ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . .
ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம்
ஆதி பழனியே சென்னிமலை
ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை
பன்னிரு கையிருக்க ஏன் கவலை
கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை
முருகா முருகா முருகா முருகா
அருள்பொழியும் தண்டபாணிமுகம்
கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும்
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை
சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம்
அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம்
ஓம் சரவணபவாய . . .
பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்
தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம்
ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்
அருமருந்தாகும் பஞ்சாமிர்தம்
திருநீறும் சந்தனமும் கமகமக்கும்
காவடிகள் ஆடிவரும் மலையினிலே
திருவடியில் பக்தர்கள் அலைபோலே
ஆடிவரும் அழகு முகம் தேரினிலே
பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே