Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்12Points46793Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்9Points38770Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்7Points31993Posts -
nedukkalapoovan
கருத்துக்கள உறவுகள்7Points33035Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/08/23 in all areas
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
3 pointsஇரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.3 points
-
பூபதித்தாயே வணங்குகின்றோம்!
2 pointsபூபதித்தாயே வணங்குகின்றோம்! வாழ்வுத் தேடலில் சுழன்றிடும் தாய்மையின் வரம்பினை உடைத்து வரலாற்றுத் தாயாகி தேசத் துயரினை நெஞ்சினில் ஏந்தியே பாசத் தாயாகிப் பசியேற்று நோன்பிருந்து தமிழீழத்து வெளியெங்கும் நிறைந்தாயே தாயே! நீதிக்காய் இன்னும் கண்திறக்கவில்லை என்று நீதியே சாவுக்குள் நிலையிழந்து கிடந்தாலும் நீதிக்காய் நீண்ட காத்திருப்பு நிச்சயமாய் ஒருநாள் பெருந்தீயாய் எழுகின்ற வேளைவரும் காலமதில் மாமாங்க முன்றலிலே ஒளிதோன்றும் தாயே! நின் பசிதீரும் அப்போது பகலாகும் தாயகமே நிழலரசை இழந்த இனம் நிலையரைசைக் கையேற்கும் எம் இளைய தலைமுறையோ தாயகனின் சிந்தனையை புதிய திசைவழியே பதியமிடும் காலமதில் நின் முகமாக நிலம் பூக்கும்! நிலம் பூக்கும் நீர் நிலைகள் வழிந்தோடும் பாவலரும் ஆடலரும் கூடியுந்தன் புகழுரைப்பர் தமிழீழப் பெண்களது தனித்துவத்தின் குறியீடாய் தமிழ் உலகு உள்ளவரை வாழும் புகழ்படைத்த எழுச்சியின் வடிவான பூபதித்தாயே வணங்குகின்றோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointஇலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று1 point
-
தையல்கடை.
1 pointதையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻1 point
-
அந்தக் கண்கள்- நிழலி
1 pointஅந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointகொத்தாருக்கு அக்கினி நட்சத்திர படத்திலை வாற ஜனகராஜ் பீலிங் 100 வீதம் இருந்திருக்கும்....1 point
-
தையல்கடை.
1 pointஅப்பாடா ஒருவாறு ஒரே மூச்சில் வாசித்து முடித்திட்டன். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நீங்கள் உங்கள் கதைகளை எல்லாம் தொகுப்பாகப் போடுங்கள் அண்ணா. எல்லாமே விறுவிறுப்பான கதைகள் தானே. ஆனாலும் வேலை வெட்டி இல்லாமல் எல்லாவற்றையும் இரசித்து அறிந்துகொள்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. லா செப்பலில் கடையும் கண்முன்னே விரிந்தது அண்ணா.1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointபுருஷன்மார் இந்த வயதிலும் கண்டிசன் போட்டுத்தான் வைச்சிருக்கினம்! நானும் வாசிக்கின்றேன்! சிறிலங்காவில் ஏலக்காயும் இல்லையோ!😉1 point
-
வெள்ளித் தேரோட்டி...
1 pointசிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)1 point
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
1 point1 point
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Subramaniam Theivanayaki · பழமையும் புதுமையும் · Rejoindre Geetha Rajagopal · · மறைக்கப்பட்ட #உண்மைகள் நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும் மறை நீர் (Virtual water) பற்றி ... இது மிகவும் முக்கியம் பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20.முதல் 25 வரை இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross Domestic Product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன். புத்திசாலி நாடுகள்! நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன. இது இந்திய நிலவரம்! முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது. மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்? முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர். சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2019-21-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 1100 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 6,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும். ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை. பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை. தண்ணீருக்கு எங்கு கணக்கு? ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள். இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம். மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் நமது விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.......!1 point- வணக்கம் - தமிழ் மெய் நிகர் நாணயம் (Tamil Crypto Project) ஓர் அறிமுகம்
மெய் நிகர் நாணயம். நல்லதொரு சொல்லாக்கம்!1 point - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.