Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பெண்களுக்கு இராணுவம் செய்த அதிரவைக்கும் அட்டூழியம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சியில் பெண்களுக்கு இராணுவம் செய்த அதிரவைக்கும் அட்டூழியம் என்ன?
December 12, 2012, 11:00 pm|views: 794
 
இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட யுவதிகள் நள்ளிரவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் இராணுவ மகளிர் பிரிவின் 6வது படையணியின் கீழ் வடக்கிலிருந்து 17.11.2012ந் திகதியன்று இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்த  தமிழ் யுவதிகளில் 21 பேர் 11.12.2012 அன்று நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்குள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்பட்டு, தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த இடமாகிய 'நவம் அறிவுக் கூடம்' அமைந்திருந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த யுவதிகளே, நேற்று நள்ளிரவு அங்கு கேட்ட அமானுஸ்ய சத்தம் காரணமாக பயந்து உளநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறீலங்கா படைத்தரப்பு கூறியுள்ளது. ஆயினும், தொடர்ச்சியான முறையில் குறித்த யுவதிகள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது. 
 
நவம் அறிவுக் கூடம் கிளிநொச்சி நகரிலிருந்து 4 கிலோமீற்றர்கள் தூரத்தில் நகரின்  மேற்கே கிருஸ்ணபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போது இராணுவ பெண்கள் படைப்பிரிவின் 6வது படையணியின் முகாமாக இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
21 யுவதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிலர் மயக்கமாகிய நிலையில் இருந்துள்ளனர்.
 
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கட்டடத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆய்வுகூடத்தின் முன்னால் இலத்திரனியில் சாதனங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இது, பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
 
வைத்தியசாலை கட்டடத்தின் வடக்கு பகுதிக்கு பிரத்தியேக பாதை இருப்பதனால் பொது மக்களின் நடமாட்டம் இப்பகுதியில் தடுக்கப்பட்டு இராணுவத்தினர் மட்டுமே  நடமாடுகின்றனர்.
 
இராணுவ வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் மட்டுமே இவர்களை பராமரித்து வருகின்றனர்.
 
இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குள் அங்கு இராணுவத்தினர் (இரு பாலாரும்) பெருமளவில் கூடி விட்டனர்.
 
வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இன்னும் மயங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். இதனால், குறித்த யுவதிகள் அறியாவண்ணம் ஏதாவது மருந்து ஏற்றப்பட்டதா என்ற கேள்வியும் எழுவதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மாவட்ட வைத்தியசாலையின் பணியார்களில் ஒரு தமிழ் பெண் பரிசாரகர் (Attendant)  தவிர யாரும் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைக்குள் செல்வதற்கு வைத்திய அத்தியட்சகரால் (Medical Superintend : Dr. கார்த்திகேயன்) அனுமதிக்கப்படவில்லை.
 
அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள பரிசாரகர் மாவட்ட வைத்திய அத்தியட்சகரின் பூரண ஆதரவாளர் என்றும், தேவைகளின் நிமித்தம் அவ்வறையிலிருந்து வெளியில் வருகின்ற அவர் தனது சக ஊழியர்களிடம் எவ்வித தகவல்களையும் பரிமாறிக் கொள்ள மறுக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மாவட்ட வைத்திய அத்தியட்சகரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான Dr. கார்த்திகேயன் அரசாங்கத்தின் பூரண ஆதரவாளர் என்பதனால் வைத்தியசாலை வட்டாரத்தினர் பயம் காரணமாக இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்கு மறுக்கின்றனர்.
 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார் என்று தகவல் ஏதும் தெரியாத நிலையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்களின் குடும்பத்தவர்களிற் பலர் வைத்தியசாலை சூழலில் கூடி வருகின்றனர். 
 
இதுவரை குடும்பத்தவர்கள் யாரும் அவர்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்வில்லை.
 
நன்பகல் 11.15 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக சுமார் ஒன்றரை மணி நேரமாக காத்திருந்தும், அவர் அவர்களைப் பார்வையிடுவதற்கு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியரால் அனுமதிக்கப்படவில்லை.
 
