'படிமப்புரவு: NTT'
இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன்.
இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel
பின்னாளில், தன் தாய் நிலம் தொடர் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தபோது, அதை மீட்க தானுமொரு கரும்புலியாய் செல்ல முடிவெடுத்தார். கரும்புலிகள் அணியில் இணைவதற்காய் காத்திருந்து அனுமதிபெற்றார். கரும்புலிகளின் கடைசிப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி முடித்து தரைக்கரும்புலியாய் வெளியேறியவர், முள்ளிவாய்க்காலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை இறுதிவரை தீரத்தோடு எதிர்த்து களமாடி வீரகாவியம் ஆனார்.
ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்