Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    19152
    Posts
  2. valavan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1570
    Posts
  3. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    1866
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/23/21 in all areas

  1. சாகசம் என்றால் இதுதான்........! 🌹
  2. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் "செம்பாறை புத்தளத்தின் செழிப்பு மண்ணடா! சேர வேண்டும் இஸ்லாத்தோடு இன்பத்தமிழடா!" த.வி.பு.இன் நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெற்றி நிச்சயம்- 1" இறுவட்டிலுள்ள 'யாழ் பாடும்' என்னும் பாடலிலிருந்து. பாடல் எழுதியவர் "கல்கிதாசன்" 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) வீரவேங்கை அசீம் அஷாத் 54) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 55) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 56) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 57) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 59) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 60) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 61) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 64) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. 65) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 --> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 67) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 68) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 --> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் நான்காம் ஈழப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R ஈழநாதம்: 17/09/1990 ஈழநாதம்: 17/06/1990 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  3. தாயக பள்ளி நாட்களில் சாக்கு பை மாட்டி கொண்டு குதித்து ஓடியது நினைவில் உண்டா.?
  4. இதில் நிச்சயம் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் இருக்கிறது. நிச்சயம் இவர்கள் ஒரு டீலை போட்டு, திறைசேரி மேற்பார்வையிலாவது, வடக்கு மாகாணத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரும் ஒரு நிதியத்தை உருவாக்கில் பலதை செய்யலாம். இதற்கு எதிர்ப்பு தெற்கில் நிச்சயம் கிளம்பும் என்பதை ஊகித்து, அவ்வாறு எதிர்புகள் எழா வண்ணம் முன்னேற்பாடுகளை செய்யலாம். 2013 இல் சீவி இப்படி ஒரு மாகாண நலன் சார்ந்த அரசியலை முன்னெடுப்பார் என எதிர்பார்த்தேன். கூட்டமைப்பின் எம் பிகள் அரசியல் தீர்வு குறித்து, விசாரணை குறித்து சம நேரத்தில் பேசுவார்கள். அவரவர் அவரவர் வேலை பகுப்பை சரியாக செய்தால் போதும். ஆனால் நடந்ததோ இதன் நேரெதிர். சிவி முழுக்க முழுக்க எம்பிகள் செய்ய வேண்டியதை செய்ய, எம்பிகளோ அவருடன் முறுகுவதை தவிர வேறெதையும் செய்யவில்லை.
  5. அப்படி பார்த்தால் இது ஒரு கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா கதை போல நீண்டு கொண்டே இருக்கும். பகிடியாக ஒரு வழக்கு சொல்வார்கள். கலியாணம் இலட்சியம், கறி சோறு நிச்சயம் என்று. கலியாணம் கட்டினால்தான் கறி சோறு சாப்பிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தால் சில நேரம் கலியாணமே நடக்காது போகலாம், கறி சோறும் கிடைக்காமலே போகலாம். ஆனால் கலியாணம் கட்டுவது எங்கள் இலட்சியம்தான் ஆனால் கிடைக்கும் போது கறி சோற்றையும் சாப்பிடுவோம் என்ற கொள்கை நிலைய நாம் எடுத்தால் - கலியாணம் நடக்காமல் போனாலும், கறி சோறாவது உண்டிருப்போம். Politics is the art of the possible, the attainable — the art of the next best என்கிறார் பிஸ்மார்க். அரசியல் என்பது அடைய கூடியதை அடையும் கலை. இயலுமானதை, அடுத்த சிறந்த தெரிவை வெல்லும் கலை.
  6. கொம்பு இல்லாத சிங்கம்.......! 👌
  7. தமிழீழத் தேசிய எழுச்சி சின்னம் "வாழ்கின்ற காலம்வரை வாழ்த்துங்கள் வீரர்களை பிறர்கென உயிர்க்கொடை கொடுப்பது தெய்வீகம்!" 2002< வன்னியில்
  8. 27/1//2005 அன்று வீட்டிற்கு முன்னுள்ள தெருவின் ஒரு மருங்கில் எழுச்சிக்கொடியால் சோடினை செய்து வாழைத்தண்டில் சிரட்டை வைத்து ஈகைச்சுடரேற்ற காத்திருக்கும் ஓர் தமிழீழக் குடும்பம் துயிலுமில்லத்திற்கு வரேலாத ஆக்கள் இவ்வாறு செய்வதுண்டு.
