Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது!

Featured Replies

டிசம்பர் 7ஆம் திகதி சம்பந்தன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, உலகெங்குமுள்ள பத்துக் கோடி தமிழ் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பெரும் அதிர்ச்சியினால் வாயடைத்துப் போயுள்ளனர். இனிமேலும் தமிழரின் உரிமையைப் பற்றிப் பேசும் தகுதியை சம்பந்தன் இழந்து விட்டார். எனவே அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராக்குவதற்கு வழிவிட வேண்டும்.

 'புரூட்டஸ் நீயுமா?' என்றொரு வரலாற்றுக் கேள்வி வழக்கிலுண்டு. அதைப் போல் 'சம்பந்தன் நீங்களுமா?' என்ற கேள்வி உலகின் பொரும்பாலான தமிழர்களிடையே எழுந்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 7ஆம் திகதி ஆற்றிய ஒரு பகுதி உரை அவர்களின் இதயங்களில் ஈட்டியால் குத்தியதாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளை பட்டியலிட்டு சம்பந்தன் குறிப்பிட்டார். ஆனால் அந்த உரைக்கு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் புலிகளைப் பற்றிக் குறிப்பிட்டதுதான் உலகத் தமிழர்களின் கவலைக்குரிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என இலங்கை அரசு வேண்டுமானால் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடிக்கடி கூறிக்கொள்ளலாம். ஆனால், தமிழத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் � அதிலும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக புதல்வர்களை அள்ளிக் கொடுத்த திருக்கோணமலைத் தொகுதியைப் பிரதிநித்துவப் படுத்துபவர் � சம்பந்தன் அவ்வாறு தெரிவிக்கலாமா?

நாலும் தெரிந்தவர். அரச பயங்கரவாதத்தினால் எத்தனை ஆண்டுகாலமாக தமிழினம் அல்லற்பட்டு சீரழிந்து வாழ்விழந்து வருகின்றது என்பதையும் அறிந்தவர் அவர். புலிகளில்லாத கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக தமிழர்கள் பல இடங்களில் அடிமைகள் போல் நடத்தப்படுவதை கண்கூடாகக் கண்டுள்ளார்.

இலங்கை பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர், யாழ். பல்கலைக்கழகத்தினுள் இராணுவம் அத்துமீறி நுழைந்ததை, இது ஒரு அரச பயங்கரவாதம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சம்பந்தன் அதற்கு எதிர்மறையாக விடுதலைக்காகப் போராடிய ஓர் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று எங்ஙனம் கூற முடியும்?

அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சராக இருக்கும் திருமதி. ஹிலாரி கிளின்டன் அம்மையார் ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலின்போது ஏனைய பயங்கரவாத அமைப்புகளின் அட்டவணையில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதை அவருக்கு இப்போது ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கொன்றின் தீர்ப்பை இங்கு குறிப்பிடலாம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து ஆயுதக்கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்து மேல் நீதிமன்றம் தமிழர் ஒருவருக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அவர் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் மேல் நீதிமன்றத் தீர்ப்பை ரத்துச் செய்ததுடன், குற்றம் சாட்டப்பட்டவரையும் நிரபராதி எனத் தீர்ப்பளித்து விடுதுலை செய்தது. �சொந்த வீட்டில் இருப்பவனை அடித்துத் துரத்திவிட ஒருவன் முனைந்தால் சொந்த வீட்டுக்காரன் திருப்பித் தாக்குவது யதார்த்தமானது. ஆயுதங்களோடு அவ்வாறு வரும் ஒருவரை ஆயுதங்களோடு எதிர்கொள்வதும் தவிர்க்க முடியாதது. தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதங்களோடு வரும் இராணுவத்தினரை ஆயுதங்களோடு எதிர்கொள்கின்றனர்.

