Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8910
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    7054
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33035
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    32004
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/09/23 in Posts

  1. திரும்பும் வரலாறு- பாகம் 7 நாசிகள் பதவிக்கு வந்த 1933 இலிருந்து 1940 வரையான காலத்தில், செக்கோஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், போலந்து, பிரான்ஸ் உடபட்ட பல நாடுகள் வரிசையாக நாசிகள் வசம் வீழ்ந்தன எனப் பார்த்தோம். இங்கிலாந்தை ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் கனவு நிறைவேறாமல் போக, ஹிற்லரின் கவனம் சோவியத் ரஷ்யா மீது திரும்பியது டிசம்பர் 1940 இல். ஸ்கொற்லாண்ட் வந்த சமாதானப் புறா ஜூன் 1941 இல் ஒபரேசன் பார்பறோசா என்ற பெயரில் சோவியத் ரஷ்யாவைக் குறிவைத்த நாசி ஜேர்மனிப் படையெடுப்பு ஆரம்பித்தது. அதற்கு முன்னர், மே 10 ஆம் திகதி இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளிலேயே மர்மம் நிறைந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஹிற்லருக்கு அடுத்த நிலையில் நாசித் தலைமையில் இருந்த ருடோல்f ஹெஸ் ஒரு இரட்டை எஞ்சின் விமானத்தை எடுத்துக் கொண்டு, ஜேர்மனியில் மியூனிக் நகரில் இருந்து ஸ்கொற்லாண்டின் நாட்டுப் புற இலக்கொன்றில் திடீரென வந்திறங்கினார். இந்த வினோதச் சம்பவத்தின் பின் கதை இன்று வரை முழுவதுமாக பொதுவாசகர்களுக்குத் தெரியாத ஒரு புதிர். ஆனால், பல்வேறு நாட்குறிப்புகள், உள்ளறிக்கைகள் சார்ந்து பார்க்கும் போது, நாசி ஜேர்மனிக்கும் பிரிட்டனுக்குமிடையே சமாதானம் பேசும் தூதுவராகவே, தன்னிச்சையாக ஹெஸ் வந்திறங்கினார் என்று தெரிகிறது. நாசி ஜேர்மனியின் துணை வேந்தராக பதவியிலிருந்தாலும், ஹெஸ்ஸின் மதிப்பு ஹிற்லரின் உள்வட்டத்தில் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. பல சர்வாதிகாரிகள், தங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் தன்னை விட எந்த வகையிலும் மேலாண்மை மிக்கவராக இருந்து விடக் கூடாதென மிக அவதானமாக இருப்பர். அந்த அடிப்படையிலேயே, பாரிய ஆளுமையெதுவும் இல்லாத ஹெஸ் துணை வேந்தராக ஹிற்லரால் நியமிக்கப் பட்டார் என ஒரு கருத்தும் நிலவுகிறது. ருடோல்f ஹெஸ்ஸின் மெசர்ஸ்மிற் 110 விமானத்தின் சிதைவுகள். விமானம் முற்றாக எரிபொருள் தீர்ந்த நிலையில் ஸ்கொற்லாண்டில் வீழ்ந்தது, ஹெஸ் காயங்களின்றித் தப்பினார். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. ஆனால், ஹெஸ்ஸோ ஹிற்லரை, கடவுள் ஜேர்மனிக்கு அளித்த ஒரு மீட்பராக வழி பட்டார். எனவே, கோறிங்கின் நாசி விமானப் படையாலும், கோயபல்சின் பிரச்சாரத்தாலும் வீழ்த்த முடியாதிருந்த பிரிட்டனை, தானே நேரில் சென்று சமாதானம் பேசி ஹிற்லருக்கு ஒரு பரிசாக பிரிட்டனைக் கொடுக்கலாம் என்று ஹெஸ் கணக்குப் போட்டிருப்பார் போலும். இதற்காக ஹெஸ் செய்த பயணம் நீண்டதும் (800 மைல்கள் பறப்பு) ஆபத்தானதுமாக இருந்தது. விமானமோட்டி லைசென்ஸ் வைத்திருந்த ஹெஸ், தனது இரட்டை எஞ்ஜின் மெசர்ஸ்மிற் 110 விமானத்திற்கு மேலதிக எரிபொருள் தாங்கிகள் பொருத்தி, சில மருந்துகளும், உணவும் கட்டிக் கொண்டு ஸ்கொற்லாந்தில் போயிறங்கியது டியூக் ஹமில்ரன் என்ற பிரிட்டன் அரசகுடும்பத்தைச் சேர்ந்த நாசி அனுதாபியின் மாளிகைக்கு அண்மையாக. உள்ளூர் பொலிசாரால் கைதான ஹெஸ்ஸை யாரென்று உறுதி செய்த பின்னர், அவரை ஒரு பங்களாவில் அதிக கெடுபிடிகளில்லாமல் சிறை வைத்தார்கள் பிரிட்டன் பாதுகாப்புப் பிரிவினர். இடையிடையே நடந்த விசாரணைகளின் போது, ஹிற்லர் சோவியத் ரஷ்யாவைத் தாக்க இருக்கும் செய்தியையும் ஹெஸ் கசிய விட்டிருக்கிறார். சேர்ச்சில் நிர்வாகம் இந்த தகவலை மொஸ்கோவிற்கு உடனேதெரியப் படுத்திய போதிலும், ஸ்ராலின் இதை நம்பவில்லை. சுவாரசியமான இன்னொரு விடயம், அதே காலப்பகுதியில் ஜப்பானில் இருந்த ஒரு சோவியத் உளவாளியும் நாசிகள் சோவியத் மீது தாக்குதல் தொடுக்கவிருக்கும் உளவுச் செய்தியை மொஸ்கோவிற்கு அனுப்பி வைக்கிறார் - ஸ்ராலினுக்கு இது சொல்லப் படுகிறது- அதையும் உதாசீனம் செய்து, நாசிகளுடனான பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் நீடிக்குமென நம்பினார் ஸ்ராலின். பூனைக்காலால் நடந்து வந்த நாசிகள் நாசி ஜேர்மனியின் முதல் சோவியத் நோக்கிய பீரங்கி முழக்கம் ஜூன் 22, 1941 இல் வெடிக்கிறது. ஆனால், ஜூன் ஆரம்பத்திலிருந்தே போலந்தில் இருந்த சோவியத் முன்னரங்க நிலைகளூடாக நாசிகளின் ஐந்தாம் படை சோவியத் படைகளின் பின்னரங்கம் நோக்கி ஊடுருவி, தொலைத் தொடர்பைத் துண்டிக்கும் நாசவேலைகளைத் தொடங்கி விட்டன. இதனால், ஜூன் 22 இல், 3000 தாங்கிகள், 2000 குண்டுவீச்சு விமானங்கள் சகிதம் ஒப்பரேசன் பார்பறோசா ஆரம்பித்த போது, சோவியத்தின் செஞ்சேனை தாக்குப் பிடிக்க இயலாமல் துவழ வேண்டி வந்தது. உதாரணமாக, முதல் 9 மணி நேர நாசி விமானத் தாக்குதலில், சோவியத் விமானப் படையின் 1200 விமானங்கள் - பெரும்பாலானவை விமான ஓடுபாதைகளில் வைத்தே - அழிக்கப் பட்டன. இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில், முதல் 48 மணி நேரங்கள் தோழர் ஸ்ராலின் எங்கேயென்று அவரது உள்வட்டத்தினருக்கே தெரியாத நிலை. ஸ்ராலின் எதிர்பார்த்திருக்காத இந்த தாக்குதலால் அவர் அதிர்ச்சியடைந்ததே இந்த 2 நாள் மௌனத்தின் பின்னணி என சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மறு பக்கம், தாக்குதல் ஆரம்பிக்க முன்னதாக பெர்லினில் இருந்த சோவியத் தூதுவராலயம் நாசிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்த, தகவலறிய முயன்று