Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பத்துலட்சம் வேணுமென் தோழி தடையிருளிலிருந்து தப்பிக்க….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது)

கன்னங்கள் நனைத்த கண்ணீர்ச் சொட்டுக்கள்

மெல்லக் காய்ந்து போகிறது.

காலத்திடம் தோற்றுப் போய் மர்மம் நிறைந்த

இருட்பொழுது தன் இருப்புக்காய் இயல்பாகிறது.

எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள்.

புதைகுழிகளுக்கான அகழிகள்

புதிது புதிதாய் பிறப்பெடுக்கிறது.

அற்புதங்கள் அநாமதேயமாய்

வியாபாரிகளின் கணக்குகளிலிருந்து

விடுபடுகிறார்கள்….

நாங்கள் போனதும்

உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….?

*‘போராடுங்கள்

சாவு உங்களுக்குச் சர்க்கரையல்லவா*

சொன்னவர்களல்லவா நீங்கள்….

இன்று சாவோடு கம்பிவேலிகளுக்குள்

சமராடிய கைகள் ஓய்ந்து

சத்தமிட்ட குரல்கள் ஒடிந்து

இரவுகளில் ஈனக்குரல்கள் அவர்களின்

போதை மயக்கத்தில் புணரப்படுகிறோம்…*

காப்பாற்றும் கைகளைச்

சேர்த்துவிட்டுக் கதையடி என்றவளே….!

ஒற்றையாய் நின்றுன் குரலை

ஓவென்றுழுது கேட்கத்தான் முடிகிறது…..

கற்றையாய் சேர்த்து அனுப்ப யாருமிங்கு

காசுடன் இல்லையடி…..

19வருடத்தை இந்த இனத்துக்காய்

ஏனிழந்தேனென அழுதவளே….!

பத்துச்சதம் உய்வதற்கே

பலகேள்வி கேட்போரிடம் போய்

பத்துலட்சம் வேணுமென் தோழி

தடையிருளிலிருந்து தப்பிக்க என்றால்

எவர் கைகொடுப்பரென்று தெரியிவில்லையடி….

முயற்சி திருவினையாகுமோ….?

முடிந்தால் மறுமுறை அழை சொல்கிறேன்.

Edited by shanthy

(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது)

எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள்.

நாங்கள் போனதும்

உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….?

19வருடத்தை இந்த இனத்துக்காய்

ஏனிழந்தேனென அழுதவளே….!

பத்துச்சதம் உய்வதற்கே

பலகேள்வி கேட்போரிடம் போய்

பத்துலட்சம் வேணுமென் தோழி

தடையிருளிலிருந்து தப்பிக்க என்றால்

எவர் கைகொடுப்பரென்று தெரியிவில்லையடி….

வணக்கம் சாந்திஅக்கா

மீண்டும் ஒரு

சோக சுமைகளோடு

நீங்கள்

கண்ணில் கண்ணீரோடு

நாங்கள்

இப்படி இன்னும் எத்தனை எத்தனை பேரோ........

இதுக்கு முடிவே இல்லையா???????

இவர்களுக்கு விடிவே இல்லையா????

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான ஒரு போராளியின் கருத்தா..??!

போராளிகள் சரணடைவதில்லை.. சரணடையக் கூடாது என்று சாவை அணைத்தவர் வழியில் பயணிக்கப் புறப்பட்டு.. எந்த உத்தரவாதமும் அற்ற சூழலில்.. சரணடைந்த போது எங்கே போனது.. இந்தக் கேள்விகள்..??!

எதிரியை வழிமறிக்க வேண்டிய இடங்களில் வரவிட்டு.. இறுதியில் சுற்றி வளைத்துவிட்டான்.. சரணடைந்தோம் என்பது.. போராளிகளுக்குரிய குரலாகத் தெரியவில்லை...??!

இறுதித் தமிழன் உள்ளவரை போராடுவோம் என்றதும் நாம்.. இறுதியில் எந்த எதிரிக்கு எதிராகப் போராடினோமோ.. அவனிடமே சரணடைந்ததும் நாம்..??! இன்று அவலப்படுவதும் நாம்..??!

இங்கு யாரில் தவறு..???! எதிரியிலா எம்மிலா..???!

இயலாமைகளை மக்களுக்கு மறைத்தது தவறா.. மக்களை மாயைக்குள் கட்டி வைத்து.. இன்று வதைபடுவது.. தவறா..???!

சங்கரையும்.. மில்லரையும்.. திலீபனையும்.. கண்டு வந்தவர்களா.. சரணடைந்தார்கள்.. ஏன்..???! சரணடையும் போது.. செய்வது துரோகம் என்று எண்ணவில்லையா..??! சரணடைதலுக்குரிய சூழலை ஏன் உருவாக அனுமதிக்க வேண்டும்..???! அனுபவமின்மையா..??! இல்லையே..!!

இருந்தும்.. போராடிய எதிரியிடமே சரணடைந்தது யார் குற்றம்.. மக்களதா..???!

ஒரு வார்த்தை.. போராட முடியாத கட்டம் வரும் எனில் சரணடைவோம் என்று ஒரு வார்த்தை மக்களுக்கு சொல்லப்பட்டதா இல்லையே. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி மூச்சுவரை போராடுவோம் என்பதே. எங்கே போனது அந்தக் குரல். எங்கே போனது எடுத்த சத்தியங்கள்...??!

ஒருவேளை.. நீங்கள் போராடுவீர்கள் என்று நம்பி.. சத்தியத்தின் வழி போனவர்களை ஏமாற்றியதற்கான பாவமோ.. இந்தத் தண்டனைகள்..! :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் 4 லட்சம் 4 பேரிடமும் வாங்கி இந்தியாவுக்கு கொண்டு செல்வதாக இருந்தது. ஒரு வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டிருந்தார்கள். யாராலோ காட்டி கொடுக்கப்பட்டு அன்றிரவு இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்கள். சம்பவம் வவுனியாவில் நடைபெற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு! ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று தலைமை எடுத்த முடிவின் பின் இவர்கள் எவ்வாறு இறுதிவரை போராடுவது? அவர்களுக்கு இருந்த தெரிவு குப்பி கடிப்பது அல்லது சரணடைவது. 10 000 க்கும் மேற்பட்ட போராளிகளும் குப்பி கடித்திருக்கவேண்டும் என்கிறீர்களா? கடைசி கட்டத்தில் அவர்களின் நிலை பாரியதொரு பிரளயத்தில் சிக்குண்ட நிலை. எனவே தயவுசெய்து அவர்களை துரோகிகளென்றும் கொள்கை மறந்தவர்களென்றும் சித்தரிக்காதீர்கள்.

50,000 படையினரை 10,000 போராளிகள் ஒரு முனையில் தானும் தடுத்து நிறுத்தி தம்மை தமது தலைமையை போராட்டத்தை காக்க முடியவில்லையா..???! 3000 போராளிகள் 100000 இந்தியப் படைகளை எதிர்கொண்டு தாக்குப் பிடித்ததை விட இது எப்படிக் கடினமானது..??!

மக்களுக்கு எப்போதும் சொல்லப்படவில்லை.. சரணடையும் நிலை எமக்கு வந்தால் சரணடைவோம் என்று. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி வரை போராடுவோம் என்பதே.

இதை நான் அவர்களைத் துரோகிகள் என்று சொல்ல சொல்லவில்லை. இத்தனை பெரிய போராட்ட அனுபவத்தைக் கொண்ட தலைமை.. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கூட ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையத் துணியாத தலைமை ஒருவித உத்தரவாதமும் அற்ற சூழ்நிலைக்குள் போராளிகளையும் போராட்டத்தையும் கொண்டு வந்து விட்டு.. போராளிகளைச் சரணடையச் சொன்னதா..???! ஏன் எதற்காக...????!

