Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87993
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    929
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20022
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/05/23 in all areas

  1. 👆1569´ம் ஆண்டு கட்டப் பட்ட... 454 வருடங்கள் பழமையான 👆 மருந்தகம் (Apotheke) (Dispensary) இது, இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது. 🙂 👇 கீழே உள்ள படம் 👇 அதன் முழுமையான நான்கு மாடி கட்டிடம். 454 வருடங்களுக்கு முன், மரத்தால்…. நான்கு மாடியில் கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. 🙂 ஜேர்மனியின் பழைய கால 🏚️ கட்டிடக் கலை மிகவும் அழகானது. 🥰 இரும்பை விட, மரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்படியான கட்டிடங்கள் 600 - 700 வருடங்கள் தாண்டியும், இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 👍 இப்படியான கட்டிடங்களை... வீட்டின் உரிமையாளர் நினைத்தாலும், வெளியில் எந்தப் புதிய மாற்றத்தையும் செய்ய முடியாது. வெளியே உள்ள மரங்களோ, சீமெந்து பூச்சுக்களோ பழுதாகி இருந்தால்.... அதனை அகற்றி மீண்டும் அதே மாதிரி புதியவை வைக்கப் பட வேண்டும். இதனை அந்தந்த இடத்து நகரசபை, கண்காணித்துக் கொண்டு இருக்கும். 😎 இப்படியான கட்டிடங்கள் ஜேர்மனியின் எல்லா இடங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும்... சில இடங்களில்... மிக நெருக்கமாகவும், அதிகமாகவும் காணப்படும். 🏚️ இங்கே உள்ள படங்கள் அண்மையில் நான் (Reha) தெரப்பி செய்வதற்காக சென்ற (Tübingen) என்ற நகரத்தில் காணப்படும் கட்டிடங்களே இவை. ஒரு குறுகிய இடத்தில், பல ஆயிரம் கட்டிடங்களை கண்டு பிரமிப்பாக இருந்தது. 🤗 அவர்கள்... அந்தக் காலத்து வீதிகளை கூட மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே பேணி, பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். 👍 இந்த நகரத்தில் மக்கள் அதிகரிக்க, அதற்கு அருகிலேயே நவீன கட்டிடங்களுடன் 🏥 புதிய நகரத்தை உருவாக்கி, பழைய நகரத்தின் அழகு கெடாமல் வைத்திருப்பது... பல உள்நாட்டு உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாது 👯‍♂️ ✈️ வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் ஆயிரக் கணக்கில் வர வைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்தப் படங்கள்... இந்த வருடம் 📆 தை, மாசி மாதங்களில் எடுக்கப் பட்டவை. படங்களில்... மக்கள் குறைவாக உள்ளதற்கு, என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சரியான பதில் சொல்பவருக்கு... "கெட்டிக்காரன் / காறி" என்ற பட்டம் வழங்கப் படும். 😂 💖 யாழ். களத்திற்காக... 💖 செய்தியும், படப் பிடிப்பும்: தமிழ் சிறி. 😂 படங்கள் இன்னும் வரும்.... 🙂
  2. மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.... #ஒரு மரத்துக் #பனபதநீர் குடித்தால் அடி மரமாய் உடம்பு வரும் ! #பனை மரத்துக் #பதநீர் குடித்தால் கட வெலும்பும் இரும்பாகும் ! பதநீர் நமக்குச் சுகமளிக்கும் ! வெள்ளை ரத்தம் – அந்தக் #கரும்பனையும், தென்னையும் நம் கழனித் தெய்வம் ! #பதநீர் குடித்துக் #கெட்டாரைக் கேட்ட துண்டா? பதநீர் குடித்துச் #செத்தாரைப் பார்த்த துண்டா? #எலும்புறுக்கி நோய் தீரும் தென்னங் #பதநீரால் ! எரிசூட்டு நோய் தீரும் #பனையின் பதநீரால் ! அதிகாலைக் #பதநீர் குடித்தால் அச்சம் போகும் ! அந்தி #பதநீர் குடித்தால் ஆயுள் நீளும் ! #தாகம் எடுக்கையிலே தமிழ்க்கிழவி