Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38791
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88020
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16477
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/24/21 in Posts

  1. இதற்கான சரியான தமிழ் தெரியவில்லை. சூப்பர் உணவுகள் என்று தேடிப் பார்த்ததில் தமிழில் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் goji, Acai, Cranberry, Chia, Linseed, Quinoa என்று சூப்பர் உணவுகளின் பெரிய பட்டியல் நீள்கிறது. இவை அதிகமாக சீனா, தென்னமெரிக்கா போன்ற தூர நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக வியாபார ரீதியிலும் மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களால் இந்த உணவுகளின் விற்பனை பெருகி வருகிறது. இது நான் அறிந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். கவிதையின் பொருள் உணர்ந்து இரசிப்பதுபோல் உண்ணும் உணவில் என்னவெல்லாம் உண்டு என்று புரிந்து மகிழ்வோடு உண்பது மனரீதியாக உடலுக்கு நன்மையே தரும். சூப்பர் உணவு என்றால் என்ன ? ஒவ்வொரு பழங்கள் காய்கறிகள் தானியங்கள் கிழங்குகளிலும் பலவிதமான விற்றமின்கள் தாதுப்புகள் புரதங்கள் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஆனால் சில உணவுகளில் தனித்தன்மையாக ஏதாவதொரு மூலக்கூறு ஆச்சரியமான முறையில் அதிகமாக இருக்கும். அல்லது பலவிதமான கிடைத்தற்கரிய மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும், எமக்குச் சில குறிப்பிட்ட மூலக்கூறுகள் தேவையாக இருக்கும்போது அல்லது குறைவாக இருக்கும்போது சூப்பர் உணவுகளை இனம்கண்டு எமக்குத் தேவையான வகையில் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை இயற்கையான இந்த உணவுகள் மூலம் உட்கொண்டால் மருந்துகளின் தேவையையும் குறைக்க முடியும். பெரும்பாலும் ஒரு உணவில் உள்ள Antioxidant (இதற்கும் தமிழ் தெரியாது) இன் அளவைப் பொறுத்து அது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. Antioxidant என்றால் என்ன ? ஊடலில் கோடிக்கணக்கான மூலக்கூறுகளுக்கிடையே தொடர்ச்சியாக இரசாயன செயற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறான மாற்றங்களின்போது எதோ காரணங்களுக்காக சில மூலக்கூறுகள் சரியான முறையில் பகுக்கப் படாமல் இலத்திரன் ஒன்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்படியாக விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மூலக்கூறு ஒன்று சுவாசப்பை மூலம் உள்வாங்கப்பட்ட ஒட்சிசன் மூலக்கூறோடு சேர்ந்து நீர் மூலக்கூறாகவும் காபனீரொட்சைட்டாகவும் பிரிந்து உடலுக்குத் தேவையான சக்தியை வெளியிடும். ஏதோ காரணங்களுக்காக இந்த இரண்டும் சரியாகப் பகுக்கப்படாமல் ஒரு இலத்திரனை அதிகமாகப் பெற்றுக் கொண்ட மூலக்கூறொன்று வெளியாகிறது. இதை Free radicals என்று சொல்லப்படுகிறது. புகைத்தல் மாசுபட்ட காற்று போன்றவற்றாலும் இவ்வாறான மூலக்கூறுகள் உடலினுள் செல்லலாம். இந்த Free radicals மூலக்கூறுகள் கட்டுப்பாடிழந்து மூர்க்கத்தனமாக அருகிலுள்ள கலங்களைத் தாக்கும். இவ்வாறான தாக்குதலுக்குள்ளான தசை தோல் இதயம் போன்றவற்றிலுள்ள கலங்கள் சேதமாவதுடன் மரபணுக்களும் பாதிப்புள்ளாகும். இதுவே உடல் முதுமையடையவும் காரணமாகக் கூறப்படுகின்றது. எமது உடல் தேவையற்ற இந்த Free radicals களை அழிக்க வேண்டும். அதற்காக எமது உடல் வேறு சில மூலக்கூறுகளைத் தேவையான இடங்களுக்கு அனுப்பிவைக்கிறது. இந்த மூலக்குறுகள் Antioxidant என்று அழழைக்கப் படுகின்றது. இவற்றின் பணி Free radicals மூலக்கூறுகளை ஈர்த்து அழிப்பதாகும். Antioxidant மூலக்கூறுகள் தனித்துவமான அமைப்புடையவை அல்ல. Free radicals களை அழிக்கும் திறனுள்ள அனைத்தும் இந்த Antioxidant இனுள் அடங்கும். இதோ முக்கியமான சில Antioxidant மூலக்கூறுகள் vitamin C beta-carotene vitamin A selenium vitamin E zinc flavonoids copper இன்னும் பல. ஆர்வக் கோளாறில் மேல்குறிப்பிட்டவற்றை அளவுக்கதிகமாக உட்கொள்ளக் கூடாது. சில மூலக்கூறுகள் அளவுக்கதிகமானால் நச்சுத் தன்மையையானவை. வேறுசில புற்றொநோய் போன்றவற்றையும் ஊக்குவிக்கும். சூப்பர் உணவுகள் எவை ? Antioxidant உணவுகளை மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளும் இதனுள் அடங்கும். இவற்றை வெகு தூரத்தில் தேடாமல் எங்கள் ஊரிலும் சாராரணமாகக் கிடைக்கும் உணவுகளிலும் காணலாம். அவற்றை அறிவியல் ரீதியாக இனம்காண்பதே இத் திரியின் நோக்கம். பித்தத்தைப் போக்கும், சூட்டைக் குறைக்கும் புற்றுநோயைத் தீர்க்கும் என்பது போன்ற ஆதாரமில்லாத கருத்துக்களைத் தவிர்த்து உங்களுக்குத் தெரிந்த அறிவியல் ரீதியான தரவுகளை மட்டும் தாருங்கள். இவ்வாறான தரவுகளை நீங்கள் தேடிப் போகும்போதுதான் ஒரு உணவிலுள்ள உண்மையான ஆற்றலை அறிந்து கொள்ள முடியும். உணவுக் கூறுகளின் தரவுகள் தெரியாமல் அது குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் என்ற காரணத்தினால் அதனை உட்கொள்ளும்போது அதே உணவிலுள்ள வேறு கூறுகள் வேறு உபாதைகளைத் தரலாம். பல தமிழ் இணையத் தளங்களிலும் காணொலிகளிலும் பல போலியான தகவல்கள் பரந்து காணப்படுகின்றன. மருந்தே உணவு என்ற உன்னதமான கருத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பணம் சம்பாதிப்பதற்காகப் பரப்பப்படும் போலித் தகவல்கள் அகற்றப்பட வேண்டுமானால் உணவு பற்றிய அறிவியல் தகவல்களை நாம் நாட வேண்டும். இவை பற்றிய மேலதிகத் தெரிந்தவர்கள் தமது கருத்துக்களைப் பரிமாறலாம். ஒருசிலவற்றை ஆரம்பித்து வைக்கிறேன். *** நெல்லிக்காய் பலரும் தேசிக்காய் அல்லது தோடம்பழத்தில்தான் விற்றமின் சீ அதிகமாக உள்ளது என்று நம்புகின்றனர். மாற்றீடாக வேறு பல உணவுகள் உள்ளன. உதாரணமாக கறிமிளகாயில் தோடம்பழத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால் சமைக்கும்போது விற்றமின் சீ ஏறத்தாள 60% அழிந்துவிடும். 100 கிராம் தோடம்பழத்தில் ஏறத்தாள 55 மில்லி கிராம் விற்றமின் உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 700 மில்லி கிராமுக்கு மேல் உள்ளது. ஓரு நாளைக்கு ஒருவருக்கு 110 மில்லிகிராம் தேவைப்படும். ஏனைய உணவுகளிலிருந்தும் விற்றமின் சீ கிடைப்பதால் பாதி நெல்லிக்காய் ஒரு நாளைக்குப் போதுமானது. அதிகமான விற்றமின் சீ உடலுக்கு ஆபத்தில்லை. விற்றமின் சீ உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லையாதலால் மிதமிஞ்சியது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும். 2016 இல் இந்தியாவில் உலர்த்திய நெல்லிக்காய் தூளை மிகச் சிறிய அளவில் கோழிகளுக்குக் கொடுத்து ஆராச்சி செய்யப்பட்டது. இதனை உண்ட கோழிகள் சாராதண கோழிகளை விட ஆரோக்கியமானவையாக வளர்ந்தன. அதனைத் தொடர்ந்து அண்மையில் சீனாவில் கோழிகளிலும் பின்னர் எலிகளிலும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. (https://fr.wikipedia.org/wiki/Amla) மஞ்சள் இது எங்களுக்குக் கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற உணவு. இந்தியாவில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் பல காரணிகள் காணப்பட்ட போதிலும் அங்கு ஒப்பீட்டளவில் புற்றுநோய் குறைவாகவே காணப்படுகின்றது. ஒருவேளை இதற்கான காரணிகளில் மஞ்சள் பாவனையும் காரணமாகக் இருக்கலாம். மஞ்சள் குறிப்பாக 2 வகைகளில் செயலாற்றுகிறது. கட்டி, புற்றுநோய்க் கலங்கள் உருவாவதற்கு அவசியமானதாகக் கருதப்படும் ஒருவித புரதத்தின் தொகுப்பைத் தடுத்து புற்றுநோய்க் கலங்கள் உடலில் இருந்து விடுபட உதவும் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது இதன்மூலம் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து இறக்க நேரிடும். மஞ்சள் புற்றுநோயைக் குணப்படுத்தாவிடினும் அது புற்றுநோய்க் கலங்கள் பரவாமல் கட்டுப்படுத்துகிறது. பக்கவிளைவுகள் இல்லாமல் சிலவிதமான உட்காயங்களை ஆற்றுகிறது. உலகம் முழுவதும் பரவலாக நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆராச்சிகளில் மஞ்சளின் பயன்பாடு சிறந்த பெறுபேறுகளைத் தந்தாலும் மஞ்சள் பாவித்து ஒரு குறிப்பிட்ட நோயைக் குணமாக்கியதாக நிறுவப்படவில்லை. மஞ்சளை உடல் இலகுவாக உள்வாங்காது என்பதால் மிளகுடன் சேர்த்து அளவோடு உண்ணலாம். அதிகமாக உட்கொண்டால் தகாத உபாதைகள் வரலாம். ஈரல் தொடர்பான நோயுள்ளவர்கள், சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியவர்கள், இரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகள் பாவிப்பவர்கள் கட்டாயம் மஞ்சளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இதனைத் தவிர்க்கும்படி சொல்லப்படுகிறது. மஞ்சள் கிருமிகளை அழிக்கும் என்ற தவறான கருத்து உலாவுகிறது. அப்படி அழிக்குமாக இருந்தால் மஞ்சளை உண்பவர்களின் வயிற்றில் சமிபாட்டுக்கு உதவும் பக்ரீரியாக்கள் அழிக்கப்பட்டு சமிபாடு குழப்பமடைந்து உடலுக்குச் சரியான ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்க்கு உள்ளாக நேரிடும். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பலவிதமான ஆராச்சிகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட மஞ்சளால் கிருமிகளை அழிக்க முடியுமென நிரூபிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
  2. அட இவ்வளவு இளைஞனாகயிரிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. சரி இத்தால் மன்னிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். 😍
  3. ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே......! 💕
  4. கந்தையா டோன்ட் வொரி ......இதெல்லாம் சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதுவது......மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளவும்.எனது ஒரிஜினல் பிறந்தநாள் இங்கேயே இருக்கு பார்க்கவும்.......!