கொண்டிருந்ததாகவும் சில ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், எவ்வாறு மின்னாமல் முழங்காமல் திடீரென நாசி - சோவியத் பகைமை தவிர்ப்பு ஒப்பந்தம் (மொலரோவ் றொப்பன்ரொப்) உலகை உலுக்கியதோ, அதே போல அது போர்ப்பிரகடனம் எதுவும் இல்லாமலே ஸ்ராலின் முகத்தில் நாசி ஜேர்மனியால் கிழித்தும் எறியப் பட்டது. பனியுறைந்த சோவியத் முனையில் ஒரு நாசிப் படையினரின் சவக்காலை. பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. லெனின்கிராட் முற்றுகை தற்போது செயின்ற் பீற்றர்ஸ்பேர்க் என்று அழைக்கப் படும் ரஷ்ய நகரம், 1941 இல் லெனின்கிராட் என்று அழைக்கப் பட்டது. ஒபரேசன் பார்பறோசாவின் இலக்கு இந்த லெனின்கிராட் தான். சோவியத்தின் பால்ரிக் குடியரசுகளூடாக ஊடறுத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லெனின்கிராட்டைக் கைப்பற்றுவது தான் இலக்கு. ஆரம்பித்த வேகத்தில் நாசி ஜேர்மனியின் தரைப்படைகளால் முன்னேற இயலா விட்டாலும், செப்ரெம்பர் 1941 இல் லெனின்கிராட்டை நாசிப் படையின் வடக்குப் பிரிவு (Army Group North) சுற்றி வளைத்தது. இந்த முற்றுகையில் ஒரு கட்டத்தில் சோவியத்தின் முன்னாள் எதிரிகளான பின்லாந்தின் படைகளும் கலந்து கொண்டு முற்றுகையை இறுக்கின (இது 1940 இல் சோவியத் ரஷ்யா பின்லாந்திடமிருந்து பறித்துக் கொண்ட கரேலிய பிராந்தியத்திற்கு ஒரு பழி தீர்த்தலாகப் பார்க்கப் பட்டது). நவீன போர்க்கால வரலாற்றில் நீண்ட முற்றுகைகளில் ஒன்றாகத் திகழும் லெனின்கிராட் முற்றுகை 800 நாட்களுக்கு மேல் நீடித்தது. முற்றுகை இறுதியாக உடைக்கப் பட்ட போது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் லெனின்கிராட் வாசிகள் தாக்குதல்களாலும், பட்டினியாலும் இறந்திருந்தனர். ஆனால், இந்த முற்றுகைக்குச் சமாந்தரமாக, நாசிகள் தெற்காக இருந்த மொஸ்கோ நோக்கியும், அதற்குக் கீழாக வொல்கா நதிக்கரையில் இருந்த ஸ்ராலின்கிராட் நோக்கியும் புதிய களங்களை உருவாக்கி முன்னகர்ந்தனர். இது, அண்மித்து வந்த குளிர்காலம் பற்றிய எச்சரிக்கையுணர்வையும் மீறி, சோவியத்தை ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் நப்பாசையால் மில்லியன் கணக்கான நாசிப் படைகளை கிழக்கு நோக்கி நகர்த்தி ஆரம்பிக்கப் பட்ட ஒரு நடவடிக்கை. செப்ரெம்பரில் மொஸ்கோ நோக்கி ஒபரேசன் ரைfபூன் (Typhoon) என்ற புதிய நகர்வைத் தொடங்கிய நாசித் தரைப்படையின் மத்திய அணி (Army Group Center), ஒக்ரோபரில், மொஸ்கோவிற்கு மிக அண்மையாக வந்திருந்தது. ஸ்ராலின் மொஸ்கோவிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கு நகரொன்றிற்குச் செல்வதற்கும் ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தாலும், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு மொஸ்கோவைக் காக்க எதிர்த்து நிற்பதெனத் தீர்மானித்தார். ஸ்ராலின்கிராட்: கