Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதி மத பேதமின்றி அனைத்து மக்களுக்காகப் போராடும் சங்கபரிவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதமாற்ற முயலும் கும்பல்களுக்கு எதிராகவும், இந்தியாவின் கலாச்சார அடையாளங்களையும் பேணவும் உருவாக்கப்பட்ட அமைப்புத் தான் சங்கபரிவார், மற்றும் ஆர்எஸ்எஸ். சுனாமி, பூம்பம் போன்ற விடயங்களில் இந்திய அரசை விட முந்திக் கொண்டு செயற்பட்டது குறித்துப் பாராட்டதவர்கள் இல்லை எனலாம்.

இவர்கள் தான் மதமாற்ற முயலும் கும்பல்களுக்குப் பிரச்சனை. எனவே, இவர்களைப் பற்றி வதந்திகளையும், கெட்ட பெயரையும் உருவாக்கப் பலருக்குப் பணம் கொடுத்து கெட்டபெயரை உருவாக்க முயல்கின்றார்கள். தமிழ்நாட்டிலும் சில அமைப்புக்கள் வெளிநாட்டு மதமாற்றச் சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கெட்ட பெயரை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றன. இந்த விலை போன தமிழ்நாட்டு அமைப்புக்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற பணத்தின் அடிப்படையில் தமிழனத்தைச் சிதைத்து தனித்தனியாக்கி மதமாற்றச் சக்திகளுக்கு இரையாக்குவார்கள்.

இவர்களிடம் ஒரு உருப்படியான கொள்கை ஏதும் இருக்காது. மற்றவர்களைப் பற்றிக் குறை சொல்வது தான் மழு நேரப்பிழைப்பாக இருக்கும்.

அதை விடுவோம்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பற்றிய இணைப்புக்கள்.

http://www.youtube.com/results?search_quer...mp;search_type=

  • Replies 130
  • Views 17.1k
  • Created
  • Last Reply

கொஞ்சம் வட இந்திய நண்பர்கள் அல்லது வட இந்தியாவில் வாழ்ந்த தமிழர்களை கேட்டுப்பாருங்கள்....! கதையல்ல நிஜத்தை சொல்லுவார்கள்...! சங்க பரிவார்கள்.. ஒரு கடைந்தெடுத்த மதவாத அமைப்பு... அதற்கு கொள்கைகள் எதுவுமே கிடையாது..! இந்துத்துவா....! அவ்வளவு தான்..! சிறுபான்மையினரை ஒடுக்குவது தான் அதன் பிரதான வேலை..!

தூயவன்... மதத்துக்கும் இனத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மதச்சுதந்திரம் அனுமதிக்கப்பட்ட ஒன்று... மதம் ஒரு நம்பிக்கையெ...அதை வெறியாக்காதீர்கள்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லீ

வெறுமனே கிறு விழுந்த சீடி போல இதே கருத்தைச் சொல்லி நியாயப்படுத்துகின்ற வேலைகள் வேண்டாமே. சங்கபரிவார் வெறுமனே வட இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ்நாடு உற்பட்ட தென்மாவட்டங்கள் அனைத்திலும் கிளைகளைக் கொண்டுள்ளது.

வெறுமனே குற்றச்சாட்டுக்களை எறிவதன் மூலம் குறித்த அமைப்பைப் பற்றித் தப்பிப்பிராயம் உருவாக்குவது தவறானது. பணம் வாங்கித் தமிழ் மக்களைப் பிரிவினை வாதங்களுக்குச் செலுத்தும் திராவிமட அமைப்புக்களின் கதையைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் அப்படிப் பேசினால் பணம் வருகின்றது. உங்களுக்கு ஒன்றுமே வரப்போவதில்லை...

அவர்களைப் போல மக்களைத் திரட்டிச் சேவை அமைப்பினை உருவாக்க மற்றவர்களர்ல முடியவில்லை. உடனே ஒப்பாரி வைக்கத் தானே செய்வார்கள்

மதநம்பிக்கை என்பது உண்மையாக வர வேண்டுமே தவிர, பணம் கொடுத்தோ, அல்லது கோவில்களை இடித்து அதிலே தங்களுடைய வியாபாரடி மதங்களைப் புதைத்ததில் இருந்து எழுந்து வருவதால் அல்ல.

இலங்கையிலும் இப்படி சாதி மத பேதமற்ற மக்கள் சேவையாற்றும் ஒரு அமைப்பு இருக்கிறது. அதனுடைய பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை. ஏதோ யாதி கெல்ல உருமய்யா என்று வரும். கிட்டத்தட்ட அப்படித்தான் சொல்வார்கள்.

