Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரியூட்டி அதில் மாட்டிக்கொண்டபின், வெள்ளை இனத்தவர் என்னை தீமூட்டப் பார்த்தனர் என்று கூறிய இந்தியன் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரியூட்டி அதில் மாட்டிக்கொண்டபின், வெள்ளை இனத்தவர் என்னை தீமூட்டப் பார்த்தனர் என்று கூறிய இந்தியன் !

http://au.news.yahoo.com/a/-/latest/6753886/man-faked-attack-to-claim-insurance/

Man 'faked attack to claim insurance'By Jamie Duncan, AAP

February 3, 2010, 6:12 am

Buzz up! Send

EmailIMShare

DeliciousTwitterMyspaceDiggStumble UponFacebookPrintRelated Links

Cadbury cuts 60 workers in Melbourne

February 2, 2010, 5:21 pm

Cat killer sent to youth detention

February 2, 2010, 4:41 pm

Aussie stars among Tropfest finalists

February 2, 2010, 6:20 pm

Students in 'limbo' after college collapse

February 2, 2010, 6:49 pm

Trio raised funds for terrorism group, court told

February 2, 2010, 8:28 pm

An Indian man who said he was set alight by assailants near his Melbourne home last month accidentally burned himself while torching his car for an insurance claim, police allege.

Jaspreet Singh, 29, of Grice Crescent, Essendon, in the city's north, faced an out-of-sessions hearing early Wednesday before a bail justice at St Kilda Road police complex charged with making a false report to police and criminal damage with a view to gaining a financial advantage.

The case gained international headlines among a series of attacks by white Australians on Indian nationals in Melbourne.

Singh, who is in Australia on his wife's student visa, told police he was doused with petrol and set alight as he parked his car near his home early on Saturday, January 8.

Singh was taken to The Alfred hospital with burns to 15 per cent of his body, affecting his face, arms and hands.

But Detective Senior Constable Danielle O'Keefe of the arson and explosives squad told the hearing Singh suffered the burns while trying to torch his 2003 Ford Futura.

Det O'Keefe said arson chemists and hospital staff had concluded the damage to the car, Singh's clothes and his injuries were not consistent with his story.

"Police inquiries have led us to believe that Mr Singh is in some financial difficulty and that he intended to sell his car but instead stood to gain $11,000 from an insurance claim out of this particular incident," she told the hearing.

Police had obtained security footage depicting Singh buying a 15-litre opaque plastic container and 15,96 litres of petrol on the day before the attack.

The container and other evidence was found at his unit when he was arrested on Tuesday, Det O'Keefe said.

She said Singh had been very co-operative but denied all allegations.

His wife had been questioned about her knowledge of the incident, she said.

Burns were still obvious on Singh's face and neck, and he wore pressure bandages on his arms.

Through an interpreter, Singh told the hearing he and his wife planned a holiday to India, leaving on February 20 and returning in late April to visit his child and extended family.

Det O'Keefe said police did not oppose bail but noted that Mr Singh was a potential flight risk.

The bail justice, who declined to be named, granted him bail with strict conditions banning him from contacting witnesses and attending points of international departure.

He must report to police three times a week and surrender his passport.

He will appear before the Melbourne Magistrates' Court on March 15.

At the time, police Detective Acting Senior Sergeant Neil Smyth described the attack as "a bit strange" and said there was no evidence the attack was racially motivated.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா இனவாத நாடு , இந்தியர்களைத் தாக்குகிறார்கள் என்று கத்தும் வட இந்திய ஊடகங்களும், கலைஞரின் தமிழைக் கொலை செய்யும் சன், கலைஞர் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை வேணுமென்றே மறைத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே மாதிரி இன்னுமொரு சம்பவம் செவன்கில் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. வெள்ளையர்கள் தாக்கி விட்டு தங்களது வர்த்தக நிலையத்தை எரித்து விட்டார்கள் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வந்தன. ஆனால் அதுவும் காப்புறுதிப்பணத்துக்காக சீக்கிய இந்தியர்களின் நாடகமென்று காவல் துறை பிறகு கண்டறிந்தது. வழமை போலை இந்தச் செய்திக்கு வட இந்திய ஊடகங்களும், தமிழைக் கொலை செய்யும் கலைஞரின் ஊடகங்களும் மூச்சுவிடவில்லை.

