Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. பாலபத்ர ஓணாண்டி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    1839
    Posts
  2. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    35002
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33845
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    7615
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/29/22 in Posts

  1. அந்தப் பேட்டி........ கேள்வி : வணக்கம் கருணா குழு முக்கியஸ்த்தர் : வணக்கம் அண்ணை, இதுகுறித்து உங்களை தொந்தரவு படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் உங்களுடன் கருணா தொடர்பான பல ரகசிய விடயங்களைப் பேச விரும்புகிறேன், அதனைச் செவிமடுப்பீர்களா? கேள்வி : அதுசரி, ஆனால் இப்போது அதிகாலை 12:30 மணி, பரவாயில்லை சொல்லுங்கள்? க.கு.மு : நன்றி கேள்வி : கேர்ணல் கருணாவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். கேள்வி : அவரை ஏன் கருணா என்று மட்டும் அழைக்கிறீர்கள்? ஏன் அவரது கேர்ணல் எனும் மரியாதைப் பெயரினைத் தவிர்க்கிறீர்கள்? அவர் உங்களது தலைவர் இல்லையா? க.கு.மு: முந்தி அவரைத் தலைவராகத்தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போது அவர் அந்தத் தகுத்திக்குப் பொருத்தமற்றவர் என்பதனை நிரூபித்துவிட்டார். அவருக்கும், அவர் எதிர்த்துச் செயற்படப்போவதாகக் கூறிய பிரபாகரனுக்கும் எந்தவேறுபாடும் இல்லை. இருவரும் எமது மக்களையும், போராளிகளையும் நட்டாற்றில் விட்டு விட்டனர். கேள்வி : கருணா எங்கு தப்பியோடியிருக்கிறார்? அவர் இப்போது எங்கு வாழ்கிறார்? க.கு.மு: அவர் இப்போது எந்த நாட்டில் வாழ்கிறார் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஆனால், அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பது எம் எல்லோருக்கும் இப்போது தெரியும். அவர் ஒளிந்திருக்கும் இடம்பற்றி நான் பேசமுடியாது, அவரது பாதுகாப்பு முக்கியமல்லவா? கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்ன நடந்தது? க.கு.மு: அது இப்போது இரண்டாகப் பிளந்துபோய்விட்டது. கருணாவின் சுயநலத்தாலும், இலக்குத்தவறிய இயல்பினாலும் இது நடந்தது. கேள்வி : அப்படியானால் உங்களின் அரசியல்ப்பிரிவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: அது ஒரு முற்றான கேலிக்கூத்து. கருணா தனது உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையுமே அந்த அரசியல் கட்சிக்கு நியமித்தார். கேள்வி : மட்டக்களப்பிலும், அதனை அண்டிய ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் இப்போது என்னதான் நடக்கிறது? க.கு.மு: பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், இன்றுவரை கருணா குழு உறுப்பினர்கள் அப்பாவிக் கிழக்கு மக்களிடம் கட்டாய கப்பம் அறவிடுதலை செய்துவருகின்றனர். இப்படியாக மக்களைக் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படும் கப்பப் பணம் கருணாவின் வங்கிக் கணக்கை நிரப்பி வருகின்றன. கேள்வி : மட்டக்களப்பில் ஒருமாதத்திற்கு கருணாவுக்காக எவ்வளவு பணம் கப்பமாக அறவிடப்பட்டு வருகிறது? க.கு.மு: பெருமளவான பணம். நானும் இந்தக் கப்பம் அறவிடல் நடவடிக்கையில் கருணாவுக்காக ஈடுபட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தமட்டில், கருணா ஒருமாதத்திற்கு குறைந்தது 80 லட்சம் ரூபாய்களைக் கப்பமாக அறவிட்டு வருகிறார். கேள்வி : கருணாவுக்கு அரசாங்கத்தினால் பணக் கொடுப்பனவுகள்கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், நிச்சயமாக. கேள்வி: அரசிடமிருந்து ஏனைய சலுகைகள் கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், கிடைக்கின்றன. ஆனால், அந்த விபரங்களைக் கூறுவது எனது பாதுகாப்பிற்கும், கருணா குழுவினரின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறிவிடும், அதனால் அதனைத் தவிர்த்து விடுகிறேன். கேள்வி : உங்களின் எதிர்காலம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் உங்களின் புரிதல் என்ன? க.கு.மு: புலிகளின் எதிர்காலம்போலத்தான் எமது எதிர்காலமும். புலிகளை பலவீனமாக்கி அழிக்க கருணாவின் பிளவு காரணமாக இருந்ததுபோல எமது அமைப்பு பிரிந்து அழிக்கப்படவும் கருணாவே காரணமாக இருக்கிறார். இன்று எம்மை நடத்துவதும், ஆட்டுவிப்பதும் அரசாங்கமும், அவர்களது ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் தான். இந்த மொத்த அவலநிலைக்கும் காரணமே கருணாதான். முற்றும்
  2. கூழ் துடுப்பு.. பூரி வருவதற்கு முன் இதுதான் தமிழ் பெண்களின் ஆயுதமாக இருந்திருக்க வேண்டும்.☺️
  3. அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே...😍
  4. முட்டை குருமா நன்றாகத்தான் இருக்கும் போல இருக்கு......! 👍
  5. தீவுகளும் அதன் பரப்பளவுகளும்.............
