Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ்நிலா

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    11
    Points
    122
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    23926
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15791
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46818
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/03/20 in all areas

  1. கெய்லின் சில புகைப்பட தொகுப்புகள்.......! 🏏
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வாகரை நோக்கி முன்னேற்றம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வெருகல் ஆற்றினைக் கடந்து வாகரை நோக்கி முன்னேறிவருவதாக அப்பகுதியிலிருந்து வாழைச்சேனையை வந்தடைந்த வாகரை வாசிகள் தெரிவித்தனர். விசேட தாக்குதல் அணிகள் தலைமைதாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகளின் தாக்குதல் அணிக்கு பின்புலத்திலிருந்து ஆட்டிலெறிச் சூட்டாதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. கருணா - துணைராணுவக் குழுவினருக்கெதிரான நடவடிக்கைகளின்பொழுது, இக்குழுவின் வாகரைப் பொறுப்பாளர் ஜெயம் காயப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரையிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பால்ச்சேனைப் பகுதியில் புலிகள் தற்போது தமது நிலைகளை அமைத்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கருணா துணை ராணுவக்குழு - பிள்ளையான் - கருணா - ஜெயம் கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான நடவடிக்கை தொப்டங்கியதிலிருந்து இதுவரையில் 300 இற்கு அதிகமான இளவயதுப் போராளிகள் சண்டையிடாது புலிகளிடம் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் ஆற்றின் தென்பகுதியிலும், வாகரைப்பகுதியிலும் கருணாவினால் பலவந்தமாக நிலைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அணிகளின் தளபதிகளில் ஒருவர் இச்சிறுவர்கள் பற்றி கூறுகையில், "அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டிருக்கிறோம், விரைவில் அனைவரும் அவர்களது வீடுகளுக்குத் திரும்பவிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார். இதேவேளை கருணா துணை ராணுவக்குழுவினரால் வாகரைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் செலுத்திகளும் சரணடைந்த போராளிகளால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, வாகரையிலிருந்து 12 கிலோம்மீட்டர்கள் தொலைவில் கடலையண்டி அமைந்திருந்த கருணாவின் பாரிய தளம் ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கதிரவெளிப்பகுதியில் முகாமிட்டிருந்த கருணா துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர் "மார்க்கானின்" நிலைபற்றி இதுவரை தகவல்கள் வரவில்லை. இதேவேளை கருணாவின் சகோதரரான, துணை ராணுவக்குழு முக்கியஸ்த்தர் ரெஜி இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா துணை ராணுவக்குழுவின் வாழைச்சேனைக்கு வடக்கேயான மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பிரதேசத்தின் பொறுப்பாளராக இவர் கருணாவால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதல்களின் பொழுது தப்பிவந்த துணை ராணுவக் குழுவினருடன் இவரும் சேர்ந்து காலையில் வாகரைப் பகுதியை வந்தடைந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை நடந்த மோதல்களில் புலிகள் தரப்பிலும், துணை ராணுவக் குழு தரப்பிலும் மொத்தமாக எட்டுப்பேர் மரணமடைந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. காயப்பட்ட துணைராணுவக்குழுவினரில் 7 பேர் வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதில் இருவர் மரணிக்க, மீதிப்பேரை கருணா குழு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ராணுவத்தினரின் உதவியுடன் கொண்டுசென்றதாகவும் வாழைச்சேனை வைத்தியசாலை அதிகாரிகள் கூறினர். இதேவேளை வாகரைப்பகுதியில் நடந்த மோதல்களில் காயப்பட்ட 5 பெண்கள் அடங்கலாக 8 துணை ராணுவக்குழுவினர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.
