Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தாக அறிவிப்பது எப்படி?

Featured Replies

வணக்கம்,

நான் பல வருடங்களுக்கு முன்னர் விரும்பிப் படித்த பதிகங்களில் விநாயகர் அகவலும் ஒன்று. நாங்கள் சிறுவயதில் பாடசாலையில் படித்த காலத்தில் விநாயகர் அகவலை படிக்கவேண்டிய கட்டாயம் காணப்பட்டது. ஆயினும், எனக்கு ஓரளவு அறிவு வந்தபின்னர் நான் இதைப் பார்த்தபோது.. அதன்பின்னர் இன்றுவரை தொடர்ச்சியாக எனது கவனத்தை ஈர்த்துள்ள விநாயகர் அகவலின் குறிப்பிட்ட பகுதி:

"மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே".

இதற்கு நீண்டகாலமாக மொழியியல் ரீதியாக அல்லாமல் நடைமுறை ரீதியாக இதன் அர்த்தத்தை புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளேன். கடந்த சில நாட்களாக மீண்டும் விநாயகர் அகவல் நினைவில் வந்து சென்றது. உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி.

http://www.skandagurunatha.org/deities/ganesha/audio/viNayagar-ahaval-1.mp3

பாடல்: விநாயகர் அகவல் | ஒளவையார் | சீர்காழி கோவிந்தராஜன்

vgreets-ganesh.jpg

சீதக் களபச் செந்தாமரைப்பூம்

பாதச் சிலம்பு பலஇசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்

வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சுகரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாகன

இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்க மறுத்தே

திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்

எண்முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்

கருத்தினிற் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்தே

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன

அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்

எல்லை இல்லா ஆனந் தமளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே.

Edited by கரும்பு

ம்.. :D :D

விநாயகர் அகவலின் பெரும்பகுதி யோகக் கலையின் நுட்பங்களை பட்டும் படாமலும் கூறுகிறது. யோகிகளும் சித்தர்களும் தமது ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் உடல் ஆரோக்கியத்துக்காகவும் யோகக் கலையை பயன்படுத்தி வந்தனர். அரும் பொக்கிஷமான யோகக் கலை இன்று பணம்பண்ணும் பொருளானது வருந்தத் தக்கது.

குண்டலினி என்னும் அளப்பெரும் சக்தி மூலாதாரத்தில் அசைவற்று, தேங்கி இருக்கிறது. சிலர் இயற்கையாகவே, தன் முனைப்பின்றி இந்த குண்டலினி சக்தியின் மேல் நோக்கிய நகர்வினை பெறுவர். இதுமுக்கியமாக உடல் சம்பந்தப்படாமல் மனம் சம்பந்தப்பட்ட விடயம். யோக பரிணாமம் அடையும் மனம் இயற்கையாகவே இந்த சக்தியை மேற்சக்கரங்களுக்கு கொண்டுசெல்லும். விஞ்ஞானிகளும் தத்துவ மேதைகளும் இந்த சக்தியின் அசைவு சிறிது பெற்றிருப்பர்.

ஆனால், ஹடயோகிகள், உடலை வளைத்தும், முறுக்கியும் இந்த சக்தியை இயங்க வைக்க பார்ப்பர். இதற்கு ப்ராணாயாமம் மிக முக்கிய துணைக்கருவி. மேலும் சித்தாசனம் இதை வலுப்படுத்தும். வலது காலை மடித்து குதியை மர்மஸ்தானத்துக்கு கீழேயும் இடது காலை மடித்து மர்மஸ்தானத்துக்கு மேலேயும் வைத்து முள்ளந்தண்டை நிமிர்த்தி இருப்பது சித்தாசனம். காலின் உதவியுடன் குண்டலினியை சில யோகிகள் எழுப்பி இருக்கிறார்கள்.

யோகக்கல்வியில் மிகவும் ஆபத்தானதும் இதுதான். பயிற்றப்படாத மனம் முயற்சிப்பது மிகப்பெரும் ஆபத்தில் கொண்டுசென்று நிறுத்தும். குண்டலினி சக்தி யோக முன்னேற்றத்தில் ஒரு வழுக்கும் கல்.

உங்கள் பதிலை தொடர்ந்து மேலும் எழுதலாம்.

  • தொடங்கியவர்

நன்றி திருமகன் உங்கள் கருத்திற்கு.

