Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88007
    Posts
  2. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    11531
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/26/21 in all areas

  1. மாலதி அதிகாலை விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும். ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட தயாரானாள் நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும் முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும் அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள் வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல் வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது................. தன் பெற்றவரை மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண விவசாயக் குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர் இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின் பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் . வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும் கொஞ்சம் கட்டவேண்டும்......... வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில் தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் வருவாள் என்று பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது . ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை தீர்க்க வந்த இன்னொரு) மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள். மாமி மருமகள் என்றாலும் வேற்றுமை பாராட்டுவதில்லை . .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா..... சில குடும்பங்களில் பெண்ணுக்கு பெண்களால் தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால் போதும் தனது செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..
  2. நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮 அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣 பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽 பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.
  3. பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
  4. தள்ளாடும் வயது வருமுன்பு தனக்கென சேமித்து கொள்; தனித்து விடப்படடாலும் , தளராமல், தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்.
  5. முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை. முடியுமா? என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை
  6. உங்கள் கதை அது நடந்த இடம் அங்கு எம்மவரின் எல்லைகள் அதை தாண்டமுடியாத எம் வளர்ப்பு அத்தனையும் அந்த ஊரவனாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது? ஆனாலும் உங்களை தூண்டி விடமுடியாதபடி அனுபவங்களும் வயசும் தடுத்தன. ஒரு முறை எனது 3வது மகன் பிறந்திருந்தபோது என்னை விரும்பிய ஒருவர் எனது வீட்டுக்கு வந்திருந்தார். இந்த கதை கொஞ்சம் எனது மனைவிக்கும் தெரியும் என்பதால் அவர் எம்மை தனியே பேச வழி விட்டார். மகனை காட்டமாட்டீர்களா எனக்கேட்டபோது அடுத்த அறைக்குள் தொட்டிலில் படுத்திருந்த அவனைக் காட்டினேன். தொட்டிலில் வைத்திருந்த என் கைமீது அவர் கை வைத்தார். நான் திரும்பி பார்த்தபோது அவர் என்னையும் மகனையும் மாறி மாறி பார்த்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன. அந்த கண்கள் ஆயிரம் கதைகளையும் விரக்தி களையும் சொல்லின. இன்றுவரை அந்த கலங்கிய கண்களை மீண்டும் பார்க்கும் சக்தி எனக்கில்லை. நன்றி அண்ணா பழைய ஞாபகங்களை மீண்டும் மீண்டும்??? அவை சுவையான சுமைகளாகவே இருக்கட்டும்.
  7. பக்கத்து வெறும் காணிக்குள் குப்பை கொட்டும் சனத்தை பார்த்திருக்கன் இது வேறை டிசைன் ஆக இருக்கு .
