Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் தலைவனும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் தலைவனும் நானும்

இதை எழுதவேண்டும்போல் உள்ளது

எங்கேயாவது கொட்டவேண்டும்

இல்லையென்றால் நான் உயிர்வாழ்வது கடினம்

எனக்கு சில உண்மைகள் தெரிந்தாகணும்

சில கேள்விகளுக்கு பதில்வேண்டும்

இங்கு எழுதுபவர்களாயினும்சரி

அறிக்கை விடுபவர்களாயினும் சரி

உள்ளக புறஅக உளவுத்துறையினராக இருந்தாலும்சரி

பதில் தெரிந்தால் எழுதுங்கள்

ஊகங்கள் தேவையில்லை

தங்களது மூளையை உபயோகிக்கவேண்டாம்

நெஞ்சையும் தொட்டுசொல்லவேண்டாம்

கண்ணால் கண்ட சாட்சி மட்டும் இருந்தால்

அல்லது அவர்கள் யாரையாவது நீங்கள் கண்டிருந்தால்.....

மட்டும் இதற்கு பதில் தாருங்கள்

அதிலும் என் தலைவன் இல்லை என்று சொல்பவர்கள் மட்டும் பதில் தாருங்கள்

நான் அதை ஏற்கவேண்டுமாயின்...........

எப்போ நடந்தது

எங்கு நடந்தது

எப்படி நடந்தது

நேரம் குறித.து சொல்லுங்கள்

ஏன் நடந்தது

ஏன் நடக்கவிட்டீர்கள்

ஏன் நீங்கள் தடுக்கவில்லை

சுற்றி நிறுத்திய பாதுகாப்புப்பிரிவுக்கு என்ன நடந்தது

சுற்றி நிறுத்திய கரும்புலிகள் எங்கே?

இவ்வளவும் நடக்குமென்று

இன்று அறிக்கைவிடும் உளவுப்பிரிவுக்கு முன்பே தெரியணுமே.....

ஏன் விட்டீர்கள்?

தலைவர்அங்கே கடைசிவரை இருக்கவேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்

ஏன் அந்த தப்பமுடியாத கடற்கரை இடத்தை தெரிந்தெடுத்தீரகள்

இந்த ஆணையைப்பிறப்பித்தவர் யார்?

உலகத்திலேயே முதலாவதாக இருந்த இயக்கம்

என் தலைவன் இல்லையென்றால் பூச்சயமாகிவிடுமே

அப்படி இருந்தும் இந்த ஆணைக்கு எப்படி கட்டுப்பட்டீர்கள்?

சரி நீங்கள் சொல்வதுபோல் என் தலைவன் இறந்துவிட்டாலும்

அவரது உடலை எதிரி தொட ஏன் அனுமதித்தீர்கள்?

அந்த நேரம் நீங்கள் எங்கு போனீர்கள்?

என் தலைவனை அவர்கள் தொடுவதை பார்க்க என் உடம்பெல்லாம் பத்துதே

தங்களுக்கு.............???

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்விகளுக்குள்ளேயே உண்மை இருக்கிறது. குழப்பம் வேண்டாம் நண்பரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்விகளுக்குள்ளேயே உண்மை இருக்கிறது. குழப்பம் வேண்டாம் நண்பரே.

அப்படியாயின் எதற்கு அடிக்கடி என்னை காயப்படுத்தும் அறிக்கைகள்

இவர்கள் எங்கே இருந்து கொண்டு.....

என் தலைவனை அடிக்கடி ..................????

இதற்கு பதில் தெரியுமட்டும் ............???

குடும்ப ஒழுக்கங்களாலும்

சமூகசேவை மனப்பான்மையாலும்

படுக்கைக்கு போனதும் உறங்கும் கொடை கிடைத்தவன் யான்

ஆனால் இன்று......

நித்திரையே இல்லாமல்............

இன்னும் எத்தனை நாளைக்கு ......

என்னைப்போல் எத்தனை உறவுகள் இன்று நிம்மதி தொலைத்து............?

  • கருத்துக்கள உறவுகள்

------

சரி நீங்கள் சொல்வதுபோல் என் தலைவன் இறந்துவிட்டாலும்

அவரது உடலை எதிரி தொட ஏன் அனுமதித்தீர்கள்?

அந்த நேரம் நீங்கள் எங்கு போனீர்கள்?

என் தலைவனை அவர்கள் தொடுவதை பார்க்க என் உடம்பெல்லாம் பத்துதே

தங்களுக்கு.............???