  5. நீங்கள் வேற வெந்தபுண்ணிலே வேலைப் பாச்சுறீங்கள் கந்தையா......நான் தொப்பையைப்பற்றித்தான் அவருக்கு எழுதினானான்.....நீங்கள் என்னுடைய வயதையும் எல்லோருக்கும் சொல்லுறீங்கள் போலகிடக்கு.பார்த்து என்ற இமேஜ் கெட்டுடும் கந்தையா.........! 😢
  6. அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாள் .......! 👍
  7. எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே நீ செய்த நன்மை நினைக்கின்றேன்
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 கண்மணி நாயகமே... கருணையின் தாயகமே....
  9. காகம் போன்ற ஒரு பறவை காகமில்லை ஆனால் பாடுது ஆனால் குயிலுமல்ல......! 😁
  10. 2004 இற்கு முன்னரான கேர்ணல் கருணாவே, இப்போது நீ எங்கே இருக்கிறாய்? தமிழ் சங்கம் இணையத்தளத்தில் சச்சி சிறிகாந்தா சித்திரை 2019 இல் எழுதிய கட்டுரை. 2004 இற்கு முன்னர் அனைவராலும் மரியாதையாக அழைக்கப்பட்ட கேர்ணல் கருணாவும், இன்று வெற்று விநாயகமூர்த்தி முரளீதரனுமாக மாறியிருக்கும் உனக்கு நான் எழுதிக்கொள்வது. இன்றைய உனது நிலை என்ன? பங்குனி 2004 இல் எமது இனம் அறிந்திராத துரோகத்தைச் செய்துவிட்டு இறுமாப்புடன் நீ இருந்தபோது உனது புகழைக் காவிவந்த 800 சொற்கள் அடங்கிய பி பி ஸியின் பசப்புகளையும், அது உனக்கு உலகளவில் புகழ்தேடித் தந்ததாக நீ எண்ணியிருந்ததையும் மறந்திருக்க மாட்டாய். உனது துரோகம் நிகழ்ந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் நீ இன்று செய்துவரும் செயல்கள் குறித்து என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. முடிந்தால் பதில் அளி. 2004 இற்குப் பிறகு நீ செய்துவருவதாகக் கூறும் உனது வீரப் பிரதாபங்கள், நீ யாருக்குத் துரோகமிழைத்து வெளியேறி எதிரியுடன் சேர்ந்தாயோ, அந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ ஆற்றலுக்கு நிகராக இருக்கும் என்று உண்மையாகவே நம்புகிறாயா? இன்றைய உனது நிலை என்ன கருணா? இன்றும் ஈழத்தமிழர்களுக்கான தலைவனாக உன்னைக் கருதுகிறாயா? 2004 இற்குப் பின்னர் நீ செய்துவரும் எந்தத் திருகுகுதாலமும் உன்மீது படிந்திருக்கும் நிரந்தரக் கறையான "இனத்துரோகி " எனும் அவப்பெயரைக் கரைத்துவிட முடியும் என்று நீ நம்புகிறாயா? அண்மைக்காலமாக அரசியலில் இருப்பதாகக் கூறுகிறாயே, அதில் எத்தனை வெற்றிகளை நீ பெற்றிருக்கிறாய்? தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும், பின்னர் அங்கிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தாவிக்கொண்டிருக்கிறாய். 2019 இல் நீ இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தவுக்குப் பணிவிடை செய்கிறாயா அல்லது அவனையும் விட்டு விலகி மைத்திரியிக்குப் பணிவிடைகள் செய்துவருகிறாயா? உனது வீரப் பிரதாபங்களைக் காவிவந்த பி பி ஸி யின் செவ்வியில் உனது மொழிபொஎயர்ப்பாளராக நின்றிருந்த வரதனுக்கு என்னவாயிற்று? அவன் இப்போது உன்னுடன் இருக்கிறானா, அல்லது அவனைக் கொன்றுவிட்டாயா? இதுபற்றியும் எங்களுக்கு நீ கூறமுடியுமா கருணா ? 