  8. பகவானே... இதென்ன, மீராவுக்கு வந்த சோதனை. 🤣
  9. சிரிப்பான தண்டனை உதைகள் .......! 🤣
  10. ஒரு சூப்பரான சோயா குழம்பு........! இது பாராட்டு மாதிரி தெரியேல்ல தோழர்..... வீட்டில சும்மாதானே இருக்கிறாய் செய்து பார் என்று சொல்வதுபோல் என் மைண்ட் வாய்ஸ் சொல்லுது.......! 😂
  11. நல்ல கதை சகோதரி.........! 👍 பி.கு: மாலதியும் மாமியாரும் தாயும் மகளுமாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு சண்டை கூட போடாமல் இருப்பது ரொம்ப அநியாயம்.....தாய் தந்தை வேண்டாமென்று ஓடி வந்த மாலதி அம்மாவுடன் எவ்வளவு சண்டை பிடித்திருப்பாள்......! 😥
  12. பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழிக்க உதவினேன், இன்று என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் - கருணா ஆதங்கம் ஆங்கிலமூலம் : கொழும்பு டெலிகிராப், ஐப்பசி 2015 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தான் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதாகவும், வீ. ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இணையப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். பிரபாகரனைக் கொன்று, புலிகளை அழிக்க உதவினேன் - கருணா அவர் தனது முடிவுபற்றி மேலும் தெரிவிக்கையில் தன்னை ஆதரிக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் இனிமேல் இலங்கையில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலேயே போட்டியிடுவார்கள் என்றும் தெரிவித்தார். தனது தற்போதைய முடிவு குறித்து இருவார காலத்தில் நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் மாநாட்டில் விபரமாக விளக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை மீது தான் கடுமையான அதிருப்தியையும், விசனத்தையும் கொண்டிருப்பதாகக் கூறிய கருணா, தன்மீதான பல மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளின்போது அரசியல் ரீதியாக தன்னை அந்நியப்படுத்தியுள்ளதுடன் எதுவித ஆதரவினையும் நல்காது கட்சித் தலைமை தன்னை கைவிட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார். ஆனால், நாட்டிற்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தேவையேற்பட்டபோது தான் அனைத்து வழிகளிலும் உதவியதாகக் கூறிய கருணா, பிரபாகரனைக் கொன்று, புலிகளைத் தோற்கடிக்க தான் ஆற்றிய சேவையினை இன்று நாட்டின் தலைவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மறந்துவிட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகதீத் எக்லியகொட தன்னாலேயே கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகக் கூறிய கருணா, இதுபற்றிய விசாரணைகள் ஆரம்பிக்குமிடத்து, தான் அஞ்சப்போவதில்லையென்றும், இதன் பின்னால் இருப்பவர்கள் யாரென்பது அப்போது தெரியவரும் என்றும் அவர் கூறினார். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கவுன்சிலினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கருணா குழுவின் கடத்தல்கள் , சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், அரசியல்வாதிகள் மீதான படுகொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதுபற்றிப் பேசிய கருணா, அதுபற்றி தான் அச்சப்படவில்லையென்றும், தேவையென்றால் விசாரணைகளைச் சந்திக்க தான் தயார் என்றும் சவால் விட்டார். இவ்வறிக்கை பற்றி மேலும் பேசிய கருணா, கருணா குழு என்று ஒரு குழு இருப்பதே எனக்கு இந்த அறிக்கையினைப் பார்த்த பின்னர் தான் தெரியவந்தது என்றும், புலிகளிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் இணைந்துகொண்டபின்னர் தான் ஆயுதங்களை மீண்டும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லையென்றும் கூறினார். http://1.bp.blogspot.com/_otWn2PlEOdY/RtP1QNRrQcI/AAAAAAAAAfs/vz9JcWMuM9I/s320/author.jpg ஆனந்த சங்கரியுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தான் மேற்கொண்டதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பல திட்டங்களை ஆனந்தசங்கரி கொண்டிருப்பது கண்டு தான் வியந்ததாகவும் கருணா கூறினார். இறுதியாக, சுதந்திரக் கட்சியிலிருந்து விலகுவதான தனது முடிவினை இன்று கட்சியின் பொதுச் செயலாளருக்குத் தான் அறிவித்திருப்பதாகவும் கூறினார்.