இவ்வளவு ஆயிரம் ஆயுதங்கள்.. மீதம் இருந்தும்.. ஏன் இத்தனை ஆயிரம் போராளிகள் இருந்தும்.. ஏன் பின்வாங்கி ஒரு திறந்தவெளி அரங்கை தக்க வைக்கலாம் என்று நினைத்தார்கள். தலைவர்.. தலைமை.. என்ன இராணுவ பரிமானம் அறியாதவையா இருந்தனவா..???! :(:lol: :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான ஒரு போராளியின் கருத்தா..??!

போராளிகள் சரணடைவதில்லை.. சரணடையக் கூடாது என்று சாவை அணைத்தவர் வழியில் பயணிக்கப் புறப்பட்டு.. எந்த உத்தரவாதமும் அற்ற சூழலில்.. சரணடைந்த போது எங்கே போனது.. இந்தக் கேள்விகள்..??!

எதிரியை வழிமறிக்க வேண்டிய இடங்களில் வரவிட்டு.. இறுதியில் சுற்றி வளைத்துவிட்டான்.. சரணடைந்தோம் என்பது.. போராளிகளுக்குரிய குரலாகத் தெரியவில்லை...??!

இறுதித் தமிழன் உள்ளவரை போராடுவோம் என்றதும் நாம்.. இறுதியில் எந்த எதிரிக்கு எதிராகப் போராடினோமோ.. அவனிடமே சரணடைந்ததும் நாம்..??! இன்று அவலப்படுவதும் நாம்..??!

இங்கு யாரில் தவறு..???! எதிரியிலா எம்மிலா..???!

இயலாமைகளை மக்களுக்கு மறைத்தது தவறா.. மக்களை மாயைக்குள் கட்டி வைத்து.. இன்று வதைபடுவது.. தவறா..???!

சங்கரையும்.. மில்லரையும்.. திலீபனையும்.. கண்டு வந்தவர்களா.. சரணடைந்தார்கள்.. ஏன்..???! சரணடையும் போது.. செய்வது துரோகம் என்று எண்ணவில்லையா..??! சரணடைதலுக்குரிய சூழலை ஏன் உருவாக அனுமதிக்க வேண்டும்..???! அனுபவமின்மையா..??! இல்லையே..!!

இருந்தும்.. போராடிய எதிரியிடமே சரணடைந்தது யார் குற்றம்.. மக்களதா..???!

ஒரு வார்த்தை.. போராட முடியாத கட்டம் வரும் எனில் சரணடைவோம் என்று ஒரு வார்த்தை மக்களுக்கு சொல்லப்பட்டதா இல்லையே. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி மூச்சுவரை போராடுவோம் என்பதே. எங்கே போனது அந்தக் குரல். எங்கே போனது எடுத்த சத்தியங்கள்...??!

ஒருவேளை.. நீங்கள் போராடுவீர்கள் என்று நம்பி.. சத்தியத்தின் வழி போனவர்களை ஏமாற்றியதற்கான பாவமோ.. இந்தத் தண்டனைகள்..! :):(

நெடுக்காலைபோவான் இந்தக்குரல் ஒரு போராளியின் குரல்தான். இந்தப் போராளி போன்று ஆயிரமாயிரமாய் சரணடைந்தவர்களை ஏன் சரணடைந்தீர்கள் என கேட்கும் எந்த அருகதையும் எனக்கில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் செய்த தவறுகள் இவர்களை இந்த நிலைக்கு தள்ளியது என்பதே என முடிவு.

இந்தப்பிள்ளைகள் நம்பியவர்களே கடைசியில் அவரவர் அவரவரைக்காப்பாற்றுங்கோ என கடைசியில் கையைவிரித்துவிட்டு சரணடைந்து இன்று இராணுவ மரியாதைகளுடன் தலையாட்ட இந்தச் சாததாரண போராளிகளை எந்தக் கேள்வியும் கேட்ட முடியவில்லை.

