Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    33600
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    929
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19139
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/23/23 in Posts

  1. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........( 11). அப்போது அங்கு கபிரியேல் வருகிறான். என்ன நீங்கள் இருவரும் சிரிக்கிறீர்கள், சொன்னால் நானும் சிரிப்பேன். மிருதுளா அவனிடம் சீ .....போடா அதெல்லாம் லேடீஸ் மேட்டர் என்கிறான். அவனும் பதிலுக்கு அவளிடம் நீ போடி என்று சொல்லி விட்டு அவர்களை பார்த்து அங்கு ஒரு லூசு லூசு என்று வந்திருக்கு வந்து பாருங்கோ என்று சொல்லி மேலே போகிறான்.இருவரும் வரும்போது சுமதி மிருதுளாவிடம் என்னடி இவன் போடி என்கிறான், லூசு என்கிறான் என்று கேட்க, அதொன்றுமில்லை மேடம் ரேணுகாதான் அவனுக்கு தமிழ் டீச்சர்.தமிழில் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி.முகபாவத்துடன் சொல்லுவான்.இப்ப நிறைய தமிழும் கதைக்கிறான். பிரேமாவுடன் பிரெஞ் கதைப்பதைவிட தான் தமிழ் படிச்சு தமிழில் கதைப்பது பெட்டராம். சுமதி சிரித்துக் கொண்டே வருகிறாள். மேலே ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ஓ......நீங்களா வாங்கோ என்ன விடயம் ....அது வந்து சுமதி நாளைக்கு மாலை ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போக வேண்டும், இந்த ப்ளவுசை கொஞ்சம் லூசாக்கித் தரவேண்டும், அத்துடன் இந்த சாறிக்கு ஏற்றதுபோல் ஒரு உள் பாவாடையும் தைத்துத் தரவேண்டும். சரியென்று மிருதுளா அவரைக் கூட்டிச்சென்று அளவுகள் எடுத்து விட்டு "நாளை மதியத்துக்கு பின் வாங்கோ" என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். பின் சுமதியிடம் இது இரு மாதங்களுக்கு முன் நாங்கள் தைத்துக் கொடுத்த சட்டைதான் மேடம். இப்போது கொஞ்சம் சதை போட்டு குண்டாகி இருக்கிறாள். நான் அப்பவே உள்ளே சிறிது துணி கூட விட்டுத்தான் தைத்தது.கெதியா சரிபண்ணிடலாம் என்கிறாள். அப்ப இவன் லூசு என்று சொன்னது இந்த லூசைத்தான் போல. இதையாடா லூசு என்று சொன்னனி என்று அவனிடம் கேட்க அவனும் ம்....என்று தலையாட்டுகிறான். கபிரியேலையும் கூட்டிக்கொண்டு தனது அறைக்கு வந்த சுமதி அவனிடம் கபிரியேல் இந்த வாரத்துடன் உனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இது உனது புது ஒப்பந்தம் படித்துப் பார்த்துவிட்டு உன் அபிப்பிராயத்தை சொல்லு. கடிதத்தை வாங்கிப் படித்த கபிரியேல் தனது வேலை ஒப்பந்தம் மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்திருப்பதை பார்த்து விட்டு சுமதியிடம் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை சுமதி ஆனால் நான் சமீபத்தில் இரண்டு லொறிக் கம்பெனிகளில் சாரதிக்கான நேர்காணலுக்குப் போயிருந்தேன். அவர்கள் எந்நேரத்திலும் எனக்கு பதில் அனுப்புவார்கள் என்று காத்திருக்கிறேன்.அப்படி அழைப்பு வந்தால் நான் உங்களிடம் சொல்லி விட்டு அங்கு செல்லலாம் என்றிருக்கிறேன். --- ஏன் கபிரியேல் உனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையா, அல்லது சம்பளம் குறைவு என்று நினைக்கிறாயா, அல்லது நிரந்தரமான வேலை ஒப்பந்தம் போட்டுத் தரவா என்று சொல்கிறாள். --- ஓ......நோ .....அப்படியொன்றும் இல்லை மேடம். லாரிகள் ஓட்டுவதென்பது ஒரு ஜாலியான வேலை. 1000 / 1500 கி.மீ. லாரி ஒட்டிக் கொண்டு போவதும் வழியில் ஏனைய லாரி சாரதிகளுடன் வயர்லெஸ்சில் உரையாடிக் கொண்டு செல்வதும் இடத்துக்கு இடம் வித விதமான உணவுகள் தங்கும் ஹோட்டல்கள் எல்லாம் சொல்லி வேல இல்லை சுமதி, அந்த சுகம் அனுபவிக்கனும் அப்ப புரியும். கதைக்கும் போதே கனவுகளில் மிதக்கிறான்.பிரெஞ் இளைஞன் அல்லவா அவனது உணர்வுகள் அவளுக்குப் புரிகிறது. --- சரி கபிரியேல் நீ விரும்பியதுபோல் எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம். ஒரு நல்ல நண்பர்களாக உன்னுடன் வேலை செய்யும் இந்த நாட்கள் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.இருவரும் படியேறி மேலே கடைக்கு வருகிறார்கள். சரி .....மிருதுளா நாளைக்கு நீ எட்டரைக்கு வந்து கடையை திறந்து விடு. அந்நேரம் கதீஜாவும் வந்து விடுவாள். இருவருமாக கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல் 13:00 மணிக்கு கபிரியேல் வரட்டும் சரியா.....! --- சரி மேடம். உங்களுக்கு மிக்க நன்றி. --- ம்....இன்னும் ஒன்று, இப்ப வேலைகள் நிறைய வருகின்றன, கதீஜாவும் இருப்பதால் ஆபிரிக்கன்ஸ் அல்ஜீரியன்ஸ் ஓடர்களும் கொஞ்சம் வரலாம் அதனால் நான் வேறு ஆட்களை எடுக்கும் வரை நீயும் அவளும் விரும்பினால் வேலை அதிகம் இருக்கும் நாட்களில் கூடுதலாக இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து விட்டுப் போகலாம். அதற்குரிய பணத்தை நான் தனியாக உங்களின் கைகளில் தந்து விடுகிறேன். --- சரி மேடம். ஆறுமாதங்கள் பின் கடை ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கு. கபிரியேல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஒரு டிரான்ஸ்போர்ட் கொம்பனியில் வேலை எடுத்துக் கொண்டு போய் விட்டான். கடைக்கு மேலும் ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு ஆட்களை மூன்று மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்திருந்தார்கள். கதீஜாவுக்கு