Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாத் தமிழர்களே சிந்தியுங்கள்....

Featured Replies

கனடாத் தமிழர்களே சிந்தியுங்கள்....

சிங்களத்தின் பிடியிலிருந்து தம் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பேராபத்து நிறைந்த கடல் பயணம் மேற்கொண்டு கனடாவை வந்தடைந்த எம் தமிழ் உறவுகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து ஆளும் கன்சரவட்டிவ் கட்சியினர் விளம்பரம் தயாரித்து வெளியிட்டமை அனைவரும் அறிந்ததே.

வெள்ளையினத்தவரின் வாக்குகளைக் கவர்வதற்காக தமிழர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்த இந்த விளம்பரம் கண்டு தமிழர்கள் கொதித்துப் போயுள்ள நிலையில் தமிழ் தேசியத்தை பற்றி நின்ற தொலைக்காட்சி வானொலிகளில் முக்கிய பங்காற்றிய ராகவன் பரஞ்சோதி என்பவர் அதே கன்சர்வட்டிவ் கட்சியின் வேட்பாளாராகப் போட்டியிடுகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

ஸ்காபறோ தென் மேற்குத் தொகுதியில் போட்டியிடும் இவருக்கு வாக்களிக்கும் படி விடுதலைப் போர் முனைப்புப் பெற்றிருந்த காலத்தில் களப்பணி செய்வதாகக் கூறிக் கொண்டிருந்த பலரும் தமிழ் வீடுகள் தோறும் சென்று வாக்குச் சேகரித்து வருவதும் நடந்து வருகிறது.

எந்தத் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக கன்சர்வட்டிவ் கட்சி சித்தரித்ததோ அதே கன்சர்வட்டிவ் கட்சியினருக்கு தமிழ் மக்கள் வாக்களித்து அழகு பார்க்கப்போகிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

லிபரல் கட்சி தலைவரும் பெண் கரும்புலிகள் பற்றி அவதூறாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.அப்போ தமிழர்கள் யாருக்குத்தான் வாக்களிப்பது?. :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

என்னைப் பொறுத்தவரை NDP கட்சியே சரியான தெரிவாக இருக்க முடியும்.

எம் சகோதரர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொட்டிருந்த போது ஒட்டாவா பாராளுமன்ற முன்றலிலே கடும் குளிரின் மத்தியில் நாம் கூடி நின்ற போது கன்சர்வேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களோ லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களோ திரும்பியும் பார்க்கவில்லை.

ஆனால் NDP கட்சியின் தலைவர் அங்கு வந்து உரையாற்றியிருந்தார்.

இந்தச் செய்தியையும் ஒருக்கால் பாருங்கோ

http://www.theglobeandmail.com/news/politics/ottawa-notebook/harper-brushes-off-questions-over-tamil-candidate-who-praised-terrorist-group/article1985624/

குறிப்பா இந்தப் பகுதியைப் பாருங்கோ!

Mr. Paranchothy has told The Globe that he supports the ban on the Tigers, but has yet to elaborate on his opinion of the militant group. The Tigers used suicide bombings, child soldiers and political killings in their failed 26-year war for a separate Tamil state in Sri Lanka, which ended in 2009.

Dimitri Soudas, spokesman for Mr. Harper, said Mr. Paranchothy “was asked, and confirmed with the Conservative Party, that he in no way, shape or form was a sympathizer or supporter of the Tamil Tigers” before he was nominated. “If that had been the case ... he would not have been a candidate,” Mr. Soudas said.

As of early Thursday afternoon, Mr. Paranchothy remained the party’s nominee in Scarborough-Southwest.

எம் சகோதரர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொட்டிருந்த போது ஒட்டாவா பாராளுமன்ற முன்றலிலே கடும் குளிரின் மத்தியில் நாம் கூடி நின்ற போது கன்சர்வேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களோ லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களோ திரும்பியும் பார்க்கவில்லை.

ஆனால் NDP கட்சியின் தலைவர் அங்கு வந்து உரையாற்றியிருந்தா

வந்து என்ன சொன்னவர்? இலங்கையில் படுகொலை நடக்குது என்றவரா? ஆகக் குறைந்தது இந்த கொலைகளுக்கு ஒரு சிறு கண்டனம்தான் சொன்னவரா? அல்லது தமிழ் மக்கள் பிரிந்து போகும் உரிமை கொண்ட ஒரு தேசிய இனம் என்றாவது சொன்னவரா? அல்லது புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்றாரா?

அவர் கதைக்கும் போது இரண்டாவது வரிசையில் தான் நானும் நின்றனான்

கன்சவேட்டி கட்சி ஆயினும் சரி, லிபரல் ஆயினும் சரி, NDP ஆயினும் சரி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற உலக ஒழுங்கு முறைக்கு எந்தவித எதிர்ப்பையும் வெளிக்காட்ட மாட்டார்கள் ; அவர்கள் அரசியல் நிரலிலும் அது இல்லை. நீங்கள் கனடாவில் இருந்து கொண்டு புலிகளுக்கும் எம் போராட்டத்துக்கும் ஆதரவு கொடுகின்றார்கள் இல்லை என்று எதிர்க்க முற்பட்டால் தட்ட தனிய நின்று ஒதுக்கப்படுவீர்கள்

  • தொடங்கியவர்

நிழலி

நீங்கள் ஒரே ஒரு விடயத்தை மட்டும் தெளிவுபடுத்துங்கள். வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விளம்பரங்களை வெளியிட்டு விட்டு அதை எக்காரணம் கொண்டும் அகற்ற மாட்டோம் என அடம்பிடிக்கும் கன்சர்வட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டியிடுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

சஹாறா!

இந்த பேரணியில் கலந்து கொண்டு NDP தலைவர் ஆற்றிய உரையின் பகுதியின் பதிவு இருந்தால் அதனையும் இணைத்து விடவும்.

எனது அறிவுக்கெட்டிய ஆங்கிலத்தின் அடிப்படையில் அவர் விடுதலைப் புலிகளை ஆதரித்து எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காத போதிலும் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பகிரங்கமாகப் பேசியதுடன் கூடியிருந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாகவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரையாற்றியிருந்தார்.

அங்கு கூடியிருந்த மக்கள் ஸ்டீபன் ஹார்பர் தம் முன் வந்து உரையாற்ற வேண்டும் எனக் கூக்குரலிட்ட போதிலும் ஸ்டீபன் ஹார்பரோ அல்லது அவரது சார்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ அங்கு வரவேயில்லை.

நிழலி

நீங்கள் ஒரே ஒரு விடயத்தை மட்டும் தெளிவுபடுத்துங்கள். வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விளம்பரங்களை வெளியிட்டு விட்டு அதை எக்காரணம் கொண்டும் அகற்ற மாட்டோம் என அடம்பிடிக்கும் கன்சர்வட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டியிடுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ஓவியன்,

தமிழ் நாட்டு / இலங்கை தேர்தல் மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்

கனடிய மக்கள் இன்னொரு இனத்தினை பயங்கரவாதிகளாக காட்டியதற்காக மட்டும் ஒரு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். தலைவர்களுகிடையே நிகழும் விவாதம், பொருளாதார திட்டம், வரி, வேலை வாய்ப்பு என்பனவற்றை அலசி ஆராய்ந்து வாக்களிக்கும் முன்னேறிய ஒரு மக்கள் கூட்டம் அவர்கள். அத்துடன் படகு விடயம் தேர்தலை தீர்மானிக்கும் விடயம் அல்ல என்று மக்கள் முடிவு எடுத்துள்ளனர் என்று பல Surveys கூறியுள்ளன

கன்சர்வேட்டி கட்சி தமிழர்களை பயங்கரவாதிகளாக காட்டி உள்ளதா அல்லது படகில் வருபவர்களை காட்டினதா? நான் தமிழன் என்ற அடிப்படையில் என் ஊரில் இருந்து வந்த தமிழர்களின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. அத்துடன் மிகப் பெரும் அவலத்தினை படுகொலையை சந்தித்த இனம் என்ற படியால் நிச்சயம் அவர்கள் அகதி அங்கீகாரத்துக்கான தகுதி அனைத்தும் கொண்டவர்கள். ஆனால் இதுவே லிபியர்களும், எகிப்தியர்களும் வந்தால் ; அவர்களின் நலத்திட்டத்துக்கு என் வரிப் பணம் செலவு ஆக்குவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதுதான் கனடியர்களின் பொதுவான நிலைப்பாடு