  3. லெப்ரினன்ட் புகழினி புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் "லொட லொட" என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு "தெண்டித் தெண்டி"சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள்.எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்....பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவான குள்ளமான உருவத்தை உடையவள்.இதனால் அவள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட ஏதாவது ஒரு புட்டியான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள். எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.அம்மா,அப்பா,தம்பி,அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது.அவளது சொந்தப் பெயர் மேரி கொன்ஸ்ரலின்.வீட்டில் ஒரேயொரு பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.அவளது சொந்த இடம் வலிகாமப் பகுதியில் சில்லாலை என்ற கிராமம்.அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதின் காரணத்தினால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. 1994 க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தது.வலிகாமப் பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த போது எமது போராட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்,யுவதிகள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் "வண்ணக் கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்....இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்....பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்"என்று 1995ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.அங்கு அவள் மகளிரணியின் 30ஆவது பயிற்சிப் பாசறையில் புகழினி எனும் நாமத்துடன் போராளியாக புடம் போடப்பட்டாள். பின்பு 1995ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து பால்மா கணக்காய்வு அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற் கொண்டாள்.அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக் கொண்டாள். தற்காப்புக்கலையிலும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றவள்.அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம்(break dance)ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் முறிப்பு நடனமாடி அவள் தான் கதாநாயகியாக திகழ்வாள்.மேலும் அவள் வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது. 1996ஆம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா கணக்காய்வு அணியில் கணக்காய்வு பணி மேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.அதில் சிலவற்றை அவளது ஞாபகமாக பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன். 1996ஆம் ஆண்டு வன்னிக்கு வந்த புதுசில நானும் புகழினியும் மருந்து பால்மா கணக்காய்வு அணியில் தான் கணக்காய்வை மேற் கொண்டோம். எங்களுக்கு பணிக்குச் செல்வதற்கு சைக்கிள் கூட இல்லை.நானும் புகழினியும் சைக்கிள் இல்லாத காரணத்தினால் நடராசாவில்(நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் வைத்து தான் கூப்பிடுவோம்.புகழினிக்கு "பேணி"தான் பட்டப் பெயர்.(எந்த நேரமும் "லொட லொட" என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு "பேணி" என்ற பட்டப் பெயர் உருவானது).என்னைப் பேணி "அரியத்தார்" என்று தான் கூப்பிடுவாள்.பின்பு பணிக்குச் செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு சைக்கிள் என்ற ரீதியில் கொடுக்கப்பட்டது.அதில் நானும் பேணியும்(புகழினி)தான் ஒன்றாக பணிக்குச் செல்வோம்.வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்வேன். நாங்கள் பணி முடித்து விட்டு மதிய உணவு நேர இடை வேளைக்கு முகாமில் சென்றுதான் சாப்பிடுவோம்.அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவிற பஞ்சியில நானும் புகழினியும் ஒரு தட்டில தான் உணவு உண்ணுகின்றனாங்கள்.சாப்பிட்ட தட்டைக் கழுவோணும் என்ற கள்ளத்தில நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளி விட்டு ஓடி விடுவேன்.அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப் போட்டு வருவாள்.அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலே எனக்கு பெரிய ஒரு சந்தோசமாக இருக்கும். 1997ஆம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகுதி கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப் பட்டோம்.எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள்.அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவமும்,இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள். அதனாலேயே அவளை எந்நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுது போக்கு. உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.எங்கள் முகாம் முற்றத்திலே பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தூரம் மட்டும் என்ன நடந்தாலும் தெரியும்.அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேல ஏறி அமைதியாக இருந்து படிக்கிறம் என்று கதை விட்டு மாமரத்துக்கு மேல ஏறி இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு படிப்பதுண்டு.புகழினிக்கு மாமரத்தில எங்களோட சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க ஆசை....ஆனால் ஏறத் தெரியாது.அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளி விட்டு ஒரு மாதிரி ஏற்றிப் போடுவோம். மேலேயிருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில இருக்கிற மாம்பிஞ்சுகளால றோட்டால மோட்டார் சைக்கிளில போற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று விட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவினம். ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்கு பார்த்து எறிய தெரியாது.அவள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாம்பிஞ்சால எறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால சைக்கிளிலே வந்த அப்பு மேல பட்டு அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால எறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நான்கு பேரும் நூறு தோப்புக் கரணம் போட்டதை இப்பவும் மறக்க முடியாது. புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்.நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.எங்களது முகாமில் இருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது சாப்பிடுவதற்கு நிறைய உணவுப் பொருட்கள் கொண்டு வந்து தருவதுண்டு.அதை தமா அன்ரா தான்(ஒரு அக்காவின் பட்டப் பெயர் தான் தமா அன்ரா)எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் ( இலாச்சி) பதுக்கி வைப்பார்.அதில் கடைசி இலாச்சிக்கு மட்டும் தான் பூட்டு உள்ளது.மற்றைய இரண்டு இலாச்சிகளுக்கும் பூட்டு இல்லை.தமா அன்ரா கடைசி இலாச்சியில் வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லாத மேல் இலாச்சியைக் கழட்டிப் போட்டு கீழ் இலாச்சியில் உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.புகழினியை இதுக்கு கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்.சாப்பிட்டால் பிறகு தமா அன்ராவிடம் நல்ல கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு.(எங்களுக்கு எவ்வளவு கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விசயத்தில சொரணை வராது). எங்கட முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரமும் உண்டு.அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு.எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில தான் இருக்கிறவர்.அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழம் காய்த்து இருக்கிறது என்று கண்காணிச்சுக் கொண்டு தான் இருப்பார்.எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்.ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவிப் போட்டு அந்த பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சாப்பிடுவதுண்டு.இந்தப் பலாப்பழம் பிடுங்குகின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட இரவு நேரக்காவற்கடமை நேரத்தில் தான் நிகழும். மற்ற குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில இருக்கிற அலாதிப் பிரியத்தில இதுக்கு மட்டும் எங்களோட கூட்டுச் சேருவாள்.பலாப்பழம் ஏறிப் பிடுங்கவோ வெட்டவோ வரமாட்டாள்...நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுக் களவாணிகளை(முகாமில இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை...பல விசுவாசக்குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக் கொடுத்து விடுவினம் என்ற பயம்)நித்திரையில் இருந்து எழுப்பிக் கூட்டி வந்து அவைக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள். இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டு பலாச்சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்கார அக்கா முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பின கதையை இப்பவும் மறக்க முடியாது.(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விசயங்களில எங்களுக்குத் தண்டனை தருவது இல்லை).இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப் பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத் தான் வாழ்ந்து வந்தார்கள்.பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால் புகழினியின் அப்பாவிற்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குக் கூடக் கஷ்டப்பட்டார்கள்.புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததாலே யோசித்து யோசித்து இருதய நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பீடிக்கப் பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.அப்பா தான் ஓலைப் பாய்,பெட்டி இழைத்து விற்றுபிழைப்பு நடத்தி வந்தார்கள்.புகழினியின் தம்பியோ மிகவும் சிறிய பையன்.அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்குச் செல்லும்போது புகழினியின் அம்மா"என்ரை மகள் வீட்டை இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களைப் பார்த்திருக்கலாம் தானே" என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.ஆனால் புகழினியோ "வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்குத் தேவை தானே"உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே என்று சொல்லி சிரித்து சமாளித்து விடுவாள். புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக(album) வைத்து இருந்தாள்.சில போராளிகள் வீட்டில "அம்மாவாணை "என்று சத்தியம் செய்வதைப் போல இயக்கத்திலே "அண்ணையாணை "என்று கதைப்பதுண்டு.அது புகழினிக்குப் பிடிக்காது.சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதையுங்கோ என்பாள். எங்களின் பொறுப்பாளர் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளைச் சண்டைக் களங்களுக்கு அனுப்புவதில்லை.1999ஆம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப் பகுதிக்குச் சண்டைக் களத்திற்குச் சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அவரோடு சண்டை பிடித்து சண்டைக் களத்துக்குச் சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்கு திரும்பினாள். பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக உடற் குறையுள்ள விழுப்புண்ணடைந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர்ப் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.