கந்தப்பு,

உதைவிட மோசமாக நம்மவர்கள் செய்த எத்தனை மோசடிகளை எமது ஊடகங்கள் வெளிக் கொணர்ந்துள்ளன?? சமீபத்தில் கூட எம்மினப் பெண்ணொருவர் செய்த பல மில்லியன் மோசடி, நம்மவரின் எந்தத் தொலைக்காட்சி வெளியிட்டது?? உந்த விடயத்தில் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு,

உதைவிட மோசமாக நம்மவர்கள் செய்த எத்தனை மோசடிகளை எமது ஊடகங்கள் வெளிக் கொணர்ந்துள்ளன?? சமீபத்தில் கூட எம்மினப் பெண்ணொருவர் செய்த பல மில்லியன் மோசடி, நம்மவரின் எந்தத் தொலைக்காட்சி வெளியிட்டது?? உந்த விடயத்தில் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.....

எங்கட ஊடகங்களில் நம்மவரின் மோசடிகள் வராவிட்டாலும், அந்த மோசடியை வெள்ளைக்காரர்கள் தான் செய்தார்கள் என்று சொல்லுவதில்லை.

எங்கட ஊடகங்களில் வெள்ளைக்காரர்கள் எங்களை அடிக்கிறான், சுவிஸ் இனவாத நாடு, அவுஸ்திரெலியா இனவாத நாடு என்று நாங்கள் கத்துவதுமில்லை. ஆனால் வட இந்தியா ஊடகங்களில் அவுஸ்திரெலியாவில் இந்தியர் தாக்கப்பட்டது என்ற செய்தியை வெளியிட்டு விட்டு அச்செய்தி பொய் என்றதும் மறுப்பறிக்கை விடுவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு. நான் வசம்பிற்கு அளிக்கவிருந்த பதிலை நீங்களே வழங்கி விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு. நான் வசம்பிற்கு அளிக்கவிருந்த பதிலை நீங்களே வழங்கி விட்டீர்கள்.

நாங்கள் அவுஸ்திரெலியா பிரதமரின் கொடும்பாவிகளை எறிப்பதுமில்லை. அவுஸ்திரெலியா இனவாத நாடு என்று சொல்லி ஆர்ப்பாட்டங்கள் செய்வதுமில்லை. நாங்கள் மகிந்தாவின் கொடும்பாவியைத் தான் எறிப்பதுண்டு. சிறிலங்கா இனவாத நாடு என்று சொல்லித்தான் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை அவுஸ்திரெலியாவில் காண்கிறேன்.

நாங்கள் அவுஸ்திரெலியா பிரதமரின் கொடும்பாவிகளை எறிப்பதுமில்லை. அவுஸ்திரெலியா இனவாத நாடு என்று சொல்லி ஆர்ப்பாட்டங்கள் செய்வதுமில்லை. நாங்கள் மகிந்தாவின் கொடும்பாவியைத் தான் எறிப்பதுண்டு. சிறிலங்கா இனவாத நாடு என்று சொல்லித்தான் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை அவுஸ்திரெலியாவில் காண்கிறேன்.

நல்ல சொன்னிங்கள்

Edited by Sooravali

எங்கட ஊடகங்களில் நம்மவரின் மோசடிகள் வராவிட்டாலும், அந்த மோசடியை வெள்ளைக்காரர்கள் தான் செய்தார்கள் என்று சொல்லுவதில்லை. எங்கட ஊடகங்களில் வெள்ளைக்காரர்கள் எங்களை அடிக்கிறான், சுவிஸ் இனவாத நாடு, அவுஸ்திரெலியா இனவாத நாடு என்று நாங்கள் கத்துவதுமில்லை. ஆனால் வட இந்தியா ஊடகங்களில் அவுஸ்திரெலியாவில் இந்தியர் தாக்கப்பட்டது என்ற செய்தியை வெளியிட்டு விட்டு அச்செய்தி பொய் என்றதும் மறுப்பறிக்கை விடுவதில்லை.

