Jump to content

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Placard-Image-150-news.jpg

இலங்கை அரசின் அடக்கு முறையை எதிர்த்து, தமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இம்முயற்சியின் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மதிக்காத இலங்கை நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை, மனித நேயம் கொண்ட எமது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவ்விடயத்தை ஜனநாயக வரைமுறையில் பரப்புரைக்கு உட்படுத்தி இலங்கை அரசிற்கு எதிராக மேலதிக அழுத்தத்தை கொடுக்க முடியும்.

  

இம் முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாக, அமெரிக்கத் தமிழர்களுடன் இணைந்து, இலங்கையில் உற்பத்திசெய்த ஆடையணிகளை வாங்குவதைப் புறக்கணிக்குமாறு கனேடியப் பொதுமக்களை அறிவுறுத்தும் போராட்டத்தின் விபரம் பின்வருமாறு:

இடம்: டண்டாஸ் ஸ்குயர் (DANDAS SQUARE)

நாள்: சனிக்கிழமை டிசெம்பர் 15 2012

நேரம்: 12 மணி முதல் 3 மணி வரை

இப்போராட்டமானது பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. இம் முயற்சிக்கான முழு ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்.

http://www.facebook.com/events/516812715020258/?context=create

கனடியத் தமிழர் தேசிய அவை - தொலைபேசி: 416.830.7703

மின்னஞ்சல்: info@ncctcanada.ca / இணையத்தளம்: www.ncctcanada.ca

 

http://www.seithy.com/breifNews.php?newsID=71867&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

நல்ல விடயம்.

 

ஆனால் முதலில் இந்தப் போராட்டத்தை தமிழ்க் கடைகளுக்கு முன் தான் நடத்த வேண்டும். கனடாவில் தமிழ்க் கடைகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக இலங்கைப் பொருட்களை வைத்து விற்றுக் கொண்டு மற்றவர்களை விற்கக் கூடாது என்று சொல்வது மலினமான விடயம்.

 

 

Link to comment
Share on other sites

கொஞ்சம் கடினம்தான் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும் இதற்க்கு தமிழ் வாடிக்கை ஆளர்களும் ஒத்துழைக்க வேண்டும் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களிற்கு மாற்றீடாக வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

 

ஆனால் முதலில் இந்தப் போராட்டத்தை தமிழ்க் கடைகளுக்கு முன் தான் நடத்த வேண்டும். கனடாவில் தமிழ்க் கடைகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக இலங்கைப் பொருட்களை வைத்து விற்றுக் கொண்டு மற்றவர்களை விற்கக் கூடாது என்று சொல்வது மலினமான விடயம்.

 

இதுவும் ஒரு மலினமான விடயம்தானே  நிழலி

நாம் வாங்கிக்கொண்டு அவரை விற்காதே என்பதும்.

 

எம்மிலிருந்தே மாற்றங்களை  உருவாக்கமுடியும்

 

மற்றவன் மற்றவன்  என்றால் முடிவும்  தீர்வும்  எட்டவே..................

Link to comment
Share on other sites

இதுவும் ஒரு மலினமான விடயம்தானே  நிழலி

நாம் வாங்கிக்கொண்டு அவரை விற்காதே என்பதும்.

 

எம்மிலிருந்தே மாற்றங்களை  உருவாக்கமுடியும்

 

மற்றவன் மற்றவன்  என்றால் முடிவும்  தீர்வும்  எட்டவே..................

 

நாம் என்பதில் நானும் இருப்பதால் சொல்கின்றேன். நான் இலங்கைப் பொருட்கள் எதனையும் இப்போது வாங்குவதில்லை. இங்கு வந்த பின் வல்லாரை, நண்டுப்பெட்டி, கருவப்பிள்ளை என்பன வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்ப அவையும் 6 மாதங்களுக்கும் மேலாக வாங்குவதில்லை (நண்டுக்கு சீனர்களின் கடை இருக்கு).. எப்பாலும் இருந்துட்டு அம்மா பாசத்துடன் செய்து அனுப்பும் ஒரு சில உணவுப் பொருட்கள் தான் இப்ப மிச்சம்.