அவ்வை #பதநீர் அருந்தித்தான் களிப்போடு வீற்றிருந்தாள் ! கடையேழு #வள்ளல்களும் கவிஞர்கள் எல்லோர்க்கும் #பதநீர் விருந்து கொடுத்தன்றோ கௌரவம் செய்தார்கள் ! வில்வேந்தர் வேல்வேந்தர் வீரவாள் வேந்தர் #பதநீர் அருந்தியன்றோ கட்டுடம்பு வளர்த்தார்கள் ! #சித்தர்கள் நமக்குச் சீதனமாய் கொடுத்த முத்தனைய பதநீர் வேண்டி முழக்கம் செய்திடுவோம் ! விருந்தாகி #மருந்தாகி விடிகாலை உணவாகி #விவசாயி வாழ்க்கையிலே வருமானம் வழங்குகிற வரம் கொடுக்கும் தேவதைகள் ! அளவான #போதை அளிக்கும் பொருளென்றால் அருந்தலாம் என்று அரசியல் சாசனமே அதிகாரம் தருகிறது! #போதை இல்லாத அளிக்கின்ற #பதநீரை ஏனருந்தக் கூடாது! ஏனிறக்கக் கூடாது! - கவிஞர் மேத்தா
  3. வணக்கம் யாழ் வாசகர்கள், உறுப்பினர்கள், பொறுப்பு சார்ந்தோர் அனைவருக்கும்! 🙏🏾🙏🏾🙏🏾 அகவை 25இல் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கு/கருத்துக்களத்திற்கு வாழ்த்துக்கள்! 💐💐💐 யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர் மதிப்புக்குரிய திரு. மோகன், பங்காளர்கள், இருபத்து ஐந்து வருட காலத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோஒன்றாக பயணித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! 👏🏾👏🏾👏🏾 “சட்ஜிபிடி” (ChatGpt) எனும் செயற்கை நுண்ணறிவை அடித்தளமாக வைத்து இயங்கும் ஒரு தொழில்நுட்ப வசதி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் பாவனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 👍🏾👍🏾👍🏾 நீங்களும் இந்த வசதியை/சேவையை பயன்படுத்தக்கூடும். உங்களைப் போலவே நானும் சட்ஜிபிடியுடன் பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடியுள்ளேன், இதன் வீச்சுக்களை புரிந்துகொள்ள முயற்சித்துள்ளேன். 🤝🏾 சட்ஜிபிடியுடனான எனது எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்கின்றேன். அதேபோலவே நீங்களும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. ✌🏾 📍📍📍 முன்பு ஒரு காலத்தில் எங்கள் ஆட்களிடம் ஒரு தகவலை அறிவது என்றால் சம்மந்தமில்லாத பத்து விசயங்கள் பற்றி அலுக்க அலுக்கபேசி, கடைசியில் சுத்திவளைச்சு அறியப்படவேண்டிய விசயத்துக்குள் செல்லவேண்டும். என்று சமூக ஊடகம் வந்ததோஅன்று தொடக்கம் காலம் தலை கீழாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தேடற்பொறியில் ஒருஆள் பெயரை எழுதி ஒரு தட்டி தட்டி விட்டால் அவர் பற்றிய எல்லா வண்டவாளமும்: நல்லது, கெட்டது, நடந்தது, நடக்கக்கூடாதது எல்லாவற்றையுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறியக்கூடியதாக உள்ளது. தமதுபதினொரு வயசு பிள்ளையின் சாமத்தியவீட்டை யூரிரியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்த காட்சிகள் தொடக்கம் முருகண்டியில் நின்று சோடா குடித்தது வரை அண்ணை கந்தசாமியின் சரித்திரம் ஒளி, ஒலியுடன் இணையத்தில் காண்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் புதிய அறிமுகமான சட்ஜிபிடி பற்றி பார்த்தால்இரண்டு விதமான ஆபத்துக்கள் தெரிகின்றன. ஒன்று:சட்ஜிபிடி ஒரு போதை போல நம்மை தனக்கு அடிமையாக்கக்கூடும். இந்த செயற்பாடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுமெதுவாக நடைபெறும். நாம் அதிக நேரத்தை செலவளிப்பதும் பலவிதமான தேவைகளுக்கு எமது சொந்த ஆற்றலை, சிந்தனையை பயன்படுத்தாது சட்ஜிபிடியிடம் தங்கி வாழவேண்டிய நிலை நடைபெறலாம்/ஏற்படுத்தப்படலாம்/ஏற்படலாம். மற்றையது: நாம் நமது அந்தரங்க விடயங்களை சட்ஜிபிடியுடன் பகிர்ந்துகொள்வது, நமது