Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் விஞ்ஞானத்தில் கலாநிதி ஆராய்ச்சிப் பட்டம் பெற என்ன செய்ய வேண்டும்..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மாணவர்கள்.. விஞ்ஞான.. இளநிலை.. முதுநிலை பட்டங்கள்.. பட்டப்பின் படிப்பு டிப்புளோமாக்கள்.. கொண்டவர்கள்.. எந்த வழிமுறைகளைக் கையாண்டு.. விஞ்ஞான கலாநிதிக்கான ஆராய்ச்சிப் பட்டங்களைப் பெற விண்ணப்பிக்க முடியும்..??! விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும் வழிமுறைகள்.. கால எல்லைகள்.. மற்றும் research proposal பற்றிய நடைமுறைகள்.. மேலும் நிதிச் சலுகைகள், ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் பற்றி விபரங்கள் அறியத் தந்தால் எம் தமிழ் சொந்தங்களுக்கு சில நல்ல அடிப்படைகளை வழங்கும்.

எனவே.. கனடாவில் படித்தவர்கள் மற்றும் அங்கு உள்ளவர்கள்.. இது குறித்த விபரங்களை அறிந்தவர்கள்... எம்மோடு பகிர்ந்து கொண்டால் அவை வரவேற்கப்படும்.

நன்றி.

Edited by nedukkalapoovan

கனடா கல்வி நிறுவனங்கள் எவை? எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன். -2010/12/28

சிறந்த கல்வி முறை, அதிக அளவிலான சுகாதாரச் சூழல், குறைந்த அளவிலான குற்றங்கள் மற்றும் தூய்மையான சூழல் ஆகிய காரணங்களால் பலராலும் விரும்பப்படும் நாடாக கனடா விளங்குகிறது. கனடாவில் பள்ளிக் கல்வி வரை இலவசம் தான். கல்வி நிறுவனங்ள் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உள்ளன.

கனடா கல்வி நிறுவனங்கள்

கனடாவின் கல்விச் சூழலில் பல்கலைகழகங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள், வேலைகளுக்கான சிறப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் மொழிப் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் சேர அடிப்படைத் தகுதியாக டோபல் தேர்ச்சி தேவைப்படுகிறது.

பொதுவான கல்வித் தகுதிகள்

* இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2வில் குறைந்த பட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொழில் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு பிளஸ் 2 வரை கணிதத்தைப் படித்திருக்க வேண்டும்.

* பட்ட மேற்படிப்புகளில் 4 ஆண்டுகள்

பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதிலும் குறைந்தது 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஜி.ஆர்.இ., தேர்வில் தகுதி பெற்றிருப்பதும் அவசியம். * பி.எச்டி., ஆய்வுப் படிப்புகளில் சேர பட்டமேற்படிப்பு முடித்திருப்பதும் ஜி.ஆர்.இ., தகுதி பெற்றிருப்பதும் ஏற்கனவே ஆய்வோடு தொடர்புடைய படைப்புகளையும் சேர விரும்பும் பல்கலைகழகத்தில் தர வேண்டும்.

கனடா பட்டப்படிப்புக்கு இவை தான் தேவை

* கனடா பள்ளித் தேர்வுக்கு இணையான கல்வித் தகுதி

* ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் சிறப்புத் திறன்

* சிறந்த பரிந்துரை கடிதங்கள்

* ஜி.மேட் அல்லது ஜி.ஆர்.இயில் அதிக மதிப்பெண்

பொறியியல் படிப்புக்கான தேவை

* கனடா பொறியியல் படிப்புகள் 4 ஆண்டு கால அளவைக் கொண்டவை

* இதில் சேர தகுதி தரும் படிப்பில் 80% அல்லது ஏ கிரேடு பெற்றிருக்க வேண்டும்

* குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்

* டோபல் தேர்வில் 225 முதல் 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டோபலுக்கு பதிலாக சில கல்வி நிறுவனங்கள் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு தகுதியை ஏற்றுக் கொள்கின்றன.

எம்.பி.ஏ., படிப்பில் சேர தேவை

* கனடா எம்.பி.ஏ.,வை முழு நேர நேரடி கல்வியாகவும், பகுதி நேர கல்வியாகவும், தொலைதூர கல்வியாகவும் குறுகிய கால

கல்வியாகவும் படிக்கலாம்.

* கல்வித் தகுதியில் குறைந்தது 70% பெற்றிருக்க வேண்டும்.

* ஜிமேட் தேர்வில் 500 முதல் 600க்குள் பெற்றிருக்க வேண்டும்

* டோபல் தேர்வில் 225 முதல் 300 பெற்று தேர்ச்சி அல்லது இதற்கு சமமான ஐ.இ.எல்.டி.எஸ். தகுதி.

* விண்ணப்பிப்பவரின் தனித் திறன்,ஆளுமைத் திறன், கடந்த கால சிறப்புச் சாதனைகள் மற்றும் கல்வித் திறன் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் சேர

* கல்வித் தகுதியில் குறைந்தது 75%பெற்றிருக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* நுழைவுத் தேர்விலும் தகுதி பெற வேண்டும்.

கனடாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள்

* வாட்டர்லூ பல்கலைக்கழகம்

* டொரண்டோ பல்கலைக்கழகம்

* மெக்கில் பல்கலைக்கழகம்

* சைமன் பிரேசர் பல்கலைக்கழகம்

* கார்லடன் பல்கலைக்கழகம்

* மாண்ட்ரீல் பல்கலைக்கழகம்

* குவீன்ஸ் பல்கலைக்கழகம்

* பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம்

* கன்கார்டியா பல்கலைக்கழகம்

* ஆல்பர்டா பல்கலைக்கழகம்

http://kalvimalar.di...at=10&q=General

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா. :)

  • கருத்துக்கள உறவுகள்

அய் நெடுக் அண்ணா அப்போ கனடா வரப்போறார்... :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய் நெடுக் அண்ணா அப்போ கனடா வரப்போறார்... :lol::lol:

கனடா வந்து படிக்க நான் எப்பவோ முயன்று.. அனுமதியும் கிடைச்சது. York மற்றும் McMaster

இவை இரண்டுக்கும் கிடைச்சும்.. நான் இங்கிலாந்துக்குத் தான் வரனும் என்றிருந்திருக்குது.

இதை நான் எனக்காகக் கேட்கவில்லை. பொதுவாகப் பயன்பெறும் என்றே கேட்டுள்ளேன். கனடாவில் இளமானிக் கற்கை நெறிகள் பற்றி ஓரளவுக்கு அறிஞ்சிருக்கிறன். ஆனால் ஆராய்ச்சிப் பட்ட அனுமதி முறைகள் வேறானவை என்பதால் தான் இங்கு இந்த வினாவைத் தொடுத்துள்ளேன்.

மற்றும்படி கனடா வை வந்து பார்க்க.. அங்குள்ள எங்களின்.. விட்ட தொட்ட தொடர்புகளை சந்திக்க விருப்பம் தான். இருந்தாலும்..அதற்கான சந்தர்ப்பத்தை இன்றைய சூழல் வழங்காது. :)

புலம்பெயர் நாடுகளில் இருந்தபடியே மாணவர்கள் விரிவுரையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.

சில பயனுள்ள தளங்கள்:

என்னென்ன வகையான பாடங்கள் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் என்ற தகவல்.

http://www.gradschoo...etype=Doctorate

http://www.canadian-...-Education.html

பல பல்கலைக்கழகங்களும் நிறைய மானிய/பண உதவிகளை கொண்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து படிக்க முயலலாம்.

Edited by akootha

1. கனடாவில் பட்டப்பின் படிப்பு முதுமாணி, அல்லது கலாநிதி பட்டப்படிப்பிற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பொது குறிப்பாக சர்வதேச/ கனேடியர் அல்லாத மாணவர்கள் பல்கலைகழக கற்கையை ஆரம்பிப்பதற்கு குறைந்தது 9 மாதங்களுக்கு முன் அனுமதிக்கான விண்ணப்ப படிவங்களை சமர்பிக்க வேண்டும்.

2. பெரும்பாலான பல்கலை கழகங்களில் அனுமதி விண்ணப்பத்திற்கு பணம் அறவிடுவார்கள்.

3. ஐக்கிய அமேரிக்கா , அவுஸ்திரேலிய, இங்கிலாந்து போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் முதுமாணி பட்டம் பெற்றால் ஆங்கில தகமை தேர்வுகள் தேவையில்லை. மற்றைய நாடுகளில் இருந்து கலாநிதி பட்ட கற்கைக்கு வருபவர்களுக்கு ஆங்கில தகமை தேர்வு (IELTS/TOFEL) சான்றிதழ் தேவை.

4. அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முன்னர் எந்த பல்கலை கழகத்துக்கு அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த பல்கலை கழக அனுமதி விதிகளை வசிப்பதும், குறிப்பிட்ட பாடத்தை கற்பிக்கும் துறையினது (department) இணைய தளத்துக்கு சென்று அங்குள்ள பேராசிரியர்களின் ஆரய்ச்சி பின்புலங்களை ஒரு முறை பார்ப்பதும் பயன் தரும்.

