Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் தாக்குதலில் தலைவர் பிரபாகரன் காயம் என்ற செய்திக்கு மறுப்பு.

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த 26ம் திகதி கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் சிறிய காயங்களுக்கு உள்ளளானார் என்று கொழும்பில் வெளியான பரபரப்புத் தகவலை வன்னிச் செய்திகள் அடியோடு மறுத்தன.

'அப்படி எதுவுமே நடக்கவில்ல. இது இலங்கை அரசின் பாதுகாப்புத் தலைமை கட்டவிழ்த்து விட்டிருக்கும் உளவியல் யுத்தத்தின் ஓர் அங்கம் தாம். தலைவர் பிரபாகரனை நெருங்கிவிட்டார்கள் என்ற கதையைப் பரபுவதன் மூலம குழப்பத்தை ஏற்படுத்த எண்ணும் கொழும்பு, அதற்காகவே இந்தக் கதையை விதைத்து விட்டிருக்கினறது.' என விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் 'சுடர் ஒளி' க்குத் தெரிவித்தர்.

நன்றி சுடர் ஒளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த 26ம் திகதி கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் சிறிய காயங்களுக்கு உள்ளளானார் என்று கொழும்பில் வெளியான பரபரப்புத் தகவலை வன்னிச் செய்திகள் அடியோடு மறுத்தன.

'அப்படி எதுவுமே நடக்கவில்ல. இது இலங்கை அரசின் பாதுகாப்புத் தலைமை கட்டவிழ்த்து விட்டிருக்கும் உளவியல் யுத்தத்தின் ஓர் அங்கம் தாம். தலைவர் பிரபாகரனை நெருங்கிவிட்டார்கள் என்ற கதையைப் பரபுவதன் மூலம குழப்பத்தை ஏற்படுத்த எண்ணும் கொழும்பு, அதற்காகவே இந்தக் கதையை விதைத்து விட்டிருக்கினறது.' என விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் 'சுடர் ஒளி' க்குத் தெரிவித்தர்.

நன்றி சுடர் ஒளி

இது DBS என்ற வே. மகனின் வேலை ( PAID BY RAW).

இவனுக்கு பிள்ளை குட்டி ஒண்டும் இல்லை. என்னத்துக்காக இப்பிடி RAW வுக்கு நக்கி சேவகம் செய்து சொத்து சேர்க்கிறான் எண்டு தெரியேல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பொய்ச் செய்தியை நேற்றைய த நேசன் என்ற ஆங்கில இனவாத பத்திரிகையில் எழுதிய டிபிஎஸ் ஜெயராஜின் மின் அஞ்சலுக்கு அனைத்து தமிழரும் எம் கண்டனத்தை அனுப்பவேண்டும். இந்த *****(கெட்டவார்த்தை) வசிப்பது கனடாவில்.

த‌ நேசன் பத்திரிகைவிற்பதோ ஒரு 1000க்குள்தான் நட்டத்தில் போகும் பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க அந்த ஊடகவிபச்சாரிகள் செய்த வேலை இதுவாகும். இவங்கள் எத்தனைமுறை தலைவரை கொச்சைப்படுத்துகிறார்களோ அது தலைவருக்கு நீண்ட ஆயுளைத்தான் கொடுக்கும்.

பத்திரிகை பிற்பனையாக வேண்டுமென்றால் உதே செய்தி ! போடக்கிடக்கு உந்த தமிழ் செம்மரிக்கு !

அதுவும் கனடாவில இருந்து கொண்டு ?

நல்ல செய்தி ஓண்டு சொல்லுறன் நல்லா விற்பனையாகும்

மகிந்தவின்ர பெண்டிலின்ர கள்ளக்காதலப்பற்றி எழுதலாமே !!!!!!

  • தொடங்கியவர்

காயத்துடன் உயிர் தப்பினார் பிரபாகரன்

கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 டிசம்பர் 2007 ( 08:47)

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சில் லேசான காயத்துடன் உயிர்தப்பியுள்ளார்.

