Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    1866
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46979
    Posts
  3. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7402
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/05/22 in all areas

  1. இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..! ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔 வாழ்க வளமுடன்..! 🙌 வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது. (சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!) காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும் ஈழத்துக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடு..!" என சொல்வது ரசிக்கத்தக்க வேடிக்கை. இந்த தம்பி, சென்னையின் நகர்புறம் சென்று பேசினால் இந்த அன்னோன்யம் இருக்குமாவென தெரியவில்லை ஈழம் சென்று கதைக்க, தரிசிக்க எங்களுக்கும் ஆவல் பெருகுகிறது..! 😍
  2. யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டு மண்டைதீவு வழியால் சென்ற பொழுது மண்டைதீவில் ஆஸ்பத்திரி கட்டும் யாழ் இணைய திரி ஒன்றும் நினைவில் வந்து போனது!!! சிறுவயதில் எனது அப்பு அம்மம்மாவுடன் இந்த வெள்ளைக்கடற்கரைக்கும் அதன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கும் ஒரேயொரு தரம் போனது நினைவில் உள்ளது.. அதன்பிறகு இம்முறை தான் போனேன்.. அங்கே போக சந்தர்ப்பங்கள் இருந்தும் இத்தனை காலமும் போனதில்லை, ஆனால் இம்முறை பார்க்க வேண்டும் போல மனதிற்கு தோன்றியது!!!இந்த வெள்ளைகடற்கரை என நான் நினைத்து வைத்திருந்தது சாட்டி என பின்னாளில் அறிந்து கொண்டேன். எப்பொழுதும் போல நல்லூர் மனதில் தனியான ஒரு இடத்தை பிடித்தது!! அதிகாலையில் பொங்கல் பொங்கிய இடத்தில் மாலையில் மத்தாப்பும் சக்கர வானமும்(?) சிரித்தது!!! பாரதியாரின் காணி நிலம் வேண்டும் கவிதையில் வரும்.. பத்து பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற்படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்.. வரிகளை நினைக்க வைத்த தென்னங்காணி!! மீண்டும் கொழும்பில் மொட்டை மாடியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த மகிழ்ச்சி..சற்றே திரும்பி தூரத்தே தெரியும் தாமரை மொட்டைப் பார்த்ததும் காணாமல் போய்விட்டது!! அவுஸ்ரேலியா திரும்பும் பொழுது மனமும் இந்த இரவின் கறுப்பு போல கவலை கொண்டது!! இங்கே காலை வேளை சுக்கு கோப்பியை குடிக்கும் பொழுது காலஞ்சென்ற என் அம்மா உருவாக்கி விட்டுப் போன கோப்பி மரங்களையும், அவர் போட்டு தந்த கோப்பியையும் என் இலங்கை பயணத்தையும் நினைத்தபடி நிகழ்வுலகிற்கு திரும்பினேன்..!! முற்றும்.. நன்றி - பிரபா
  3. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!! ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!! தொடரும்…
  4. இன்னும் இல்லை பிரபா சிதம்பரநாதன். அனேகமாக வருகின்ற கிழமை வீட்டிற்குப் போகலாம் என நினைக்கின்றேன். ஆனால் தினமும், வைத்தியசாலைக்குச் சென்று… தெரப்பி செய்ய வேண்டி வரும்.
  5. உண்மைதான்.. ஆனால் மார்த்தாண்டம் பகுதி இன்னமும் செழிப்புடன் (பனை மரக்காடுகள் பொட்டல் வெளிகள் இல்லாமல்) இருக்குமென எண்ணுகிறேன். கீழேயுள்ள நதியின் மண்டபத்தை பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். கு.சா. இது மார்த்தாண்டம் அண்மித்த பகுதியில்தான் உள்ளது.
  6. பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம். அதிலும் உங்கள் "உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூனை.. " என்ற தலைப்பில் பதிந்த படமும் வர்ணனையும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தது. உங்களின் பல படங்கள் நல்ல தரமிக்கவையாக இருப்பதால் குறித்த படத்தையும் அதன் வர்ணனையும் சர்வதேச புகைப்பட போட்டிகளுக்கு அனுப்பிவைக்கலாம் என்பது எனது கருத்து.
  7. பஸ்தியன் சந்தியில் ஒரு காலைப்பொழுது!! மாவிட்டபுரத்தில் ஒரு மாலைப்பொழுது!! தலசிட்டி வைரவர் கோவில் - நந்தி இருக்கவேண்டிய இடத்தில் நாய் இருக்கும் ஒரு கோவில்!!. விலங்குகளை பலி கொடுப்படுதை தடுத்தாலும் பலிக்கொடுப்பதற்காக இருந்த சாதாரனமாக இருந்த கோவில் இன்று 4 பக்க கோபுரங்களுடன் கட்டப்படுகிறது!! மயிலிட்டி - மீன்களுடன் படகுகளும் தென்பகுதி மீன் வியாபாரிகளும் ஊறனி- கடந்து போக முடியாமல் பல கதைகள் கூறும்!!! தொடரும்…
  8. கன கட்டிங்,எடிட்டிங் நடந்திருக்கு போல.......ஒரு இடத்திலை எல்லாத்தையும் சொல்லேலாது 🤣
  9. கோப்பையில் இருந்த, இட்லியை வர்ணித்த தவகரன்…. அந்த வடை எப்பிடி இருந்தது, என்றும் சொல்வார் என எதிர்பார்தேன். கடைசி வரை சொல்லவேயில்லை. 😁 கழுகுப் பார்வையில் (ட்ரோன் படப் பிடிப்பு) செங்கல் பட்டு பசுமையாக இருந்தது, ஆச்சரியமாக இருந்தது. நல்ல ஒரு காணொளி இணைப்பிற்கு, நன்றி ராஜவன்னியன். 👍🏽 🙂
  10. தமிழகம்- ஈழம் கேடு கெட்ட அரசியலால் எல்லாவற்றையும் தொலைத்து விட்டோமோ என எண்ணத்தோன்றுகின்றது.
