துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2008
பங்குடாவெளி உள்வீட்டுக் கொலைகளையடுத்து கடத்தப்பட்ட உறுப்பினர்களின் உறவினர்கள்
கடந்த வியாழன் இரவு பங்குடாவெளியில் அமைந்திருந்த துணைராணுவக்குழு முகாமில் நடந்த உட்கொலைகளைகள் மற்றும் 7 பேரின் தலைமறைவினையடுத்து, இவ்வாறு சகாக்களைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ள 7 பேரின் உறவினர்கள் 9 பேரை துணை ராணுவக் குழு கடத்திச் சென்றிருக்கிறது.
இந்தக் கடத்தலினையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், கடத்தப்பட்டவர்களின் 3 சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துணைராணுவக்குழு முகாமில் நடந்த உட்கொலைகளையடுத்து அப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட துணைராணுவக் குழுவும் விசேட அதிரடிப்படையுமே சின்னக் கொலனி எனப்படும் பகுதியில் இந்த உறவினர்களைப் பலவந்தமாகத் தமது வெள்ளை வான்களில் ஏற்றிச்சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட 9 அப்பாவிகளினது விபரங்கள்,
பாலப்போடி செங்கமலம் (40), சிவலிங்கம் விமலதேவி (22), லிங்கேஸ்வரன் ஜனூபா (10), லிங்கேஸ்வரன் ஜனுராஜன் (8), செல்வராஜா தேவராஜா ( 42), முத்தைய்யா ராசாத்தி ( 40), தேவராசா குமார் (25), தேவராசா சுமன் (14), தேவராசா சுமேந்திரன் (17)