நாம் கனடிய தமிழர்கள்; கடைசிக் கட்டத்தில் தானே இந்த ஆராவாரம் செய்தோம்? எம்மால் ஆற்றக் கூடிய எத்தனையோ விடயம் இருந்தும்; முக்கியமாக யுத்த நிறுத்த காலத்தில் சும்மா புலிகளின் இராணுவ பலம் பற்றிய அதீத கற்பனையில் தானே இருந்தோம். அதன் பலன்தான் இந்த வீடியோவும் அதனை கூட நிறுத்த செய்ய முடியாத எம் பலவீனமும்

அரசியலில் இன்றைய நண்பன், நாளைய எதிரி. நேற்றைய எதிரி இன்றைய நண்பன். இந்த நெளிவுகள் சுளிவுகளுக்குள், எமது தாயக மக்களின் விடுதலையை இலக்காக கொண்டு நாமும் நகர வேண்டிய தேவை உள்ளது.

முதலில் கனடா ஒரு உலக அரசியல் செல்வாக்கு உடைய நாடு அல்ல. ஆனால் இதன் மூலம் அமெரிக்கா மீது சில அழுத்தங்களை கொடுக்கலாம். கனடா ஒரு செல்வந்த நாடு, எனவே புலம் பெயர் தமிழர்கள் இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

கனடாவில் எம்மை பொறுத்தவரையில் ஒரு கட்சியையும் நாம் வெற்றி பெறவோ இல்லோ தோல்வியடையவோ வைக்க முடியாது. ஆனால், சில தொகுதிகளில் முடியும். எனவே ஏனைய பல்லின சமூகங்கள் போன்று (குறிப்பாக சீக்கிய இல்லை யூத), நாமும் தொகுதிவாரியாக வெல்லக்கூடியவர்கள் மத்தியில் ஆதரவை தெரிவித்து அந்த கட்சியில் எமது பிரதிநிதித்துவத்தை வளர்க்க வேண்டும். இவ்வாறு மூன்று கட்சிகளிலும் ஆதரவை தேடுவது கூடிய பயனளிக்கும்.

சஹாறா!

எனது அறிவுக்கெட்டிய ஆங்கிலத்தின் அடிப்படையில் அவர் விடுதலைப் புலிகளை ஆதரித்து எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்காத போதிலும் அங்கு அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பகிரங்கமாகப் பேசியதுடன் கூடியிருந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாகவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரையாற்றியிருந்தார்.

யுத்தம் நிறுத்தப் படவேண்டும் என்றார். உங்கள் துயரத்தில் பங்கு கொள்கின்றோம் என்றார். ஆனால் Stop the Genocide என்பதில் உள்ள Genocide இனை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

தமிழ் மக்களுக்கு தேவை அனுதாபம் அல்ல; அங்கீகாரம்

  • தொடங்கியவர்

நிழலி!

உங்கள் வாதம் புரியவில்லை. மக்கள் விளம்பரத்தினைப் பாரத்து வாக்களிப்பதில்லை என்றால் அத்தகைய விளம்பரமொன்றை பெரும் பணச்செலவில் தயாரித்து ஒளிபரப்ப வேண்டியதன் தேவையென்ன? அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறும்படி கனேடியத்தமிழ் காங்கிரசின் வேண்டுகோளை கன்சர்வேட்டிவ் கட்சி நிராகரித்ததன் நோக்கம் என்ன?

முக்கியமாக என்னுடைய கேள்விக்கான பதிலைக் காணவில்லையே!

மற்றையவர்களைப் பற்றிக் கவலையில்லை. தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விளம்பரம் வெளியிட்டு வாக்குக் கேட்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் வாக்குக் கேட்டு தமிழ் வாக்குக்களை கன்சர்வேட்டிவ் கட்சிக்குச் சேர்த்துக் கொடுப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன? (ஆகக் குறைந்தது அந்த விளம்பரத்தை அகற்றுங்கள் என்றாவது இந்த வேட்பாளர்கள் கேட்டார்களா?)

நிழலி!

முக்கியமாக என்னுடைய கேள்விக்கான பதிலைக் காணவில்லையே!

மற்றையவர்களைப் பற்றிக் கவலையில்லை. தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விளம்பரம் வெளியிட்டு வாக்குக் கேட்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் வாக்குக் கேட்டு தமிழ் வாக்குக்களை கன்சர்வேட்டிவ் கட்சிக்குச் சேர்த்துக் கொடுப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன? (ஆகக் குறைந்தது அந்த விளம்பரத்தை அகற்றுங்கள் என்றாவது இந்த வேட்பாளர்கள் கேட்டார்களா?)

என் பதிலில் சொல்லி / கேட்டு இருந்தேன்; தமிழர்களை பயங்கரவாதிகளாக சொன்னார்களா அல்லது படகில் வருபவர்கள் பற்றி சொன்னார்களா? கனடிய வரலாறில் படகில் வந்தவர்கள் தான் அதிகமாயினும் இனிவரும் சமுதாயம் பொருளாதார நெருக்கடியால் அதனை ஆதரிக்க போவதில்லை. அத்துடன் அந்த விளம்பரம் பயங்கரவாதிகள் என்ற பதத்தை உபயோகப் படுத்தியதா அல்லது கிரிமினல்ஸ் என்ற சொல்லை பயன்படுத்தியதா? அந்த விளம்பரத்தை இரு முறை பார்த்துள்ளேன். இங்கு இணைக்கவும், சரி பார்க்க

இந்த முறை என் ஆதரவு ராதிகா சிட்சபெசனுக்கு (NDP வேட்பாளர்) அது NDP யின் நடைமுறை சாத்தியமற்ற கொள்கைகளுக்காக அல்ல. ஒரு தமிழர் வெற்றி பெற்றால் தான் நாளைக்கு தமிழர் வாக்கு பலம் பற்றிய உணர்வு கனடிய அரசியல் கட்சிக்கு வரும் என்பதால்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

நிழலி!

அந்த விளம்பரத்தின் முதல் வசனத்திலேயே கிரிமினல்ஸ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

' Canada welcomes people who want to build a better future, but our openness doesn’t extend to criminals who target Canadian generosity'

நிழலி!

அந்த விளம்பரத்தின் முதல் வசனத்திலேயே கிரிமினல்ஸ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

' Canada welcomes people who want to build a better future, but our openness doesn’t extend to criminals who target Canadian generosity'

அதைத் தானே நானும் சொல்கின்றேன்....இது தமிழர்களை மட்டும் குறிப்பிட்டு எதிர்பதாக நாம் நினைப்பது படகில் வந்தவர்கள் தமிழர்கள் எனபதால் தான். ஆனால் இதை தமிழர்க்கு எதிரான ஒரு விடயம் என்று எப்படி பொதுப் படுத்துகின்றீர்கள்? தமிழர் என்று எங்கேயாவது சொல்லப்பட்டு இருக்கா? உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் அகதி என்று வருபவர் மீதான பொது மக்கள் எதிர்ப்பு வலுக்கின்றது. அது தமிழரா சீக்கியரா அல்லது jews ஆ என்று பார்ப்பது இல்லை. அந்த மனநிலையை காப்பர் அறுவடை செய்ய முனைகின்றார்

மற்றப்படி காப்பரின் பொருளாதார திட்டங்கள் (முக்கியமாக் Welfare cuts ) எனக்கு பிடித்து உள்ளதால் அவர் வருவதை விரும்புகின்றேன். ஆனால் ஒன்று

கார்பர் தன் மூதாதையர் எப்படி வந்தது என்று மறந்து விட்டார்

so he is not using Terrorist stamp !!

எமக்கு படகில் வந்தவர்கள் கிரிமினல் இல்லை என்று தெரியும். ஏனெனில் எமக்கு எம்மவர் வலி புரியும். அந்த வலியை கடைசி நேரத்தில் (புலிகளின் இராணுவ பலம் பற்றிய கனவு சிதைந்த நேரத்தில்) காட்ட முற்பட்ட எம் முன் தான் பாரிய பணி காத்து கிடக்குது. உலகம் முழுதும் இலங்கை அரசின் போர்க் குற்றத்தினை உரைப்போம். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தி போர்க் குற்ற விசாரணையை தொடங்க சொல்வோம்

இப்படி செய்வதில் வெற்றி பெற்றால்

அடுத்த தேர்தலில் எம்மவர் பற்றிய ஒளிப் படத் தொகுப்பை சேர்க்க கனடிய அரசியல் வாதிகள் மட்டும் அல்ல, அனைவரும் அஞ்சுவர்

நன்றி,

வணக்கம்

  • தொடங்கியவர்

நிழலி!

