Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழ.நெடுமாறன் போன்றவர்களின் நம்பிக்கைக்குப் பின்னால்....!

Featured Replies

தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னவர்களே அதை பின்பு மறுத்து விட்ட பிற்பாடும், தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நம்புபவர்கள் குறிப்பிடத்தக்களவு இருக்கின்றார்கள்.

தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு "தேசியத் தலைவர் வருவார்" என்று காத்து நிற்கிறார்கள்

அதே வேளை ஈழத் தமிழர்களிடம் இருந்து "தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார்" என்பது போன்ற அறிக்கைகளோ, ஆய்வுகளோ வருவது தற்பொழுது மிகவும் குறைந்து விட்டது. புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளிடமும் தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதில் இன்றைக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை. அவர் இல்லை என்பதை மக்களிடம் சொல்வதா? வேண்டாமா என்பதில்தான் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமல் நிற்கின்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டின் சில தலைவர்களும், ஊடகங்களும் உறுதியான முறையில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றார்கள்.

நக்கீரன் போன்ற ஊடகங்களும் பழ.நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களும் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக அடித்துக் கூறுகிறார்கள். நக்கீரன் தேசியத் தலைவர் எப்படித் தப்பித்து வெளியேறினார் என்று கண்ணால் கண்டது போன்று ஒரு கதையை எழுதியது. தேனிசை செல்லப்பா அதை பாட்டாகவே பாடிவிட்டார்.

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாhக கதைகளை எழுதுவதற்கு நக்கீரன் போன்ற ஊடகங்களுக்கு வியாபாரம் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்கள் உண்மையாகவே தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

....................................

சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸில் இருந்து ஒலிபரப்பாகின்ற தமிழ்ஒலி வானொலியில் தோழர் மதிமாறன் பகுத்தறிவு நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நாடி சோதிடம் (காண்டம்) என்பது மோசடியான ஒன்று என தோழர் மதிமாறன் கூறிய பொழுது, தொலைபேசயில் தொடர்பு கொண்ட ஒருவர் நாடிசோதிடம் என்பது உண்மையானது என உறுதியாக வாதிட்டார். தான் இதைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சி செய்திருப்பதாக கூறிய அவர் ஒரு செய்தியையும் சொல்லிச் சென்றார்.

நாடி சோதிடத்தின்படி 2011இல் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்பதுதான் அவர் சொல்லிச் சென்று செய்தி.

இப்படியான நேரங்களில் பகுத்தறிவாளர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. 2011இல் தமிழீழம் மலராது என்று வாதிட முடியாது. நாளையே தமிழீழம் மலர வேண்டும் என்ற சிந்தனையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள் 2011இல் தமிழீழம் மலராது என்று வாதிட்டால், அது பொருத்தமாகவா இருக்கும்?

நாடி சோதிடத்தைப் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்திருப்பதாக கூறி, அதற்காக வாதிட்ட அந்த நபர் பெங்களுரைச் சேர்ந்தவர், ஒரு சிறந்த தமிழினப் பற்றாளர். தற்பொழுது ஜேர்மனியில் வசிக்கின்றார். அவருடைய குடும்பமே தமிழீழ விடுதலைக்கு பல உதவிகளை செய்திருக்கின்றது.

பல விடுதலைப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்த குடும்பத்தைச் சேர்ந்த அவர் நாடி சோதிடத்தின் மிகப் பெரிய விசுவாசி. கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், கிரக சோதிடம் என்று எதை வேண்டுமானாலும் பொய் என்று அவருடன் வாதிடலாம். அதை அவர் ஏற்றுக் கொள்ளவும் செய்வார். ஆனால் நாடி சோதிடத்தை மட்டும் பொய் என்று அவர் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

தமிழ்நாட்டின் தலைவர்கள் சிலரோடு மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கின்ற அவர், அவர்களையும் நாடி சோதிடத்தை நம்பும்படி செய்திருக்கிறார்.

நாடி சோதிடம் குறித்து நானும் அவருடன் பேசியிருக்கிறேன். அப்பொழுது அவர் எமது தேசியத் தலைவர் பற்றி நாடி சோதிடத்தில் உள்ளதைப் பற்றி எனக்கு வாசித்துக் காட்டினார். தேசியத் தலைவரின் ஊர், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்கின்ற அனைத்து விவரங்களும் அதில் அப்படியே இருந்தது. அத்துடன் 2011இல் தேசியத் தலைவர் வெற்றி பெற்று தன்னுடைய இலக்கை அடைவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

அவருடைய வீட்டிற்கு சென்ற வேறு சிலரிடம் தேசியத் தலைவர் பற்றி நாடி சோதிடம் கூறுவதை வாசித்துக் காட்டியிருக்கிறார்.

இப்படியான நம்பிக்கைகள் சில வேளைகளில் தனிப்பட்ட நன்மைகளையும் கொடுக்கும். கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை நாம் படுகின்ற மனத் துன்பங்களை இவரைப் போன்றவர்கள் பட்டிருக்க மாட்டார்கள். சோதிடத்தை வாசித்து விட்டு தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று உறுதியாக நம்பிக் கொண்டு நிம்மதியாக உறங்குகின்றார்கள். நாம் நிம்மதி இழந்து அல்லலுறுகிறோம்.

....................................

மே மாதம் 17ஆம் திகதி இரவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் இருந்து எந்த ஒரு தகவலும் யாருக்கும் வரவில்லை. ஆயினும் பழ. நெடுமாறன் போன்றவர்கள் தொடர்ந்தும் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக அறிக்கை விடுகின்றார்கள்.

எத்தனையோ தமிழர்களால் தேசியத் தலைவர் இல்லாத ஒரு நிலையை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களுடைய மனம் அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளாது. பல நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு இனத்தை விடிவிக்க வந்த ஒருவர் திடீரென்று இல்லாமல் போய்விட்டார் என்பதை இனப் பற்றுள்ளவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

தேசியத் தலைவரின் வீரச் சாவை நம்புவதற்கு பல தமிழர்களின் மனங்கள் தயாராக இல்லை.

பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்களும் தேசியத் தலைவரின் மறைவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "மனதின் விருப்பம்" என்கின்ற காரணத்தோடு ஜேர்மனியில் வாழ்கின்ற பெங்களுரைச் சேர்ந்த அந்த நபர் இவர்களின் நெருங்கிய நண்பர் என்கின்ற காரணமும் இருக்கின்றது.

ஆகவே ஆகக் குறைந்தது 2011 வரையாவது தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறனின் அறிக்கைகளும் "எம் தலைவர் சாகவில்லை" போன்ற தேனிசை செல்லப்பாவின் பாடல்களும் வந்து தமிழர்களைக் குழப்பிக் கொண்டுதான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அவர்கட்கு

இப்பின்னுட்டம் வேறொரு விடையத்திற்கு நான் எழுதியிருந்தாலும் கூட தாங்கள் எழுதிய கருத்துக்கும் பொருந்தும் என்பதால் இதை இணைக்கிறேன்.