5. பல்கலை கழகத்தில் உங்கள் பாடப்பகுதியில் உள்ள பேராசிரியர்களுக்கு/ ருக்கு உங்களுக்கு கலாநிதி/ முதுமாணி கற்கையில் உள்ள ஆர்வத்தை தெரிவித்து, சுருக்கமான சுயவிபர கோவையுடன் (resume) ஒரு மின்னஞ்சல் அனுப்பி அவர்களின் சாதகமான பதிலின் பின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அல்லது பூர்த்தி செய்யவது பயன் மிக்கது.

இதனால், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்பதை ஓரளவு உறுதிபடுத்தி கொண்டபின் (இறுதி முடிவை எடுப்பது பட்ட பின்படிப்புக்களுக்கான பீடம் -Graduate studies என்றாலும், ஒரு பேராசிரியர் உங்களை மாணவனாக/ மாணவியாக ஏற்றுகொள்ள இருக்கிறார் என்பது விண்ணப்ப அனுமதியில் தேவையற்ற தாமத்தை குறைக்கும்) விண்ணப்பத்தை அனுப்புவதால் பணச்செலவை குறைக்கலாம் (நீங்கள் அனுமதி விண்ணப்பத்துக்கு செலுத்தும் பணம்).

5. பேராசிரியர்களுடன் தொடபு கொள்வதனால் மேலும் ஒரு நன்மை பேராசிரியாரிடம் இருந்து ஆராச்சி உதவி பணம் கிடைக்குமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

6. பொதுவாக கனேடிய பல்கலைகழகங்களில் முதுமாணி/ கலாநிதி பட்ட கற்கைக்கு இரண்டு வகை நிதி உதவி உண்டு.

a. பலகலை கழக புலமை பரிசில் இது போட்டி அடிப்படியிலானது உதரணத்துக்கு நீங்கள் உங்கள் இளநிலை பட்டப்படிப்பின் கடைசி இரண்டு வருடங்களில்/ முதுமாணி கல்வியில் GPA 3 .9 / 4 க்கு மேல் சராசரி பெற்று இருக்க வேண்டும். சில சந்தர்பங்களில் பல்கலை கழக அனுமதிக்கும், புலமை பரிசிலுக்கும் வெவ்வேறான விண்ணப்பங்கள் இருக்கும். எனவே பலகலை கழக அனுமதிக்கு விண்ணபித்தால் போதும் புலமை பரிசிலுக்கும் அதே விண்ணப்பம் செல்லுபடியாகும் என இருக்க முடியாது.

b. மற்றையது பேராசிரியரது ஆராய்ச்சி உதவி தொகை

7. சில நேரம் பேராசிரியர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வது சிரமமாக இருந்தால் குறித்த பாடத்துறையின் (department) நிர்வாக அலுவலருக்கு உங்கள் மின்னஞ்சலை (+ சுருக்கமான் சுயவிபர கோவை) அனுப்புவது பயன் தரும். நிர்வாக அலுவலர் உங்கள் படப்பரப்புடன் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு அனுப்பி அவர் உங்களை மாணவராக எடுக்க சம்மதிக்கிறார இல்லையா என அறிய தருவார். அதன் பின் விண்ணப்பத்தை அனுப்புவது பயன் தரும்.

8. கலாநிதி பட்டத்துக்கு விண்ணப்பிக்கும பொது research proposal பொதுவாக தேவையில்லை ஆனால் பல்கலை கழகத்தின் புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் பொது சில நேரங்களில் கேட்பார்கள்.

இந்த இணைப்பில் முழுமையான பல்கலைகழக பட்டியலை பெறலாம்.

http://www.aucc.ca/c...ur-universities

இதில் உள்ள எல்லா பல்கலை கழகங்களும் ஆராச்சி பட்டப்பின் படிப்புகளை வழங்கும் என சொல்ல முடியாது.

பட்டப்பின் படிப்புக்கான பல்கலை கழகங்கள்

http://www.canadian-universities.net/Universities/Programs/Graduate-Studies.html

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்களைத் தந்த குளக்காட்டானுக்கும் அகூதாவுக்கும் நன்றி.

இந்த இணைப்பில் முழுமையான பல்கலைகழக பட்டியலை பெறலாம்.

http://www.aucc.ca/canadian-universities/our-universities

இதில் உள்ள எல்லா பல்கலை கழகங்களும் ஆராச்சி பட்டப்பின் படிப்புகளை வழங்கும் என சொல்ல முடியாது.

வெற்றிகரமாக படிக்க பின்னர் அதற்கேற்ப நல்ல வேலை கிடைக்க எல்லாவறிற்கும் மேலாக நல்ல

ஒரு வலைத்தொடர்புகள் தேவை. உங்களுக்கு என்ன தெரியும் என்பதை விட உங்களுக்கு யாரைத்தெரியும் என்பதே ( It is not what you know, whom you know) பல இடங்களில் கை கொடுக்கும்.

