Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88006
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/01/21 in all areas

  1. இதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன் கனக்க பிளாஸ்டிக் சாமனுக்கள் இருக்கு உடைச்சு கிடைச்சு போடாதீங்கோ
  2. பழம் நீ யப்பா ஞான பழம் நீ .....யப்பப்பா https://fb.watch/3mHD_clSZp/
  3. இது தான்.... தாம்பத்யம்.
  4. வைட் ஹவுஸ் பிளைட்டில் வந்திருந்தால் ஏதோ வெய்ட்டாக உங்களுக்கும் கிடைக்கப் போகுதுபோல .....! 😂
  5. வணக்கம் வாத்தியார்......! பெண் : கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா ஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா அருகம்புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா இவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா பெண் : வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே ஆண் : தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே பெண் : ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும் காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா......! ---கருப்பான கையாலே---
  6. மாமாவும்... மருமகனும்.
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  8. விகாரைகளை நாட்டின் எந்த பகுதியிலும் அமைக்கலாம்! வட, கிழக்கில் அமைக்க முடியாது என எவரும் கூற முடியாது! அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கெக்கட்டம்!
  9. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10 வைகாசி 2008 பரவலான வன்முறைகள், இறுதிநேர கள்ளவாக்குகள் உட்பட பல முறைகேடுகளுடன் முடிவிற்கு வந்த கிழக்கின் மாகாணசபைத் தேர்தல் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல வாக்குச் சாவடிகளில் இறுதி மணித்தியாலங்களில் அத்துமீறிப் பிரவேசித்த பிள்ளையான் கொலைக்குழுக் கூலிகள் வாக்குப் பெட்டிகளை அபகரித்ததோடு பலநூற்றுக்கணக்கான போலிவாக்குகளை அப்பெட்டிகளில் நிறைத்ததாக தேர்தல் கண்காணிப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் பகுதிகளில் சுமார் 45 வீதமாகக் காணப்பட்ட வாக்குப்பதிவு சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் சுமார் 55 இலிருந்து 60 வீதம்வரையில் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் கால வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான வன்முறைகள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை ( 64 வன்முறைச் சம்பவங்கள் மட்டக்களப்பில் மட்டும்) பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த அமைப்புக் கூறுகையில் போலியான வாக்குப்பதிவு நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்றதாகவும், தமது முன்னிலையில் குறைந்தது 22 தடவைகளாவது பிள்ளையான் கொலைக்குழுவினர் இதனைப் புரிந்ததாகவும் கூறியிருக்கின்றனர். பிள்ளையான் கொலைக்குழுவினரின் அடாவடித்தனம் அதிகம் காணப்பட்ட பகுதிகளாக வாழைச்சேனை, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், பொத்துவில், திரியாய் ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மீள் வாக்குப்பதிவினை நடத்துமாறு இவ்வமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் குறைந்தது 13 வாக்குச் சாவடிகள் பிள்ளையான் கொலைக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு 12 - 13 வயதுச் சிறுவர்கள் உட்பட பலர் வாக்களிப்பில் கலந்துகொண்டதாகவும், பலநூற்றுக்கணக்கான போலிவாக்குகள் இக்குழுவினரால் இடப்பட்டதை தாம் நேரில் பார்த்ததாகவும் இவ்வமைப்பு தெரிவித்திருக்கிறது. பொலீஸார் எவரும் சமூகமளித்திருக்காத இவ்வாக்குச் சாவடிகளில் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களே வாக்குச் சாவடியினை நடத்தியதை தாம் கண்டதாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். பொத்துவில் பகுதியில் பிள்ளையான் கொலைக்குழுவினரால ஆக்கிரமிக்கப்பட்ட வாக்குச் சாவடி விபரங்கள், 42 கோரைகலப்பு ஷக்தி வித்தியாலயம், விநாயகபுரம் 48 ஏ கே கல்லியந்தீவு வடிவேல் வித்தியாலயம், திருக்கோவில் 4 50 ஏ கே காஞ்சிரங்குடா அரசு தமிழ்க் கலவன் பாடசாலை, தம்பிலுவில் 51 ஏ கே தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், தம்பிலுவில், அறை 1 52 ஏ கே தம்பிலுவில் மத்திய கல்லூரி, தம்பிலுவில் 53 ஏ கே தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், அறை 2 54 ஏ கே தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம், தம்பிலுவில் 70 ஏ கே ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம், ஆலையடிவேம்பு 71 ஏ கே சிறி ராமக்கிரிஷ்ணா மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று, அறை 1 72 ஏ கே சிறி ராமக்கிரிஷ்ணா மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று, அறை 2 73 ஏ கே அக்கரைப்பற்று ராமகிரிஷ்ண மிஷன் பாடசாலை, அக்கரைப்பற்று 74 ஏ கே அக்கரைப்பற்று அஸ் சிபாயா வித்தியாலயம், ஜமத் அலிம் நகர்