 

மற்றது,

 

நான் இங்கு குறிப்பிட்டது தனிமனிதத் தவிர்ப்புகள் பற்றி அல்ல. ஒரு அமைப்பைப் பார்த்து, ஒரு குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தைப் பார்த்து, பிற சமூகத்தைப் பார்த்து இலங்கைப் பொருட்களை விற்காதே என்று கேட்பது நியாயமாக இருக்க வேண்டும் எனில் அதைக் கோரும் எம் சமூகத்தின் பெரும்பாலனாவர்கள் ஏற்கனவே அதனைச் செய்து இருக்க வேண்டும். இரண்டு தலைமுறைகளாக இங்கு வாழ்ந்தும் இலங்கைப் பொருட்களுக்கான மாற்றீடுகளை விற்க விரும்பாத அரசியல் பிரக்ஞையுடன் நாம் இருக்கும் போது மற்ற சமூகங்களைப் பார்த்து கோரிக்கை விடுவது மிகவும் மலினமானதுடன் நேர்மையற்றதும் ஆகும். தன் சமூகத்தை மாற்ற முடியாதவர்கள் மற்ற சமூகத்திடம் மாற்றம் கோருவது ந்கைப்புக்கிடமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்விக்கான தங்களது பதில் திருப்தி  தருகிறது

 

எனது சமூகம் மீதான  தங்கள் கூற்று அந்த சமூகத்தை சார்ந்த  ஒருவன் என்பதால் வெட்கம் தருகிறது

நன்றி  நிழலி.

எமது புறக்கணிப்பை  நாம் தொடர்வோம்.

Link to comment
Share on other sites

நாம் என்பதில் நானும் இருப்பதால் சொல்கின்றேன். நான் இலங்கைப் பொருட்கள் எதனையும் இப்போது வாங்குவதில்லை. இங்கு வந்த பின் வல்லாரை, நண்டுப்பெட்டி, கருவப்பிள்ளை என்பன வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்ப அவையும் 6 மாதங்களுக்கும் மேலாக வாங்குவதில்லை (நண்டுக்கு சீனர்களின் கடை இருக்கு).. எப்பாலும் இருந்துட்டு அம்மா பாசத்துடன் செய்து அனுப்பும் ஒரு சில உணவுப் பொருட்கள் தான் இப்ப மிச்சம்.

 

 இந்த முன்னுதாரண வாழ்வை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சிப்போம்...................பின்பற்றுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை தடை செய்ய முன்பு  எத்தனை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன .

கேட்கிறார்கள் இல்லையே! கனடாவில் மட்டும் இல்லை. எல்லா நாடுகளிலும் தடைசெய்யச் சொல்லி போராட்டங்கள் வெடிக்கவேண்டும்.

தமிழ்கடைகள் வியாபார நோக்கம்கொண்டவை.

நாம்தான் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பு ம் தங்கியிருக்கிறது.

Link to comment
Share on other sites

நான் இலங்கைப் பொருட்களை வாங்காமல் விடுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று ஆரோக்கியம் சம்பந்தமான அக்கறை. உணவுப் பொருட்களில் உள்ள கலப்படம் மற்றும் இரசாயனப் பசளை பற்றிய அறிவும் கூடியவரைக்கும் இவற்றில் இருந்து என்னை தள்ளி வைத்துள்ளது. பிள்ளைகளுக்கு எக்காரணம் கொண்டும் இலங்கை பிஸ்கற்றுகளோ இனிப்பு வகைகளோ வாங்கிக் கொடுப்பதில்லை.

 

டுபாயில் நான் இருந்த கால கட்டத்தில் இலங்கை உணவுப் பொருட்களை காண்பது அரிது அங்கு (இப்பவும் அப்படித்தான் இருக்கும் என நினைக்க்ன்றேன்). தரமற்றவை என்று ஐக்கிய அரபு இராட்சியம் பல பொருட்களை தடை செய்து வைத்திருந்தது. இலங்கை பால்மாக்களுக்கும் குளிர்பானங்களுக்கும் பெரியளவில் தடை இருந்தது.

Link to comment
Share on other sites

அப்படியானால் சிங்கள கிரிக்கெட்டையையும் கூட புறக்கணிக்க வேண்டுமா? இல்லையா??

 

அவுஸ்திரெலியா ஏஜ் பத்திரிகையில் வந்த "வரும் 26ம்திகதி சிங்கள துடுப்பாட்ட அணிக்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு"

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112899

Link to comment
Share on other sites

நாங்கள் பார்க்கில் கிரிக்கட் விளையாடிக்கொண்டு அவுஸ்திரேலியா புறக்கணிக்க வேணும் எண்டு சொல்ல முடியுமா? :D

Link to comment
Share on other sites

நாம் என்பதில் நானும் இருப்பதால் சொல்கின்றேன். நான் இலங்கைப் பொருட்கள் எதனையும் இப்போது வாங்குவதில்லை. இங்கு வந்த பின் வல்லாரை, நண்டுப்பெட்டி, கருவப்பிள்ளை என்பன வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்ப அவையும் 6 மாதங்களுக்கும் மேலாக வாங்குவதில்லை (நண்டுக்கு சீனர்களின் கடை இருக்கு).. எப்பாலும் இருந்துட்டு அம்மா பாசத்துடன் செய்து அனுப்பும் ஒரு சில உணவுப் பொருட்கள் தான் இப்ப மிச்சம்.

 

மற்றது,

 

நான் இங்கு குறிப்பிட்டது தனிமனிதத் தவிர்ப்புகள் பற்றி அல்ல. ஒரு அமைப்பைப் பார்த்து, ஒரு குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தைப் பார்த்து, பிற சமூகத்தைப் பார்த்து இலங்கைப் பொருட்களை விற்காதே என்று கேட்பது நியாயமாக இருக்க வேண்டும் எனில் அதைக் கோரும் எம் சமூகத்தின் பெரும்பாலனாவர்கள் ஏற்கனவே அதனைச் செய்து இருக்க வேண்டும். இரண்டு தலைமுறைகளாக இங்கு வாழ்ந்தும் இலங்கைப் பொருட்களுக்கான மாற்றீடுகளை விற்க விரும்பாத அரசியல் பிரக்ஞையுடன் நாம் இருக்கும் போது மற்ற சமூகங்களைப் பார்த்து கோரிக்கை விடுவது மிகவும் மலினமானதுடன் நேர்மையற்றதும் ஆகும். தன் சமூகத்தை மாற்ற முடியாதவர்கள் மற்ற சமூகத்திடம் மாற்றம் கோருவது ந்கைப்புக்கிடமானது.

 

நல்ல விடையம் ஆனால் அம்மா யாரிடமும் கொடுத்து விட்டவாவா இல்லை பாசலில் போட்டு விட்டவரா? ஏன் எனில் அதற்க்கும் இலங்கை அரசுக்கு காசு போகும்..........

Link to comment
Share on other sites

நாங்கள் பார்க்கில் கிரிக்கட் விளையாடிக்கொண்டு அவுஸ்திரேலியா புறக்கணிக்க வேணும் எண்டு சொல்ல முடியுமா? :D

 

இரண்டு முகங்கள் எங்களுக்கு இல்லை  :o  

சொல்லுவதும் செய்வதும் ஒன்றே  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயி விக் போன்றவர்கள் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் காய்கறிகளை கனடாவில் உற்பத்தி செய்தால் நுகர்வோர் ஏன் சிறிலங்கா பொருட்களை வாங்கப்போகின்றார்கள். 
புலம்பெயர் தேசங்களில் சிறிலங்காவில் பயிர் செய்யப்படும் பயிர்களை பயிரிடமுடியுமா ? ஏதாவது வழிகள் உள்ளனவா ??
Link to comment
Share on other sites

