Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  2. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7401
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1570
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/06/22 in all areas

  1. இந்த காணொளியில் வரும் தம்பி யாரென தெரியாது..! ஆனால், இவர் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் சென்னையில் இறங்கி, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் தாய்நாட்டின் பூமியை தொட்டு வணங்கியபோது நேசத்தில் கண்கள் கலங்கியது உண்மை. 💔 வாழ்க வளமுடன்..! 🙌 வெகுளி மனதோடு செங்கல்பட்டு அருகேயிருக்கும் கிராமத்து கடைகளிலும், வீதியோரம் செல்பவர்களோடும் ஈழத்து தமிழில் பேச முயலும்போது அவர் அனுபவித்த சுகமான சிரமங்கள் அலாதியானது. (சில வருடங்களுக்கு முன் துபை வந்த பாஞ் மற்றும் அவரின் துணைவியாரிடமும் நான் தமிழக தமிழில் பேச, அவர்கள் ஈழத்து தமிழில் பேச, நாங்கள் தடுமாறிய நொடிகளின் இனிமையான தருணங்களை நினைத்து இன்னமும் ரசிக்கிறேன்..!) காணொளி முடிவில், ஒரு அம்மா "என்னையும் ஈழத்துக்கு கூட்டிட்டு போய் கொண்டு வந்து விடு..!" என சொல்வது ரசிக்கத்தக்க வேடிக்கை. இந்த தம்பி, சென்னையின் நகர்புறம் சென்று பேசினால் இந்த அன்னோன்யம் இருக்குமாவென தெரியவில்லை ஈழம் சென்று கதைக்க, தரிசிக்க எங்களுக்கும் ஆவல் பெருகுகிறது..! 😍
  2. தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். "தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு குடித்து கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். "தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்?
  3. இதுதான் அப்பாமீது உள்ள நிஜமான பாசம்......அதுக்காக உங்கள் பிள்ளைகளை நினைத்து நீங்கள் வருந்திக் கண்ணீர் விட வேண்டாம்.......! 😂
  4. படம் : பட்டினத்தார்(1962) இசை : G .ராமநாதன் வரிகள் : பட்டினத்தார் பாடியவர் : TMS =======(தத்துவ பாடல்)======
  5. அவர் பெயர் தவகரன், யாழ்பாணத்திலிருந்து யூரியூப் காணொலிகள் பதிவேற்றும் யாழ் சுதன் ஷங்கர் ஜெசி போன்ற பிரபல்யமான பலரில் இவரும் ஒருவர். எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்திய விசா பெற்றுத்தான் அங்கு வரவேண்டுமென்றாலும், சென்னை என்பது உலக தமிழர்களின் தலை நகரம், அழுக்கான சினிமாவும் அரசியலும் அங்கிருந்தாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு போகும் தூரம்கூட இல்லாத தமிழகமும் எங்கள் தாய் மண்ணே.
  6. வாழ்க்கையின் முதல் விமானப் பயணம் எவ்வளவு எதிர்ப்பார்ப்புடனும், சிலிர்ப்புடனும் இருக்குமென்பதை அனுபவபூர்வமாக வர்ணித்து எழுதியுள்ளது சிறப்பு. இந்தக் காணொளியின் இறுதியில் சென்னையில் இறங்கி, வெளிவரும்போது சொல்லிருப்பார். காணொளிகளின் கீழே தமிழக உறவுகளின் பின்னூட்டங்களில், இவருக்கு எவ்வளவு வரவேற்பு இங்கே இருக்கிறதென்பதை அறியக்கூடியதாக உள்ளது.
  7. பிரபா பயணக் கட்டுரையை படங்களுடன் மிகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் சிறுசிறு விளக்கங்களுடனும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
  8. இன்னும் இல்லை பிரபா சிதம்பரநாதன். அனேகமாக வருகின்ற கிழமை வீட்டிற்குப் போகலாம் என நினைக்கின்றேன். ஆனால் தினமும், வைத்தியசாலைக்குச் சென்று… தெரப்பி செய்ய வேண்டி வரும்.