  13. அழகே முருகா சந்தனம் திமிர்த்தணைத்து - திருப்புகழ்
  14. மனமே மனமே இறைவனை பாரு செந்நீர் சிந்தி சிலுவையை சுமக்கும் காரணம் கேளு 1. மண்ணை படைத்தவர் மகிழ்ந்து காப்பவர் மரணத் துயர் பாரு விண்ணை படைத்தவர் விண்மீன் தெளித்தவர் வீழும் நிலை பாரு நம்மை காத்திட தன்னை தந்தவர் தரணி வாழ்ந்திட தரையில் வீழ்ந்தவர் மனிதா மனிதா நீயே காரணம் கண்ணீர் சிந்துவாய் மனமே மனமே இறைவனை பாரு செந்நீர் சிந்தி சிலுவையை சுமக்கும் காரணம் கேளு 2. முள்ளில் மணிமுடி மாளா கசையடி மாந்தர் வசை மொழி பாவி மனிதனின் பாரச்சிலுவையும் சுமந்தே போகின்றார் கொடிய பாதையில் குருதி சிந்திட துவண்டு வீழ்கிறார் எழுந்து போகிறார் மனிதா மனிதா நீயே காரணம் கண்ணீர் சிந்துவாய் அனைத்திலும் சிறந்தது - அன்பே அன்பே அன்பே அனைத்தையும் கடந்தது -அன்பே அன்பே அன்பே ஆண்டவன் வடிவமே -அன்பே அன்பே அன்பே அவணியை ஆள்வதும் -அன்பே அன்பே அன்பே 1. நிறைகளை வளர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே குறைகளை தீர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே வலிமையை தருவதும் -அன்பே அன்பே அன்பே வளமையை சேர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே இறை அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிறர் அன்பே அன்பே 2. அனைவரும் கேட்பதும் -அன்பே அன்பே அன்பே விரும்பியே பெறுவதும் -அன்பே அன்பே அன்பே கொடைகளில் சிறந்தது -அன்பே அன்பே அன்பே கொடுப்பதால் கிடைப்பதும் -அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே இறை அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிறர் அன்பே அன்பே
  15. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 நாகூர் சுல்தானி அம்மா சாஹிபா (ரலி) உரூஸ்
  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜைக் கொல்வதற்கு கருணாவிடம் 50 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்தார் கோட்டாபய ராஜபக்ஷெ - பொலீஸ் அதிகாரி சாட்சியம் முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மனிதவுரிமை சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் அவர்களைக் கொல்வதற்கு அந்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரி கருணாவுக்கு 50 மில்லியன் ரூபாய்களை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேயின் முன்னால் சாட்சியமளித்த முன்னாள் தேசிய புலநாய்வுத்துறை பொலீஸ் உத்தியோகத்தர் லியனராச்சி அபெயரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷெ அப் பொலீஸ் அதிகாரி மேலும் சாட்சியமளிக்கையில், கருணாவுக்கான இந்தக் கொடுப்பனவு பாதுகாப்பு அமைச்சகத்தினூடாக, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியான வசந்தவினால் வழங்கப்பட்டதென்று கூறினார். ரவிராஜைக் கொல்வதற்கான இந்தப் பேரத்தின்பொழுது பிரதிப் பொலீஸ் மா அதிபர் கீர்த்தி கஜனாயக்க மற்றும் தேசிய புலநாய்வுச் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகர் மஹில் டோலேயும் சமூகமளித்திருந்தனர் என்று அவர் மேலும் கூறினார். பங்குனி மாதம் 2 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை இப்படுகொலைப் பேரத்தினை கண்ணால்க் கண்ட சாட்சியான அஞ்செலோ ரோய் என்பவரை மீண்டும் வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்படுமிடத்து சமூகமளிக்கும்படியும் கோரப்பட்டது. முன்னாள்ப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் நாள் கொழும்பிலிருந்த அவரின் வீட்டிற்கு மிக அருகாமையில் வாகனத்தில் செல்ல எத்தனிக்கும்போது கருணா துணைராணுவக் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவிராஜைக் கொன்றது மகிந்த ராஜபக்ஷெவின் அரசுதான் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் குற்றஞ்சாட்டிய நிலையில், அரசு இதனை மறுத்திருந்தது.
  17. எங்கை எல்லாம் கண் போகுது பார்....!!! 🤣
  18. வணக்கம் வாத்தியார்......! பெண் : சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை சாட்டை வீசும் நடை உனக்குதான் பெண் : மார்பில் மச்சபடை மனசில் வெட்க கொட தோத்தா தூக்கும் இடம் உனக்குதான் பெண் : என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான் பெண் : என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான் பெண் : என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான் பெண் : இன்ச்சு இன்ச்சா உனக்கேதான்.....! --- எலந்தப்பழம் எலந்தப்பழம் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.