தயவுசெய்து இங்கு கருத்தெழுதுபவர்கள் ஒன்றை மனதில்வைத்துக்கொள்ங்கள்

நெடுமாறன் அவர்கள் இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்கட்கு ஆதரவாக தனது அரசியசெயற்பாடுகளை நெறிப்படுத்துபவர். அவரது பின்னால் பல்லாயிரம் தமிழின ஆதரவாளர்கள் அணிதிரண்டுள்ளார்கள் அவர்களை ஒரு போராட்ட மனநிலையில் வைத்திருக்க வோண்டுமெனில் சில கருத்துக்களை அவர்களுக்கு உடன்பாடானதாகவே கூறவேண்டும்.

ஆனால் தமழீழ அரசியலில் நாமே நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் நாமே கொள்கை முன்னெடுப்புக்களை தீர்மானிக்க வேண்டும் அதன் காரணமாகவே சிலவிடையங்களை தற்காலிகமாகவேனும் ஏற்றுக்கொள்ள எம்மை நாம் திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எதிர்காலம் எமது கைகளிலேயே தங்கியுள்ளது எமை எடுத்தெறிந்தவர்கள் ஏளனம் செய்தவர்கள் அனைவரும் நாணும்படி நாம் சாதனைகள் செய்வோம். ஆயுதம் எடுத்துப்போராடி எமது இனவிடுதலைக்கான காரணங்களை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தியாயிற்று. அதைவிட புலம்பெயர் தேசத்தின் இளையகமுதாயத்தினையும் அதன்பால் ஈர்த்தாயிற்று. இனிமேல் தாயகத்தில் அரசியல் ரீதியான பலத்தினை உருவாக்கி மேற்குலகம் சொல்லுதே ஜனநாயகவழியிலான போராட்டம் இதற்கான கதவகளை நாம் திறந்திடல் வேண்டும்.

அது தவிர பல்லாயிரக்கணக்கான மக்களை நாசி முகாம்களில் இருந்து வெளியே எடுத்தாகுதல் வேண்டும் காரணம் சிங்களவன் எம்மில் எதிர்பாப்பது ஒரு நலிவடைந்த தமிழினக் குழுமத்தையே நோயினால் உடலளவிலும் மற்றும் மனநேயினால் அறிவியல் ரீதியாகவும் மீண்டுவரமுடியாத ஒரு இனக்குழுமம் வன்னிநிலப்பரப்பில் வாழ்வதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் அதையே அவன் எதிர்பார்க்கிறான் காரணம் அவர்கள்தான் கேள்விகேட்கமாட்டார்கள் சிங்களக் குடியேற்றத்திற்கு இலகுவாகச் சம்மதிப்பார்கள். கடந்த வாரம் மகிந்த இனிமேல் எல்லைக்கிராமங்கள் என எதுவுமே இருக்காது என்று ஒரு கூட்டத்தில் பேசியதை அவதானித்தவர்க்கு இது புரியும்.

மேலும் அரசியற் போராளிகளும் இராணுவத்தின் பிடியில.; இவர்கள் திரும்பிவந்து தமது கள வேலைகளை மீண்டும் தொடங்க வேண்டும் இதற்கான வேலைத்திட்டங்களை களத்திலும் புலத்திலும் தொடங்க வோண்டும்

தவிர மெத்தப்படித்த கூட்டமொன்று புலம்பெயர் தேசத்தில் உள்ளது இவர்களை உள்வாங்க வேண்டும் காரணம் அவர்கள் தான் உள்ளதை உள்ளபடி சரியான விதத்தில் கூறுவார்கள் என்று மேற்குலக இராஜதந்திர வட்டாரம் அறிந்துவைத்திருக்கின்றது.

மாறாக எமது மண்ணின் வளங்களை சுரண்டுவதற்கு அனேகர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அதை முறியடிக்க எம்மத்தியில் கல்வியறிவாளர்கள் பொருளாதார மேம்பாட்டுச் சிந்தனையுடையவர்களை ஒன்றிணைக்க வேண்டும் அதன் மூலம் புலம்பெயர் தேசத்தில் தமிழர் முதலீட்டு வங்கி எனும் பெயரிலேயோ அன்றேல் அதற்கிணையான ஏதாவது பெயரிலேயோ அரசியல் சாராத வல்லுனர் குழுவினை உருவாக்கி புலம்பெயர் தேசத்தில் தமிழர்களிடம் பெட்டிகளில் உறங்கிக்கிடக்கும் பணத்தினை முதலீடாக மாற்ற வேண்டும் அதற்கு முன்பு அவர்களிடம் இதுவிடையமான நுர்றுவீத உண்மைத்தன்மையுடைய நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இம் முதலீடுகள் எல்லாம் எம் தேசத்தில்பால் திருப்பிவிடல் வேண்டும். இவை படிப்படியாக நிறைவு செய்யும் காலமே உலகசமுதாயம் தமிழினத்தின் மேன்மையினை ஏற்றுக் கொண்டு எமது விடுதலையை அங்கீகரிக்கும்.

அவ்வேளை இந்தியா எனும் தேசம் உலக வரைபடத்தில் இருக்காது மாறிவரும் புறச்காரணிகளால் துண்டுதுண்டாகி சிறிய இனக்குழும நாடுகளின் கூட்டமாக மாறியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

5ம் ஈழப்போர் வரும் என்று கற்பனையில் வாழ்பவர்களினால் சபேசனும் துரோகியாக்கப்படலாம். எதற்கும் கவனமாக இருங்கோ சபேசன்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாhக கதைகளை எழுதுவதற்கு நக்கீரன் போன்ற ஊடகங்களுக்கு வியாபாரம் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்கள் உண்மையாகவே தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

நக்கீரனுக்கு வியாபாரம் முக்கியம் இந்தத்தமிழீழ அபிமானிகளுக்கு வருமானம் முக்கியம்.

5ம் ஈழப்போர் வரும் என்று கற்பனையில் வாழ்பவர்களினால் சபேசனும் துரோகியாக்கப்படலாம். எதற்கும் கவனமாக இருங்கோ சபேசன்.