  11. கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் . நம்ம ஊர் போலவே கிணறுகள் கப்பி மூலமா தண்ணீர் அள்ளுவது பேச்சு வழக்கு யாழில் உள்ளது போல் ஒவ்வொரு வீட்டிலும் பாக்கு தென்னை வெத்தலை துளசி போன்றன இருக்கும் . எப்படி அவர்களின் தமிழ் உச்சரிப்பு யாழில் உள்ளது போல் இருக்கு ?
  12. தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். "தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு குடித்து கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். "தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?
  13. நல்லது அண்ணா.. வைத்தியர்களின் வழிகாட்டலில் நீங்கள் பூரண குணமடைவீர்கள் என்பதால் மனதை தளர விடவேண்டாம்..
  14. மிக்க நன்றி அண்ணா!! உங்கள் அனைவரதும் ஊக்கமும் ஆதரவும் தான் என்னை இவை போன்ற காட்சிகளை படம் பிடிக்கும் ஆர்வத்தை வளர்க்கிறது. யாழ் இணையம் இல்லாவிட்டால் என்னால் இவற்றை செய்திருக்கமுடியாது.. யாழ் இணையத்திற்கும் என்னை ஊக்குவிக்கும் கள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிக்க நன்றி அங்கிள்! அதற்கு இன்னமும் நாட்கள் இருக்கிறது என நினைக்கிறேன்..
  15. வணக்கம் ...தொடர்ந்தும் எழுதுங்கோ ....இலங்கை விமான நிலையத்தில் ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?.. ஏதாவது புத்தக கடைக்கு போயிருந்தீர்களா?...ஏதாவது புது நூல்கள் வந்திருக்கா ?
  16. அழகான படங்களுடன், உங்கள் வர்ணனை மிகச் சிறப்பாக உள்ளது. 👍🏽 தொடருங்கள்… பிரபா சிதம்பரநாதன். 🙂
  17. அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்! அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவயது ஞாபகங்கள்!! திரும்பி வரும் வழியில் தனங்கிளப்பில்(?) உள்ள காற்றாலைகளை அருகில் சென்று பார்த்தபொழுது!! எனக்கு எப்பொழுதும் பிடித்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வயல்வெளி!! சிறுவயதில்/இளவயதில் சைக்கிளில் இந்தவழியாக செல்வது வழமை.. மழையை ரசித்தபடி சில நாட்கள்.. தொடரும்..
  18. ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுதூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூணை.. புதிதாக கட்டப்படும் யாழ்ப்பாணத்திற்கான Town Hall. புதிதுபுதிதாக, வித்தியாசமான வடிவமைப்புக்களுடன் கட்டடங்கள் இருந்தாலும் பழையகட்டடங்களின், வீடுகளின் அழகில் மனதை பறிகொடுத்து சில நிமிடங்கள்! தொடரும்…
  19. கிழக்கு மாகாணம் என்னதான் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தபோதிலும், அந்த மாகாணம் தொடர்ச்சியாக சிறிலங்காவிலும், பிரபாகரனின் தமிழீழத்திலும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. இலங்கையின் சிங்களவரைப் பொறுத்தவரையிலும், தமிழர்களைப் பொறுத்தவரையிலும் கிழக்கு மாகாணம் ஒரு பலவீனமான இணைப்பாகவே இருந்துவருகிறது. ஏனென்றால், இம்மாகானம் தமிழரும் சிங்களவரும் சமமாக வாழ்ந்துவருவதனால், தமிழரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ, சிங்களவரைப் பெரும்பான்மையினராகக் கொண்டதென்றோ கூறமுடியாத நிலை காணப்படுகிறது. முஸ்லீம்களையும் நாம் எடுத்துக்கொண்டால், ஏறத்தாள மூன்று இனங்களும் சமமாக வாழ்வதால், இம்மாகாணம் இலங்கையினைப் பொறுத்தவரைய்லும், தமிழரின் ஈழத்தைப் பொறுத்தவரையிலும் பலவீனமான தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. கிழக்கு மாகானத்தின் சேர்ப்பின்றி, இலங்கையினை பிரிவுபடாத ஒற்றை நாடாக வைத்திருப்பது சாத்தியமற்றது. அதேபோல, கிழக்கு மாகாணம் இல்லாது புலிகளின் ஈழமும் பூரணப்படாது. ஆகவே, கிழக்கு மாகாணமே இந்த விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அது எந்தப் பக்கம் சாய்கின்றதோ, அதுவே இலங்கை ஒற்றைநாடா அல்லது இரு நாடுகளா எனும் நிலையினைத் தீர்மானிக்கப்போகிறது. கிழக்கு வடக்கைக் காட்டிலும் வறுமையானதாக, அபிவிருத்தியில் குன்றியதாக இருந்தாலும்கூட, புலிகளின் போராளிகளில் கணிசமானவர்கள் கிழக்கைச் சேர்ந்த போராளிகளே. ஆனால், தளபதிகளில் பெரும்பாலானவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள். கிழக்கைச் சேர்ந்த போராளிகள் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொண்டபோதும்கூட, அவர்களுக்கான