கீழ் அறையில் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்கு. அங்கு அவள் ஆபிரிக்கன் பெண்களுக்கு தலை அலங்காரம் ஒப்பனைகள் செய்வதுடன் மேலே கடையில் குறிப்பாக ஆபிரிக்கன் ஆடைகள் விற்கும் பகுதியிலும் அவர்களுக்குரிய ஸ்பெஷல் திருமண ஆடைகள் போன்றவை தைத்துக் கொடுப்பதிலும் தகுதி பெற்றவளாக சிறப்பாக வேலை செய்து கொண்டு இருக்கிறாள். மேலும் சிறுமிகளுக்கும் குமரிகளுக்கும் தலை பின்னுவதில் கிடைக்கும் பணத்தை கதீஜாவே எடுத்துக் கொள்ளுமாறு சுமதி சொல்லியிருந்ததால் அவளுக்கு அந்தப் பணத்துடன் சுமதி தரும் சம்பளப்பணமும் கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சி. அன்று "லக்கி டெய்லரிங் & டெக்ஸ்டைல்ஸ்" மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு சேகர் வருகிறான்.சுமதி அவனை வரவேற்று என்ன சேகர் இந்தப் பக்கம், நீ சும்மா வரமாட்டாயே என்கிறாள். --- அதொன்றுமில்லை அக்கா, வாரமாதம் ஒரு புது சீட்டு ஒன்று தொடங்கிறன். இந்தமுறை தொகையும் கொஞ்சம் அதிகம். அதுதான் ஒரு சீட்டுக்கு உங்களையும் சேர்க்கலாம் என்று சொல்ல ...... சுமதிக்கு "இனிமேல் நீ சீட்டுகள் போடக் கூடாது என்று சுரேந்தர் சொன்னது ஞாபகத்தில் வந்து போகுது. ஆனாலும் மனம் இந்த சீட்டைப் போட்டு கழிவு குறைவாய் வரும்போது எடுத்தால் " லா கூரினேவிலும்" (தமிழர்களும், ஆபிரிக்கங்களும் செறிந்து வாழும் ஒரு இடம்) ஒரு தையல் கடை திறக்கலாம் என்று கணக்குப் போடுது. சரி சேகர் என்னையும் ஒரு சீட்டுக்கு சேர்த்துக்கொள் என்று சொல்கிறாள். சேகர் போகிறான். --- மனம் சொல்லுது, நீ பாட்டுக்கு சீட்டுக்கு சொல்லி விட்டாய், நாளைக்கு சுரேந்தர் கேடடால் என்ன செய்வாய். --- நீ சும்மா இரு, எனக்கெல்லாம் தெரியும். அந்தாளுக்கு சமயம் பார்த்து சூடாக ஒரு பிரியாணி போட்டு விட்டால் எல்லாம் சரியாயிடும்.........! சுபம். யாவும் கற்பனை.....! யாழ் அகவை 25 க்காக ........! ஆக்கம் சுவி........! 🙏 🙏 🙏
  2. இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.
  3. வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான். மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்
  4. இதுக்குத்தான் சொல்லுறது ஊருக்கு ஒரு சைவப்பழமாவது இருக்க வேணும் எண்டு
  5. இந்தச் சிலை சிவனின் சிலை இல்லை. இது அர்த்தனாரீஸ்வரர் என்னும் சிவனின் இன்னொரு வடிவமாகும். சிவனும், உமையும் சேர்ந்த வடிவமாகும். சிறியர், எனது ஊரிலும் ஒரு அழகிய ஆல மரத்துக்கு, யாரோ சேவெடுத்துக் கேவலமாக்கியிருக்கிறார்கள். எமது அடையாளங்களும் சிதைக்கப் படுகின்றன.
  6. 2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள். இருவருக்கு... ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால் கால் கழட்டியதாம், மற்றவர்.... பல வருடமாக அதிக சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம். எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் எனக்கு கிட்ட வர இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. நான் பார்த்தவுடன், ஒளித்து விட்டார். குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது என நினைத்தாரோ தெரியவில்லை. 😎 எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂 உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன். வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋 விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை அவ்வப்போது தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃 பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம். 😂 🤣
  7. கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...
  8. இது எனக்கு பிடித்துள்ளது👍 எமது ஆட்கள் சிலர் ஒரு விபத்து நடந்தால் அம்பானியாகிவிடலாம் என்று பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன்😂
  9. ம் ம் குடிலைக் கண்டவுடனை கள் அடிக்க நல்ல இடம் வாச்சிருக்கு என்று எண்ணிவிட்டீர்கள் போல. இரண்டு மூன்று பிழாவும் செய்து அதில தொங்க விட்டுவிடுங்கோ.
  10. ஐக்.....குடிலும் வைச்சிருக்கிறியள்....
  11. இது ஒரு டூயட் பாடல்தானே சகோதரி.......இதுக்கு மேலே போனால் இயக்குனர் வெட்டுவேன் என்கிறார்.......! 😂
  12. ஓம் .....பாம்பின் தலை வரையும் உள்ளே சாடிகள் இருக்கும் ......நல்ல பசளைகள் இட்டு அழகாக கட்டிங் ஷேவிங் எல்லாம் செய்திருக்கிறார்கள்.........! 😍
  13. இதிலிருந்து நாம் விடுபடணும். அதுவே முதல்படி. நன்றி சகோ நீண்ட அனுபவத்தின் ஊடான கருத்துக்கும் நேரத்திற்கும் அதே தான் ஆனால் எமது அடுத்த தலைமுறை இதிலிருந்து விடுபடும் விடுபட வேண்டும். அதற்கான முதல் அடியை நானும் அதன் தொடர்ச்சியாக நீங்களும் செய்து செல்வோம். நன்றி ராசா நேரத்திற்கும் கருத்துக்கும்
  14. மோடி ஆட்சி இருக்கும்வரை கை வைக்க முடியாது. பிறகு என்னென்னமாதிரியோ.
  15. அதென்றால் மெத்த சரிதான். புத்தர் குடியேற முன் எங்கெங்கு சிலைகள் வைக்கலாம் என்று பார்த்து பார்த்து வைத்துவிடவேணும். நிச்சயம் கள்ளக்குடியேற்றம் என்று சாட்டு சொல்லுவான். வீடு மற்றும் தோட்டம் படங்கள் கொஞ்சம் இணைக்கலாம் என்று இருக்கிறேன். இவ்வருடம் போய்த்தான் நான் நினைத்தமாதிரி பினிஷிங் செய்து முடிக்கவேணும்.