  10. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, வைகாசி 2008 படுவான்கரையில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களிடம் கட்டாய ஆட்சேர்ப்பினை நடத்தும் பிள்ளையான் கொலைக்குழு படுவான்கரையில் அண்மையில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களிலிருந்து வீட்டிற்கு தலா ஒருவரை தமது கொலைக்குழுவில் இணைக்கும் செயற்பாடுகளில் பிள்ளையான் குழு இறங்கியிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மையில் நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் பிள்ளையான் கொலைக்குழு சார்பில் போட்டியிட்டு வென்ற கூலிகள் துப்பாக்கி முனையில் இவ்வாறான கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் உள்ளூராட்சிச்சபை ஆயுததாரிகள் தம்முடன் இணையாதவிடத்து ஒவ்வொரு குடும்பமும் தலா ஒரு லட்சம் ரூபாய்களைக் கப்பமாகத் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் மட்டக்களப்பு மாவட்டத்தினைவிட்டு உடனடியாக வெளியேற்றப்படுவீர்கள் என்றும் மீளக்குடியமர்ந்த மக்களை மிரட்டிவருகின்றனர். மேலும் வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தமது குழுவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் வற்புறுத்திவரும் இக்கொலைக்குழுவினர், அவ்வாறு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்றும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக பொலீஸாரிடம் பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லையென்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, வைகாசி 2008 துணை ராணுவக்குழுத் தலைவன் கருணா சிறையிலிருந்து விடுதலை, ஆனாலும் பிரித்தானிய குடிவரவுச் சட்ட அதிகாரங்களின் அடிப்படையில் தடுத்துவைப்பு - பிரித்தானியா புலிகளின் தலைமைக்குத் துரோகம் இழைத்து சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து பிரித்தானியாவில் புக முயன்றார் என்கிற குற்றச்சாட்டில் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. கடந்த வியாழனன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முரளீதரன் தொடர்ந்தும் குடிவரவு அதிகாரத்தின் தடுத்துவைக்கப்பட்டுவருவதாக கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது. கடந்த தை மாதம் போலியான பெயரினைப் பாவித்து பிரித்தானியாவுக்குள் நுழைந்ததற்காக கைதுசெய்யப்பட்டு 9 மாதகாலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கருணா தனக்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து வழங்கியது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவே என்று வழக்கில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 8, வைகாசி 2008 கொலைக்குழு தலைவன் பிள்ளையானின் துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்து தூவிய இலங்கை விமானப்படை. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கொலைக்குழுத் தலைவன் பிள்ளையானின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்திகள் கிழக்கின் பலவிடங்களிலும் தூவிச்சென்றதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்திருக்கிறது. புலியின் முகத்தினை இலச்சினையாகக் கொண்ட பல லட்சம் இவ்வாறான துண்டுப் பிரசுரங்கள் கொழும்பில் அரச அச்சகத்தில் அச்சிடப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் புதன்கிழமை நள்ளிரவு முடிவடைந்த பின்னரும் கூட, வியாழன் அதிகாலைவரை விமானப்படை வானூர்திகள் இவற்றினைத் தூவியதாக முறைப்பாடு மேலும் தெரிவிக்கிறது. கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை நேரடியாகச் சென்று மிரட்டிய பிள்ளையான் கொலைக்குழு, அவரைத் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அச்சுருத்தியிருந்த நிலையில் அரசின் துணையுடன் விமானப்படை உலங்குவானூர்திகளை பிள்ளையான் தனது பிரச்சாரத்திற்குப் பாவித்துவருவது இத்தேர்தலில் தமது கொலைக்குழுவின் தலைவன் எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்பதில் ஆளும் கட்சி உறுதியாக இருப்பது தெரிகிறது என்று கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  13. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, வைகாசி 2008 "எமக்கு வாக்களிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திப்பீர்கள்" - களுவாஞ்சிக்குடி வாக்காளர்களை அச்சுருத்திய பிள்ளையான் கொலைக்குழு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியின் பிரதான வேட்பாளரான கொலைக்குழு முக்கியஸ்த்தர் பிள்ளையானுக்கு வாக்களிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திர்ப்பீர்கள் என்று களுவாஞ்சிக்குடி மக்களுக்கு பகிரங்க மிரட்டலினை பிள்ளையான் கொலைக்குழுவினர் இன்று விடுத்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இப்பகுதிமக்கள் தேர்தலில் அதிக ஈடுபாடு காட்டாது விலகியிருந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய இக்கொலைக்குழுவினர், இம்முறை தேர்தல்களில் இதே நிலைப்பாடினை எடுக்க விரும்பினால் அது தமது தலைமையினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கும் என்றும், மக்கள் அவ்வாறு நடந்துகொண்டால் பாரதூரமான விளைவுகளை உங்களுக்குப் பரிசாக வழங்குவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வெறும் 48 வீதமான வாக்குகளே இப்பகுதியில் பதியப்பட்டதாகவும், இவ்வாறு பதியப்பட்ட வாக்குகளில் குறைந்தது 13 வீதமான வாக்குகளை மக்கள் செல்லுபடியற்றதாக்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  14. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, வைகாசி 2008 இலக்கத்தகடற்ற வாகனங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிள்ளையான் கொலைக்குழு - சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் முறைப்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபே (CAFFE) அமைப்பு இலங்கை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ள உத்தியோகபூர்வ முறைப்பாட்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான வேட்பாளரான கொலைக்குழு முக்கியஸ்த்தர் பிள்ளையானும், அவரது ஆதரவாளர்களும் இலக்கத்தகடற்ற வாகனங்களை தமது தேர்தல் முறைகேடுகளுக்காக பாவித்துவருவதாகத் தெரிவித்திருக்கின்றனர். மக்கள் தொடர்ச்சியாக இதுபற்றி பொலீஸாரிடம் முறையிட்டபோதும்கூட, மிகவும் வெளிப்படையாக பிள்ளையான் கொலைக்குழுவினர் இவ்வாறான இலக்கத்தகடற்ற வாகனங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் உட்பட பல தேர்தல் தில்லுமுள்ளுகளில் ஈடுபட்டு வருவதாக இவ்வமைப்பினர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இந்தச் சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் தலைவரான கீர்த்தி தென்னக்கோன் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், "அரசுக்குச் சார்பான ஆயுதக் குழுவொன்று இவ்வாறான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதானது இத்தேர்தல்கள் பற்றிய கடுமையான சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான பல திணைக்கள வாகனங்களும், அலுவலகங்களும் அரசுக்குச் சார்பான குழுவொன்றின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் உட்பட ஏனைய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
  15. இஞ்சி தேசிக்காய் ரசம்......வாரத்தில் ஒருமுறையாகிலும் ரசம் சாப்பிட்டால் உடலுக்குள் அழுக்கு தங்காது.....! 👍 (ரசம் காரசாரமாய் இருக்க வேண்டும். குடித்ததும் மூக்கால் ஒழுக வேண்டும். மூன்று மணித்தியாலத்தில் கொல்லைக்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதுதான் சிறந்த ரசம்). 😂
  16. சரசராணி கல்யாணி சங்கீத ஞானி வாணி மதிவதனி ..... எம்.ஜி.ஆர் & பானுமதி அழகோ அழகு......! 💞
  17. முழுமதி அவளது முகமாகும்
  18. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ......! 👌
  19. அட நடிகர் கமலை ஆரோ இழுத்துவந்து பூட்டி ஏர் ஓடுறாங்கள் என்று நினைத்துவிட்டேன்.
  20. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3, புரட்டாதி 2007 முன்னாள் துணைப்படையுறுப்பினரைக் கொன்ற கருணா துணைப்படைக் கூலிகள் வவுணதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாப்புல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணிக்கு கருணா துணைப்படைக் குழுவிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரை கருணா துணைப்படைக் கூலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவரின் வீட்டிற்குச் சென்ற துணைப்படைக் கூலிகள் அவரை விசாரிக்கவேண்டும் என்று பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற முயன்றதாகவும், அவர் பிடிவாதமாக மறுக்கவே தலையில் சுட்டுக் கொன்றதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி கருணா துணைப்படைக் குழுவில் இணைந்து கொண்டவர் என்றும், குழுவின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினையடுத்து துணைப்படையிலிருந்து விலகி பொதுவாழ்க்கையில் இணைந்தவர் என்றும், திருமணமாகி சில நாட்களிலேயே இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் தெரிகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.