முதலில் இந்திய ஊடகங்களில் இந்தியர்கள் செய்கின்ற மோசடிகள் வருவதில்லையென்று கதையளந்தீர்கள். அதற்கு நான் பதிலளளிக்க, இப்போ அதையும் மாற்றி மழுப்புகின்றீர்கள். உங்கள் கருத்துப்படி அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் பொய்யென கூற வருகின்றீர்களா?? ஒருவர் காப்புறுதி மோசடி செய்ததற்கும் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுகக்கும் முடிச்சுப் போட்டு கதைவிட்டு, நீங்கள் அதை நியாயப்படுத்த முயல்வவதே மோசடியானது. இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் சம்மமந்தமாக அவுஸ்திரெலியா அரசே சிலரைக் கைது செய்திருப்பதையும் பம்மாத்து என்று கதையளக்க முயல்கின்றீரர்களா?? சுவிசில் கூட சில தமிழ்க்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைப்பொருட்களை தாமே மறைத்துவிட்டு களவு போனதாக பொலிசாரிடம் சொல்லி மாட்டுப்பட்ட விடயங்கள் நிறையவே நடந்துள்ளன.

பிரித்தானியத் தமிழர்கள் பலர் கள்ளமட்டை விளையாட்டில் மாட்டிய போது, தீபம் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சி நடாத்தியது. அதில் நிகழ்ச்சி நடாத்தியோர் தவறு செய்தவர்களை கண்டிப்பதற்கு பதிலாக, எம்மவர் மட்டுமா பிரரித்தானியாவில் இப்படிக் கள்ளமட்டை விளையாட்டின் மூலம் பணம் கொள்ளையடிக்கின்றார்கள், ஏனைய ஆசியா நாட்டுக்காரர்களும் செய்கின்றார்கள் தானே என்று, நம்மவர் தவறுகளை நியாயப்படுத்தி இப்படியான மோசடிகளை ஊக்குவித்தது. அப்போ இது தங்கள் பார்வையில் எப்படித் தெரிகின்றது?? :huh::huh:

நாங்கள் அவுஸ்திரெலியா பிரதமரின் கொடும்பாவிகளை எறிப்பதுமில்லை. அவுஸ்திரெலியா இனவாத நாடு என்று சொல்லி ஆர்ப்பாட்டங்கள் செய்வதுமில்லை. நாங்கள் மகிந்தாவின் கொடும்பாவியைத் தான் எறிப்பதுண்டு. சிறிலங்கா இனவாத நாடு என்று சொல்லித்தான் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறோம். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை அவுஸ்திரெலியாவில் காண்கிறேன்.

அட அப்போ இந்தியப்பிரதமர், சீனப்பிரதமர், யப்பான் பிரதமர், தமிழக முதலவர் போன்றவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டது மட்டுமன்றி பல வெளிநாட்டுத் தூதரங்கள் மீது முட்டைகளும் வீசப்பட்டனவே. இவை எதற்குள் அடங்குகின்றன?? ஒருவேளை இந்தளவிற்கு இந்தியர்கள் செய்யவில்லையென்று ஆதங்கப்படுகின்றீர்களோ?? :lol::huh:

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்திய ஊடகங்களில் இந்தியர்கள் செய்கின்ற மோசடிகள் வருவதில்லையென்று கதையளந்தீர்கள். அதற்கு நான் பதிலளளிக்க, இப்போ அதையும் மாற்றி மழுப்புகின்றீர்கள். உங்கள் கருத்துப்படி அவுஸ்திரெலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் பொய்யென கூற வருகின்றீர்களா?? ஒருவர் காப்புறுதி மோசடி செய்ததற்கும் இந்தியர்கள் மீதான தாக்குதல்களுகக்கும் முடிச்சுப் போட்டு கதைவிட்டு, நீங்கள் அதை நியாயப்படுத்த முயல்வவதே மோசடியானது. இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் சம்மமந்தமாக அவுஸ்திரெலியா அரசே சிலரைக் கைது செய்திருப்பதையும் பம்மாத்து என்று கதையளக்க முயல்கின்றீரர்களா?? சுவிசில் கூட சில தமிழ்க்கடை உரிமையாளர்கள் தங்கள் கடைப்பொருட்களை தாமே மறைத்துவிட்டு களவு போனதாக பொலிசாரிடம் சொல்லி மாட்டுப்பட்ட விடயங்கள் நிறையவே நடந்துள்ளன.

வட இந்திய ஊடகங்களிலும் கலைஞரின் சன் தொலைக்காட்சிகளிலும் என்று தான் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவுஸ்திரெலியாவில் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4 பேர். இதில் இரண்டு தாக்குதல்களுக்கு இந்தியர்களே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். வெஸ்ட் மீட் பகுதியில் நடைபெற்ற இந்தியப் பெண்ணின் கொலைக்கு காரணம் அவரது கணவரான சீக்கிய இந்தியர். 2வது கொலைக்கு காரணம் தட்ஸ் தமிழ் இணையத்தில் வந்ததை இங்கு இணைக்கிறேன். உடனே தட்ஸ் தமிழ் ஊடகம் இந்திய ஊடகமில்லையா என்று நீங்கள் கேட்டாலும் கேட்பீர்கள் . நான் குறிப்பிட்டது வட இந்திய ஊடகங்களிலும், கலைஞரின் தொலைக்காட்சிகளிலும் ஏன் மறைக்கப்பட்டது என்றதினைத்தான்?

--------------------

டெல்லி: ஆஸ்திரேலியா வில் படுகொலை செய்யப்பட்ட ரஞ்சோத் சிங் என்ற இந்தியர் கொலை வழக்கில் தம்பதி உள்பட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனவெறி காரணமாக இந்தக் கொலை நடந்ததாக கூறப்பட்ட நிலையில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான ரஞ்சோத் சிங், ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணம், கிரிபித் நகரில் கடந்த டிசம்பர் 29ம் தேதி உயிருடன் எரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

முதலில் இது இனவெறியால் நடந்த கொலையாக கருதப்பட்டது. விசாரணையில், ஒரு தம்பதி உள்பட 3 இந்தியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான தம்பதியும் கிரிபித் பகுதியில்தான் வசித்து வருகின்றனர். இவர்களுடன் ரஞ்சோத் சிங்குக்கு நட்பு இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், ரஞ்சோத் சிங்கின் உடல் இன்று டெல்லி வந்து சேர்ந்தது. அவரது உடலில் பலத்த தீக்காயம் காணப்படுகிறது. முதலில் அவரை கழுத்தை நெரித்துள்ளனர். பின்னர் கத்தியால் பலமுறை உடல் முழுவதும் குத்தியுள்ளனர். அரைகுறையாக உயிருடன் இருந்த நிலையில் அவரைக் கொடூரமாக தீவைத்துக் கொன்றுள்ளனர் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து உதவி போலீஸ் ஆணையர் மார்க் முர்டோச் கூறுகையில், இது மிகவும் கோரமான கொலையாகும். மிகக் கொடூரமான முறையில் ரஞ்சோத் சிங் கொல்லப்பட்டுள்ளார். கொலையின் உச்சகட்ட அளவு இது என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2010/01/29/oz-3-indians-arrested-ranjodh-sing.html

கறிஸ் பார்க் பகுதியில் இந்தியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி இந்திய ஊடகங்களில் வந்தன. லெபனான் நாட்டவர்கள் சிலர் ஒரு நாள் இரவு வீதிகளில் சென்ற மகிழுந்துக்களின் மீது முட்டைகள் வீசினார்கள். அதில் ஒரு முட்டை இந்தியர்கள் சென்ற மகிழூந்தின் மீது விழுந்தது. உடனே இந்தியர்களைத் தாக்குகிறார்கள் என்று அந்த மகிழுந்தில் சென்றவர்கள் தங்களுக்கு தெரிந்த இந்தியர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அனுப்ப, பல இந்தியர்கள் கரிஸ்பார்க்கில் இரவு நேரத்தில் கூடினார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். அவுஸ்திரெலியர்கள் தாக்குகிறார்கள் என்று சிலர் வதந்திகளைப் பரப்பினார்கள். சில இந்தியர்கள் ஒரு இந்தியப் பெண்ணின் கையை வெள்ளையர்கள் பிடித்துவிட்டார்கள் என்று வதந்திகளைப் பரப்ப 2,3 நாட்களாக கரிஸ்பார்க்கில் இரவு நேரங்களில் இந்தியர்கள் வீதிகளில் கூடி நின்றார்கள். பிறகு காவல்துறையின் விசாரணைகளின் படி பொய்யான தகவல்களைப் பரப்பிய இந்திய மாணவரை பிடித்து விசாரித்தவுடன், பயத்தில் மற்றைய மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டார்கள். இப்படி பல சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் பலவற்றுக்கு அவுஸ்திரெலியர்கள் காரணமல்ல. வட இந்திய ஊடகங்கள் பெரிது படுத்திச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்போ இந்தியப்பிரதமர், சீனப்பிரதமர், யப்பான் பிரதமர், தமிழக முதலவர் போன்றவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டது மட்டுமன்றி பல வெளிநாட்டுத் தூதரங்கள் மீது முட்டைகளும் வீசப்பட்டனவே. இவை எதற்குள் அடங்குகின்றன?? ஒருவேளை இந்தளவிற்கு இந்தியர்கள் செய்யவில்லையென்று ஆதங்கப்படுகின்றீர்களோ?? :lol::lol:

