Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    5633
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8910
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46808
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19152
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/18/21 in all areas

  1. இன்னைக்கு தான் முதல் முறையா BMW கார எடுத்து ஓட்டினேன்.. கீர்லாம் இல்லை...ஆட்டொமெடிக் கீர்..வண்டி சம ஸ்மூத்தா போகுது சரி ஒரு பெரிய ரவுண்ட் போயிட்டு வரலாம்னு நினச்சி.. பீச் ரோட் வழியா வண்டிய எடுத்துகிட்டு போனேன்.... ரோட் காலியா இருந்துச்சு..140 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போனேன்.. நல்லா வேகமா போயிகிட்டு இருக்கும் போது திடீர்னு டர்னிங்ல ஒரு பைக் காரன் குறுக்க வந்துட்டான்... நான் டக்குனு பிரேக் அடிசிட்டேன்... ஆனா பின்னாடி வந்தவன் தான் என் கார்ல வந்து மோதிட்டான்... பின்னாடி இண்டிகேட்டர் கண்ணாடிலாம் உடஞ்சி போச்சு... உனக்கு வண்டியும் ஓட்ட தெறியல ஒன்னும் தெறியலனு... என் பையன் வந்து கேம் கன்ட்ரோல புடிங்கிகிட்டு போயிட்டான்...
  2. அதொன்றுமில்லை சுவைப்பிரியன்.......நானறிந்த காலத்தில் இங்கு நிறைய கருத்துக்கள் பதிந்தவர்கள்.....தற்சமயம் அவர்களின் வருகை குறைந்து போனாலும் அவர்களின் பெயர் கண்ணில் படும்போது வாழ்த்து சொல்வது நல்லதுதானே......அவர்களுக்கும் என்னென்ன வேலைப் பளுக்களோ யார் கண்டது.....ஆனாலும் இந்தத் துறைமுகத்தில் இறங்கியவர்கள் பின் எங்கிருந்தாலும் ஒருதரம் எட்டிப் பார்ப்பார்கள். அந்த நம்பிக்கைதான்.....! 👍
  3. படம் : ககாவேரியின் கணவன் (1959) இசை : K.V. மகாதேவன் வரிகள் : உடுமலை நாராயண கவி குரல் : எம்.எல். வசந்தகுமாரி
  4. கருணா அம்மானுக்கு உதவுவது தேசியப் பாதுகாப்பிற்கு அவசியமானது இணையத்தளம் : லங்கா வெப் ஆங்கிலத்தில் சிரீபால் நிஷன்க காலம் :கருணா லண்டனில் போலி கடவுச் சீட்டுடன் பயணித்தார் என்பதற்காக பிடிபட்டுச் சிறையில் அடைபட்டிருந்தபொழுது "உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதியினை எதிர்த்து மிகத் துணிச்சலாக போரிட்ட உண்மையான வீரன் கருணா தற்போது லண்டன் சிறையில் ஆள் மாறாட்டம் செய்தமைக்காக அடைக்கப்பட்டிருக்கிறார். வன்னியின் பயங்கரவாதத் தலைவனான பிரபாகரனின் கட்டளைக்குப்பணிந்து கருணா அம்மான் முன்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் வன்னிப் பயங்கரவாதியின் உண்மையான முகம் தெரிந்தவுடன், அவனை விட்டு விலகி சாதாரண மனிதர்களுடன் சேர்ந்து தந்து உச்ச பட்ச திறமையினைப் பாவித்து அந்தப் பயங்கரவாதியை அழிக்கும் நற்காரியத்தில் ஈடுபட்டார்".
  5. கருணா தொடர்பாக இருவேறுவகையான புரிதல்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கிரது. பெரும்பாலானவர்களின் கருத்துப்படி அவர் தமிழினத்திற்குச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் . அதேவேளை, இன்னும் ஒரு பகுதியினரைப் பொருத்தவரை அவர் செய்தது தவறில்லை. இதுதொடர்பாகப் பேசிக்கொன்டே போகலாம்.ஆனால், கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா அல்லது நண்மையா என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவர் எவருக்காக தமிழினத்தை உதறிவிட்டுச் சென்றாரோ, அவர்கள் பார்வையில் கருணா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பொறுத்து கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா இல்லையா என்பது புலப்படும். கருணா பற்றிய தேடல்களின்பொழுது லங்கா வெப் எனும் ஆங்கில இணையத்தளம் ஒன்று கண்ணில் பட்டது. போர்க்காலத்தில் ராணுவத்தினரின் சாகசங்களையும், புலிகளின் தோல்விகளையும் காவிவந்த ஒரு சிங்கள இனவாத இனையத்தளம். இத்தளத்தில் கருணாவுக்கென்று சிறப்பான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பல சிங்கள புத்திஜீவிகளின் பார்வையில் கருணா சிங்கள தேசத்திற்கு எந்தளவு தூரத்திற்கு அவசியமானவர் என்பது ஆய்ந்தறிந்து எழுதப்பட்டிருக்கிறது. இத்தளத்திலிருந்து இத்தொடருடன் சம்பந்தப்பட்ட சில கட்டுரைகளை மொழிபெயர்த்து இங்கு இனிமேல் இணைக்கவிருக்கிறேன். எனது புனைவுகளை எழுதுகிறேன் என்று கூறும் சிலருக்காக தவறாமல் நான் எடுக்கும் ஆக்கத்தின் மூலத்தையும் இணைத்துவிடுகிறேன்.