2004 இல் நீ அரியணை மீது வீற்றிருந்து பி பி ஸி இற்கு வழங்கிய செவ்வியில், "என்னுடன் 2000 பெண்போராளிகள் உட்பட, 5000 போராளிகள் பக்கபலமாக இருக்கிறார்கள்" என்று இறுமாப்புடன் கூறியிருந்தாய். இந்தப் பசப்புகளை விரும்பியே காவித்திருந்த இந்திய செய்திச் சேவைகளுக்கு நீ ஒரு பெருந்தளபதியாகவும், ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சூழ்ந்த மாபெரும் சேனையாகவும் தெரிந்ததில் எனக்கு வியப்பில்லை. சரி, அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், நீ அன்று கூறிய 5000 "பெரும்படையில்" இன்று உன்னுடன் கூட இருப்பவர்கள் எத்தனை பேர் கருணா? உனது இனத்துரோகத்திற்காக புலிகள் உன்னைத் தூக்கி எறிந்தபொழுது. பல புலியெதிர்ப்பு கருத்தாளர்களான கே டி ராஜசிங்கம், டி பி எஸ் ஜெயராஜ், தயான் ஜயதிலக்க மற்றும் தமிழ்நாட்டின் இந்து கற்பனைவாதிகள் உன்னை வராது வந்த மாமணியாகப் பார்த்து ஆரத்தழுவி ஆதரித்து எழுதியதை நான் பார்த்தேன். ஈழத்தமிழனின் புதிய துருவ நட்சத்திரமாக அவர்கள் உன்னைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்ததையும் நான் பார்த்தேன். ஆனால், அவர்களின் பேனாக்களில் இருந்து நீ இன்று முற்றாக மறைந்துவிட்டாயே, அது ஏன் கருணா? 2004 இற்குப் பின்னரான உனது வீழ்ச்சியென்பது எத்தனை கீழ்த்தரமானது , கேவலமானது என்பதை நீ உணர்கிறாயா? 1996 இல் தாரகி சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றை அண்மையில் படித்தேன். அதி அவர் இப்படி எழுதுகிறார். "விடுதலைப் புலிகள் அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை ஒரே ராணுவ நிர்வாகப் பிரதேசமாகவே கையாள்கிறார்கள். இப்பிரதேசத்திற்கான ஒட்டுமொத்தத் தளபதியாக கருணாவே திகழ்கிறார். ஒரு சில உயர் தளபதிகளைத் தவிர, கிழக்கின் அனைத்துப் புலிப் போராளிகளும் அவரை கெளரவத்துடன் அம்மான் என்றே அழைக்கின்றனர்". உன்னை ஒரு ஒப்பற்ற தளபதியாக எண்ணி, 2005 இல் அமெரிக்கச் சஞ்சிகையொன்றில் குடிபோதையில் உளறிய ஒருவர், "கருணா கிழக்கு மாகாண மக்களுக்கான ஆட்சியதிகாரத்தை அரசாங்கத்திற்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும் போராடி நிலைநாட்டப் பார்க்கிறார். ஆனால், பிரபாகரனின் ராணுவப் பலத்தின் முன்னால் கருணாவால் ஈடுகொடுக்க முடியாதிருக்கும், ஆகவே அவர் வெளிநாடொன்றிற்குத் தப்பிச் சென்றாவது தனது மக்களின் விடுதலைக்காகப் போராடுவார். கிழக்கில் புலிகள் இழந்த நிலங்களை மீண்டும் அவர்கள் மீட்டெடுப்பது சாத்தியமில்லை" பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 30 வெள்ளிகளுக்காக நீ ஈழத்தமிழரிடம் சிறுகச் சிறுகச் சேர்த்துவைத்த அபிமானத்தையும், கெளரவத்தையும் 2004 துரோகத்துடன் ஒரே இரவில் இழந்தாய். விடுதலைப் புலிகளால் உனக்கு வழங்கப்பட்ட கெளரவமான "கருணா" எனும் பெயர் கூட 2009 உடன் உன்னை விட்டு ஓடிவிட்டது. அதற்குப் பின்னர் வந்த 10 வருடங்களில் உன்னை ஆட்டுவிக்கும் சிங்கள, இந்திய புலநாய்வுப்பிரிவுகளும் இன்னும் இன்னோரென்ன சக்திகளும், உனது இனத்துரோகத்திற்கான பரிசாக உன்னை உயிருடன் புதைத்துக்கொண்டிருக்கின்றன. உனது கதைதான் எவ்வளவு கேவலமானது? 1957 இல் மறைந்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வரிகள் உனக்கும் எவ்வாறு பொருந்திச் செல்கிறதென்பதைப் பார். "உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது? நிலை கெட்டுப் போன நய வஞ்சகரின் நாக்குத்தான் அது!".
