Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் தொடர்பாக T ராஜேந்தரின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும், தமிழீழ மக்கள் பற்றியும் T ராஜேந்தர் அவர்களின் கருத்து.. அவரது பாணியில் உணர்ச்சி பொங்கும் வார்த்தைகள்..

பலர் இதை முன்னரே பார்த்திருப்பீர்கள்.. ஆனால் Youtube இல் இதை நான் மட்டுமே இணைத்திருக்கிறேன்.. என்றே நினைக்கிறேன்..

பார்க்காதவர்களுக்கு இதோ!...

Edited by Kishaan

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றி கிசான். :):(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அரட்டை அரங்கத்திலும் இதே போன்ற கருத்துள்ள ஒரு கவிதையை சொன்னார். (விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக)

கிஷாண் அண்ணா கிஷாண் அண்ணா.......நன்றியுங்கோ இணைப்புக்கு..............ஆமாம நல்லா தான் கதைகிறார்.............தாடி தான் நல்லா இருக்குது அவருக்கு..... :P ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிஷாண் அண்ணா கிஷாண் அண்ணா.......நன்றியுங்கோ இணைப்புக்கு..............ஆமாம நல்லா தான் கதைகிறார்.............தாடி தான் நல்லா இருக்குது அவருக்கு..... :P ;)

ஐயோ.. தாடி எதுக்கு வைத்திருக்கிறார் என்று அவரிடம் நேரில் கேட்டுவிடாதீர்கள். ஒருமுறை "அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சியில் உப்படி கேட்டதற்கு மனுசன் அழத்தொடங்கிட்டார்.. :rolleyes:

ஐயோ.. தாடி எதுக்கு வைத்திருக்கிறார் என்று அவரிடம் நேரில் கேட்டுவிடாதீர்கள். ஒருமுறை "அசத்தப்போவது யாரு" நிகழ்ச்சியில் உப்படி கேட்டதற்கு மனுசன் அழத்தொடங்கிட்டார்.. :lol:

ஏன் கிஷான் அண்ணா அழுதவர்...நான் பேபி அழுறன் அவர் ஏன் அழுறார் கிஷாண் அண்ணா........அவரை கண்டா நிச்சயம் இதை கேட்பேன் அவர் அழுறது பார்க்க செம ஜோக்கா இருக்குமல........... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசத்தப்போவதில் தாடி வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்பதற்கு அவர் சொன்ன பதில். தான் படிக்கும் போது பிளெட் வாங்க தனது பாட்டியிடம் பணம் கேட்ட போது இந்த முகத்துக்கு என்ன சேவ் வேண்டி இருக்கு பிளேட் வாங்க காசும் அப்போ இல்லை என்ற காரணமும் தான் என்று சொன்னார்.

ஆனால் இப்போ பிளேட் Factory ஆரம்பிக்க வசதி இருக்கு என்று சொல்லி சிரித்தார்.

அட பாட்டி பிளேட் வாங்கி கொடுக்காத ஒரு காரணதிற்காக இன்னும் அவர் தாசி வைத்திருகிறாரோ.......அன்றைக்கே பாட்டி பிளேட் வாங்கி கொடுத்து இருந்தா இன்றைக்கு அவர் நம்மளை பிளேட் படுத்துற பாடு படுத்தாம இருந்திருப்பார்............. :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேக்க உணர்ச்சிபூர்வமாத்தான் கிடக்கு, ஆனா... இவர் முந்தி இப்பிடியெல்லாம் கொமென்ற் அடிக்கேல்ல, இப்ப ஏன் இருந்தாப்போல?... படம்மேதும் கிட்டடில வருதா?

அவர் இன்னும் தாசி வைத்திருகிறாரோ.....என்ன கொடுமையடா இது :( ராஜேந்திரர் எப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தான் வாதிடுவார். அவரைப் பார்த்து இப்படி பேசலாமா :(

அவர் இன்னும் தாசி வைத்திருகிறாரோ.....என்ன கொடுமையடா இது :lol: ராஜேந்திரர் எப்போதும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தான் வாதிடுவார். அவரைப் பார்த்து இப்படி பேசலாமா :D

அண்ணோய் நான் டைப் பண்ணக்க மாறி அடித்து போட்டேன் அதை போய் பெரிசாகாதையுங்கோ ;) ...........ஆமாம் வாயால ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வடிவா சொல்லலாம்................ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணோய் நான் டைப் பண்ணக்க மாறி அடித்து போட்டேன் அதை போய் பெரிசாகாதையுங்கோ ;) ...........ஆமாம் வாயால ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வடிவா சொல்லலாம்................ :P

ஆமாம் தெரியும். தமிழில் ஒரு சொல்லால் கருத்தே மாறிவிட்டது.