துரோகியென்ற சொல் வலுவிழந்து நீண்டகாலம். இப்போ சரணடைந்த போராளிகள் யாவரும் புலத்துத்தமிழீத்தேசியவாதிக

சபேசன் நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டீர்கள்

தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா ? இல்லையா ? இரண்டு விதத்திலும் யாரும் நிரூபிக்கவில்லை சிறிலங்கா கூட எல்லாமே ஆய்வுகளாகவே இருக்கின்றது

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை என்று விட்ட அறிக்கையில் கூட தமக்கு கால அவகாசம் தேவைப்பட்டது என்று சுட்டிக் காட்டியது

ஆனால் அதற்கு முன்னமே அவர் இல்லை என்று விடுதலைப்புலிகள் சார்பிலும் சார்பு இல்லாதவர்களும் ஆதாரங்கள் இல்லாமலே ஆணித்தரமாக பிரச்சாரம் செய்தது ஏன் ?

தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை.

ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு "தேசியத் தலைவர் வருவார்" என்று காத்து நிற்கிறார்கள்

நீங்கள் இறந்த உடலைப் பார்த்தீர்களா ??

எப்படி உறுதியாக சொல்கின்றீர்கள் ?

செய்தாரோ தெரியவில்லை.

நீங்கள் உங்களது ஊகங்களை ஆதாரமாக காட்ட முட்படுவது ஏன் ??

புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளிடமும் தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதில் இன்றைக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை.

அவர் இல்லை என்பதை மக்களிடம் சொல்வதா? வேண்டாமா என்பதில்தான் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமல் நிற்கின்றார்கள்.

இவை எல்லாம் கூட உங்கள் ஊகம் தான்

ஆனால் தமிழ்நாட்டின் சில தலைவர்களும், ஊடகங்களும் உறுதியான முறையில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றார்கள்.

மே மாதம் 17ஆம் திகதி இரவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் இருந்து எந்த ஒரு தகவலும் யாருக்கும் வரவில்லை

யாருக்கும் வரவில்லை என்று எப்படி அடித்துக் கூறுகின்றீர்கள்

அப்படி அனுப்பியிருந்தால் தகவல் கிடைத்தவர்கள் எல்லாம் உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களா ??? எதற்காக உங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ???

இது வரை தலைவர் நேரடியாக யாருக்காவது தகவல் அனுப்பியது உண்டா ??? மாவீரர் உரையைத் தவிர

நக்கீரன் தேசியத் தலைவர் எப்படித் தப்பித்து வெளியேறினார் என்று கண்ணால் கண்டது போன்று ஒரு கதையை எழுதியது.

ஆய்வு எழுதுபவர்கள் உங்களையும் சேர்த்து யாரும் நேரில் கண்டு ஆய்வு செய்வதில்லை அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் எல்லோரும் கம்புயூட்டர் ஜெரனல்கள் தான் இதுவே நீங்கள் செய்த ஆய்வின் பொய்த்தன்மை வெளிப்பட்டு விட்டது

பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்களும் தேசியத் தலைவரின் மறைவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "மனதின் விருப்பம்" என்கின்ற காரணத்தோடு ஜேர்மனியில் வாழ்கின்ற பெங்களுரைச் சேர்ந்த அந்த நபர் இவர்களின் நெருங்கிய நண்பர் என்கின்ற காரணமும் இருக்கின்றது.

என்ன புது கதை

நீங்கள் திரைக்கதை வசனம் சபேசன் என்று இறுதியில் எழுத மறந்து விட்டீர்கள்

இந்த ஆய்வாளர்களின் வெத்து வேட்டு ஆய்வுகளால் தான் புலம்பெயர் தமிழினம் சுயமாக சிந்திக்கும் திறனற்ற முடமானது

மீண்டும் மீண்டும் உங்கள் ஆய்வுகளால் தமிழர்களை முடமாக்கியது போதும்

இனியாவது சிறிலங்காவின் வலைப்பின்னலுக்குள் முடங்கி கிடக்காமல் தமிழர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்

படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்

கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு தாமே சீருடையை அணிவித்ததாக சிறீலங்காவின் 53 ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா தெரிவித்துள்ளது தொடர்பாக?

பதில்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும் கருத்துக்களும், புகைப்படங்களும், நடைபெற்ற சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று பல முரண்பாடுகளை கொண்டவை. அதாவது சிறீலங்கா அரசின் பின்னைய தகவல்கள் அவர்களின் முன்னைய தகவல்களை பொய்யாக்கி வருகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சீருடையை இராணுவம் அணிவித்திருந்தால் அவரின் கைத்துப்பாக்கி அங்கு எவ்வாறு வந்தது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கைத்துப்பாக்கி என காண்பிக்கப்பட்ட துப்பாக்கியும் அவருடைய பிரத்தியோக துப்பாக்கியல்ல.

வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரினது கைத்துப்பாக்கிகள் தனித்துவமானவை. அவை லேசர் மூலம் வழிநடத்தப்படும் துVரங்களை கணிப்பிடும் கருவிகளை கொண்டவை. நீங்கள் முன்னைய புகைப்படங்களில் இருந்து அவற்றை ஆராய்ந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாது அவரின் துப்பாக்கி உறையும் உலோகத்திலானது. அதாவது பட்டனை அமுக்கியதும் துப்பாக்கியை வெளியே தள்ளும் பொறிமுறை கொண்டது. ஆனால் காண்பிக்கப்பட்டவை சாதாரண 9 மி.மீ கைத்துப்பாக்கியும், உறையும் தான். இவ்வாறு நுVறு காரணங்களை முன்வைக்க முடியும். அவற்றை இங்கு கூறுவதாக இருந்தால் அது பல பக்கங்களை நிரப்பிவிடும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை சிறீலங்கா அரசு தனது பிரச்சாரத்திற்கு பல ஒப்பனைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதுடன் பல தகவலகளை மறைக்கவும் முற்படுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்று தான், அது தமிழ் மக்களின் விடுதலைப் போரை முற்றாக மழுங்கடித்து விடுவதேயாகும்.

http://tamilthesiyam.blogspot.com/2009/06/...-post_6508.html

5ம் ஈழப்போர் வரும் என்று கற்பனையில் வாழ்பவர்களினால்

இது தமிழ்நாட்டு உணர்வாளரால் சொல்லப்பட்டது இதற்குள் புலம்பெயர் தமிழர்களை இழுத்து விடுவது உங்கள் பாணியாக்கும்

இனிவரும் போர் ராஜ தந்திரப்போர் ஒழிய ஆயுதப் போரல்ல அதனுடைய ஆரம்பபம் தான் நாடு கடந்த தமிழீழ அரசு

இவை எல்லாம் எப்போதோ வரையப்பட்ட தலைமையின் வெவ்வேறு உத்திகள் என்று சில வட்டாரங்கள் கூறுகின்றன

தலைமை பற்றிய விவாதங்களை விட்டு விடுவோம் அவருடைய இலட்சியத்தினைத் தொடருவோம்

பழ.நெடுமாறன் போன்றவர்களின் நம்பிக்கைக்குப் பின்னால்....!