தமிழர்கள் வந்த கப்பலின் புகைப்படத்துடன் கிரிமினல் என்ற வார்த்தையும் சேர்த்தே பாவிக்கப்படுகிறது. (அந்த வசனத்தை நான் மேற்கோளிட்டதன் காரணம் நீங்கள் கிரிமினல் என்ற வார்த்தையை எங்காவது பாவித்து இருக்கிறார்களா என்று கேட்டிருந்தீர்கள்)

ஏனைய இனத்தவர்கள் இதனை எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கோ எத்தனையோ சிரமங்களின் மத்தியில் உயிரைக் காப்பாற்றுவதற்காக இந்த மண்ணில் வந்து இறங்கிய என் சகோதரர்களையும் அவர்கள் வந்தடைந்த கப்பலையும் காட்சிப்படுத்தி கிரிமினல்கள் என்று விழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பொருளாதாரக் கொள்கைகள், சமூக நலன் தொடர்பான கொள்கைகள் என்பவற்றை ஆராய்வதற்கு முன்னர் என் சகோதரர்கள் அவமானப்படுத்தப்படுவதே எனக்கு பிரதான பிரச்சினையாக உள்ளது.

நான்; வாழும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்காக எம்மை அவமானப்படுத்தும் ஒரு கட்சியை ஆதரிப்பதற்கு எனது மனம் ஒப்பாது அவ்வளவே!

அது மட்டுமன்றி எம் மக்களின் போராட்டத்தை திரும்பியே பார்க்க மறுத்த மற்றவர்களுடன் ஒப்பிடும் போது (உங்கள் கருத்துப்படி) ஒப்புக்காகவாவது வந்து குரல் தந்த NDP கட்சிக்கு வாக்களித்து எனது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இன்றைய நண்பன், நாளைய எதிரி. நேற்றைய எதிரி இன்றைய நண்பன். இந்த நெளிவுகள் சுளிவுகளுக்குள், எமது தாயக மக்களின் விடுதலையை இலக்காக கொண்டு நாமும் நகர வேண்டிய தேவை உள்ளது.

முதலில் கனடா ஒரு உலக அரசியல் செல்வாக்கு உடைய நாடு அல்ல. ஆனால் இதன் மூலம் அமெரிக்கா மீது சில அழுத்தங்களை கொடுக்கலாம். கனடா ஒரு செல்வந்த நாடு, எனவே புலம் பெயர் தமிழர்கள் இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

கனடாவில் எம்மை பொறுத்தவரையில் ஒரு கட்சியையும் நாம் வெற்றி பெறவோ இல்லோ தோல்வியடையவோ வைக்க முடியாது .ஆனால், சில தொகுதிகளில் முடியும். எனவே ஏனைய பல்லின சமூகங்கள் போன்று (குறிப்பாக சீக்கிய இல்லை யூத), நாமும் தொகுதிவாரியாக வெல்லக்கூடியவர்கள் மத்தியில் ஆதரவை தெரிவித்து அந்த கட்சியில் எமது பிரதிநிதித்துவத்தை வளர்க்க வேண்டும். இவ்வாறு மூன்று கட்சிகளிலும் ஆதரவை தேடுவது கூடிய பயனளிக்கும்.

அகூதாவின் கருத்து சரியாகவே.... உள்ளது.

  • தொடங்கியவர்

கன்சர்வற்றிவ் கட்சியின் பிரச்சாரம் தொடர்பாக ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை

Conservative Party Ad – Refugees as “Criminals”?

Written by: Rathi Kamalanathan (University of Toronto)

In a recent ad released by the Conservative Party of Canada, the Conservatives makes reference to the boatload of Tamil refugees who made their way to Canada last year, fleeing persecution in Sri-Lanka. The ad begins of saying,”Canada welcomes people who want to build a better future, but our openness doesn’t extend to criminals who target Canadian generosity.” It is here that a picture of the cargo ship MV Sun Sea, which brought 492 Tamil refugees to BC is shown. This ad is highly xenophobic, racist and misleading. In 1939, Canada turned away the SS St Louis carrying more than 900 Jewish refugees, who were forced back to Nazi Germany. Similarly, 26 Sikhs were shot dead when their ship Komagata Maru was forced to return to South Asia by the Canadian immigration officials of the time.