நான் என்றும் முருக கடவுளின் பக்தன் தான் :P

ஆமாம்மல எனி கவனாமா இருக்க வேண்டும் .................ஓ நீங்க முருகனின்ட பக்தரா அப்படியே கீபப் பண்ணுங்கோ................ :P

தளபதி கிட்டு அவர்களளை இந்திய சதி செய்து கொன்ற சமயம் தலைவர் கிட்டண்ணாவின் தாயை அணைத்து ஆறுதல் படுத்தும் உருக்கமான புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அந்த நேரம் ரி ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழ் ஆரம்பிக்கப்பட்ட காலாம். ஒரு இதழை ஆரம்பித்த காலத்திலே அந்த புகைப்படத்தை பிரசுரித்த அதற்கு ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதை கண்ணீரை வரவழைக்கும் ஒரு கவிதையாக கனத்திருந்தது.

அந்த வெளியீட்டுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது அதற்கு ராஜேந்தர் நான் துப்பாக்கிக்கு தொட்டில்கட்டி தாலாட்டு பாடவில்லை ஒரு தாயின் உணர்வை பாடினேன். இதையும் நான் செய்யாவிட்டால் எனது பத்திரிகை நடத்தாமல் விடுவது மேல் என்ன என்று பதில் அளித்திருந்தார். இது ஒரு சாதரணமானவனால் சொல்லக்கூடிய ஒன்றல்ல. தெளிவும் உணர்வும் துணிவும் உள்ள ஒருவனால் தான் சொல்ல முடியும்.

இங்கே ராஜேந்தரின் உணர்வு பூர்வமான கருத்தை ஜமுனா அவர்கள் அரட்டைகளமாக மாற்றுகின்றார்.

அவரின் கருத்தை ஒரு புறம் தள்ளி தனிமனிதனைப்பற்றி தாடியை பற்றி தொடங்குகின்றார். தாடி பின் எழுத்துப்பிழை என்ற காரணத்துடன் தாசியாக மாறுகின்றது. மீதம; தாசியில் இருந்து நகர்கின்றது.

எம் சார்பாக எழும் குரல்களை எமது கருத்துக்கள் ஊடாக அதரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுப்பவர்களை எமது கருத்துப்பகிர்வினூடாக அதிகரிக்க செய்ய வேண்டும்.

நக்கல் நளினம் அரட்டை எல்லம் எல்லா இடத்திலும் பொருந்தாது. இதை நாம் உணர வேண்டும். இணைக்கப்படும் தலை;புக்கும் அதல் உள்ள கருத்துக்கும் காலத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

கேக்க உணர்ச்சிபூர்வமாத்தான் கிடக்கு, ஆனா... இவர் முந்தி இப்பிடியெல்லாம் கொமென்ற் அடிக்கேல்ல, இப்ப ஏன் இருந்தாப்போல?... படம்மேதும் கிட்டடில வருதா?

அரசியலில்,சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி கிட்டு அவர்களளை இந்திய சதி செய்து கொன்ற சமயம் தலைவர் கிட்டண்ணாவின் தாயை அணைத்து ஆறுதல் படுத்தும் உருக்கமான புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அந்த நேரம் ரி ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழ் ஆரம்பிக்கப்பட்ட காலாம். ஒரு இதழை ஆரம்பித்த காலத்திலே அந்த புகைப்படத்தை பிரசுரித்த அதற்கு ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதை கண்ணீரை வரவழைக்கும் ஒரு கவிதையாக கனத்திருந்தது.

அந்த வெளியீட்டுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது அதற்கு ராஜேந்தர் நான் துப்பாக்கிக்கு தொட்டில்கட்டி தாலாட்டு பாடவில்லை ஒரு தாயின் உணர்வை பாடினேன். இதையும் நான் செய்யாவிட்டால் எனது பத்திரிகை நடத்தாமல் விடுவது மேல் என்ன என்று பதில் அளித்திருந்தார். இது ஒரு சாதரணமானவனால் சொல்லக்கூடிய ஒன்றல்ல. தெளிவும் உணர்வும் துணிவும் உள்ள ஒருவனால் தான் சொல்ல முடியும்.

இங்கே ராஜேந்தரின் உணர்வு பூர்வமான கருத்தை ஜமுனா அவர்கள் அரட்டைகளமாக மாற்றுகின்றார்.

