தாத்தா 7 வயது பேரனுடன் கோவிலுக்குப்
போனார். சந்நிதி முன் தரையில்
வீழ்ந்து வணங்கினார்.
"ஏன் தாத்தா கல்லை வணங்கிறே?"
"அது கல்லு இல்லையடா, சுவாமி"
இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
"வாங்க சாப்பிடலாம்" என்று பாட்டி அழைத்தாள்.
"இன்னைக்கு பாட்டியோட சாப்பாடு
எப்படின்னு பாருடா பேரா"
கண்ணாடியை மூக்கின்மேல் உயர்த்தியபடி
பாட்டி சொன்னாள்.
பேரன் நன்றாகவே சாப்பிட்டான்.
இடையில் திடீரென எழுந்து தரையில்
வீழ்ந்து வணங்கினான்.
திடுக்குற்ற தாத்தா "என்னடா, என்ன ஆச்சு"
என்று கேட்டார்.
"இல்லை தாத்தா,
சோத்துக்குள்ளே ஒரு குட்டி சுவாமி இருக்கு"