  9. யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டு மண்டைதீவு வழியால் சென்ற பொழுது மண்டைதீவில் ஆஸ்பத்திரி கட்டும் யாழ் இணைய திரி ஒன்றும் நினைவில் வந்து போனது!!! சிறுவயதில் எனது அப்பு அம்மம்மாவுடன் இந்த வெள்ளைக்கடற்கரைக்கும் அதன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கும் ஒரேயொரு தரம் போனது நினைவில் உள்ளது.. அதன்பிறகு இம்முறை தான் போனேன்.. அங்கே போக சந்தர்ப்பங்கள் இருந்தும் இத்தனை காலமும் போனதில்லை, ஆனால் இம்முறை பார்க்க வேண்டும் போல மனதிற்கு தோன்றியது!!!இந்த வெள்ளைகடற்கரை என நான் நினைத்து வைத்திருந்தது சாட்டி என பின்னாளில் அறிந்து கொண்டேன். எப்பொழுதும் போல நல்லூர் மனதில் தனியான ஒரு இடத்தை பிடித்தது!! அதிகாலையில் பொங்கல் பொங்கிய இடத்தில் மாலையில் மத்தாப்பும் சக்கர வானமும்(?) சிரித்தது!!! பாரதியாரின் காணி நிலம் வேண்டும் கவிதையில் வரும்.. பத்து பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற்படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்.. வரிகளை நினைக்க வைத்த தென்னங்காணி!! மீண்டும் கொழும்பில் மொட்டை மாடியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த மகிழ்ச்சி..சற்றே திரும்பி தூரத்தே தெரியும் தாமரை மொட்டைப் பார்த்ததும் காணாமல் போய்விட்டது!! அவுஸ்ரேலியா திரும்பும் பொழுது மனமும் இந்த இரவின் கறுப்பு போல கவலை கொண்டது!! இங்கே காலை வேளை சுக்கு கோப்பியை குடிக்கும் பொழுது காலஞ்சென்ற என் அம்மா உருவாக்கி விட்டுப் போன கோப்பி மரங்களையும், அவர் போட்டு தந்த கோப்பியையும் என் இலங்கை பயணத்தையும் நினைத்தபடி நிகழ்வுலகிற்கு திரும்பினேன்..!! முற்றும்.. நன்றி - பிரபா
  10. யாழ்ப்பாண ஆட்டிறைச்சி பால் பொரியல் .👌
  11. கொடியில் இரண்டு மலருண்டு ......! 😍
  12. இத்திரைப்படம் வெளிவரவில்லை
  13. அறப்படிச்ச பனங்கொட்டையா னுகள்.....😜
  14. அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்! அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவயது ஞாபகங்கள்!! திரும்பி வரும் வழியில் தனங்கிளப்பில்(?) உள்ள காற்றாலைகளை அருகில் சென்று பார்த்தபொழுது!! எனக்கு எப்பொழுதும் பிடித்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வயல்வெளி!! சிறுவயதில்/இளவயதில் சைக்கிளில் இந்தவழியாக செல்வது வழமை.. மழையை ரசித்தபடி சில நாட்கள்.. தொடரும்..
  15. பஸ்தியன் சந்தியில் ஒரு காலைப்பொழுது!! மாவிட்டபுரத்தில் ஒரு மாலைப்பொழுது!! தலசிட்டி வைரவர் கோவில் - நந்தி இருக்கவேண்டிய இடத்தில் நாய் இருக்கும் ஒரு கோவில்!!. விலங்குகளை பலி கொடுப்படுதை தடுத்தாலும் பலிக்கொடுப்பதற்காக இருந்த சாதாரனமாக இருந்த கோவில் இன்று 4 பக்க கோபுரங்களுடன் கட்டப்படுகிறது!! மயிலிட்டி - மீன்களுடன் படகுகளும் தென்பகுதி மீன் வியாபாரிகளும் ஊறனி- கடந்து போக முடியாமல் பல கதைகள் கூறும்!!! தொடரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.