Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    16
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19167
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23926
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/27/20 in all areas

  1. இரு பகுதியையும் இணைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன..😎
  2. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  3. ஆவி பறக்க பறக்கும் தோசை......அடுத்த இந்தியன் டீமுக்கு பீல்டர்கள் தயாராகி விட்டனர்......! 😂
  4. வாவ்...அருமை அருமை.....விஞ்ஞானமும் அறிவியலும் எவ்வளவு முன்னேறி விட்டது. அபாரம். என்ன ஒண்டு....கன சனத்துக்கு வேலையில்லை. சோத்துக்கே கஷ்டமாம்.😟
  5. இவர்கள் அங்கு வர முடியாது தலைவர் ட்ரம் எமக்கு மட்டும் (அமெரிக்கர்களுக்கு) அந்த உரிமையை தந்து இருக்கிறார் ... நாங்கள் போய் வீடு கட்டலாம் ... விளையாடலாம் தேன் நிலவு செய்யலாம் எமக்கு எல்லா உரிமையும் உண்டு In 2015, the Obama administration signed the U.S. Commercial Space Launch Competitiveness Act (CSLCA, or H.R. 2262) into law. This bill was intended to "facilitate a pro-growth environment for the developing commercial space industry" by making it legal for American companies and citizens to own and sell resources that they extract from asteroids and off-world locations (like the moon, Mars or beyond). On April 6th, the Trump administration took things a step further by signing an executive order that formally recognizes the rights of private interests to claim resources in space. https://phys.org/news/2020-04-trump-moon-asteroids.html
  6. கையோட ஒரு லாம்பையும் வாங்கி குடுத்திருக்கலாம் தோழர்.....15 நாட்களுக்கு பயன்படும்......! 😂
  7. மரம் :- பொண்டாட்டி அடிச்ச அடில... கழுத்து ஒரு பக்கமாத் திரும்பிடிச்சுன்னு எப்பிடி இவங்களுக்குப் புரிய வைப்பேன்.
  8. விரிசல் இல்லாமல் இணைத்தால் களம் போரடிக்கும் என்று சிறு விரிசல் வைத்து இணைக்கப்படுகிறது.....! 😂 கடலோடிகளால் காப்பாற்றப்படும் கடலாமை......கழிவுகள் கொட்டிய கழிவுகளால் நேர்ந்த பரிதாபம்.....! 👍
  9. லெப். கேணல் நிலவனின் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்த பொழுதான செயற்பாடுகள் டிசம்பர் 26, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து லெப். கேணல் நிலவன் / மாறனின் இம்ரான் – பாண்டியன் படையணியில் இருந்த பொழுதான செயற்பாடுகள். அல்பிரட் தங்கராசா டென்சில் டினஸ்கோ (டென்சில்) யாழ். புனித பத்திரியார் கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவன். அதற்கு முன்னர் வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க பாடசாலை, மற்றும் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றிருந்தான். இதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட ரிவிரெச இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து இரணைப்பாலையில் வசித்து வந்தான். அத்தருணத்தில் தேசம் விடுத்த அழைப்பினை ஏற்று தனது தாய் நாட்டிற்குரிய கடமையைச் செய்வதற்காக 14.02.2007 அன்று எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டிருக்கின்றான். அமைப்பின் சில தேவைகளின் பொருட்டு குறித்த ஒரு கடமைக்கு போராளிகள் உள்வாங்கப்பட்ட பொழுது இவனும் அக்கடமைக்கு தேரந்;தெடுக்கப்பட்டான். இம்ரான் பாண்டியன் படையணிக்கு தெரிவு செய்யப்பட்டான். கௌதமன் -02, இவனது ஆரம்ப பயிற்சி முகாம். ஏறக்குறைய 06 மாதங்கள் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த இவன் மாறன் என்ற பெயருடன் வெளியேறினான். அடிப்படைப் பயிற்சி முகாமைப் பொறுத்த வரை எந்தப் போராளிக்கும் அது ஒரு புது அனுபவமாகவே இருக்கும். மாறனும் இதற்கு விதிவிலக்கானவன் அல்ல. இருந்த போதிலும் இவன் நிற்கும் இடத்தில் ஒரு கூட்டமே இருக்கும். கடுமையான பயிற்சிகளைப் பெற்றும் சோர்வடைந்து ஓய்வாக இருக்கின்ற பொழுது இவன் கூறும் பகிடிகள், மற்றும் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பேச்சுக்கள் என்பவை போராளிகளுக்கு சோர்வைக் களைந்து புதுத் தென்பை ஊட்டும் சிரிப்பொலிகளால் அந்த