உள்ளக்கிடக்கைகளை சட்ஜிபிடிக்கு தெரிவிப்பது, நமது உள் அரங்கை சட்ஜிபிடியிடம் காண்பிப்பது தனிமனிதன் எனும் அளவில் நமக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வளவு காலமும் சோசல் மீடியா எனப்படுபவை எமது புற/வெளி தகவல்களைத்தான் பெறுகின்றன/சேகரிக்கின்றன. பிரைவசி/privacy எல்லாம் எவ்வளவு தூரம் ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் பேணுகின்றது என்பது கேள்விக்குறி. இப்போது சட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு பொறி மூலம் வெளியார்/நிறுவனங்கள் எமது அந்தரங்க உலகினை அறியக்கூடிய, எட்டிப்பார்க்கக்கூடிய வாய்ப்பு/ஆபத்துக்கள் உள்ளன. கிடைக்கின்ற எமது தகவல்களை சட்ஜிபிடி உரிமையாளர்கள்/நிறுவனத்தினர்/ஆய்வாளர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது வேறு விடயம். அது வர்த்தக நோக்கத்திற்கோ அல்லது உளவறிதலுக்கோ கூட பயன்படுத்தப்படலாம். ஆனால், எமக்குள் ஊடுறுவல் நடக்கின்றது என்பது யதார்த்தம். எனவே, சமூக ஊடகங்கள் விடயத்திலும் சரி சட்ஜிபிடி விடயத்திலும் சரி எமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், எமது நேரத்தை, ஆற்றல்களை, தனித்துவத்தை காப்பாற்றவும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾 தொடரும்..
  4. பாடல்: செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் இசை: வேதா பாடியவர்கள்:ரிஎம்.எஸ்,சுசிலா வரிகள்: கண்ணதாசன். உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
  5. கனடிய அமெரிக்க கிழக்கு கரை நேரம் 11 மணிக்கும் லண்டனில் 4 மணிக்கும் ஐரோப்பாவில் 5 மணிக்கு நடைபெற இருக்கும் நேரடி நிகழ்ச்சியை பார்த்து கேட்டு மகிழுங்கள். அத்துடன் நாளை நீங்களும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
  6. உங்கட வீட்டுக்கு கிட்ட இந்தப்படங்களை எடுத்தீர்களா சிறி? எனக்கும் இப்படி முந்திய காலத்து மர, செங்கல், கருங்கல் கட்டிடங்களை பார்க்க நல்ல விருப்பம். நல்ல அழகான படங்கள் சிறி. படங்களை விடிய வெள்ளண எடுத்திருப்பீர்கள். சரியா? ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் யூரோப்பில் அல்லது அவரவர் இடங்களின் காலநிலை எப்படியோ அந்தமாதிரியான இடங்களை தெரிந்தெடுத்து குடியேறினார்கள். மிகவும் குளிர் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மினசோட்டா மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் அங்கு உள்ளமாதிரியே கட்டிடங்கள் வீடுகளை கட்டி, தமது தனிப்பட்ட பண்டிகைகள், கலாச்சாரங்களை தொடர்ந்து வந்தார்கள். 75 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களை பார்த்தே அவர்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்கள் என்று சொல்ல முடியுமாம். இப்ப எல்லாமே மாறிவிட்டது. ஆனால் பழைய கட்டிடங்களை பார்த்து ஓரளவுக்கு சொல்லலாம். இன்று வழமையை விட கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வந்தேன். இந்த மாதிரி வீடுகள் ( மூன்றாவது படம்) வீடுகளை பார்த்துவிட்டு மிகவும் அழகாக மற்ற வீடுகளில் இருந்து வேறுபட்டு இருக்கிறதே என்று யோசித்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் சிறி போட்ட படங்களில் அதே மாதிரி இருக்கு. ஒரு coincidence மாதிரி இருந்தது. நாளைக்கு ஒரு படம் எடுத்து இணைக்கிறேன்.
  7. பிரான்சிலும் கிராமங்களில் இதுபோன்ற வீடுகள், வீதிகள் நிறைய உண்டு......பழமையை பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள்.......! 😁 இணைப்புக்கு நன்றி சிறியர்......!