இதை சபேசன் போன்றவர்களின் நம்பிக்கைக்குப் பின்னால்....! என்று மாத்துங்கள் அதுவே பொருத்தமானது

Edited by tamilsvoice

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை என்று விட்ட அறிக்கையில் கூட தமக்கு கால அவகாசம் தேவைப்பட்டது என்று சுட்டிக் காட்டியது

அதே புலனாய்வுத்துறை தானே பிறகு கொஞ்ச நாளுக்கு முன்பாக தலைவர் வீரமரணம் என்று மீண்டும் அறிக்கை விட்டது. ஏன் முன்பு சொன்னதற்கும் தற்பொழுது சொன்னதுக்கும் விளக்கம் கொடுத்தது. அறிவழகனின் அறிக்கையை வாசிக்க வில்லையா?

நக்கீரனுக்கு வியாபாரம் முக்கியம் இந்தத்தமிழீழ அபிமானிகளுக்கு வருமானம் முக்கியம்.

நக்கீரனுக்கு வியாபரம் முக்கியம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பழ. நெடுமாறனைப் பற்றி தாங்கள் சொல்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாகக் கதைப்பவர்களில் பலருக்கு பொருள் உதவி, அரசியல் நாற்காலி போன்ற ஆசைகள் இருப்பதை மறுக்கமுடியாது.

நீங்கள் இறந்த உடலைப் பார்த்தீர்களா ??

எப்படி உறுதியாக சொல்கின்றீர்கள் ?

இதே கேள்வி கேட்கும் நீங்கள் 17ம் திகதிக்கு பிறகு தலைவரைப் பார்த்தீர்களா? எப்படி உறுதியாக தலைவர் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள்

தலைமை பற்றிய விவாதங்களை விட்டு விடுவோம் அவருடைய இலட்சியத்தினைத் தொடருவோம்

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கீழே உள்ள படத்தினை பார்த்து பலகொணங்களில் ஆராச்சிசெய்தாவது இவரை யாரென்று சொல்லுங்கள்....அப்பவாவது ஏதாவது ஒரு முடிவு வருகிதா பார்க்கலாம்..

இந்த நவீன தொழில் நுடபகாலத்திலும் படத்தை வைத்து எதுவும் செய்யலாம் அதன் வைத்து ஆராச்சி செய்து தான் முடிவுக்கு வரவேண்டும் என்று சொல்லாதீர்கள் வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

அதே புலனாய்வுத்துறை தானே பிறகு கொஞ்ச நாளுக்கு முன்பாக தலைவர் வீரமரணம் என்று மீண்டும் அறிக்கை விட்டது. ஏன் முன்பு சொன்னதற்கும் தற்பொழுது சொன்னதுக்கும் விளக்கம் கொடுத்தது. அறிவழகனின் அறிக்கையை வாசிக்க வில்லையா?

நீங்கள் தான் வாசிக்கவேண்டும்

புலனாய்வுத்துறை என்ற சொன்னவர்களுக்கே ஒரு மாதம் எடுத்திருக்கும் போது உங்களுக்கும் சாத்திரிக்கும் எப்படி உடனேயே முடிந்தது

அதுவும் சாத்திரி வியாபாரியால் விழுந்தது அது மட்டும் அல்ல முகாமில் இருக்கும் மக்களுக்கு இதால் பாதிப்பு வருமாம்

தலைவரின் உடல் டிஎன் ஏ எல்லாம் ஒத்துவந்து நீருபனம் ஆயிருந்தால் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் உறுதி செய்தாகி விட்டது

ஆக புலம்பெயர் தமிழர்கள் சொன்னால் தான் சிறிலங்காவும் இந்தியாவும் மேற்குலமும் நம்பும் என்பது போல் நீங்கள் எல்லாம் எழுதுவது தான் வேடிக்கை

நீங்கள் எல்லாம் எதற்காக இதை மற்றவர்களின் மேல் திணிக்க முயல்கின்றீர்கள் ????

முதலில் வந்த அறிக்கையும் பின்னர் வந்த அறிக்கையும் ஒருவரால் தான் வந்ததா ??? யாரிடம் ஆதாரம் இருக்கின்றது

அல்லது அப்படி ஒருவர் இருக்கின்றாரா ???

நான் கூட நாளை ஒரு அறிக்கை விடலாம் யாழ் புலனாய்வுத்துறை என்று

இப்போது தலைமைச் செயலகம் ஒன்று இல்லாத போது எதுவும் யாராலும் நீருப்பிக்க முடியாது

இதே கேள்வி கேட்கும் நீங்கள் 17ம் திகதிக்கு பிறகு தலைவரைப் பார்த்தீர்களா? எப்படி உறுதியாக தலைவர் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள்

தலைவர் என்ன தொடர் நாடகத்திலா நடித்துக்கொண்டிருந்தார் ???

17 ம் திகதிக்கு முன்னர் நீங்கள் தலைவரை பார்த்திருக்கின்றீர்களா ??

புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களில் கூட சிலர் தலைவரை நேரில் பார்த்தது கிடையாது நீங்கள் வேறு

நாங்கள் எல்லாம் தலைவனைத் தேடவில்லை அவரும் போராளிகளும் நலமாக இருக்கவேண்டும் என்ற அவாவில் தான் அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் என்று தான்

ஆனால் சிலர் இதன் மூலம் தலைவர் தலை காட்ட வேண்டும் அப்போது பிடித்துக்கொடுக்கலாம் என்பது போல் அல்லவா இவர்கள் அங்கலாய்க்கின்றார்கள்

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கட்டுரை எதன் அடிப்படையில் எழுதப்பட்டது என்றே புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் இன்னும் இருக்கிறார். மீண்டும் வருவார். நிச்சயம் போராடுவார்.

ஒருவேளை அவரது உடல்தான் என உறுதியாகத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவ்வுடல் கொழும்புவிற்கு கொண்டு வரப்பட்டு சர்வதேச பத்திரிக்கையாளர்களுக்கும் சிங்களவனால் காண்பிக்கப்பட்டிருக்கும். டிஎன் ஏ பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கும். ஆனால் நடந்தது என்னவோ எதிர்மறையாக உடல் எரிக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட்டாதாக செய்தி வெளியிட்டனர்.

Edited by பகுத்தறிவு

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசுக்கான பங்களிப்பில் இணைத்து, இப்பகுதியில் கருத்துக்களால் ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்...

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

பழ.நெடுமாறன் போன்றவர்கள் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்வதினால், தேசியத் தலைவர் இருப்பதற்கான ஆதாரத்தை அவர்கள் வைத்திருப்பதாக பலர் நம்புகிறார்கள்.

நெடுமாறனுக்கு தெரிந்த ஒரு இடத்தில்தான் தேசியத் தலைவர் நிற்பதாகக் கூட சிலர் நினைக்கின்றார்கள்.