எனவே, அதனை பயங்கரவாத நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்ததை பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது என நியூசிலாந்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு உலகின் முன்னணி ஊடகங்கள் யாவற்றிலும் வெளியாகி இருந்ததை சம்பந்தனும் அறிந்திருப்பார். அதேநேரத்தில் ஐரோப்பிய நீதிமன்றிலும் தமிழீழ விடுதுலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பல்ல என்று தீர்ப்பு வழங்குமாறு கோரி இரண்டு மனுக்கள் தாக்கலாக அதனை ஆதரித்து உலகின் பிரபல சட்டத்தரணிகள் வாதாடி வருகின்றனர்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதினால் வழக்கு விசாரணை முடிவு இன்னமும் வெளியாகவில்லை. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் சில தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக சாட்டப்பட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்ததன் குற்றச்சாட்டு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை மதிக்காததுடன் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டனர் என சம்பந்தன் குறிப்பிட்டதின் காரணம் அவருக்கே சிலவேளை புரியாதிருக்கலாம். ஏனெனில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு உலகிலுள்ள சகல மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசைக் கோரி வருகின்றன. போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு மீறியதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என ஐ.நா. சபையே பகிரங்கமாக அறிவித்துள்ளது.

எனவே, அவ்வாறான அரசுடன் எங்ஙனம் ஜனநாயக மனித உரிமைகளைப் பாதுகாக்க போராட முடியும்? ஜனநாயக மனித உரிமை பாதுகாப்பு போராட்டங்கள் மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு அவை படுதோல்வியடைந்த நிலையிலேயே வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியதையும் அவரே சுட்டிக்காட்டுகிறார்.

அவர் தமது நாடாளுமன்ற உரையில் முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமரை புலிகள்தான் கொலை செய்தார்கள் என சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கைதட்டலுக்கும் மத்தியில் தெரிவித்தார். முற்றுமுழுதாக அது உண்மைக்கு மாறான தகவல் என இதுவரை அவர் அறியாதிருப்பது வேதனைக்குரியது.

திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு சிங்களத் திரைப்படமொன்று தடைசெய்யப்பட்டது. அதிலும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளரான பிரபல சிங்கள நடிகரும் தயாரிப்பாளருமான காமினி பொன்சேகா அந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான திரைப்படம் என்பதினாலேயே அது தடைசெய்யப்பட்டது என செய்திகள் கசிந்தும் பி.பி.சி. என்ற பிரபல ஊடகம், அதனைக் கண்டறிந்து உண்மைத் தகவலை அச்சமயம் வெளியிட்டது. அதனை மிகவும் இரகசியமாகவே அன்றைய அரசு வைத்திருக்க முற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பி.பி.சி.யின் தகவலால் அது முடியாது போயிற்று.

தமிழீழ விடுதுலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா அரசு தோல்வியடைந்து வருகின்றது. வெளிநாடுகளின் ஆதரவு புலிகளுக்கு இருப்பதனால் அந்த ஆதரவை முறியடித்து அந்த நாடுகளின் உதவியுடனேயே புலிகளை வெற்றிகொள்ள இலங்கை அரசு இரகசியமாக திட்டமொன்றை அமுல்படுத்துகின்றது.

வெளிநாட்டமைச்சர் தமிழராக இருப்பதனால், அவரை அரசு மற்றொரு தமிழ்க் குழுவைக் கொண்டு கொலை செய்துவிட்டு, அந்தப் பழியை அப்படியே புலிகள் மீது சுமத்தி வெளிநாடுகளில் தீவிரமாகப் பரப்புரை செய்கின்றது. வெளிநாட்டமைச்சரையும் புலிகளே கொலை செய்துவிட்டார்கள் என்ற பரப்புரை சாதகமான பலனைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது.

பின்பு இந்தியா தலைமையில் ஒன்றிணைந்து வெளிநாடுகளும் போரைத் துவங்கி விடுதலைப் புலிகளின் களத்தை முற்றுமுழுதாக அழித்துவிடுவதுதான் காமினி பொன்சேகாவின் திரைப்படம். யதார்த்தத்துக்கு ஒத்துப் போகக்கூடிய அளவில் அவர் அன்று அந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருந்தாலும் அதனை வெளியிட அன்றைய அரசு அனுமதியளிக்கவில்லை.

மிகப்பெரும் பிரச்சினையிலிருந்து அரசு விடுபட இந்தத் திரைப்படத்தின் மூலம் முக்கிய ஆலோசனையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது செயற்பட வேண்டுமாயின் இந்தத் திரைப்படம் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படக்கூடாது என அரசு முடிவெடுத்திருக்கலாம் என்றும் பி.பி.சி. அப்போது சந்தேகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

அந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின், அதேபோன்றதொரு சூழ்நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்ட போதும், பி.பி.சி. இந்தச் சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. மேலும் சில ஊடகங்களிலும் இவ்வாறு வெளியாகியதை சம்பந்தன் எப்படி அறியாமல் இருந்தார் என்பது புரியவில்லை.

அவர் அது தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கை ஆராய்ந்து பார்க்கலாம். கொலைச் சந்தேக நபர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிய முற்படலாம்.

அதில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் தற்போது வெளிநாட்டில் இலங்கைத் தூதரகம் ஒன்றில்

வேறு பெயரில் கடமை புரிவதாக இணையத்தளச் செய்தியொன்று குறிப்பிடுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவருக்கு முன்பு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, யாசீர் அரபாத் பாலஸ்தீனர்களுக்கு தனிநாடொன்றைப் பெற்றுக்கொடுத்ததைப் போன்று, தமிழீழத் தேசியத் தலைவரும் தமிழர்களுக்கு அவ்வாறு பெற்றுக்கொடுப்பார் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

அந்த உரையின் மீது எழுந்த அரச அழுத்தங்களின் பின்னணியில் சம்பந்தன் தமது உரையை நிகழ்த்தியதாகக் கருதினாலும், உண்மைக்கு மாறான தகவல்களை அவர் தவிர்த்திருக்கலாம்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சம்பந்தன் மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் எவரும் அறிந்து வைத்திருக்கவில்லை. அவ்வாறு ஆராய முற்பட்டால், தம்மையும் புலிகளுடன் இணைத்து இலங்கை அரசு கணித்துவிடும் என்ற அச்சமும்

எழலாம்.

ஆனால், புலம்பெயர் தமிழ் மக்கள் தாயக மக்களின் நல்வளர்ச்சிக்காக சேமித்து அனுப்பிய பணத்திலேயே அந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நானூறு கோடி ரூபாய் செலவில் தமிழர்களுக்கென பூரணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிரதான வீதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே ஓர் ஏக்கர் பரப்பளவில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்கள் அனுப்பிய நிதியிலிருந்து தமிழீழத் தேசியத் தலைவர் திட்டமிட்ட முறையில் கலை, விஞ்ஞான, உயிரியல் உட்பட பல பீடங்களை உள்ளடக்கியதாக இப்பல்கலைக்கழகத்தினை அமைத்துள்ளார். கூடவே, விளையாட்டு மைதானமும், நீச்சல் தடாகமும் மிகச் சிறப்பான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளரான முருகர் குணசிங்கம், தாம் கிளிநொச்சிக்கு 2008ஆம் ஆண்டு சென்றபோது இப்பல்கலைக்கழகத்தை நேரில் பார்த்து பெரும் வியப்படைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 90 சதவீதமான கட்டட வேலைகள் பூர்த்தியடைந்த நிலையிலேயே அப்போது இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அபிவிருத்தித் திட்டங்களை புள்ளிவிபரங்களுடன் விளக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் புத்தகம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். முதல் வெளியிடு லண்டனில் இடம்பெற்றுள்ளது.

ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகைச் செய்கை, குளங்களைப் புனரமைத்து உப உணவுப் பயிர்ச்செய்கை, விவசாயம், நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டம், கரவைப் பசுமாடுகளை உள்ளடக்கிய பிரமாண்டமான பண்ணை, வயோதிபர் விடுதி, கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் பூரணத்துவமான மருத்துவ விடுதிகள், வட்டக்கச்சியில் மிகப் பெரிய விவசாயப் பண்ணை உட்பட சுமார் 1,200 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை அவர் நேரில் கண்டுள்ளார்.

