Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூர் கந்தன் கொடியேற்றத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!

Featured Replies

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், கொடியேற்ற உற்சவத்தின்போது, குடாநாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

கொடியேற்றத்தின் போது பக்தர்கள் முண்டியடித்ததால் அந்நேரத்தில் சன நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.

உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போதும் குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடந்தவருடத்தை விட இம்முறை ஆலய வளாகப் பகுதிகளில் அதிக பந்தல்கள் போடப்பட்டுள்ளதுடன் தாகசாந்தியும் வழங்கப்பட்டன.

தெல்லிப்பழை துர்க்கா மணிமண்டபம், நல்லை திருஞானசம்பந்தர் மடம் ஆகியவற்றில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை இந்துசமய விவகாரக் குழுவினரால் வருடாவருடம் வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர், நல்லூர்க் கந்தசுவாமி கோவில், மஞ்சத்திருவிழா தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி காலை வெளியிடப்படவுள்ளது.

http://www.tamilseythi.com/srilanka/nallur...2008-08-07.html

  • Replies 111
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அங்கால வன்னில மக்கள் இருக்கவும் இடமில்லாமல் அலையுதுகள்... இவை.. இராணுவக் கட்டுப்பாட்டுக்க தாங்கள் சுகமா இருக்கினம் என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குச் சொல்ல.. நடந்து காட்டினமோ..! திருந்தாத ஜென்மங்கள்..!

உந்தத் திருவிழாக்களை அரச படைகளின் பிரசன்னத்தை.. யாழ் குடாவில் நடக்கும் அரச படைகளின் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்க.. என்று பகிஸ்கரித்தால்.. முருகன் கோவிச்சிடுவாரோ. :mellow::unsure:

முருகா.. நீயாவது உதுகளின்ர அறிவுக்கண்ணைத் திறந்து விடப்பா..! :mellow::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூர் கந்தனுக்கு அரோகரா அரோகரா

உங்கள் ஆதங்கம் புரிகிறது

ஆனால் கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்வது ????????????

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் புரிகிறது

ஆனால் கோவிலுக்கு போகக்கூடாது என்று சொல்வது ????????????

கோவிலுக்குப் போகக் கூடாது என்று சொல்லவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை மடுவாகட்டும்.. நல்லூராகட்டும்.. மக்கள் அங்கு பெருந்தொகையில் கூடுவதை வைத்து.. தனது படைகளின் செயற்பாட்டை மக்கள் அங்கீகரித்து நிற்பதாகவும்.. தனது கட்டுப்பாட்டின் கீழ் மக்கள் சுதந்திரமாக உள்ளதாகவும் காட்டப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில்.. மக்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடுவது அவசியம் தானா..???!

இதே அரச படைகளும் அதன் கூலிக்குழுக்களும் தினமும் ஒருவரையாவது யாழ் குடாவில் கொல்கிறது அல்லது கைது செய்கிறது. வன்னியில் பெருமெடுப்பில் போர் செய்கிறது. இந்த நிலைகளில்.. இவ்வாறான ஒன்றுகூடல்களை அரசு தனக்குச் சாதகமான பிரச்சாரங்களுக்காக பாவிக்கத் தவறாது. இதற்கு தெரிந்து கொண்டும் மக்கள் இடமளிக்கத்தான் வேண்டுமா..??!

கோவிலுக்கு செவ்வாயோ.. வெள்ளியோ போய் கும்பிடலாம் தானே. முருகன் வேண்டாம் என்றாரா...! இப்படி பல்லாயிரக்கணக்கில் கூடி வரச் சொன்னாரா..???! தேவையின்றி ஏன் அரசுக்கு பிரச்சாரத்துக்கு உதவி அளிக்கிறீர்கள்.

ஏற்கனவே மடு விவகாரத்தை தனக்குச் சாதமாக்கிக் கொள்ள அரசு கங்கணம் கட்டி நிற்கும் நிலையில்.. இது.

