Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    19166
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46808
    Posts
  3. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    1836
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20026
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/21/21 in all areas

  1. நண்பர்களுடன் சேர்ந்து ராட்சத அளவிலான பட்டத்தை பறக்க விட்ட இளைஞர் ஒருவர், பட்டத்தின் கயிற்றை விட மறந்ததால் கயிற்றுடன் ஆகாயத்தில் பறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கவுண்டமணி பட காமெடி போல நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. 'நினைவுச்சின்னம்' படத்தில் இடம் பெற்ற காமெடிக்காட்சியில் ராட்சத பலூனில் இணைத்திருக்கும் கயிற்றை கெட்டியாக பிடித்திருக்கும் செந்திலை, கயிற்றோடு சேர்த்து வானில் பறக்கவிட்டு "இந்த பக்கம் போனால் பஞ்சாப்பு... அந்தப்பக்கம் போனால் சிலோனு..." என்று கவுண்டமணி அடிக்கும் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் சம்பவம் ஒன்று யாழ்பாணத்தில் அரங்கேறி உள்ளது யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி கம்பாவத்தை கிராமத்தில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, 13 அடி உயரம் கொண்ட பெரிய அளவிலான பட்டம் செய்து அதனை பறக்கவிட ஆயுத்தமாகி கொண்டிருந்தனர். பல இளைஞர்கள் சேர்ந்து கயிற்றை பிடித்துக் கொண்டு பட்டத்தை வானில் ஏற்றிக் கொண்டிருந்த வேளை பட்டம் வேகமாக பறக்க ஆரம்பித்தது அப்போது முன் வரிசையில் இருந்த இளைஞர் பட்டத்தின் கயிற்றை விடுவதற்குள் அவருக்கு பின்னால் நின்ற இளைஞர்கள் கயிற்றை விட்டு விட்டனர். அடுத்த நொடி காற்றின் வேகத்துக்கு ஜெட்டாக வானை நோக்கி பறந்த பட்டத்தோடு அந்த முன்வரிசை இளைஞரும் தூக்கிச்செல்லப்பட்டார் முன்னதாக இளைஞர்கள் பட்டம் ஏற்றும்போது அதன் கயிற்றை ஒருமரத்தில் கட்டிவிட்டே பட்டம் ஏற்றியிருக்கிறார்கள், இதனால் பட்டத்தை ஏற்றிய இளைஞர்கள் அனைவரும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போயினர் பட்டத்தின் கயிற்றை விடாமல் கெட்டியாக பிடித்திருந்த நிலையில் சுமார் நாற்பது அடி உயரத்தில், 'யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா ?' என்ற எதிர்பார்ப்பில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தார் அந்த இளைஞர் ஹீரோயினை காப்பாற்ற செல்லும் ஹீரோ போல பட்டத்தின் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை மீட்க இயலாமல் அனைவரும் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தனர். இதையடுத்து 'தன் கையே தனக்கு உதவி' என்று சமயோசிதமாக யோசித்த அந்த பட்டக் கயிறு ஜேம்ஸ் பாண்டு, கயிற்றின் பின் நகர்ந்து வர ஆரம்பித்தார் மெல்ல மெல்ல கயிற்றில் தொங்கியபடியே நகர்ந்து, வந்த அந்த இளஞர் சுமார் இருபது அடி உயரம் வரை வந்தார், அதற்கு மேல் நகர இயலாத நிலையில் தனது கையை விட்ட நிலையில் தோட்டச் செய்கைக்காக பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்ததால் உயிர் தப்பினார் விழுந்த வேகத்தில் உடலில் ஏற்பட்ட உட் காயங்களுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உடனடி சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக உள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை மருத்துவர்கள் தெரிவித்தனர் இதற்கிடையே அந்தரத்தில் பட்டத்தின் கயிற்றை பிடித்துக் கொண்டு அந்த பேட்மேன் தொங்கிக் கொண்டிருந்த போது, 2K லிட்டில் பிரின்சஸ் ஆன அவரது மகள், தந்தை கயிற்றில் தொங்கிய நிலையில் பறப்பதை கண்டு ஆபத்தை உணராமல், ஆச்சரியத்தில் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பாலிமர் செய்திகள்
  2. நல்ல நேரம் பட்டம் விடும்போது டவ்சர் போட்டிருந்தார், சாரம் உடுத்திருந்தால் பட்டத்தோடு சேர்ந்து தம்பி மானமும் காற்றில் பறந்திருக்கும். 😜
  3. முன்னம் ஊரில் இருக்கும் போது எமது கோவில் வயலில் பட்டம் விடப்போவோம். அறுவடை முடிந்து அதன் பின் நைட்றஜனை மண்ணுக்கு இறக்க சணல் பயிரிட்டு அதுவும் வெட்டி ஒதுக்கப்ட்ட நாட்களில்தான் காற்று வீசும் (சோளக்காத்து?). நமது சைசுக்கு ஏற்ப வீட்டிலேயே ஈக்கில், சணல், டிசு பேப்பர், கோதம்பமா பசை கொண்டு நாமே வீடு, முகோணம், இப்படி எளிய வடிவில் பட்டம் செய்து கொண்டு போவோம். நைலோன் மெல்லிய இழையால் பட்டம் பறக்க விடப்படும். பெரிய அண்ணாமார் ஆளை விட பெரிய பட்டம் கொண்டு வருவார்கள். மூங்கிலால் கட்டுவது. முகட்டில் “விண்” கட்டி இருப்பார்கள். அது மேலே ஏற் ஏற கூ..கூ என ஒலி எழுப்பும். விண் கூவுது என்போம். “பெரிய ஆக்களிண்ட பட்டங்களை ஆசைக்கும் வேண்டி ஏத்த வேண்டாம். காத்து தூக்கி போடும்” என்பார்கள் வீட்டில். ஆனாலும் ஆசை கேட்காமல் ஏற்கனவே ஏறி ஆடிக்கொண்டிருக்கும், மரத்தில் கட்டப்பட்ட பட்டங்களை கெஞ்சி கூத்தாடி ஒரு நிமிடம் வரையில் “கொன்ரோல்” பண்ணியதுண்டு. ஓனர் அண்ணா பக்கத்திலயே பார்த்து கொண்டு நிப்பார் 🤣. அப்போதெல்லாம் இப்படி ஒரு வளர்ந்த மனிதனை 40 அடி தூக்கும் என தெரியாது. தெரிந்திருந்தால் வயல் பக்கமே தலைவைத்தும் படுத்திருக்க மாட்டேன்🤣. ஊரை விட்டு வந்த பின் பட்டம் விடுவதை மறந்து பட்டம் எடுக்கும் முயற்சியில் காலம் வீணாகியதுதான் மிச்சம். கொழும்பில் கோல்பேசில் வகை வகையாக நாகரீக பட்டங்கள் காற்றில் அலையும். பார்த்ததோடு சரி. கொவிட்டுக்கு முதல் சுப்பர் மார்கெட்டில் கண்டு ஒன்றை வாங்கி வந்தேன். பழைய கதை எல்லாம் சொல்லி அடுத்த காற்று காலம் ஏத்துவோம் எண்டு மகனுக்கும் சொல்ல அவருக்கும் ஒரே குதூகலம். இப்ப எங்க கிடக்கோ தெரியாது. தேட வேணும். தேடவைத்த @ராசவன்னியன் சாருக்கு நன்றி🙏🏾. #ஒரு பட்டதாரியின் சுயசரிதை🤣
  4. 2k கிட்ஸ்ன்னா… புள்ள அநேகமா இவுரு ரசிகையா இருக்கும்…👇😂😂
  5. பழமுதிர் சோலையிலே .......! 💞
  6. எங்கும் சில்க் எதிலும் சில்க்........அண்ணனுக்கு ஒரு ஸ்ரோங் டீ .........! 😍
  7. வீட்டில அம்மா இல்லைப் போல. வந்து இருக்கு விளக்கு மாத்தால.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.