Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suicide.jpg

பத்தினிகளும்

பதிவிரதைகளும்

புராணங்களில்...

பால பாடங்களில்...

பக்கம் பக்கமாய்

படித்த மண்ணில்

படி தாண்டிய

பத்தினிகளும்

மாதவிகளும்

பெருகி விட்ட நிலை..!

மாங்கல்யம் இன்றி

மண மேடையின்றி

கன்னிகள் வாழ்வு...!

விலாசமின்றிய

விந்துகளின்

சேமிப்பிடங்களாய்

அவர் தம் தேகம் இன்று..!

சராசரி

பாலியல் அறிவு

கூடவா இல்லை...

ஆண்டு ஒன்பதில்

கற்றது கூடவா

நினைவில் இல்லை....

தனி மனித

ஒழுக்கம் என்ன

பல்கலைக்கழகப் பாடமா

வாத்தியார் கற்றுத்தர..?!

முளைக்க முதல்

பொத்திப் பிடிக்கும் கூட்டம்

இன்று

சந்தி தோறும்

முந்தி விரித்துக் கிடக்கிறது..

ஏனிந்த அவலம்..???!

பெண்கள்...

புலிகளாய் வாழ்ந்த மண்ணில்

வீரம் விதைத்து

வீழ்ந்த இடத்தில்

இன்று

அந்நியரின்

அயோக்கியரின்

அனாதை

விந்துகளின்

அநியாயப் பாய்ச்சலில்

சரிகிறார்

மங்கையர்..!

தூக்கிலும்

கிணற்றிலும்

சாவுகள்..!

இது என்ன

இன அழிப்பா

சுய இருப்பழிப்பா..

சிந்தியுங்கள்..!

முதிர் கன்னிகளாய்

இளம் கன்னிகளாய்

பள்ளிச் சிறுமிகளாய்

பேரிளம் பெண்களாய்

எல்லா நிலையிலும்

அவர் வாழ்வு சீரழிவு..!

அன்று

அண்ணன் வழியில்

அடைந்த ஒழுக்கம்

இன்று

அந்நியர் வழியில்

அடைகிறது சாவு..!

இப்படியே போனால்

புவிதனில்..

எங்கே வாழும்

எம் தமிழினம்..???!

முடிவு தான்

என்ன..????!

சத்தமின்றி

யுத்தமின்றி

தமிழினம்

தானே அழியும்..!

=============================

யாழில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

வெள்ளிக்கிழமை, நவம்பர் 23, 2012

suicide.jpg

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளம் பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் வீடொன்றிலிருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுழிபுரம் திக்கரை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மஞ்சுளா (32) என்ற திருமணமாகாத இளம்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்

தான் கரப்பிணியாக உள்ள விடயம் மருத்துவ சோதனையின் போது தெரிய வந்ததனையடுத்தே இவர் தற்கொலை செய்திருக்க கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஈழநாதம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதற்காக என்ன செய்கிறீர்கள் என்று உங்களைக் கேட்டால் விடை கிடைக்கலாம். மற்றப்படி ஏட்டுச் சுரக்காய் தான். நல்ல ஆதங்கத்தில் எழுதியுள்ளீர்கள். தனி மனிதனால் இதற்க்கு ஒன்றுமே செய்ய முடியாது. அடக்குமுறைக்கு உள்ளாவோரே முதலில் எதிர்க்கவேண்டும். அதன் பின் தான் மற்றவர் ஏதும் செய்யலாம். தமிழ்ப் பெண்களின் தலைவிதி வேறு என்ன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஊரில் உள்ள கல்விச் சமூகம் விழிக்க வேண்டும். அது உறங்கிக் கிடக்கிறது. மாணவ சமூகம் எவ்வளவோ சாதிக்கலாம். அது சாராயத்தில்.. பாலியல் போதையில் கிடக்கிறது. எம் பெண்களைக் காக்க வேண்டிய கடமை என்பது எல்லாத் தமிழனையும் சார்ந்தது..!

பெண்களை இரண்டு வழியில் காப்பாற்றலாம்.

1. அவர்களின் சுயபாதுகாப்பை.. அறிவை உயர்வித்துக் கொள்வதன் மூலம்.

2. சமூகம் அவர்களை தனது பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வருவதன் மூலம்.