ஒரு தூய்மையான மக்களின் உரிமைகளை மதிக்கின்ற அரசின் பிரச்சாரத்துக்காக... இவ்வாறு கூடின் பறுவாயில்லை. இனப்படுகொலையை திட்டமிட்டு செய்து நில வன்பறிப்பு மூலம் தமிழரின் இருப்பையே கேள்விக்குறியாக்கத் துடிக்கும் ஒரு அரசுக்கு மக்கள் மந்தைகள் போல செயற்பட்டு.. உதவி அளிக்க வேண்டுமா..??! :unsure::mellow::mellow:

---------------------

Traditional August Madhu feast cancelled

The traditional Madhu feast scheduled to be staged this month has been canceled, Mannar Bishop Rayappu Joseph said in a press statement.

He said that the Sacred Statue of Our Lady of Madhu will be taken to its original place of Madhu Church and enthroned after due penitential and purification service.

dailymirror.lk

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த காரணம் சரியாகப்படவில்லை

உலகம் இப்படியெல்லாம் பார்க்குமாக இருந்தால் பொங்குதமிழோடு தமிழீழத்தை தந்திருக்கவேண்டும்....

அதிலும் தற்போது அங்குள்ள மக்களுக்கு இதுவே துணை....பொழுதுபோக்கு...........கொண்ட

நான் முதலிலேயே குறிப்பிட்டேன்

உங்கள ஆதங்கம் புரிகிறது என்று..........

ஆனால் மக்களை அங்க போகாதே.......இங்க போகாதே ............என்று சொல்லி................

கடைசியாக கோயிலுக்கும் போகாதே............???????????என்று..........????????????

நன்றாக இல்லை என்பதே என் கருத்து

மற்றது பொங்கு தமிழ் பற்றி எனக்கு விளக்கம் தேவைப்படவில்லை

மன்னிக்கவும்

மக்கள் களியாட்டத்துக்கும் மகிழ்ச்சிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட எதிரியானவனை சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடிக்க என்னென்ன வகைகளில் தாம் செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியவர்களாகவே தற்போதைய காலக்கட்டம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பங்களை அற்ப களியாட்டங்களிற்காக இழப்பின்.. அது இந்த இனம் இத்தனை இழந்து நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தையே அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும்.

இந்தவேளையில் ஒன்றைச் சொல்லிக் கொள்ள வேண்டும்.. 2000ம் ஆண்டு புலிகள் யாழ் கச்சேரி வரை முன்னகர்ந்த போது.. மக்கள் கிளர்ச்சி ஒன்று அரசபடைகளுக்கு எதிராக அன்று துணிச்சலுடன் முன்னெடுக்கப்பட்டிருப்பின் தனது படைகள் அங்கு தோற்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என்று அப்போதைய யாழ் குடாவுக்கான சிறப்புத்தளபதி ஜானக பெரேரா குறிப்பிட்டிருந்தார். ஆனால் யாழ் குடா மக்கள் அதைச் செய்யவில்லை என்று அதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

ஆக யாழ் குடாவை மீட்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நாம் ஏலவே இழந்திருக்கிறோம். எமது அறியாமைகளால். அதையே இன்னும் தொடரும் நிலை இருக்கக் கூடாது. களியாட்டங்களையும் சிறு இன்பங்களையும் பெரிதுபடுத்தி இருந்தால் இன்று வன்னியில் போராட வேண்டிய நிலையில் எமது இளைஞர்கள் யுவதிகள் இருக்க வேண்டிய தேவை எழுந்திராது. அவர்கள் அவற்றை எல்லாம் உதறித் தள்ளி எதிரியானவன் எமது போராட்டத்தின் முதுகெலும்பையே முறியடிக்க கங்கணம் கட்டி நிற்கும் இவ்வேளையில்.. அவனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச சக்திகள் எல்லாம் எதிரிக்கு உதவி அளித்துக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில்.. களத்தில் வாழும் மக்களே.. களியாட்டம் வேண்டும் என்பது... ரோம் எரிந்து கொண்டிருந்த போது.. நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக இருக்கிறது உங்கள் வாதம்...!