இலங்கை விமானப் படை விமானங்கள் கடந்த நவம்பர் மாதம் 28 ம் தேதியன்று இரவு 12 .25 மணிக்கு கிளிநொச்சியில் உள்ள ஜெயந்தி நகரில் உள்ள வீடுகளிலும், அதனைச் சுற்றியுள்ள வீடுகளிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அப்போது பிரபாகரன் அங்குள்ள ஒரு பதுங்கு குழியில்தான் தங்கியிருந்தார்.இந்நிலையில்

தமிழ் மக்களிடமும் போராளிகளிடமும் உளவியல் சோர்வை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு புனையப்பட்டுள்ளது இந்தக் கதை.

டிபிஎஸ் இன் கட்டுரையை படித்தால் விளங்கும் எவ்வளவு தூரம் தமது கற்பனையை உண்மையாக்க முயற்சித்துள்ளனர் என்பது.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சோந்திக்களுண்ட பொய்ச்செய்திகளுக்கு அலட்டிக்கொள்ள தேவையில்ல... செய்தியின் தன்மையில் தெரியும் உண்மையா இல்லையா எண்டு...

இப்படித்தான் சுனாமி அடித்த போது வதந்தி பரப்பி மூக்குடைப்பட்டவர்கள்..

பொய் சொலுறவங்கள் எல்லம் பெரிய பெரிய பந்தியா இல்லோ சொல்லுறாங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

விமான தாக்குதலில் பங்கர் சரிந்து பிரபாகரன் காயம்!

கொழும்பு: இலங்கை விமானப்படை நவம்பர் 28ம் தேதி நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் லேசான காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த செய்தியை கொழும்பிலிருந்து வெளியாகும் தி நேஷன் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், கிளிநொச்சியில், நவம்பர் 28ம் தேதி விமானப்படையினர் நடத்திய ஒரு தாக்குதலில், ரகசிய பதுங்கு குழியில் இருந்த பிரபாகரன் காயமடைந்தார்.

28ம் தேதி பிற்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திர நகர் அருகே உள்ள பதுங்கு குழியில் அப்போது பிரபாகரன் இருந்தார்.

தாக்குதலில் அவருக்கு நேரடியாக எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால் குண்டு வீச்சின்போது பதுங்கு குழி சரிந்ததால், அதில் சிக்கி காயமடைந்தார்.

காயத்தைத் தொடர்ந்து வன்னிப் பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவான திலீபன் மெடிக்கல் யூனிட்டைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசுக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த செய்தி குறித்து ராணுவத் தரப்பிலோ அல்லது புலிகள் தரப்பிலோ எந்த தகவலும் இல்லை.

கடந்த மாதம் நடந்த விமானப்படைத் தாக்குதலில்தான் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

thatstami.com

----------

தொடர் படை நடவடிக்கையால் சோர்வைச் சந்தித்துள்ள சிங்களப் படையினருக்கு உற்சாகத்தை வழங்கவும் சண்டே ரைம்ஸ் குறிப்பிட்டது போல விமானப்படை விமானங்கள் புலிகளின் விமான எதிர்ப்பு அணிக்கு இலக்காகி இருப்பதால் விமானிகள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களை உற்சாகப்படுத்தவும் மற்றும் தமிழ் மக்களை போராளிகளை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தவும்.. அந்நியநாடுகளுக்கு உங்களின் தயவோடு புலிகளின் தலைமையைக் கூட எம்மால் இராணுவ ரீதியில் இலக்கு வைக்க முடிந்துள்ளது எனவே போரை முன்னெடுப்பதே இப்போதைக்கு சிறந்த வழி அதற்கான உதவிகள் ஒத்தாசைகளை நல்குங்கள் என்பது போன்ற செய்திகளைக் காவவும் என்றே இவ்வகைப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன..! த நேசன் நாளேடு அண்மைக்காலமாக அரச படைகளின் செய்திகளை முன்னிலைப்படுத்தி வெளியிட்டு வரும் போதே தெரிந்தது.. அதற்குள் உள்நோக்கம் இருக்கும் என்பது. தமிழ் ஊடகங்களும் த நேசனை ஓடிச் சென்று தேடிப் பிடித்து செய்திகளை மொழிபெயர்த்துத் தந்தன என்பது குறிப்பிடத்தக்கது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற 14ம் திகதி பாலா அண்ணாவின் நினைவுநாளில் தலைவர் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

அது போன முறை பங்கு பற்றிய போது எடுத்து வைச்ச பிரசுரிக்கப்படாத மேலதிகப்படங்களாக இருக்க முடியாதோ? இந்த முறையான் எண்டு எப்பிடி உறுதிபடச் சொல்லுறியள்?