சில மாதங்களுக்கு முன்பு ,

" நான் இறந்தால் என் சாம்பல் கூட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு கிடைக்காது " என்று தலைவர் கூறியிருந்தார் .

அதனைக்கூட காப்பாற்ற முன் வராத உளவுத்துறை , இப்போ மன்னிப்பு அறிக்கை விட்டு என்னத்தை தான் கிழிக்கப்போகுதோ .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களுக்கு முன்பு ,

" நான் இறந்தால் என் சாம்பல் கூட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு கிடைக்காது " என்று தலைவர் கூறியிருந்தார் .

அதனைக்கூட காப்பாற்ற முன் வராத உளவுத்துறை , இப்போ மன்னிப்பு அறிக்கை விட்டு என்னத்தை தான் கிழிக்கப்போகுதோ .......

பதில் தாருங்கள்

கேட்பவர்கள்தேசபக்தர்கள்

நாம் மீண்டும் புத்துயிர் பெற்று இயங்கவேண்டுமாயின்

முதலில் நாம் உயிர் வாழவேண்டும்

பதில் தாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நாளும் இளந்திரையன் சொன்னாரே

கடைசி நாளும் நடேசனண்ணா சொன்னாரே

தயாராய் இருக்கிறோம்

பலமாய் இருக்கின்றோம்

தலைவனின்ஆணைக்காக காத்திருக்கின்றோம் என்று.

தலைவனையே காப்பாத்தமுடியாத பலம் ..................???

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தின் நெருக்குதல்களின் போது தமிழ்செல்வனுக்கு பெற்றோல்கானுடன் வருமாறு கட்டளையிட்டவர் தலைவர் தன் சாம்பல் கூட எதிரிக்குக் கிடைக்கக் கூடாது என்று நினைத்தவரைப் போயும் பகைவர்கள் நெருங்கியிருக்க முடியுமா? இதைத் தமிழ்செல்வனே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். கவலை வேண்டாம்.

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டார்!-அது

கையளவே ஆனாலும் கலங்க மாட்டார்.

தமிழீழம் காணமல் ஓய மாட்டார்

தடை நீங்கும் வரை கண்ணில் தெரிய மாட்டார்.

தலைவரைப் பற்றிய கவலையை விட்டு கடமையைச் செய்யுங்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கள். நீதிக்கே இறுதி வெற்றி!

பேராட்ட வடிவம் மாறலாம் ஆனால் பேராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை- தலைவர்

தலைவரைப் பற்றிய கவலையை விட்டு கடமையைச் செய்யுங்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கள். நீதிக்கே இறுதி வெற்றி!

ஒலித்திருந்து தலைவர் இல்லை என்று சொல்பவர் தமது தொடர்பாளர்களை மக்கள் முன் வந்து எம் கேள்விகளுக்கு பதில் தரவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவரைப் பற்றிய கவலையை விட்டு கடமையைச் செய்யுங்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கள். நீதிக்கே இறுதி வெற்றி!

நீதியே வெல்லும்

தர்மமே வெல்லும் என்று சொல்லி சொல்லியே......................???

எங்கு வந்து நிற்கிறோம் ஐயா.

எதையாவது பின் பற்றும்போது வளர்ச்சிப்படி தெரியவேண்டாமா?

கிட்டத்தட்ட 30 வருட எனது இளமைக்கால வாழ்க்கையை இதற்காக செலவிட்டுள்ளேன் ஐயா

அவர் அதற்குள் இருந்தார்

போயடூவிட்டார் என்றால் திரும்பி உழைக்க எனது வயதும் உடலும் இளமையும் வருமா?ஐயா.

தலைவரைப் பற்றிய கவலையை விட்டு கடமையைச் செய்யுங்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கள். நீதிக்கே இறுதி வெற்றி!
  • கருத்துக்கள உறவுகள்

தேனிசை செல்லப்பா கூறுவதைக் கேளுங்கள்.........

http://www.tamilkathir.com/news/1496/58//d,view_audio.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துணிவில்லாமல் இருப்பவர்களை பற்றி பிரியோசனம் இல்லை