இது மக்களுக்கான போராட்டம். மக்களாகவே உணர்ந்து சில உறுதியான தீர்மானங்களை எடுத்து எதிரிக்கு எதிராக செயற்பட வேண்டிய வேளை தான் இதுவே தவிர.. அதைத் தவற விடக் கூடாது என்பதைச் சொல்வதே எமது நோக்கம். தவிர போராட்டம் முடியும் வரை நல்லூரில் முருகனைக் கும்பிட வேண்டாம் என்றோ.. மடுவில் திருவிழாச் செய்ய வேண்டாம் என்பதோ எமது கோரிக்கையல்ல. காலத்துக்கு ஏற்ற வகையில் அவர்களாக உணர்ந்து சிலவற்றைப் பகிஸ்கரிக்க வேண்டும். அரச படைகளின் இருப்புக்கு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். நாம் அதை இன்னும் சரிவரச் செய்யவில்லை என்றே நான் நினைக்கிறேன்..!

மீண்டும் மீண்டும் நாம் எம்மையே ஏமாற்றி வாழ வகை செய்து கொண்டிருப்பது மட்டுமன்றி எதிரியின் கரங்களையும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்காகப் போராளிகளைத் திட்டிக் கொள்கிறோம்.. அவர்கள் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது..! அவர்களின் பின்னடைவுகளுக்கு மக்கள் எங்களின் சரியான ஒத்துழைப்பின்மையும் முக்கிய காரணம் என்பதை நாம் ஏனோ இன்னும் அறிய மறுக்கின்றோம்..! :mellow: :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளிலை மூலைக்குமூலை கோயில்களை கட்டிப்போட்டு தேர்திருவிழா கொண்டாடலாம்.பறவைகாவடி எடுக்கலாம்.

தென்னிந்தியாவிலை கலைச்சேவை செய்யுற அம்மணிகளை கூப்புட்டு ஆட்டம் பாட்டம் போடலாம்.

இஞ்சை நாங்கள் மூக்குமுட்ட திண்டு போட்டு வீரதீர கருத்துக்களை கணணிக்கு முன்னாலை சுழல் கதிரையிலை இருந்துகொண்டு அள்ளி வீசுவம்.

அங்கை இருக்கிறசனம் செத்தவீடும் ஒப்பாரியும் அழுதகண்ணீரும்சோறும் எண்டு இருக்கட்டும்.

வெளிநாட்டிலை இருக்கிற ஈழத்துதமிழன்ரை கூத்துக்களை கவனிக்கவேண்டிய பெரியதலைகள் கவனிச்சுக்கொண்டு தானிருக்கினம்!

உங்கள் ஆதங்கம்தான் எனக்கும்

ஆனால் எத்தனை வருடமாக அந்தச்சனம் திறந்தவெளிச்சிறையில் படும்பாடு???????

கு.சா இதை நீங்கள் என்னைப் பார்த்துச் சொன்னால் அது எனக்கு ஏற்புடையதல்ல.

நான் புகலிடத்தில் கோவில்களுக்குப் போவதில்லை. அவற்றை நான் கோவில்களாகவே பார்ப்பதில்லை. வியாபாரக் கூடங்களாகத்தான் பார்க்கிறேன். எந்த ஆகம விதிக்கும் உட்படாமல் அமைக்கப்பட்டுள்ள வியாபாரக் கூடங்கள் அவை..! இது எனது பார்வைக்கு. மற்றவர்கள் எப்படியும் பார்க்கட்டும்.. அதில் எனக்குப் பிரச்சனையில்லை.

இரண்டு மூன்று தடவை.. வெண்புறாவுக்கு காசு சேர்க்கவும்.. வள்ளிபுனம் பாடசாலை சிறுவர் சிறுமியர் படுகொலை தொடர்பில் அறிவூட்டவும் கோவில்களில் மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அதில் எம்மவர்கள் கோவில் கும்பிட வருவதன் தார்ப்பரியத்தை அறிந்து கொண்டேன். சனம் கோவில் கும்பிடுதோ இல்லையோ ஏதோ சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்கள் போல.. மணிக்கணக்கில் கியூ கட்டி.. இலவச சாப்பாடு வாங்கிறதில காட்டிற அக்கறையைக் கண்டு அசந்து போனன்.

கோவில் நிர்வாகங்கள் இத்தனை பவுண் ரிக்கட் எடுத்தால் தான் அர்ச்சனை என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன சில இடங்களில்..! :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதுவும் தங்களை குறித்து விடப்படுபவையல்ல

ஏனெனில் தங்களின் நோக்கு... அறிவேன்

ஆனால் .......????