  11. இன்னும் பாட சாலை / கல்லூரி குரூப் போட்டோ வைத்திருப்பவர்கள் கையை தூக்குக..👍
  12. எனது நாத்திகம் - சுப. சோமசுந்தரம் நாம் விரும்பாமலே நாத்திகம் எனும் வடமொழிச்சொல் வெகுசனத்திடம் பரவிவிட்டதால், இறை மறுப்பை நான் இங்கு ‘நாத்திகம்’ என்றே பதிவிடுகிறேன். ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அருதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?) ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற பகத்சிங்கின் அளவில் சிறியதொரு பெரிய படைப்பினை வாசித்த அனுபவம் எனது நாத்திகத்தையும் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்ததோ என்னவோ ! பகத்சிங் தமது சிந்தனையாலும் செயலாலும் தம் படைப்பினை உலகையே வாசிக்க வைத்தவர். குறைந்த பட்சம் நட்பு வாசக வட்டத்தில் அனுபவங்களைப் பகிரும் எண்ணமே எனது இந்த எழுத்து. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது நமக்குப் புதிதா என்ன? எனக்கு விவரம் தெரிந்து சுமார் பன்னிரெண்டு வயது முதல் நான் நாத்திகன். இது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வீட்டின் ஜனநாயகச் சூழலும், வீட்டில் பெரியாரையும் அண்ணாவையும் சிலர் பேசிக் கொள்ளும் சுமாரான அரசியல் சூழலும், எனக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர் அந்நாளைய பள்ளி வரைமுறைகளைத் தாண்டி திராவிட இயக்க விதைகளை அவ்வப்போது தூவியதும் காரணமாய் அமைந்தன எனலாம். பசுமரத்தாணியாய்ப் பதிந்து நிற்கும் பருவம் அது. இறை நம்பிக்கையும் அப்படித்தானே ! குழந்தைப் பருவத்தில், “கண்ணு, சாமி கும்பிடு ! சாமி கும்பிடு !” என்று சொல்லி வளர்ப்பதே இறை, மத நம்பிக்கையாய் முகிழ்க்கும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. பின்னர் அந்நம்பிக்கை சார்ந்த பெரியோரிடம் கற்றல், கேட்டல் மூலம் அது வலுப்பெறும். நிற்க. இளம் வயதில் பெரியார், அண்ணாவிடம் படித்த பாடம் கல்லூரி நாட்களிலும் பின்னாளிலும் மேலும் கிடைத்த நூலறிவினால் வாழ்வியலானது. குறிப்பிட்டுச் சொல்வதானால் ஆபிரகாம் கோவூரின் ‘Gods, Demons and Spirits’, பெட்ரன்ட் ரஸலின் ‘Why I am not a Christian’, கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸின் ‘God is not great’ என்னை நல்வழிப்படுத்தியவை. ஆயினும் இந்த ஆன்றமைந்த கொள்கைச் சான்றோர் எனக்குப் போதித்ததைப் போல் நாத்திகத்தை நான் யாருக்கும் போதிக்கவில்லை. என் குழந்தைகளுக்குக் கூட, உண்டு அல்லது இல்லை எனப் புகட்டியதில்லை. எனது நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இறைமறுப்பின்பால் ஈர்க்கப்பட்டது எனக்கான பேறு. அதிலும் அவர்கள் பெண்பிள்ளைகள் என்பது பெரிதினும் பெரிதான பேறு. இதில் இறைநம்பிக்கையுள்ள எனது இல்லாளின் பங்களிப்பு அபரிமிதமானது. அவளும் தன் நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்றியது இல்லை. இந்த ஜனநாயகம் எல்லோருக்கும் வாய்ப்பதிலை. ஆத்திகர்களின் மொழியில் சொல்வதானால், நான் இறை மறுக்க அவர்களது இறைவனாலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன் போலும்! பெரும்பான்மைச் சமூகம் இறை நம்பிக்கை சார்ந்ததால், பெரும்பாலான இறை மறுப்பாளர்கள் தங்களை வெளிக்காட்டுவதில்லை. அது அவரவர் தனிப்பட்ட கருத்து எனும் நிலைப்பாடாக இருக்கலாம். இப்பூவுலகில் இவர்களோடுதானே வாழ வேண்டும் எனும் நடைமுறைச் சித்தாந்தமும் என் போன்றோர்க்கு ஏற்புடையதே. எனக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் பெரும்பாலானோர் அந்த நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பது என் உள்ளக்கிடக்கை. அதற்கு நானாக வரித்துக் கொண்ட காரணங்கள் இரண்டு. ஒன்று, ‘மேலே ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ எனும் பயத்தினால் மட்டும் அதிகம் தவறு செய்யாமல் இருக்கும் வெகுசனம். இரண்டாவது, வாழ்வில் சொல்லொணாத் துயரத்தை எதிர்கொள்ள ‘மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்’ என்று பாரத்தைக் கற்பனையான தோள் மீது இறக்கி வைக்கும் மனோபாவம்; அக்கற்பனை தரும் ஆறுதலை அவர்களுக்கு என்னால் தர இயலாத கையறுநிலை. எனவே அறியாதாரை அறியாமை இருளிலேயே வைத்து