இடத்தின் மௌனமே கலையும். எந்தப் போராளிக்கும் சுகயீனம் என்றால் தாயாக, தந்தையாக நின்று அப்போராளியை பராமரிப்பான். இவன் இயக்கத்தில் இணைவதற்கு முன், கிபிர் தாக்குதல் ஒன்றில் காலில் காயமடைந்து கொழும்புவரை சென்று சிகிச்சை பெற்று வந்த பொழுதிலும், பயிற்சியில் அதன் விளைவைக் காணமுடியாது. சாதாரண போராளிகள் போலவே பயிற்சியினை சிரித்துச் சிரித்தே செய்து முடிப்பான். அடிப்படைப் பயிற்சியினைப் பெற்றுக் கொண்ட இவர் சில இரகசிய கடமைகளை பொறுப்பேற்றுச்செய்தான். அதன் பின்னர் கனரக ஆயுதப் பயிற்சிகளைப் பெறுகின்றான். கனரக ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவன் 26.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையில் இத்தாவில் பகுதியிலும், 30.09.2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கையிலும் கண்டல் பகுதியிலும் 05.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியிலும், 09.10.2000 அன்று கிளாலிப் பகுதியிலும், 19.10.2000 அன்று மீண்டும் நாகர்கோயில் பகுதியிலும் எதிரியின் அரண்களை சிதைத்து தனது ஆயுதத்தால் எதிரியை சிதறடித்து ஓயாத அலைகள் -04 நடவடிக்கைக்கு பலம் சேர்ந்தான். இவன் தொடர்பாக தாக்குதலை வழிநடத்திய தளபதிகள் கூறும்பொழுது ‘சண்டை என்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது. சிம்பிளா நிப்பான்’ எனக் கூறினார்கள். சண்டை முடிவுற்றதும் பின்தள பணி சிலவற்றிற்காக எடுக்கப்பட்ட பொழுது தனது சில விண்ணப்பங்களை போராளிகளுடனும் பொறுப்பாளர்களுடனும் பகிர்ந்து கொண்டான். அதாவது கடற்புலிகள் அணிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையினை தெரியப்படுத்தினார். இதற்கு முன்னர் 27.01.2000 அன்று அண்ணைக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் ‘ அண்ணை நான் கடற்புலிகள் அணிக்குப் போக விரும்புறன். நான் கடற்கரை சார்ந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தனான். எங்கட சொந்தங்கள், உறவுகளை எல்லாம் நேவிக்காரன் சுட்டுத்தள்ளுகிறான். அவனுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். ஆகவே கடற்புலி படையணியில் எனது பணியைத் தொடர அனுமதியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டான். அதற்கான பதில் வருவதற்கு சிறு தாமதங்கள் ஏற்பட்ட பொழுது அடுத்தடுத்த மூன்று கடிதங்கள் அனுப்பினான். ‘அண்ணை கடற்புலியில் இருந்த எனது சித்தப்பாவான பாக்கி அண்ணையும் (லெப். கேணல் பாக்கி) வீரச்சாவடைந்துவிட்டார். அவரது பணியைத் தொடர என்னை அனுமதியுங்கோ’ இது அவரது மூன்றாவது கடிதம். இவனது மூன்றாவது கடிதத்திற்குரிய பதிலானது இவனை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது என்றே கூறவேண்டும். மச்சான் நான் கடற்புலிக்கு போறன்டா, அண்ணை ஒம் எண்டுட்டார். இருந்து பாரன், மாறன் ஆமியை ஒரு கை பார்த்துத்தான் திரும்பி வருவன்.’ இது அவனது இறுதி இம்ரான் பாண்டியன் படையணிப் போராளியாகக் கூறியது. அதன்பின்னர் தலைவரின் பணிப்பிற்கு அமைய, 2001.09ம் மாதம் இவர் கடற்புலி படையணிக்கு அனுப்பப்பட்டார். தகவல்: பா.சுடர்வண்ணன் பெ. மைந்தன் லெப்.கேணல் ராதா வான் காப்புப் படையணி. நிதித்துறை. தமிழீழ விடுதலைப் புலிகள். நன்றி: நீலக்கடலின் நெருப்பு நிலவு. https://thesakkatru.com/commander-nilavans-activities-while-in-the-imran-pandian-brigade/
  10. பெரிய பறவையை அலேக்காக பிடிக்கும் பெண்ணாம் பெரிய பைதன் பாம்பு......! 🐍
  11. மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இசையின் ஏழு சுவரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ – (2) இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இடயர்க்கு காட்சிதந்தாய் ஞானிகள் வணங்க நின்றாய் – (2) குடியினில் தவழ்ந்து வந்தாய் குவலயம் விளங்கச் செய்தாய் – (2) இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே ஏழ்மையில் பிறந்து வந்தாய் எளிமையை உடுத்தி நின்றாய் – (2) மனதிலே அமைதி தந்தாய் மனிதனாய் வாழச் செய்தாய் – (2) வடிவாய் வரமாய் பிறந்த மகனே வசந்தம் வழங்கும் செல்ல மகனே இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இசையின் ஏழு சுவரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ – (2) இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ – (2) இடையர்கள் தந்த காணிக்கை போல - Idaiyarkal thantha இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம் கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2) இயேசு பாலனே ஏற்றிடுமே நேச ராஜனே ஏற்றிடுமே (2) 1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க அடிமையின் தன்மையை எடுத்தவனே உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு... 