அப்படி எதுவுமே இல்லை என்பதைக் கூறுவதுதான் என்னுடைய முதன் நோக்கம்.

நெடுமாறன் போன்றவர்களிடம் தற்பொழுது இருப்பது நம்பிக்கைகள் மட்டுமே!

மற்றைய கேள்விகளுக்கு பின்பு தனியாக பதில் எழுதுகிறேன்.

தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது

மக்களின் உளவியலை புரிந்து கொண்டு மக்கள் போராட்டத்திற்கு வழி விடுங்கள்

தமிழ் மக்களின் விடுதலைப்போர் அறுபத்து ஒரு வருடங்களை பல பரிணாமங்களின் ஊடாக கடந்த போதும், அது தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் மரபுவழியிலான படைபலத்தை பிராந்திய வல்லரசுகளின் துணையுடன் சிறீலங்கா அரசு முறியடித்த பின்னர் தமிழ் மக்களின் உரிமைக்கான போரின் அடுத்த கட்டத்தை நகர்த்துவதில் தமிழ் சமுதாயம் பல நெருக்கடிகளை எதிர் நோக்கி நிற்கின்றது.

விடுதலைப்போர் சந்தித்த மிகப்பெரும் மனிதப்பேரவலத்தின் இறுதி நாட்களில் வீறுகொண்டு எழுந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எழுச்சிகள் தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கும் வரை தொடர வேண்டும். அதன் மூலம் தான் எமது இனம் சந்தித்த இழப்புக்களையும், துன்பங்களையும், பேரழிவுகளையும் உலகின் பதிவுகளில் இருந்து அழியாது பேணமுடியும்.

கடந்த ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழினமும் ஏற்படுத்தியிருந்த பெரும் எழுச்சிக்கு கடந்த 20 ஆம் நாள் பிரித்தானியா தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை செயல்வடிவம் கொடுத்திருந்தனர்.

எமது எழுச்சிகள் அடங்கிப்போனால் எமது உரிமைகளும் அதனுடன் அடங்கி போய்விடும் என்ற சிறீலங்கா அரசின் எதிர்பார்ப்புக்கு அவர்களின் இந்த எழுச்சி மீண்டும் ஒரு பேரிடியை கொடுத்துள்ளது.

போராட்டம் அடுத்து பயணிக்கப்போகும் பாதைக்கு அனைத்துலகத்திலும் பரந்து வாழும் ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவுகள் தேவை. ஆனால் அதனை சிதைத்துவிடுவதில் இந்திய - சிறீலங்கா அரசுகள் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன.

அவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மையமாக கொண்டே நகர்த்தப்பட்டு வருகின்றன. அதனை உறுதிப்படுத்துவது போலவே வன்னியில் படை நடவடிக்கைகயை மேற்கொண்ட பல படை அதிகாரிகளை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் சிறீலங்கா அரசு பணிகளில் அமர்த்தியுள்ளது. அவர்களின் மூலமும் பல ஊடுருவல்களை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் அவற்றை எல்லாம் புறம்தள்ளி நாம் மேற்கொள்ளப்போகும் தொடர் போராட்டங்கள் மூலமே காத்திரமான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்.

கடந்த வாரம் பிரித்தானியாவில் அணிதிரண்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உறவுகளை போல எதிர்வரும் 28 ஆம் நாள் பிரான்ஸிலும், ஏனைய நாடுகளிலும் நாம் ஒன்று திரண்டு எமது பலத்தை மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டிய கட்டயாம் உள்ளது.

எமது மக்கள் தாயகத்தில் சந்தித்த பேரழிவுகளுடன் எமது போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது என்ற கருத்தை நாம் தான் மாற்ற வேண்டும். ஆனால் எமது மக்களின் உளவுரைனையும், போராடும் மனவலுவையும் சிதறடிப்பதற்கு பல புறச்சூழல்கள் எம்மை சுற்றி உருவாக்கப்டுகின்றன.

பல அறிக்கைகளும், நேர்காணல்களும் எமது மக்களின் மனஉறுதியை தகர்க்கும் நோக்கங்களை மையமாக கொண்டு வெளியிடப்படுகின்றன. இது பெரும் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கும் ஒரு இனத்தின் உளவியலை மேலும் பல மடங்கு சிதைப்பதற்கே உதவும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை எதிரி ஒரு முறைதான் தனது ஊடக வலிமையை கொண்டு சாகடித்தான்;

ஆனால் எம்மில் சிலர் மீண்டும் மீண்டும் அந்த மாமனிதனை தமது ஊடகச்சமரில் சாகடித்து வருகின்றனர். மேலும் எத்தனை முறை அவரை சாகடிக்கப்போகிறார்களோ தெரியாது.

இந்த ஆதாரமற்ற தகவல்களால் ஒரு இனம் எவ்வளவு தூரம் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறத

சபேசன் நீங்களும் பச்சோந்தி ஆகி விட்டீர்கள்

யாராவது தலைவரைக் கண்டு பிடித்துக் கொடுங்கள் என்று உங்களிடம் கேட்டார்களா ????

நீங்கள் உண்மையில் தமிழர்களின் மேல் அக்கறை உடையரவரா ?? அல்லது புலிகளையும் தலைமையையும் நேசிப்பவரா என்றால் இல்லை என்று தான் அடித்து சொல்ல வேண்டும்

நெடுமாறன் போன்றவர்களிடம் தற்பொழுது இருப்பது நம்பிக்கைகள் மட்டுமே!

அது கூட உங்களிடம் கிடையாது

முதலில் பழநெடுமாறன் அய்யாவை பற்றி விமர்சிப்பதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது அவரைப் போன்ற தலைமயில் ஈழத்தில் பற்று உள்ளவர்கள் எங்களிலேயே கிடையாது

நீங்கள் பொறாமையில் எழுதுகின்றீர்கள் என்பது உங்கள் வரிகளில் தெரிகின்றது

தலைமையை நேசித்திருந்தால்

அவரை தூற்றி வந்த கட்டுரைகளுக்கு எதிர்த்து விவாதித்திருக்க வேண்டும் அப்படி ஒன்றும் நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லை

அதை விடுவோம் நக்கீரன் இது வரைக்கும் தலைமையைத் தூற்றி எழுதவில்லை போற்றியே எழுதுகின்றது அது உங்களுக்கு எரிச்சலைத் தருகின்றதா ???

நீங்கள் உங்கள் ஆய்வுத்தொழிலை வைத்திருப்பதற்கு உங்கள் நண்பக ஊடக கூட்டங்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கு யாரையும் எதிர்த்து எழுதவில்லை

பரபரப்பு ரிசி முதற்கொண்டு புதினம் வரை விமர்சிக்கலாமே ??