  6. இது வேற லெவல் ......! 😂
  7. எல்லாரும் இங்கயும் லைக்கை அள்ளி வீசுங்கோ 😁
  8. சரி செய்தாயிட்டு, பார்க்கவும்.
  9. யோ பெரிய‌ப்பா உங்க‌ளுக்கு குசும்புத் த‌ன‌ம் கூடி போச்சு ஹா ஹா 😁 தேர்த‌ல் முடிவு வ‌ந்த‌ போது யாழில் தேர்த‌ல் ப‌திவுக‌ளை அதிக‌ம் இணைத்த‌து நான் தான் ஹா ஹா 😁 யாழ்க‌ள‌ ஜ‌பிஎல் போட்டியும் த‌டை ப‌ட்ட‌தால் சிறு ஓய்வு ஹா ஹா 😀 போட்டி மீண்டும் அர‌பி நாட்டில் ந‌ட‌க்கும் போது போட்டி புள்ளிக‌ளை ச‌ரியாக‌ போட‌னும் ஹா ஹா க‌ட‌சி இட‌த்தை நீங்க‌ள் தான் பிடிப்பிங்க‌ள் போல் தெரியுது பாப்போம் ஹா ஹா 😁
  10. பையனைக் கண்டது சந்தோஷம்😀. ஆனாலும் தேர்தலுக்கு பின்னால் இவ்வளவு காலம் ஒதுங்கியிருக்காமல் இருந்திருக்கலாம்☺️ பச்சை குத்தும் அனுமதி கிடைத்தால் @அன்புத்தம்பி க்கு பார்த்து பதமாக குத்துங்கோ. அவர்தான் இப்ப பக்திப் பிரவாகமாக இறைவனிடம் கையேந்துங்கள் என்கின்றார்!
  11. கோபி - சுதாகர் அலப்புகள். கொரோனோ சீசன் - ll பகிடிகள் ☺️
  12. கருணா லண்டன் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலம் தவறானதாக இருக்கலாம். அது உண்மையாக இருந்தால்க் கூட சமாதானத்தை விரும்பும் இலங்கை மக்களைப்பொறுத்தவரை கருணா ஒரு உண்மையான நாட்டுப்பற்றாளர் ஆகும். வன்னியின் பயங்கரவாதக் காட்டேறியினை எதிர்த்து, துணிச்சலாக அவனை எதிர்கொண்டவர் எங்கள் கருணா அம்மான். இரத்தப் பசிகொண்ட வன்னிப் பயங்கரவாதிக்கும், அவனது சக்காக்களுக்கும் சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்து, இறுதியில் எமது ஜனாதிபதியின் முற்றான சம்மதத்துடனும், ஆசீருடனும் எமது ராணுவத்தினர் வன்னிக் காட்டேறிகளை அழித்து முடிக்கும்வரை எமக்குத் துணையாக வந்தவர் எங்கள் கருணா அம்மான். எமது பாதுகாப்புச் செயலாளர் உண்மையிலேயே கருணாவுக்கு போலியான கடவுச் சீட்டினை வழங்கி அவரை லண்டன் அனுப்பிவைத்திருந்தார் என்றால், ஒரு உயிரைக் காக்க அவர் எடுத்த நற்செயலாகவே இதனை நாம் பார்த்தல் அவசியம். இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தினை அழிப்பதில் கருணா ஆற்றிய பங்கு மதிப்பிட முடியாதது. ஆகவே, அவர்மீது பொய்யான வழக்குகளைப் பதிவுசெய்து அவரைக் கைதுசெய்ய பல சர்வதேச அமைப்புக்களும் உள்நாட்டு மனிதவுரிமை அமைப்புக்களும் கடுமையாக முயற்சி செய்யும் என்பது மறுக்கமுடியாதது. சிங்களத்தின் இக்காலத் துரோகிகளான ரணிலும் அவரது கூட்டமும் கருணாவுக்கு எப்போதுமே தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கப் போகிறார்கள். இன்று கருணா அரசியலில் இறங்கியிருப்பதை விமர்சிக்கும் ரணில், தனது இரட்டைச் சகோதரனான வன்னிப் பயங்கரவாதி பிரபாவின் அட்டூழியங்கள் தொடர்பாக வாயே திறப்பதில்லை.
  13. எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் ......! 💞
  14. வணக்கம் வாத்தியார்......! ஆண் : கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான் கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீா் வழியுதடி கண்ணே ஆண் : தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்ன பூக்கள் பாா்க்கையில் தேகம் பாா்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை ஞாபகம் மேகம் ரெண்டு சோ்கையில் மோகம் கொண்ட ஞாபகம் ஆண் : வாயில்லாமல் போனால் வாா்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்......! ---காதல் ரோஜாவே---
  15. Aayiram Poi Tamil Movie Jaishankar, Vanisri and Manorama on Pyramid Music composed by V. Kumar. காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே பெ: அழகு என்பதும் மெய்யே மெய்யே ஆ: ஓஹோ….ஓ.. பெ: ஆசை என்பதும் மெய்யே மெய்யே பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
  16. 23-11-2008 குஞ்சுப்பரந்தன் முறியடிப்புச் சமர் தவிபு அதிரடிக்காரப் போராளிகள் .