நமக்கும் அவர்களுக்கும் துன்பமில்லாமல் வாழ நினைக்கும் சுயநலம் எனது. வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி நமக்கும் தான் வரும். அப்போது நமக்கு அந்த கற்பனைத் தோள் வேண்டாமா ? இல்லையென்று நம்பிக்கை(!) ஏற்பட்டு சுமார் ஐம்பது வருடங்களான பிறகு, இல்லாததைக் கற்பனை செய்ய இயலாது. வாழ்வில் ஏற்படும் இன்பத்தை அளவாய்த் துய்க்கத் தெரியும். துன்பத்தில் அழத் தெரியும், விழத் தெரியும், எழத் தெரிய வேண்டும். இது தான் பக்குவம் பெற்ற வாழ்விற்கான இலக்கணம் என்பது எனக்குப் பால பாடம். எனக்கு இலக்கிய ஆர்வம் உண்டாகையால் பக்தி இலக்கியங்களையும் விட்டு வைக்க மனம் வருவதில்லை. நான் உருகவில்லையாயினும் அவர்கள் எப்படி உருகுவார்கள் என்பதை உணரும் அளவு இலக்கியச் சுவை தெரிந்தவன். நாத்திகராயிருந்தும் கோயில்களையும் பக்தி இலக்கியங்களையும் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களையும் உணர்ந்த அறிஞர் தொ. பரமசிவன் இவ்விடயத்தில் எனக்கான வழிகாட்டி. இவையனைத்தும் மக்களை வாசிக்க உதவும் கருவிகள் எனக் கொள்ளலாம். பக்தி இலக்கியம் பேசும்பொழுது, எழுதும் பொழுது நமது இறைமறுப்பை வெளிக்காட்டாது அவ்விலக்கியச் சுவை காட்டுவது கயிற்றின் மேல் நடப்பது. “கடவுள் இல்லை; இல்லவே இல்லை” என அறிவித்து மக்கட்சேவை செய்யும் நாத்திகப் பெரியோர் வீரமரபில் தோன்றிய சான்றோர். மக்கள் கூட்டத்திலிருந்து தனித்தியங்கும் ஆற்றல் பெற்றோர். அவ்வகையில் தமிழ்ச் சமூகத்தில் பெரியார் எஞ்சாமி(!). நடிப்பாற்றலால் வெகுசனத்தில் விரவி தன் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்து தொலைக்கும் நான் ஒரு கோழை. இதுகாறும் எனது நாத்திகத்தில் பொதுவான விஷயங்களைப் பேசிய நான் இது தொடர்பில் ஒன்றிரண்டு நிகழ்வுகளை நினைவு கூற நினைக்கிறேன். இத்தகைய நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் செதுக்கியதாக உணர்கிறேன். அவை என் மனதில் காட்சிகளாய் விரிகின்றன. காட்சி 1: இறை மறுத்து வளர, வாழ எனக்குச் சாதகமான சூழலே அமைந்தது எனக்கான வரம். அவ்வரம் எனக்கு பள்ளி, கல்லூரி வடிவிலும் அமைந்தது கூடுதல் சிறப்பு. உரோமன் கத்தோலிக்க நிறுவனங்களிலேயே நான் வளர்ந்தாலும், தம் மத நம்பிக்கைகளை என்மீது இம்மியளவும் அவர்கள் ஏற்ற முயற்சி செய்ததில்லை. கத்தோலிக்க மாணவர்களுக்கு வாரம் ஒரு மணி நேரம் கத்தோலிக்க மறை வகுப்பு நடைபெறும் பொழுது ஏனையோருக்கு நல்லொழுக்க வகுப்பு நடைபெறும். அவ்வளவே. ஒருமுறை கல்லூரியில் வகுப்புத் தோழன் ஒருவன் வேலைக்கு மனுச் செய்த போது அவனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தேவைப்பட்டது. கிறித்தவனான அவன் எங்களது தமிழ் ஆசிரியரும் அவனது விடுதிக் காப்பாளருமான பாதிரியாரிடம் சான்றிதழ் கேட்கப் போகும் பொழுது என்னையும் துணைக்கு அழைத்தான். நன்றாகப் படிக்கும் மாணவன் நல்ல மாணவன் என்ற வேடிக்கையான வரையறை அன்றும் இன்றும் உண்டே ! அதனால் பெரும்பாலான ஆசிரியர் பெருமக்களுக்கு என் மீது அன்பும் மதிப்பும் உண்டு என்பது என் கணிப்பு. பாதிரியார் அவனிடம், “எடேய், நீ ஜெபத்துக்கே வர மாட்டே ! உனக்கு எப்படி நான் காண்டக்ட் (conduct certificate) தரமுடியும்?” என்று கடிந்துகொண்டார். அவன் கூடப் போய் நான் அங்கு நின்றதே அநாகரிகம். அதையும் தாண்டி நான் அதிகப்பிரசங்கித் தனமாக அப்போது இடைமறித்துப் பேச வேறு ஆரம்பித்தேன். அவ்வயதில் எங்களுக்குத் தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான். “ ஃபாதர் ! ஒழுக்கத்திற்கும் ஜெபத்திற்கு என்ன தொடர்பு ? ஜெபம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம்தானே ?” – சாதாரணமாக ஒரு பாதிரியாரிடம் சராசரி மனிதர்கள் கேட்காத கேள்வி. என் மீது கொண்ட அன்பினால் அவர் கோபம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மாறாக, “நீ சிறிது நேரம் வெளியே நில்!” என்று சாந்தமாகச் சொல்லி அனுப்பிவிட்டு அவனிடம் பேசினார். பின்னர் அவனை அனுப்பிவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சொன்னார், “நீ சொன்னது உனக்குச் சரி, நான் சொன்னது அவனுக்குச் சரி. படிப்பெல்லாம் எப்படிப் போகிறது ? கம்பனில் நம் பாடப்பகுதியில் உள்ள அந்த சிறு