இத்தகைய வெளிப்பாடுகளை இயல்பாக விபச்சாரமாக விபரிக்கும் கருத்தாளர்களின் வீரமாக இன்றை அவர்களின் உயிர்்வாழ்வு அசிங்கப்படுத்தப்படும் போது எந்தக்கருத்தையும் சொல்ல முடியவில்லை.

புலத்துச்சாமிகள் முகாம்களில் உள்ள போராளிகளைக் காசுகொடுத்து மீட்பதாக புலத்தில் பல இடங்களில் பணம் சேர்க்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் குடும்பங்களைத் தவிர வசதியில்லாத போராளிகளால் இப்படி யாரையேனும் கெஞ்சத்தான் முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு! ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்று தலைமை எடுத்த முடிவின் பின் இவர்கள் எவ்வாறு இறுதிவரை போராடுவது? அவர்களுக்கு இருந்த தெரிவு குப்பி கடிப்பது அல்லது சரணடைவது. 10 000 க்கும் மேற்பட்ட போராளிகளும் குப்பி கடித்திருக்கவேண்டும் என்கிறீர்களா? கடைசி கட்டத்தில் அவர்களின் நிலை பாரியதொரு பிரளயத்தில் சிக்குண்ட நிலை. எனவே தயவுசெய்து அவர்களை துரோகிகளென்றும் கொள்கை மறந்தவர்களென்றும் சித்தரிக்காதீர்கள்.

காட்டாறு உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். நம்பியோர் நடுத்தெருவில் விட்டுவிட்டுத் தப்ப இவர்களால் எந்த முடிவை எடுக்க முடியும் ? ஒரு குப்பி கூடவா கிடைக்கவில்லை உங்களுக்கென ஒரு போராளியிடம் கேட்டதுக்கு அவள் சொன்ன பதில் இங்கு எழுத முடியவில்லை. எஞ்சிய அந்தப் பிள்ளைகளை எந்த வன்மமோ கோபங்களாலோ சொற்களாலோ காயப்படுத்தாமல் எங்கள் எழுத்தாளர்கள் இருக்க வேண்டும்.

ஒருத்தி சொன்னாள் தங்களுக்கு 17வருடமாகத் தெரிந்ததெல்லாம் சென்றியும் ஆமியின் குரலும் துவக்கும் கடுமையான வாழ்வும்தான் இதைவிட்டு ஆமியை தொகைதொகையாகக் கண்ணுக்கு முன் ஆயுதங்கள் இன்றி பார்த்த போது என்ன செய்திருக்கலாம் என்கிறாய் என்றாள். இங்கிருந்து எல்லாவகையிலும் சுதந்திரம் விடுதலை பற்றி முழக்கமிடுவது சுலபம் பல்குழல் முன்னின்று பார்த்துவிட்டல்லவா மிகுதியைப் பறைய வேண்டும்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50,000 படையினரை 10,000 போராளிகள் ஒரு முனையில் தானும் தடுத்து நிறுத்தி தம்மை தமது தலைமையை போராட்டத்தை காக்க முடியவில்லையா..???! 3000 போராளிகள் 100000 இந்தியப் படைகளை எதிர்கொண்டு தாக்குப் பிடித்ததை விட இது எப்படிக் கடினமானது..??!

மக்களுக்கு எப்போதும் சொல்லப்படவில்லை.. சரணடையும் நிலை எமக்கு வந்தால் சரணடைவோம் என்று. சொல்லப்பட்டதெல்லாம்.. இறுதி வரை போராடுவோம் என்பதே.

இதை நான் அவர்களைத் துரோகிகள் என்று சொல்ல சொல்லவில்லை. இத்தனை பெரிய போராட்ட அனுபவத்தைக் கொண்ட தலைமை.. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கூட ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையத் துணியாத தலைமை ஒருவித உத்தரவாதமும் அற்ற சூழ்நிலைக்குள் போராளிகளையும் போராட்டத்தையும் கொண்டு வந்து விட்டு.. போராளிகளைச் சரணடையச் சொன்னதா..???! ஏன் எதற்காக...????!