இந்த அமைப்பும் மிக நல்ல அமைப்பு. நாட்டுப் பற்றோடு சேவை ஆற்றி வருகிறது. ஆனால் இவர்களைப் பற்றியும் சிலர் கீறல் விழுந்த சீடி மாதிரி அவதூறு பரப்புவார்கள்.

Ban The RSS In The UK - Nazi Ideology

Edited by narathar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலும் ஒரு சாதி வெறி இல்லாத அமைப்பு ஒன்று இருக்கின்றது. எது நடந்தாலும் இவர்கள் பார்ப்பானி, இந்து மதம் என்று ஒப்பாரி வைப்பார்கள். தலித், பிராமணி, என்று ஒவ்வொரு சாதியையும் வலுப்படுத்தி தமிழனை ஒற்றுமையில்லாமல் சிதைத்த நாககாரக் கும்பல்கள் தான் இவர்கள்.

இவர்களால் ஆர்எஸ்எஸ் போலத் தங்களைக் காட்ட முடியாது. ஏனென்றால் இவர்கள் வாய் வீச்சைத் தவிர வேறு ஒன்றையும் செய்தது கிடையாதே. ஏதாவது உருப்படியாக மக்களுக்கு ஆற்றின ஒன்றே ஒன்று, என்னவென்றால் ஊர் முழுக்க கன்னடனுக்கும், வட இந்தியன் அம்பேத்காருக்கும் சிலை வைத்தது தான்.

-----

நாரதர் இணைத்த இணைப்பு மட்டுமல்லாமல் நிறைய இணைப்புக்கள் இணையத்தில் இருக்கின்றன. இங்கே மதம் பரப்ப வந்தவர்கள் தங்களுக்குத் தடையாக இருப்பது ஆர்எஸ்எஸ் என்றவுடன் உடனே அதற்கெதிராக ஒப்பாரி வைப்பார்கள். கஸ்மீரத்தில் இந்துக்களைப் படுகொலை செய்து, மிரட்டி மதம் மாற வைக்க முயலும் முஸ்லீம் அமைப்புக்களும் இத்கு விதி விலக்கல்ல.

வாகனம் எரித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற பாதிரியார் கொலை கூட, அவர்களுக்கிடையே நடந்த போட்டியும், அனுதாபம் தேடுகின்ற வேலையாலும் தான் நடத்தப்பட்டதாக தற்போது செய்திகள் மெலிதாகக் கசியவிடப்பட்டுள்ளன. கொலை செய்தவனை ஆர்எஸ்எஸ்காரர் என்று அடையாளப்படுத்துவது மூலம் தப்பிக்கச் சிலர் முயன்றது தோல்வியில் முடிந்துள்ளது.

Saffron Warriors - India

Edited by narathar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் ரெம்பக் கஸ்டப்படாதையுங்கள்.

மதம் மாற்றத் தடையாக இருப்பதால் பல தடவைகள் இந்த்க கும்பல்கள் ஆர்எஸ்எஸ் மீது சேற்றை வாரி இறைத்துள்ளன.

அதை மொத்தமாகவே இங்கே பெறலாம். ஒவ்வொன்றாகத் தேடிக் கஸ்டப்படாமல் இங்கே எடுக்கலாமே...

http://www.youtube.com/results?search_quer...mp;search_type=

ஒரு இந்துவாக இருந்தாலும் நல்ல மனிதனாகவும் நல்ல சிந்தனையுள்ளவனாகவும் இருக்கின்ற ஒருவான் சங்பரிவாரை ஆதரிக்க மாட்டான்.

சங்பரிவாரை ஆதரிப்பது கிட்லரை ஆதரிப்பதற்கு சமம். மிகப் பெரிய இனப் படுகொலைகளையும் கொள்ளைகளையும் பாலியல் வன்புணர்வுகளையும் நடத்திய ஒரு கும்பல் அது.

அந்தக் கும்பலுக்கு மனிதாபிமானம் உள்ள யாரும் வக்காலத்து வாங்க மாட்டார்கள்.

இந்தக் கும்பல் எந்த ஒரு சேவையும் செய்வது இல்லை. மதவெறியை ஊட்டி இளைஞர்களை மூளைச் சலவை செய்வார்கள். அவர்களுக்கு உடற் பயிற்சி என்ற பெயரில் கொலை செய்யப் பயிற்சி வழங்குவார்கள். வரலாற்றையே தலை கீழாக சொல்லிக் கொடுப்பார்கள்.