2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து நிம்மதி தந்திட வந்தவனே வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு... எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்
  12. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 ஆது மகன் ஸத்தாது... குலவலிமை பெருவாழ்வு உலகம் இறைவனின் சந்தை மடம்
  13. குர்திஸ் விடுதலை இயக்கம் பி கே கே உருவான நாள் 11/27/1978 தமிழர் மாவீரர் நாளும் அதே தேதியில் அமைந்தது
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005 பிரேமினியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் கூறுபோட்டுக் கொன்றுதள்ளிய கறுனா குழு வெலிக்கந்தைப் பகுதியில் 24 ஆம் திகயிலும் சில நாட்களுக்குப் பின்னரும் கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட 10 தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உடபட மூவர் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதி ஏழு பேரினதும் கதிபற்றி தெரியாமலேயே இருந்துவந்தது. ஆனால், இக்கடத்தல் சம்பவத்தின் பின்னர் கருணா குழுவில் இயங்கிய ஒருவர் வழங்கிய தகவல்களின்படி அந்த ஊழியர்களுக்கு நடந்த கொடூரம் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் புலநாய்வுத்துறையினரால் இயக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட பிள்ளையான் என்றழைக்கப்பட்ட ஒருவனே இக்கடத்தல்களின் பின்னால் இருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் அரச படைகளின் கொலைக்குழுவாக இயங்கும் இவன் தலைமையிலான கூலிப்படையே இக்கடத்தல் கொடூரத்தில் ஈடுபட்டது. மட்டக்களப்பு வீரகேசரி நிருபர் நடேசன், பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலைகளுடன் நேரடியான தொடர்பினை பிள்ளையான் கொண்டிருக்கிறான். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பிற்கும் இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இடையிலான முக்கிய இணைப்பாக இவனே இருக்கிறான். அத்துடன் கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பமாக பல மில்லியன் ரூபாய்கள் அறவிடப்பட்ட நிகழ்வுகளிலும் இவனே தலைமைதாங்கிச் செயற்பட்டிருக்கிறான். தீவுச்சேனை எனும் கிராமம், பொலொன்னறுவை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. இப்பகுதியினை ஒட்டிய காட்டுப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு பல முகாம்களை அமைத்து வந்தது. இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து குறித்த தினத்தன்று முக்கிய செய்தியொன்று தொலைபேசி மூலம் வந்தது. அம்முகாமின் பொறுப்பாளனாக இருந்த சிந்துஜன் எனும் துணைராணுவக்குழு உறுப்பினன் தலைமையிலான கொலைக்குழுவிற்கு பிள்ளையானிடமிருந்து வந்த கட்டளையினையடுத்து சிந்துஜன் எனப்படும் பிரதீபன் தலைமையில் கடத்தல்க் குழு உருவாக்கப்பட்டது, இக்குழுவில் ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன் ஆகிய கொலைகாரர்களும் இருந்தனர். கடத்தப்பட்டவர்களின் மூன்று பெண்களை இக்கொலைக் குழுவின் புலநாய்வுக்குப் பொறுப்பான சீதா எனப்படு பிரதீப்பும் இன்னும் இருவரும் சேர்ந்து விசாரித்துவிட்டு விடுதலை செய்தார்கள். இந்த சீதாவே பிள்ளையானின் உதவியுடன் நத்தார் தினத்தன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கத்தை ஆலயத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றவன் என்பதும் குறிப்பிடத் தக்கது. தெல்லிப்பழையைச் சேர்ந்த கணேசலிங்கம், கிளிநொச்சியைச் சேர்ந்த தங்கராசா ஆகிய இரு ஊழியர்களை விசாரித்த சிந்துஜன் அவர்களை தலையில் சுட்டுக் கொன்றான். விடுவிக்கப்பட்ட நடேஸ்வரியும், சிவமதியும் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுக்கவேண்டிய தேவை இருந்தது. தமது கைதுபற்றி விடயம் தெரிவிக்க