இந்தியப் படைகளின் காலத்தில்.. இதே போன்ற பிரச்சனை எழுந்த போது.. எப்படி அதனை எதிர்கொண்டமோ.. அதனை இன்று செய்ய வேண்டிய நிலைக்கு எதிரிகளும் துரோகிகளும் எம்மைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இன்று சர்வதேச மயப்பட்டு நின்று கொண்டும் அறியாமையில்.. நாமும்.. கல்விச் சமூகமும்... அநியாயங்களை இட்டு பாராமுகமாக உள்ளமையே எம் பெண்களின் அவல நிலை பெருக முக்கிய காரணம்..!

பெண்கள் ஒரு இனத்தின் இருப்புக்கான முக்கிய உயிர்க் கூறுகள். அவர்களை பாதுகாக்க வேண்டியது அந்த இனத்தின் அவசியம். இன்றேல்..யுத்தமின்றி.. துப்பாக்கியின்றி.. தமிழினம் அழிவது துரிதமாக நிகழும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் ஊரில் உள்ளவர்களுக்கும் நிறையவே சுதந்திரம் கூடி விட்டது என்றும் சொல்லலாம்..முன்னர் இப்படி எல்லாம் நடப்பதற்கு சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கலாம்,இருந்திருக்கிறது..... காரணம் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வெளிக்கிட்டாலோ அல்லது அல்லது பிறரோடு பேசும் வாய்ப்புக்களோ,பழகும் வாய்ப்புக்களோ மிக,மிக குறைவாகத் தான் இருந்திருக்கிது..இப்போ அப்படி என்று சொல்லி விட முடியாது..ஒவ்வொருவர் கைகளிலும் தொலைபேசிகள் அகைளும் தான் தவறுகள் இளைப்பதற்கு காரணமாக இருக்கிறன்றன..வீட்டில் உள்ள பெரியவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் நிறையவே பிள்ளைகளுக்கு உதவியாளர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்..பெற்றோர் நன்மை தீமைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காது விட்டாலும் வீட்டில் இருந்திருக்க கூடிய அம்மம்மா,தாத்தா,பாட்டி,என்று இருந்தவர்கள் நிறையவே பெண்களுக்கு பாதுகாவலர்களாக இருந்திருக்கிறார்கள்..பொழுதாகி விட்டால் வெளியில் தலையைக் காட்டினாலேயே ஒவ்வொரு சாத்திர,சம்பிரதாயங்களைச் சொல்லி,சொல்லியே பெண்களை பாதுகாத்து வந்தார்கள்...ஆனால் தற்போதைய காலத்தில் அப்படிப் பட்ட வயது வந்தவர்கள் எல்லா வீடுகளிலும் இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது....இருந்தாலும் எல்லாரும் சொல்வதை பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் கேட்டு நடப்பார்கள் என்று நம்ப முடியாது.....இவை எல்லாவற்றையும் விட எத்தனை ஆயிரம் உறவுகளை யுத்தம்,சுனாமி என்பன எடுத்துட்டு போனது நாம் அறியாத விடையங்களா..அவற்றினாலும் தான் அங்குள்ள இளம் சமுதாயத்தினர் இப்படியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அநாகரீகமான வார்த்தைக் கையாளல்!

சொந்தச் சகோதரியையே, எள்ளி நகையாடும் புலத்துத் தமிழனின் பார்வை! :wub:

இந்தப் பெண்ணின் வாழ்வுக்கு, அவளே முழுப்பொறுப்பு!

என்னைக் கேட்டால், அவள் ஒரு கோழை! சமூகத்தை, நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லாத கோழை!

அவளைக் கர்ப்பமாகியவனும் ஒரு கோழை! அவ்வளவு தான்!

முழுத் தமிழ்ப் பெண்களும், முந்தானை விரிப்பது போல, உங்கள் கவிதை போகின்றது, நெடுக்ஸ்!

விந்து.. முந்தி இவை அநாகரிமான வார்த்தைகளா..???!

சொந்தச் சகோதரி என்றாலும் இப்படியான தவறுகளை தனிமனித ஒழுக்கம் மூலமும் தடுக்கலாம். சமூகப் பாதுகாப்பு மூலமும் தடுக்கலாம். ஏன் அதை அவர்கள் செய்கிறார்கள் இல்லை..??!