மரியாதை அமைப்பினுள் வழங்கப்படவில்லை. இரு பிரிவுகளுக்கிடையிலான பிணக்குகளுக்கும், அதனூடான இழப்புக்களுக்கும் காரணமான முதலாவது தலைமைக்கெதிரான கிளர்சி நடந்தது கூட கிழக்கில்த்தான். இது பலருக்குத் தெரியாது இருந்தாலும்கூட, முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. "மிக அண்மைக் காலம்வரையில் கிழக்கு மாகாணப் போராளிகள், தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஒருபோதும் நினைக்காதவர்களாகவும், அமைப்பினுள் ஏற்படக்கூடிய பிளவுகளை எதிர்ப்பவர்களாகவுமே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், அவ்வப்போது தலைமைக்கெதிரான சில கிளர்ச்சிகள் தோற்றம்பெற்றபோது, வடக்கிலிருந்து அனுப்பப்படும் அணிகள் கிழக்கில் போராளிகளுக்கிடையே பிளவுகளை உண்டாக்கி, தலைமைக்கெதிரான அவர்களின் கிளர்ச்சியைத் திசை திருப்பியே வந்திருக்கிறார்கள். 1986 இல் புலிகள் டெலோ இயக்கம் மீது தாக்குதலை ஆரம்பித்த வேளை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கடவுள் என்பவர் கிழக்கு மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றும், டெலோவுக்கெதிராக தாம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இதனால் ஆத்திரப்பட்ட புலிகளின் தலைமைப்பீடம் வடக்கிலிருந்து பொட்டு அம்மாணையும், குமரப்பாவையும் கிழக்கிற்கு அனுப்பி கிழக்கில் அமைப்பில் பிளவுகளை உருவாக்கியது. அதேபோல, 1987 இல் கிழக்கில் வாழ்ந்த சிங்களவர்கள் மீதான புலிகளின் தாக்குதல் முயற்சிகளையும் மட்டக்களப்பில் பிறந்த புலிகளின் தளபதியான பிரான்ஸிஸ் என்பவர் முழுமையாக நிராகரித்திருந்தார். ஆனால், 1987 இல் கிழக்கில் சிங்களவர்களைக் கொல்லுமாறு வடக்குத் தலைமை உத்தரவிட்டிருந்ததுடன் அதற்கு பணிய மறுத்த பிரான்ஸிஸ் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்டிருந்தார்". இந்தக் காரணிகள் அனைத்தினதும் விளைவாகவும், வடக்குத் தலைமையின் மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும், பிரதேசத்தின் அமைவிடத்தின் யதார்த்தினை மனதில்க் கொண்டுமே 2004 இல் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியில் கருணா இறங்கவேண்டி ஏற்பட்டது. பிரபாகரனின் செல்லப்பிள்ளையாகவும், புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராகவும், கிழக்கின் மைந்தனாகவும் இருந்த கருணா தான் பிறந்த மண்ணிற்கே மீண்டும் வந்து தலைமைக்கெதிரான கிளர்ச்சியை ஆரம்பித்தார். தன்னால் வலிந்து இயக்கத்தில் சேர்க்கப்பட்ட கிழக்கின் சிறுவர்கள் எவருமே வடக்கின் போர்முனைகளுக்கு அனுப்பப்படப்போவதில்லை என்கிற உத்தரவாதத்தினை வழங்கவேண்டும் என்று தலைமையிடம் அவர் நிபந்தனை முன்வைத்தார். எதிர்பார்த்ததைப்போலவே பிரபாகரன் இந்த வாக்குறுதியை வழங்க மறுத்து விட்டார். அதன் பின்னர் கிழக்கு மாகாணப் புலிகள் தனித்து இயங்கும் சுயாதீனத்தை தலைமை வழங்கவேண்டும் என்று கருணா கோரிக்கை வைத்தார். ஆனால், வன்னிக்கு வா, பேசித்தீர்க்கலாம், கருத்து வேறுபாடுகளைக் களையலாம் என்று பிரபாகரன் கருணாவுக்குக்ப் பதிலனுப்பினார். பிரபாகரனின் வேண்டுகோளை வெளிப்படையாகவே நிராகரித்து, வன்னிக்குச் செல்ல மறுத்ததன் மூலம் கருணா புலிகளின் சரித்திரத்திலேயே முதலாவதான தலைமைக்கெதிரான கிளர்ச்சியைத் தொடக்கி வைத்தார். பாகம் ஒன்று - முற்றும்
  20. இந்த ஊர்கள்( மாவிட்டபுரம், மயிலிட்டி, ஊறனி etc) இப்ப கொஞ்ச காலங்களிற்கு முன்புதான் இரானுவத்தால் மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.. இன்னமும் பல பகுதிகள் விடுவிக்கப்படவில்லை அங்கிள். எங்கள் தோட்டத்தை செய்பவரின் காணி கூட பலாலி முகாம் உள்ள பகுதிகளில்தான் உள்ளது..வேதனையான விடயம்!! நான் இம்முறைதான் இந்தளவு உட்பகுதிகளுக்கு சென்றுள்ளேன்.. சிவந்த மண்.. இந்த மண்ணில் வெறுங்காலுடன் நடப்பது மிகவும் பிடித்த ஒன்று.. ஏனெனில் காலில் ஒட்டிய மண்ணின் நிறம் போக நீண்ட நாட்கள் எடுக்கும்.. சாதி தொடங்கி சமயம், சமூகம், மாதாந்த வருமானம், சொத்து எவ்வளவு?, துணையாக வரவேண்டியவர் இருக்கவேண்டிய பிறந்த திகதி🙄, அசைவம் உண்பவருடன் கூடி வாழ முடியுமா இல்லையா!!!🤦🏽‍♀️கிட்டதட்ட 50ற்கு😵‍💫😵‍💫😵‍💫 மேற்பட்ட கேள்விகள் அங்கிள்!!