உங்களுக்கு வருமானம் இல்லாத நக்கீரனையும் பழநெடுமாறனும் உங்களுக்கு துரோகிகள் மற்றவர்கள் எல்லாம் தமிழ்த்தேசிய வாதிகள்

இப்போதுள்ள தமிழர்களின் அரசியல் போராட்ட நகர்வுகளை ஆராய்ந்திருக்கலாம் நாடு கடந்த தமிழீழ தனி அரசு பற்றி அப்படி எதுவும் செய்யவில்லை

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

புலம் பெயர் தமிழர்கள் சற்று ஒய்ந்த நேரத்தில் மீண்டும் நீங்கள் கிழறி விடுவது சந்தேகத்தை கிளப்புகின்றது

ஆம் தமிழ்குரல்,

பத்மநாதன் அண்ணா , வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவைச் சார்ந்த அறிவழகன் போன்றோரில் இருந்து தலைவரின் இறப்பு பற்றி சொல்லும் வழுதி வரைக்கும் கெட்டவர்கள், உண்மை சொல்லாதவர்கள், அறிவற்றவர்கள். கனடா கத்தசாமி கோயிலில் ஒன்று கூடி கூட்டம் போடும் உங்களைப் போன்றவர்கள்தான் எல்லாம் அறிந்தவர்கள்... நீங்கள் சொல்வதை தான் நாம் கேட்கவேண்டும். மற்றவர்கள் எல்லாரும் கிறுக்குப் பயல்கள், நீங்களும், நடக்க போவதை எல்லாம் மிக துல்லியமாய் இராணுவ கட்டுரைகளை எழுதிய /எழுதி வரும் அரூஷ் போன்றவர்களுமே புத்திசாலிகள். உங்களைப் போன்றவர்களும் தமிழ் தேசியம் என்பதில் குளிர் காய வேண்டி இருப்பதுதான் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சாபம்

இனி என்ன, என்னையும் திட்டி பந்திகள் எழுதுங்கள்.

வாழ்க முதுகு வளைய வேலை செய்யாது மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் வாழ்க !!!

நாடு கடந்த அரசுக்கான பங்களிப்பில் இணைத்து, இப்பகுதியில் கருத்துக்களால் ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்...

நீங்கள் வேற.... அப்படியான நாடு கடந்த அரசு பற்றி சொல்பவர்கள், ஆதரிப்பவர்கள் எல்லாம் பத்மநாதன் அண்ணாவின் கருத்துகளுடன் உடன்படுவர்கள். தமிழ் குரல் சொல்லிவிட்டார், தலைவர் இறப்பு பற்றி சொல்வபர்கள் எல்லாம் பச்சோந்திகள் என்றும் பொய் சொல்கின்றார்கள் என்றும்,,,, பிறகு எப்படி நாடு கடந்த அரசை நாம் ஆதரிப்பது. 5 ஆம் ஈழப் போரையும் தலைவரே நடத்தி வைப்பார்.. நான்க்க்ள இன்கிருந்து குளிர் காய்வோம் வாருங்கள்

இனி என்ன, என்னையும் திட்டி பந்திகள் எழுதுங்கள்.

நீங்கள் பழைய பகையை வைத்து கொண்டு இங்கு குளிர் காய வந்திருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும்

வேண்டுமானால் அவற்றின் இணைப்பை இங்கு இணக்கின்றேன்

வாழ்க முதுகு வளைய வேலை செய்யாது மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் வாழ்க !!!

இதற்காகவே நிங்கள் நீங்கள் முதுகு வளைய வேலை செய்கின்றீர்கள் என்பதும் எனக்கு தெரியும்

:unsure:நீங்கள் என்ன வேண்டுமானா முதுகு வளைத்து , குனிந்து நின்று செய்யுங்கள் :huh:

நீங்கள் பழைய பகையை வைத்து கொண்டு இங்கு குளிர் காய வந்திருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும்

அடடா...... பகை....சக கருத்தாளர்களை பகைவர்களாக பார்க்கும் psycho குணம் எனக்கில்லை அன்பரே.

:Dநீங்கள் என்ன வேண்டுமானா முதுகு வளைத்து , குனிந்து நின்று செய்யுங்கள் :mellow:

உதில இரட்டை அர்த்தம் ஒன்றும் இல்லைதானே? :wub:

Edited by நிழலி

ஆம் நிழலி ???

சபேசனின் விரோதி இப்போ சபேச்னுக்கு யாழ்லாரா அடிப்பது ஏன் ???

விரோதிக்கு விரோதி நண்பன் அப்படி வருகின்றீர்களா ???? நன்று நன்று

இதோ நான் எழுதியது

இனிவரும் போர் ராஜ தந்திரப்போர் ஒழிய ஆயுதப் போரல்ல அதனுடைய ஆரம்பபம் தான் நாடு கடந்த தமிழீழ அரசு

இவை எல்லாம் எப்போதோ வரையப்பட்ட தலைமையின் வெவ்வேறு உத்திகள் என்று சில வட்டாரங்கள் கூறுகின்றன

இப்போது யார் பச்சோந்தி என்று மற்றவர்களுக்கு தெரியும்

அடடா...... பகை....சக கருத்தாளர்களை பகைவர்களாக பார்க்கும் psycho குணம் எனக்கில்லை அன்பரே.

தன்னைத் தானே நல்லவர் வல்லவர் என்று சொல்லும் குணம் எனக்கில்லை

யாழின் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும் இங்கு கருத்தாடல்களிலிருந்து தணிக்கை வரை அவரவர் விசுவாசிகளுக்காகவே ஒழிய உண்மையான பற்றில் அல்ல என்பது

இந்த தலைப்பு இன்னும் இங்கிருக்குமா ???? பார்ப்போம்

உதில இரட்டை அர்த்தம் ஒன்றும் இல்லைதானே?

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் :mellow:

மக்களை அவர்களின் வழியிலேயே விடுங்கள் அவர்களே முடிவு எடுக்கட்டும்

நீங்கள் ஆய்வுகள் என்று சொல்லி முடமாக்கி முகாங்களுக்கும் முடக்க வேண்டாம் ???

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

சரி நிழலி நீங்கள் சுயமாக சிந்திப்பவாரானால்

பழ நெடுமாறனையும் நக்கீரனையும் சபெசன் தாழ்த்தி ஒன்றை நிரூபிக்க முற்படுவதேன் ???

அவரிடம் என்ன ஆதாராம் இருக்கின்றது இல்லை என்று இவருக்கு எப்படித் தெரியும் ???

அவரது நகர்வுகளைக் கண்காணிக்கும் ரோவில் இவர் வேலை செய்கின்றாரா ???

படத்தை வைத்து ஆராய்வது வேறு இது என்ன ஆராச்சி ??