அதேநேரம் வற்புறுத்தல்களால் இப்படி தவறுகள் நிகழ்கிறது என்றால் தவறின் பின் சாகத் துணிபவர்கள்.. தவறு நிகழ முன்னரே.. அதனை வெளி உலகிற்குச் சொல்லி பாதுகாப்புத் தேடலாம் இல்லையா..??! இன்னும் அவர்கள் சமூகத்தோடு தானே வாழ்கின்றனர்..??!

இது அந்தப் பெண்ணின் கோழைத்தனம் மட்டுமல்ல. போரின் பின்னால் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும்.. பழைய கிழவி கதவத் திறவடி.. என்ற கணக்கான.. எமது சமூகக் கட்டமைப்பின் பலவீனமும் கூட. அதுவே இன்று எம்மை அழிக்கவும் வகை செய்கிறது. இது மாற்றப்படனும் என்றால் கல்விச் சமூகம் சிந்திக்கனும் செயற்படனும். அவர்களை நோக்கியும் சொல்லப்படும் செய்தி தான் இது. அவர்களின் இழிநிலையும் தான்.. எம் சமூகத்தின் பிறழ்வுக்கு ஒரு காரணம்.

எமது சமூகவியல் பீடங்களும்.. சமூகவியல் அறிஞர்களும் சிந்தனையற்றவர்களாக...???! இதுவும் எம் பெண்களின் இப்படியான மற்றும் இன்னும் பல அழிவுக்குக் காரணம். எம் பெண்கள்..எதிரியால்.. துரோகிகளால் இலகுவாக இலக்கு வைக்கப்பட.. விலைபேசப்பட எம் சமூகமும் ஒரு காரணம்..! விதவைகள்.. கன்னிகள்.. தனித்துவிடப்பட்ட பெண்கள்.. இவர்களின் நலன்காக்க வேண்டிய சமூகம்.. அவர்களை வீதியில் விட்டு விடுப்புப் பார்ப்பது மட்டும் நாகரிகமாகவா உள்ளது..??!

பெண்களைப் போராளியாக்கியதற்கு அழுதவர்கள்.. நீலிக்கண்ணீர் வடித்தவர்கள்.. ராதிகா குமாரசாமிகள் ஏன் இந்த அநியாயங்களைக் கண்டு மெளனித்து நிற்கிறார்கள். அவர்கள் அன்று செம்மணியில் நிகழ்ந்த கிருசாந்தி சாவிலும் அழவில்லை.. இன்றும் இந்த அரச.. மற்றும் இதர சமூக அநியாயங்களைத் தடுக்க குரலும் தரவில்லை. அதே நிலையில் தான் யாழ் பல்கலைக்கழகமும் உள்ளது.. கிழக்குப் பல்கலைக்கழகமும் உள்ளது. தமிழர் கல்விச் சமூகமும் உள்ளது. எங்கே அந்த புத்திமான்கள்..???! அவர்களால் அவர்களின் பெண்கள் சமூகத்தை வழிநடத்த முடியல்லைன்னா.. என்னத்தை சாதிக்கப் போகிறார்கள்..புத்தகத்தை வைச்சுப் படிச்சு...???! அவர்களின் புத்தகப்படிப்பின் நோக்கம் என்ன..???! பதவியா..???! பணமா...???! சமூகமா..???!

அதனை அது உணர கொஞ்சம் காத்திரமாகவே தான் சொல்ல வேண்டி இருக்குது. சாந்தமாக வேதம் ஓதி.. எதுவும் நிகழப் போறதில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

அதிகமான ஆக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவும்,கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் சுத்த மஞ்சல் பத்திரிகை உத்தியில் போடப்பட்ட தலையங்கமும்,எழுதப்பட்ட கவிதையும் இது.அதிர்வு,பரபரப்பு போன்ற ஊடக விபச்சாரிகள் செய்யும் எழுத்து விபச்சார உத்திதான் இங்கும்கையாளப்பட்டிருக்கு. சொந்த சகோதரியின் புகழ்பாடும் படைப்பு.வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் இம்மாதிரி விரசமான எழுத்துக்களை படையுங்கள்.

[size=4]எனக்கென்னவோ நாம் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பது போன்ற உணர்வு.[/size]

[size=1][size=4]அதாவது இந்த தற்கொலை, சமூகச்சீரழிவு, முன்னாள் போராளிகள் நிலை, முதியவர் நிலை .... என அடுக்கி கொண்டே போகலாம். [/size][/size]

[size=1][size=4]அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் உதவி இந்த பிரச்சனைகளுக்கு முடிவு காண்பது என்பது பகல் கனவு. [/size][/size]

[size=1][size=4]சரி என்ன தான் வழி? அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவிகளை செய்தவண்ணம் ஒரு நிரந்த அரசியல் தீர்விற்கு உதவவேண்டும். [/size][/size]

இது தான் நிஜ வாழ்வு, அகூதா!