  21. பிரபாகரனிடமிருந்து கருணா பிரிந்துவந்து புரட்சி செய்த சந்தர்ப்பத்தினை நாம் சரியாகப் பாவித்திருந்தால், புலிகளுக்குள் அது இன்னும் பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தினைக் கருணாவும், அவரைப் பாவித்த ஆளும்வர்க்கமும் தவிடுபொடியாக உடைத்துவிட்டார்கள். கருணாவை நாம் கையாண்ட விதத்தினைப் பார்க்கும் எந்தப் புலி உறுப்பினரும் எமது சிங்களத் தேசத்தினை நம்பி வெளியேறி வரப்போவதில்லை. சிலர் வெளியேறிச் செல்லலாம், ஆனால் நிச்சயமாக பிரபாகரனுக்கெதிராகச் சதிசெய்யப்போவதில்லை. புலிகளுக்கெதிரான எந்த உள்வீட்டுச் சதியும் சிங்கள அதிகாரவர்க்கத்தின் முழுமையான ஆதரவின்றி வெற்றிபெறப்போவதில்லையென்பது கருணாவின் தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. சிங்களத் தலைமைகளை நம்பி ஏமாற்றப்பட்டு தமது புரட்சி கருணாவைப்போன்று படுதோல்வியில் முடியப்போவதை எந்தத் தமிழரும் விரும்பப்போவதில்லை. கருணாவின் புரட்சிக்கு முன்னர் புலிகள் என்று கூறும்போது முதலில் வரும் போராளியின் பெயர் கருணாதான். அவரது புரட்சி புலிகளின் சரித்திரத்தில் முன்னர் அறிந்திராதது. கருணாவுக்கு முதல் சில மாற்றுக்கருத்தாளர்கள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் கருணாவைப்போன்று புரட்சி செய்யவில்லை. உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு யார் தலைவன் என்கிற சுயகெளரவத்தால் ஏற்பட்டது. பிரபாகனுக்கெதிரான மாத்தையாவின் எழுச்சியென்பது இயக்கத்தின் துணைத்தலைவர் என்கிற அந்தஸ்த்தினைத் தாண்டி மேலே எழவில்லை. பிரேமதாசாவுடனுனான பேச்சுக்களில் ஈடுபட்ட மாத்தையா சமாதானத் தீர்வொன்று சாத்தியம் என்று நர்பத் தலைப்பட்டார். இதனால், பிரபாகரன் பேச்சுவார்த்தையினை முடித்துக்கொண்டு இரண்டாவது ஈழப்போரினை ஆரம்பித்தது மாத்தையாவைப் பொறுத்தவரை உவப்பானதாக இருக்கவில்லை. எனக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மாத்தையா தனது அதிருப்தியை தன்னைச் சுற்றியிருந்த புலிகளின் தலைவர்களிடம் தெரிவித்திருந்தார். மாத்தையா தனது அதிஉர்ப்தி தொடர்பாக வெளிப்படையாக பேசாமலும், பிரபாகரனுக்கெதிராகப் புரட்சி செய்யாமலும் இருந்தபோதிலும், பிரபாகரன் மாத்தையாவுடன் மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். பிரபாகரனின் சர்வாதிகார, கொலைகார மனோநிலையினை சரியாகப் புரிந்துகொள்ளத் தவறிய மாத்தையா, தானாகவே புலிகளின் விசாரனைக் குழுவில் சரணடைந்தார். அதன்மூலம் மிகவும் வலிமிகுந்த மரணத்தை அவர் சந்தித்தார். ( மாத்தையாவின் சதிபற்றி நாம் தெரிந்துவைத்திருப்பதற்கும், சிங்களப் பேரினவாதிகள் நினைத்துவைத்திருப்பதற்கும் இடையிலான வேறுபாட்டினைக் கவனியுங்கள்) மாத்தையாவுக்கு நடந்த அவலமான மரணமே புலிகளியக்கத்தை அடுத்த புரட்சியாளனான கருணாவைக் காப்பாற்றியது என்ற்கூடச் சொல்லலாம். மாத்தையாவின் தூரொகத்தின்போது அவரையும் அவரது ஆதரவாளர்களையும் கைதுசெய்யும் பணியில் பிரபாகரனால் கருணா ஈடுபடுத்தப்பட்டார் என்று அறியவருகிறது. தனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் புலிகளை பிரபாகரன் எப்படி தண்டிப்பார் என்பதை தனது கண்களாலேயே கண்டுணர்ந்த கருணாவுக்கு 10 வருடங்களின் பின்னர் தானே அவ்வாறானதொரு புரட்சியினைச் செய்யும்போது தெளிவாகத் தெரிந்தே வைத்திருந்தார். அதனாலேயே உன்னுடன் பேச வேண்டும், வன்னிக்கு வா என்று பிரபாகரன் கருணாவை அழைத்தபோது அவர் முடியாதுஃ என்று சமயோசிதமாகத் தப்பித்துக்கொண்டார். ஆனால், கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட திருகோணமலைத் தளபதி பதுமன் பிரபாகரனின் அழைப்பை ஏற்று, அவரின் தந்திரம் தெரியாது, வன்னிக்குச் சென்று புலிகளின் வலையில் சிக்கினார். அவர் உடனேயே கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரபாகரனுக்கெதிரான கருணாவின் புரட்சி, பல புலியெதிர்ப்பாளர்களுக்கும், அவர்களது அரசியலுக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. கருணாவின் புரட்சி நடக்காது போயிருக்குமானால், ரணிலின் சமாதான நடவடிக்கைகள் புலியெதிர்ப்பு அரசியலினை முற்றாகவே அழித்திருக்கும் என்றுகூடச் சொல்லலாம். அரசியலில் சகுனங்கள் ஆதிக்கம் செலுத்துவது உண்மையென்றால், ரணிலின் சமாதானப் பேச்சுவார்த்தை பயனற்றதாகவே