பொலீஸ் நிலையம் சென்ற இவர்களை பொலீஸ் வேண்டுமென்றே அலைக்கழித்துக்கொண்டிருந்தது. பின்னர் இவர்கள் கொழும்பிற்குச் சென்று மனித உரிமைகள் அமைப்பிடம் தமது முறையீட்டைப் பதிவுசெய்தார்கள். மறுநாள் இதே கொலைக் கும்பல் இன்னும் 15 கழக உறுப்பினர்களைக் கடத்திச் சென்று, விசாரணையின் பின்னர் 10 பேரை விடுதலை செய்தது. இக்கொலைக் குழுவால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்ட ஊழியர்களின் விபரங்கள், அருனேஸ்வரராஜா சதீஸ்வரன் கைலாயப்பிள்ளை ரவீந்திரன் சண்முகனாதன் சுஜேந்திரன் தம்பிராஜா வசந்தராஜன் பிரேமினி தனுஷ்கோடி நான்கு ஆண் ஊழியர்களை கடுமையாகச் சித்திரவதை செய்து விசாரித்த சிந்துஜன் எனும் கொலைகாரன் அவர்களைக் கொண்டே புதைகுழிகளை வெட்டுவித்தான். அவர்கள் தமக்கான குழிகளை வெட்டி முடிந்தவுடன் முழங்காலில் இருக்கவைக்கப்பட்டு அழுத மன்றாடிய நிலையிலேயே அவர்களை தலையில் சுட்டுக்கொன்று குழிக்குள் வீழ்த்தி மூடினார்கள். மீதியாக இருந்த பிரேமினிக்கு நடந்த கதியோ மிகவும் கோரமானது. தமிழ்ப்பெண்கள் மீது சிங்களப் பேரினவாத ராணுவ மிருகங்கள் நிகழ்த்தும் கொடூரத்திற்குச் சற்றும் குறையாத வகையில் கருணா குழு மிருகங்கள் நடந்துகொண்டன. முதலில் சிந்துஜன் எனும் மிருகத்தினாலும், பின்னர் அங்கிருந்த அனைத்து துணை ராணுவக்குழு மிருகங்களாலும் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பிரேமினியின் அரை உயிருடன் துடித்துக்கொண்ட உடலை அந்த மிருகங்கள் வாள்களால் கீலங்களாக வெட்டி அக்காட்டுப் பகுதியில் தூக்கியெறிந்தன. **********" https://www.tamilnet.com/img/publish/2007/03/TRO_release.pdf
  15. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005 ஐந்து தமிழர் புணர்வாழ்வுக் கழக உறுப்பினர்களைக் கடத்திச் சென்ற கருணா துணை ராணுவக்குழு மட்டக்களப்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் ஐவரை கருணா துணைராணுவக் குழு வெலிக்கந்தை ராணுவ முகாமுக்கருகில் வழிமறித்துக் கடத்திச் சென்றுள்ளதாக கழகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். கழகத்திற்குக் கிடைத்த தகவல்களின்படி வேலைநிமித்தம் வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தமது கழக உறுப்பினர்கள் ஐவர் வெலிக்கந்தை ராணுவ முகாமிற்கு மிக அருகில் மாலை 2 மணியளவில் வழிமறிக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டதாக தெரிகிறது. சுமார் 15 பேர் கொண்ட கழக ஊழியர்கள் பயணம் செய்த வாகனம் வெலிக்கந்தை ராணுவ முகாமில் பதியப்பட்டு, தனது பயணத்தைத் தொடர எத்தனித்தபோது, அவர்களைத் தொடர்ந்துவந்த வெள்ளைநிற வான் ஒன்றில் வந்த துணை ராணுவக்குழு வீதிக்குக் குறுக்காக அவர்களை வழிமறித்து, கழக வாகனத்திலிருந்த ஐவரை பலவந்தமாக தமது வாகனத்தில் ஏற்றி, ஏனையோரை அடித்துத் துன்புறுத்தி மீண்டும் மட்டக்களப்பிற்கே செல்லுமாறு கூறிவிட்டுச் சென்றிருக்கிறது. மட்டக்களப்பு - பொலொன்னறுவை வீத்யில் வெலிக்கந்தை ராணுவ முகாமுக்கு 100 மீட்டர் தொலைவிலேயே இந்தக் கடத்தல்ச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கழகத்தின் மட்டக்களப்பு தலைமை கணக்காய்வாளர் தனுஷ்கோடி பிரேமினி உட்பட மட்டக்களப்பின் பல நலன்புரி அமைப்புக்களில் செயற்பட்டுவரும் கணக்காய்வளர்களான சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராசா வசந்தராஜன், கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உட்பட இன்னும் புதிதாக கழகத்தில் இணைந்துகொண்டிருந்த செயற்பாட்டாளர்களே இப்பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். இக்கடத்தலினைத் தொடர்ந்து கண்காணிப்புக்குழுவினரிடமும், பல்வேறு மனிதவுரிமை அமைப்புக்களிடமும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் தனது முறைப்பாட்டினை முன்வைத்திருக்கும் கழகம், தனது ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், அவர்களின் இருப்பிடம் பற்றி அறியத்தருமாறும் கேட்டிருக்கிறது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அநாதைப் பிள்ளைகளின் வாழ்வு மற்றும் அவர்களின் அபிவிருத்தியில் ஈடுபட்டிருந்த தனது ஊழியர்களின் பாதுகாப்பினையும், அவர்களின் விடுவிப்பினையும் உறுதிசெய்து தருமாறும் கழகம் அரசினையும், காவல்த்துறையினரையும் கேட்டிருக்கிறது.