பகுதியை நீ செமினார் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று வெகு சாதாரணமாய்ப் பேசி, புன்னகை மாறாமல் அனுப்பிவிட்டார். அவர் உள்ளே அழைத்ததும் எனக்கு கடவுள், ஜெபம் பற்றிய பாடம் எடுக்கப் போகிறார் என்று நினைத்தேன். தம் செயல்பாட்டின் மூலமாக அவர் எனக்குத் தந்த பாடம் ஜனநாயகம் என்று நம்புகிறேன். அன்று என்னுள் இருந்த இளைஞன் கபடமின்றி இப்படி யோசித்தான், “அவர் சான்றோர் என்பதில் ஐயமில்லை. கூடவே, அவரும் என்னைப் போல் இச்சமூகத்தில் ஒரு நாத்திக நடிகர்தானோ !” காட்சி 2 : அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளை அழகுற எடுத்துச்சொல்லி அத்துறையில் நான் நானாக பெரிதும் காரணமானவர் எனது கணிதப் பேராசிரியர் திரு. ஜோதிமணி அவர்கள். இலக்கிய ஆர்வமும் உள்ளவர். சிந்தனைச் சிற்பியான அவர் வாழ்வியலிலும் எனக்கு ஆசான். பல்துறை சார்ந்த அறிவே சான்றாண்மை என்பதை எடுத்துக் காட்டியவர். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் அவருடன் தொடர்பில் இருந்தேன். நான் எங்கள் ஊரிலேயே புதிதாகத் தோன்றிய பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியனாய்ப் பணி அமர்ந்ததால் நாங்கள் குடும்ப நண்பர்கள் ஆனோம். அவர் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்லும் கிறித்தவர். வழியில் மாரி அம்மனையும் வணங்கும் விந்தை மனிதர். பேராசிரியர் தொ.ப விற்கு அடுத்தபடியாக சைவமும் வைணவமும் அவரிடம்தான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு நிரம்பிய நூலுடையோர் கேண்மை வாய்த்தது எனக்கான அடுத்த பேறாக அடுக்குவது, கூறியது கூறலாகவும் தம்பட்டம் ஆகவும் அமையும் என்பதால் தவிர்க்கிறேன் (!!!). பேரா. ஜோதிமணி அவர்களுக்கு என்னிடம் ஒரு சிறிய மனக்குறை உண்டு. அது என் இறை மறுப்பு. தம் கருத்தை மற்றவர்களிடம் வலிந்து திணிக்கும் இயல்புக்கு எதிரானவர் அவர். எனினும் இறையருளில் பரிபூரண நம்பிக்கை அவருக்கு இருந்ததால் அவ்வருள் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கம் அவருக்கு. சமயக் கருத்துகளையும் பக்தி இலக்கியத்தையும் அவர் மேற்கோள் காட்டும்போது மிகுந்த (நடிப்பில்லாத) ஆர்வத்துடன் நான் கேட்பதுண்டு. ஆகையால் இறைவன்பால் ஒரு நாள் என்னை ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். அவர் நம்பிக்கை அவருக்கு. சவால் விடும் தொனியில் இல்லாமல் நான் அவருக்குப் பதில் சொன்னேன், “இறையுணர்வை இத்துணைப் பகுத்தறிவுடன் அணுகும் உங்களை இறைமறுப்பின்பால் திருப்ப முடியும் என்று எனக்கும் தோன்றுகிறது”. இது குரு, சிஷ்யன் இருவரின் தன்னம்பிக்கையையும் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் குறிக்கிறது. இருவருமே தோற்கக்கூடாது என்பது இயற்கையின் நியதியோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் அவர் தமது கர்த்தருக்குள் நித்திரை கொண்டார். அந்த நேரத்தில் என் கைபேசியும் காலாவதியானதால் ஒரு வாரம் கழித்துப் புதிய கைபேசி வாங்கலாம் என்று சோம்பேறித்தனமாய் இருந்துவிட்டேன். அந்த நேரத்தில் அந்தப் படுபாவி காலன் என் கண்ணையும் காதையும் மறைத்து அவரைக் காவு கொண்டான். மரணச்செய்தி நேரில் ஆள் மூலம் வந்ததும் சென்றேன். எனினும் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி நேரத்தில் அவரிடம் பேச முடியாத வருத்தம் எனக்கு நிரந்தரமாகி விட்டது. சோகத்திலும் கவித்துவமாய் அவலச் சுவையில் சொல்வதாய் இருந்தால் அவரது விருப்பத்திற்கு மாறாக நான் இறை மறுத்ததால் அவரது இறைவன் எனக்கு அளித்த தண்டனையோ ! அவர் சீக்கிரம் விடை பெறுவார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் தோற்று விட்டதாக - அவரது இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக – நடித்திருப்பேன். உலகத்தாரிடம் அங்கங்கே நடிக்கும்போது எனது குருவானவரின் இறுதி நாட்களில் அவரது மன நிறைவுக்காக நடிக்கக் கூடாதா, என்ன ? ஆனால் அவர் அதை நம்புவது ஐயப்பாடே ! எனது குருவை நான் அறிந்தது போல் அவருக்கும் தமது சீடனைத் தெரியும். மேலும் தமது ஞானபுத்திரனாய் அவரால் அறிவிக்கப்பட்ட நான் கருத்தியலில் அவரிடம் தோற்பதை அவரே விரும்ப மாட்டார். அவரும் எஞ்சாமி !