The message being sent through this ad is that refugee claimants are “criminals.” The migrants who were on this ship that was featured in this ad were travelling at sea for three months, living in cramped and inadequate living conditions. They put their lives at risk to embark on this risky journey to a safer place after suffering tremendously through the hardships in Sri Lanka. The situation in Sri Lanka is dire as many Tamils still remain in camps and are living in poor conditions. Many Tamils are being detained without fair trial and disappearances occur on a daily basis. No satisfactory solution has been mediated for the Tamils living in Sri-Lanka, and the war criminals that have carried out these crimes have not been brought to justice. Slowly, evidence is mounting against the Sri-Lankan Government; leaks of Sri-Lankan military personnel torturing, raping and killing Tamils has made its way to major media sources. The Tamils who made the journey fled persecution from these war criminals, and came to Canada in hopes to rebuild their lives.

As Canadians, it is our duty to welcome these refugees with open arms and ensure their rights and freedoms are protected. Labeling these refugees as criminals will hinder their integration into Canadian society, and will breed racism and xenophobia. As a country that is a signatory to :icon_mrgreen:the United Nations Convention and Protocol Relating to the Status of Refugees, Canada is encouraged to ensure that refugees who reach its soil are given the rights and freedoms outlined in this Convention. Canada has been recognized worldwide as being a compassionate country that protects the rights and legitimate concerns :icon_idea: of refugees, and labeling them as criminals does not display compassion for the tremendous plight these refugees have undergone.

The message being sent through this ad is that refugee claimants are “criminals.” The migrants who were on this ship that was featured in this ad were travelling at sea for three months, living in cramped and inadequate living conditions. They put their lives at risk to embark on this risky journey to a safer place after suffering tremendously through the hardships in Sri Lanka. The situation in Sri Lanka is dire as many Tamils still remain in camps and are living in poor conditions. Many Tamils are being detained without fair trial and disappearances occur on a daily basis. No satisfactory solution has been mediated for the Tamils living in Sri-Lanka, and the war criminals that have carried out these crimes have not been brought to justice. Slowly, evidence is mounting against the Sri-Lankan Government; leaks of Sri-Lankan military personnel torturing, raping and killing Tamils has made its way to major media sources. The Tamils who made the journey fled persecution from these war criminals, and came to Canada in hopes to rebuild their lives.

நன்றி வணக்கம் சொன்ன பிறகும் எழுத வந்ததுக்கு மன்னிக்கவும்

எமக்கு (கனடா வாழ் தமிழ் மக்களுக்கு) தெரியும் இந்த படகில் வந்தது யார் என. ஆனால் கனடியர்கள் கேட்ட கேள்வி ஒரே ஒரு கேள்வி

வன்னிக்கு அருகில் இருக்கும் இந்தியா அல்லது தென் இந்திய நாடு போகாமல் இவர்கள் ஏன் 3 மாதம் இவ்வளவு கஷ்டப் பட்டு இங்கு வந்தார்கள் என? தம் நாட்டு அகதிச் சட்டம் மிக "லேசானது" என்று நினைப்பதால் தான் இவர்கள் இங்கு வருகின்றார்கள் என கனடியர்கள் நினகின்றார்கள். அதனால் தான் பழமை வாத கட்சி இனி "இப்படியானவருக்கு இடம் இல்லை' சட்டத்தினை இறுக்குவேன் என்று சொல்கின்றது

எப்படி இறுக்கினாலும் எம்மவருக்கு இங்கு இடம் தேவை என்பது எமது நியாயம். ஏனெனில் எமக்குத் தான் தெரியும் எம்மவர் பட்ட அவலம். உலகுக்கு வேண்டுமென்றால் ஐ.நா நிபுணர் குழு அறிக்கை தேவையாக இருக்கலாம்; ஆனால் எமக்கு அல்ல. அதை உலகுக்கு உணர்த்துவோம். கிடைக்கும் மிகச் சிறிய சந்தர்பத்தையும் பயன்படுத்துவோம்.