எனவே இவ்வாறு படிக்க விரும்புவர்கள் நாலு பேருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வளர்க்கவேண்டும்.

அதேவேளை கனடாவில் பொதுவாக மொன்றியாலில் உள்ள (க்யூபெக் - பிரெஞ்சு மாநிலம், இரு மொழியிலும் கற்கலாம்) மக்கில்லில் எந்தப்பாடமும் படிக்கலாம். சர்வதேச புகழ் பூத்தது.

அதேவேளை இந்த மாநிலத்தில் கட்டணம் ஒப்பீட்டளவில் மலிவானது. காரணம் இந்த மாநில அரசு பலத்த மானியத்தை வழங்குவது.

எனவே பிரெஞ்சு தெரிந்த எம்மவர்கள் இந்த மாநிலத்தில் படிக்க நிறைய வசதிகள் உண்டு.

க்யூபெக் மாநிலம் தனக்கென சில குடிவரவு கொள்கைகளை கொண்டது. மத்திய அரசின் கொள்கையை விட இது பொதுவாக இளக்கம் கூடியது. ஆனால், பிரெஞ்சு மொழி கட்டாயம் தெரிய வேண்டும்.

அதேவேளை ஒன்ராரோயோ மாநிலத்தில் உள்ள கனடாவில் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள ஒட்டாவோ பல்கலைக்கழகத்தில் இரு மொழியிலும் கற்கலாம்.

Edited by akootha

கனடாவின் மிகப்பெரிய மாநிலமான ஒன்ராறியோவில் பல பல்கலைக்கழங்கள் உள்ளன. இதில் வாட்டர்லூவில் உள்ள பல்கலைக்கழகம் பொறியியல் துறையில் வடஅமெரிக்காவில் பெயர்பெற்றது. இதில் கல்விகற்ற பலரையும் கூகிள், மைக்ரோசொப்ட், இன்ரெல் போன்ற நிறுவனங்கள் 'விழுங்கிவிடும்'.

நிறையவே இது சம்பந்தமான ஆராய்சிகளுக்கு பணமும் கிடைக்கும். எனவே இந்த இலத்திரனியல்/ கணணி பொறியியல் துறைக்கு இது வளமானது.

Edited by akootha

ஆனால் மலிவாக இடியப்பமும் சொதியும் சாப்பிட்டு ஊர்போல வாழ டொராண்டோவில் கற்கலாம். இங்கே புகழ்பூத்த யூனிவெர்சிட்டி ஒப் டொராண்டோ உள்ளது. அதைவிட, யோர்க் யூனிவெர்சிட்டி மற்றும் ரையர்சன் யூனிவெர்சிட்டி உள்ளன.

மருத்துவத்துறையில்/உயிரியல்துறையில் யூனிவெர்சிட்டி ஒப் டொராண்டோ உலகப்புகழ் பெற்றது. மிகவும் வசதி படைத்த பல்கலைக்கழகம் இது.

யோர்க் யூனிவெர்சிட்டி முகாமைத்துறை கல்விக்கு பெயர்பெற்றது.

கனடாவில் உள்ள மற்றைய மாநிலங்களில் கூட படிக்கலாம்.

மேற்குப்புறமாக பசுபிக் கடலோர மாநிலமான பிரிட்டிஸ் கொலம்பியாவில் சைமன் பிரேசர் மற்றும் யுனிவெர்சிட்டி ஒப் பிரிட்டிஸ் கொலம்பியா உள்ளன. இந்த மாநிலத்தில் குளிர் குறைவு.

கிழக்குப்புறமாக அட்லாண்டிக் கடலோர மாநிலங்களில் மீன்'கடல் சம்பந்தப்பட்ட துறைகளை நியூ பவுந்தலாண்டின் மெமோரியல் பல்கலைக்கழகத்தில் (இங்கு சகல துறைகளும் உள்ளன) இல்லை நோவ

ச்கோசியாவின் பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்.

கனடாவின் விவசாய மாநிலங்களான சச்காட்ச்சுவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் கூட உயர்கல்வி கற்கலாம். சச்காட்ச்சுவான் மாநிலம் உலகின் ஒரு முக்கிய கணிமன் தாதுப்பொருளை அதிகம் கொண்டது - பொர்ராஸ். இதனால் இந்த மாநிலம் ஒரு அசாதாரண பொருளாதார வளர்ச்சியை கண்டுவருகின்றது. இந்த கனிமம் உரத்திற்கு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

அத்துடன் கனடாவின் சவூதி அரேபியா என கூறப்படும் அல்பேட்டா மாநிலம் கனடாவின் செல்வந்த மாநிலம். இங்கேயும் பல சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.