அவரின் கருத்தை ஒரு புறம் தள்ளி தனிமனிதனைப்பற்றி தாடியை பற்றி தொடங்குகின்றார். தாடி பின் எழுத்துப்பிழை என்ற காரணத்துடன் தாசியாக மாறுகின்றது. மீதம; தாசியில் இருந்து நகர்கின்றது.

எம் சார்பாக எழும் குரல்களை எமது கருத்துக்கள் ஊடாக அதரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுப்பவர்களை எமது கருத்துப்பகிர்வினூடாக அதிகரிக்க செய்ய வேண்டும்.

நக்கல் நளினம் அரட்டை எல்லம் எல்லா இடத்திலும் பொருந்தாது. இதை நாம் உணர வேண்டும். இணைக்கப்படும் தலை;புக்கும் அதல் உள்ள கருத்துக்கும் காலத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

நீங்கள் சொல்வதில் 100% அர்த்தமுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜேந்தர் எல்லா இடங்களிலும் அன்றும் இன்றும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தான் பேசுவார். இது மறுக்க முடியாத உண்மை. இதை அவர் நடத்தும் அரட்டை அரங்கில் காணக்ககூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி கிட்டு அவர்களளை இந்திய சதி செய்து கொன்ற சமயம் தலைவர் கிட்டண்ணாவின் தாயை அணைத்து ஆறுதல் படுத்தும் உருக்கமான புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அந்த நேரம் ரி ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழ் ஆரம்பிக்கப்பட்ட காலாம். ஒரு இதழை ஆரம்பித்த காலத்திலே அந்த புகைப்படத்தை பிரசுரித்த அதற்கு ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதை கண்ணீரை வரவழைக்கும் ஒரு கவிதையாக கனத்திருந்தது.

அந்த வெளியீட்டுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது அதற்கு ராஜேந்தர் நான் துப்பாக்கிக்கு தொட்டில்கட்டி தாலாட்டு பாடவில்லை ஒரு தாயின் உணர்வை பாடினேன். இதையும் நான் செய்யாவிட்டால் எனது பத்திரிகை நடத்தாமல் விடுவது மேல் என்ன என்று பதில் அளித்திருந்தார். இது ஒரு சாதரணமானவனால் சொல்லக்கூடிய ஒன்றல்ல. தெளிவும் உணர்வும் துணிவும் உள்ள ஒருவனால் தான் சொல்ல முடியும்.

இங்கே ராஜேந்தரின் உணர்வு பூர்வமான கருத்தை ஜமுனா அவர்கள் அரட்டைகளமாக மாற்றுகின்றார்.

அவரின் கருத்தை ஒரு புறம் தள்ளி தனிமனிதனைப்பற்றி தாடியை பற்றி தொடங்குகின்றார். தாடி பின் எழுத்துப்பிழை என்ற காரணத்துடன் தாசியாக மாறுகின்றது. மீதம; தாசியில் இருந்து நகர்கின்றது.

எம் சார்பாக எழும் குரல்களை எமது கருத்துக்கள் ஊடாக அதரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுப்பவர்களை எமது கருத்துப்பகிர்வினூடாக அதிகரிக்க செய்ய வேண்டும்.

நக்கல் நளினம் அரட்டை எல்லம் எல்லா இடத்திலும் பொருந்தாது. இதை நாம் உணர வேண்டும். இணைக்கப்படும் தலை;புக்கும் அதல் உள்ள கருத்துக்கும் காலத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

உங்களின் கருத்து தான் என்கருத்தும். ஆதரவா கதைக்காட்டிலும், புறக்கணி அது இது எண்டு பில்ம் போடுவோம். கதைச்சாலும் 1008 நக்கல் நளினம்... காலமை ஆதரிக்காமல் மாலையில ஏன் ஆதரிச்சவர், விரல்லை நகம் ஏன் இருக்கு.... எண்டைக்கு நாங்கள் திருந்தி..... :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேந்தரின் கருத்து நன்றாக இருக்கிறது.இணைப்புக்க நன்றி கிசான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" நீங்கள் சந்திக்க விரும்பும் தலைவர் யார்?" என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியின் போது டி.ராஜேந்திரிடம் (தினத்தந்தி)பத்திரிக்கையாளர் கேட்ட போது அவர் சொன்னார்.இன்றும் என்றும் நான் சந்திக்க விரும்பும் தலைவர் தமிழீழத்திற்காக போராடும் பிரபாகரன் அவர்கள் தான்!!!