ஒருவர் எழுதுவதெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மந்தைகளா நாம் ???

நீங்கள் ஆய்வுகளை செய்துகொண்டிருங்கள்

இனி சுரக்காய்க்கு உப்பில்லை என்று ஒரு ஆய்வு எழுதாலாமே ???????????????

யாழில் எழுதுவது முட்டாள்தனம் தான்

சரி நிழலி நீங்கள் சுயமாக சிந்திப்பவாரானால்

பழ நெடுமாறனையும் நக்கீரனையும் சபெசன் தாழ்த்தி ஒன்றை நிரூபிக்க முற்படுவதேன் ???

அவரிடம் என்ன ஆதாராம் இருக்கின்றது இல்லை என்று இவருக்கு எப்படித் தெரியும் ???

அவரது நகர்வுகளைக் கண்காணிக்கும் ரோவில் இவர் வேலை செய்கின்றாரா ???

படத்தை வைத்து ஆராய்வது வேறு இது என்ன ஆராச்சி ??

ஒருவர் எழுதுவதெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மந்தைகளா நாம் ???

நீங்கள் ஆய்வுகளை செய்துகொண்டிருங்கள்

இனி சுரக்காய்க்கு உப்பில்லை என்று ஒரு ஆய்வு எழுதாலாமே ???????????????

யாழில் எழுதுவது முட்டாள்தனம் தான்

நான் கட்டுரையை இரு முறை வாசித்தனான். நெடுமாறன் ஐயாவினை தாழ்த்தி எழுதியுள்ளதாக நான் எந்த இடத்திலும் உணரவில்லை.

ஐயாவின் ஈழப் போராட்டம் சம்பந்தமான உணர்வும், அவர் செய்த பணிகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. ஆனால் இன்று தமிழ் மக்களிற்கிடையே இருக்கும் குழப்பத்தினை களைந்து ஒரே கருத்தை வலுயுறுத்துவதற்காக புலிகளின் தரப்பில் இருந்து வருகின்ற ஒரே விதமான (தலைவர் இல்லை எனும் விதமான) கருத்துகளை முற்றாக நிராகரித்து, 'அவர் இன்னும் இருக்கின்றார்' எனும் கருத்துகளை ஏன் நெடுமாறன் ஐயா இன்னும் வெளியிடுகின்றார்? அத்தகைய அவரின் செயலைத் தான் இந்த (சபேசனின்) கட்டுரை வெளிப்படுத்துகின்றது. நாடு கடந்த தமீழீழ அரசு அமைப்பது பற்றியோ அல்லது முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்கள் பற்றியோ கருத்தாடல்களை வைக்காமல், இன்னும் தலைவர் இருக்கிறார்.. 5ஆம் ஈழப் போர் வரும் என்ற ரீதியில் கருத்துகளை வைப்பதைப் பற்றித் தான் இந்த கட்டுரை பேசுகின்றது என நம்புகின்றேன்

எமக்கிருக்கும் ஒரு பழக்கம், ஒருவர் எம்மை ஆதரிக்கின்றார் என்பதற்காகவே அவரின் அனைத்து விதமான செயல்களையும் நியாயப் படுத்துவது. அப்படியான நியாயப் படுத்தல்கள் எதனையும் தரப் போவதில்லை. தவறான செயல்களின் போது தவறு என்று சுற்றிக் காட்டுவது தவறாகாது

நக்கீரனை பற்றி எழுதியிருக்கும் விடயம் மிகச் சரியானது. லாபத்திற்காக எதனையும் எழுதும் பரபரப்பு பத்திரிகை போன்றதே நக்கீரன் என்னும் பத்திரிகை. தமிழக மக்களிடையே கருணாநிதியினை தோலுரித்து காட்டுவதை அடியோடு மறுக்கும் பத்திரிகை, ஈழ மக்களின் பால் அக்கறை இருக்குமாயின் ஈழ மக்களிற்கிடையே இருக்கும் பிழவை இன்னும் அதிகப்படுத்த முனையாது. கருணாநிதிக்கும் ஆதரவு, ஈழ போராட்டத்துக்கும் ஆதரவு என்பது ஒருங்கே சேர முடியாத கூட்டிணைவு

------------------------

ஒருவரின் கருத்தினை ஏற்காது அதற்கு எதிராக எழுதுவதும் தன்னுடைய கருத்தை வைப்பதும் எழுதியவரை விரோதியாகவோ அல்லது பகையாளியாகவோ கருதும் செயல் அல்ல. சபேசனின் 'அயன் படப் புறக்கணிப்பு' எனும் பதிவிற்கு நான் தொடர்ந்து எதிர்த்து எழுதியமையால் அவரின் விரோதி என என்னை கருதிக்கொண்ட உங்களின் அறியாமையை என்ன என்பது?

மற்றப் படி, யாழில் எழுதுவதும் எழுதாமல் விட்டுவிடுவதும் அல்லது "எழுத மாட்டேன் எல்லாவற்றையும் வெட்டி விடுகிறார்கள்" என்று புலம்பியபின் மீண்டும் எழுதுவதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. நீங்கள் யாழ் பற்றியும் அதில் எழுதுவது பற்றியும் என்ன முடிவெடுத்தாலும் அது உங்களின் தனிப்பட்ட பிரச்சனை. அதனை பறையடிக்க தேவையில்லை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விவாதமே சிறிலங்கா மற்றும் ராவின் வெற்றி. இந்த இக்கட்டான நேரத்தில் விவாதிக்க வேறு முக்கிய விடயங்கள் உள்ளன. நாம் அதை செய்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்மநாதனின் அறிக்கையும் புலனாய்வுத்துறையினரின் அறிக்கையும் முரண்பட்டிருந்தபோது பெரும் ஆபத்து தோன்றியிருந்தது. மக்கள் இருதிசைகளில் பிரிவதற்கான வாய்ப்புத்தான் அது. பிறகு அது உணரப்பட்டதாலேயோ என்னவோ இருவரது கருத்துக்களும் ஒன்றாகி - மக்களை ஒரு குறித்த இலக்கு நோக்கி திசைதிருப்ப ஏதுவாயின.

இந்நிலையில் நெடுமாறன் ஐயா போன்றவர்கள் பத்மநாதன் துரோகி அவருக்கு எதுவும் தெரியாது என்பதன் மூலம்.. மீளவும் பிரிப்பொன்றை மேற்கொள்ள முயல்கிறார். அதை ஏன் அவர் விளங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் தெரியவில்லை. எனது கணிப்புச் சரியாக இருந்தால் - புலிகள் அமைப்பிலேயே - பத்மநாதனுக்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் இயங்கும் யாரோ ஒருவரின் அல்லது பலரின் தூண்டுதலிலேயே நெடுமாறன் இவ்வாறான அறிக்கைகளை விடவேண்டியிருக்கிறது. அல்லது நெடுமாறன் அவர்களோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணுகிறார் என்று அர்த்தம்.