  • கருத்துக்கள உறவுகள்

ம். நல்ல கேள்வி. தலைவரை ஒவ்வொரு கெட்டப்பில் முதலே படம் எடு;து வைச்சிருக்கின்றார்கள். பில்லா கெட்டப், மொட்டை பாஸ், வயது போனது போல..... என்று. அதை வைச்சுத் தான் பிரசுரிப்பினம்.

போனமுறை தலைவர் பாலா அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தியது, ஒரு நினைவு மட்டபம் போன்ற ஒரு அமைப்பில் வைத்தும், முழு உயரப்படத்திற்கும். இந்த முறை அரைப்படத்திற்கும், வித்தியாசமான அமைப்பில் அமைக்கப்பட்ட நினைவுமண்டபத்திலும்.

எனியும் நம்ப இயலாது என்றால் பேசாமல் டிபிஎஸ்சையே நம்புறது நல்லது. எப்பவும் ஒரு பக்கத்தை மட்டுமே நம்புறது நல்லது.

பக்கச் சார்பு எடுத்து ஒருவரைத்தான் நம்பிறது இல்லை நாம. எமது சிந்தனா சக்த்தியின் துணையுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பாவித்து எல்லாத்தரப்புப் பற்றியும் கேள்வி எழுப்புவது தான் ஐனநாயகம். அப்பிடிச் செய்தால் தான் நாலு விசையம் தெரிஞ்ச ஆள்மாதிரியும் காட்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பக்கச் சார்பு எடுத்து ஒருவரைத்தான் நம்பிறது இல்லை நாம. எமது சிந்தனா சக்த்தியின் துணையுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பாவித்து எல்லாத்தரப்புப் பற்றியும் கேள்வி எழுப்புவது தான் ஐனநாயகம். அப்பிடிச் செய்தால் தான் நாலு விசையம் தெரிஞ்ச ஆள்மாதிரியும் காட்டும். :lol:

சந்தேகங்களை மனைவி, சகோதரங்கள் மேலே கிளப்பாமல் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல, பெரியார் சாமியை வேண்டிக் கொள்கின்றேன்

பொது வாழ்வு வேறு தனிவாழ்வு வேறு.

பெரியார் சாமியை வேண்டினாக் காணாது அவரிற்கு தேரிழுத்து காவடி ஆடி 1000 தேங்காயும் உடைக்க வேணும்.

குறுக்காலைபோவான்.

பாலா அண்ணையின் முதலாவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்விலேயே தலைவர் கலந்து கொண்டார். அதற்குரிய ஆதாரம் கீழுள்ள படத்தில் உள்ளது.

ltte_leader_14_12_07_01.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது மின்னல்

ஆனால் இப்படிச் சந்தேகம் கிளப்பிப் புலிகளை நம்பாதவர்களுக்காக, அல்லது புலிகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்த முனைபவர்களுக்காக ஒவ்வொரு முறையும் நிருபித்துக் கொண்டிருக்க முடியாது. அது தேவையுமில்லாத ஒன்று.

நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பட்டும். மற்றவர்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

-------------------

குறுக்காலபோவன் உது கிரபிக்ஸ் படம் என்று வந்து சொல்லப் போறார் பாருங்களேன்.

பொது வாழ்வு வேறு தனிவாழ்வு வேறு.

பெரியார் சாமியை வேண்டினாக் காணாது அவரிற்கு தேரிழுத்து காவடி ஆடி 1000 தேங்காயும் உடைக்க வேணும்.

திராவிட பக்தர்கள் செய்வது போதாதோ? தேங்காயிற்குப் பதிலாகப் பலரின் மண்டைகளை உடைத்துக் கொண்டு நிற்கின்றார்களே!