  16. வேலைக்கு போக தொடங்கி இருப்பீர் என்று தெரிந்தாலும் இந்தப்பதிவை இன்றுதான் பார்த்தேன் சிறி. வீட்டில கவனிப்பு பலமாக இருந்திருக்கு. வேலையில் ஓடியாடி பிசியாக இருக்கும்போது உடல் நிறை விரைவாக குறைந்து விடும். உமது அனுபவங்களை தொடர்ந்து பதிவிடும். பிகு: அது எப்படி Qtexபற்றி கேட்காமல் இருக்கமுடியும்?
  17. நீங்கள் வேலைக்குத் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்....
  18. நல்ல ஆக்கம்... "அங்கொடையில இருக்கிறவங்க அங்கானையில இருக்காங்க!......" என்ற மீன்பாடும் தேன்நாட்டிலிருந்து உருவான பாடல் வரியின் பொருள் இன்டைக்குத்தான் எனக்கு விளங்கினது!😆
  19. உண்மையில் நான் சிலையை வடிவாக பார்க்கவே இல்லை. கருங்கல் மற்றும் உலோகங்களால் சிற்பிகள் செய்த சிலைகள் தான் எனக்கு விருப்பம். தகவலுக்கு நன்றி
  20. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், உடல்நிலையில் வெளியே சொல்லமுடியாத, சொல்ல யாருமற்ற பிரச்சனைகள், நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம். குற்ற உணர்விலிருந்து மீண்டு வர காலம் எடுக்கும். உடற்காயம் கண்ணுக்கு தெரிவதால் மருந்திட்டு குணப்படுத்தலாம், மனக்காயம் அப்படிப்பட்டதல்ல. ஒருவேளை நீங்கள் கதைக்காமல் இருப்பதும் அவரை தண்டிக்கக்கூடும். இவ்வளவும் செய்த நீங்கள் அவரை நேர்நேரே சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் எல்லோரும் தவறு விடுவது இயல்பு, இது ஒரு விபத்து என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் மன்னிப்பை அவர் உணரும்போது அது குணமடையும். அது அவர் மேல் நீங்கள் காட்டும் பரிவு, அவன்மேல் உங்களுக்கு கோபமில்லை என்பதை எடுத்துக்காட்டும் செயல் போதுமானது. கொஞ்ச கால அவகாசம் கொடுத்துப்பாருங்கள். நீங்கள் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் அவருக்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டீர்கள் அது பாராட்டத்தக்கது. ஆகவே விடுங்கள் ஒருநாள் வருவார், தனது வருத்தத்தை தெரிவிப்பார். இல்லையேல் அவருடன் வேலை செய்ய நேரிட்டால் கூடுதல் கவனம் எடுங்கள்.
  21. அம்பிகையே ஈஸ்வரியே எம்மை சுவியின் பாட்டுக்கு போட்டியாக.
  22. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(10). சுமதியும் கதீஜாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு, இவரை நான் புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறேன். மிருதுளாவைப் பார்த்து நீ இவளுக்கு இங்கு செய்ய வேண்டிய வேலைகள் பற்றி விளக்கமாய் சொல்லிக் குடு. அவளின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். பின் கதீஜாவிடம் நீ இன்று மதியத்துடன் வீட்டுக்கு போய் விட்டு நாளை காலையில் இருந்து வேலைக்கு வரவும். காலை 08:30 க்கு கடைக்குள் இருக்க வேண்டும் என்பதை ரொம்ப அழுத்தி சொல்கிறாள். அவளும் சரி மேடம் என்று சொல்லி விட்டு மிருதுளாவுடன் போகிறாள். பின் சுமதியும் நீங்கள் வேலையைப் பாருங்கள் நான் போட்டு பிறகு வருகிறேன். வெளியே போகிறாள்.....! மதியம் ஒன்டரைக்கு சுமதி கடைக்கு வர அங்கு மிருதுளா,ரோகிணி,கபிரியலோடு கதீஜாவும் நிக்கிறாள். பிரேமா இன்னும் வேலைக்கு வரவில்லை. --- ஏன் கதீஜா நீங்கள் 12:00 மணிக்கே போயிருக்கலாமே. --- பரவாயில்லை மேடம், மிருதுளாவோடு வேலை செய்து கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.சரி நான் போயிட்டு நாளை காலை எட்டரை மணிக்கு வந்து விடுகிறேன். நன்றி மேடம் என்று சொல்லி விட்டு போகிறாள். வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டரைக்கு பிரேமா அங்கு வருகிறாள். அப்போதும் அங்கு சுமதியைப் பார்த்ததும் அவளுக்கு ஒருமாதிரி இருக்கிறது. நேரம் 15:00 மணி.சுமதி ரோகிணியை கூட்டிக் கொண்டு தனது ஆபீஸ் அறைக்குப் போகிறாள். அங்கு ஒரு நீளமான மேசையும் அதன் மேல் மறைவாக கடைக் கேமராக்களின் பதிவுகளைக் காட்டும் தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கிறது. அது கடையின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்துக் காட்டிக்கொண்டிருக்கு. ரோகிணியை எதிரில் அமரச் சொல்லி விட்டு பைலில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள். அதை வாங்கிப் படித்த ரோகிணி,என்ன மேடம் என்னை வேலையில் இருந்து நிப்பாட்டி இருக்கிறீர்கள். நான் ஒழுங்காத்தானே வந்து வேலை செய்து விட்டு போகிறேன். --- இல்லை ரோகிணி நீ இந்த மூன்று மாதத்தில் பலநாட்கள் விடுமுறையில் நின்றிருக்கிறாய். ஆனால் நீ திருப்தியாய் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையும் செய்வதில்லை. --- எப்படி சொல்லுறீங்கள் மேடம், நான் pole emploi வால் வேலைக்கு வந்தனான். தகுந்த காரணமின்றி நீங்கள் என்னை நிப்பாட்டினால் நான் அவர்களிடம் முறையிட வேண்டி வரும். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை. --- சுமதிக்கு எழும்பி நின்று அறையணும்போல இருக்கு ஆயினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.அதற்குமுன் இதையும் கொஞ்சம் பாருங்கள். தனது போனை எடுத்து இயக்கி அவளின் பக்கம் திருப்புகிறாள். அதில் ரோகிணி வேலைநேரத்தில் கீழ் அறையில் போனில் பாட்டுக் கேட்டு தலையாட்டிக் கொண்டு இருப்பதும், ஆட்கள் வரும்போது விக்ஸ் பூசிக்கொண்டு படுத்திருப்பதும், அவர்கள் போனதும் மீண்டும் பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதும் துல்லியமாக பதிவாகி இருக்கு. --- ஆ.....இதல்லாம் எப்படி.....என்னை மன்னித்து கொள்ளுங்கள் மேடம். அப்படியே சரணாகதியாகி விட்டாள். --- நான் இப்பவே இதை pole emploi வுக்கு அனுப்ப முடியும். அது மட்டுமல்ல இந்த மூன்றுமாத காலத்திற்குள் உனது வேலை எனக்குத் திருப்தி இல்லையென்றால் உன்னை வேளையில் இருந்து தூக்க அதிகாரமும் இருக்கு. அதேபோல் இந்த வேலை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் கூட நீயாகவே நிக்கவும் உனக்கும் அதிகாரம் உண்டு. சரி....சரி எனக்கு நேரமில்லை. பேசாமல் கையொப்பமிட்டு விட்டு பேப்பரை எடுத்துக் கொண்டு கிளம்பு. உனது சம்பளப் பாக்கிப் பணம் உனது வங்கிக் கணக்குக்கு வரும். உனக்கு வேலைகள் நன்கு தெரியும். இப்படி நடிப்பது, தேவையின்றி லீவு எடுப்பது போன்ற தவறுகள் செய்யாது விட்டால் நீ நல்லா முன்னேறலாம். ---ரோகிணியும் கையொப்பமிட்டு கவலையுடன் கடிதத்தை வாங்கிக் கொண்டு போகிறாள். அடுத்து வெளியே வந்த சுமதி பிரேமாவை அழைத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குப் போகிறாள். அவளிடமும் சுமதி அந்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அதை பார்த்த பிரேமா, என்ன சுமதி என்னையும் வேலையை விட்டு நிப்பாட்டி இருக்குதுபோல. --- ஓம் பிரேமா, எனக்கு வேற வழியில்லை. --- ஏன் நான் தாமதமாய் வந்து போகிறேன் என்றா. --- அது மட்டுமல்ல பிரேமா, நீங்கள் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதனால் புதிதாக கடை திறந்த எனக்கு மிகவும் உதவியாய் இருப்பீர்கள் என்றுதான், உங்களுக்கு இந்த நவீன தையல் முறைகள் தெரியாது என்ற போதிலும் உங்களை வேலைக்கு எடுத்தேன். ஆனால் இங்குள்ளவர்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்பவர் நீங்கள்தான். இது எனக்கு பெரிய ஏமாற்றம்தெரியுமா. --- நான் மட்டுமா, ஏன் மிருதுளா கூட வெளியே போய்..... போய் வருகிறாதானே. --- ப்ளீஸ் பிரேமா அவளை பற்றி இப்போது கதைக்க வேண்டாம். இதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் இப்போது அல்ல, முன்பே சொல்லியிருக்க வேண்டும். மிருதுளா வெளியே போய் வருகிறாள், ரேணுகா வேலை நேரத்தில் கீழ் அறையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாள் என்று. ஆனால் இப்போது நான் பல கண்களால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.நீங்கள் செய்யும் வேலைகள் உட்பட. --- பிரேமாவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்து கொண்டு இருக்கிறாள். --- சுமதி மேலும் தொடர்ந்து எட்டரைக்கு திறக்க வேண்டிய கடையை நீங்கள் ஒன்பதரைக்கு வந்து திறப்பதால் இரண்டு வேலையாட்கள் இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யாமல் வெளியே நிக்கினம். இந்தக் கடைக்கு வரவேண்டிய ஓடர்கள் வேறு இடங்களுக்குப் போய் விடுகிறது. மேலும் நீங்கள் தினமும் 11:30 க்கு போய் பின் 14:30 க்கு வருகிறீர்கள். அதன்பின்பு 16:30 க்கு போய் விடுகிறீர்கள். ஒரு பையில் இருந்து வெட்டிய துண்டு துண்டு துணிகளை எடுத்து மேசைமேல் போடுகிறாள். அவற்றைப் பார்த்ததும் பிரேமா திகைத்து விட்டாள், முழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்திடும் போல் இருக்கின்றன. சுமதி தொடர்ந்து இவையாவும் எங்கட கடைத் துணிகள் இல்லை. நீங்கள் பாட்டுக்கு தனி ஓடர்கள் எடுத்து இங்கு கொண்டுவந்து இங்குள்ள பொருட்களை பயன்படுத்தி தைத்துக் கொண்டு போகிறீர்கள். அதிகம் ஏன் இப்போது கூட நீங்கள் கொண்டுவந்த பையில் உங்களது தனிப்பட்ட ஓடர் துணிகள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை உங்களால் மறுக்க முடியுமா. இது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா. உங்களுக்கு பின் வந்த பொடியன் துணிகளை வெட்டிட பழகியதுடன் விதம் விதமாக தைக்கவும் செய்கிறான். உங்களாலும் கூட முயற்சியுடன் வேலை செய்திருந்தால் அது முடிந்திருக்கும். ஆனால்.......சரி ....சரி நீங்கள் கடிதத்தில் கையொப்பமிட்டு விட்டு செல்லுங்கள். --- இல்லை சுமதி இது முழுக்க முழுக்க எனது தவறுதான்.இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கோ. கண்களில் கண்ணீர் முட்டி நிக்கிறது, குரல் தளும்புகிறது. --- இல்லை பிரேமா ......நீங்கள் விரும்பினாலும் உங்களால் அது முடியாது. உங்களின் பேரப்பிள்ளைகளை காலையில் பாடசாலைக்கு கொண்டுபோய் விடவேண்டும்.