Jump to content

திருவாசக விளக்கம்


Recommended Posts

thiruvasakam_zps1f7e8f33.png
 
 
யாத்திரைப்பத்து
 
சிவன் உலகம் செல்லும் யாத்திரைக்கு அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது.
 
 
பதிகம் 1.
 
திருச்சிற்றம்பலம்
 
பூவார் சென்னி மன்னன்எம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.
 
 
பொருள் :
 
பூ ஆர் - மலர் நிறைந்த, (பூசைனைக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட எம்பெருமான்)
 
சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக்கும் - உருக்குகின்ற, வெள்ளக்கருணையினால் - பெருகிய கருணையால், ஆவா என்னப்பட்டு - ஐயோ என்று இரங்கியருளப்பட்டு, அன்பு ஆய் - அன்பு உருவாய், ஆட்பட்டீர் - ஆட்பட்டவர்களே, பொய் விட்டு - நிலையில்லாத வாழ்க்கையை விட்டு, உடையான் கழல் புக - நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடைய, காலம் வந்தது - காலம் வந்துவிட்டது, போவோம் - வந்து ஒருப்படுமின் - வந்து முற்படுங்கள்.
 
 
விளக்கம்:
 
 
அழகிய பூசனை மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட சடையும்
பாம்பணிந்த புஜமும் கொண்ட எங்கள் பெருமான் 
சிறியோர் ஆகிய‌ எம் உள்ளத்திலே, 
உணர்வுமயமாகிக் கலந்து ஓயாமல் உருக்குகின்றான்.
 
இது கண்டு அவன் ஐயோ என இரங்கி, 
அவன் பெருங்கருணையினால் அவன் அன்பில் ஆட்பட்டீர்.
 
அவன் அன்பில் ஆட்பட்டவரே..
பொய் என்னும் இவ்வாழ்வு விட்டு
மெய்யாகிய எம்மிறைவன் திருவடி அடையும்
காலம் இதுவே.
அந்த‌ யாத்திரை வாருங்கள்.
 
 
 

(வளரும்)

Link to comment
Share on other sites

அடியேனின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றிகள்... :)

ஈசன் அவர்கள் பாடல் உரை வழங்கிய மாணிக்கவாசரின் திருவாசகப் பாடலினுடைய சிம்பொனி வடிவம் இளையராஜாவின் இசையில்...

http://filemirchi.info/Album/T/Thiruvasagam_160kbps/Paavar_Senni-VmusiQ.Com.mp3

http://filemirchi.info/Album/T/Thiruvasagam_160kbps/Paavar_Senni-VmusiQ.Com.mp3

http://m.youtube.com/watch?v=-zOEMzSGFSc

Link to comment
Share on other sites

அடியேனின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றிகள்... :)

ஈசன் அவர்கள் பாடல் உரை வழங்கிய மாணிக்கவாசரின் திருவாசகப் பாடலினுடைய சிம்பொனி வடிவம் இளையராஜாவின் இசையில்...

http://filemirchi.info/Album/T/Thiruvasagam_160kbps/Paavar_Senni-VmusiQ.Com.mp3

http://filemirchi.info/Album/T/Thiruvasagam_160kbps/Paavar_Senni-VmusiQ.Com.mp3

http://m.youtube.com/watch?v=-zOEMzSGFSc

 

திருவாசகத்துக்கு உருகார் இல்லாமல் இருக்கலாம் ஆனால் சிம்பொனிக்கு உருகார் உண்டோ??!!

Link to comment
Share on other sites

நன்று. திருவாசகத்துக்கு உருகார்.. ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை இப்பாடல்களை அறிந்தபின் உணர்ந்துகொண்டேன்.

Link to comment
Share on other sites

"திருச்சிற்றம்பலம்

 

பூவார் சென்னி மன்னன்எம்

புயங்கப் பெருமான் சிறியோமை

ஓவா துள்ளங் கலந்துணர்வாய்

உருக்கும் வெள்ளக் கருணையினால்

ஆவா என்னப் பட்டன்பாய்

ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்

போவோம் காலம் வந்ததுகாண்

பொய்விட் டுடையான் கழல்புகவே."

நன்றி ஈசன். இந்த வாசகம் எனது கடைசி கருத்தின் முடிவிற்கு அழகாக பொருந்துகிறது. (சுடுகிறேன், நன்றி)

இந்த வாசகம் நீங்கள் போட்ட நேரமும் கூலிக்கு மண் கொத்தியவரை பற்றி எழுதும் போது கிடைத்திருக்கிறது. அவரது பெயர் வேறு. :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருகுகிறேன், உய்வேன்...!