ஒரு நிரந்தர அரசியல் தீர்வு, சாதாரண வாழ்வை மக்கள் வாழ அனுமதித்தல், இவை தான் இப்படியான பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்!

முதலில், இராணுவம் முற்றாக அகற்றப்படல் வேண்டும்! இராணுவத்தின் துணைக்குழுக்களும், அகற்றப்பட வேண்டும்!

அடுத்ததாக, எமது தன்னிரக்க உணர்வைத் தூண்டுவதன் மூலம், எம்மீது 'உளவியல் போராட்டம்' நடத்தும், ஊடகங்களை, அடையாளம் கண்டு, அவற்றைப் புறக்கணிக்க, நாம் எம்மைப் பழக்கப் படுத்திக் கொள்ளவும் வேண்டும்!

திருமுருகனின், அண்மைக்கால பேச்சுக்களில், இவை தெளிவுபடுத்தப் படுகின்றன!

'இந்து' என்ற பத்திரிகையை வைத்து, இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை, எவ்வாறு இருட்டுக்குள், வைத்திருக்கப் படுகின்றது என்பதை, மிகவும் தெளிவு படுத்துகின்றார்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து புங்கை அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனக்கென்னவோ நாம் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பது போன்ற உணர்வு.[/size]

[size=1][size=4]அதாவது இந்த தற்கொலை, சமூகச்சீரழிவு, முன்னாள் போராளிகள் நிலை, முதியவர் நிலை .... என அடுக்கி கொண்டே போகலாம். [/size][/size]

[size=1][size=4]அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் உதவி இந்த பிரச்சனைகளுக்கு முடிவு காண்பது என்பது பகல் கனவு. [/size][/size]

[size=1][size=4]சரி என்ன தான் வழி? அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவிகளை செய்தவண்ணம் ஒரு நிரந்த அரசியல் தீர்விற்கு உதவவேண்டும். [/size][/size]

சில சமூகப் பிரச்சனைகளுக்கு சமூகக் காரணிகளும் அரசியல் காரணிகளும் உடந்தை. இப்படியான சமூகப் பிரச்சனைகளுக்கும் அது பொருந்தும்.

நீங்கள் சொல்வது போல.. நிச்சயமாக நிரந்தர அரசியல் தீர்வு என்பது இப்படியான பிரச்சனைகளின் பின்னால் உள்ள அரசியல்காரணிகளை குறைக்கும் அல்லது இல்லாமல் செய்யும். ஆனால் அதேவேளை எமது சமூகத்துக்குள் புரையோடிப் போயிருந்த.. புலிகளைக் கண்டு அமுங்கிப் போயிருந்த விடயங்கள் அவற்றையும் களைய வேண்டும். அதனை அறிவுசார் சமூகம் தான் செய்ய முடியும். ஆனால் அந்த அறிவுசார் சமூகமே அறிவுக்கும் தனது சமூகத்திற்கும் தொடர்பில்லை என்று இருக்கும் போது.. எப்படி நிலைமைகள் முன்னேறும்.

எமது சமூகக் கட்டமைப்பில் மனிதர்கள் மத்தியில் நிறைய உளவியல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களும் நிரந்தர அரசியல் தீர்வுக்கு சமாந்திரமாக வர வேண்டும். இன்றேல் இப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்வதில் எமது சமூகம் இடர்களை சந்தித்துக் கொண்டே தான் இருக்கும். மேலும் நிரந்தர அரசியல் தீர்வு வரை காத்திருக்க முற்பட்டால்.. சமூகக் காரணிகள் எம்மை விழுங்கிவிடும் அளவிற்கு விஸ்வரூபம் எடுக்கச் செய்யப்படலாம். அந்த வகையில்.. அரசியல் காரணிகளின் தாக்கத்தை குறைக்க சமூகக் காரணிகளின் தாக்கத்தை தடுத்து நிறுத்த நாம் முயற்சிக்க வேண்டும்...!

இங்கு இரண்டுமே நிகழவில்லை. நிரந்தர அரசியல் தீர்வுக்கும் முன்னெடுப்புக்கள் இல்லை. போரின் பின்னான சமூகத்திற்கான சமூக வழிகாட்டல்களும் நலன் இருப்புக்களும் சொந்த சமூகத்தால் கூட சரிவர முன்னெடுக்கப்படவில்லை. இவை தான் இந்த அப்பாவிகளின் அவல வாழ்விற்கு.. அவர்களின் வாழ்க்கை திக்குத் திசையின்றி பயணிக்க ஒரு காரணமாகவும் உள்ளது.

சமூகத்தை பிரபாகரன் மட்டும் தான் தன் கருத்தியலால் திருத்த முடியும் என்றில்லை. அவரால் முடிந்ததில் குறைந்ததையாவது.. கல்விச் சமூகமும் செய்யலாம். புலம்பெயர் கல்விச் சமூகமும் இதில் உதவலாம்..! ஆனால் அவை.. இவை பற்றி குறைந்தளவே செய்ய முயற்சிக்கின்றன.. செய்கின்றன..! இதில் தன்னிச்சையான சமூக அக்கறை நலன் மக்கள் மத்தியில் பிறப்பெடுத்தால் அன்றி மாற்றங்களும் அவலங்களுக்கான தீர்வும் உடனடிச் சாத்தியமற்ற ஒன்றாகவே எம் சமூகத்தில் இருக்கப் போகிறது. அது எம் இனத்தின் இருப்புக்கு இன்றைய காலக் கட்டத்தில் ஆபத்தானதும் கூட..!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளம் பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் வீடொன்றிலிருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுழிபுரம் திக்கரை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மஞ்சுளா (32) என்ற திருமணமாகாத இளம்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்

தான் கரப்பிணியாக உள்ள விடயம் மருத்துவ சோதனையின் போது தெரிய வந்ததனையடுத்தே இவர் தற்கொலை செய்திருக்க கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பெண் கனடாவில் இருந்திருந்தால் தற்கொலை செய்திருக்கமாட்டார். பிள்ளையை பெத்து பிள்ளையுடன் வாழ்ந்திருப்பார். இது ஒரு காட்டுமிராண்டிச் சமூகத்தின் சமூகக் கொலை. கலியாணம் கட்டக்குமுதல் கற்பமானால் சாகவேண்டும் என்ற விதியை யார்போட்டது? அப்பன் பெயர் தெரியாட்டி என்ன தாயின் பெயர் தெரிந்தால் போதாதா? தனிமனித ஒழுக்கத்தில் இருந்து கலாச்சராம் பண்பாடு எல்லாத்தையும் கவட்டுக்குள்தான் ஒளித்து வைத்திருக்கின்றோம். விளக்குப் பிடிப்பது ஒன்றே சமூகத்துக்கான பிரதான பணி.

ஒரு ஐந்து நிமிட பாலுறவில்தான் பிள்ளை உருவாகின்றது அதற்கப்பால் வருடக்கணக்கான உடல் உழைப்பில்தான் அப்பிள்ளை வளர்க்கப்படுகின்றது. அந்த ஐந்து நிமிடத்தை தாண்டி எம்மால் வரமுடியவில்லை. அதன் பின்னரான உழைப்பிற்கு அர்த்தம் கொடுக்க முடியவில்லை. எமது சமூகத்திடம் இருக்கும் சைகோ வியாதிக்கு ஒழுக்கம் என்று பெயர்.

யாரொரு பெண் இப்படி கற்பமானால் அவளை நையப்புடைத்துச் சாகடிக்காமல் அரவணைத்து வாழவையுங்கள்.

உங்கள் கருத்து கனடாவிற்குப் பொருந்தும். ஈழத்தின் இன்றைய சூழலுக்குப் பொருந்துமா என்ற யதார்த்தத்தை நீங்கள் காணத்தவறுகிறீர்கள். இன்றைய பிரச்சனைக்கு.. நாளைய தீர்ப்பின் பின் முடிவு கட்டலாம் என்பதும் கூட பிரச்சனைகள் தீர்வின்றித் தொடர ஒரு காரணம்.

எமது சமூகக் கட்டமைப்பில் 35 வருட சமூக அரசியல் விடுதலைப் போராட்டம் நடத்திய மக்கள் என்ற வகையில் சில மாற்றங்கள் உணரப்பட்டிருந்தாலும்.. இன்னும் அவை மக்களால் தற்றுணிவாக அமுலாக்கப்படவில்லை..! அந்த அமுலாக்கத்திற்கான காலக் காத்திருப்பு இன்று எதிரிகளாலும் துரோகிகளாலும் நீட்டப்பட்டுள்ளதும் உண்மை.