இலண்டனில் தமிழர்கள் கோஸ்டி மோதலில் தங்களுக்குள் அடிபட்டி இறந்ததும் உண்டு. இதில் தமிழர்கள் வெள்ளைக்காரர்கள் தான் செய்தார்கள் என்று கூறவில்லை. இரவில் வேலை செய்து விட்டு வந்த தமிழர்களை பணத்துக்காகவும், குடி வெறி காரணமாக நீதானமிலந்த பிரித்தானியார்களினால் இலண்டனில் சில கொலைகள் நடைபெற்றன. இதனால் எம்மவர்கள் பிரித்தானியர்கள் இனவெறியாளர்கள் என்று கத்தவுமில்லை. எங்களில் சிலர் சீனா, இந்தியா தூதரகங்களிற்கு முன்பாக முட்டை எறிந்திருக்கிறார்கள். கொடும்பாவி எரித்திருக்கிறார்கள். அதற்கு 4 மாதத்தில் 50000க்கு மேற்பட்ட எம்மவர்களின் இறப்புக்கு இந்த நாடுகளும் காரணம் தான். ஆனால் அவுஸ்திரெலியாவில் இனவெறித்தாக்குதல் நடப்பதில்லை. பணம் பறிப்பவர்களினாலும், குடிவெறி காரணமாக சில தாக்குதல் இரவு நேரங்களில் நடைபெற்றது. தாக்கப்பட்டவர்களில் வெள்ளைக்காரர்களும் இருக்கிறார்கள். சீனர்களும் இருக்கிறார்கள்,இலங்கையர்களும் இருக்கிறார்கள். இந்தியர்களை அவுஸ்திரெலியர்கள் தாக்கியதாக வந்த செய்திகளில் பெரும்பாலானவை அவுஸ்திரெலியர்கள் அல்லாதவர்களினால் தாக்க்கப்பட்டவை. லெபனான்காரர்கள், இந்தியர்களே இந்தியர்களுக்கு தாக்கியசம்பவங்கள், வதந்திகள்...

  • கருத்துக்கள உறவுகள்

[பிரித்தானியத் தமிழர்கள் பலர் கள்ளமட்டை விளையாட்டில் மாட்டிய போது, தீபம் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சி நடாத்தியது. அதில் நிகழ்ச்சி நடாத்தியோர் தவறு செய்தவர்களை கண்டிப்பதற்கு பதிலாக, எம்மவர் மட்டுமா பிரரித்தானியாவில் இப்படிக் கள்ளமட்டை விளையாட்டின் மூலம் பணம் கொள்ளையடிக்கின்றார்கள், ஏனைய ஆசியா நாட்டுக்காரர்களும் செய்கின்றார்கள் தானே என்று, நம்மவர் தவறுகளை நியாயப்படுத்தி இப்படியான மோசடிகளை ஊக்குவித்தது. அப்போ இது தங்கள் பார்வையில் எப்படித் தெரிகின்றது?? :lol::lol:

தீபம் தொலைக்காட்சியை நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. என்னிடம் GTV மட்டுமே இருக்கிறது. உங்களின் கருத்துப்படி தீபம் தொலைக்காட்சியில் தமிழர்கள் தாங்கள் செய்வதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கண்டிக்கவில்லை. ஏனைய ஆசிய நாட்டவர்களும் செய்கிறார்கள் என்று தான் சொல்கிறீர்கள். ஆனால் வட இந்திய ஊடகங்களில் இந்தியர்கள் செய்ததை, வதந்திகளை, அவுஸ்திரெலியர்கள் அல்லாதவர்கள்(லெபனான்) செய்தது எல்லாவற்றையும் அவுஸ்திரெலியர்கள் தான் செய்ததாகக் கூறுகிறார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்த செய்தி

இந்திய வாடகை மகிழுந்து சாரதி ஒருவர் கைது

Indian cab driver charged over bashing February 4, 2010 - 11:29AM

AAP

An Indian taxi driver is facing charges over the bashing of a passenger who was knocked unconscious in St Kilda.

The 25-year-old passenger was involved in a heated argument with the cab driver around 10pm (AEDT) on Wednesday as they pulled over in Acland Street in southern Melbourne.

A witness says the passenger tried to walk away but the cab driver chased him down and had to be restrained by security staff working at a nearby business.

The passenger kept walking away as the cab driver then grabbed a baton from the boot of his cab, drove up next to the passenger and allegedly starting striking the man repeatedly with the weapon, the witness says.

"Within a few minutes, many other cab drivers, all of them Indian, all turned up," witness Karen told Fairfax Radio on Thursday. "And I could just see how out of hand this is all getting."

Paramedics say they treated the passenger for bruising and swelling to his upper body and took him to The Alfred hospital in a stable condition.

The 32-year-old cab driver was arrested and later charged with intentionally causing injury and two counts of unlawful assault.

Police say they cannot discuss the case further because the cab driver is facing charges before the courts.

He is expected to make a court appearance in Melbourne Magistrates' Court at a later date.

http://news.smh.com.au/breaking-news-national/indian-cab-driver-charged-over-bashing-20100204-neos.html

  • கருத்துக்கள உறவுகள்

கரிஸ் பார்க்கில் லெபனான் காரர்கள் மகிழுந்துக்கு முட்டை எறிந்த சம்பவத்தின் பிறகு, இந்தியர்களினால் பறப்பப்பட்ட வதந்திகளைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பட்டச் செய்திகளும் காணொளியும், படங்களையும் பார்வையிட

http://www.smh.com.au/national/indians-rally-as-suburb-seethes-20090610-c2ei.html

இந்தியர் ஒருவரை கடத்தி விட்டார்கள் என்று குறும் தகவல் வதந்தியை இந்தியர்கள் பரப்பி ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். அதன் பிறகு கடத்தப்பட்டவர் கொல்லப்பட்டார்கள் என்றும் வதந்தியைப் பரப்பினார்கள் என்று மேலே இணைத்த செய்திகள் தெரிவிக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு,

நாங்கள் கூற வந்ததை விளங்கும் பக்குவமோ அல்லது நிதானமோ இல்லாமல் ஏதோ இந்தியர்களை நாங்கள் குறைகூறுகிறோம் என்று சொல்பவர்களிடம் வாதிடுவதில் எந்தப் பயனுமில்லை.

முதலில் இங்கே நடப்பது என்னவென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். குறைந்தது உள்ளூர் ஊடகங்களில் வரும் செய்திகளையாவது படித்திருக்க வேண்டும். அது இரண்டுமில்லாமல் வெறும் வட இந்தியச் செய்திகளை மட்டுமே கேட்டறிந்துவிட்டு "ஐய்யகோ, இந்தியர்களைத் தாக்குகிறார்களாமே, இதைக் கேட்க யாருமில்லையா?? இந்தியர்களைப் பற்றிக் குறை கூறுபவர்கள் தங்கள் சமூகத்தில் இப்படி நடப்பவற்றை அறியவில்லையா?" என்றால் என்ன சொல்ல முடியும்.

முதலில் செய்தியில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வாசித்தறியும் பக்குவம் வேண்டும். இங்கே இந்தியர்களின் குணவியல்பு பற்றிப் பேசப்படவில்லை. ஆனால், வெள்ளைக்காரர்கள் தன்னைத் தாக்கினார்கள் என்று பொய் சொல்லித் தனது காப்புறுதிப்பணத்திற்காக தனது காரை தானே எரித்து இறுதியில் அதே தீயில் தானே மாட்டுப்பட்டு அம்பலப்பட்டுப்போன ஒரு இந்தியனைப்பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கு. அதாவது, அவுஸ்த்திரேலியாவில் இந்தியர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் எல்லாமே இனத்துவ அடிப்படையிலானது எனும் பொய்ப் பிரச்சாரத்தில் அரைவாசிக்கும் மேல் இந்தியர்களால் தங்களுக்குள்ளேயோ அல்லது தாங்களாகவோ நடத்திக்கொண்ட சம்பவங்கள்தான்.

இதை இங்கே எடுத்துக்கூறினால் சிலருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. சரி, இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் எல்லாமே இனத்துவ ரீதியிலானவை என்று சொன்னால் சரிதானே?? ஏனென்றால் இந்தியர்கள் மிகவும் நல்லவர்கள்.

தீபம் தொலைக்காட்சியை நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. என்னிடம் GTV மட்டுமே இருக்கிறது. உங்களின் கருத்துப்படி தீபம் தொலைக்காட்சியில் தமிழர்கள் தாங்கள் செய்வதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கண்டிக்கவில்லை. ஏனைய ஆசிய நாட்டவர்களும் செய்கிறார்கள் என்று தான் சொல்கிறீர்கள். ஆனால் வட இந்திய ஊடகங்களில் இந்தியர்கள் செய்ததை, வதந்திகளை, அவுஸ்திரெலியர்கள் அல்லாதவர்கள்(லெபனான்) செய்தது எல்லாவற்றையும் அவுஸ்திரெலியர்கள் தான் செய்ததாகக் கூறுகிறார்களே.

என்னிடம் GTV மட்டுமே இருக்கிறது என்று கூறும் நீங்களே, வட இந்திய ஊடகங்களையோ சண் தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்க்காமல் எப்படி அவைகள் பற்றிக் குறை கூறுகின்றீர்கள்?? காப்புறுதி ஏமாற்று வேலையை ஒருவர் செய்து மாட்டுப்பட்டதையும் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களையும் தாங்கள் ஒப்பிட்டதையே நான் சுட்டிக் காட்டினேன். தற்போது கூட அவுஸ்திரெலிய வெள்ளைகளால் இந்தியரொருவரும் தாக்கப்படவில்லை என்பது போலவே கதையளக்கின்றீர்கள். அவுஸ்திரெலியப் பொலிசார் இந்தியர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் சில இந்தியர்களை மட்டுமன்றி வெள்ளைகள் சிலரையும் கைது செய்திருப்பதை தாங்கள் அறியவில்லையோ?? எம்மவர் அடுத்தவன் முதுகிலுள்ள அழுக்குகளை எடுத்து விடுவதில் காட்டும் ஆர்வத்தை தமது முதுகிலுள்ள அழுக்கை நீக்குவதில் காட்டுவதில்லை. அதுக்கு வக்காலத்து கருத்துகள் வேறு.

தீபம் தொலைக்காட்சி ஆதாரத்தோடு கைது செய்யப்பட்ட தமிழர்கள் பற்றி, தவறை ஒத்துக் கொள்ளாமல் பூசி மெழுகவா முடியும்?? ஆனால் மற்றவர்களும் தான் திருடுகின்றார்கள் என்று கதையளப்பதால், இன்னும் மோசடி செய்பவர்களை ஊக்கப்படுத்துவது தங்களுக்கு புரியவில்லையா?? இப்படி ஒரு நிகழ்ச்சி நடாத்தியதை விட அந்நிகழ்ச்சியை நடாத்தமலேயே விட்டிருக்கலாம். இதனை அடுத்த வாரம் தீபம் தொலைக்காட்சியில் பல தமிழர்கள் வந்து கண்டித்தது மட்டுமல்லாமல், வங்கிகளில் தமிழர்கள் காசெடுக்கப் போகும் போதும் தம்மை அவமானமாகப் பார்ப்பதாகவும், புதிதாக கணக்குத் தொடக்க அனுமதிக்கின்றார்களில்லை எனவும் ஆத்திரப்பட்டார்கள். இந்தநிலை பிரித்தானியாவில் வேறெந்த ஆசிய நாட்டவருக்கும் ஏற்படவில்லை என்பதாவது தங்களுக்குத் தெரியுமா?? தவறுகளை ஒப்புக் கொள்வது பெரிதல்ல, அதனைத் திருத்த முயல்வதே முக்கியம்.

எம்மை நாமே மெச்சிக் கொள்வது பெருமையல்ல, மற்றையவர்கள் நம்மை மெச்சும்படி நடந்து கொள்வதே பெருமை. அவுஸ்திரெலியா நோக்கி அகதிகளாக கப்பலில் வந்தவர்கள் 4 மாதங்களாக இடையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கடலிலேயே சீரழியும் நிலையில் தான் இன்று நம்மவர்கள் உள்ளார்கள். அவுஸ்திரெலிய அரசும் எதிர்க்கட்சியும் இவர்களை உள்ளே விடுவதில்லை என்ற கருத்திலேயே ஒருமித்து நிற்கின்றார்கள். இந்த நிலை வேறெந்த நாட்டு அகதிகளுக்காவது ஏற்பட்டதுண்டா?? :lol::lol:

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.