எம் உளவுறுதியை உடைத்தெறிந்து எம்மை செயலிழக்கச் செய்வதே எதிரிகளின் இன்றைய முக்கிய நோக்கம். அந்த நோக்கம் யாழ் களத்திலும் நிறைவேறுகிறதா? தலைவரை எம் உயிர் போராளிகளைப்பற்றித் தெரிந்தவர் யாரும் இதற்கெல்லாம் மசியமாட்டார்கள். அட அறிக்கை விடும் அவசரத்தில் இயக்கத்தின் சின்னத்தைக் கூட தவறாக பதிகின்றார்கள். இவைகளைப் புரிந்து கொள்ளாமல் நாம் எம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். நடக்க வேண்டியவைகளைக் கவனியுங்கள். இங்கு ஒரு இனம் இன்று உங்கள் புலம் பெயர் மக்களின் போராட்டங்களையே நம்பியிருக்கின்றது. அதை மறந்து விடாதீர்கள். தலைவர் வர வேண்டிய நேரம் வருவார். கவலைகளை விடுங்கள். எவனேவனோ கால்களில் வீழ்ந்தோம் அழுதோம் தொழுதோம். எம் இனத்தை காக்க அந்த இழி செயல் மறுபடியும் நேரவிடாதீர்கள். இன்று உரிமையுடன் உங்கள் கைகளைப் பற்றிப் பிடிக்கின்றோம். புலம் பெயா உறவுகளே உங்கள் போராட்டங்கள் புதிய உத்வேகம் கொள்ளட்டும். எமது இலட்சயம் ஒன்றே பாதை வேறானாலும். அதை மறந்து விட்டு உங்களை நீங்கள் போலி அறிக்கைகளினால் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். மறுபடியும் வீறு கொண்டு எழுவீர்.

ஜானா

நித்திரையே இல்லாமல்............

இன்னும் எத்தனை நாளைக்கு ......

என்னைப்போல் எத்தனை உறவுகள் இன்று நிம்மதி தொலைத்து............?

ஆம் விசுகு நீங்கள் சொன்னதுபோல்

நித்திரையில்லாமல் மனநிம்மதியில்லாமல்

அங்கலாய்பாகத்தான் வாழ்க்கை போகிறது

இப்படியான கருத்துக்களை இங்கே வேண்டுமென்றே சிலர் கொண்டு வந்து மக்களை சோர்வடையச் செய்கின்றனர். அது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானது. இனிமேல் நடக்க இருக்கின்ற எமது சாத்வீக போராட்டத்தை முறியடிக்க முயற்சிக்கின்ற இலங்கை அரசாங்கம் அதற்காக பெருந்தொகை பணத்தில் பலரை நியமித்திருக்கின்றதாம். பணத்தை பெற்றவர்கள் தங்கள் வேலைகளை செய்ய வேண்டும்தானே.

வாழ்க விசுவாசம்

எம் உளவுறுதியை உடைத்தெறிந்து எம்மை செயலிழக்கச் செய்வதே எதிரிகளின் இன்றைய முக்கிய நோக்கம். அந்த நோக்கம் யாழ் களத்திலும் நிறைவேறுகிறதா? தலைவரை எம் உயிர் போராளிகளைப்பற்றித் தெரிந்தவர் யாரும் இதற்கெல்லாம் மசியமாட்டார்கள். அட அறிக்கை விடும் அவசரத்தில் இயக்கத்தின் சின்னத்தைக் கூட தவறாக பதிகின்றார்கள். இவைகளைப் புரிந்து கொள்ளாமல் நாம் எம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம். நடக்க வேண்டியவைகளைக் கவனியுங்கள். இங்கு ஒரு இனம் இன்று உங்கள் புலம் பெயர் மக்களின் போராட்டங்களையே நம்பியிருக்கின்றது. அதை மறந்து விடாதீர்கள். தலைவர் வர வேண்டிய நேரம் வருவார். கவலைகளை விடுங்கள். எவனேவனோ கால்களில் வீழ்ந்தோம் அழுதோம் தொழுதோம். எம் இனத்தை காக்க அந்த இழி செயல் மறுபடியும் நேரவிடாதீர்கள். இன்று உரிமையுடன் உங்கள் கைகளைப் பற்றிப் பிடிக்கின்றோம். புலம் பெயா உறவுகளே உங்கள் போராட்டங்கள் புதிய உத்வேகம் கொள்ளட்டும். எமது இலட்சயம் ஒன்றே பாதை வேறானாலும். அதை மறந்து விட்டு உங்களை நீங்கள் போலி அறிக்கைகளினால் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். மறுபடியும் வீறு கொண்டு எழுவீர்.

ஜானா

முன்பு கலைஞர் நடாத்திய நாடகமான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வை.கோ கலந்து கொள்ளவில்லை என்று வை.கோவைத் தூற்றினீர்கள். பிறகு 2, 3 மாதங்களின் பின்பு கலைஞர் நடாகமாடுகிறார் என்று தெரிந்தபின்பு கலைஞரைத் தூற்றினீர்கள்.