இந்தத் தகாத காலத்தை எப்படி பாதிப்பின்றிக் கழிப்பது என்பது பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும். எமக்குள் உள்ள பலவீனங்களில் இருந்து முதலில் பாதிப்புக்களை குறைத்துக் கொண்டு தான் பலவீனங்களைப் போக்க முயல வேண்டும். அல்லது இரண்டையும் சமாந்திரமாகச் செய்ய வேண்டும். கனடாவை.. பிரிட்டனை பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தால் எதுவும் ஆகாது. அவர்கள் செல்வந்த நாடுகள். இன்னொரு மக்களிடம் வரி வாங்கி அடுத்த மக்களிடம் கொடுப்பவர்கள். நாமோ அடிப்படை வரி செலுத்தக் கூட கடிந்து கொள்ளும் கூட்டம். இந்த நிலையில்.. கனடா பிரிட்டன் என்று கனவு காணலாமே தவிர.. எமது சக்திக்குள் எமக்குள் இன்றுள்ள பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை இனங்கண்டு செயல்படுத்த முடியாது. அதற்கு நாம் எமது பலம்.. பலவீனங்களை.. வளம்.. பயன்பாடுகளை உணர்த்து செயற்படனும்.

அதனை செய்ய வரிப்பணம் அவசியமற்ற தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்துவது அவசியமாகிறது. பலவீனமான ஒரு சமூகம்.. பலமான ஒரு கருதுகோளில் நின்றாவது தன்னைப் பலப்படுத்திக் கொண்டு அப்புறம் கனடா சமூகத்திற்கு ஒப்ப முன்னேறிப் போகட்டும் அது வரவேற்கப்படலாம். ஆனால் பலவீனமான சமூகம் பாழ் குழியில் விழுந்து கொண்டு கனடாச் சமூகம் பற்றி கனவு கண்டு கொண்டிருப்பது பிரச்சனைக்குத் தீர்வாகாது. தூக்குக் கயிற்றிற்கும்.. கிணறுகளுக்குமே பாரமாக முடியும்.

மேலும் இன்று வழித்தவறிப் போறவங்களை வழிநடத்த யாருமற்ற நிலை. அந்த நிலையையும் மாற்றனும். அதற்கு கனடாவை பிரிட்டனை உதாரணமாக்கினால் மட்டும் போதாது. களத்தில் நிஜத்தில் அதற்கான செயற்பாடுகள் நிகழலும். நிகழ்ந்தா இப்படியான மரணச் செய்திகள் தான் எம்மைச் சேருமா..???!

எவரும் கனவு காணலாம். ஆனால் நிஜம் கனவை விட அதிக தூரத்தில் இருக்கும்..! நாம் நிஜத்துக்குள் இருந்து தான் கனவை நனவாக்க பாடுபடனும்..! எப்பவும் கனவுக்குள் இருந்து நிஜத்தை தேடிக் கொண்டிருக்க முடியாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கமும் ஒழுக்கக்கேடும் எப்போதும் இருப்பவைதான். ஆனால் கவிதையில் சொல்லப்படுவதுபோல அந்நியர் மட்டும்தான் தமிழ்ப்பெண்களை துன்புறுத்தவில்லை. நமது தமிழ்ச் சகோதரகள்தான் அதிகம் துன்புறுத்தல் செய்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கமும் ஒழுக்கக்கேடும் எப்போதும் இருப்பவைதான். ஆனால் கவிதையில் சொல்லப்படுவதுபோல அந்நியர் மட்டும்தான் தமிழ்ப்பெண்களை துன்புறுத்தவில்லை. நமது தமிழ்ச் சகோதரகள்தான் அதிகம் துன்புறுத்தல் செய்கின்றனர்.

பெண்கள்...

புலிகளாய் வாழ்ந்த மண்ணில்

வீரம் விதைத்து

வீழ்ந்த இடத்தில்

இன்று

அந்நியரின்

அயோக்கியரின்

அனாதை

விந்துகளின்

அநியாயப் பாய்ச்சலில்

சரிகிறார்

மங்கையர்..!

தூக்கிலும்

கிணற்றிலும்

சாவுகள்..!

அவையும் வருகினம்.. கிருபண்ணா. அவை தானே எதையும் ஆரம்பிச்சு வைக்கிறதே..! :icon_idea:

உண்மையில் இணைக்கப்பட்ட செய்தி அந்த பெண் தான் கர்ப்பமடைந்த செய்தி தெரிந்ததும் தற்கொலை செய்திருக்க கூடும் என்று சந்தேகப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனையே காரணமாக கருதினால்...

அவள் யாராலும் (உதாரணமாக இராணுவத்தால் அல்லது ஆயுத முனையில் ஒட்டுக்குழுக்களால்) பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தால் இது அவள் விட்ட பிழை இல்லை. அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அதனை தடுப்பது கடினம். ஆனால் தற்கொலை முயற்சியை எடுக்காமல் தவிர்த்திருக்கலாம். :(

அல்லது தானாக யாருடனும் தவறு விட்டிருந்தால் அது அவள் பிழை. அதற்கு அவள் அறியாமை கூட ஒரு காரணம். அதை தடுக்க சமூகம் முயற்சி செய்யலாம். அதற்கு உங்கள் இந்த கூற்றும் அதற்கான பதிலும் பொருந்தும்.

மேலும் இன்று வழித்தவறிப் போறவங்களை வழிநடத்த யாருமற்ற நிலை. அந்த நிலையையும் மாற்றனும். அதற்கு கனடாவை பிரிட்டனை உதாரணமாக்கினால் மட்டும் போதாது. களத்தில் நிஜத்தில் அதற்கான செயற்பாடுகள் நிகழலும். நிகழ்ந்தா இப்படியான மரணச் செய்திகள் தான் எம்மைச் சேருமா..???!

முதலில் ஊரில் உள்ள கல்விச் சமூகம் விழிக்க வேண்டும். அது உறங்கிக் கிடக்கிறது. மாணவ சமூகம் எவ்வளவோ சாதிக்கலாம். அது சாராயத்தில்.. பாலியல் போதையில் கிடக்கிறது. எம் பெண்களைக் காக்க வேண்டிய கடமை என்பது எல்லாத் தமிழனையும் சார்ந்தது..!

பெண்களை இரண்டு வழியில் காப்பாற்றலாம்.

1. அவர்களின் சுயபாதுகாப்பை.. அறிவை உயர்வித்துக் கொள்வதன் மூலம்.

2. சமூகம் அவர்களை தனது பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வருவதன் மூலம்.

ஆனால் யார் செயற்படுவார்கள்? சமூகம் இது விடயத்தில் அக்கறைப்படும் என்று நான் நினைக்கவில்லை. தானும் தன்பாடும் என்றே பெரும்பாலானோர் உள்ளார்கள். :( பல்கலைக்கழகங்களில், பாடசாலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி உரியவர்களிடம் கூற வேண்டும். அது கொஞ்சம் நடைமுறை சாத்தியம் கூடியது. :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அவையும் வருகினம்.. கிருபண்ணா. அவை தானே எதையும் ஆரம்பிச்சு வைக்கிறதே..! :icon_idea:

அயோக்கியர்களும் அந்நியர்கள்தான் என்று நினைத்துவிட்டேன். தமிழர்களின் ஒழுக்கசீலர்கள் அதிகம்தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அயோக்கியர்களும் அந்நியர்கள் தான் என்று நினைத்துவிட்டேன். தமிழர்களில் ஒழுக்கசீலர்கள் அதிகம்

தானே.

தமிழர்களில் அநேகர்.. தோற்றத்திற்கு ஒழுக்க சீலர்கள்.. உள்ளுக்க ஒழுக்க சீரழிவாளர்கள்..இவர்களே அயோக்கியர்கள்..! :icon_idea::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இணைக்கப்பட்ட செய்தி அந்த பெண் தான் கர்ப்பமடைந்த செய்தி தெரிந்ததும் தற்கொலை செய்திருக்க கூடும் என்று சந்தேகப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனையே காரணமாக கருதினால்...

அவள் யாராலும் (உதாரணமாக இராணுவத்தால் அல்லது ஆயுத முனையில் ஒட்டுக்குழுக்களால்) பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தால் இது அவள் விட்ட பிழை இல்லை. அரசியல் தீர்வு கிடைக்கும் வரை அதனை தடுப்பது கடினம். ஆனால் தற்கொலை முயற்சியை எடுக்காமல் தவிர்த்திருக்கலாம். :(

அல்லது தானாக யாருடனும் தவறு விட்டிருந்தால் அது அவள் பிழை. அதற்கு அவள் அறியாமை கூட ஒரு காரணம். அதை தடுக்க சமூகம் முயற்சி செய்யலாம். அதற்கு உங்கள் இந்த கூற்றும் அதற்கான பதிலும் பொருந்தும்.