  17. 10-12-2008 கிளிநொச்சி சம நேரத்தில் புதுமுறிப்பு மற்றும் அறிவியல் நகரில் நடந்த முறியடிப்புத் தாக்குதலின் முடிவாய் (நிற்கும் புலிவீரர்களில் சிலபேர் அதிரடிப்படைஞர் ஆவர்) 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு - சிங்களவனின் சடலத்தை கைப்பற்றி இழுத்து வரும் காட்சி' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'பின்வாங்கி ஓடும் சிங்களப் படையினர் தமது தோழர்களின் சடலங்களை காவிச் செல்லும் பரிதாப காட்சி' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு மண்ணரண் மீதில் ஏறி நிற்கும் எமது மகளீர் குறிசூட்டுநர்' 'அறிவியல்நகர்' 'அறிவியல்நகர்' 'அறிவியல்நகர்' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'அறிவியல்நகர்' 'அறிவியல்நகர்' 'அறிவியல்நகர்' 'புதுமுறிப்பு' 'புதுமுறிப்பு' 'அறிவியல்நகர்'
  18. 11/04/2007 பாலமோட்டை முறியடிப்புச் சமரின் முடிவாய் அள்ளியவை கைப்பற்றிய சடலங்கள் செ.ச. ஊடாக ஒப்படைக்கப்படும் காட்சி:
  19. அஸ்வினின் அபார சுழற்சிகள்.👌
  20. 7. கருணா குழு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டுள்ளதையடுத்து அக்கட்சிக்கு மக்களிடையே பாரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாகப் பத்மினி கூறுகிறார். "நாம் ஒரு மக்கள் ஜனநாயக அமைப்பாக இயங்குவதால் எம்மைக் கருணா குழுவென்றோ அல்லது கிழக்குப் புலிகள் என்றோ அழைப்பதை எதிர்க்கிறோம்" என்று அவர் கூறினார். "தமிழ்மக்களை ஈழம் எனும் சாத்தியமற்ற கனவைக் கொண்டு புலிகள் எமாற்றி வருகிறார்கள். பிரபாகரனோ அல்லது அவரது ஆதரவாளர்களோ உண்மையாகவே சமாதானத்தில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது. 2002 சமாதானப் பேச்சுவார்த்தைகளை தம்மைப் பலப்படுத்தவே பாவிப்பதாக புலிகளின் தலைமை போராளிகளுக்குக் கூறியிருந்தது. அவர்கள் ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்க்கப்போவதில்லை என்பதை அறிந்துகொண்டபின்னர் அவர்களை விட்டு விலகி வருவதைத்தவிர வேறு வழிகள் எமக்கு இருக்கவில்லை" என்றும் அவர் கூறினார். 8. மேலும் அந்த அதிகாரி இலங்கை அரசின் உத்தியோகபூர்வ நாளிதழான டெயிலி நியூஸின் ஆசிரியர் பந்துல ஜயசேகரவுடன் பேசியபொழுது பத்மினி கூறிய அதே விடயங்களை அவரும் கூறினார். புரட்டாதி 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஜெனீவாப் பேச்சுக்களில் இருந்து நாடு திரும்பும்போது கருணா குழுவின் தலைமை உறுப்பினர்கள் சிலரை தான் லண்டனில் சந்தித்ததாகக் கூறிய அவர் "ஜனநாயக நீரோட்டத்திலிணைந்து கனவான்களின் உடைகளை அணிந்தபின்னர் ஆயுதப் போராட்டம் தோல்விகரமானது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அவர்களுக்குப் போராட்டத்தில் பற்று இல்லாமற்போய்விட்டது. அவர்கள் தம்மைக் கிழக்குப் புலிகள் என்று அழைப்பதை வெறுக்கிறார்கள். அவர்கள் தம்மை தமது கட்சிப் பெயரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்" என்றும் கருணாவின் கட்சியின் அறிக்கைகளுக்காக தனது நாளிதழில் தொடர்ச்சியாக ஒரு பகுதியினை தாம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். 9. தனது 10 நாள் தகவல் அறியும் பயணத்தினை இலங்கையில் முடித்துக்கொண்டு வெளியேறும் தறுவாயில் ஐ நா வின் யுத்தத்தில் பாதிக்கப்படும் சிறுவர் நலன் தொடர்பில் செயற்படும் அலன் ரொக் பின்வருமாறு கூறுகிறார், " கருணா துணைராணுவக் குழுவினரால் சிறுவர்கள் நாளாந்தம் கடத்தப்பட்டு வருகிறார்கள். இலங்கை அரச ராணுவம் கருணா குழுவிற்கு உதவிவருவதுடன், சிறுவர்களைக் கடத்துவதிலும் பங்களிப்புச் செய்துவருகிறது என்பதற்கான பலமான ஆதாரங்களை நான் சேகரித்திருக்கிறேன். சோதனைச் சாவடிகளில் ராணுவத்தால் தடுத்துவைக்கப்படும் தமிழ் இளைஞர்களும் சிறுவர்களும் கருணா குழுவினருக்குக் கையளிக்கப்பட்டு கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள்" . தமது பிள்ளைகளை கருணா குழு கடத்திச் செல்வது தொடர்பான முறைப்படுகளை பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுக்கும் பொலிஸார், "கருணாவினாலேயே நாம் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம், அவருக்கெதிராக எம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது. புலிகள் உங்கள் பிள்ளைகளைக் கொண்டு சென்றபோது நீங்கள் முறையீடு செய்யாததுபோல் இப்போதும் இருங்கள். உங்கள் பிள்ளைகளை இப்போது கடத்தியவர்களும் தமிழர்களே" என்று பெற்றோரிடம் கூறியதாக அலன் ரொக் மேலும் தெரிவித்தார். 