திய பிரதமருடன் நேரடியாக பேசவுள்ளார். இந்த சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது மகிந்தா, வடபகுதி மீனவர்கள், இந்திய மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவார். இதுகுறித்து செப்டம்பர் 25ம் திகதி வடபகுதி மீனவர் பிரதிநிதிகளை பிரதமர் மகிந்தா சந்திக்க உள்ளார். இவ்வாண்டு ஐநா பொது சபை சந்திப்பு இணையவழியே நடைபெறுகிறது. அதில் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கு முன்னர், இலங்கை பிரதமருடனான சந்திப்பு நிகழ்கிறது. இலங்கைத்தமிழர் குறித்தோ, புதிய அரசியல் அமைப்பில் 13 வது திருத்தம் குறித்தோ பேசுவார்களா என்று அறிவ…
-
- 3 replies
- 505 views
-
-
"இன்றைய தினம் உதயன் பத்திரிக்கை என்ற பெயரில் அதனுடைய வடிவமைப்புடன் கூட்டமைப்புக்கு எதிரான பொய்யான செய்திகளுடன் நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகை வெளி வந்துள்ளது............ அதன் தகவல்களை நம்ப வேண்டாம்..................... இந்த தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள்" என பத்திரிகை உலக தோழியர் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார். தயவுடன் இந்த தகவலை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொலைபேசிகள் மூலம் தங்கள் ஈழத்து உறவுகளுக்கு அறிவிக்க வேண்டும். ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்தும் விடுதலைக்காக குரல்கொடுக்கும் ஈழத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாலர்களுக்கும் வானொலி அறிவிப்பாளர்களுக்கும் தலைபணிகிறேன். போற்றுதலும் வாழ்த்துக்களும். நல்வாழ்த்துக்கள் விடுதலைக்காக துணிந்துள்ள ஊடகவியலாலர்கள…
-
- 0 replies
- 505 views
-
-
உள்ளடக்கம்:- சகாயம் நேர்மையாளரா? சகாயத்தின்மறுபக்கம். மக்கள் பாதையின் தலைவரின் கருத்து. சகாயம் - லஞ்சம் வாங்காத நேர்மையாளர், இது மட்டும் நேர்மையல்ல வாழ்கையில் எப்படி நடக்கின்றார் என்பதே. அவரை அருகில் இருந்து பார்த்தால் தான் அவரைப்பற்றி தெரியுர், நாம் அருகில் இருந்து பார்த்தால் அவரின் விம்பம் உடைத்துவிட்டது. தன்னைதான் எங்கும் முன்னிறுத்தி செயற்படுவார், தன் படங்களை மட்டுமே இனி எங்கும் பயன்படுத்தவும் என கட்டளையிட்டார். இனி சகாயத்திற்கும் மக்கள் பாதைக்கும் தொடர்பில்லை. சந்திரமோகனை போல் ஒரு நல்ல கள போராளியை காணமுடியாது. தமிழகத்துக்கு சகாயம் ஒரு ஒரு விடிவு இல்லை பி.கு:- வசை சொற்களில்லை
-
- 0 replies
- 504 views
-
-
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட எந்தத் தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இலங்கையின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்தது. எனினும் 2010ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேசிய நிறைவேற்று குழுவில் முன்வைத்த கேள்விக்கு அமைய ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும் எனவும் …
-
- 2 replies
- 504 views
-
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….? October 13, 2024 — அழகு குணசீலன் — மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய போலி அரசியலுக்கு நடந்திருக்கிறது. சகல தமிழ்த்தேசிய போலிகளும் தனித்தும், கூட்டாகவும் கொள்ளி கொத்துவது போன்று கொத்து…கொத்து…எனக் கொத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் பிளந்து தமிழரசுக்கு கொள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து சந்திச்சந்தையில் விட்டிருக்கிறார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்த பழைய கதையை விடுவோம். அதற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஒரு நியாயமான காரணம் வெளியில் சொல்லுவதற்கு இருந்தது. அண்மைய கடந்த 20 ஆண்டுகளை, தமிழ்த்தேசிய கூ…
-
-
- 7 replies
- 504 views
-