:P

தளபதி கிட்டு அவர்களளை இந்திய சதி செய்து கொன்ற சமயம் தலைவர் கிட்டண்ணாவின் தாயை அணைத்து ஆறுதல் படுத்தும் உருக்கமான புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அந்த நேரம் ரி ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழ் ஆரம்பிக்கப்பட்ட காலாம். ஒரு இதழை ஆரம்பித்த காலத்திலே அந்த புகைப்படத்தை பிரசுரித்த அதற்கு ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதை கண்ணீரை வரவழைக்கும் ஒரு கவிதையாக கனத்திருந்தது.

அந்த வெளியீட்டுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது அதற்கு ராஜேந்தர் நான் துப்பாக்கிக்கு தொட்டில்கட்டி தாலாட்டு பாடவில்லை ஒரு தாயின் உணர்வை பாடினேன். இதையும் நான் செய்யாவிட்டால் எனது பத்திரிகை நடத்தாமல் விடுவது மேல் என்ன என்று பதில் அளித்திருந்தார். இது ஒரு சாதரணமானவனால் சொல்லக்கூடிய ஒன்றல்ல. தெளிவும் உணர்வும் துணிவும் உள்ள ஒருவனால் தான் சொல்ல முடியும்.

இங்கே ராஜேந்தரின் உணர்வு பூர்வமான கருத்தை ஜமுனா அவர்கள் அரட்டைகளமாக மாற்றுகின்றார்.

அவரின் கருத்தை ஒரு புறம் தள்ளி தனிமனிதனைப்பற்றி தாடியை பற்றி தொடங்குகின்றார். தாடி பின் எழுத்துப்பிழை என்ற காரணத்துடன் தாசியாக மாறுகின்றது. மீதம; தாசியில் இருந்து நகர்கின்றது.

எம் சார்பாக எழும் குரல்களை எமது கருத்துக்கள் ஊடாக அதரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுப்பவர்களை எமது கருத்துப்பகிர்வினூடாக அதிகரிக்க செய்ய வேண்டும்.

நக்கல் நளினம் அரட்டை எல்லம் எல்லா இடத்திலும் பொருந்தாது. இதை நாம் உணர வேண்டும். இணைக்கப்படும் தலை;புக்கும் அதல் உள்ள கருத்துக்கும் காலத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

பத்திரிகை விசயம் எனக்கும் தெரியாது அதை தெரியபடுத்தின உங்களிற்கு நன்றிகள்.................ராஜேந்தர் என்றா எல்லாரும் தெரிந்தது டண்டணக்கா டண்டணக்கா தான் இது சின்ன பிள்ளை கூட அவரை இந்தளவில தான் வைத்திருக்கு............ :D .

அத்தோடு அவரின் உணர்வை நான் அரட்டை அடித்து குழப்புகிறேன் என்று கூறி இருந்தீர்கள் நான் கேட்கிறேன் யாராவது இந்த பக்கம் இந்த தலைப்பு போட்டு கருத்து எழுதினார்களா..........நான் கிஷாண் அண்ணாவோட அரட்டை அடித்து தான் கொஞ்ச பேர் வந்தவை என்ன பிழை பிடிக்க நீங்க வந்தீங்க அது அப்படியே தொடர்கிறது................ :D

சபேசன் அண்ண சொன்ன மாதிரி காலம ஆதரிக்காம மாலையில ஆதரித்த மாதிரி தான் இருக்கும்..........அவர் ஆதரித்ததை நான் மட்டம் தட்டவில்லை ஆனா...........பேச்சளவில் சொல்லுறவர்கள் எல்லாரையும் நாம் தூக்கிபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை......... :lol:

மொத்தத்தில நாங்களே எங்களின்ட சனத்தை குழப்புகிறோம் ஒரு புறம் தமிழ் சினிமாவை பார்க்க வேண்டாம் என்று சொல்லுவார்கள் மறுபுறம் அவரை இப்படி சொல்லிட்டார் என்றூ சொல்லுறீங்க முதலில நாங்க தெளிவடைய வேண்டும் ............... :D

அத்துடன் தாடி வளர்பது எல்லாம் அவரின்ட விருப்பு வெறுப்பு ஒத்து கொள்கிறேன்.............ஆனா ராஜேந்தரின் பெயர் சொன்னாலே சிரிப்பு தான் எல்லாரும் வரும் ............முக்கியமாக தமிழ்நாட்டு மக்களே அவருக்கு கொடுத்த மரியாதை அவ்வளவு தான்.................பிறகு வேறேன்ன இருக்கு கதைக்க............. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களுடைய தேவைக்காக, நலனுக்காக அல்லது ஏதாவது ஒரு எதிர்பார்ப்புக்காக பச்சோந்திகள் போல தங்களுடைய நிறத்தை மாற்றுவது ஒன்றும் தமிழ்நாட்டு அரசியலில் புதிய விடயம் அல்ல, இது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. சினிமாவும், அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை, எனவே ஒரு தரப்பினர் பற்றியும் சொல்ல படுக்கிற கருத்து அப்படியே மற்ற தரப்பினருக்கும் பொருந்தும்.