10. புலிகளிடமிருந்து கருணா விலகிச் சென்றதும், அவர் இன்று பூண்டிருக்கும் "மதிப்பிற்குரிய" எனும் நாமமும் அவரது பயங்கரவாதத்தினை மறைக்கப் போதுமானவை அல்ல. அவர் புலிகள் இயக்கத்திலிருந்தபோது கையாண்ட அதே தீவிரவாதச் செயற்பாடுகளையும் உத்திகளையும் இப்போதும் அவரது குழு கையாண்டு வருகிறது. சிறுவர்களை ஆயுதப் பயிற்சிக்காகக் கடத்துவது, கப்பத்திற்காகக் கடத்துவது போன்றவை அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவைதான். அரசியல்வாதிகளின் படுகொலைகள் என்பது கருணாவுக்குப் பரீச்சயமானதுதான். ரவிராஜின் படுகொலைமூலம் தான் தற்போதும் அதே தீவிரவாதத்தினைப் பின்பற்றும் ஆயுததாரிதான் என்பதை கருணா நிரூபித்திருக்கிறார். புலிகள் கருணா பிளவு இலங்கை ராணுவத்திற்குச் சாதகாமான போர்க்களம் ஒன்றை உருவாக்கியிருப்பதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் கொழும்பு அரசியல்த் தலைமைப்பீடம், தமக்கும் கருணாவுக்கும் இடையில் இருக்கும் தொடர்பினை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள இன்றுவரை மறுத்தே வருகின்றனர். ஆனாலும், கருணாவுக்கும் அரச ராணுவத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு இலங்கை மக்கள் அனைவராலும் பரவலாக அறியப்பட்ட ஒரு விடயம் என்றால் அது மிகையில்லை. இது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் பாதகமானது. அலன் ரொக் போன்ற சர்வதேச அதிகாரியின் அறிக்கை மூலம் கருணா குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து அமெரிக்கா உட்பட, உதவி வழங்கும் நாடுகள், இணைத்தலைமை நாடுகள் என்பன இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கருணா குழுவுக்கும் இலங்கை அரச ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பினை முற்றாகக் கைவிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். போரில்லாத அரசியல் பொறிமுறை ஒன்றின் மூலமே இப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்படுதல் வேண்டும் என்று பிளேக்கின் செய்திக் குறிப்புக் கோருகிறது.
  21. 5. பங்குனி 2006 இல் கருணா குழு தனது முதலாவது அரசியல் அலுவலகத்தை மட்டக்களப்பில் திறந்தது, அக்கட்சிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற பெயரையும் இட்டு தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொண்டது. அதன் பின்னர் கொழும்பு, வவுனியா, திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் பல அலுவலகங்களைத் திறந்துள்ளதோடு யாழ்ப்பாணத்திற்கும் தனது செயற்பாடுகளை விஸ்த்தரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. எமது அதிகாரியொருவர் அண்மையில் கருணாவின் கொழும்பு அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். பல பொலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில், பாரிய பாதுகாப்பு அரண்கள் புடைசூழ கொழும்பின் மிகவும் பிரசித்திபெற்ற பகுதியொன்றில் அவரது பாரிய வாசஸ்த்தலம் அமைந்திருந்தது. அவரது உல்லாசமான வாசஸ்த்தலத்தின் வரவேற்பறையில் கருணாவின் பாரிய உருவப்படங்கள், ராணுவச் சீருடையில் அல்லாமல் கனவான்களின் சீருடையில் காணப்பட்டன. 6. கருணாவின் அரசியல் கட்சியின் செயலாளர் பத்மினி என்பவருடன் பேசும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. இறுதிவரை தனது இயற்பெயரை சொல்ல மறுத்துவிட்ட அவர், புலிகளை "ஏகாதிபத்தியவாதிகள்" என்றும், "ஜனநாயக விரோதிகள்" என்றும் குற்றஞ்சாட்டியதோடு, இதனாலேயே கருணா அவர்களிடமிருந்து பிரிந்துசெல்ல நேர்ந்ததாகக் கூறினார். அவர் மேலும் கூறுகையில் இலங்கையின் இறையாண்மையினையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் தாம் முழுதாக ஏற்றுக்கொள்வதாகவும், இவற்றின அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வு இடம்பெறவேண்டும் என்று தமது கட்சி கோருவதாகவும் கூறினார். பிரபாகரனின் புலிகளிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவே தாம் ஆயுதம் ஏந்தியுள்ளதாகவும், அரச ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் எண்ணம் எதுவும் தமது குழுவிற்கு இல்லையென்றும் கூறினார். "நாம் எமது சொந்தப் பலத்திலேயே இயங்குகிறோம், ஏகாதிபத்திய புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை நாமும் ஆயுதங்களைக் கீழே வைக்கப்போவதில்லை. நாம் தற்போது புலிகளுடன் மரபுவழியிலான பாரிய போர் ஒன்றினுள் ஈடுபட்டிருக்கிறோம். புலிகளைப்போல் நாம் தீவிரவாதத்திலோ அல்லது தற்கொலைத் தாக்குதல்களிலோ ஆர்வம் கொண்டவர்கள் கிடையாது" என்றும் அவர் கூறினார்.
