தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று அனைவரைக் காட்டிலும் ஒற்றை மனிதனாகப் பிரகாசித்து இலங்கையின் ஒருமைப்பாட்டினை நேசிக்கும் கருணா அம்மான்
காலம் : தை, 18, 2010
இணையம் : லங்கா வெப்
மூல ஆக்கம் : சார்ள்ஸ் பெரேரா
இலங்கையில் தமிழர்கள் இலங்கையர் எனும் அடையாளத்தைத் துறந்து தங்களுக்கென்று தமிழர்கள் எனும் அடையாளத்தைத் தேட முனைகிறார்கள். சிங்களவர்களை பெரும்பான்மையினமாக ஏற்றுக்கொள்ள இன்றுவரை மறுத்தே வருகிறார்கள். இல்லாத இனப்பிரச்சினையொன்று இருப்பதாக காட்டிக்கொண்டு சிங்களவர்களுக்குச் சமனான உரிமைகளைக் கேட்கிறார்கள்.
உதாரணத்திற்கு சம்பந்தனையும் அவரது கூட்டாளிகளையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் ஒருபோதுமே ஒருமித்த இலங்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை இலங்கை எனும் நாடு சிங்களவருக்கும் தமிழர்களுக்கிடையேயும் பிரிக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் இருந்துவருகிறது. இவர்களைத்தவிர ஆனந்தசங்கரியாகவிருக்கட்டும் அல்லது டக்கிளஸ் தேவானந்தாவாக இருக்கட்டும், தமது கடிசிகளின் பெயரில்த் தன்னும் இந்த தனித்தமிழ் அடையாளத்தைப் பேணவே விரும்புகிறார்கள். இவர்களுக்கும் அப்பால் தம்மை நடுநிலையான, வெளிப்படையான எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் படித்த தமிழர்களான குமார் டேவிட், பாக்கியசோதி சரவணமுத்து, ராஜன் பிலிப் மற்றும் லின் ஓர்கேர்ஸ் போன்றவர்கள் கூட தமது தமிழ் எனும் அடையாளத்தைக் காவிக்கொண்டு இல்லாத ஒரு இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
கடந்த முப்பது வருடங்களாக பயங்கரவாதம் எனூம் புற்றுநோயுடன் சேர்ந்தே வாழ்ந்தபோதிலும்கூட, தமிழர்கள் ஒருபோதுமே அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களின் மெளனம் பயங்கரவாதத்திற்கான அவர்களது சம்மதமாகவே தெரிந்தது. அதுமட்டும் அல்லாமல் பயங்கரவாதிகளுக்கு தார்மீக ஆதரவும் வழங்கி இலங்கையிலிருந்து தமிழர்களுக்கென்று ஈழம் எனும் தனிநாட்டினை பிரித்து எடுக்கவே அவர்கள் செயற்பட்டார்கள்.
ஆகவே, பயங்கரவாதத்திற்கெதிரான போரினை முன்னெடுக்கும் முழுப் பொறுப்புமே சிங்கள பெளத்தர்களிடம் திணிக்கப்பட்டது. ஏனென்றால், தமிழர்களுக்கு இந்த நாட்டின்மீது பற்று இருக்கவில்லை, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமக்கான நாடொன்றினை இலங்கையில் ஏற்படுத்துவதுதான். பயங்கரவாதத்தினை உதறியெறிந்து, சிங்களவருடன் தோளுக்கு தோள் நின்று பயங்கரவாதத்தினை முறியடித்து நாடு பிளவுபடாமல் காக்குக் போருக்கு தமிழர்கள் உதவவில்லை.
சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதை மறுக்கும் அதேவேளை, சிங்களவரது நாட்டில் தமக்கென்று ஒரு பகுதியினை பிரித்தெடுக்க அவர்கள் பின்னிற்கவில்லை. நாடு பயங்கரவாதிகளால் பிளவுபடுவதைத் தடுக்கும் போரில் ஒரு தமிழராவது இதுவரை தமது உயிரைத் தியாகம் செய்யவில்லை. ஆனால், பயங்கரவாதிகளோடு தம்மையும் இணைத்து, தார்மீக ஆதரவு வழங்கி, பணத்தினை வாரியிறைத்து தாம் பிறந்த நாட்டையே துண்டாடி தமக்கென்று ஒரு தனிநாட்டினை உருவாக்கவே முனைந்தார்கள்.