Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு

வல்லரசுகள் எதிராகும்.

நலமா?.......

என்றும்மை நான் கேட்கப் போவதில்லை,

நாடு விட்டுப் போனவர்கள்...

அனைவரும் நலமென்று..

நானறிவேன் கண்ணாளா! - இதை

கேடு கெட்ட பிழைப்பென்று

பழித்தவரும் நீங்கள்தான்!

கொண்ட கொள்கை மாறி - மனம்

களிப்பவரும் நீங்கள்தான்!

அன்று...

இலட்சியங்கள் பேசி - எனை

இலாவகமாகக் காதலித்து - இன்று

அந்நிய புலத்தில்....

ஏன் அவலட்சணம் ஆகிவிட்டீர்?

சாகச வீரனென்று - உம்

சந்ததியே உமைச் சொல்லும்!

ஆதலால்தானே - உம்மில்

ஆசைகள் கோடி வைத்தேன் - இன்று

சாகரம் கடந்து சென்று

சா...தப்பும் கோழைத்தனம்!?.......

நான்...

ஆதி நாளில் பார்த்ததில்லை

அது எப்படி வந்ததும்மில்?

அன்பே!

வாகை மரநிழலிலே...

வாழ்ந்து நீ பார்த்ததுண்டா?

வன்னிச் சாலைகளில்..

வாடித் துவண்டதுண்டா?

சோகை நோய் வந்து...

சோர்ந்து படுத்ததுண்டா?

சொந்தங்களைக் கண்முன்னே...

துடித்து இறக்கக் கண்டதுண்டா?

காடையரின் கரங்களிலே

கன்னிமலர் சருகாகும்.

கதை முடிந்த பின்னாலே - பல

செம்மணிகள் உருவாகும்.

வாடை வரும்,.. சோளகம் வரும்

வாழ்க்கை மட்டும் கனவாகும்

வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு

வல்லரசுகள் எதிராகும்.

பசித்துண்ணப் பால் வேண்டி

பச்சைப்பிள்ளை அழும்.

பாடையிலே சிதறுகாய்போல்

பெற்றவளின் பிணம்.

மாலையிட்ட மங்கலங்கள்

மறையுமுன்னே தினம்

மணவாளன் எங்கென்று

தேடுவர் எம் சனம்.

ஏறு புகழ் புூத்த

எம் தமிழச் சாதி

சோறு வேண்டி அலைந்த நிலை

சொப்பனத்தில் கண்டதுண்டா?

பாரெல்லாம் பரந்து - தமிழ்

பண்பாடு காத்தாலும்...

பைந்தமிழ் ஈழம் காக்கும்

பணியை நீ பகர்ந்ததுண்டா?

கண்ணோடு கண்கலந்து

காதலித்தது எல்லாம்

கனடா வந்தும்மைக்

கட்டியணைக்க அல்ல!

சொந்த மண்ணில் வாழ்ந்து

சொர்க்கபுரி காண்பதற்கே!

கூடி வாழ்ந்த சொந்தம்

கூனிக் குறுகி வாடி நிற்க

பேடியாய் தப்புதற்கு - உமை

நாடி நானொன்றும்

நாட்டைவிட்டு வரமாட்டேன்.

மோடிப் படையெல்லாம்

எம் நாட்டை அபகரிக்கும் - அந்த

பீடித்த துயர் துடைத்து

வெற்றிச் சங்கு ஊதும்வரை..

தேடி நானுன்னிடம் ஓடி வருவேனோ?

சொல்லிடும் சேதியிதே...

சொந்தமுள்ள மன்னவனே!

வண்ண வண்ணக் கனவுகளை

வஞ்சி நான் துறந்துவிட்டேன்.

வண்டமிழ் ஈழமதைக்

கண்டு அகம் மலரும்வரை

தண்டக வாழ்வு வேண்டாம்.

தவிர்த்து விட்டேன் அன்பரே!

மாலையிடும் எண்ணமதை

மறந்து விடு கண்ணாளா! - நீ

மறந்த பணியதனை - இம்

மங்கை சிரம் ஏற்றிடுவாள்

தாழையாய் போன கதை

உன்னோடே இருக்கட்டும்.

தயவு செய்து அழைக்காதே! - எம்

தாய் மண்ணை இழக்காதே!

நீ....இனியவன்தான்!

இருந்தாலும் இனமானம் காத்திடh

இழிநிலை அடைந்து விட்டாய்!

புலியாகிப் போராடிப்

புதைகுழியில் புகுந்திருந்தால்

புனிதனாக உன்னை - இப்

புூவை போற்றி வாழ்ந்திருப்பாள்.

கிலி கொண்டு ஓடி விட்டாய்!

கீழ்நிலை அடைந்து விட்டாய்! - இப்போ

வலி எந்தன் இதயத்தை

பழி வாங்கி நிற்கிறது.

ஒன்று மட்டும் கூறுகிறேன் - உன்

ஓரவிழிப் பார்வை.... - என்

காதல் பகிர்ந்தது உண்மை என்றால்!!!!

புலம் பெயர்ந்த நாடதனில் - எம்

புூமித்தாயின் பெயர் சொல்!

உரத்து வரும் உன்குரலில்..

உலகம் முழுக்க விழிக்கட்டும்!

களத்தினில் எனக்கு பல கடமைகள் காத்திருக்கு!

காதலுக்கு இனி வேலையில்லை.

கலைத்து விட்டேன் அன்பரே!

இக்கடிதம் நம் காதலின் முற்றுப்புள்ளி.

வாகை மரநிழலிலே...

வாழ்ந்து நீ பார்த்ததுண்டா?

வன்னிச் சாலைகளில்..

வாடித் துவண்டதுண்டா?

சோகை நோய் வந்து...

சோர்ந்து படுத்ததுண்டா?

சொந்தங்களைக் கண்முன்னே...

துடித்து இறக்கக் கண்டதுண்டா?

காடையரின் கரங்களிலே

கன்னிமலர் சருகாகும்.

கதை முடிந்த பின்னாலே - பல

செம்மணிகள் உருவாகும்.

வாடை வரும்... சோளகம் வரும்

வாழ்க்கை மட்டும் கனவாகும்

வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு

வல்லரசுகள் எதிராகும்.

பசித்துண்ணப் பால் வேண்டி

பச்சைப்பிள்ளை அழும்.

பாடையிலே சிதறுகாய்போல்

பெற்றவளின் பிணம்.

மாலையிட்ட மங்கலங்கள்

மறையுமுன்னே தினம்

மணவாளன் எங்கென்று

தேடுவர் எம் சனம்.

ஏறு புகழ் புூத்த

எம் தமிழச் சாதி

சோறு வேண்டி அலைந்த நிலை

சொப்பனத்தில் கண்டதுண்டா?

வித்தியாசமான சிந்தனைகளில் கவிதை படைப்பவர்.

கவிதைவரிகள் மிகவும் நன்று வாழ்த்துக்கள்

இருவரின் கவிதைகளும் அருமை. பாராட்டுக்கள் சாகாரா & ஆதி

இருவரின் கவிதைகளும் அருமை. பாராட்டுக்கள் சாகாரா & ஆதி

கவிதையை வாசித்துப் பார்த்தீர்களா இரசிகை?

:roll: :shock: :roll: :shock: :roll: :shock: :oops: :oops:

கவிதையை வாசித்துப் பார்த்தீர்களா இரசிகை?

:roll: :shock: :roll: :shock: :roll: :shock: :oops: :oops:

:shock: :shock: :?: :?: :?:

பசித்துண்ணப் பால் வேண்டி

பச்சைப்பிள்ளை அழும்.

பாடையிலே சிதறுகாய்போல்

பெற்றவளின் பிணம்.

மாலையிட்ட மங்கலங்கள்

மறையுமுன்னே தினம்

மணவாளன் எங்கென்று

தேடுவர் எம் சனம்

நிதர்சனமான வரிகள்.

இங்கு கவிதைக்கு வாழ்த்துச் சொல்ல வருபவர்கள் எல்லாம் உண்மையாக கவிதையை வாசித்துவிட்டுத்தான் வாழ்த்துச் சொல்கின்றார்களோ என்று அறிய ஆதிவாசி சின்ன ஒரு பரீட்சை வைத்தவர். ரசிகை அக்கா தோற்றுவிட்டார். விமர்சனத்தின் வாயில்களை மீண்டும் திறக்கும் நேரமிது. :D:D

நன்றி வல்வைசகாரா. உங்கள் கவி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர் சிலரின் கண்களைத் திறக்கவல்லன. தன்னிலை மறந்து சுகபோகத்தில் மூழ்கியிருக்கும் சிலரின் போதையைத் தெளிவிக்க வல்லன. வாயில் மட்டும் ஈழத்தைச் சுமந்துசெல்லும் சுயநலவாதிகளின் மனதிலும் ஈழத்தை இருத்தும் வரிகள். இருந்தும் புலம்பெயர் மக்களை நோக்கி வீசப்பட்ட கவிக்கணை என்பதால் புலியாகிப் போராடுவதைத் தவிர புலம்பெயர் மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையவேண்டும் என்ற கருத்துக்களையும் தாங்கி வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்து வரும் கவிகளில் அதைச் செய்யவும் நீங்கள் நினைத்திருக்கலாம். உணர்ச்சியை மட்டும் அடிப்படையாகக்கொண்டு ஒரு கவி வந்தால் அது சிறிது நேரத்திற்குத்தான் ஒருவனை சிந்திக்கத்தூண்டும். அதேவேளை அந்தக் கவிதை வெறும் கருத்துக்களாகவும் அறிவுரைகளாகவும் இருந்தால் சுயநல மனிதனின் புத்தியில் புகுராது. ஆனால் ஒருவனை உணர்ச்சிகரமான வரிகள் கொண்டு அவனின் உணர்வுகளைத் தூண்டியபின் கணவேளையில் அறிவுரைகளையும் மெதுவாகப் புகுத்தினால் அது அந்த மனிதனிடம் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தத் தாக்கத்தின் ஆயுட்காலம் அதிகமாகவும் இருக்கும். அதைச் சமார்த்தியமுள்ள கவிஞனான நீங்கள் செய்வீர்கள் என்று நினைக்கின்றேன். இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் இந்தக் கவிக்கு நீங்கள் இட்ட பணியை அது செவ்வனே ஆற்றியிருக்கின்றது. :) :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காடையரின் கரங்களிலே

கன்னிமலர் சருகாகும்.

கதை முடிந்த பின்னாலே - பல

செம்மணிகள் உருவாகும்.

அழுத்தம் திருத்தமான வரிகள்...

வேதனை தருகிறது

காடையரின் கரங்களிலே

கன்னிமலர் சருகாகும்.

கதை முடிந்த பின்னாலே - பல

செம்மணிகள் உருவாகும்.

வாடை வரும்இ.. சோளகம் வரும்

வாழ்க்கை மட்டும் கனவாகும்

வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு

வல்லரசுகள் எதிராகும்.

எம்மண்ணின் அவலத்தையும் அத்தனை அவலம் கண்டும் கலங்காமல் கடமைக்காய் தயாராகும் கன்னி மனதினையும் படம்பிடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

என்ன ஆதி அப்படியே சகாறா அக்காவின்ரை கவியைக் கொப்பி அடிச்சுப் போட்டுவிட்டிருக்கிறியள்.

:? :? :? :? :?

இங்கு கவிதைக்கு வாழ்த்துச் சொல்ல வருபவர்கள் எல்லாம் உண்மையாக கவிதையை வாசித்துவிட்டுத்தான் வாழ்த்துச் சொல்கின்றார்களோ என்று அறிய ஆதிவாசி சின்ன ஒரு பரீட்சை வைத்தவர். ரசிகை அக்கா தோற்றுவிட்டார். விமர்சனத்தின் வாயில்களை மீண்டும் திறக்கும் நேரமிது. :lol::lol:

நானெங்கேப்பா பரீட்சை வைத்தேன்?

ஏதோ பாட்டுக்கு சும்மா கிறுக்கி விட்டுப் போனேன்.

இங்கையும் எனக்கு எதிராக புூகம்பமா?

இப்ப களத்தில் எங்க பார்த்தாலும் கதையாடல் கூடிக்கிடக்கு....

ம்..... இனிமேல் இங்கு நாம பேசி வெற்றியடைய முடியாது ஏனென்று கேட்காதீர்கள்.... எல்லாரும் எல்லாவற்றிலும் கலக்குகிறார்கள். இனிமேல் ஏதேனும் ஒரு புதிய ஏரியாவைப் பார்த்து ஆதி செட்டில் ஆகவேண்டியதுதான்...

வண்ண வண்ணக் கனவுகளை

வஞ்சி நான் துறந்துவிட்டேன்.

வண்டமிழ் ஈழமதைக்

கண்டு அகம் மலரும்வரை

தண்டக வாழ்வு வேண்டாம்.

தவிர்த்து விட்டேன் அன்பரே!

மாலையிடும் எண்ணமதை

மறந்து விடு கண்ணாளா! - நீ

மறந்த பணியதனை - இம்

மங்கை சிரம் ஏற்றிடுவாள்

தாழையாய் போன கதை

உன்னோடே இருக்கட்டும்.

தயவு செய்து அழைக்காதே! - எம்

தாய் மண்ணை இழக்காதே!

நிஐத்திலே இப்படி ஒருவர் கூறியதாக அறிந்தேன்.

அருமையான வரிகள். நாட்டை விட்டு கோழைகள் மாதிரி ஒடிவந்துவிட்டோம். வந்த இடத்தில் என்றாலும் நாட்டுக்காக எதாவது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதியிருக்கின்றீர்கள்.

உங்களுக்கு பாராட்டுக்கள் சொல்லும் அளவிற்கு கவிதை ஞானம் எனக்கு இல்லை. என்றாலும் பாராட்டுக்கள்.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியன், ஆதிவாசி, ரசிகை, சுஜீந்தன், வாசகன், அலாவுதீன், மணிவாசகன், ரமா அனைவருக்கும் நன்றிகள்.

இப்போதெல்லாம் வாசகனையும், ஆதிவாசியையும் தவிர மற்றவர்களை இத்தளத்தில் காணமுடிவதில்லை. இலக்கியன் சுஜீந்தன், ரசிகை, அலாவுதீன், மணிவாசகன், ரமா உங்களின் கருத்துக்களை மீளப் பார்க்கிறேன். உங்கள் வருகையையும் உங்கள் படைப்புகளையும் எதிர்பார்க்கும் இவள்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.