புறக்கணி சிறிலங்காவுக்கான சிறப்பு முகநூல் பக்கம்

 

http://www.facebook.com/events/516812715020258/?fref=ts
http://www.facebook.com/boycottsrilankanow?fref=ts

 

விரும்பியவர்கள் 'லைக்' செய்யுங்கள், ஆதரவு தாருங்கள்

Link to comment
Share on other sites

 

விவசாயி விக் போன்றவர்கள் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் காய்கறிகளை கனடாவில் உற்பத்தி செய்தால் நுகர்வோர் ஏன் சிறிலங்கா பொருட்களை வாங்கப்போகின்றார்கள். 
புலம்பெயர் தேசங்களில் சிறிலங்காவில் பயிர் செய்யப்படும் பயிர்களை பயிரிடமுடியுமா ? ஏதாவது வழிகள் உள்ளனவா ??

 

 

இங்கே உற்பத்திச்செலவு கூட அல்லவா? சனம் சதத்திற்குக் கணக்குப் பார்த்துக்கொண்டல்லோ திரியுது?! :D

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.

 

ஆனால் முதலில் இந்தப் போராட்டத்தை தமிழ்க் கடைகளுக்கு முன் தான் நடத்த வேண்டும். கனடாவில் தமிழ்க் கடைகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக இலங்கைப் பொருட்களை வைத்து விற்றுக் கொண்டு மற்றவர்களை விற்கக் கூடாது என்று சொல்வது மலினமான விடயம்.

 

எனது நண்பர்கள் இதை முயன்றனர். உதாரணத்திற்கு கனடாவில் பல பிரபல தமிழ் கடைகள் முன்னால்  நின்று இலவச துணி பைகளை விநியோகித்தனர். அதில் 'சிங்கள பொருட்களை புறக்கணி' என எழுதி இருந்து.

 

சில கடைகளில் கடைக்காரர்கள் வந்து, "தம்பியவை இங்கே இதை செய்யாதீர்கள்" என உரிமையுடன் கேட்டனர்.

பல மக்களும் அந்த துணிப்பையை வாங்கி பின்னர் அதற்குள்ளேயே சிங்கள பொருட்களை நிரப்பி சென்றனர்.

Link to comment
Share on other sites

எனது நண்பர்கள் இதை முயன்றனர். உதாரணத்திற்கு கனடாவில் பல பிரபல தமிழ் கடைகள் முன்னால்  நின்று இலவச துணி பைகளை விநியோகித்தனர். அதில் 'சிங்கள பொருட்களை புறக்கணி' என எழுதி இருந்து.

 

சில கடைகளில் கடைக்காரர்கள் வந்து, "தம்பியவை இங்கே இதை செய்யாதீர்கள்" என உரிமையுடன் கேட்டனர்.

பல மக்களும் அந்த துணிப்பையை வாங்கி பின்னர் அதற்குள்ளேயே சிங்கள பொருட்களை நிரப்பி சென்றனர்.

 

கடைகாரரிடம் வாங்கும் வசூலுக்கு அவர்களின் சொல்லும் கேக்க தானே வேண்டும்?

Link to comment
Share on other sites

கடைகாரரிடம் வாங்கும் வசூலுக்கு அவர்களின் சொல்லும் கேக்க தானே வேண்டும்?

 

 ஆம், அதுதான் நிழலியின் கருத்திற்கு நான் "லைக்" போடவில்லை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.adaderana.lk/news.php?nid=20887&utm_source=twitterfeed&utm_medium=twitter#.UMkgAxoyMQI.twitter

SRI LANKA TOP DESTINATION TO VISIT IN 2013 - BRITISH AIRWAYS

UK-based carrier British Airways asked a panel of experts to compile a list of the top 13 new destinations and popular favorite places to visit in 2013. The experts used company data to determine the hottest destinations for next year.

Sri Lanka heads the 13 for 2013 list as the country moves further away from the civil war which ended in 2009. Tourists are heading to the island in increasing numbers, drawn by attractions like beaches, elephant treks and a large number of UNESCO world heritage sites to visit.