இவ்வளவு ஆயிரம் ஆயுதங்கள்.. மீதம் இருந்தும்.. ஏன் இத்தனை ஆயிரம் போராளிகள் இருந்தும்.. ஏன் பின்வாங்கி ஒரு திறந்தவெளி அரங்கை தக்க வைக்கலாம் என்று நினைத்தார்கள். தலைவர்.. தலைமை.. என்ன இராணுவ பரிமானம் அறியாதவையா இருந்தனவா..???! :):D:(

இந்திய இராணுவ காலத்தில் நடந்தது சற்லைட் போரல்ல. இந்திய இராணுவ காலத்தில் ஒரு ஊரிலிருந்து மற்றைய ஊருக்குத் தொடர்பு கொள்ள இந்தியஇராணுவம் வீதிவீதியா பரப்பிய வயர் எத்தனைகிலோ மீற்றர் தூரம் வரை நீண்டிருக்கும் ? அப்படியான வளர்ச்சியில் நின்றுபிடிப்பதற்கும் அதுவும் ஒற்றை நாட்டுடன். இந்தப்போரில் உலகின் பலநாடுகளின் துணையும் பலமும் இருக்க யாரை யார் குற்றம் சொல்ல முடியும்.

கரந்தடியுத்தமும் மரபுவழி இராணுவ யுத்தமும் வெவ்வேறுபட்ட தளங்களில் நடைபெறுபவை.

இவற்றையெல்லாம் விட முக்கியமான விடயம் தவறுகளை தட்டிக்கேட்டுச் சீர்படுத்தக்கூடியவர்கள் அன்று இருந்தார்கள். ஆனால் துதிபாடி தங்கள் இருப்பையும் வசதியையும் பாதுகாத்ததும் பதவிகளில் குந்தியமையும் இன்றைய வீழ்ச்சிக்கு முக்கால்பங்கை ஆற்றியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் இதுதான் யதார்த்தமாக உள்ளது.

ஏன் சரணடையச் சொன்னார்கள் ஏன் சரணடைந்தார்களஇ என்பதை ஆராய்ந்து சொல்ல இனி ஆராவது ஓய்வுபெற்றபின் வருவார்கள் அது எரிக்சொல்கைமாகவும் இருக்கும் அல்லது வேறு யாராகவுமு் இருக்கும்.

கட்டாயம் அந்தப் போராளிக்கு உதவவேண்டும்.உதவமுடியுதோ இல்லையோ அது உங்களின் நிலைப்பாடு. ஆனால்

தயவுசெய்து அந்தப் போராளிகளை ஒருதரும் விமர்சிக்கவேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் அந்தப் போராளிக்கு உதவவேண்டும்.உதவமுடியுதோ இல்லையோ அது உங்களின் நிலைப்பாடு. ஆனால்

தயவுசெய்து அந்தப் போராளிகளை ஒருதரும் விமர்சிக்கவேண்டாம்.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் சரணடைவதில்லை என்று சொல்லி அவர்களை மரணம் கொள்ளச் செய்து அதைப் புனிதமாகக் கொண்டாடவே புலம்பெயர் தமிழரால் முடியும்..

50,000 படையினரை 10,000 போராளிகள் ஒரு முனையில் தானும் தடுத்து நிறுத்தி தம்மை தமது தலைமையை போராட்டத்தை காக்க முடியவில்லையா..???!

போராட்டத்தின் தலைமை பாதுகாப்பாகத்தான் உள்ளது. மீண்டும் வெளிப்படும்போது கடவுள் காட்சி தருவார். தமிழர்கள் சமதர்ம சோசலிச தமிழீழக் குடியரசில் தலை நிமிர்ந்து வாழ்வார்கள். நாங்கள் அடுத்த காட்சி பார்க்கத் தயாராகுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.