ஆனால், இன்று இவையெல்லாவற்றையும் இராணுவம் கைப்பற்றி பலனை அனுபவித்து வருவது சம்பந்தனுக்குத் தெரியாது. குறிப்பாக தமிழ் மாணவர் கல்விக்கு பெரிதும் உதவும் பல்கலைக்கழகம் இராணுவத்தினரின் தங்கும் விடுதியாக மாறியுள்ளது.

தாயக மக்களின் நல்வாழ்வுக்காக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அனுப்பிய பணத்திலேயே இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அந்த இடங்களை தமிழர்களிடம் ஒப்படைத்துவிட்டு இராணுவம் வெளியேறிவிட வேண்டும் என ஏன் சம்பந்தனால் கேட்க முடியாது?

இவ்வாறு தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்ட அமைப்பை மிக எளிமையாக � தமிழ் மக்களுக்கு இதுவரை எவ்வித நன்மையும் செய்யாத சம்பந்தன் � பயங்கரவாத அமைப்பு என நாடாளுமன்றத்தில் சர்வசாதாரணமாகக் குறிப்பிட்டது ஓர் இமாலயத் தவறு என்பதை இப்போது உணர்கின்றாரா?

வட மாகாண சபைத் தேர்தலில் இடம்பெற்று, அதில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை அந்தச் சபையிடம் ஒப்படைக்க வேண்டி ஏற்படும் என்ற காரணத்திற்காகவே மாகாணசபைத் திட்டத்தையே இரத்துச் செய்ய அரசு முயற்சிக்கின்றதாக புலம்பெயர் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களின்போது சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்கள். �முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ தங்கம் எங்கே? மேலும் பிடிபட்டதாகக் கூறிய பணம் எங்கே? கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே? என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபரங்களை அறிவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தனோ ஏன் ஆர்வம் காட்டவில்லை? அவ்வாறு ஐ.தே.க. கூறுவதில் உண்மை இருந்தால், அந்தப் பணம் புலம்பெயர் தமிழர்களுடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இலங்கை அரசின் சிலருக்குக் கிடையாது. அந்தப் பணம் முழுவதும் தாயகத் தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாத சம்பந்தன் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வெளியிடுவதில் ஏன் குறியாக இருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத வெற்றிடமொன்று முள்ளிவாய்க்காலின் பின் ஏற்பட்டபோது, அதனை முழுமையாக நிரப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாது என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கவோ முடியாது என்பதை தமிழர்கள் அறிவர். ஆனால், தாயக நிலைமைகளை வெளிநாடுகளுக்கு அறிவிக்கும் பணியைத் தவிர வேறு எதனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் செய்ய முடியாது என்பதும் யாதார்த்தமானது.

ஆனால், அமெரிக்காவின் தேசிய நலன் சார்ந்து இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு செல்லும் அட்டவணை செயற்றிட்டத்துக்கு உதவுவதன் மூலம் ஏதாவது நன்மைகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குக் கிடைக்குமா என முயற்சித்துப் பார்க்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அமெரிக்காவின் ஆலோசனைப் படி சில நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகின்றார். குறிப்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவின் சிறிலங்காவுக்கு எதிரான காய் நகர்த்தல்களுக்கு சம்பந்தனும் உதவி வருகிறார்.

1977ஆம் ஆண்டு முதல் திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் சம்பந்தன், கடந்த 35 ஆண்டு காலமாக தமிழருக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சேவைகள் எதனையும் செய்யவில்லை. அதேநேரத்தில் அவரின் நாடாளுமன்ற உரை கடந்த முப்பதாண்டு கால தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றது.

எனவே, கடந்த டிசம்பர் மாதம் 7ஆம் திகதியுடன் அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது என புலம்பெயர் ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. அவர் தானாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தற்போது உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராவதற்கு வழிவிட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமது போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும். �நுணலும் தன் வாயால் கெடும்� என்பதைப் போல, தமிழரின் விடுதலையைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில் உரையாற்றிய சம்பந்தன் இனிமேல் தமிழரின் உரிமைக்காக குரல்கொடுக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

- வீ.ஆர்.வரதராஜா

http://www.seithy.com/breifArticle.php?newsID=72103&category=Article&language=tamil

Edited by akootha

  • தொடங்கியவர்

திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது 2001ஆம் ஆண்டு சிங்களத் திரைப்படமொன்று தடைசெய்யப்பட்டது. அதிலும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளரான பிரபல சிங்கள நடிகரும் தயாரிப்பாளருமான காமினி பொன்சேகா அந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான திரைப்படம் என்பதினாலேயே அது தடைசெய்யப்பட்டது என செய்திகள் கசிந்தும் பி.பி.சி. என்ற பிரபல ஊடகம், அதனைக் கண்டறிந்து உண்மைத் தகவலை அச்சமயம் வெளியிட்டது. அதனை மிகவும் இரகசியமாகவே அன்றைய அரசு வைத்திருக்க முற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பி.பி.சி.யின் தகவலால் அது முடியாது போயிற்று.

தமிழீழ விடுதுலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா அரசு தோல்வியடைந்து வருகின்றது. வெளிநாடுகளின் ஆதரவு புலிகளுக்கு இருப்பதனால் அந்த ஆதரவை முறியடித்து அந்த நாடுகளின் உதவியுடனேயே புலிகளை வெற்றிகொள்ள இலங்கை அரசு இரகசியமாக திட்டமொன்றை அமுல்படுத்துகின்றது.

வெளிநாட்டமைச்சர் தமிழராக இருப்பதனால், அவரை அரசு மற்றொரு தமிழ்க் குழுவைக் கொண்டு கொலை செய்துவிட்டு, அந்தப் பழியை அப்படியே புலிகள் மீது சுமத்தி வெளிநாடுகளில் தீவிரமாகப் பரப்புரை செய்கின்றது. வெளிநாட்டமைச்சரையும் புலிகளே கொலை செய்துவிட்டார்கள் என்ற பரப்புரை சாதகமான பலனைக் கொடுக்க ஆரம்பிக்கின்றது.

பின்பு இந்தியா தலைமையில் ஒன்றிணைந்து வெளிநாடுகளும் போரைத் துவங்கி விடுதலைப் புலிகளின் களத்தை முற்றுமுழுதாக அழித்துவிடுவதுதான் காமினி பொன்சேகாவின் திரைப்படம். யதார்த்தத்துக்கு ஒத்துப் போகக்கூடிய அளவில் அவர் அன்று அந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருந்தாலும் அதனை வெளியிட அன்றைய அரசு அனுமதியளிக்கவில்லை.

மிகப்பெரும் பிரச்சினையிலிருந்து அரசு விடுபட இந்தத் திரைப்படத்தின் மூலம் முக்கிய ஆலோசனையொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது செயற்பட வேண்டுமாயின் இந்தத் திரைப்படம் பொதுமக்களின் பார்வைக்கு விடப்படக்கூடாது என அரசு முடிவெடுத்திருக்கலாம் என்றும் பி.பி.சி. அப்போது சந்தேகம் ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

அந்தத் திரைப்படம் தடைசெய்யப்பட்டு நான்கு ஆண்டுகளின் பின், அதேபோன்றதொரு சூழ்நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்ட போதும், பி.பி.சி. இந்தச் சந்தேகத்தைக் குறிப்பிட்டுக் காட்டியது. மேலும் சில ஊடகங்களிலும் இவ்வாறு வெளியாகியதை சம்பந்தன் எப்படி அறியாமல் இருந்தார் என்பது புரியவில்லை.

அவர் அது தொடர்பான விபரங்களை அறிய விரும்பினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கதிர்காமர் கொலை தொடர்பான வழக்கை ஆராய்ந்து பார்க்கலாம். கொலைச் சந்தேக நபர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிய முற்படலாம்.

அதில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் தற்போது வெளிநாட்டில் இலங்கைத் தூதரகம் ஒன்றில் வேறு பெயரில் கடமை புரிவதாக இணையத்தளச் செய்தியொன்று குறிப்பிடுகின்றது.

கதிர்காமரை சிங்களம் கொலைசெய்தது,  பழியை புலிகள் மேல் போட்டது  :wub:

  • தொடங்கியவர்

 அதில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்பட்டவர் தற்போது வெளிநாட்டில் இலங்கைத் தூதரகம் ஒன்றில் வேறு பெயரில் கடமை புரிவதாக இணையத்தளச் செய்தியொன்று குறிப்பிடுகின்றது.