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 24, மார்கழி 2005 ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசேப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூத்த அங்கத்தவருமான ஜோசேப் பரராஜசிங்கம் ஞாயிறு அதிகாலை 1:20 மணிக்கு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை இரு ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டார். ஆலயத்தில் அவருக்கருகில் இருந்த அவரது துணைவியார் சுகுணம் பரராஜசிங்கம் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆலயத்திற்கு ஜோசேப் அவர்கள் இரவு 10:30 மணிக்கே வருகை தந்ததாகவும், திருப்பலிப் பூசை இரவு 11:30 மணிக்கு மட்டு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாலயம் மட்டக்களப்பு சென்ட்ரல் வீதியில் , நகர மத்தியில் அமைந்திருக்கிறது. கொல்லப்பட்ட ஜோசேப் பரராஜசிங்கத்திற்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். அன்னாரது படுகொலை தொடர்பாக புலிகள் வெளியிட்ட கண்டனம் வருமாறு, தமிழ்த் தேசியவாதியும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான திரு ஜோசேப் பரராஜசிங்கம் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம் சிங்கள புலநாய்வுத்துறையினராலும், துணை ராணுவக்குழுவினராலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டவேளை இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கருணா துணை ராணுவக் குழு உறுப்பினர்களாலும், ஈ பி டீ பீ உறுப்பினர்களாலும் மக்கள் பார்த்திருக்கச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மக்களின் சுதந்திரத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் பாடுபட்ட அவர், வழிபாட்டில் தேவநற்கருணையினைப் பெற்றுக்கொண்டு திரும்பும்போது துணைராணுவக் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தமிழ்மக்களின் அவலங்களை சர்வதேசத்தில் வெளிப்படுத்தியும், வடக்குக் கிழக்கில் மனிதவுரிமைகளுக்கான அமைப்பினை நிறுவிடவும் முயன்றுவந்த ஒரு மனிதரையே இலங்கைப் புலநாய்வுத்துறை துரோகிகளைக் கொண்டு சுட்டுக் கொன்றிருக்கிறது. இலங்கையின் ராணுவ புலநாய்வுத்துறைக்குள் செயற்படும் இனவாத சக்திகள் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகவும், மனிதவுரிமைக்காகவும் பாடுபட்ட ஒரு மனிதரைக் கொன்றிருக்கின்றன. நாம் இந்தப் படுகொலையினை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரின் குடும்பத்தாருக்கும் எமது அனுதாபத்தினைத் தெரிவிக்கின்றோம். .
  17. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2005 தமிழர் தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை நிராகரித்த ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமிழரின் தாயகக் கோபாட்டையும், சுயநிர்ணய உரிமையினை அடியோடு நிராகரிப்பதாகக் கூறியிருப்பதுடன் இனவாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜனதா விமுக்திப் பெரமுன ஆகியவற்றுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய மகிந்த சிந்தனையின் கீழேயே ஆட்சிசெய்யப்போவதாகவும் பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய முதலாவது உரையில் தெரிவித்தார். நடைமுறையில் இருக்கும் புலிகளுடனான சர்வதேச சமாதான ஒப்பந்த முயற்சிகளை முற்றாக மறுதலித்த அவர், புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். "பூர்வீகத் தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இனம் தனக்கான பகுதியை இந்த நாட்டிலிருந்து பிரித்து எடுத்துச் செல்வதை நான் ஒருபோதும் அனுமதியேன். நாட்டின் அரசியல் சட்டத்திற்கு அமைவாக எந்தவொரு இன மக்களும், நாட்டின் எப்பகுதியிலும் சுதந்திரமாகச் சென்று வாழவும், அனைத்து உரிமைகளை அனுபவிக்கும் கூடிய வகையில் இந்நாட்டினை அமைக்கப்போகிறேன்" என்று தெரிவித்தார். "தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றினை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு எனது அரசு முன்னுரிமை வழங்கும். போர் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலமே தீர்வினைப் பெற விரும்புகிறோம். அவ்வாறான பேச்சுவார்த்தைகள் சுலபமானதாகவோ அல்லது