Rio de Janeiro comes in second place in the run-up to the FIFA World Cup taking place across the country in 2014. The World Cup is expected to attract a massive number of tourists which will have an effect on the already rising prices of tourist facilities such as hotels and restaurants. To enjoy this South American city, why not beat the masses and save some money by visiting before the rush? Prices in the city are expected to increase even more ahead of the Summer Olympic Games taking place in 2016.

Seoul in South Korea comes in at number 3. The city is expected to attract a large number of business travelers as well as an increasing number of tourists. After more than a decade without any, British Airways resumed its Seoul service on December 2, operating six flights a week from London.

The other destinations are Croatia; Vietnam; Punta Cana, Dominican Republic; Derry, Northern Ireland; Las Vegas, USA; Tbilisi, Georgia; San Diego, California, USA; Cape Town, South Africa; Alicante, Spain; and Dubai, UAE. - AFP

Link to comment
Share on other sites

222284_315057621941080_1713811825_n.jpg

Link to comment
Share on other sites

நல்ல விடயம்.

 

ஆனால் முதலில் இந்தப் போராட்டத்தை தமிழ்க் கடைகளுக்கு முன் தான் நடத்த வேண்டும். கனடாவில் தமிழ்க் கடைகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக இலங்கைப் பொருட்களை வைத்து விற்றுக் கொண்டு மற்றவர்களை விற்கக் கூடாது என்று சொல்வது மலினமான விடயம்.

 

கடந்த மாத தரவுகளின் படி, சிங்கள ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது - ஆடை ஏற்றுமதி 38%.

எனவே இதனை குறி வைப்பது எமது இலக்கை  பொறுத்தவரையில் சரியானதாகவே தெரிகின்றது. 

 

Earnings from exports of garments, which have a share of around 38 per cent in total export earnings, have made the largest contribution to the decline in earnings from industrial exports.

 

http://www.lankabusinessonline.com/fullstory.php?nid=316273051

Link to comment
Share on other sites

For Immediate Release


Friday, December 14th, 2012

Tamil Canadians will be campaigning against the “made in Sri Lanka ” clothing sold in the Canadian Market.


Tamil Community members and human rights activists will stage an awareness campaign to the shoppers on this Saturday December 15th 2012 from 12pm to 3pm at Dundas Square to boycott clothing made in Sri Lanka and sold by Canadian outlets during the holiday season.
About 75,000 ethnic Tamils, including women and children, were slaughtered by ethnic Sinhalese controlled Sri Lankan armed forces between January and May of 2009. They were herded into a small beach area and bombed and shelled from land, sea and air in a genocidal onslaught. Another 300,000 Eelam Tamils were locked in concentration camps where they were abused, tortured and many disappeared. Recently released UN documents indicate the death toll in Sri Lanka is the worst mass atrocity of the 21st century, surpassing the genocide of Srebrenica and Bosnia and present day Syria combined.


The genocide of Eelam Tamils continues in Sri Lanka , with rampant militarization of occupied North-East where torture, detentions, rape and disappearances are common place, and Tamil land is appropriated for military and state-aided colonization of non-Tamils. Freedom of assembly and freedom to mourn their dead are denied to Tamils as evidenced by the recent attack on the University of Jaffna students on Nov 27, 2012. The perpetrators of the genocide are still entrenched in power, without accountability or justice.


The garments made in Sri Lanka are sold in the West to the tune of 4 billion dollars. This funds the Sri Lankan military and entrenches the apartheid regime in Sri Lanka . Boycotting garments made in Sri Lanka will help to protect human rights. It can pave the way for justice and freedom for the oppressed Eelam Tamils.         
 

More info:   www.boycottsrilanka.com
-30-

Contact: National Council of Canadian Tamils
Phone: 416.830.7703
Email: media@ncctcanada.ca

Link to comment
Share on other sites

இதை நடாத்துபவர்கள் யாரென கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்.

Link to comment
Share on other sites

இதை நடாத்துபவர்கள் யாரென கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்.

 

இவர்களை பிடிக்காவிட்டால், நீங்களும் அடுத்த சனி செய்யுங்கள் 1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.