இதைப்பற்றி மேலதிக தகவல்கள் தேவை.

கதிர்காமரை சிங்களம் கொலைசெய்தது,  பழியை புலிகள் மேல் போட்டது  :wub:

ராஜீவையும் புலிகள் கொலை செய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

கதிர்காமரையும் புலிகள் படுகொலைசெய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

அப்போ புலிகள்  என்ன முட்டாள்களா?

நான் நினைக்கிறேன் புலிகள் பழி தங்கள் மீது விழுந்தாலும் பற்வாயில்லை ஆனால்  புலிகள் ஒரு திறமையான   புத்திசாலித்தனாமன இயக்கம்  இந்தியாவான இந்தியாவின்  பாதுக்காப்பையும் மீறி என்ன நடந்தாலும் பறவாயில்லை என  ராஜீவை போட்டார்கள் என்ர பெயரும்  கடும் பாதுகாப்பில் இருந்த லக்ஷ்மன் கதிர்காமரையே போட்டுத்தள்ளிய சிறந்த  பிஸ்டல் குழுக்கு சொந்தக்காரர் என்ற தற்பெருமையை உலகம் பேச வேண்டும் என்று  செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தனின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விட்டது

அரசியலை பொறுத்தவரைக்கும் எப்பவோ ஒதுங்கியிருக்க வேண்டிய மனுசன்....ஈழத்தமிழனுக்கு எத்தனையோ கோடூரங்கள் நடந்த பின்னும்...நஷனல்,  வேட்டியோடை இன்னும் .......????

  • கருத்துக்கள உறவுகள்
கதிர்காமரை சிங்களம் கொலைசெய்தது,  பழியை புலிகள் மேல் போட்டது  :wub:

இது மட்டுமில்லை உரிமை கோரப்படாத அனைத்து தாக்குதல்களும் இலங்கை அரசாலே தான் மேற்கொள்ளப்பட்டவை ...............இதைவிட ஒருத்தரும் புலிகளின் போராட்ட வலுவவை கொச்சைப்படுத்த முடியாது 

சம்பந்தர் இப்போ தான் மனம் திறந்து உலகிற்கு தெரிந்த உண்மையை பேசுகின்றார் .

உண்மை கதைத்தால் தான் உலகம் ஏற்கும் என்பதையும் புரிந்துவிட்டார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இது மட்டுமில்லை உரிமை கோரப்படாத அனைத்து தாக்குதல்களும் இலங்கை அரசாலே தான் மேற்கொள்ளப்பட்டவை ...............இதைவிட ஒருத்தரும் புலிகளின் போராட்ட வலுவவை கொச்சைப்படுத்த முடியாது 
 
இதைத்தான் முதலில் எழுத நினைத்தேன் பிறகு ஏன் அவசரகுடுக்கையாக இருப்பம் என்று நினைத்துபோட்டு பேசமால் விட்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் இப்போ தான் மனம் திறந்து உலகிற்கு தெரிந்த உண்மையை பேசுகின்றார் .

உண்மை கதைத்தால் தான் உலகம் ஏற்கும் என்பதையும் புரிந்துவிட்டார் .

அண்ணையை ஒரு கைத்தாங்கலாய் தூக்கிக்கொண்டுபோய் ஒரு இடத்திலை இருத்துங்கோப்பா.....

  • தொடங்கியவர்
ராஜீவையும் புலிகள் கொலை செய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

கதிர்காமரையும் புலிகள் படுகொலைசெய்யவில்லை ஆனால் பழி புலிகள் மீது போடப்பட்டது.

அப்போ புலிகள்  என்ன முட்டாள்களா?