கோவையில் நடந்த குண்டு வெடிப்பினை அடுத்து சில தமிழ் நாட்டு இளைஞர்களும் சங்பரிவாரில் சேர்ந்து பின்பு அவர்களின் சுயரூபம் தெரிந்து விலகி பல உண்மைகளை வெளிக் கொணர்ந்து இருக்கிறார்கள்.

அந்த இளைஞர்கள் இன்றைக்கும் இந்துக்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மனிதர்களாக இருக்கிறார்கள்.

இங்கே ஒருவர் மதவெறியால் சங்பரிவாருக்கு வக்காலத்து வாங்குகின்ற அளவிற்கு தன்னை தரம் தாழ்த்திக் கொண்டது வேதனையான விடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்து சும்மா ஒரு புலம்பல் தான். உங்களின் கருத்தை உல்டா பண்ணினால் இப்படித் தான் வரும்.

ஒரு தமிழனாக இருந்தாலும் நல்ல மனிதனாகவும் நல்ல சிந்தனையுள்ளவனாகவும் இருக்கின்ற ஒருவான் திராவிடக் கும்பலை ஆதரிக்க மாட்டான்.

திராவிடக் கும்பலை ஆதரிப்பது கிட்லரை ஆதரிப்பதற்கு சமம். தமிழ் அழிப்பையும், கொள்ளையும், இளம் பெண்களைர் பாலியல் வன்புணர்வுகளையும், பல தாரத் திருமணங்களையும் நடத்திய ஒரு கும்பல் அது.

அந்தக் கும்பலுக்கு மனிதாபிமானம் உள்ள யாரும் வக்காலத்து வாங்க மாட்டார்கள்.

இந்தக் கும்பல் எந்த ஒரு சேவையும் செய்வது இல்லை. வெறுமனே மக்களின் மனங்கள் இனப்பிரிவுச் சிந்தனைகளையும், ஆரியம் பார்ப்பானி என்று எல்லாப் பிரச்சனைகளையும் அதில் கட்டித் தீர்வு கிடைக்காமல் ஊட்டி இளைஞர்களை மூளைச் சலவை செய்வார்கள். வரலாற்றையே தலை கீழாக சொல்லிக் கொடுப்பார்கள்.

தினகரன் அலுவலகத்தில் திராவிடத்தைக் காக்க நெருப்பு வைத்ததும், வீதிக்கு வீதி சிலை வழிபாடு செய்வதும் இவர்களின் வெற்றிக்குச் சான்று.

இங்கே ஒருவார் வரலாறே தெரியாமல் புலம்புவதே வேடிக்கையான ஒன்று.

--------------------------

சங்கபரிவார் செய்கின்ற சமூகத் தொண்டுக்களைப் பட்டியிட்டபோது, அதற்கு இணையாக ஒன்றுமே செய்யாத வாய்ச் சொல் வீரர்கள் வாயில் புகை கக்கும் என்பது ஊகித்த ஒன்று தான்.

Edited by தூயவன்

தமிழை அழித்தது திராவிடமா? இங்கே உங்களை கணணியில் தமிழை எழுதச் செய்ததே திராவிடம்தான். நன்றி உணர்வோடு இருங்கள்.

திராவிடன் என்பவன் தமிழன்.

பலதார மணம் இந்து மதத்தில் இருக்கின்ற ஒன்று. பாலியல் வன்புணர்வு சிவன் செய்கின்ற ஒன்று. முனிவர்களின் ஆணவத்தை அடக்க அவர்களின் மனைவியரை வன்புணர்வு செய்தாராம். தமிழை அழித்தது ஆரியம்.

நீங்கள் ஆரியத்தை திராவிடம் என்று புரிந்து வைத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறது.

தினகரன் அலுவலகம் கொழுத்தப்பட்டதற்கும் திராவிடத்திற்கும் என்ன சம்பந்தம்?