எங்களுக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப் பணிகளுக்குச் சென்று வருவோம்.எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளி நிர்வாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த படியால் அவர்களுடன் சேர்ந்து பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் எம் மக்களின் காவற் தேவதையாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள். 29.05.2000அன்று எங்களுக்கு "புகழினி வீரச்சாவாம் " என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம்.பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிரியின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரமரணத்தைத் தழுவிக் கொண்டாள். பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி கேட்டு புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்குச் சென்றோம்.அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.அதைவிட புகழினியின் அப்பா என்னைப் பார்த்து "பிள்ளை உன்னோட தானே என்ரை மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய் என்ரை மகள் எங்கே"என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுததும் நானும் குற்றவுணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.பின்பு2002ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் வைத்தியசாலையில் நான் பணியை மேற்கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்திற்கு (சில்லாலைக்கு)செல்லப் போறோம் என்று சொல்லி விட்டு "என்ர பிள்ளையில்லாமல் போகப் போறேன் "என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது. எங்களின் அன்புத் தோழி புகழினியே.... உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க எந்நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள்,தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன் நடைப்பிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டு உயிர் இருந்தும் ஜடமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்பொழுதும் நீ என்னை "அரியத்தார்" என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன் கதை எழுதி வைக்கப்படும். -தமிழ்நிலா. மிக்க நன்றிகள்
  4. ஏரு பூட்டிபோவாயே அண்ணே சின்னண்ணே .......விவசாயிகளின் கஷ்ட நஷ்டம் கூறும் அருமையான பாடல்.....ஆடுவது நம்ம வஹீதா ரஹ்மான் சூப்பர்.......! 😂
  5. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004 கருணா துணை ராணுவக் குழு மீதான நடவடிக்கையினை புலிகளின் "ஜெயந்தன்" படைப்பிரிவே முன்னின்று நடத்தியது புலிகளின் மிகச்சிறந்த தாக்குதல் அணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணியே கருணா துணைராணுவக்குழுவுக்கெதிரான பல்முனைத் தாக்குதலை முன்னின்று நடத்தியது. ஜெயந்தன் படையணியின் நடவடிக்கைக்கெதிராக துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர்களான ஜிம் கெலித் தாத்தா மற்றும் ரொபேர்ட் ஆகியோர் நடத்த முயன்ற எதிர்த்தாக்குதல்களை புலிகள் மிகவும் வெற்றிகரமாக முறியடித்து, துணைராணுவக்குழுவுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். மட்டு - அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதி ரமேஷ் மற்றும் ஜெயந்தன் படையணியின் தளபதி ஜெயாந்தன் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெருகல் ஆற்றிலிருந்து மாங்கேணி வரையான நீண்ட கரையோரப் பகுதியினைக் கைப்பற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்துவருகிறது. தளபதி ரமேஷ் புலிகளின் விசேட படையணிகளின் திடீர் தாக்குதல்களில் நிலைகுலைந்துபோன துணைராணுவக் குழுவினர் குறைந்தது எட்டு 120 மி மீ மோட்டார்களுடன் முன்னேறிவந்த புலிகளின் அணிகளிடம் சரணடைந்தனர். ஆரம்பத்தில் கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட தளபதி பிரபாவேஇத்தாக்குதல்களில் பாலைச்சேனைப் பகுதியில் அமைக்கப்பட்ட புலிகளின் கட்டளை மையத்தினை வழிநடத்தினார். புலிகளின் ஜெயந்தன் படையணி பெரும்பாலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் போராளிகளைக் கொண்டே அமைக்கப்பட்டதென்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தாண்டிக்குளம் - ஓமந்தை நடவடிக்கைகளில் புலிகள் இலங்கை ராணுவத்தின் மிகப் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல் நடவடிகையான ஜெயசிக்குருவிற்கு எதிராக ஜெயந்தன் படையணி 1997 இலிருந்து 1999 வரை போரிட்டது. 1999 இறுதிப்பகுதியில் வன்னியின் தென்புறத்தே ஆக்கிரமித்து நிலைகொண்டிருந்த சிங்கள ராணுவத்தை தாக்கியழித்து, பின்வாங்கச் செய்ததில் ஜெயந்தன் படையணியே முன்னின்றது என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன், சிங்கள ராணுவத்தின் பெருந்தளங்களில் ஒன்றான ஆனையிறவுத் தளம் மீதான புலிகளின் வெற்றிகரமான தாக்குதலிலும் ஜெயந்தன் படையணி கணிசமான பங்கினைச் செலுத்தியிருந்தது. முன்னேறிவரும் புலிகளின் அணிகளுக்கெதிராக எதிர்த்தாக்குதல்களை உப்பாறு மற்றும் கண்டலடி , பனிச்சங்கேணிப் பகுதிகளூடாக நடத்த கருணா துணைராணுவக் குழு முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  6. நீங்களும்.. முயற்சி, செய்து பாருங்கள். 😜
  7. தினமும்... ஒரு முறையாவது, இதனைப் படியுங்கள்.