காவடி ஆடுறது தேங்காய் உடைக்கிறது கருங்கல்லையும் மரக்குத்தியளையும் இழுத்துப் பொழுது போக்காட்டிறவையும் மசூதி இடிக்கினம் தொடரூந்து கொழுத்தினம்.

திராவிடப் பக்த்தர்கள் தமிழ்தேசியத்திற்கு மண்டை உடைக்கிறதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறன்.

மின்னல் தூயவன் கேட்டது போல் கிறபிக்ஸ் ஆல "1ம் ஆண்டு..." என்று அதில எழுத முடியாதா? சரி அப்படித்தான் உது உண்மையான படம் எண்டு ஒரு பேச்சுக்கு வைச்சுக் கொண்டாலும் உதில வலது கைப்பக்கம் பின்பக்கங்கள் வடிவாக தெரியவில்லை. ஏன் வேறு கோணங்களில் படம் வரவில்லை? முன்னரே எடுத்து வைக்கவில்லையா? HD resolution இல ஒளிப்படக் காட்சியாக விட்டிருந்தாலாவது கொஞ்சம் நம்பலாம்.

மின்னல் தூயவன் கேட்டது போல் கிறபிக்ஸ் ஆல "1ம் ஆண்டு..." என்று அதில எழுத முடியாதா? சரி அப்படித்தான் உது உண்மையான படம் எண்டு ஒரு பேச்சுக்கு வைச்சுக் கொண்டாலும் உதில வலது கைப்பக்கம் பின்பக்கங்கள் வடிவாக தெரியவில்லை. ஏன் வேறு கோணங்களில் படம் வரவில்லை? முன்னரே எடுத்து வைக்கவில்லையா? HD resolution இல ஒளிப்படக் காட்சியாக விட்டிருந்தாலாவது கொஞ்சம் நம்பலாம்.

தலைவர் அவர்கள் தேசத்தின்குரலுக்கு வணக்கம் செலுத்தும் இடத்தில் சுடர் ஏற்றுவதை ஒரு திசையில் இருந்துதான் படமெடுக்க முடியும். ஒன்றில் இடதுபுறம் அல்லது வலதுபுறம். பின்புறத்தில் இருந்து படமெடுத்தால் சுடர் ஏற்றுப்படுவதும் தெரியாது. யார் ஏற்றுவது என்றும் தெரியாது. சுடர் ஏற்றுவதை இடப்புறத்திலிருந்து படமெடுத்துவிட்டு வலப்புறத்திற்கு சென்றால் மலர் மாலை அணிவிக்கும் காட்சியை படமாக்குதற்காக வாய்ப்பு இழக்கப்படும். இதன்காரணமாகவே ஒரே திசையில் இருந்து சுடர் ஏற்றுதல், மலர் மாலை அணிவித்தல், அகவணக்கம் செலுத்துதல் போன்ற நிகழ்வுகளை ஒளிப்படப்பிடிப்பாளர்கள் குறிப்பாக தேசியத் தலைவரைப் படமெடுக்கும் ஒளிப்படப்பிடிப்பாளர் படமாக்குகிறார்கள்.

360 பாகையில் படமெடுக்க முடியும்தான். ஆனால் அது ஒளிப்படக்கருவியைச் சுற்றியுள்ளவற்றை எடுக்கலாம். ஆனால் ஒருவரின் அனைத்துப்பகுதிகளும் தெரியும் படியாக ஒரு ஒளிப்படக்கருவினால் படமெடுப்பது தற்போது சாத்தியமில்லை.

உங்கள் கருத்துக்கு எனது விளக்கம் ஏற்கமுடியாததுதான். இருந்தாலும் உங்கள் கருத்தால் யாரும் குழம்பியிருந்தால் அவர்களை கொஞ்சம் தெளியவைக்க முடியுமென்ற நம்பிக்கையில்....

நல்லது மின்னல். நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள் ஒளிப்படமாக போடாமல் ஆக குறித்த கோணங்களில் நிழல்படமாக போடுவதால் பல விடையங்களை மறைக்கலாம் என்பதை. அத்தோடு காயங்களை மறைக்க வெளியிடப்படும் படத்தின் கோணம் மாத்திரமல்ல ஆடை தலையங்கி போன்றவையும் உதவும்.

எனவே சதாம்குசேயின் மெய்பாதுகாவலர்களுடன் ஆற்றில் குளத்தில் குளிக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள் தானே. அது போல் ஏதாவது காட்சிகளை ஒளிப்படமாக வெளியிட்டால் தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆறுதலடைவார்கள். அவர்கள் குளிருக்க 2..3 வேலை என்று செய்து செரியா கஸ்டப்படுறவை. அவையின் உதவிக்கு நன்றிக்கடனாக இருக்க விரும்பினால் இதுகளை கொஞ்சம் கவனத்தில எடுக்க வேணும் கண்டியளோ.

ஏற்கனவே வேண்டின காசுக்கு ஒண்டையும் காணேல்லை என்று கடுப்பில இருக்கிறம். பேசாமல் அடுத்த ரஜனி படத்தில முதலிட்டாலாகுதல் விசிலடிச்சு அட்டகாசமான நல்ல படம் ஒன்று 2 வருசத்தில பாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லம் என நினைக்கிறேன். இல்லை எனில் களத்தில் இறங்க தயார். தயாரா கோழிகளே / நான் சொல்வது கோழைகளை? கருத்தால் வெல்ல தயார் கோழைகளே? முதலாவது தமிழை எழுத்து பிழையில்லாமல் எழுத பழகுங்கள். பிறகு விவாதிப்போம்.

ar u allite man? கலத்தில் இரங்கி கோலி... இல்லை கோலை மோய்க்கப் போறிகல?

  • கருத்துக்கள உறவுகள்

தூங்குபவனை ஒருக்கால் எழுப்பினாலும் தூங்குவதுபோல பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது. அவ்வாறு முயன்றால் நீங்கள் உங்களை முட்டாளாக்குவதாக அர்த்தம். எதிர்க்கேள்வி கேக்கிறேன் பேர்வழியென்று அசட்டுத்தனமாக குறுக்குக் கேள்வி கேட்கும் சிலருக்கெல்லாம் நீங்கள் ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் எதிர்த்தல் என்ற போர்வையில் மற்றவர்களை சீண்டிப் பார்ப்பது சிலருக்கு சந்தோஷம்.

அவர்களை அவர்களது பாட்டில் விட்டு விடுங்கள். அலுத்துப் போனபின் அவர்களே வாயை மூடி விடுவார்கள். அப்படியும் மூடவில்லை என்றால் எங்கோ பிரச்சனை .

எனவே சதாம்குசேயின் மெய்பாதுகாவலர்களுடன் ஆற்றில் குளத்தில் குளிக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள் தானே. அது போல் ஏதாவது காட்சிகளை ஒளிப்படமாக வெளியிட்டால் தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆறுதலடைவார்கள். அவர்கள் குளிருக்க 2..3 வேலை என்று செய்து செரியா கஸ்டப்படுறவை. அவையின் உதவிக்கு நன்றிக்கடனாக இருக்க விரும்பினால் இதுகளை கொஞ்சம் கவனத்தில எடுக்க வேணும் கண்டியளோ.

அண்ணை புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகள் சிங்கள படைகள் மீது இன்னும் பெரிய அடி எதனையும் கொடுக்கவில்லை ஆதங்கப்படுறது உண்மைதான்.

அதுக்காக சிங்கள அரசு செய்கிற அனைத்துப் பரப்புரைகளையும் அவர்கள் நம்பிக்கொண்டிருக்கவில்லை. தலைவர் தாக்குதலில் காயமடைந்தார் என்ற செய்தியை புலத்தமிழர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் உங்களைப் போன்றவர்களே உண்மைபோல காட்ட முற்படுகிறீர்கள்.

எனவே சதாம்குசேயின் மெய்பாதுகாவலர்களுடன் ஆற்றில் குளத்தில் குளிக்கும் படங்களை பார்த்திருப்பீர்கள் தானே. அது போல் ஏதாவது காட்சிகளை ஒளிப்படமாக வெளியிட்டால் தான் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆறுதலடைவார்கள்.

யோவ் குறுக்ஸ் :lol::):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.