யோகமும் ஆன்மீகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பை கொண்டு இருக்கக்கூடியனவாயினும் அவை வெவ்வேறானவை என்று நூல்களில் பார்த்து உள்ளேன். உதாரணமாக ஓர் சித்தரின் / ஞானியின் நடைமுறை வாழ்வும் ஓர் யோகியின் நடைமுறை வாழ்வும் வேறுபட்டு காணப்படலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான நுட்பங்களை தமது ஆன்ம ஈடேற்ற தேவைகளுக்கு, உடல் உள அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கு பயன்படுத்தலாம். பலர் இரகசியம் காப்பதற்காக, குருவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்காக தமது ஆன்மீக, மற்றும் யோக அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது இல்லை. இதனால் உண்மையில் அறிவியல் ரீதியாக சில விடயங்களை மட்டுக்கட்டுவது மிகவும் கடினமானது. மற்றும் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட நபர் அவற்றை வெளிப்படுத்தாதவரை மற்றவர்கள் கண்டறியவும் முடியாது. அத்துடன், இவ்வாறான நிலமைகளில் ஒருவர் பாதிக்கப்பட்டு காணப்பட்டாலும் சாதாராண வைத்தியர்களினால் குணப்படுத்த முடியாது. ஏனெனில், அவர்களுக்கு குறிப்பிட்ட நபரினுள் நடந்த மாற்றங்கள், பெற்ற உணர்வுகள், கிடைத்த அனுபவங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அண்மையில் நீங்கள் பார்த்தீர்களோ தெரியாது. அம்மாபகவான் எனப்படும் இந்தியாவில் உள்ள பிரபலமான ஓர் ஆச்சிரமத்தில் நடைபெறும் சம்பவங்கள் என நீண்ட காணொளியை வலைத்தளங்களில் பார்வைக்கு விட்டார்கள். அங்கு முக்கிய குற்றமாக கூறப்பட்டது அம்மாபகவான் ஆச்சிரமத்தில் தங்கும் தனது பக்தர்களிற்கு போதை மருந்தை இரகசியமாக ஊட்டுகின்றார் என்று. அது உண்மையாகவோ, பொய்யாகவோ இருப்பது போக... அவரது பக்தர்களை வெவ்வேறு கோணங்களில் மிக அருகாக வைத்து எடுத்த காணொளிகளை பார்க்கும்போது பல்வேறு வினாக்கள் தோன்றுகின்றன.

விநாயகர் அகவல் நீங்கள் கூறியதுபோல் ஓர் அரும்பெரும் பொக்கிசம். நடைமுறை ரீதியாக அதன் அர்த்தத்தை புரிந்தவர்கள் இதன் பெறுமதியை அறிந்திருக்கக்கூடும்.

எனது மருமக்கள் சிலர் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் என்னிடம் கேட்டார்கள் இந்துக்கள் ஏன் நூறு கடவுள்களை வைத்து இருக்கின்றார்கள். ஒரு கடவுள்தானே உள்ளார். இவர்கள் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொன்றை வைத்து இருக்கின்றார்களே... இவ்வாறு அவர்கள் கூறி சிரித்தார்கள். நான் அவர்களிற்கு பின்னர் ஆறுதலாக நல்ல பதிலை வழங்கினேன். இன்று இந்த விநாயகர் அகவலை மீண்டும் நினைக்கும்போது, விநாயகர் அகவலுக்காகவாவது விநாயகர் என்று ஓர் கடவுளை மனிதன் படைத்தது நல்லதாக படுகின்றது.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது.

சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் "சிவாயநம' என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.

இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு "நீயும் வாயேன் பாட்டி' என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்.

"நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் அவ்வையார்.

"ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு' என்றதும், "சீதக்களப' என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்ன வயதில் இந்தக் கதை கேட்டு இருந்தேன் தற்போது மறந்து போய் விட்டது ஞாபகபடுத்தியதுக்கு நன்றி வாத்தியார்.

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே.

இதில இருந்து என்ன தெரிகிறது ,வினாயகர் கடவுள் இல்லை மனிதன் யோக நிலையை கடைப்பிடிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு வடிவம்.அந்த காலத்தில் பல மொழிகள் நடைமுறையில் இருந்தது எல்லோருக்கும் புரியும் படி ஒரு போது வடிவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

பேய், பிசாசு.....வரும் என்ற எண்ணம் வரும் பொழுது ,

"உடனே ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் "

என்று பாடினால் பேய் பிசாசு உள்ள வரமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

திரு. ஈழத்திருமகன் சொல்லியதுபோல் இப்பாடல் முழுக்க,முழுக்க யோகக்கலை நுட்பத்தையே எளிமையாக சொல்கிறது.யோகக் கலை தெரியாவிட்டாலும் கூட இப்பாடலை தனியான ஒரு இயற்கையான சூழ்நிலையில் மனதினுள் அதே இசையுடன் படித்தாலோ அன்றி ஒளிக் கருவி மூலம் கேட்டாலோ உடலும்,உள்ளமும் ஒரு புது அனுபவம் அடைவதை உணர முடியும். வாழ்த்துக்கள் குருஜி! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.