ஆரம்பிக்கப்பட்டது. ரணில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டு மார்கழி 24 நள்ளிரவில் அமுலுக்கு வந்த சில கனப்பொழுதுகளிலேயே முன்னாள் உறுப்பினரான ஆனந்தராஜா என்பவரைப் புலிகள் கொன்றார்கள். ஆனால், இதனை ரணில் அரசோ நோர்வேயின் சமாதான தூதர்களோ கவனிக்கத் தவறிவிட்டார்கள். புலிகளுக்கெதிரான அரசியலைச் செய்பவர்களின் கதி சமாதான காலத்தில் எப்படியிருக்கப்போகிறதென்பதை இந்தக் கொலை எடுத்துக்கூறியிருந்தபோதும், எவருமே அந்நேரத்தில் இதனைக் கண்டுகொள்ளவில்லை. தெற்குச் சிங்களவர்கள் சமாதான போதையில் மூழ்கியிருக்க, புலிகளுக்கெதிரான தமிழர்கள் சமாதானத்திற்கான விலையாகச் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த அரசியல், உளவியல் சூநிலையிலேயே கருணாவின் புரட்சி இடம்பெற்றது. அதுவும், இருக்கக்கூடிய ஒரே காறனமான "வடக்கின் தலைமைக்கெதிரான கிழக்கின் எழுச்சி " எனும் பிரதேச வாத கருத்தியலை முன்வைத்தே நடத்தப்பட்டது. வடக்கின் அடைமைப்படுத்துதலுக்கெதிரான கிழக்கின் எழுச்சி மற்றும் கிழக்குத் தமிழர்களுக்கான மனிதவுரிமைகளையும், பிரதேச உரிமைகளையும் வடக்கின் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுப்பது எனும் நோக்கிலேயே கருணாவின் புரட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனாலேயே கருணாவின் புரட்சியினை பெருமளவு கிழக்கு மக்கள் ஏற்க முன்வந்தார்கள். கிழக்கு மாகாணம் என்பது சிங்கல நாட்டின் பிரிக்கமுடியாத பகுதியாக உறுதியாக கருதப்பட்ட அதேவேளை பிரபாகரனின் ஈழம் எனும் மாயையான நாட்டின் பிரிக்கமுடியாத பகுதியாகவும் அவர்களால் கருதப்பட்டது. அபிவிருத்தியும், குறைவிருத்தியும் கிழக்கின் அடையாளமாகக் காணப்பட்டது. கிழக்கு மாகானத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியன ஆளும் சிங்கலவர்களாலும், தமிழ் அரசியல்வாதிகளாலும், புலிகளாலும், முஸ்லீம் அரசியல்வாதிகளாலும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டுக் கைவிடப்பட்டே வந்தது.
  22. அதன்பின்னரான கருணாவின் கதை மிகவும் இழிவானதொன்று. கிழக்கு மாகாணம் முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னர், கருணாவின் பாதுகாவலர்களின் பார்வையில் கருணாவின் முக்கியத்துவம் குறைந்துகொண்டு செல்லத் தொடங்கியது. தனது முக்கியத்துவமும், போர் வல்லமையும் அவர்கண்களின் முன்னே அழிந்துகொன்டு சென்றபோதும் வடக்குக் கிழக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை என்று அவர் அவப்போது சொல்லிக்கொண்டே வந்தார். கருணாவின் இந்த புதிய ஞானோதயம் அவரின் சிங்கள எஜமானர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. ராணுவத் தீர்வொன்றின்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்த்துவைத்தபின், தீர்ப்பதற்கென்று எதுவுமே இல்லையென்பதே கருணாவின் பாதுகாவல்ர்கள் அனைவரினதும் ஒரே முடிவாக இருந்தது. அத்துடன் கருணா - பிள்ளையான் பிளவு என்பது அவரது பாதுகாவலர்களான சிங்களப் பேரினவாத ஆட்சிக்காரர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா அல்லது போராளியாகவிருந்து கட்டுப்பாடற்ற மிலேச்சத்தனமான ஆயுதக் கும்பலின் தலைவன் என்கிற நிலைக்கு கருணா மறிவிட்டதால் உருவாக்கப்பட்ட பிளவா என்பது இன்றுவரை தெளிவில்லாமலேயே இருக்கிறது. இறுதியில் தனது குடும்பத்துடன் இணைவதற்காக ராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பொய்யான பெயருடன் கருணா லண்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பிரபாகரனுக்கு சமனான பலமுள்ள எதிரியாக, பிரபாரனுக்குச் சவால்விடும் வல்லமை கொண்ட ராணுவ வல்லமையுள்ளவனாக, மகாசக்தி பொருந்திய கடவுளின் மகனாகத் தன்னைக் காட்டிக்கொண்ட கருணாவின் கால்கள் களிமண்ணினால் செய்யப்பட்டவைதான் என்பது நிரூபணமாகிறது. இன்று, அதே சர்வ வல்லமை பொறுந்திய ஒப்பார் அற்ற கருணா லண்டன் சிறையொன்றில் சில்லறைக் குற்றங்களுக்காக கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். கருணா எனும் போராளி தோற்றிருக்கலாம், ஆனால் அவரது புரட்சிக்கான காரணமும், நியாயமும் தவறென்று ஆகிவிடப்போவதில்லை. பிரபாகரனுக்கெதிரான கருணாவின் புரட்சி நியாயமானதே ( சாதாரண சிங்களத் தேசியவாதிகளின் மனோநிலைதான் இவருக்கும்). புலிகள் இருக்கும்வரை தமிழர்களுக்கு நிம்மதியோ விடுதலையோ கிடைக்கப்போவதில்லை. கிடைக்கப்போவதெல்லாம் அழிவுகளும், மரணங்களும் மட்டும் தான். ஒருவேளை பிரபாகரன் போரில் வெற்றிபெற்றாலும் அவர் அமைக்கப்போகும் நாட்டில் வாழுவதற்கு பல தமிழர்களே விரும்பப்போவதில்லை. சிங்களவர்களுடன் இருக்கும் நாட்டில் அவர்கள் அனுபவிப்பதாகக் கூறும் அடக்குமுறைகளைக் காட்டிலும் பிரபாகரனின் நாடு பயங்கரமானதாக இருக்கும். தமது மீட்பர்கள், விடுதலைப் போராளிகள் என்று தமிழ் மக்கள் போஷிக்கும் புலிகளுக்கெதிராகப் போராடுவதே தமிழர்களுக்கு உண்மையான விடுதலையினைப் பெற்றுத்தரக்கூடியது. கருணாவின் புரட்சி சரியானதுதான். குறைந்தது தான் பிறந்த கிழக்கு மாகாணத் தமிழர்களின் விடுதலைக்காகவாவது அவர் புரட்சி செய்யத் தொடங்கினார். அவர் புலிகளிடமிருந்து வெளியேறி வந்தபோது எந்த இலட்சியங்களுக்காக தான் வருவதாகக் கூறினாரோ, அவை யாவுமே சரியானவைதான். ஆனால், நாளடைவில் தானே முன்வைத்த இலட்சியத்திலிருந்து அவர் விலகியதே அவரது தோல்வியாகும். இறுதியில் கருணா தனது பிரதேசமான கிழக்கு மாகாணத் தமிழ் மக்களையே ஏமாற்றினார். பிரபாகரன் மொத்தத் தமிழர்களையும் ஏமாற்றியதுபோல, கருணா கிழக்குத் தமிழர்களை ஏமாற்றினார். கிழக்கு மக்களுக்கெதிரான கருணாவின் இந்த துரோகமே அவரது புரட்சி படுதோல்வியில் முடிவடைவதற்குக் காரணமாகியது. கருணாவைப் பயன்படுத்தி புலிகளை அழிக்க திட்டமிட்ட சிங்கள ஆளும்வர்க்கம் கருணாவைப் பாவித்தவிதமும் அவரது புரட்சி தோற்கக் காரணமாகின. சமாதானத்திற்காக முயன்றுகொண்டிருந்தவர்களைப் பொறுத்தவரை கருணா ஒரு துணைராணூவக் குழுவின் தலைவர், கொலைகாரர். சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரை கருணா தாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக தமக்கு உழைத்த சேவகன், ஆகவே அவரது தேவை முடிந்தவுடன் அவரைக் கழற்றிவிட்டார்கள். புலிகளுக்கெதிரான தமிழ் அரசியல் சக்திகளோடு, புலிகளுக்கெதிரான தமிழர்களுடனுன் தன்னை தொடர்புபடுத்தத் தவறியதன் மூலம், அரசியலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதும் கருணாவின் வீழ்ச்சிக்குக் மேலும் காரணங்களாகின.
  23. கருணா : ஒரு போராளியின் படுதோல்வி - பாகம் 1 மூலம்: லங்கா கார்டியன் காலம் : 8, மாசி 2008 குறிப்பு : இக்கட்டுரைத் தொடர் திஸ்ஸார குணசேகர எனும் சிங்களவர் ஒருவரால் எழுதப்பட்டது. புலிகளின் போராட்டத்தையே தவறென்று விமர்சிக்கும் இச்சிங்களவர் கருணாவின் "புரட்சி", அதன்பின்னரான அவரது தோல்வி பற்றி இக்கட்டுரையில் எழுதுகிறார். "எம் எல்லோருக்குள்ளும் ஆத்திரம், வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகியவற்றினைக் கொண்ட மிருகம் ஒன்று ஒளிந்திருக்கிறது. ஆனால், அந்த மிருகத்தை எம்மைச் சுற்றியுள்ளவர்கள் மேல் ஏவிவிடாமல் பாதுகாப்பதே எமது தலையாய கடன். அதனை எதிர்த்து, எமக்குள்ளேயே போராடும் நாம், எம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குள்ளிருக்கும் மிருகங்களுக்கெதிராகவும் போராடுதல் அவசியம்" - அல்பேர்ட் கேமஸ் , ஒரு புரட்சிக்காரன் எனும் நூலில் இருந்து. விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தனது நெடுநாள் தலைவருக்கெதிராகவும், தான் வளர்ந்த புலிகள் இயக்கத்திற்கெதிராகவும் மட்டுமே போராடவில்லை. ஆனால், மிக ஆளமாக வேரூன்றப்பட்ட மொத்தத் தமிழ்த் தேசியத்திற்கெதிராகவும் அதன்மீதான தமிழர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளுக்கெதிராகவும் அவர் போராடினார். தான் செய்யப்போவதாகக் கூறிக்கொண்டு அவர் வெளியேறிச் சென்ற காரணங்களை அவர் அடையமுடியாது போனது அவரது தோல்வியல்ல. அவரால் புலிகளுக்கெதிரான ராணுவரீதியிலான சக்தியாக தன்னை நிலைநிறுத்தமுடியும் என்று எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அது தோல்வியே அல்ல. ஆனால், அவரது அவமானகரமான தோல்வியென்பது தானே தன்மீது ஏற்படுத்திக்கொண்டது. ஒருவருடத்திற்கு முதல் கருணா பிரபாகரனின் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால்க் கூட அவர் கிழக்கு மாகாண மக்களுக்கும், புலிகளை எதிர்க்கும் தமிழருக்கும் ஒரு வீரனாக, இலட்சியவாதியாகத் தெரிந்திருப்பார். பிரபாகரனுக்கெதிரான எதிர்கால புரட்சிகளுக்கான நாயகனாக பலர் அவரைத் தொழுதிருப்பார்கள். ஆனால், கருணா புலிகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டார். எந்தப் பிரபாகரனும் புலிகளும் ஜனநாயகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், மனித