  8. நியூயோர்க்கிலும் இபு;படியான கட்டடங்கள் உள்ளன. வீதிகள் கூட செங்கல் மாதிரியான கல்லுகளால்த் தான் வீதியைப் போடுவார்கள்.
  9. பழைய கட்டடங்களும் தகவல்களும் மிகவும் பிரமிப்பாகவும் உள்ளது. இன்னும் இணையுங்கள்.
  10. சிறப்பான படங்களும் தகவல்களும். அது இந்தியா இல்லை 😂
  11. இன்றுதான் இந்த ஆக்கத்தை வாசிக்க நேரம் அமைந்தது @விசுகு ஐயா. தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் பலர் மன அழுத்தங்கள், மனச் சோர்வுகள் இருந்தும் மற்றையவர்கள் அறிந்தால் மரியாதைக் குறைவு என்று தகுந்த மனநல ஆலோசகர்களை நாடுவது குறைவு. ஆனாலும் கவுன்சிலிங்கில் ஈடுபடும் நண்பர் கோவிட் காலத்துடன் மிகவும் பிஸியாகிவிட்டார். இப்போது ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்களும் அவரிடம் ஆலோசனை பெறுகின்றார்கள். எனினும் அகதி விண்ணப்பம் கோரி வருபவர்கள்தான் மன நல ஆலோசனைக்கு அதிகம் அனுப்பப்படுகின்றார்களாம்! எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தம், உளச்சோர்வு, மனப்பிறழ்வு என ஏதாவது ஒன்று வரலாம். மற்றவர்களுக்காக வாழாமல் தங்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் தகுந்த ஆலோகர்களைப் பார்க்கவேண்டும்.
  12. பெண்கள் ஒரு/இரண்டு கிளாஸ் social drink எடுப்பதில் என்ன தவறு? அதுக்காக குற்ற உணர்வு தேவையில்லை என்பது எனது கருத்து. பிற்போக்குத்தனமான சிந்தனைகளால் தான் பெண் அடிமைத்தனம் எமது நாடுகளில் அதிகம். பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். வீடு முதல், அலுவலகம் வரை அவர்கள் உழைப்பு அதிகம். பொருளாதார ரீதியில் முன்னேறுகிறார்கள். தமது வெற்றியினை கொண்டாட அவர்கள் சோசியல் ட்ரிங்க் எடுப்பதில் தவறில்லை. இலங்கையில் யாழ்ப்பாணத்து தமிழர்கள் பிற்போக்குத்தனமானவர்கள் என்று சொல்வார்கள், கொழும்பில். பிரிட்டனிலும், கனடாவிலும், தமிழ் பெண்கள் வியாபார துறையில் இன்னும் முன்னுக்கு வரவில்லையே. காரணம் என்ன? தம்மால் முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் அல்லது ஊட்டப்படாமல் வாழ்வது தான். இலங்கையில் பட்டப்படிப்பு முடித்து வந்து, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முயலாமல், சாதாரண வேலைக்கு போகும் யாழ் தமிழ் பெண்களும் உள்ளார்கள். அதேவேளை, தம்மை முன்னேற்றி கணவருடன் சேர்ந்து £10பில்லியன் பெரும் நிறுவனங்களை நடத்தும் முற்போக்கு பெண்களுள் இருக்கிறார்கள். *** மேலை நாடுகளில் மதுவிலக்கு என்று அலம்பறை பண்ணுவதில்லை. காரணம் ஒவொருவருக்கும் தனி மனித பொறுப்பு இருக்க வேண்டும் என்று கருதுவதால். பார்ட்டியில் வெள்ளைகள் குடிப்பதில்லை என்றால், காரணம் அவர் வீட்டுக்கு கார் ஓட்டி செல்ல வேண்டும். மறுநாள் வேலைக்கு போக வேண்டும். எனக்கு தெரிந்து, சேர்ந்து மது அருந்திவிட்டு, காரில் ஏத்தி விட்டு, போலீசுக்கு போன் பண்ணி, அவர் குறித்து சொல்லி, வேலையில் இருந்து துரத்தி அடித்த ஒரே கொம்பனி வேலை செய்த வெள்ளைகளையும் பார்த்திருக்கிறேன். பிறகு, காரை ஓட்டிக்கொண்டு போகாதே என்று சொன்னேன்.கேட்கவில்லை. அவரது உயிரையும், ரோட்டில் பயணிக்கும் அடுத்தவர் உயிரையும் காக்கவே போலீசாரை அழைத்தேன் என்று பீலா விடுவர்.