எமக்காக தனது வாழ் நாளையும் அற்பணித்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்தவும் விடமால் உங்களைப் போன்றோர்கள் கருத்துக்கள் எழுதுகிறீர்கள். எவ்வளவு காலம் வரை உண்மையை உணர்வீர்கள்? .மாவீரர் தினம் வரை? 1 வருடம்?. 5 வருடம்?. 10 வருடம்?.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மறைவின் போது பலர் அவர் உயிரோடு இருக்கிறார் என்று நினைத்து அஞ்சலி செய்யவிடாமல் தடுத்தார்கள் . இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களாகி விட்டது . சந்திரபோசுக்கு உரிய மரியாதையினை இன்னும் தரவில்லை.

சிவகுமாரன் நீங்கள் எழுதியது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா ?

நீங்களே கலைஞர் நடாத்தியது நாடகம் என்கிறீர்கள் . நாடகம் நடத்துபவரை தூற்றவா , போற்றவா முடியும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் .

வைக்கோ எமக்கு ஒரு சகோதரம் மாதிரி , அவர் பிழை விட்டால் ....... அவரை தட்டிக்கேட்கும் உரிமை ஈழத்தமிழனுக்கு உண்டு என்பதை , வைக்கோ அண்ணன் நன்கு அறிவார் .

diltstatementtamil1page.gifltte_emblem.jpg

புலிப்படம் போட்டு தலைவர் இறந்துவிட்டார் என்று அறிக்கை அனுப்பினால் ....... அதனை நம்பி அஞ்சலி செலுத்த தயாராக உள்ளீர்களா ?

அந்த அறிக்கையை அனுப்பியவர்களின் , புலிப்படத்தை பாருங்கள் . எது உண்மை , பொய் என்று அறிவீர்கள் .

சுபாஸ் சந்திர போசுக்கு , இந்தியர்கள் சார்பில் அஞ்சலி செலுத்த விருப்பம் என்றால் ....... தாராளமாக செலுத்துங்கள் . உங்களை யாரும் தடுக்கவில்லை .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனத்தில் எழும்கேள்விகளை எழுதினால் காசுவாங்கிவிட்டோம் என்று கூறும் கூட்டத்துடன் நான் இங்கு......

என் கேள்விக்கு பதில் தரமுடியவில்லை

எல்லாமே

அப்படித்தான்

நம்பியே ஆகவேண்டும் என்ற மாதிரிப்பதில்கள்தான்.

யாரிடமும் பதில் இல்லை

யாருக்கும் உண்மை தெரியாது

யாரும் உண்மை பேச விரும்பவில்லை

என்னோடு நின்றோர்

என்னோடு சேர்ந்து உழைத்தோர்

என்னால் சேர்க்கப்பட்டோர்

எனக்காக சேர்ந்தோர்

என் மூஞ்சிக்காக பங்களிப்புச்செய்தோர்....................

........................

இவர்களுக்கு இந்த பதில் போதாது

நான் ஏற்றுக்கொள்வேன்

என் மனம் சாதகமானதை மட்டுமே ஏற்கும்

மற்ற எதையும் சந்தேகம் கொண்டே பார்க்கும்

ஆனால் எனக்கு பின்னாலுள்ள ..........பேர்களுக்கும் இந்த வசனமெல்லாம் சொல்ல முடியவில்லை

பலர் சொல்லாமல் விலகிவட்டனர்

இன்னும் பலர் சொல்லிவிட்டுவிலகுகின்றனர்

மற்றவர் எனக்கு பைத்தியம்

அல்லது நல்லா மண்டைய கழுவிப்போட்டாங்கள் என்கின்றனர்

இதுதான் பரிசா நண்பர்களே

நாமெல்லாம் மண்டை கழுவப்பட்டவர்களா????

இங்கே ஒருத்தர் எழுதியிருக்கின்றார் விசுகு நல்ல குழம்பிவிட்டார் என்று.