நாகரீகத்திற்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று கருணா அன்று கூறினாரோ, இன்று அதே செயல்களை புலிகளை எதிர்த்துச் சண்டை செய்கிறேன் என்கிற போர்வையில் கருணாவும் செய்துவருகிறார். கிழக்கு மாகாணத் தமிழர்களை பிரபாகரன் அடிமைகளாக நடத்துகிறார் என்று அன்று கூறிய அதே கருணா, சிங்களப் பேரினவாதிகளின் ஆசீரோடும், உந்துதலோடும் அதே கிழக்கு மக்களை பிரபாகரனைக் காட்டிலும் மிகவும் கொடுமையான அடக்குமுறையின்கீழ் அடிமைகளாக வைத்திருக்கிறார். கருணாவின் கீழ் செயற்படும் ராணுவத் துணைப்படை மிகவும் மிலேச்சத்தனமாக சிறுவர்களைத் தனது அணியில் சேர்த்துவருகிறது. மனிதவுரிமைகளுக்கான ஐ நா வின் உயர்ஸ்த்தானிகராலயம், மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல சர்வதேச மனிதவுரிமை மற்றும் சிறுவர் நலன் பேணும் அமைப்புக்கள் கருணாவின் துணைராணூவக் குழுவினரால் நடத்தப்பட்டு வரும் கட்டாய சிறுவர் சேர்ப்பு, கடத்தல்கள், கப்பத்திற்காக் கடத்துதலும் படுகொலைகளும் ஆகிய மிருகத்தனமான சம்பவங்களுக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. இந்த மனிதநேயத்திற்கெதிரான கருணா குழுவின் செயற்பாடுகள், அவர்களைப் புரட்சிக்காரர்கள் என்கிற நிலையிலிருந்து புதிய அடக்குமுறையாளர்களாக தமிழ்மக்கள் முன்னால் நிறுத்தியிருக்கின்றன. ஆனால், சரித்திரத்தில் போராளிகளே தமது சொந்த மக்களின் அடக்குமுறையாளர்களாக மாறி வலம் வருவது சரித்திரத்தில் இதுவே முதற்தடவையும் அல்ல.
  24. அந்தப் பேட்டி........ கேள்வி : வணக்கம் கருணா குழு முக்கியஸ்த்தர் : வணக்கம் அண்ணை, இதுகுறித்து உங்களை தொந்தரவு படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் உங்களுடன் கருணா தொடர்பான பல ரகசிய விடயங்களைப் பேச விரும்புகிறேன், அதனைச் செவிமடுப்பீர்களா? கேள்வி : அதுசரி, ஆனால் இப்போது அதிகாலை 12:30 மணி, பரவாயில்லை சொல்லுங்கள்? க.கு.மு : நன்றி கேள்வி : கேர்ணல் கருணாவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். கேள்வி : அவரை ஏன் கருணா என்று மட்டும் அழைக்கிறீர்கள்? ஏன் அவரது கேர்ணல் எனும் மரியாதைப் பெயரினைத் தவிர்க்கிறீர்கள்? அவர் உங்களது தலைவர் இல்லையா? க.கு.மு: முந்தி அவரைத் தலைவராகத்தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போது அவர் அந்தத் தகுத்திக்குப் பொருத்தமற்றவர் என்பதனை நிரூபித்துவிட்டார். அவருக்கும், அவர் எதிர்த்துச் செயற்படப்போவதாகக் கூறிய பிரபாகரனுக்கும் எந்தவேறுபாடும் இல்லை. இருவரும் எமது மக்களையும், போராளிகளையும் நட்டாற்றில் விட்டு விட்டனர். கேள்வி : கருணா எங்கு தப்பியோடியிருக்கிறார்? அவர் இப்போது எங்கு வாழ்கிறார்? க.கு.மு: அவர் இப்போது எந்த நாட்டில் வாழ்கிறார் என்பது உண்மையாகவே எனக்குத் தெரியாது. ஆனால், அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பது எம் எல்லோருக்கும் இப்போது தெரியும். அவர் ஒளிந்திருக்கும் இடம்பற்றி நான் பேசமுடியாது, அவரது பாதுகாப்பு முக்கியமல்லவா? கேள்வி : தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என்ன நடந்தது? க.கு.மு: அது இப்போது இரண்டாகப் பிளந்துபோய்விட்டது. கருணாவின் சுயநலத்தாலும், இலக்குத்தவறிய இயல்பினாலும் இது நடந்தது. கேள்வி : அப்படியானால் உங்களின் அரசியல்ப்பிரிவுக்கு என்ன நடந்தது? க.கு.மு: அது ஒரு முற்றான கேலிக்கூத்து. கருணா தனது உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையுமே அந்த அரசியல் கட்சிக்கு நியமித்தார். கேள்வி : மட்டக்களப்பிலும், அதனை அண்டிய ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் இப்போது என்னதான் நடக்கிறது? க.கு.மு: பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், இன்றுவரை கருணா குழு உறுப்பினர்கள் அப்பாவிக் கிழக்கு மக்களிடம் கட்டாய கப்பம் அறவிடுதலை செய்துவருகின்றனர். இப்படியாக மக்களைக் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படும் கப்பப் பணம் கருணாவின் வங்கிக் கணக்கை நிரப்பி வருகின்றன. கேள்வி : மட்டக்களப்பில் ஒருமாதத்திற்கு கருணாவுக்காக எவ்வளவு பணம் கப்பமாக அறவிடப்பட்டு வருகிறது? க.கு.