  13. எமது நிறைய ஊர் பெயர்கள் எம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களினால் வைக்கப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். அதில், வாழ்நாள் முழுவது படிக்கும் மக்கள் வாழும் ஊர் எழுதுமட்டுவாழ் என்று பெயரிட்டதாக போட்டிருந்தார்கள். அதே மாதிரி, கிழக்கிலங்கையில் ஒரு வெள்ளைக்காரன் சிறுமியுடன் நடந்து சென்ற தாயிடம் "இந்த ஊர் எதற்கு பிரபலம்" என்று கேட்டபோது. அந்தப்பெண் கதைக்க கூச்சப்பட்டு, சிறுமியை பார்த்து " ஓட்டமா வாடி" என்று கூறினாராம். அதுதான் ஓட்டமாவடி.
  14. இப்ப இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பார்ட்டி என்று சொல்லி நிறைய தமிழ் பெண்கள் குடிப்பது வழக்கமாக இருக்கு. என்ன இருந்தாலும் எமது கலாச்சாரத்தில் பெண்கள் அப்படி செய்வது வழக்கம் இல்லைதானே? அவரவர் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ குடிப்பது அவர்களது விருப்பம்.நாங்கள் கொழும்பில் வளர்ந்துமே நண்பிகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஆட்ட்டம் பாட்டம் ஒன்றும் இருக்காது. அப்படி ஓரிருவர் பார்ட்டி வைத்தால் உடனே இது என்ன சிங்கள அல்லது பரங்கிகள் மாதிரி ஆட்டம் என்று சொல்லுவார்கள். சிங்கள பிள்ளைகள் வீட்டு பார்ட்டி ஒரே அமர்க்களமாக இருக்கும். எனது அக்கா சிங்கள மீடியத்தில் படித்ததால் பெரும் பிரச்னை. அப்பா அவாவை போக விடமாட்டார். ஆனால் இப்ப காலம் மாறிவிட்டது. நாங்களும் ஊரை விட்டே வெளியில் வந்து வெள்ளக்கார கலாச்சாரத்துக்கு மத்தியில் இருக்கிறோம். அவர்களது கலாச்சாரம் ஒன்றும் குறைந்ததல்ல. வேறுபட்டது. எனக்கு தெரிந்த நிறைய வெள்ளைக்காரர் குடிப்பதே இல்லை. வீட்டுக்கு வீடு வாசல்படி.
  15. கருத்துப் படங்களைத்தேடி பதியும் தமிழ் சிறீக்கு நன்றிகள் பல
  16. கடவுளே....! எப்படியிருந்த பிள்ளையை இப்படி புலம்ப வைத்து விட்டார்களே.......கொட்டில்ல நாலு குத்தியை போடு பிள்ளை என்று சொல்லி வரைபடம் வரைந்து குடுத்தவரைத்தான் தேடுகிறேன்.......! 😂
  17. அப்ப இந்த விடைமுறையை கொண்டாட போறீங்கள். பிழாவை இதுவரை காணவில்லை என்றீர்கள். அந்த பிள்ளை எப்படி அடிக்குது பாருங்கோ.
  18. அருமையான பாட்டு.நீண்ட நாட்களின் பின்பு கேட்கிறேன். இணைப்புக்கு நன்றி நுணா.
  19. ஈரோடு கிழக்கு 'எடைத் தேர்தல்' வாக்குப்பதிவு நிலவரம் என்ன? எனும் திரியில் ஒட்டப்பட்ட அநாகரிகமான காணொளிகள் மற்றும் மீம்ஸ்கள் நீக்கப்பட்டன. யாழ் இணையத்தில் எக்காரணம் கொண்டும் இத்தகைய அநாகரீகமான தமிழகம் காணொளிகள் இணைக்கப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தமிழக அரசியலில் இடம்பெறும் அரசியல் கட்சிகளின் மோதல்கள் தொடர்பான அநாகரீகமான மீம்ஸ்கள் இணைக்கப்படுவதை தவிர்க்கவும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.