நான் நினைக்கிறேன் புலிகள் பழி தங்கள் மீது விழுந்தாலும் பற்வாயில்லை ஆனால்  புலிகள் ஒரு திறமையான   புத்திசாலித்தனாமன இயக்கம்  இந்தியாவான இந்தியாவின்  பாதுக்காப்பையும் மீறி என்ன நடந்தாலும் பறவாயில்லை என  ராஜீவை போட்டார்கள் என்ர பெயரும்  கடும் பாதுகாப்பில் இருந்த லக்ஷ்மன் கதிர்காமரையே போட்டுத்தள்ளிய சிறந்த  பிஸ்டல் குழுக்கு சொந்தக்காரர் என்ற தற்பெருமையை உலகம் பேச வேண்டும் என்று  செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

join.jpg

 இதில் பல படங்கள் உள்ளன  :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இப்போ தான் மனம் திறந்து உலகிற்கு தெரிந்த உண்மையை பேசுகின்றார் .

உண்மை கதைத்தால் தான் உலகம் ஏற்கும் என்பதையும் புரிந்துவிட்டார் .

தமிழர்களுக்கு தலைவனாக இருந்திருந்தால் இலங்கை அரசால் இன்று வரை நடாத்தப்படும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் எல்லோர் முன்னிலையிலும் கூறி (உண்மையை) இருக்க வேண்டும்.மக்களின் வாக்கை பெற மட்டும் பொய் வாக்குறுதிகளை வழங்குவது பின்னர் பிளேட்டை மாற்றுபவர் எப்படி ஒரு இனத்தின் தலைவராக முடியும்??.உண்மை என்பது ஒரு பக்கம் மட்டுமல்ல மற்றைய பக்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.

கதிர்காமர் அடுத்த பிரதமர் ஆகி விடப்போகிறார் எனத்தெரிந்து புலிகள் கொல்வது போல அவரை கொன்று புலிகளின் மேல் பழியை போட்டதாக சொல்லப்பட்டது. அந்நேரத்தில் கதிர்காமரை கொலை செய்வதால் ஏதாவது அரசியல் லாபம் புலிகளுக்கு கிடைத்திருக்குமா என தெரியவில்லை.

சம்பந்தரும் தனது இறுதிக்காலத்தை சிங்களவர்களிடம் சரணாகதி அரசியல் மூலம் களிக்கவே விரும்புகிறார் என்பதும் எந்தவித அரசியல் சாணக்கியம் இவரிடம் இருப்பது போலவும் தெரியவில்லை. மேற்குலகம் சிறிதளவாவது எம்பக்கம் உள்ள போது சிங்கள அரசின் அட்டூளியங்களை தன்னும் சொல்லத்தவறின் இவரின் தகுதி பற்றி மக்கள் அடுத்த தேர்த்தலிலாவது சிந்திக்க வேண்டும்.

நுணாவிலான் சம்பந்தரின் பேச்சை முழுமையாக கேட்கவும் ,புலிகளை சாடிய அழவு அரசையும் சாடியிருக்கின்றார் .அதுதான் உண்மையும் .

Frances Harrison இன் Still counting the dead வாசித்து முடித்துவிட்டேன் .அதை வாசிக்க புலிகளில் இருந்த கோவம் இன்னமும் கூடி விட்டது ( the nun இதை வாசிக்க).

ஆனால் இந்த புத்தகத்தை ஏன் தமிழர்கள் உலகம் முழுக்க கொண்டுதிரிந்து வெளியிடுகின்றார்கள் .காரணம் மக்கள் இப்போ படும் பாடும் ,அரசு செய்யும் அக்கிரமத்தையும் உலகிற்கு எடுத்து காட்டவே இதனால் புலிகள் செய்த அநியாயங்கள் தெரிந்துவிடும் என்பதைபற்றி தமிழனின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவன் நினைப்பதில்லை .கட்டாயம் வாசிக்கவும் .

கையில பிடித்து வைத்துக்கொண்டுதான் தந்தை செல்வாவையும் கொண்டு திரிந்தார்கள் .ஒருவரது சிந்தனையும் செயல்திறனும் தான் முக்கியம் பிசிக்கல் தோற்றமல்ல .புலம் பெயர்ந்து பலர் ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே வாழ்க்கையை முடித்துவிட்டார்கள் என்பதை அவர்கள் பதிவுகள் அடிக்கடி நினைவுபடுத்துகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.