  9. கடலிலே வீரச்சாவடைந்தோரிற்காக நினைவு வணக்கம் செய்து கடலினுள் வைத்து பொதுச்சுடர் ஏற்றி கடலினுள் விடப்படும் "நினைவுச்சுடர்" "காற்றோடு காற்றாகக் கரைந்து போனவர்கள், கடலோடு கடலாகக் கரைந்து போனவர்கள், அன்னையைவிட அதிகம் அணைத்தது, உன்னைத் தானே! கடலலையே! கடலையே! உரிமையோடு உன்னைக் கேட்கின்றோம் - நீ கரையைத் தொடும் போது எம் மக்களுக்கு காதோடு சொல்லிவிடு, 'விடுதலையை வென்றெடுங்கள், விடுதலையை வென்றெடுங்கள். அப்பொழுது அவர்கள் வருவார்கள்.' " --> மேஜர் பாரதி, தவிபு மகளிர் பிரிவின் அரசியல்துறை துணை பொறுப்பாளர் இப்பண்பாடானது லெப் கேணல் மறவன் மாஸ்டர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்களால் 2000 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தமிழீழம் சிறீலங்காப் படைகளால் வன்வளைக்கப்படும்வரை தொடரப்பட்டது. (Oct 31, 2003 வரை வீரச்சாவடைந்த மொத்த கடற்புலி மாவீரர்கள் 1066)
  10. நினைவுச்சுடர் வேறொரு மா.து. கல்லறை அமைக்கப்பட்டு அதற்கான நினைவுக்கல் வேறொரு மா.து. நாட்டப்பட்டு இரண்டிற்கும் உறவினர்களால் செல்லமுடியாது இருப்பின், பல்வேறு காரணங்களால், "நினைவுச்சுடர்" என்ற ஒன்று உறவினர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். உரியவர்கள் ஒவ்வொரு தேசிய நாளிலும் வந்து அங்கு விளக்கெரித்துவிட்டுச் செல்வர். எனது குடும்பத்தினருக்கான கல்லறை தென்மராட்சியில் இருந்ததால் நாங்கள் கிளிநொச்சி கனகபுரத்தில் இருந்த நினைவுச்சுடரிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று விளக்கெரிப்போம். அது ஒரு தீப்பந்தம் வடிவில் இருந்தது, கீழுள்ளது போன்று. இதற்கும் சில பேரால் செல்லமுடியாது இருக்கும். அவ்வாறு உரியவர்கள் வராமல் இருப்பவைக்கு போராளிகள் ஆளிட்டு விளக்கேற்றுவர். ஒவ்வொரு தடவையும் மாவீரர் நாளன்று து. செல்லும் போது அம்மா, கூடுதலான பூக்களும் சாம்பிராணிக் குச்சியும் கொண்டு வருவார். எமது பயன்பாட்டிற்குப் போக எஞ்சியவையை ஓடியோடி ஒவ்வொரு நினைவுதீபங்களின் அடியிலும் குத்தி எரித்துவிட்டு பூக்களையும் சாற்றிவிட்டு எங்களின் நினைவுச்சுடரிற்குத் திரும்புவேன். இன்றும் இது பசுமையான நினைவாக நெஞ்சில் நிலைத்துள்ளது.
  11. கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முழுத் திரைப்பிடிப்புப் படிமம் 2008 இறுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் "விடுதலை வயல்கள்" என்றும் சுட்டப்பட்டன, போரிலக்கியப்பாடலூடாக. படம் எடுக்கப்படும் போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. "பெற்றவரை மறந்து, ஒவ்வொரு பொழுதிலும் எம்மை நினைத்து, சாவினில் வாழ்வளித்து, சாகும் போதிலும் எம்மை நினைத்து, வேரோடு பகை வீழ்த்த வீச்சோடு களமாடி வேதனை தீர்த்தவரே! மண்ணுக்குள் விதையாகி மடிப்பூக்கள் எனவாகி விண்ணுக்குள் சென்றவரே! கல்லறை மீது துயில்பவரே!" முழுப் படிமம்: ஒலிமுகமும் சூழலும்:- முதன்மைச் சுடர்ப் பீடமும் சூழலும்:
  12. மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்பு "மாவீரர் பெற்றோரே! மனம் சோர வேண்டாமே! தானாக விடிந்திடும் ஈழம்!" மாவீரர் துயிலுமில்லத்தினுள் நுழையும் போது மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்புடன் அழைத்து வரப்படும் காட்சி. இதுவொரு தமிழீழ பண்பாட்டுச் சடங்காகும். இவர்களை வீதியில் மாவீரர் துயிலுமில்லம் தொடங்கும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மாவீரர் துயிலுமில்லத்தின் முற்றம் வரை அணியிசைக் கலைஞர்கள் அழைத்து வருவர். அணியிசைக் கலைஞர்கள் முன் வர அவர்கட்குப் பின்னார் ஒரு கிடைவரிசையில் போராளிகள் (பெரும்பாலும்) அல்லது மாணாக்கர் கைகளைக் கோர்த்தபடி நடந்து வருவர். அவர்கட்குப் பின்னால் மாவீரர் பெற்றார் வருவர். இவ்வாறு இவர்கள் நுழையும் போது இரு மருங்கிலும் பொதுமக்கள் நின்றிருப்பர். இவ் அணியிசைக் கலைஞர்களாக, நானறிந்த வரை, பாடசாலை மாணவர்களே கடமையாற்றினர். பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களை நோக்கிச் செல்லும் அணியிசை வகுப்புகள்: அணியிசை வகுப்பிற்குப் பின்னால் செல்லும் மாவீரர் பெற்றார்/உறவினர் (பெற்றார் வரமுடியா இடத்தில்): நவம்பர் 27 என்றாலே மழை தான். இரு மருங்கிலும் நின்று இவர்களைக் காணும் பொதுமக்கள்:
  13. இப்போட்டியில் ஐவரி கோஸ்ரை சேர்ந்த cheikh tiote என்பவர் (ஐவரி கோஸ்ட் சார்பாக முதலில் பெனல்டி கோல் உதைப்பவர்) சீனாவில் பயிற்சியின் போது இதய வருத்தத்தால் மரணம்டைந்தார் 2017ல். இவர் Newcastle united எனும் உதைப்பந்தாட்ட குழுவுக்கும் விளையாடியவர். சுவாரசியமான பெனால்டி உதை போட்டி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.