உட்பூசல்கள் இருப்பினும் - தற்போதைய நிலையில் - நெடுமாறன் ஐயா போன்றவர்கள் தலைவர் குறித்த கதைகளை மெளனித்துவிட்டு வேறு மனிதாபிமான பிரச்சனைகளை பேசலாம்.

--

ஒரு லொஜிக்கிற்கு - தலைவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது இருப்பது - தான் இல்லையென்ற நிலை வரமுயல்வதற்கு - ஏதேனும் அரசியல் - ராசதந்திர காரணங்களிருப்பின்.. அக்காரணங்கள் பொருட்டு - அதை ஏற்பதுதானே முறை..?

உதாரணத்திற்கு ரோவை ஏமாற்றவே தலைவர் இறந்ததாக சொல்கிறார்கள் என்பதை பகிரங்கமாக நக்கீரனில் எழுதினால் :mellow: பிறகென்ன..? ஒருவேளை ரோ.. நக்கீரன் படிக்கிறதில்லைபோலும்..

எமக்கிருக்கும் ஒரு பழக்கம், ஒருவர் எம்மை ஆதரிக்கின்றார் என்பதற்காகவே அவரின் அனைத்து விதமான செயல்களையும் நியாயப் படுத்துவது. அப்படியான நியாயப் படுத்தல்கள் எதனையும் தரப் போவதில்லை. தவறான செயல்களின் போது தவறு என்று சுற்றிக் காட்டுவது தவறாகாது

இது எல்லோருக்கும் சபேசனுக்கும் உங்களுக்கும் சேர்த்து பொருந்தும் அல்லவா ????

சபேசனின் ஆய்வில் தவறுகளை ஏன் சுட்டிக்காட்டும் போது துள்ளி குதிக்கின்றீர்கள் ???

நாடு கடந்த தமீழீழ அரசு அமைப்பது பற்றியோ அல்லது முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்கள் பற்றியோ கருத்தாடல்களை வைக்காமல், இன்னும் தலைவர் இருக்கிறார்.. 5ஆம் ஈழப் போர் வரும் என்ற ரீதியில் கருத்துகளை வைப்பதைப் பற்றித் தான் இந்த கட்டுரை பேசுகின்றது என நம்புகின்றேன்

இது பற்றி சபேசன் வாய் திறக்கவில்லை மாறாக பகுத்தறிவு சோதிடத்தை அல்லவா விபரிக்கின்றார் ????

நக்கீரனை பற்றி எழுதியிருக்கும் விடயம் மிகச் சரியானது. லாபத்திற்காக எதனையும் எழுதும் பரபரப்பு பத்திரிகை போன்றதே நக்கீரன் என்னும் பத்திரிகை

இதில நானும் உடன்படுகின்றேன் எப்படி இருப்பினும் நக்கீரன் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுதவில்லை

ஆனால் நக்கிரனில் திமுக விசுவாசத்திலும் தேசியத் தலைவரை தூற்றவில்லை ஆனால் தேசிய ஊடகங்கள் என்று மார்தட்டியவர்கள் அப்படிச் செய்தவர்களை நீங்களும் சபேசனும் ஆதரிக்கின்றீர்கள் அப்படியானவர்களை கண்டிக்க முயலவில்லை அது உங்களின் இரட்டை வேடம் அல்லவா ???

யாழில் எழுதுபவர்கள் நடுநிலையாக ஒரு பக்கச் சார்பில்லாமல் உண்மையை எழுதினால் மற்றவர்கள் எழுதத் தேவையில்லை விவாதத்திற்கு இடமுமில்லை

உதாரணத்திற்கு ரோவை ஏமாற்றவே தலைவர் இறந்ததாக சொல்கிறார்கள் என்பதை பகிரங்கமாக நக்கீரனில் எழுதினால்

அப்படி ஏற்கனவே எழுதி விட்டது

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா?

Edited by tamilsvoice

இது எல்லோருக்கும் சபேசனுக்கும் உங்களுக்கும் சேர்த்து பொருந்தும் அல்லவா ????

சபேசனின் ஆய்வில் தவறுகளை ஏன் சுட்டிக்காட்டும் போது துள்ளி குதிக்கின்றீர்கள் ???

மன்னிக்கவும். சக கள உறவை, அவரின் கருத்துக்காக நீங்கள் பச்சோந்தி என்று சொல்லத் தொடங்கிய பின் தான் துள்ளிக் குதித்து கும்மாளம் இட்டேன். அது வரைக்கும் சும்மா வாசித்து கொண்டு, காலாட்டிக் கொண்டு இருந்தேன். தவறுகள் சுட்டிக் காட்டப் படுவதும் ஒருவரை பச்சோந்தி என்பதும் ஒன்றல்ல. தவிர, சபேசன் எழுதியது எனக்கு தவறாக தெரியவும் இல்லை.

இதற்கு மேல் இந்த திரியையும் விவாதத்தையும் என் மூலம் வளர்க்க விரும்பவில்லை

கெட்டவர்கள், உண்மை சொல்லாதவர்கள், அறிவற்றவர்கள்,எல்லாம் அறிந்தவர்கள்,கிறுக்குப் பயல்கள்,போன்றவர்களுமே புத்திசாலிகள்,ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் வாழ்க !பொய் சொல்கின்றார்கள்,குளிர் காய்வோம் வாருங்கள்

நிழலி இவை எல்லாம் நீங்கள் ஒரு பதிலில் ஆரம்பித்த ஆதாரங்கள்

விவாவத்திற்கு விடப்பட்ட பின்னர் ஆக்கபூர்வமாக எதுவும் எழுதவில்லை மாறாக இவைதான் உங்களால் எழுதப்படுகின்றன

இது தான் யாழின் வரலாறு

விவாதத்தில் ஆதரித்தால் அதற்கு சார்பான,வலுச்சேர்க்கும் கருத்துக்கள் அல்லது எதிர்த்தால் அதற்கு வலுச்சேர்க்கும் கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது விவாதம் ஆனால் இங்கு அப்படி ஏதும் நடப்பதில்லை

மாறாக மாட்டை பற்றி எழுதச் சொன்னால் மாட்டை மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி எழுதுவது

மற்றைய கேள்விகளுக்கு பின்பு தனியாக பதில் எழுதுகிறேன்.

சபேசன் நழுவல் போக்கை கடைப்பிடித்த பின்னர் தான் அப்படி எழுதினேன் இன்னும் பல கேள்விகள் பலவற்றிற்கு பதில் இல்லை நீங்கள் கூட

அது தான் இங்கு எழுதுவது முட்டாள்தனம் என்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.