  6. ஓ போடு..! ஓ போடு..!! திடீரென ஆச்சரியமூட்டும் வகையில் வீடு தேடி வரும் பரிசுகளும், வாழ்த்துக்களும்..! 😍 இப்படியும் ஒரு வியாபார முயற்சியா? தமிழகத்தில் இல்லாத யுக்தி.. ரொம்பவும் ரசித்தேன்..! 😇 டிஸ்கி: இது விளம்பரமல்ல, ரசித்த காணொளி அவ்வளவே..!
  7. "கிழக்கில் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் ராணுவத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவரும் இந்நிலையில், அரசுக்கும் ராணுவத்திற்கும் கருணாவின் தேவை குறைந்துவருவதுடன், அவரின் முக்கியத்துவமும் குறைந்துவருவதாகத் தெரிகிறது. கருணாவுக்கும் அவரது குழு உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுவரும் பாரிய விரிசலே இதற்குச் சிறந்த அடையாளமாகக் காட்டப்படமுடியும். குறிப்பாக வாகரை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டபின் கருணாவின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்டதோடு, தனது உறுப்பினர்களிடையே இருந்தும் அவர் அந்நியமாகிப்போனார்". "கருணா புலிகளிடமிருந்து பிரிந்து ராணுவத்துடன் சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்தில் அவர் கிழக்கு மக்களிடம் இரு விடயங்கள் பற்றிப் பேசி வந்தார். முதலாவது தமிழ் மக்களிடையே பிரபாகரன் குறித்து இருந்த எண்ணத்தை முற்றாக உடைப்பது அல்லது சிறுமைப்படுத்துவது. அடுத்தது கிழக்கு மக்களுக்கெதிராக வடக்குத் தமிழர்களும் புலிகளும் செயற்பட்டுவருகிறார்கள் எனும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது. ஆனால் இவை இரண்டுமே தவறான, முரணான முடிவுகள். பிரபாகரனின் கொடுங்கரங்களிலிருந்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பேன் எனும் கருணாவின் சூளுரை இன்னமும் அப்படியே இருக்கிறது". இப்போது அவர் தனது குறிக்கோளில் இருந்தும், இலட்சியத்திலிருந்தும் முற்றாக விலகி, தான் சேர்த்துவைத்திருந்த பெருமளவு பணத்தையும், அரசால் அவருக்கு வழங்கப்பட்ட செல்வங்களையும் எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். இந்தச் செவ்வியின்போது இலங்கை ராணூவப் புலநாய்வு அதிகாரிகளுடன் கருணா கொண்டிருந்த தொடர்புகள் பற்றி விலாவாரியாக விபரங்களை வெளியிட்ட அவர், இவர்களுக்கிடையிலான தொடர்பாடல்களின் விபரங்களையும் வெளியிடத் தயங்கவில்லை. இந்தச் செவ்வியை நாம் ஒழுங்குசெய்யவில்லை. ஆனால், இந்தக் கருணா குழு முக்கியஸ்த்தர் தானாகவே எம்முடன் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசவேண்டும் என்று தொலைபேசி வாயிலாக எம்மைக் கேட்டிருந்தார். கிழக்கு மக்களுக்கான விடியலைப் பெற்றுத்தரப்போவதாக புலிகளிடமிருந்து ராணுவத்தினரின் பக்கம் தாவிய கருணாவின் உண்மை முகம் வெளிக்கொணரப்படவேண்டும் என்பதற்காகவே தான் இதனைச் செய்வதாக அவர் கூறினார். இவ்விடயங்கள் எமது பத்திரிக்கையில் நிச்சயம் வெளிவரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனது விடயங்களின் உண்மைத்தன்மையினை அறிய விரும்பினால் கிழக்கு மக்களிடமோ அல்லது ஏனைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு உறுப்பினர்களிடமோ நீங்கள் கேட்டு அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.
  8. உணவும் உடற்பயிற்சியும்.? ஒரு மருத்துவரின் பதில்.! மருத்துவர் யார்? என்று கேட்கக்கூடாது.!! கே: உடற்பயிற்சி இதயத்தை வேகப்படுத்தி ஆயுளை நீட்டிக்குமா? ப: பல துடிப்புகளுக்கு மட்டுமே இதயம். இதயத்தை வேகப்படுத்துவது நீண்ட காலம் வாழ வைக்காது; இது வேகமாக ஓட்டுவதன் மூலம் காரின் ஆயுளை நீட்டிப்பதாகக் கூறுவது போன்றது. நீண்ட காலம் வாழ வேண்டுமா? நன்றாகத் தூங்குங்கள். கே: நான் மது அருந்துவதை குறைக்க வேண்டுமா? ப: இல்லை. பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. பழம் மிகவும் நல்லது. பிராந்தி காய்ச்சி வடிகட்டிய ஒயின், அதாவது அவை பழத்திலிருந்து தண்ணீரை எடுக்கின்றன, அதனால் நீங்கள் இன்னும் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். பீர் கூட தானியத்தால் ஆனது. தானியமும் நல்லது. கே: பொரித்த உணவுகள் உடலுக்கு மோசமானவை அல்லவா? ப: காய்கறி எண்ணெயில் வறுத்தால் நல்லது. காய்கறிகள் எப்படிக் கெட்டது? கே: சாக்லேட் நல்லதா? கெட்டதா? ப: கோகோ பீன், இன்னொரு காய்கறி, இது சிறந்த நல்ல உணவு! சரி... உணவுமுறை பற்றி நீங்கள் கொண்டிருந்த தவறான எண்ணங்களை இது நீக்கியிருக்கும் என நம்புகிறேன். 1. டிரெட்மில்லைக் கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்துவிட்டார் 2. யிம்னாடிக்சைக் கண்டுபிடித்தவர் 57 வயதில் இறந்தார் 3. உலக உடற் கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார் 4. உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மரடோனா, தனது 60வது வயதில் இறந்தார். ஆனாலும் 5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் இறந்தார். 6. நூடெல்லா பிராண்டின் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் இறந்தார். 7. கற்பனை செய்து பாருங்கள், சிகரெட் தயாரிப்பாளர் வின்சுடன் 102 வயதில் இறந்தார் 8. அபின் கண்டுபிடித்தவர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார் 9. கெனெசி கண்டுபிடிப்பாளர் 98 வயதில் இறந்தார். ஆகவே உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தார்கள்?? முயல் எப்பொழுதும் மேலும் கீழும் குதிக்கும் ஆனால் அது 2 வருடங்கள் மட்டுமே வாழ்கிறது உடற்பயிற்சி செய்யாத ஆமை 200 ஆண்டுகள் வாழ்கிறது. எனவே, கொஞ்சம் ஓய்வெடுங்கள், நிதானமாக இருங்கள், சாப்பிட்டு, குடித்து, உங்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள்... 😋
  9. ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்துவர் கூறுகிறார்: "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஜெர்மனியில் மூளையின் ஒரு பகுதியை எடுத்து, அதை வேறொரு மனிதனுக்குப் போட்டோம், 4 வாரங்களில் அவர் வேலை தேடுகிறார்."..!!! ரஷ்ய மருத்துவர் கூறுகிறார்: "அன்பர்களே, நாங்கள் ஒரு மனிதனின் பாதி இதயத்தை எடுத்து, மற்றொருவரின் மார்பில் வைத்தோம், 2 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! இலங்கை மருத்துவர் சிரிக்கிறார்: "நீங்கள் அனைவரும் எங்களுக்கு பின்னால் இருக்கிறீர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு, மூளை, இதயம், கல்லீரல் இல்லாத ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம். இப்போது நாடு முழுவதும் வேலை தேடுகிறது!!!"
  10. தலை போனாலும் குலையோடு வருவேன்......! 👍
  11. வேகம் கூடும்போது அருகில் சாலையோரம் வருபவர்களை கவனிக்கும் திறன் குறையும் என்பதை விளக்கும் படம்......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.