Link to comment
Share on other sites

Compassionate-Lord-Shiva_zpscf7c7ad2.jpg
 
பதிகம் 2.
 
திருச்சிற்றம்பலம்
 
புகவே வேண்டா புலன்களில்நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே அனைய நமையாண்ட
தகவே உடையான் தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே.
 
 
 
பொருள் :
 
நக - நாட்டார் நகை செய்ய, ஞாலத்துள் புகுந்து - உலகில் எழுந்தருளி, நாயே அனைய - நாயைப் போன்ற, நமை ஆண்ட - நம்மை ஆட்கொண்ட, தகவு உடையான்தனை - பெருமையையுடைய இறைவனை, சார - அடைந்தால், தாம் தாம் - அவரவர், தளராது இருப்பார் - தளர்ச்சி நீங்கி இருப்பார்கள், ஆதலின், அடியவர்களே, நீர் - நீங்கள், புலன்களில் - ஐம்புல விடயங்களில், புகவேண்டா - செல்ல வேண்டா, புயங்கப் பெருமான் - பாம்பணிந்த பெருமானது, பூங்கழல்கள் - தாமரைப் பூவை ஒத்த திருவடிகளை, மிக நினைமின் - மிகுதியாக நினையுங்கள், மிக்க எல்லாம் - எஞ்சியவையெல்லாம், வேண்டா - நமக்கு வேண்டா, போக விடுமின்கள் - அவற்றை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டுவிடுங்கள்.
 
 
 
விளக்கம்:
 
 
ஐம்புலன்களின் துயர் வேண்டாம் எனில்,
தாமரை மலர் அனைய எம்பெருமான் திருவடிகளை
ஓயாது நினையுங்கள்.
பாம்பணிந்த எங்கள் பிரான் திருவடிகள் அன்றி
வேறொன்றும் நமக்கு வேண்டாமே...
போக விட்டு விடுங்கள்.
 
விலங்கைப்போல் நகைப்பிற்கிடமாய் வாழும் நம்மை,
அன்பினால் ஆட்கொள்ளும் வல்லமை கொண்ட‌
எங்கள் இறைவனைச் சாராது இருப்பின்   
இப்பாழ் நெஞ்சு இளைப்பாறுவது எவ்வாறு ?
 
Link to comment
Share on other sites

மெய். எம் அம்மை அப்பனின் உலகில் இருந்து திரும்ப மனம் வராது. ஆனால் பாவங்களிற்கேற்ப திரும்ப அனுப்பபட்டுவிடுவோம்.

BIOS அழிக்கப்பட்டுவிடும். புது நான் ஒன்று உருவாவேன். அது நான் அடித்த அணிலாகவும் இருக்கலாம் அல்லது நான் நசித்த எறும்பாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
மாணிக்கவாசகர்
 
 
 இவர், அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் அமைச்சனாக இருந்தவர்.
பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரும்படி கூறிய பணத்தை எல்லாம் சிவம் ஆலயத்தின் திருப்பணிக்குக் கொடுத்துவிட்டு வந்து விட்டார். குதிரைகள் எங்கே என்று மன்னன் கேட்டால் என்ன சொல்வது என்று கலங்கியபோது, சிவன் அவரை காத்து, நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி இவருடன் அனுப்பினார். இதை, 'நரியைப் பரியாக்கி நிகழ்ச்சியாக திருவிளையாடலில் கூறப்பட்டுள்ளது.'
 
ஆனால் அந்த குதிரைகள் பின்னர் நரியாக மாறியதால் மன்னர் அமைச்சர் மீது கோபம் கொண்டு அவரை தண்டிக்க எத்தனிக்க, சிவன் மறுபடியும் தனது திருவிளையாடல் மூலம் வைகை நதியை பெருக்கெடுத்து கரைகடந்து ஒடச் செய்தார். கரையை பலப்படுத்த மன்னன் மக்களை கேட்டு, அங்கு சிவனே, ஒரு வயதான தாய்க்கு இவளின் பிரதிநிதியாக அவள் கொடுத்த பிட்டுக்கு கூலியாக சிவன் வேலையாளாக சென்று மன்னனிடம் பிரம்படி பெற்று ஒரு திருவிளையாடலும் நடத்தினான்.
 
மாணிக்கவாசகர் பாண்டியனின் அமைச்சர் பதவியிலிருந்து விலகி சீவன் முத்தராய் சிவனை வேண்டி முக்தி நெறியில் திழைத்தபோது,திருவாசகமும், திருக்கோவையாரும் பாடினார்.
 
அப்போது இருந்தவந்து புத்தமதத்தினரை வாதில் வென்று சைவ சமயத்தை ஸ்தாபித்தார்.
 
இவரின் சிறுவயதுப் பெயர் 'வாதவூரார்.'  இவருக்கு பாண்டிய மன்னனால் சூட்டப்பட்ட பட்டப்பெயர் 'தென்னவன் பிரமராயன்'. இவர் 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்.
 
இவர் செய்த திருவாசகத்திலே, பல அறியப்படாத அநேக சரித்தரங்களும்,க்ஷேத்திரங்களும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
 
இவர், புற உலகில் காண்பதை எல்லாம், சிவனுடன் சம்மந்தப்படுத்தியே எடுத்துக் கூறுவார். இவர் திருவண்ணாமலையில் வசித்து வந்தபோது,அங்குள்ள பெண்கள் எல்லாம் விடியற்காலையிலே எழுந்து சிவனின் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு அடுத்த வீட்டுப் பெண்களை எழுப்பி நீராட அழைப்பார்கள். இந்தச் செயலை 'சிவசக்திகள் சிருஷ்டியின் பொருட்டு ஒருவரையொருவர் எழுப்புவதாக பாவித்துக் கொண்டு'திருவெம்பாவையைப்' பாடி அருளினார்.

 

சிதம்பரத்திலே சிவனுடன் இரண்டறக் கலந்தபோது இவருக்கு வயது 32 மட்டுமே.

 

angry-lord-shiva-tandav-tattoo-157293.jp

 

 

தாமே தமக்குச் சுற்றமுந்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

 

 

பொருள் :

தமக்குச் சுற்றமும் தாமே - ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே,   தமக்கு விதி வகையும் தாமே - நடைமுறைகளை வகுத்துக்கொள்பவரும் அவரே;  ஆதலால், அடியவர்களே, நீங்கள்,   யாம் ஆ£¢ - நாம் யார்,          எமது ஆர் - எம்முடையது என்பது யாது,    பாசம் ஆர் - பாசம் என்பது எது,   என்ன மாயம் - இவையெல்லாம் என்ன மயக்கங்கள்?  என்று உணர்ந்து,    இவை போக - இவை நம்மை விட்டு நீங்க, கோமான் - இறைவனுடைய,   பண்டைத் தொண்டரொடும் - பழைய அடியாரொடும் சேர்ந்து,   அவன்றன் குறிப்பே - அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே,   குறிக்கொண்டு - உறுதியாகப் பற்றிக்கொண்டு,   பொய் நீக்கி - பொய் வாழ்வை நீத்து,    புயங்கன் - பாம்பணிந்தவனும்,  ஆள்வான் - எமையாள்வோனுமாகிய பெருமானது,             பொன் அடிக்கு - பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ்,  போம் ஆறு அமைமின் - போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

 

விளக்கம் 

 

நான் என்பது என்ன ? என் உடலா ? அதில் உள்ள ஞாபகங்களா ? என் அறிவா ? என் அறிவீனமா ? 
 
நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் இந்த வாழ்க்கையில்  - எது என்னை செலுத்துகிறது ? எதற்க்காக நான் காரியங்களை செய்கிறேன் ? எந்த விதிகளை நான் கடை பிடிக்கிறேன் ?
 
எனக்கு சொந்தமானது எவை ? நான் சம்பாதித்த பொருள்களா ? என் மனைவி, மக்களா ? என் நண்பர்களா ? என் உறவினர்களா ? எது எனது ?
 
இவற்றிற்கு எல்லாம் ஒரு விடை உங்களுக்கு கிடைக்கலாம். 
 
அந்த விடைகளை காலம் மாற்றிப் போடும். உங்களது என்று நீங்கள் நினைத்தவை உங்களதாக இல்லாமல் போகலாம். உங்கள் பிள்ளைகள் உங்களை விட்டு அவர்கள் வாழ்க்கையில் போய்  கொண்டிருக்கலாம். 
 
உங்கள் விடைகள் எல்லாம் ஒரு மாயையே. இன்றிருப்பது நாளை மாறலாம். மாறும். 
 
இறைவனின் குறிப்பை அறிந்து, அவனது தொண்டரோடு சேர்ந்து , பொய்யானவை எல்லாம் நீங்கி அவன் திருவடி சேரப் பாருங்கள் என்று கூறுகிறார் மணிக்கவாசகர். 
Link to comment
Share on other sites

திருவாசகத்துக்கு உருகார்.. ஒரு வாசகத்துக்கும் உருகார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.