  13. ஜேர்மனியிலும் விடுதலைப்புலிகளால் பிரச்சனை என்று சொல்லி அகதி விண்ணப்பம் கோரியவர்கள் இருக்கின்றார்கள். இதனை எழுதும் நான் குடிவரவுதுறையில் இருக்கின்றேன் என சான்றிதழ் தருவீர்களா?
  14. எல்லா விந்தணுவும் பிள்ளைகளை உருவாக்குவதில்லை அப்படியாக்கினாலும் எல்லாம்மும் பிள்ளையாகி பிறப்பதும் இல்லை அப்படி பிறந்தது எல்லாம் பிள்ளையாக வளர்வதும் இல்லை வளர்ந்தது எல்லாம் வாழ்க்கையை புரிவதும் இல்லை அதுக்காக நாம் விந்தணுவையா நோக வேண்டும்? அந்த அளவு அடிமட்ட அறிவு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பூமியைத்தான் நோக வேண்டுமா?
  15. போராட்டமே நடாத்தி இருக்க கூடாது. அடிமைகளாக இருந்திருக்க வேண்டும். போராட்டம் அவர்கள் நடாத்தா விட்டால் இப்போ கனடாவில் எப்படி ஓகோ என இருக்க முடியும்?
  16. என்னைப்போல ஆக்கள் தான் வந்த புதிசிலை இரவுபகல் பாராமல் நாயடி பேயடி அடிச்சு வேலை செய்தது.வீட்டுக்கு காசு அனுப்பவேணும்.அக்கா தங்கச்சி சகோதரங்களுக்கு உதவ வேணும்.சொந்தங்களுக்கு உதவ வேணும் எண்டு ஆயிரம் சோலிகள். இப்ப நிலமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டு வருது.எமக்கு அடுத்த சமுதாயம் அனுபவிக்கின்றார்கள்.
  17. ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள் தொடர்ந்து முறுக்கு, சுடுவோம். ஆறு மாதத்திற்கு முன்பு, ஆசைப் பட்டு வாங்கின "கடலை மா..." அதன், ஆயுட்கலாம்... முடிய, இன்னும் இரண்டு கிழமைகள் உள்ளது. நான்... எப்போதும் உணவுப் பொருட்களை, வீண் செய்யாத மனப்பான்மை உள்ளவன். இப்போ... 11 நாள் விடுமுறை. நல்ல, சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று.... நிகேயின்... "பத்தே நிமிடத்தில்... செய்யும், கடலை மா முறுக்கு" செய்வோம் என்று... மனைவியிடம்.... "அம்மாச்சி" இண்டைக்கு, கடலை மா முறுக்கு செய்வோம் என்று, பன்மையில் கேட்டேன். (பன்மையில்... கேட்பது, எப்பவும் நல்லது. ஏனென்றால்... முறுக்கு சரி வராவிட்டால், நான் தப்பித்துக் கொள்ளலாம்) அதனை... திடீரென்று, கேட்ட போது... அவளுக்கு, பயங்கர "கொதி" வந்து, உங்களுக்கு என்ன விசரோ... என்று பேசினாள். நான்... வீட்டில் இல்லாத நேரம், அவள் பார்க்கும் "தொலைக்காட்சி" நாடகங்கள், தவறிப் போய் விடுமே... என்ற கவலை, அவளுக்கு. ஒரு... மாதிரி, சமாளித்து அவளை என் வழிக்கு கொண்டு வந்து... முறுக்குக்கு "மா" குழைக்க ஆரம்பித்தோம். அந்த இடைவெளியில்... மனைவி, கனடாவில் உள்ள சகோதரிக்கும், சுவிஸில் உள்ள மகளுக்கும்.... நாங்கள்.... "முறுக்கு, சுடப் போகின்றோம்" என்று.. குறுஞ் செய்தியை அனுப்பி விட்டார். அவர்கள்..... அத்தான், அப்பா... "குட் லக்" என்ற செய்தி வந்து சேர்ந்து விட்டது. இடையில்... நிகேயின், சமையல் குறிப்பின் படி, என்ன செய்ய வேண்டும் என்பதனை..... திரும்ப, திரும்ப, திரும்ப... மனப் பாடமாக்கி.... எனக்குத் தெரிந்த, கணித முறைப்படி... ஒரு அட்டவணை தயாரித்து... எம்மிடம் இருப்பது.... ஒரு கிலோ கடலை மா. அதுக்கு... எவ்வளவு, அவித்த கோதுமை மா.... மஞ்சள், எள்ளு, உப்பு, மிளாகாய்த் தூள், எண்ணை.... சுடு தண்ணி... என்ன பதம்...... என்றெல்லாம் கணக்குப் பார்த்து, முடிக்க.... ஒரு மணித்தியாலம் போய்... விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.