எளிமையானதாகவோ இருக்காதென்பது எனக்குத் தெரியும். ஆனால், வேறு வழியில்லை. புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்". "இனப்பிரச்சினைக்கான தீர்வு இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மூலமும், விருப்பங்களின் மூலமே கொண்டுவரப்படமுடியும் என்பதுடன், இந்தத் தீர்வு நாட்டின் பெரும்பான்மை மக்களினது ஆதரவினையும் பெற்றிருப்பது அவசியமானதாகும்". "எமது தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளாக பின்வருவனவற்றை நாம் முன்வைக்கிறோம்". "நிரந்தர அமைதியினை அடைவதற்கு, நாட்டின் அனைத்துத் மக்களினதும் விருப்பங்கள் அறியப்படல் அவசியம். அதனடிப்படையிலேயே எமது சமாதான நகர்வுகள் அமையப்பெறுகின்றன". "தற்போது நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீள்பரிசீலினை செய்யப்பட்டு மனிதவுரிமைகளைப் பேணுவதற்கும், சிறுவர்களைப் படையில் இணைப்பதைத் தடுப்பதற்கும், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஏற்றவகையில் மீள அமைக்கப்படுவதோடு, யுத்தநிறுத்த கண்காணிப்பினை தெளிவான , வெளிப்படையான முறையில் செய்யவிருக்கின்றோம்". "முன்னைய அரசாங்கத்தின் சமாதான நடவடிக்களின் தோல்வியென்பது அது வெறுமனே அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் மட்டுமே செய்துகொள்ளப்பட்டதனால் உருவானது. ஆகவே , நாம் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் இம்முயற்சிகளில் ஈடுபடுத்தவிருக்கிறோம்". "இம்முயற்சிகளில் பங்குபற்றுவதற்கு உண்மையானதும், வெளிப்படையானதுமான வரவேற்பினை நாம் இந்நாட்டின் எதிர்க்கட்சிக்கு விடுக்கிறோம். முஸ்லீம்களுக்கும் இப்பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படும். ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிக்கொண்டே இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இந்தியா, சர்வதேசம், ஐ நா ஆகிய அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் இப்பேச்சுவார்த்தைகளிலான பங்களிப்பென்பது சரியான முறையில் பாவிக்கப்படுவதோடு, அவர்களின் பங்களிப்பு பேச்சுவார்த்தையினை சரியான வழியில் நகர்த்திச் செல்ல பயன்படுத்தப்படும்". "பிரிக்கப்படாத இறமையுள்ள நாட்டிற்குள், எல்லாச் சமூகத்தினரும் சமமான வழியில் உரிமைகளை அனுபவிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பும், இறைமையும், பிராந்திய ஒருமைப்பாடும் பேணப்படும் வகையில் நாட்டின் கட்டுமாணங்கள் பலப்படுத்தப்படும்". "பூர்வீகத் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றைப் பாவித்து ஒரு இனம் எமது தாய்நாட்டைக் கூறுபோட அனுமதிக்காத அதேவேளை, அனைத்து மக்களும் நாட்டின் எப்பகுதியிலும், தமது வாழ்வை அமைத்திடவும், உரிமைகளை அனுபவிக்கவும் வழிசெய்யப்படும்". "இன்று நடைமுறையில் இருக்கும் புலிகளுடனான சுனாமி செயற்த்திட்டங்களுக்குப் பதிலாக, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்டமைப்பொன்றை மாகாணசபைகள், பிரதேச சபைகள், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உருவாக்குவோம்". "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்கட்டுமாணத்தை ஆரம்பிக்கும் அதேவேளை, இப்பகுதிகளில் இனரீதியிலான பாகுபாடின்றி அனைத்து மக்களையும் மீளக் குடியமர்த்துவோம்" என்றும் அவர் கூறினார்.
  18. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2005 இரு அரசியல்த்துறைப் போராளிகளைக் கொன்ற கருணா துணைராணுவக்குழு - அக்கரைப்பற்றில் சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லீம் கிராமமான பள்ளிக்குடியிருப்பு எனப்படும் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசியல்த்துறையில் பணியாற்றிவந்த இருபோராளிகளை கருணா துணை ராணுவக்குழு சுட்டுக் கொன்றது. சுரேஷ் மற்றும் வெள்ளை ஆகிய போராளிகள் உணவுப்பொருட்களை வாங்குவதற்காக இப்பகுதிக்கு வந்தபோது அவர்களைக் கடத்திச் சென்ற துணைராணுவக்குழு பின்னர் சுட்டுக்கொன்று, வீதியில் எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. பள்ளிக்குடியிருப்பு அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில், அக்கரைப்பற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.