நான் கோயிலுக்கு போயிருக்கின்றேன்

அது நிச்சயமாக எமது கோயிலாக இருந்ததனால்..........???

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம்தான் எனக்கும்

ஆனால் எத்தனை வருடமாக அந்தச்சனம் திறந்தவெளிச்சிறையில் படும்பாடு???????

திறந்த வெளிச் சிறைச்சாலை என்று நீங்கள் தான் கூப்பாடு போடுகிறீர்கள். அரசோ.. தான் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து.. மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி திருவிழாச் செய்கின்றனர்.. முத்தமிழ் நிகழ்வு நடத்துகின்றனர்.. அரச படைகளின் களியாட்ட நிகழ்வுகளுக்கு வருகின்றனர் என்று.. அதன் ஆக்கிரமிப்பு நோக்கத்தை பக்காவா நிறைவு செய்கிறதே..!!

நீங்கள் சொல்லும் திறந்த வெளிச் சிறை என்பதை தமிழ் ஊடகங்கள் தவிர எந்த சர்வதேச ஊடகம் தொடர்சியாக உச்சரித்து வருகிறது. மேற்குலகத் தூதுவர்களும் குடாநாட்டுக்கு அடிக்கடி போய் நிலைமையை கண்காணிச்சிட்டு வந்து கப் சிப் என்றிருந்திடுறார்களே. எவருமே சொல்லவில்லையே.. அங்கு திறந்த வெளிச் சிறை இருப்பதாக மக்கள் போராடுகின்றார்கள் என்று.. அப்புறம் என்ன..??!

மக்கள் போராடாமல்.. தங்கள் எதிர்ப்பை அரச படைகளுக்குக் காட்டாமல்.. எதையும் வெளி உலகுக்கு உணர வைக்க முடியாது. இப்படித் திருவிழாக் கொண்டாடுவது அரச படைகளுக்கும் அரசுக்குமே அதிகம் சாதகமாக அமையும். அந்த வகையில் மக்கள் இவற்றைத் தவிர்த்து அரச படைகளின் பிரச்சார நோக்கங்களை முறியடிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.. அதற்கு துணிந்து முன் வர வேண்டும்.

இதைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்ய முடியாது. களங்களில்.. அரசபடைகளின் நெருக்குவாரங்களின் கீழ் வாழும் மக்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். பேசாமடைந்தங்களாக.. அடிமைகளாக.. அரசு அளிக்கும் சலுகைகளோடு திருப்தி கொண்டு வாழப் பழகின்.. விடிவு என்பது எட்டாக் கனியே..! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

பரிசில் மக்கள்கடையைத்தவிர வேறு கடை தெரியாது எனக்கு........

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது கொஞ்சம் கூடுதலாகப்படுகிறது எனக்கு???

ஏனெனில் அந்த மக்கள் எல்லாவற்றிற்கும் உதாரணமாக திகழ்ந்தவர்கள்

அதில் முக்கியமானவர்கள் எல்லோரும் இனம் காணப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டார்கள்

எஞ்சியிருப்போர் தருணம் காத்து இருக்கின்றார்கள்

சும்மா இங்கிருந்து கொண்டு புடுங்குங்கோ என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது

அவர்கள் செய்தார்களா

செய்யக்கூடியவர்களா

என்பதையும் பார்க்கவேண்டும்????????

எனக்கு முக்கியமானவர் ஒருவர் அங்கிருக்கிறார்

அவருடன் அடிக்கடி நான் கதைப்பதுண்டு

அவர் சொல்வார்

மக்கள் எல்லோரும் முகமாலைக்குள்ளால எப்ப வருவினம் என்று பார்த்தபடிதான் உள்ளது

ஆனால் இப்ப எல்லா இடமும் கண்கள் காதுகள்???????

அதனால் சனம் அமைதியாக இருக்கு

சனம் நல்லா பட்டுட்டுதுகள்

இனி ஆமியை கல்லால் அடித்தே கொன்றுபோடுங்கள்

அதற்கு உடைப்பு??????????????இ வேணும் என்று........