  22. 4. மனிதவுரிமை கண்காணிப்பாளர்களும் விடுதலைப்புலிகளும் கருணா குழு இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபடுவதுடன், புலிகள் இயக்கத்தின் போராளிகள் மீது கெரில்லா முறையில் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகள் கருணா குழுவுடன் சேர்ந்து இயங்குவதும், அக்குழுவிற்கான உதவிகளை வழங்குவதும் இலங்கையில் பரவலாக அறியப்பட்ட விடயமாக இருந்தபோதும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை இதுவரை எவரும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. அண்மையில் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை விசாரிக்கும் ஐ நா வின் அதிகாரியான பிலிப் அல்ஸ்ட்டன் கருத்துக் கூறுகையில், "கருணா குழுவிற்கும் ராணுவத்திற்கும் இடையிலான நெருக்கமான உறவு தொடர்பான சந்தர்ப்ப ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. கிழக்கில் இயங்கிவரும் சமூக அமைப்புக்கள் பலவற்றிடமிருந்து எனக்குக் கிடைத்த நம்பகரமான அறிக்கைகளின்படி கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்கள் பின்னர் அரச ராணுவமுகாம்களிலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார். அத்துடன், கிழக்கில் இயங்கிவரும் அரசுசாரா சமூக நலன் அமைப்புக்களின் பொதுவான தலைமை அதிகாரி எம்மிடம் பேசும்போது, கிழக்கில் கருணா குழுவினரின் முகாம்கள் ராணுவ முகாம்களிலிருந்து 50 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், சில இடங்களில் நேரெதிராக அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் அலன் ரொக்கின் அறிக்கையும் கருணா குழுவினருக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பினை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.
  23. இலங்கை ராணுவம் கருணாவுடன் நெருங்கிச் செயற்பட்டு வருகிறது : அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக் வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்திகளின் சாராம்சம் காலம் : கார்த்திகை 14, 2006 1. கடந்த 2004 பங்குனி மாதம் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்துசென்ற மட்டக்களப்பைத் தளமாகக்கொண்ட கருணா குழு தலைநகர் கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் தனது அரசியல் அலுவலகங்களைத் திறந்திருக்கிறது. இக்குழுவின் பிரச்சாரப் பிரிவு அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைவது தொடர்பாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதனது ராணுவப் பிரிவு கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் இன்னமும் ஈடுபட்டே வருகிறது. அநேகமான அவதானிகளின் கருத்துப்படி இலங்கையின் ராணுவம் கருணா குழுவுக்கான அனைத்து உதவிகளையும் செய்துவருவதுடன், தமது பொது எதிரியான விடுதலைப் புலிகளை அழிக்க கருணா குழுவைப் பாவித்து வருகிறது என்று தெரியவருகிறது. தம்மை ஒரு அரசியல் அமைப்பாக மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கருணா குழு கோரிவருகின்றபோதும்கூட, அது தனது பயங்கரவாத நடவடிக்கைகளை இதுவரை கைவிடவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது. கடந்த கார்த்திகை 10 திகதி பிரபல தமிழ் அரசியல்வாதியும், புலிகளின் அரசியல் ரீதியான கொள்கைகளை ஏற்றுக்கொண்டவரும், மனிதவுரிமை வாதியுமான நடராஜா ரவிராஜைக் கொன்றது கருணா குழுவினர்தான் என்பது அரசாங்கத்திலுள்ள பலரின் கருத்தாக இருக்கிறது. அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுவரும் சிறார்கள் தொடர்பான ஐ நா அதிகாரி அலன் ரொக் அண்மையில் தனது விஜயத்தின்போது, சிறுவர்களைக் கடத்திச் சென்று ராணுவ நடவடிக்கைகளில் கருணா ஈடுபடுவதாகவும், சில வேளைகளில் இலங்கை ராணுவமே கருணாவுக்கான ஆட்பிடித்தல்களைச் செய்கின்றமைக்கான உறுதியான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியிருப்பது எமது தூதுவராலயம் இலங்கை அரசிடம் கருணா குழுவுக்கும் அரசிற்கும் இடையிலான தொடர்பு பற்றி கேள்விகேட்கவேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. 2. 2004 பங்குனி மாதம் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகிய கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று தனக்கான குழுவொன்றினை உருவாக்கி புலிகளுக்கெதிராக இயங்கி வருகிறார். 