  19. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, கார்த்திகை 2005 ராணுவத்துக்கும் கருணா துணைராணுவக் குழுவுக்குமான தொடர்பினை வெளிப்படுத்திய சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் 16 வயதிற்குக் குறைந்த இரு உறுப்பினர்களான சுரேஷ் கந்தசாமி, பாபு செல்வம் மற்றும் சண்முகம் சர்வராஜா ஆகிய கருணா குழு உறுப்பினர்கள் தமது காவல்நிலையினைக் கைவிட்டு விட்டு புலிகளிடம் வந்து சரணடைந்திருக்கிறார்கள். கடந்த திங்களன்று சோலையகம் கட்டிடத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த இவர்கள் பெருமளவு பணம் தமக்கு வழங்கப்பட்டும் என்கிற உறுதியின்படியே தாம் கருணா குழுவில் இணைந்துகொண்டதாகத் தெரிவித்தனர். இலங்கை ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பின்கீழ் தாம் செய்ற்படவேண்டியிருந்ததாகக் கூறும் இவர்கள், புலிகள் மீது தாக்குதல் நடத்த தம்மை நிர்ப்பந்தித்தபோதே, தமது நிலகளை விட்டு வெளியேறி சரணடைந்ததாகக் கூறினர். சுரேஷ் மற்றும் செல்வம் ஆகியோர் கருணா குழுவினரால் கராபொல எனும் கிராமத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பலவந்தமாக இணைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். காக்காச்சிவெட்டையில் அமைந்திருக்கும் இலங்கை ராணுவத்தின் முகாமில் பங்கர் ஒன்றிற்குள் தான் 6 நாட்கள்வரை கருணாவின் சகாவான ஜிம் கெலித் தாத்தாவினால் அடைத்துவைக்கப்பட்டதாக சுரேஷ் கூறினார். மாதச் சம்பளப் பணமாக 6000 ரூபாய்களை தர கருணா குழு தன்னிடம் உறுதியளித்ததாக அவர் மேலும் கூறினார். முகாமில் ராணுவமே தமக்குப் பயிற்சியளித்ததாகவும், புலிகளுக்கெதிரான தாக்குதல்கள் சிலவற்றில் தான் ஈடுபட்டதாகவும் கூறிய அவர், மண்டூர் பாலத்தின்மீது ஒருவரைக் கொல்வதற்காக தனக்கு பிஸ்ட்டல் வழங்கப்பட்டதாகவும், தான் அதனை எடுத்துக்கொண்டு புலிகளிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார். செல்வம் தன்னைப்பற்றிக் கூறுகையில், வாகனச் சாரதியான தன்னைக் கடத்திய கருணாகுழு தீவுச்சேனையில் அமைந்திருந்த துணை ராணுவ குழுவினர் முகாமிற்கு கொண்டுசென்றதாக கூறினார். அங்கிருந்த துணைராணுவக் குழுவினர் ஓட்டமாவடியில் உள்ள பல வியாபார நிலையங்களில் களவுகளில் ஈடுபட்டதாகவும் கூறினார். 6000 ருப்பாய்கள் சம்பளத்திற்கு தான் அமர்த்தப்பட்டதாகக் கூறும் செல்வம், குறைந்தது 7 தமிழ் இளைஞர்களைக் கடத்திவந்த கருணா குழு தீவுச்சேனை முகாமில் சுட்டுக் கொன்றதைத் தான் கண்ணுற்றதாகக் கூறினார். கட்டாரிலிருந்து வந்து துணைராணுவக்குழுவில் இணைந்துகொண்ட சண்முகம் சர்வராஜா கூறுகையில் கருணா குழுவின் மார்க்கனின் அறிவுரையின்படியே தான் துணைராணுவக்குழுவில் வந்து இணைந்ததாகக் கூறினார். கொக்கட்டிச்சோலையினைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் மேலும் கூறுகையில், தீவுச்சேனையில் சுமார் 65 துணைராணுவக்குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் தான்கூட மாதச் சம்பளத்திற்கே அவர்களுடன் சேர்ந்ததாகவும் கூறினார். சுமார் ஒருமாதகால பயிற்சியின்பின்னர் ராணுவத்தின் பவள் கவசவாகனமொன்றில் ஏற்றப்பட்ட சர்வராஜா வெலிக்கந்தைப் பகுதியில் அமைந்திருந்த ராணுவத்தளமான சேனைபுறத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அம்முகாமின் தளபதி கப்டன் முனசிங்கவுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டதாகவும் கூறினார். அவரின் கூற்றுப்படி தமக்குத் தேவையான உணவுமுதல், அறிவுருத்தல்கள், கட்டளைகள் வரை அனைத்துமே இந்த முகாம் அதிகாரியினாலேயே வழங்கப்பட்டு வந்ததாக அவர் மேலும் கூறினார்.