இராணுவத்தினரின் கட்டளைக்கமைய பாராளுமன்ற உறுப்பினரை பாதிக்கப்பட்டுள்ள பெண்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என மாவட்ட வைத்திய அத்தியட்சகரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான னுச. கார்த்திகேயன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துள்ளார்.
 
வைத்தியசாலை சூழலில் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், இங்கு பதட்டம் நிலவுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 57வது படைப்பிரிவின் படையாதிகாரி இன்று தனது பெருமளவு நேரத்தினை வைத்தியசாலை வளாகத்திலேயே கழித்துள்ளார். 30 வரையான இராணுவத்தினர் இங்கு தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரது தாயார் தனது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனை அறிந்து அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்று நெடுநேரம் காத்திருந்தும் அவர் தனது மகளை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவரை 57வது படைப்பிரிவின் படையாதிகாரி தன்னுடன் அழைத்துச் சென்று வைத்தியர்களது ஓய்வு அறையில் தங்க வைத்துள்ளார்.
 
மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்தில் பதற்றம் நீடிக்கும் நிலையில், கிளிநொச்சியில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் வடதமிழீழத்தில் மக்களிடத்தில் கொந்தளிப்புத் தன்மையையும் ஆத்திரத்தையம் ஏற்படுத்தியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் வடதமிழீழ செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
 

பாவம் இந்த யுவதிகள் எதற்காக சிங்கள இராணுவத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

Dr. கார்த்திகேயன் ....இவரை நினைத்தால் எனக்கு அரசியல் வாதிகள் தான் நினைவுக்கு வருவர்.

 

பிழைக்க தெரிந்த மனிதர். மக்களுக்காக போராடிய, தங்களின் உயிரையே துச்சமாக மதித்த வைத்தியர்களுக்கு மத்தியில் புலிகளுக்கு வால்  பிடித்து தற்போது ஒட்டுகுழுக்களுக்கு வால்பிடித்து சுகபோகமாக பதவியுடன் வாழும் ஒரு சராசரி தமிழனின் எடுத்துக்காட்டு.

 

இவரது தேசப்பற்றை பார்த்து, இவரால் வைத்தியம் பார்க்கபட்டு பிறந்த குழந்தைக்கே கார்த்திகன் என்று பெயர் வைத்த என் போராளி நண்பன் இப்போ உயிரோடு இல்லை.

 

இருந்திருந்தால் ...???



வாழ்க வளர்க நின் பணி தொடர்க

இராணுவத்தினர் உள்ளவரை அங்குள்ள பெண்களுக்கு எல்லா விதத்தாலும் பிரச்சினை. :(
 

பாவம் இந்த யுவதிகள் எதற்காக சிங்கள இராணுவத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அவர்களாக இணைந்திருக்க மாட்டார்கள். கட்டாயப்படுத்தி சேர்த்திருக்கலாம் அல்லது குடும்பத்தை ஏதாவது செய்து விடுவோம் என்று மிரட்டி சேர்த்திருக்கலாம்.

வறுமை. வற்புறுத்தல்.  பாதுக்காப்பு என்னும் மாயை.

 

இதுதான் இன்றைய உண்மை நிலமை.

இராணுவத்தினர் உள்ளவரை அங்குள்ள பெண்களுக்கு எல்லா விதத்தாலும் பிரச்சினை. :(

 

அவர்களாக இணைந்திருக்க மாட்டார்கள். கட்டாயப்படுத்தி சேர்த்திருக்கலாம் அல்லது குடும்பத்தை ஏதாவது செய்து விடுவோம் என்று மிரட்டி சேர்த்திருக்கலாம்.

 

உண்மைதான் என்றுதான் எங்களுக்கு விடுதலை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.scribd.com/doc/116702968/TNA-statement-on-hospitalized-Tamil-recruits

TNA statement on hospitalised Tamil female army recruits.

http://www.scribd.com/doc/116702968/TNA-statement-on-hospitalized-Tamil-recruits

TNA statement on hospitalised Tamil female army recruits.

உண்மைதான் என்றுதான் எங்களுக்கு விடுதலை?

 

எப்பொழுது விடுதலை என்று தெரியாது. ஆனால் முன்னரை விட எமது பிரச்சினை சர்வதேசத்தை அடைந்திருக்கிறது. எனவே நாம் கைவிடாமல் முயற்சிகளை தொடர்வோருக்கு ஆதரவாக இருப்போம்.

தமிழீழ விடயங்களில் பங்களிக்கும் உங்களுக்கும் நன்றி. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121212_kiliarmywomen.shtml

அண்மையில் இலங்கை இராணுவத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினர் உளவியல் ரீதியான சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை உறவினர்கள் மூலம் தான் அறிந்துகொண்டதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவர்களை பார்ப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற போது தான் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு தன்னுடைய பிரதேச மக்களை சென்று பார்ப்பதற்கு சிறப்புரிமை தனக்கு உள்ளது, ஆகவே அதற்கான அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை என்று அவர்கள் கூறியதாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.

இதேவேளை, சுகயீனம் காரணமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உறவினர்கள், அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

தனியான வார்ட் ஒன்றில் 13 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

தன்னுடைய பிள்ளையும் ஏனைய சில பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கிவிழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவம் கருத்து

அதேவேளை ஒரு சில நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சுயநினைவுபெற்று இயல்பாக கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தில் சேர்ந்துள்ள 7 பெண்கள் தமக்கு உடல் சுகமில்லை என்று கூறியுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தமிழோசையிடம் தெரிவித்தார். அதே நேரம் அவர்களுக்கு எத்தகைய சுகவீனம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பயிற்சி காலத்தில் இதுபோல நடப்பது சகஜம் என்றும் தினந்தோறும் இராணுவத்தில் சுமார் 2000 பேர் சுகவீன விடுப்பு எடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார் பிரிகேடியர் ருவான் வணிகசூர்

Edited by Queen

வறுமை.

 

 வறுமை புலத்தில் சேர்ந்த நிதியைக் கொண்டு நிவர்த்தி செய்திருக்கலாம்.

 

கேபி என்னதான் செய்கின்றார் அங்கு.

 

 

இவர்கள் சேர முதல் யோசித்திருக்கனும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிலரி கிளிண்டனுக்கு கடிதம் எழுதுங்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிராக ராணுவம் பாலியல் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தியதாக முன்பு குற்றம் சுமத்தியவர். நாடு கடந்த அரசு உலக தமிழர் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் அமெரிக்காவின் ராஜாங்க தினைகலதுக்கு எழுத வேண்டும்.

http://www.state.gov/s/gwi/rls/rem/2012/201057.htm

http://www.tamilsydney.com/content/view/2458/37/

  • கருத்துக்கள உறவுகள்

கெஞ்சினோம்

மன்றாடினோம்

குரல் அடைக்கும்வரை கத்தினோம்

 

சிங்களவன் என்பவன் இப்படியானவன்தான்

எமது பலத்தை பாதுகாப்போம் என.......

 

 

எதுவெல்லாம் நடக்கும் என எச்சரித்தோமோ

அதுவெல்லாம் நடக்கிறது

நாம் எச்சரித்தபோது

மண்டை கழுவப்பட்டவனின் பேச்சு  என்றவரும்

இன்று பேசுவதில்லை

நாம் மன்றாடியபோது

தங்கள் இருப்பை நிலை நிறுத்த என காட்டிக்கொடுத்தோரும்

இன்று பேசுவதில்லை

 

தமிழினமே இனி

இப்படியே தான் நடக்கும்

எவரும் வரார் உன்னைக்காப்பாற்ற...................

 

இவ்வளவையும் பார்த்தும்

இன்னும் எனது  நெஞ்சு ஏன் வெடிக்காது இருக்கிறது ..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.