உங்களுக்கு வரலாறுதான் தெரியவில்லை என்று பார்த்தால், இன்றைக்கு நடக்கின்ற செய்திகள் கூடத் தெரியாமல் இருக்கிறீர்களே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழைக் கணினியில் கொண்டு வந்ததைக் கூட உரிமை கோருவதை விட்டு வைக்கமாட்டீர்கள். கணனி தொடர்பாக அறிவுபெற்ற எந்தத் திராவிடவாதியாவது காட்டுங்கள் பார்ப்பம். அன்றைக்கு இந்தியத் தளம் ஒன்றில் இந்திய நண்பர் எழுதுகின்றார். ரெஸ்ரியுப் குழந்தையை அப்போது ராமசாமி அறிமுகம் செய்தபோது எல்லோரும் எதிர்த்தார்கள். இப்போது ஆதரிக்கின்றார்கள். ராமசாமி எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று. அது எப்படி என்று கேட்டால் பெண்கள் குழந்தைகளைச் சுமக்கக்கூடாது. அது பெண்களின் உரிமையைப் பாதிக்கின்றது என்று புலம்பினாரே. அது தான் தான் அவரது தீர்க்கதரிசனமாம்.

எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகின்றார்கள்.

திராவிடக்கும்பலில் உள்ள யாராவது தலைவர் 1 மனைவியோடு நிற்பாட்டியுள்ளனரா? எல்லாம் பலதாரம். அதிலும் கிழட்டு வயதில் இளம்பெண் கூடச் சல்லாபம். அதற்கு சொத்துப் போகக் கூடாது என்று நியாயம் வேறு. அந்தப் பெண்ணை மகளாகத் தத்தெடுத்து வளர்த்தால் ஏன் சொத்துப் பிரிகின்றது.

யாரோ ஒரு போலிச் சாமி ஏதாவது செய்தால் இந்து மதத்தைக் குற்றம் சாட்டுவது சரி என்றால், தினகரன் எரிந்து அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கும் திராவிடத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பிருப்பதை மறுக்கமுடியாது.

நிச்சயமாக நீங்கள் புனைகின்ற வரலாற்றை நான் அறிந்திருக்கவில்லை. அதனால் தான் ரெம்பவே கஸ்டப்படுகின்றேன்.

உங்களுக்கு திராவிடர் அமைப்புகள் மேல் கோவம் இருக்கலாம்... அதற்காக சங்கபரிவார்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்...!சங்கபரிவார்கள் காலைச் சுத்தின பாம்பு.. கடிக்காமல் விடமாட்டார்கள்..! அவர்களுக்கும் நாசிகளுக்கும் வித்தியாசம் இல்லை.. இந்து மதத்தின் போர்வையில் ஒளிந்திருக்கும் குள்ள நரிகள்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லீ சங்கபரிவார் சமூகத்pற்குச் செய்கின்ற சேவைகளைத் தான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதைச் போல மக்களுக்குச் சேவையற்ற முடியாதவர்கள் அவர்கள் மீது சேறை விசுறுவது நடக்கத் தான் செய்யும்.

தன்னுடைய இனத்தின் அடையாளங்களையும், பண்பாட்டையும் பேண வேண்டும் என்ற எந்தக் கோசமும் நாசிகள் தான் என்றால் எந்தப் போராட்டமும் நாசியாகத் தான் மாறும்.

தமிழனத்திற்கு அது என்றைக்குமே தீங்கு செய்யாதபோது அதைப் பற்றிய அவதூறுகள் எமக்கு அவசியமற்றது.

காலம் காலமாக அது மேலே தெரிவிக்கும் ஆதாரமற்ற காழ்ப்புணர்ச்சியாகவே உங்களின் கருத்தினைப் பார்க்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்சா அல்லா

நியாயப்படுத்தல்கள் தொடரும். கோத்ரா கொலைவெறியாடிவர்கள், ஏதொ முதல் நாள் சம்பவம் தான் காரணம் போலவும், தங்களில் தப்பில்லை போலச் சொல்ல வருவதும் நியாயப்படுத்துகின்ற ஒன்று தான்.

அவரவர் கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் தான், ஆக்கங்களாக வெளிப்படுகின்றன. நான் உற்பட

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தது தந்தை பெரியார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இன்றைக்கு நீங்கள் னா, ணா, றா, னை, ணை, லை, ளை என்ற எழுத்துக்களை தந்தை பெரியார் கொண்டுவந்தது போன்றுதான் எழுதுகிறீர்கள். கணணியில் தமழில் எழுதுவதற்கு இந்த எழுத்துச் சீர்திருத்தம் பெரும் உதவி புரிகிறது.

இந்த எழுத்துச் சீர்திருதத்தை நீங்கள் கன்னடர் என்று அழைக்கும் தந்தை பெரியார் உருவாக்கி, மலையாளி என்று அழைக்கப்படும் எம்ஜிஆர் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

நீங்கள் சுத்தத் தமிழர்கள் என்று கருதுபவர்கள் அப்பொழுது கோயிலில் கம்பராமாயணம் படித்துக் கொண்டிருந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேராசியர் ராமசாமி வாழ்க... தமிழில் எத்தனை எழுத்து இருக்கின்றது என்று 4ம் ஆண்டிலேயே கற்றுத் தெரிந்து கொண்டிருந்தாரோ??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எழுத்துச் சீரமைப்பின் வரலாறும் அதன் இன்றைய தேவைகளும்...-------------------------------------------------------------------

சரவணன்

மீண்டும் நாம் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி யோசிக்க வேண்டிய தேவையைக் கணனியின் வருகையும் உறுதிப்படுத்தி உள்ளது. இன்றைய தமிழ் ஆட்சியாளர்களும், தனித்தமிழ் ஆர்வலர்களும் எழுத்துச் சீர்திருத்தத்தை மொழிக்கு எதிரானதாக முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு எழுத்துச் சீர்திருத்த வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை தற்காலத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் மொழி வரி வடிவம், ஒலி வடிவம் என இரண்டு வடிவங்களுடன் இயங்கி வருகிறது. இதில் ஒலி வடிவமே அடிப்படையானது. எழுத்து வடிவம் என்பதெல்லாம் ஒலி வடிவத்தைப் புரிந்து கொள்ளும் பொருட்டு நாமாக ஏற்படுத்திக் கொண்ட குறியீடுகள்தான். ஆக, இந்தக் குறியீடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதால் தமிழ் மொழிக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அதுவுமின்றிக் காலப் போக்கில் மொழியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் இயற்கையானதே.

தமிழில் முதன்முதலாக எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனையை செயல்படுத்திக் காட்டியவராக வீரமாமுனிவர் அறியப்படுகிறார். வீரமாமுனிவருக்கு முந்தைய தமிழ் வழக்கில் ஏகாரம், ஓகாரப் பிரிவினைகள் இல்லை. அவருடைய காலத்திற்குப் பின்னரே இவ் வழக்குகள் புழக்கத்திற்கு வந்தன. ஆக, மாற்றம் குறித்த சிந்தனை 1720-களிலேயே இருந்ததாக அறிய முடிகிறது.

தொடர்ந்து 1934-ல் சென்னையில் நடந்த தமிழன்பர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட எழுத்துச் சீர்திருத்த தீர்மானத்தையடுத்து பெரியார் தன்னுடைய 'குடியரசு' இதழின் வழியாகச் சில சீர்திருத்த முயற்சிகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். அது பற்றிப் பெரியார் கூறும்பொழுது,

''மாற்றுவதும் திருத்துவதும் யாருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ ஆகிவிடாது. மேன்மையடையவும் காலத்தோடு கலந்து செல்லவும் எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய்ப் பாட்டி காலத்தைய பண்டைக் காலத்தைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால் அழிபட்டுப் போவோம். பின்தங்கிப் போவோம். மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க் கருவிகள் காலத்துக்கேற்ப மாற்றப்பட வேண்டும்'' என்று கூறியதையொட்டி பெரியாருடைய நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம்.

1934- ஐத் தொடர்ந்து 1941-இல் மதுரையிலும், 1984-இல் சென்னையிலும் நடந்த தமிழ் மாநாடுகளின்போது எழுத்துச் சீர்திருத்தம் பற்றி விவாதிக்கப்பட்டுச் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை 'சுதேசமித்திரன்' நாளிதழ் செயல்பாட்டளவில் சிறிது காலம் பயன்படுத்தி வந்து பிற்பாடு கைவிட்டது. மீண்டும் 1951-ல் தெ.பொ.மீனாட்சிசுந்தரம்., மு.வரதராசனார், சேதுப்பிள்ளை முதலானோர் குழு ஒன்று அரசுக்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அறிக்கை அளித்தது. அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறையில் இறுதி வரை செயல்படுத்திக் காட்டியவர் பெரியார் மட்டுமே. பெரியாரின் சீர்திருத்தங்களில் னை, னா, னோ, னொ போன்றவற்றை மட்டும் அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. அதையே நாம் இப்பொழுது பயன்படுத்தி வருகிறோம்.

எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வா.செ. குழந்தைசாமி, ''தமிழில் இன்று நாம் பயன்படுத்தும் 247 ஒலியெழுத்துகளுக்கு 124 வரி வடிவம் தேவையில்லை. சுமார் 30 குறியீடுகளில் 247 ஒலிகளையும் எழுத்து வடிவில் உருவாக்க முடியும். அவ்வளவு எளிமைக்கு இடம் இருக்கும்பொழுது, நாம் அதைத் தவறாது, தாமதிக்காது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்கிறார். ஏன்? 30 குறியீடுகளாகக் குறைக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையாக வா.செ. குழந்தைசாமி,

''விசைப்பலகையில் (keyboard) நமது மொழியின் வேகம் ஆங்கிலத்தோடு ஒப்பிடத் தகுந்ததாக இல்லை. ஒரு நிமிடத்துக்கு 45 சொற்கள் ஆங்கிலத்திலும், 41 சொற்கள் தமிழிலும் அடிக்க முடிகிறது. ஆங்கிலத்தை விடவும் தமிழில் வேகம் குறைவாகவே தட்டச்சு செய்ய முடிகிறது'' என்பதை முன் வைக்கிறார்.

247 ஒலி எழுத்துகளுக்கு 124 வரி வடிவம் உள்ளதால் அடிப்படை எழுத்துகளைக் குழந்தைகள் மனதில் நிறுத்திப் புரிந்து கொள்வதற்கு நீண்ட நாள்கள் பிடிக்கின்றன. இதனால் அடிப்படைக் கல்வி என்பதை விரைவாக அடைதல் என்பது சாத்தியமில்லாததாக ஆகி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது பயன்படுத்தி வரும் எழுத்துகளிலுள்ள வளைவுகளும், சுழிவுகளும் கற்றுக் கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன என்கிற வாதமும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

ரோமன் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தும் மற்ற பல ஐரோப்பிய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் 26 எழுத்துக்கள். ஜெர்மானிய மொழிக்கு 29 எழுத்துக்கள், ரஷ்ய மொழிக்கு 33 எழுத்துக்கள். இறு உலகில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் 13 மொழிகளில் 8 மொழிகள் முப்பதுக்கும் குறைவான வரி வடிவங்களையே கொண்டுள்ளன.

கணனிப் பயன்பாடு வேகமாகப் பரவி வருகிற இந்த காலத்தில் கணனிக்குத் தகுந்தவாறு தமிழ் மொழியையும் வடிவமைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

ஏன் மாற்ற வேண்டும் ?

எப்படி மாற்ற வேண்டும் ?

என்பதெல்லாம் இனி வாசகர்களின் விவாதங்களுக்கு...

நன்றி ஆறாம் திணை.

---------------

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்.. வீரமாமுனிவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் ரெம்பக் கஸ்டப்படாதையுங்கள்.

மதம் மாற்றத் தடையாக இருப்பதால் பல தடவைகள் இந்த்க கும்பல்கள் ஆர்எஸ்எஸ் மீது சேற்றை வாரி இறைத்துள்ளன.

அதை மொத்தமாகவே இங்கே பெறலாம். ஒவ்வொன்றாகத் தேடிக் கஸ்டப்படாமல் இங்கே எடுக்கலாமே...

http://www.youtube.com/results?search_quer...mp;search_type=

எமது மதத்தை மற்றைய மதங்களிலும் விட உண்மையுள்ள மதமாக மாற்றினால்............ மக்கள் மதம் மாறுவார்கள் என்ற அச்சத்தில் இருந்து விடுதலை அடைவதோடு. இப்படியான ஆயுதமுனையில் மக்களை மதத்தில் வைத்திருக்க வேண்டிய காடடாயமுமில்லாமல் போகுமே????

அதற்கு எமது மதத்தில் உள்ள தவறுகளையும் பொய்பரப்புரைகளையும் நாம் இனம் கண்டு அகற்ற வேண்டும். அதற்கு எமது மதத்தில் உள்ள மூடதனங்களையும் ஓரு வகையினர் மட்டுமே லாபமடையக்கூடிய வகையில் திரித்து விட பட்டுள்ளவைகளையும் நாம் இனம் கண்டு அகற்ற வேண்டும்.

அதற்கு முயற்சி செய்தால் உடனேயே அதை தடுத்து நிறுத்த ஓடிவந்து விடுவீர்கள்............... வந்து இந்து சமயம் புனிதமானது... புனிதமானது... புனிதமானது....... இதைதான் சொல்லுவீர்கள் இதுவரையில் ஏன் புனிதமனது என்ற கருத்தை நீங்கள் முன்வைக்கவில்லை.

நீங்கள் இப்போது தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தலைப்பை மீண்டும் ஒருமுறை நீங்கள் திருப்பி வாசித்து பாருங்கள். இது ஒரு மதசார்பற்ற அமைப்பு என்ற பெயரில் இத்தலைப்பை தொடங்கினீர்கள்.................. பின்பு மற்றையவர்கள் எழுதுவதற்கு நீங்களும் அதைபோல கொப்பி அடித்து திராவிட என்ற ஒரு சொல்லைமட்டும் புதிதாக புகுத்தியுள்ளிர்களே தவிர........ இந்த அமைப்பைபற்றி என்ன செய்தார்கள் என்ன செயதுகொண்டிருக்கின்றார்கள் என்று எந்த தகவலையும் நிங்கள் இதுவரையில் எழுதவில்லை. ஆனாலும் உங்களுக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன் காரணம் உண்மையிலேயே நான் இந்த அமைப்பைபற்றி முன்பு அறிந்திருக்கவில்லை. இதை நீங்கள் இந்த இடத்தில் இணைத்ததால் மற்றவர்களும் வந்து கருத்துக்கள் சொன்னதால் அறிய முடிந்தது.

ஆனாலும் நல்லவர்கள் என்பதை 20வீதமும். கெட்டவர்கள் என்பதை 80வீதமும் எற்றுக்கொள் கூடியதாகவே மேலே உள்ள கருத்துக்கள் ஆதாரம் காட்டுகின்றன. நல்லவர்கள் என்று நீங்கள் நீருபிக்க விரும்பினால் மேலும் ஆதாரங்களுடனான இணைப்புக்களும் கருத்துக்களும் தேவை தயவு செய்து அதை செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் இப்படி சாதி மத பேதமற்ற மக்கள் சேவையாற்றும் ஒரு அமைப்பு இருக்கிறது. அதனுடைய பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை. ஏதோ யாதி கெல்ல உருமய்யா என்று வரும். கிட்டத்தட்ட அப்படித்தான் சொல்வார்கள்.

இந்த அமைப்பும் மிக நல்ல அமைப்பு. நாட்டுப் பற்றோடு சேவை ஆற்றி வருகிறது. ஆனால் இவர்களைப் பற்றியும் சிலர் கீறல் விழுந்த சீடி மாதிரி அவதூறு பரப்புவார்கள்.

வேலையில் இருந்தே இதை வாசித்தேன் சிரிப்பு அடக்க முடியவில்லை. பெரிதாக வாய்விட்டு சிரித்துவிட்டேன் கூட இருந்தவர்கள் வந்து என்ன என்ன என்று கேட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரை குறைப் படிப்பாளர்களைப் பற்றி என்ன சொல்ல இருக்கின்றது. இத்தலைப்பில் நான் இணைத்த ஒளிக்காட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு எவ்வாறு மக்களுக்கு வாய்ப் பேச்சில்லாமல் தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதாகும். அதன் சேவைகளைக் காட்ட குறித்த 6 ஒளிக்காட்சிகளைப் பார்த்தாலே புரியும். அதற்கு எழுத்து வடிவம் தேவைப்படாது.

ஆனால் வழமை போல இந்து மதத்தைப் பற்றிப் புறணி பாடுகின்றவர்கள் அதைப் பற்றிக் குற்றம் சாட்டுவதற்கு வெளிப்பட்டபோது தான் அதை நியாயப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இங்கு குறித்தவரின் கருத்தில் திராவிட என்ற சொல்லைச் சேர்த்து மாற்ற எழுத வேண்டி வந்தது. அவர் வழமையாகவே சும்மா இப்படித் தான் ஒப்பாரி வைப்பார் என்பதைத் தவிர உருப்படியாக எதுவும் அவரிடம் இருந்து வந்ததில்லை. அதை மாற்றினால் கூடத் திராவிடவாதகளின் செயற்பாட்டிற்குப் பொருந்தக் கூடியதே.

இந்த மேலைத் தேச ஊடகங்கள் ஏன் இப்படி ஒப்பாரி வைக்கின்றன என்று பார்த்தால் அவர்கள் தமக்குச் சார்பான ஒரு சமுதாயத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைக்குத் தடையாக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புக்களே தடையாக இருக்கின்றன என்பதால் தான். யார் செய்தாலும், அல்லது பணம் கொடுத்து தாங்களே இப்படி ஒரு நாடகத்தை நடத்தி அனுதாபம் தேட முயற்சிக்கின்ற செயலை மறைக்கவேண்டிய தேவை ஏதுமில்லை. இந்த இணைப்பைப் பார்த்தாவது இவர்களின் சுத்து மாத்தைப் புரிவீர்கள் என நினைத்தேன். ஆனால் வழமை போல....