1987 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தளபதியாகவிருந்த கருணா தன்னுடன் பலநூற்றுக்கணக்கான போராளிகளையும் அழைத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறச்து. சிலவேளை இந்த எண்ணிக்கை புலிகளின் மொத்த போராளிகளின் கால்பங்காவது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. பிளவு முதன்முதலில் தோற்றம் பெற்றபொழுது அது ஒரு உள்வீட்டுப் பிரச்சினை என்றே புலிகளியக்கம் கூறியது. ஆனால், தற்போது அது ஒரு அரச ராணுவத்தின் கீழ் இயங்கும் துணைராணுவக் குழு என்றும், 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த ஒப்பந்தப்படி அக்குழுவிடமிருந்து அரசாங்கத்தினால் ஆயுதங்கள் களையப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ இன்றுவரை கருணா தொடர்பான பிரச்சினை புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினையென்றும் தமக்கு அப்பிரச்சினைக்கும் தொடர்பேதும் இல்லையென்றும் மறுத்தே வருகிறது. 3. கருணா குழு தொடர்ந்தும் துணைராணுவக் குழுவாக இயங்கிவருகிறது. 2006 புரட்டாதி மாதம் 27 அன்று சுயாதீனப் பத்திரிக்கையான டெயிலி மோனிங் லீடர் பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படச் செய்தியில் விசேட ஆயுதங்களைக் கையாளும் குறைந்தது 120 உறுப்பினர்களைக் கொண்ட கருணா குழுவின் விசேட படைப்பிரிவொன்றின் பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வு வெளியாகியிருந்தது. மிக விரைவில் கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டியடிக்கும் நடவடிக்கையில் இந்தக் கருணா குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதன் தளபதி கூறியிருந்தார். புலிகளின் அரசியல்ப் போராளிகள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பணிமனைகள் மீதான கருணா குழுவின் தாக்குதல்களையடுத்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் பலவீனமடைந்துவருவது தெரியவருகிறது. இதனையடுத்து புலிகள் தமது அரசியல் பணிமனைகளை மூடிவருவதுடன், தமது அரசியல்ச் செயற்பாடுகளையும் முற்றாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கைவிட்டுள்ளனர்.
  24. புலிகளை அழிக்க கருணாவை முன்னிறுத்தும் கொழும்பு அரசாங்கம் : அமெரிக்க ஆய்வுக்குழு தகவல் காலம் : ஆடி 14, 2004 மூலம் : தமிழ்நெட் மற்றும் தமிழ்னேஷன் புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவின் பிரிந்து செல்லுதலை அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்திலிருப்பவர்கள் ஆதரித்துவருவதாகவும், இதற்கு அமெரிக்க அரசின் தந்திரோபாய ஆசியும் இருப்பதாகவும் அமெரிக்காவின் பூலோக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். "புலிகளை நிலைகுலைய வைத்து, கட்டாயப் போர் ஒன்றிற்குள் அவர்களை இழுத்து, இறுதியில் பலவீனப்பட்டுப்போன புலிகளின் ராணுவப் பலத்தை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் முற்றாக அழிப்பதே இலங்கை அரசின் திட்டமாகும்" என்று Strategic Forecasting (Stratfor) எனும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். கருணா தொடர்ச்சியாக புலிககளின் தலைமையை கடுமையாக விமர்சித்தும், அதற்கெதிராகச் செயற்பட்டு வருவாராகவிருந்தால் புலிகளுக்கும் அவரது குழுவிற்குமிடையிலான மோதல்கள் மீள தொடங்கும் அபாயம் இருக்கின்றது. இது கொழும்பிலிருக்கும் அரசால் மிக விருப்பத்தோடு எதிர்ப்பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவ்வாறானதொரு நிலையினை ஏற்படுத்த அது தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதும் திண்ணம்" என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். "உள்வீட்டு மோதல்களால் புலிகள் இயக்கம் கடுமையாகப் பலவீனமடைவதை எதிர்பார்த்து நிற்கும் இலங்கையரசு, அதன்பின்னர் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் ஏதுநிலைகளையும் அவதானிக்க விரும்புகிறது" என்றும் இவ்வமைப்பினர் கருதுகின்றனர். இதனாலேயே கருணாவுக்கான தந்திரோபாய உதவிகளை இலங்கை ராணுவம் அவரது பிரிவின்போது வழங்கியது என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அவரது பிரிவு உயிர்ப்புடன் இருப்பதனை உறுதிப்படுத்த தொடர்ச்சியான உதவிகளை இலங்கை அரசு அவருக்கு வழங்கிவருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். உள்வீட்டு பிளவுகளால் புலிகள் இயக்கத்திற்குள் மீண்டும் உருவாகாகக்கூடிய கரந்தடிப்படைப் போர் ஒன்றிற்குள் இயக்கம் இழுக்கப்பட்டு, பலவீனமடையும் என்று எதிர்பார்க்கும் அரசு இறுதியில் அவர்களை முற்றாக அழித்துவிடலாம் என்று கருதுவதாக இந்த ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அரசிடமிருந்து தனக்கு உதவிகள் கிடைப்பதை கருணா தொடர்ச்சியாக மறுத்துவருகின்ற போதிலும்கூட, இலங்கை அரசாங்கத்தின் பல பிரிவுகள் கருணாவுக்கு உதவிவருவதனை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கின்றன. தனது 6 வார கிளர்ச்சி புலிகளால் மிக இலகுவாக முறியடிக்கப்பட்டதையடுத்து சுமார் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்த கருணா மீண்டும் கொழும்பில் தோன்றி இலங்கை அரச வானொலிக்கும், பி பி ஸி தமிழ்ச் சேவைக்கும் சில செவ்விகளை வழங்கியிருக்கிறார். "புலிகளால் தான் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மீண்டும் வெளியே