  20. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 7, கார்த்திகை 2005 ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிப்படியே கருணாவைப் பிரித்தெடுத்தோம் - நவீன் திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலிய மாவட்ட முக்கியஸ்த்தர் நவீன் திசானாயக்கா அண்மையில் கருணாவின் துரோகம் பற்றிக் கூறும்போது, "புலிகளை எதிர்த்துப் போராடவேண்டிய தேவை எமது ராணுவத்திற்கு இனிமேல் இருக்காது. பிரபாகரன் யுத்தத்தினை ஆரம்பித்தால் இந்தியாவும் அமெரிக்காவும் தமது படைகளை அனுப்பி புலிகளுடன் மோதுவார்கள்" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "ஐரோப்பிய நாடுகளுக்கு கருணா புலிகள் சார்பாக மேற்கொண்ட பயணங்களின்பொழுது, அவர் பிரபாகரனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் சூழ்நிலையினையும், சந்தர்ப்பங்களையும் நாம் உருவாக்கினோம்" என்றும் அவர் கூறினார். உதயன் நாளிதழில் வந்த நவீன் திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றின் விபரங்களின் அடிப்படியில் ரணில் விக்கிரமசிங்கவின் முற்றான ஆதரவு தன்னக்குக் கிடைத்தபின்னரே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து செல்லும் முடிவினை எடுத்ததாக நவீன் கூறினார். "இதானேலே பிரபாகரனினால் இன்னொரு யுத்தத்தை இப்போது நடத்த முடியாமல் இருக்கிறது" என்று அவர் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது கூறினார். அவர் மேலும் கூறும்போது "அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருடன் மிக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, புலிகளுடனான யுத்தத்தின்போது இந்நாடுகளின் அனைத்து உதவிகளையும் பெறுவதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளார். இவ்வாறான யுத்தம் ஒன்றில் இலங்கை ராணுவம் புலிகளுடன் மோதுவதற்கான எந்தத் தேவையும் இருக்காது, அவர்களே பார்த்துக்கொள்வார்கள்" என்றும் தெரிவித்தார்.
  21. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 06, புரட்டாதி 2005 மங்களம் மாஸ்ட்டர் தலைமையில் கருணா குழு புலிகள் மீது தாக்குதல் - 3 புலிகள் பலி செவ்வாய் காலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கட்டுமுறிவில் அமைந்திருந்த காவலரன் மீது கருணா குழு நடத்திய தாக்குதலில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதோடு மேலும் ஐவர் காயமடைந்ததாக புலிகள் அறிவித்திருக்கின்றனர். மேலும் வெலிக்கந்தைப் பகுதி ராணுவ அதிகாரியொருவர் கூறுகையில் கொல்லப்பட்ட புலிகளிடமிட்ருந்து ஒரு 40 மி மீ கிர்னேட் செலுத்தியும் நான்கு டி - 56 துப்பாக்கிகளும், 10 கிர்னேட்டுக்களும் கருணா குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர் இதுபற்றிக் கூறுகையில், கருணாவின் சகா மங்களம் மாஸ்ட்டர் எனப்படும் துணை ராணுவக்குழு உறுப்பினர் தலைமையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். கொல்லப்பட்ட போராளிகளின் விபரம், சுந்தரலிங்கம் சின்னராசா - இறால்குழி, பத்மநாதன் செந்தூரன் - பெரியகுளம், நிலாவெளி, நாகரட்ணம் சிவதர்சன் - கிளிவெட்டி. இத்தாக்குதல் இலங்கை ராணுவத்தினராலேயே நடத்தப்பட்டதாக முறையிட்டிருக்கும் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கனரக ஆயுதங்களைப் பாவித்ததாகவும், கட்டுமுறிவுப் பகுதியிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் சிங்கபுர முகாமிலிருந்து வந்த ராணுவ அணியே இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், கருணா துணை ராணுவக் குழுவினரை ராணுவம் புலிகள் மீதான தாக்குதல்களில் பினாமிகளாகப் பாவித்து வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அண்மையில் தீவுச்சேனைப் பகுதியில் ராணுவத்தின் ஆதரவுடன் கருணா துணைராணுவக்குழு முகாம்களை நிறுவிவருவதை சண்டே லீடம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததன் பின்னர், சில திங்களுக்கு முன்னர் அம்முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தில் பலரைக் கொன்றதுடன், மங்களம் மாஸ்ட்டர் எனும் துணை ராணுவக்குழு உறுப்பினரும் காயப்பட்டதாக செய்திகள் வந்தநிலையில், தற்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு - வெலிகந்தை நெடுஞ்சாலையின் 60 கிலோமீட்டர் பகுதியில் குறைந்தது 16 ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
  22. ரவை தோசைக்கு மாவு ஊற்றும் முறை .👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.