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி வச்சிருக்கிற நகை நட்டுகளை கொண்டு போய் பறி கொடுக்கிறதுக்கும் ஒரு இடம் வேண்டும் தானே :mellow::mellow:

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கி வச்சிருக்கிற நகை நட்டுகளை கொண்டு போய் பறி கொடுக்கிறதுக்கும் ஒரு இடம் வேண்டும் தானே :mellow::unsure:

வாங்கி வச்சிருக்கிற நகை நட்டுகளை கொண்டு போய் பறி கொடுக்கிறதுக்கும் ஒரு இடம் வேண்டும் தானே :mellow::lol:

இப்படியும் சிந்திக்கலாமா????

உப்புடி கூட்டம் கூடுவது எங்கட கூட்டப்பற்றை கூட்டும்...... அரோகரா.

முருகா உன் பெயரை சொன்னாலே பிரச்சனைதானப்பா வருகின்றது.வந்து நிப்பாட்டப்பா?

திறந்த வெளிச் சிறைச்சாலை என்று நீங்கள் தான் கூப்பாடு போடுகிறீர்கள். அரசோ.. தான் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து.. மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி திருவிழாச் செய்கின்றனர்.. முத்தமிழ் நிகழ்வு நடத்துகின்றனர்.. அரச படைகளின் களியாட்ட நிகழ்வுகளுக்கு வருகின்றனர் என்று.. அதன் ஆக்கிரமிப்பு நோக்கத்தை பக்காவா நிறைவு செய்கிறதே..!!

நீங்கள் சொல்லும் திறந்த வெளிச் சிறை என்பதை தமிழ் ஊடகங்கள் தவிர எந்த சர்வதேச ஊடகம் தொடர்சியாக உச்சரித்து வருகிறது. மேற்குலகத் தூதுவர்களும் குடாநாட்டுக்கு அடிக்கடி போய் நிலைமையை கண்காணிச்சிட்டு வந்து கப் சிப் என்றிருந்திடுறார்களே. எவருமே சொல்லவில்லையே.. அங்கு திறந்த வெளிச் சிறை இருப்பதாக மக்கள் போராடுகின்றார்கள் என்று.. அப்புறம் என்ன..??!

மக்கள் போராடாமல்.. தங்கள் எதிர்ப்பை அரச படைகளுக்குக் காட்டாமல்.. எதையும் வெளி உலகுக்கு உணர வைக்க முடியாது. இப்படித் திருவிழாக் கொண்டாடுவது அரச படைகளுக்கும் அரசுக்குமே அதிகம் சாதகமாக அமையும். அந்த வகையில் மக்கள் இவற்றைத் தவிர்த்து அரச படைகளின் பிரச்சார நோக்கங்களை முறியடிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.. அதற்கு துணிந்து முன் வர வேண்டும்.

இதைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்ய முடியாது. களங்களில்.. அரசபடைகளின் நெருக்குவாரங்களின் கீழ் வாழும் மக்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். பேசாமடைந்தங்களாக.. அடிமைகளாக.. அரசு அளிக்கும் சலுகைகளோடு திருப்தி கொண்டு வாழப் பழகின்.. விடிவு என்பது எட்டாக் கனியே..! :mellow:

சனம் கொந்தளிக்க தொடங்கினால் சிங்களவன் சகட்டுமேனிக்கு போட்டுத்தள்ளுவான்.... ஒரு நாயும் கேக்காது. கேக்க வேண்டிய அவசியமும் எந்தநாயுக்கும் கிடையாது... இந்த பிரச்சினையை சீர் செய்யவேண்டிய பொறுப்பு ''ஆயுதம் ஏந்தியவர்களின்'' கைகளில்தான் இருக்கு...

யாழ் குடாவில் பொங்கு தமிழ் நடந்தது. அதற்காக எல்லோரையும் பிடிச்சு கொல்லத்தான் முடியுமா..??!

மக்கள் தமக்குரிய வகைகளில் சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்காட்ட வேண்டும். ஒட்டுமொத்தமாக திரண்டு எதிர்க்கும் போது.. பகிஸ்கரிப்புப் போன்றவற்றை.. அரசும் படைகளும் எதுவும் செய்ய முடியாது போகும். ஓரிருவர்.. குழு என்று செயற்பட்டால் தான் பிரச்சனை..!