அகூதா சொல்வதின் சாரம்; கனடா ஒரு செல்வந்த நாடு; இதனை இதன் அரசியலை எம் முன்னேற்றத்துக்கு பயன் படுத்துவோம். நாம் முன்னேற எந்த அரசியல் கட்சியின் பொருளாதார கொள்கைகள் இலகுவாக இருக்கின்றதோ அதை ஆதரிப்போம். தமிழர் பொருளாதாரமும் ஒன்று பட்ட சக்தியும் பெரும் பலமானது என்று காட்டும் போது தான் அனைத்தும் மாறும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் இங்குள்ள எந்தக்கட்சியும் தமிழர்கள் பற்றிய நிலைப்பாட்டில் தமிழ்மக்களுக்கான அடிப்படைப்பிரச்சனையை முழுமையாகத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. இங்குள்ள நம்மவர்கள் விழாக்களுக்கு வருகை தந்தாலும் மிக அவதானமாக எங்களின் முக்கிய பிரச்சனைகளை பேசுவதை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் லிபரல், கொன்சவெட்றிவ், என்டிபி ஆகிய பிராதான கட்சிகளில் நம்முடையவர்கள் பரவலாக ஆதரவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாலும் இதுவரை காலமும் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதை அனைவரும் அறிவோம். இப்போதுகூட நாம் யாரைத் தெரிவு செய்தாலும் பெரிதாக எம்மினத்திற்கான குரலை இவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, இருப்பினும் இம்முறை நாம் அளிக்கப்போகும் வாக்குகள் அடுத்த முறை தேர்தலில் போட்டியிடக்கூடிய அனைத்து கட்சிகளின் கவனத்தையும் கவரவேண்டும். காலம் முழுக்க சிதறுதேங்காய் அடித்தே சின்னாபின்னப்பட்டுப்போயிருக்கிறோம். இந்த முறை சிதறுதேங்காய் அடிக்கும் நிலையைக் கைவிடுவோம். மற்றது கனெடிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை கனடாவிற்கு வெளியே உள்ள விடயங்கள் தொடர்பில் எந்தவித ஆரோக்கியமான நிலைப்பாடுகளை அதாவது தமிழர் விடயத்தில் செயற்படுத்த முடியாது. ஆனால் கனடாவிற்குள்ளே வாழும் தமிழர் தொடர்பாக ஒரு பலப்பான நிலையைத் தோற்றுவிக்கலாம் அவ்வளவே. தமிழர்களாகிய நம் குரல் பூர்வீக பூமியை பற்றியதாக இருக்குமானால் அதை இங்கு எவரும் சட்டை செய்யப்போவதில்லை. நாமும் அந்த எதிர்பார்ப்பை வைத்து இந்தத் தேர்தலில் வாக்களித்தால் நிச்சயம் ஏமாற்றமடைவோம். ஆதலால் இவர்கள் அது செய்வார்கள் இது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு அப்பால் பலமான அரசியல் அத்திவாரத்திற்குரிய வாக்குப்பலத்தை உடையவர்களாக நம்மை வைத்திருந்தாலே கால ஓட்டத்தில் இந்த நிலைப்பாட்டிலிருந்து சிறிது சிறிதாக மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு இன்றைய நாளில் நாம் செய்ய வேண்டியது தேர்தலில் போட்டியிடும் நம்மவர்களுக்கு சிதறாத நம்முடைய வாக்குகளைப் பதிவு செய்வது மிக முக்கியமான ஒன்று நம் எல்லோருடைய வாக்குகளும் நம்மவர்களைச் சென்றடையும்போது போட்டியிடும் நம்மவர்களுக்கு வெகுவான பலம் ஏற்படும் அந்தப்பலந்தான் எதிர்கால மாற்றத்திற்கான ஆரம்ப நிலையாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வந்த தமிழர்களை கனடா அரசு திருப்பி அனுப்பவில்லை. ஆனால் கனடாவுக்கு வந்த யூதர்களின் படகு திருப்பி அனுப்பப்பட்டது.

எம்மவர்கள் ,தமிழினத்துக்கு பாடுபட்டவர்கள் எந்தக்கட்சி என்றாலும் தெரிவு செய்ய வேண்டும்.எமது மக்களின் குரல் எக்கட்சியாயினும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

ஸ்ரிவன் காப்பரின் விளம்பரம் தனது அபகீர்த்தியை மறைத்து மக்களின் சிந்தனைப் போக்கை மறைக்க பயன்படுத்தி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதி சில இணைப்புகள்

இந்தத் தோழரின் கருத்தையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் குளோப் அண்ட் மெயிலுக்குக் கொடுத்த பேட்டி. முக்கியமாகக் கடைசி வரியைப் படிக்கவும்.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.