மதியம் அவர்களை கூட்டிப்போய் சாப்பிடவைத்து மீண்டும் பாடசாலையில் விட்டுட்டு வரவேண்டும். அதனால் இந்த வேலை உங்களுக்கு சாத்தியமில்லை. புரிந்து கொள்ளுங்கள். --- பிரேமாவும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கையொப்பமிட்டு விட்டு கடிதத்தை எடுத்துக் கொள்கிறாள். --- உங்களுடைய சம்பளப் பணம் வழமைபோல் வங்கிக் கணக்குக்கு வரும்.என்று சுமதி சொல்கிறாள். இருவருமாக வெளியே வருகிறார்கள். சுமதியும் மறக்காமல் கடையின் சாவிக்கொத்தை அவளிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறாள். பின் பிரேமாவும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே போகிறாள். அடுத்து மிருதுளாவைக் கூட்டிக்கொண்டு ஆபிஸ் அறைக்கு அழைத்து வந்து கவருடன் கடிதத்தைக் கொடுக்கிறாள். --- என்ன மேடம் அவர்களைப் போல் எனக்கும் வேலை நிறுத்தக் கடிதம்தானே.......நான் உங்களுடன் விவாதிக்கப் போவதில்லை, நான் செய்த தவறு எனக்குத் தெரியும். என் பொல்லாத நேரம் தப்பு செய்தபோது வேலை இருந்தது, அந்தத் தப்பு விலகியதோடு வேலையும் விட்டுப் போகிறது. என்று சொல்லி கடிதத்தைப் பார்க்காமல் கையொப்பமிடப்போகிறாள். --- அவளை இடைமறித்த சுமதி கடிதத்தை வாசித்துப் பார்த்து ஒப்பமிடு மிருதுளா. அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறது. பின் அதைப் படித்துப் பார்த்த மிருதுளா, என்ன மேடம் எனக்கு மேலும் ஆறு மாதங்கள் வேலையை நீட்டித்து இருக்கிறீங்களா. --- ஓம் மிருதுளா.....நியாயமாய் பார்த்தால் நான் உனக்கு நிரந்தர வேலைக் கடிதம்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் நீ வேலை நேரத்தில் வெளியே போய் விடுகிறாய் அதன் காரணம் எனக்குத் தெரியாது,அதுதான் இந்த ஆறு மாதகால ஒப்பந்தக் கடிதம். வெளியே உனக்கிருக்கும் பிரச்சினைகள் பற்றி நான் கேட்கப்போவதில்லை. ஆனால் அது தெரிந்தால் உனது வேலை நேரத்தை மாற்றித் தருகிறேன். அதற்கு ஒரே காரணம் உனது வேலைத் திறமையும் வேலை நேரத்தில் உன் உண்மையான உழைப்பும்தான். கடைக்குள் ஒரு நிமிடமும் வீணாக்காமல் ரொம்பத் திறமையாக வேலை செய்கிறாய். அதைபோல் தொடர்ந்தும் நீ வேலை செய்ய வேண்டும். நீ என்னை விட இளையவளானாலும் நான் உன்னிடம் இருந்து நிறைய வேலை கற்றுக்கொள்ள வேண்டும். இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. அவ்வளவு கெட்டிகாரி நீ. --- மேடம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.நீங்கள் என்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்துக்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி மேடம். இப்போது எனது வேலை நேரம் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன். என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு செய்ய இருந்தேன், இரு நாட்களுக்கு முன் அது எல்லாம் விலகி விட்டது. --- உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லு நான் அதைத் தீர்த்து வைப்பேன். --- அதொன்றுமில்லை மேடம், கடந்த ஒரு வருட காலமாக நான் ஒருவரை விரும்பி வந்தேன். அவன் ஒரு வேலையும் செய்யிறதில்லை, எந்த வேலையிலும் நிலைத்து நிப்பதில்லை. (எப்படித்தான் இவங்கள் ஒரு வேலை விட்ட உடனே அடுத்த வேலை எடுக்கிறாங்களோ தெரியாது.) உங்களுக்குத் தெரியுமா நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன் ஆறு மாதங்கள் chômage சில் வேலை தேடிக் கொண்டிருந்தேன். ( ஒருவர் வேலை இன்றி இருக்கும்போது pole emploi அவர்கள் முன்பு செய்த வேலைகளை கணக்குப் பார்த்து அவர்கள் வேலை எடுக்கும் வரை பணம் குடுக்கும். அது மட்டுமன்றி அவர்கள் வேலை எடுப்பதற்கு உதவிகளும் செய்யும்). இவன் அடிக்கடி என்னிடம் பணம் கேட்பான் நானும் குடுப்பேன்.ஒருநாள் யோசித்து, இவன் என்ன செய்கிறான் என்று சில நாட்களாக அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து கண்காணித்தேன். பார்த்தால் அந்த அயோக்கியன் என்னைப்போல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான். நான் பின்பு மற்ற இரு பெண்களையும் சந்தித்து அவரின் ஏமாற்று வேலைகள் எல்லாவற்றையும் சொல்லி இரண்டு நாட்களுக்கு முன் நாங்கள் மூவருமாக சேர்ந்து அவருக்கு நல்லா அடி, குத்து, உதை எல்லாம் குடுத்து விட்டு வந்தோம். இனி நான் யாரையும் நம்பி ஏமாறமாட்டேன் மேடம். --- ஏன் நீ அவனுடன் செக்ஸ் ஏதாவது ...... --- அந்த கன்றாவியை ஏன் கேட்கிறீங்கள் மேடம், அந்த கயவனை காதலன் என்று நம்பி நாலைந்து முறை டேட்டிங் எல்லாம் போனோம், எல்லாம் என் செலவில்தான். --- சுமதியும் அடிப்பாவி என்று சொல்ல அவளும் நானாவது பரவாயில்லை மேடம்.அதுல ஒருத்தியுடன் அவன் "லிவிங் டு கெதராய்" வாழ்ந்து வந்திருக்கிறான். (இருவரும் கவலையை மறந்து சிரிக்கிறார்கள்). பின் சுமதியும் அவளிடம் கடைச் சாவிக்கொத்தை குடுத்து இனிமேல் நீதான் காலையில் வந்து கடை திறக்க வேண்டும். கடை திறந்ததும் நேரே உள்ளே போகக் கூடாது. முதலில் அலாரமை நிறுத்த வேண்டும்.தவறினால் அது சத்தமிட்டு ஊரைக் கூட்டிவிடும். போலீசும் வந்து விடுவார்கள் ஆதலால் கவனமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். --- மிருதுளாவும் அது எனக்கு தெரியும் மேடம்.பிரேமாவுடன் சில சமயங்களில் நானும் திறந்திருக்கிறேன் என்கிறாள்.......! இன்னும் தைப்பார்கள்.......! 👗
  23. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(9). --- உன்னுடைய பெயர் என்ன. --- கதீஜா மேடம். நீ போட்டிருக்கிற ஆடைகளும் அணிகலன்களும் அழகாய் இருக்கு. உனது ஊர் எங்கு இருக்கிறது. --- நன்றி மேடம், எனது பெற்றோர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள்.ஆனால் நானிங்குதான் பிறந்து வளர்ந்தேன். --- அட இந்தச் சிறுமியும் அழகாக தலையலங்காரம் (தலையில் சின்னன் சின்னனாய் நிறைய பின்னல்கள் பின்னி அவற்றில் அழகழகான ரிப்பன் கட்டியிருந்தாள்). செய்திருக்கிறாள். யார் செய்தது. சிறுமியை கேட்க அவளும் இவளைக் கை காட்டுகிறாள். --- நல்லது இனி நீ என்ன செய்யப் போகிறாய். --- வேலை ஒன்று எடுக்கும்வரை மீண்டும் வகுப்புக்கு போக வேண்டும். இல்லையென்றால் pole emploi இரண்டு மாதம் காசை வெட்டி விடுவார்கள். வேலையொன்று கிடைத்தால் அங்கு போகத் தேவையில்லை, அவர்களுக்கு அறிவித்து விட்டு வேலைக்குப் போகலாம். --- எதுவரை படித்திருக்கிறாய். --- அவள் தனது பையில் இருந்து c .v யை எடுத்துக் கொடுக்கிறாள். அதில் அவளது படிப்பு, இதுவரை அவள் செய்த வேலைகள் + வேலையிடங்கள் எல்லாம் விபரமாக இருக்கிறது. --- ஓ....பேஷன் & மாடலிங் எல்லாம் படித்திருக்கிறாய். --- ஓம் ....மேடம். --- சரி....அப்படியெனில் நீ ஒன்று செய், வாற செய்வாய் கிழமை காலை 08:30 க்கு முன் இந்த இடத்துக்கு வந்து என்னைப் பார், நான் உனக்கேற்ற தகுதியான வேலை தருகிறேன் என்று சொல்லி தனது கடை விலாச அட்டையைக் கொடுக்கிறாள். பின் உதவியாளர் அங்கு வர அவரிடம் "arret de travail" சான்றிதழை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு இருவரும் போகிறார்கள். அவர்கள் சென்றதும் சுமதி தனது உதவியாளரிடம் அவளின் வேலை மற்றும் ஒழுங்கு பற்றிக் கேட்க அவர் சொன்னதும் அவளுக்குத் திருப்தியாய் இருக்கு. பின் அந்த உதவியாளர் சுமதியிடம் மேடம் அந்த இருவரின் இடத்துக்கு இன்னும் ஆட்கள் போகவில்லை அதனால் அவர்களை அங்கு அனுப்பி இருக்கலாம் என்று சொல்ல அவளும் அது எனக்குத் தெரியும், அந்த ஹோட்டல் வேலைதானே அதை நாமிருவரும் போய் செய்து விட்டு வரலாம். அவர்களது விடுமுறை நாளில் அவர்களுக்கு வேலை ஒன்றைக் குடுத்து இந்த லீவு நாளை சரிசெய்து விடுங்கள் என்கிறாள். "கல்லுக்குள் ஈரம்" போல் இருக்கும் அவளது உள்ளத்தைப் பார்த்து அவர் புன்முறுவல் செய்கிறார். --- என்ன சிரிக்கிறீர்கள், இந்தக் கம்பெனி நன்றாக இருக்க வேண்டும். அதுக்கு நாமெல்லாம் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும். அதே நேரம் தொழிலாளிகளும் பாதிக்கப் படக் கூடாது புரியுதா. --- புரியுது மேடம். வேலை முடிந்து காரில் வரும்போது நினைக்கிறாள், என்னுடைய வேலைத்தளத்தில் முப்பது பேருக்கு மேலாக ஆட்களை வைத்து கையாளுகிறேன்.ஆனால் எனது கடையில் மூன்று நான்கு பேரை வைத்துக் கொண்டு தடுமாறுகின்றேன். அன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்போது தான் விடும் தவறுகள் புலப்படத் தொடங்குகிறது. அத்துடன் மனதில் ஒரு தெளிவும் ஏற்படுகிறது. லா சப்பலுக்கு வந்த சுமதி பார்க்கிங்கில் காரை விட்டுட்டு தனது போன் மூலம் காருக்கு டிக்கட் கட்டனம் செலுத்திவிட்டு சுற்று முற்றும் பார்க்கிறாள்.17:00 மணிக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் இருக்கின்றன. எதிரே "கபே பரத் " தை பார்த்ததும் இரண்டு பாலப்பம் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. உள்ளே சென்று இரண்டு அப்பத்துக்கும் இஞ்சி போட்ட பாலதேனீருக்கும் சொல்லிவிட்டு ஆயாசமாய் கதிரையில் சாய்ந்து கொள்கிறாள். பின் தனது" comptabilité " க்கு (கணக்காய்வாளர்) போன்செய்து தனது வேலையாட்களின் வேலை ஒப்பந்தங்கள் பற்றி கேட்டு அவற்றில் சில திருத்தங்கள் செய்ய சொல்லி விட்டு கொண்டுவந்து தரும்படி சொல்கிறாள். உபசரிப்பாளர் சுட சுட கொண்டுவந்த அப்பத்தை ரெண்டு கடி கடித்து இஞ்சித் துருவல் போட்ட அந்த டீ தொண்டைக்குள் இறங்கும்போது ரொம்ப சுகமாக இருக்கின்றது.