வந்திருக்கும் கருணா, புலிகளை அழிக்கும் தனது நோக்கத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்" என்று இந்த ஆய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கருணாவுக்கான ஆதரவு மட்டக்களப்பில் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர். பி பி ஸி தமிழ்ச்சேவையுடனான செவ்வியின்போது, தான் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகக் கருணா தெரிவித்திருந்தார். இதுபற்றி இந்த ஆய்வாளர்கள் கூறுகையில், "அரசியலில் ஈடுபடும் தனது விருப்பத்தினைக் கருணா வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதன் மூலம், புலிகளினால் இலக்குவைக்கப்படக்கூடிய ஒரு நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார்" என்று தெரிவிக்கின்றனர். "இவ்வாறு புலிகளின் இலக்காக மாறி, புலிகளுக்கும் தனக்குமான தொடர்ச்சியான பகையினை வளர்த்தெடுப்பதன் மூலம் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று அவரும், இலங்கை அரசும் நம்புவதாகத் தெரிகிறது" என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. "ஆனால், புலிகள் இலங்கை அரசுக்கெதிராக பல்லாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். ஆகவே, இருபக்கத்திலும் பாரிய இழப்புக்கள் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்று வருவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது" என்று அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு கூறுகிறது. இந்த ஆய்வாளர்களின் கணிப்பின்படி, போர் ஒன்று மீளத் தொடங்குமாக இருந்தால், புலிகள் மிகவும் பலவீனப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் இதுவரை எதிர்பார்த்துப் போராடிவரும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தினை இதனால் இழப்பார்கள் என்றும் எதிர்வுகூறுகிறது. "அதேவேளை, காயப்பட்ட புலியை பொறிக்குள் சிக்கவைப்பதென்பதும் ஒரு அபாயகரமான விளையாட்டே" என்றும் இவ்வமைப்பு கூறுகிறது. "பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்க நிலையினை அடைந்திருக்கின்றன. புலிகள் தமது கோரிக்கைகளை விட்டுக்கொடுத்தாலோ அல்லது அரசு பலவீனப்பட்டாலோ அன்றி, இப்பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று கூறமுடியாது" என்றும் இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.
  25. தமிழீழத்திற்கான போராட்டமும் இந்தியாவும் இந்திய றோவின் உப தலைவரின் இலங்கை வருகையினையடுத்து திகைப்படைந்துள்ள அரசியல் மற்றும் ராணுவத் தலமைப்பீடங்கள் - இனவாத பத்திரிக்கையில் வெளியான கட்டுரை காலம் : 21, ஐப்பசி 2008 இனவாதிகளின் கட்டுரையினைப் படிக்குமுன், ஒரு சிறிய முன்னோட்டத்துடன் இதனை ஆரம்பிக்கலாம். "ஒரு விடயம் பற்றி என்னதான் சொல்லப்பட்டாலும், அதை எவர்தான் சொல்லியிருந்தாலும், அதனை சீர்தூக்கிப் பார்த்து உண்மைதனை அறிதலே சரியான அறிவுடமையாகும்" என்கிறது திருக்குறள். ஒரு முழுப் பொய்யைவிட, அரை உண்மைகளை உறுதிப்படுத்துவது கடிணமானது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் றோவின் உபதலைவர் தொடர்பாக இனவாதிகளின் ஊதுகுழல் பயப்படுவது அவருக்கும் புலிகளுக்கும் முன்னர் இருந்த தொடர்புகளுக்காக அல்லாமல், இன்று சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் அச்சு நோக்கி நகர்ந்துவரும் மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் கொடுக்கவிருப்பதாகக் கருதப்படும் அழுத்தம் பற்றியே என்றால் அது மிகையில்லை. ஆகவேதான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை விமர்சிப்பதனை விடுத்து, அதனைக் காவிவந்து தமக்கு நினைவூட்டக்கூடும் என்று சிங்களம் கருதும் சந்திரசேகரன் எனும் அந்த றோ அதிகாரிமீது ஐலண்ட் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையென்னவென்றால் சந்திரசேகரனும் இன்னும் ஒரு றோ அதிகாரியும் பூட்டான் , திம்புவில் 1985 இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்கள் என்பதும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை பிசகின்றி முன்னெடுத்துச் செல்வதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதும் சிங்கள இனவாதிகள் அறியாததல்ல. சரி, இதன் பின்னணியில் தி ஐலண்ட் எழுதியிருக்கும் கட்டுரையினைப் படிக்கலாம். "புலிகளின் அனுதாபியென்று கருதப்பட்டும் முன்னாள் றோ உயர் அதிகாரி, சந்திரன் எனப்படும் சந்திரசேகரனின் கொழும்பு விஜயம் கொழும்பில் அரசியல் வட்டாரங்களிலும், ராணுவ வட்டாரங்களிலும் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. பாராளுமன்ற மேலதிகச் செயலாளரான சந்திரன் 1980 களில் இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கான