இது குழப்பமல்ல

யாரையும் குழப்புவதும் நோக்கமல்ல

தண்ணீரில் எழுதுவதை வெறுக்கின்றேன்

இதுவரை அப்படி நாம் இருந்ததில்லை

நேர்மை

உண்மை

தர்மம்

வரலாறு

இதுவே எமது வழிகாட்டிகள்

அதில் கட்டுவதையே விரும்புகின்றேன்

இப்படியான கருத்துக்களை இங்கே வேண்டுமென்றே சிலர் கொண்டு வந்து மக்களை சோர்வடையச் செய்கின்றனர். அது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானது. இனிமேல் நடக்க இருக்கின்ற எமது சாத்வீக போராட்டத்தை முறியடிக்க முயற்சிக்கின்ற இலங்கை அரசாங்கம் அதற்காக பெருந்தொகை பணத்தில் பலரை நியமித்திருக்கின்றதாம். பணத்தை பெற்றவர்கள் தங்கள் வேலைகளை செய்ய வேண்டும்தானே.

வாழ்க விசுவாசம்

இலங்கை அரசைப்பற்றி எனக்கு எந்த அக்கறையுமில்லை

ஆனால் நான் போகும்வழி பற்றி நிதர்சனமான உண்மை வேண்டும்

கண்ணைமூடிக்கொண்டுவா என்றால்...........மன்னிக்கணும்

நான் மனிதன்

தெய்வமல்ல..........

கேட்பதற்கு பதில் தாருங்கள்

பட்டம் தரவேண்டாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றே தலைவர் பதில் சொல்லி விட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் என்ன சொன்னார்

இது எல்லாம் எங்களுக்கு புதிதல்ல

இதைவிட பெரிசையெல்லாம் சந்தித்திருக்கிறம்

கவலைப்படவேண்டாம் என்றார்

ஆனால் இன்றைக்கு அவரே கேள்விக்குறியாகி........?

காலத்தின் கட்டாயமாக - இயற்கை எனது நண்பன் என்ற அற்புத மனிதன் - அமைதியாக இருக்கிறார். இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கட்டாயமாக - இயற்கை எனது நண்பன் என்ற அற்புத மனிதன் - அமைதியாக இருக்கிறார். இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்களும் புதிர்தான் போடுகின்றீர்கள்

அதைத்தர ஆள்தேவையில்லை இன்றைய நிலையில்

எனக்கு வேண்டும் ஒரேபதில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் புதிர்தான் போடுகின்றீர்கள்

அதைத்தர ஆள்தேவையில்லை இன்றைய நிலையில்

எனக்கு வேண்டும் ஒரேபதில்

தலைவர் தப்பிச் செத்தது உண்மை. அதை நம்புவதும் நம்பாததும் தனிப்பட்டவர் விருப்பம், இல்லை தூங்குவதும்,தூங்காததும் உங்க இஸ்டம் ஆனால் இதுக்கெல்லாம் மற்றவர்களின் கருத்தை கேட்டு.....இல்லை இது இப்ப ரொம்ப அவசியமா?

தலைவர் இப்ப எதுக்காக வேணும்?

அவர் இருந்தால் எல்லாத்தையும் அவற்றையும்,அங்கை இருக்கிற போராளிகள்,பொடியள்,மக்கள் தலையிலை பாரத்தை போட்டிட்டு இஞ்சை இருந்து கொண்டு 20கு20 கிரிக்கட் மச் பார்த்துக்கொண்டு வெட்டிப்பேச்சு பேசி வம்பளக்கவா?: பாவம் அந்தாள் இந்த ஈனப்பிறவிகளுக்காக இவ்வளவுகாலமும் பட்டது போதும்.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு அண்ணை,

உங்கள் மன நிலை புரியாமல் இல்லை. எங்கள் மனநிலையும் உள்ளுணர்வும் எத்தனையோ கேள்விகளுக்குள் தான் நகர்கின்றது. 16 வயதில் இருந்து போராடிப்போராடி தன் சுகங்கள் எதையுமே அனுபவிக்காமல் தமிழீழத்தாகமே மூச்சென வாழ்கின்றவர் அல்லவா எங்களின் தலைவர்?

என் மன நிலையில் மாற்றம் இல்லை' தலைவர் எப்போதும் எங்களுடன் இருக்கின்றார், இருப்பார்".

அறிக்கைகள் வந்து சூறாவளியாய் நம்மை சுழற்றிப்போட்டு கலைக்கப் பார்த்தாலும். " ஒரு கணம் கண் மூடித் தலைவா!!

உன் நலமே எம் பலம்" என்று சொல்லிவிட்டு என் வேலையைத்தொடர்கின்றேன்.

குழப்பங்களை விட்டு விட்டு தெளிவு பெறுங்கள்.

உண்மைகள் உறங்கும் ஆனால் செத்துவிடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.