நல்லூர் திருவிழா என்பது யாழ் குடாவைப் பொறுத்தவரை முக்கிய நிகழ்வு. அதற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமன்றி விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறது. அதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தனது கட்டுப்பாட்டில் மக்கள் சுதந்திரமாக உள்ளனர் என்று உலகுக்குக் காட்ட..! அதற்கு இராணுவத்திற்கு பலிக்கடாவாகவுள்ள மக்கள் இடம்கொடுக்கத்தான் வேண்டுமா..??!

ஏன் சிந்திக்கிறார்கள் இல்லை இந்த மக்கள். பட்டும் தேறவில்லையா...??! :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவில் நிர்வாகங்கள் இத்தனை பவுண் ரிக்கட் எடுத்தால் தான் அர்ச்சனை என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு இருக்கின்றன சில இடங்களில்..! :mellow:

அர்ச்சனை சீட்டு எடுத்தவர்கள்தான் தீபம் தொட்டு கும்பிடலாம் எண்டும் சட்டமெல்லா போட்டிருக்கினம்... :mellow:

யாழ் குடாவில் பொங்கு தமிழ் நடந்தது. அதற்காக எல்லோரையும் பிடிச்சு கொல்லத்தான் முடியுமா..??!

மக்கள் தமக்குரிய வகைகளில் சந்தர்ப்பங்களில் எதிர்ப்புக்காட்ட வேண்டும். ஒட்டுமொத்தமாக திரண்டு எதிர்க்கும் போது.. பகிஸ்கரிப்புப் போன்றவற்றை.. அரசும் படைகளும் எதுவும் செய்ய முடியாது போகும். ஓரிருவர்.. குழு என்று செயற்பட்டால் தான் பிரச்சனை..!

நல்லூர் திருவிழா என்பது யாழ் குடாவைப் பொறுத்தவரை முக்கிய நிகழ்வு. அதற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமன்றி விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறது. அதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தனது கட்டுப்பாட்டில் மக்கள் சுதந்திரமாக உள்ளனர் என்று உலகுக்குக் காட்ட..! அதற்கு இராணுவத்திற்கு பலிக்கடாவாகவுள்ள மக்கள் இடம்கொடுக்கத்தான் வேண்டுமா..??!

ஏன் சிந்திக்கிறார்கள் இல்லை இந்த மக்கள். பட்டும் தேறவில்லையா...??! :mellow:

யாழ்ப்பாணத்தில் இந்தமுறை பொங்குதமிழ் நடந்ததா?

04 05 இல் சுறுசுறுப்பாய் நடத்திகாட்டினவைக்கெல்லம் என்ன நடந்தது?

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனை சீட்டு எடுத்தவர்கள்தான் தீபம் தொட்டு கும்பிடலாம் எண்டும் சட்டமெல்லா போட்டிருக்கினம்... :mellow:

கிழக்கு லண்டனில் ஒரு கோவிலுக்கு சிறீலங்கன் ஆட்கள் வரக் கூடாது என்றும் சட்டம் போட்டிருந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நிர்வாகத்துள் நடந்த தில்லுமுல்லுகளுக்கு பிறகு சிறீலங்கன் ஆட்கள் தங்கள் கோவிலுக்குள் வரக் கூடாது என்று வாய் மூலம் அறிவித்திருந்தததாகவும் பின்னர் சில அழுத்தங்கள் காரணமாக சிறீலங்கன் ஆட்கள் வரலாம்.. சாமி கும்பிடுவதோடு நின்று விட வேண்டும்.. நிர்வாகத்துக்குள் தலைப்போடக் கூடாது என்று கோவில்காரர்களே பிரிட்டன் அரசுக்கு மேலால் சட்டம் இயற்றினராம்..! இப்படி இருக்குது..!

எங்கட சனங்களும் வாங்கின நகைகளையும் உடுபுடவைகளையும் காட்ட சமருக்கு கூட இடம் இல்லைத்தானே. வெட்கம் மானம் இல்லாத கூட்டம்.. கூடிக் கும்மாளிக்கிறதுதான்..! நாத்திகவாதிகளால் கோவில்கள் பரிகசிக்கப்பட இந்தக் கூட்டங்கள் தான் மூல காரணம்..!

இத்தனைக்கும் அந்தக் கோவில் ஒரு மரணச்சடங்கு செய்யும் நிலையத்துக்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ளது..! :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.