  8. திருப்புகழ்- துள்ளு மத வேட்கை கணையாலே ராகம் - ஹம்சானந்தி தாளம்- கண்டஐம்பை/ஆதி பாடியவர்கள்- சாரங்கம் இசை மன்ற மாணவிகள் செல்வி ஆரபி, செல்வி தாரணி உள்நாட்டு வெளிநாட்டு இந்து ஆலயங்கள், வடமாகாண கல்வி திணைக்களம், இந்து கலாசார அலுவகள் திணைக்களம் ஆகியோரின் ஆதரவுடன் இந்து மாணவர் சேவாலயத்தினர் இந்த ஒலிப்பதிவை உருவாக்கி உள்ளனர். யாழ் கல்லூரி மாணவிகளின் இசைத் திறமையை உலகிற்கு எடுத்து காட்ட திருப்புகழ் துள்ளு மத வேட்கை கணையாலே பாடலிற்கான நல்லூரான் இணையக் குழுவின் வீடியோ தயாரிப்பு அரசனும் ஆண்டியும்
  9. நெஞ்சத்திலே தூய்மை உண்டோ லேசான காரியம் உமக்கு அது
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 லாயிலாஹ இல்லல்லாஹ் நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை
  11. டீச்சர்: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற?.." மாணவன்: "கல்யாணம்.." டீச்சர் : "அது இல்ல.. நீ என்னவா ஆகா விரும்புற?.." மாணவன்: "புருஷன்.." டீச்சர் : "நோ நோ.. ஐ மீன், உனக்கு வாழ்கையில் என்ன கிடைக்கணும் நீ எதிர் பாக்குற?.." மாணவன்: "பொண்டாட்டி.." டீச்சர்: "ஐயோ.. இல்ல பா.. உங்க பெற்றோருக்கு என்ன பண்ண போற?.." மாணவன்: "மருமகள் தேடுவேன்.." டீச்சர்: "ஸ்டுபிட், உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பர்கிறாரு?.." மாணவன்: "பேர குழந்தை..." டீச்சர்: "ஐயோ கடவுளே.. உன் வாழ்கை லட்சியம் என்ன?.." மாணவன்: “அப்பா ஆகா போறேன்..” டீச்சர் இன்னும் கோமாவிலிருந்து வெளிய வரலே..!!!!!!!
  12. சூப்பர் ஐடியா ....... தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் தந்தை.....! 👍
  13. வெத்தலை போட்ட பத்தினிப்பொண்ணு சுத்துது முன்னாலே......செம, அவ்வை சண்முகிக்கு அக்கா .....! 😂
  14. நல்லூர் உற்சவகாலம் 2013 ஐ முன்னிட்டு "திருப்பதி என்டடைன்மன்ட்" வழங்கும் சிறப்புப்பாடல்...............!!! பாடலாசிரியர் - தினேஸ் ஏகாம்பரம் இசை - சுதர்சன் பாடியவர்கள் - யோகேஸ் பானுகா தயாரிப்பு - தினேஸ் ஏகாம்பரம்.
  15. இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
  16. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து
  17. விசேஷமான சில நட்புகள்......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.