இஞ்சித் துருவல் பல்லிடுக்கில் சிக்குவதும் நாக்கு அதை தேடிச்சென்று ருசித்து இழுத்து வருவதும் அருமையாக இருக்கிறது. அவள் 17:00 மணிக்கு கடைக்குள் வந்ததும் மிருதுளா அவளிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டு போய் வருகிறேன் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். கபிரியேல் கொப்பியில் அளவுகள் பார்த்து துணிகளை வெட்டிக் கொண்டிருக்கிறான். அங்கு வரும் ஓடர் சாரங்களை அளவுகள் பார்க்காமலே அதன் கோடுகளை நேர்ப்படுத்தி அழகாக தைத்து வைக்கிறான். இந்த மூன்று மாதத்துக்குள் அவன் சுமதியிடமும் மிருதுளாவிடமும் பார்த்துப் பார்த்து துணிகளை நன்றாக வெட்டித் தைக்கப் பழகியிருந்தான். பிரேமாவும் ரோகிணியும் அங்கில்லை. கதவின் மணியொலி கேட்டு நிமிர்ந்த கபிரியேல் சுமதியைப் பார்த்து சிநேகபூர்வமான ஒரு புண்ணகை செய்து விட்டு மீண்டும் தனது வேலையில் கவனத்தை செலுத்துகிறான். சுமதியும் ஏற்கனவே மிருதுளா தைத்து வைத்த கட்டிங்ஸ்சை எடுத்து சிரத்தையுடன் தைக்கிறாள்.சிலர் வந்து தைத்த ஆடைகளை வாங்கிக் கொண்டு பணம் குடுத்துவிட்டு செல்கின்றனர். வேறு சிலர் காசோலைகள் குடுத்த போது அதை மறுத்து பணமாகவோ அன்றி விசாகாட் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறாள். அன்று சுமதி காலை 08:30 க்கு வேலைக்கு வருகிறாள். முன்பே அங்கு கதீஜா வந்து நிக்கிறாள். பெரிய பெரிய வயலட் கலரில் பூக்கள் போட்ட ட்ரவுசரும் அதே துணியில் மேலே கொலர் வைத்த கோட்டும், ட்ரவுஸர் தொடைகளையும் பின்னழகையும் இறுக்கமாய் பிடித்திருக்க முழங்காலின் கீழே அது பெல்பாட்டமாய் விரிந்து இறங்குகிறது. கால்களில் அகலமான குதியுள்ள வெள்ளைநிற உயரமான சாண்டில்ஸ் அவளது பின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. மேலே அணிந்திருக்கும் கோட்டினுள்ளே நீளமான வெள்ளை பெனியன் அணிந்திருக்கிறாள். அவள் நடக்கும் போது மார்புகள் இரண்டும் உள்ளாடை அணியாததால் தென்றலில் அசையும் சன்பிளவர்ஸ் போல் மென்மையாக அசைகின்றன. கழுத்தை சுற்றி இருக்கும் வெள்ளிசெயினில் இருந்து ஒரு செயின் இழை மட்டும் நேராக நெஞ்சுக்குள் ஒற்றை மின்னல்போல் இறங்கி மோட்ஷமடைகிறது. காதுகளில் இருந்து தோளைத் தொடுவதுபோல் பெரிய வெள்ளி வளையங்கள், தேனில் மிதக்கும் குலோப்ஜாமூன் போல் கண்ணக் கதுப்புகள், துரு துறுவென அங்குமிங்கும் அலையும் விழிகள், இமைகளின் மேல் முடியை முற்றாக மழித்துவிட்டு வில்போன்று நீளமாக கண் மை பூசி இமையின் மேற்புறத்தில் மயில் கழுத்து வர்ணத்தில் வர்ணம் பூசி இருந்தாள். சற்றே பெருத்த உதடுகளில் கடுஞ் சிகப்பு கலரில் உதட்டுச்சாயம் போட்டிருந்தாள். பெண்களையே கிறங்கடித்து விடும் அவள் அழகின் முன் ஆண்கள் எம்மாத்திரம். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். பின் சுமதி கடையைத் திறந்து அலாரங்களை நிறுத்தி விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அப்போது அங்கு வந்த கணக்காய்வாளர் ஒரு பைலை அவளிடம் குடுத்து விட்டு போகிறார். அவள் அதை தனது மேசை லாட்சியில் வைத்து விட்டு மேலே வருகிறாள். பின் சுமதி கதீஜாவுக்கு கடையையும் கீழே இருக்கும் ட்ரெஸிங் அறையையும் சுற்றி காட்டிக்கொண்டிருக்கும் பொழுது மிருதுளாவும் ரோகிணியும் உள்ளே வருகின்றார்கள். இவர்கள் இருவரையும் பார்த்து அவர்கள் இருவரும் வணக்கம் சொல்லிவிட்டு தத்தமது வேலைகளை செய்கின்றனர். சுமதி இவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கதீஜா அங்கிருந்த நவீனமான மெஷின்களையும் ஆபிரிக்கன் திருமண ஆடைகளையும் நீளநீளமான தலைமுடிகள் பக்கட்டுகளையும் பார்த்து வியந்து நிக்கிறாள். அப்போது தன்னருகே வந்த சுமதியிடம் மேடம் எனக்கு நீங்கள் என்ன வேலை தரப்போகிண்றீர்கள், தையல் வேலையா, தலை பின்னுகிற வேலையா. நீ மட்டும் இங்கு எனக்கு பிடித்த மாதிரி வேலை செய்தால் அவற்றுடன் அதை விட பெரிய வேலையொன்றும் உனக்குத் தருகிறேன் என்கிறாள். வழக்கம்போல் பிரேமாவும் 09:30 க்கு வருகின்றாள். அங்கு சுமதியைப் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு தனது மெஷினில் சென்று அமர்கிறாள்.மறக்காமல் தான் கொண்டுவந்த பெரிய பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்கிறாள்......! இன்னும் தைப்பார்கள்..........! 🎀
  24. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(6). கடந்த இரண்டரை மாதங்களாக கடை நல்ல வருமானத்துடன் நடந்து கொண்டிருக்கு. சுமதியும் காலையில் தனது வேலைக்கு போவதும், மாலையில் கடைக்கு வந்து வேலையும் செய்து, கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக் கொண்டு போவதும் வழமை. கடையில் பிரேமா, ரோகிணி, மிருதுளா மற்றும் கபிரியேல் வேலை செய்கிறார்கள். மூன்று பெண்களும் காலை 8:30 க்கு வேலைக்கு வந்து மாலை 5:00 மணிக்கு கிளம்பி விடுவார்கள்.கபிரியேல் மட்டும் மதியம் 13:00 மணிக்கு வந்து 20: 00 மணி வரை இருந்து சுமதியுடன் சேர்ந்து வேலை செய்து விட்டு கடையை பூட்டிக்கொண்டு போவார்கள். சுமதி அப்படி அவர்களின் வேலை நேரத்தை அமைத்திருந்தாள். மிருதுளாவும், சுமதியும் ஆடைகள் வெட்டித் தைப்பதைப் பார்த்து பார்த்து கபிரியேலும் தைக்கப் பழகியிருந்தான்.அதற்கு அவன்முன்பு தோல் பக்டரியில் வேலை செய்ததும் ஒரு காரணம். லா சப்பலில் செவ்வாயில் இருந்து ஞாயிறுவரை கடைகள் திறந்திருக்கும். திங்கள் பெரும்பாலான கடைகள் பூட்டியிருக்கும். அன்று செவ்வாய் கிழமை. பிரேமாவிடம் ஒரு வேலை சொல்வதற்காக சுமதியும் காலை 8:40 க்கு கடைக்குப் போன் செய்கிறாள். யாரும் போன் எடுக்கவில்லை. என்ன பார்ப்பம் என்று காரில் 9:00 மணிக்கு வந்திருந்தாள். கடை பூட்டி இருக்குது. திறப்புகளில் ஒரு செட் பிரேமாவிடம் இருக்கும். பிரேமாதான் காலையில் எட்டரைக்கு கடை திறப்பது.அவள் இன்னும் வரவில்லை. தன்னிடம் இருந்த சாவியைப் போட்டு கடையை திறந்து விட்டு வேலை செய்யும்போது 9:15 க்கு மிருதுளாவும் ரோகிணியும் வருகின்றார்கள். --- என்ன மிருதுளா இப்ப வாறீங்கள்.நான் எட்டரைக்கெல்லோ கடை திறக்க வேண்டும் என்று சொன்னனான். --- இல்லை அக்கா நாங்கள் எட்டரைக்கு வந்திடுவோம்.ஆனால் பிரேமாவிடம்தான் சாவி இருக்கு. அவ 9:30 போல்தான் வந்து கடையை திறக்கிறவ. --- இது எவ்வளவு நாளா நடக்குது.ஏன் நீங்கள் இதை எனக்கு முன்பே சொல்லவில்லை. சனி,ஞாயிறு நான் காலையில் கடைக்கு வரும்போது நீங்கள் மூவரும் எட்டரைக்கே வருகிறீர்கள் தானே. --- சிறிது நேரம் இருவரும் பேசாமல் நிக்க ரோகிணி முன்வந்து, அது வந்து அக்கா கிழமை நாட்களில் அவ ஒன்பதரைக்குத்தான் வாறவ. ஏனென்று தெரியாது. --- அப்ப மத்தியானம் என்ன செய்கிறனீங்கள். --- மத்தியானமும் அவ 11:30 க்கு வெளியே போவா பின் 14:30 க்குத்தான் வாறவ. நானும் மிருதுளாவும் இங்கேயே சாப்பிட்டுட்டு தொடர்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். 13:00 மணிக்கு கபிரியேலும் வந்திடுவான். --- சரி....அவனின் நேர அட்டவனை 13:00 லிருந்து 20:00 வரை என்று சொல்லி விட்டு சரி நீங்கள் போய் வேலை செய்யுங்கோ. அவர்கள் சென்று தங்களது மிஷின்களில் அமர்ந்ததும் பிரேமா கையில் ஒரு பெரிய பையுடன் அசைந்து அசைந்து வருகிறாள். தூரத்தில் வரும்போதே கடை திறந்திருப்பதைக் கண்டு இன்னும் வேகமாக அரக்கப் பரக்க ஓடி வருகிறாள். கடைக்குள் வந்த பிரேமா எதிர்பாராமல் அங்கு சுமதியை கண்டதும் திகைத்துப் போய் விட்டாள். சுமதியும் எதுவும் தெரியாததுபோல் இருக்க அவள் சென்று தனது மிஷினில் அமர்ந்து கொள்கிறாள். சிறிது நேரம் கழித்து சுமதி பிரேமாவிடம் என்ன பிரேமா இவ்வளவு தாமதமாக வாறீங்கள். --- அது சுமதி திடீரென்று வீட்டில் விருந்தாளிகள் வந்திட்டினம், நேற்றிரவு படுக்க நேரமாயிட்டுது. அதுதான் வரத் தாமதமாயிட்டுது. --- நீங்கள் போன் செய்திருந்தால் நான் வந்து திறந்திருப்பேன். அல்லது மிருதுளாவிடம் திறப்பைக் கொடுத்திருக்கலாம். --- நான் அதை யோசிக்கேல்ல சுமதி. --- கடை திறந்து இந்த இரண்டரை மாதத்தில் நீங்களும் ரோகிணியும் கன விடுமுறைகள் எடுத்திருக்கிறீங்கள். பத்தாதற்கு இடையிலயும் சோற் லீவுகளும் எடுக்கிறீங்கள். இப்படியென்றால் நான் என்னென்று கடையை நடத்துவது.உங்களை நம்பித்தானே நான் இந்தக் கடையை விட்டுட்டு போறனான்.சரி வேலையை செய்யுங்கோ. எனக்கு வேலை இருக்கு நான் போட்டுவாறன். வெளியே போகிறாள்.....! வெளியே வந்த சுமதி தனது சித்தப்பா முறையான ஒருவரிடம் போகிறாள். அவர் இப்போது பென்ஷன் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.முன்பு ஒரு சொசைட்டியில் இரவுக் காவலாளியாக ஒரு பெரிய நாயும் வைத்துக்கொண்டு வேலை பார்த்தவர். அந்த நிர்வாகம் அவருக்கும் நாய்க்கும் தனித்த தனியாக சம்பளம் கொடுத்து வந்தது. அவர் ஒய்வு பெற்ற சில மாதங்களில் அந்த நாயும் வயதாகி இறந்து விட்டது. --- என்ன பிள்ளை திடீரென்று உனக்கு சித்தப்பாவின் ஞாபகம் வந்திருக்கு. --- அதொன்றுமில்லை சித்தப்பா நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். --- என்ன உதவி, என்ன செய்யவேணும் சொல்லு. --- நான் கடை திறந்தது உங்களுக்கு தெரியும்தானே,அங்கு நாலுபேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைக்கு எந்தெந்த நேரம் வருகினம், எப்பப்ப வெளியே போக்கினம் என்றெல்லாம் ஒரு இரண்டு கிழமை வேவு பார்த்து எனக்கு அப்பப்ப தெரிவிக்க வேண்டும். நீங்கள் கடைப்பக்கம் வந்தாலும் என்னை தெரிந்தமாதிரி காட்டிக் கொள்ளக் கூடாது. சரியா ....! --- அதுக்கென்ன துப்பறிய சொல்கிறாய் செய்திட்டால் போச்சு. --- நான் சித்தப்பா, என்ர வேலைக்கு காலம போயிட்டு பின்னேரம்தான் கடைக்கு வாறானான். வந்து பார்த்தால் அங்கு சரியாக வேலை நடப்பதில்லை போல் தெரிகிறது.அதுதான் உங்களிடம் வந்தனான். --- ஓம்.....எனக்கு விளங்குது பிள்ளை என்று சொல்லிவிட்டு அவர் குடுத்த ஜூசையும் குடித்து விட்டு சுமதி வீட்டுக்கு போகிறாள்..........! இன்னும் தைப்பார்கள்..........! 🎽
  25. தீண்டாக் காதல் பல வருடங்கள் நினைவில் நில்லாத “தீண்டாய் மெய் தீண்டாய்” பாடலை சுண்டிவரச் செய்துவிட்டது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.