வேலையில் இருந்தே இதை வாசித்தேன் சிரிப்பு அடக்க முடியவில்லை. பெரிதாக வாய்விட்டு சிரித்துவிட்டேன் கூட இருந்தவர்கள் வந்து என்ன என்ன என்று கேட்டார்கள்.

***

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

திரு துயவன்.

உங்களுடைய கருத்தை நான் முற்றாக நிராகரிக்கவில்லை. உங்களது மதத்தை பாதுகாக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கலாம். ஆனால் உங்களின் கருத்துக்கள் எதுவும் அதை நோக்கி செல்லவில்லை என்பதையே நான் சுட்டிகாட்டினேன். வீடியோ வை பாப்பதென்றால் அதை போட்டுவிட்டு நீங்கள் சும்மா இருக்க வேண்டும். அதற்கு தலைப்பு கொடுத்தவர் நீங்கள். வீடியோ உங்களுடைய (supporting details) உதவி கருத்து. மற்றைய கருத்துக்களை நீங்கள் எதிர்க்கும் படசத்தில் உங்களுடை எதிர்ப்பிற்கான காரணத்தையும் சுட்டிகாட்ட வேண்டும் ஆதலால் உங்களுடை நிலையை மற்றவர்க்கு புரியவைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றது. அதை நீங்கள் செய்ய தவறுவதால். வாசிக்கும் எமக்கு வெறும் அலட்டலாகவே இருக்கின்றது. நீங்கள் ஒரு பொய்பிரச்சாரத்தை ஒரு வீடியோ காடசியை ஆதாரமாக வைத்து நடத்துவதாகவே தோன்றுகின்றது.

வீடியோவை பார்த்த காரணத்தால்தான் 20வீதம் ஏற்று கொள்ள கூடியதாக உள்ளதென குறிப்பிட்டிருந்தேனே நீங்கள் கவனிக்கவில்லையா? மீண்டும் சொல்கிறேன் இந்த அமைப்பை பற்றி முன்பு நான் அறியவில்லை. ஆனால் உங்களின் இணைபிற்கு பின்பு நான் அறிந்தவைகளை வைத்து பார்த்தால். இது ஒரு ஆபத்தான கூட்டம் பொல்தான் தெரிகின்றது. இல்லை அவர்கள் அப்படிபட்டவர்கள் இல்லை என்று நீங்கள் கூற முனைவது கேட்கிறது. ஆனால் காரணம் கேட்கவில்லை.

துயவன் உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். ஆதாவது எனக்கு வயது அதிகமில்லை பல விடயங்கள் பற்றிய அறிவை நான் யாழ்களத்திலேயே பெறுகிறேன். என்னை போன்று இன்னமும் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். ஆகவே உங்கள் வாத திறமையை காட்டுவதிலும் விட உண்மையை காட்ட முயற்சித்தால் என் போன்ற பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியாரே.. நீங்கள் தகவல்களின் உண்மைத் தன்மையை தூயவனிடம் மட்டும் எதிர்பார்க்கப்படாது. தமிழ் மொழியின் சீர்திருத்த வரலாற்றையே.. தனக்குச் சாதகமான வடிவில் சபேசன் திரிப்பதையும்.. உண்மை மறைக்கப்பட்டுள்ளமையும்.. நீங்கள் இனங்காணாதது போல புறக்கணித்ததை வைத்துப் பாருக்கும் போது.. நீங்கள் உண்மையைத் தேடுபவரா இனங்காணப்பட முடியாதவரா எல்லோ இருக்கிறீர்கள். :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

தவறைச் சுட்டிக்காட்டிய நெடுக்காலபோவனுக்கு நன்றி. என்னுடைய தவறை இப்பொழுது திருத்தி விடுகிறேன்.

எழுத்துச் சீர்திருத்தமானது இத்தாலியரான வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்டு, கன்னடர் என்று சிலரால் தவறாகக் கருதப்படும் தந்தை பெரியாரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, மலையாளி என்று சொல்லப்படும் எம்ஜிஆரால் சட்ட அதிகாரம் வழங்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.