ஆனால் யார் செயற்படுவார்கள்? சமூகம் இது விடயத்தில் அக்கறைப்படும் என்று நான் நினைக்கவில்லை. தானும் தன்பாடும் என்றே பெரும்பாலானோர் உள்ளார்கள். :( பல்கலைக்கழகங்களில், பாடசாலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொள்ளும் படி உரியவர்களிடம் கூற வேண்டும். அது கொஞ்சம் நடைமுறை சாத்தியம் கூடியது. :rolleyes:

இந்தியப் படைகள் காலத்திலும் மக்கள் இந்தியப் படைகளினதும் தேசவிரோத சக்திகளினதும் சமூக விரோதிகளினதும்.. இப்படியான சமூக விரோதச் செயல்களை ஆரம்பத்தில் கண்டும் காணாததும் போல இருந்தனர். பின்னர் அது ஒவ்வொருவர் வீட்டுக் கதவையும் தட்ட முற்பட்ட போது.. மக்கள் விழிப்புக்குழுக்களை அமைத்து.. தம்மை தம் சுற்றத்தை.. பெண் பிள்ளைகளை.. பிள்ளை பிடிக்க வந்தவர்களிடம் இருந்து ஆண் பிள்ளைகளை காப்பாற்ற நிர்பந்திக்கப்பட்டனர். அன்று பள்ளி மாணவர்களாக இருந்த எமக்கும் இவை குறித்து பள்ளியில் சொல்லித் தந்திருந்தார்கள்.

அப்படி ஒரு நிலை இன்றும் அவசியமாகியுள்ளது. வடக்குக் கிழக்கு எங்கனும் மீண்டும் மக்கள் விழிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பெண்களும் முன்னாள் போராளிகளும் போர் துயர் கண்ட நலிந்த மக்களும்... சமூகச் சீரழிவு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மக்களும் மாணவர்களும் சமூகப் பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான தலைமையை கல்விச் சமூகம் ஏற்க வேண்டும். ஏன் இதனை இன்னும் தீர்க்கமான சமூக அக்கறையோடு.. செய்யாமல் இருக்கினம் என்பது புரியவில்லை. விழிப்புக்குழுக்கள் என்பது ஆயுதக் குழுக்கள் அல்ல. சமூக கண்காணிப்பு மற்றும் அறிவூட்டல் அமைப்பு..! :icon_idea:

நன்றி துளசி உங்கள் கருத்துக்கு..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடா நாட்டில் சிறுவர் அதிகரிக்கும் துஸ்பிரயோகங்கள்.

வெள்ளிக்கிழமை, நவம்பர் 23, 2012

Abuse.jpg

யாழ். மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் மட்டும் 9 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் அண்மைக் காலங்களில் குறுகிய நாள்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட அதிகளவான துஷ்பிரயோகச் சம்பவங்களாக இவை பதிவாகியுள்ளன.

.

யாழ்.மாவட்டத்தில் இந்த வார ஆரம்பத்தில் இருந்து அடுத்து வந்த 3 தினங்களில் குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

"உறவினர் முறை உள்ளவர்களால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டவர்கள், காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிப் பாலியல் துஷ்பிரயோகத்துக் குள்ளாக்கப்பட்டவர்கள் மற்றும் இனந்தெரியாதவர்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டவர்கள் ஆகியோரும் இவர்களில் அடங்குவர்.

.

இந்தச் சம்பவங்களுடன் இதுவரையில், யாழ்.மாவட்டத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 100 ஐ அண்மித்துள்ளன'' என்று வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின.

நன்றி: ஈழநாதம்.

சிறுவர் போராளிகளுக்கு ஒட்டுண்ணுக்களை அனுப்பிய ஐநா சிறுவர் அமைப்பான யுனிசெப் இவற்றை கருத்திலும் கண்ணிலும் காட்டாமை குறித்து விளக்கம் தருதல் வேண்டும். ஆனந்த சங்கரிக்கு இதே காரணத்திற்காக விருது என்று விருந்தும் கொடுத்தார்களே..???! :(:rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.