பயிற்சிமுகாம்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். பின்னர், புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்ட அவர் யாழ்தேவி புகையிரதம் மீதான தாக்குதல், 1985 ஆம் ஆண்டு அநுராதபுரம் மீதான தாக்குதல்களுக்கு புலிகளுக்கு உதவியவர். இவ்வாறான தாக்குதல்களின்பொழுது புலிகள் இவருடன் தொடர்ச்சியான தொடர்பிலிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. அதேவேளை ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் பத்மநாபாவுடனும் நெருங்கிச் செயற்பட்ட சந்திரன், பத்மநாபாவின் சென்னை விஜயம் குறித்து புலிகளுக்குத் தகவல் வழங்கி 1990 இல் அவர் கொல்லப்பட உதவிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. பத்மநாபாவின் நெருங்கிய தோழர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது சென்னை விஜயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பத்மநாபாவின் தோழர்களின் கூற்றுப்படி சந்திரனைத் தவிர பத்மநாபாவின் வருகையினை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சந்திரனுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்ததாகக் கருதப்படும் தொடர்பினையடுத்து, 1991 ஆம் ஆண்டின் ராஜீவ் கொலைக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று றோவே அஞ்சும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. இதனால், சந்திரன் றோவிலிருந்து விலகி மேற்படிப்பிற்காக அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார். ஐலண்டிற்குக் கிடைத்த தகவல்களின்படி, சந்திரன் புலிகளுக்கு பயிற்சிகள், திட்டமிடல், பிரச்சார உத்திகள் தொடர்பாக பல உதவிகளைப் புரிந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. சென்னையில் அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சந்திரன் அதன்மூலம் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாட்டில் நடத்திவருகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்திரன் இலங்கைக்கு முன்னரும் பலதடைவைகள் விஜயம் செய்திருந்தபோதும், தற்போதைய விஜயமானது சுற்றிவளைக்கப்பட்டு அழியவிருக்கும் புலிகளை மீட்பதற்காகவே என்று தெரியவருகிறது. இதுவரை அவர் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா மற்றும் ஈ பி டி பி யின் தலைவர் டக்கிளஸ் ஆகியோரைச் சந்தித்திருக்கும் சந்திரன் இவ்விடயம் தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது. குறிப்பாக கருணாவுடனான அவரது கலந்துரையாடல்களின்போது, புலிகளின் செயற்பாடுகளுக்கு கருணா குழு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாதென்று கேட்டுக்கொண்டதாக ஐலண்ட் பத்திரிக்கைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. கருணா இந்தியாவில் பயிற்சியெடுத்த காலத்தில் சந்திரனே அவருக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சந்திரனின் கோரிக்கையினை முற்றாக மறுத்துவிட்ட கருணா, புலிகளுடன் சமரசம் என்கிற பேச்சிற்கே இடமில்லையென்றும், புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும் என்றும், அதன் பின்னரே தீர்வு தொடர்பான பேச்சுக்கள பற்றி சிந்திக்க முடியும் என்று கூறியதாகவும் தெரியவந்திருக்கிறது. 1989 இல் வடக்குக் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ராணுவமான தமிழ்த் தேசிய ராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்குவதில் சந்திரனே முன்னின்று செயற்பட்டிருந்தார். புலிகளுக்குக் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய ராணுவம் வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில்க் கூட தமிழ்த் தேசிய ராணுவத்திற்கென்று கார்ல் குஸ்டவ் பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளை வரவழைத்துக் கொடுத்திருந்தார். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே தமிழ்த்தேசிய ராணுவத்தை எளிதில் வீழ்த்திய புலிகள் தமக்கான புத்தம் புதிய பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளையும் சந்திரன் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொண்டனர். பின்னர் அதே உந்துகணைகள் இலங்கை ராணுவத்தின்மேல் புலிகளால் பாவிக்கப்பட்டன. புலிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், புலிகள் தென்னிலங்கையில் நாசகாரத் தாக்குதல்களை நடத்தலாம் என்கிற சூழல் நிலவும் இந்தத் தருணத்தில், புலிகளின் அனுதாபியான றோ அதிகாரியொருவரை இலங்கைக்கு வர அனுமதிப்பதும், சுதந்திரமாக உலாவுவதை அனுமதிப்பதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
  26. வணக்கம் அண்ணா. வந்து இறங்கினோன, இந்தியன் ஆமிக்காரன் நாய் குலைச்சா சுடுறமாரி எல்லா பக்கமும் கருத்து மழை பொழிய வேணும் 🤣. அப்படி செய்தால் தானியங்கி தானா இயங்கும். எனக்கு எல்லாம் கிளியர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.