இதற்கு நல்ல உதாரணம் கருணாநிதி. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அதோ இதோ என்று எமது போராட்டத்தை பெரிதாக புகழ்ந்து தள்ளினார். அப்போது நாம் எல்லோரும் (யாழ் களத்தில்) அவருக்கு ஒத்து ஊதினோம். பின்னர் சில காலம் கழித்து பேச்சு வேறு செயல் வேறு என்பதை நிருபித்தார். அப்பொழுது நாம் எல்லோரும் அப்படியே மாறி எதிராக கருத்துக்களை வெளியிட்டோம். அவர் ஒரு பச்சோந்தியென்று வாய் கிழிய கத்தினோம்.

சரி விடயத்திற்கு வருவோம்..

ராஜேந்தர் ஊடகங்களின் பேட்டிகளில் தவிர வேறு எந்த வழியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக ஏதாவது செய்திருக்கிறார்?

உ.ம்:

வேகோ, பழநெடுமாறன் ஐயா போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதற்காக நடாத்தி வருகின்ற ஏதாவது ஒரு அமைப்பில் ராஜேந்தர் அங்கத்தவராக இருக்கிறாரா?

அவர்கள் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக காலம் காலமாக நடாத்தி வந்த ஏதாவது ஒரு பேரணியில் கலந்து கொண்டிருக்கிறாரா?

எமது போராட்டத்தின் உண்மை பற்றி தன்னுடைய படங்களில் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

எமது மக்கள் கொன்றொழிக்கப்படுவதை எதிர்த்து என்றாவது ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரா? உதாரணத்திற்கு செஞ்சோலை சிறார்கள் கொன்றொழிக்கப்பட்டபோது ஏதாவது செய்திருக்கிறாரா?

தனது நிதியில் தமிழர் புனர்வாழ்வு அமைப்புகளில் ஏதாவது ஒன்றிற்கு பங்களிப்பு செய்திருக்கிறாரா? அப்படி செய்திருந்தால் எவ்வளவு நிதியை பங்களிப்பு செய்திருக்கிறார்?

ஒட்டுமொத்தமாக இவருடைய கருத்துக்கள் அனைத்தும் தன்னை ஈழத்தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்து, தனது திரைப்படங்களை ஓட்டுவித்து எமது பணங்களை சுரண்டுவதுதான் நோக்கம் இல்லை என்பதற்கு உருப்படியான உதாரணங்கள் ஏதாவது உங்களால் சொல்லமுடியுமா?

எனது இந்த கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வீர்களானால், எனது அறிவுப் பசியை தீர்த்த உங்களுக்கு புண்ணியமாக போகும்.

நாம் பொதுவாகவே எமது போராட்டத்திற்கு நல்லது செய்வார்கள் என்று நம்பிய அனைவரும் இறுதியில் எமது காலை வாரியதுதான் வரலாறு. அந்த வரலாற்றின் படிப்பினைதான் எமது ஆழ்மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் நாம் எவரையும், எந்த சந்தர்ப்பத்திலும் நம்பக்கூடாது என்ற நிலைக்கு எம்மை தள்ளிவிட்டிருக்கிறது.

அதன் ஆதங்கம்தான் ஜமுனாவையும் அவ்வாறான கருத்தை எழுதுவதற்கு துாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

Edited by Kishaan

கிசாண் அண்ணாவின் கருத்து தான் என்னுடைய கருத்தும்..............யாரும் இதற்கு வந்து பதில் அளிக்கலாமே................ :lol:

:lol:

ஒட்டுமொத்தமாக இவருடைய கருத்துக்கள் அனைத்தும் தன்னை ஈழத்தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்து, தனது திரைப்படங்களை ஓட்டுவித்து எமது பணங்களை சுரண்டுவதுதான் நோக்கம்

ராஜேந்தர் மட்டுமல்ல இன்னும் பலர் இப்படித்தான். எமது சாவிலும், எமது அவல வாழ்விலும்,

எங்கள் சோகத்திலும் ,எங்கள் குருதியிலும் தங்கள் வாழ்வை மேம்படுத்தும் இவர்களைப் பற்றி

எப்படி சொல்வது? என்ன சொல்வது?

நாளை கொழும்புக்கு வரவழைத்து இவர்களுக்கு மாலை போட்டால் அப்படியே

தலைகீழாக மாறக்கூடியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.