மு: பெருமளவான பணம். நானும் இந்தக் கப்பம் அறவிடல் நடவடிக்கையில் கருணாவுக்காக ஈடுபட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்தமட்டில், கருணா ஒருமாதத்திற்கு குறைந்தது 80 லட்சம் ரூபாய்களைக் கப்பமாக அறவிட்டு வருகிறார். கேள்வி : கருணாவுக்கு அரசாங்கத்தினால் பணக் கொடுப்பனவுகள்கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், நிச்சயமாக. கேள்வி: அரசிடமிருந்து ஏனைய சலுகைகள் கிடைக்கின்றனவா? க.கு.மு: ஆம், கிடைக்கின்றன. ஆனால், அந்த விபரங்களைக் கூறுவது எனது பாதுகாப்பிற்கும், கருணா குழுவினரின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலாக மாறிவிடும், அதனால் அதனைத் தவிர்த்து விடுகிறேன். கேள்வி : உங்களின் எதிர்காலம் தொடர்பாகவும், தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பின் எதிர்காலம் தொடர்பாகவும் உங்களின் புரிதல் என்ன? க.கு.மு: புலிகளின் எதிர்காலம்போலத்தான் எமது எதிர்காலமும். புலிகளை பலவீனமாக்கி அழிக்க கருணாவின் பிளவு காரணமாக இருந்ததுபோல எமது அமைப்பு பிரிந்து அழிக்கப்படவும் கருணாவே காரணமாக இருக்கிறார். இன்று எம்மை நடத்துவதும், ஆட்டுவிப்பதும் அரசாங்கமும், அவர்களது ராணுவப் புலநாய்வுத்துறையினரும்தான் தான். இந்த மொத்த அவலநிலைக்கும் காரணமே கருணாதான். முற்றும்
  25. "கிழக்கில் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் ராணுவத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவரும் இந்நிலையில், அரசுக்கும் ராணுவத்திற்கும் கருணாவின் தேவை குறைந்துவருவதுடன், அவரின் முக்கியத்துவமும் குறைந்துவருவதாகத் தெரிகிறது. கருணாவுக்கும் அவரது குழு உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்டுவரும் பாரிய விரிசலே இதற்குச் சிறந்த அடையாளமாகக் காட்டப்படமுடியும். குறிப்பாக வாகரை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டபின் கருணாவின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைக்கப்பட்டதோடு, தனது உறுப்பினர்களிடையே இருந்தும் அவர் அந்நியமாகிப்போனார்". "கருணா புலிகளிடமிருந்து பிரிந்து ராணுவத்துடன் சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்தில் அவர் கிழக்கு மக்களிடம் இரு விடயங்கள் பற்றிப் பேசி வந்தார். முதலாவது தமிழ் மக்களிடையே பிரபாகரன் குறித்து இருந்த எண்ணத்தை முற்றாக உடைப்பது அல்லது சிறுமைப்படுத்துவது. அடுத்தது கிழக்கு மக்களுக்கெதிராக வடக்குத் தமிழர்களும் புலிகளும் செயற்பட்டுவருகிறார்கள் எனும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது. ஆனால் இவை இரண்டுமே தவறான, முரணான முடிவுகள். பிரபாகரனின் கொடுங்கரங்களிலிருந்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பேன் எனும் கருணாவின் சூளுரை இன்னமும் அப்படியே இருக்கிறது". இப்போது அவர் தனது குறிக்கோளில் இருந்தும், இலட்சியத்திலிருந்தும் முற்றாக விலகி, தான் சேர்த்துவைத்திருந்த பெருமளவு பணத்தையும், அரசால் அவருக்கு வழங்கப்பட்ட செல்வங்களையும் எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார். இந்தச் செவ்வியின்போது இலங்கை ராணூவப் புலநாய்வு அதிகாரிகளுடன் கருணா கொண்டிருந்த தொடர்புகள் பற்றி விலாவாரியாக விபரங்களை வெளியிட்ட அவர், இவர்களுக்கிடையிலான தொடர்பாடல்களின் விபரங்களையும் வெளியிடத் தயங்கவில்லை. இந்தச் செவ்வியை நாம் ஒழுங்குசெய்யவில்லை. ஆனால், இந்தக் கருணா குழு முக்கியஸ்த்தர் தானாகவே எம்முடன் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசவேண்டும் என்று தொலைபேசி வாயிலாக எம்மைக் கேட்டிருந்தார். கிழக்கு மக்களுக்கான விடியலைப் பெற்றுத்தரப்போவதாக புலிகளிடமிருந்து ராணுவத்தினரின் பக்கம் தாவிய கருணாவின் உண்மை முகம் வெளிக்கொணரப்படவேண்டும் என்பதற்காகவே தான் இதனைச் செய்வதாக அவர் கூறினார். இவ்விடயங்கள் எமது பத்திரிக்கையில் நிச்சயம் வெளிவரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தனது விடயங்களின் உண்மைத்தன்மையினை அறிய விரும்பினால் கிழக்கு மக்களிடமோ அல்லது ஏனைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு உறுப்பினர்களிடமோ நீங்கள் கேட்டு அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.
  26. மலைகள் தாலாட்டும் கடலன்னை.......! (malte island)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.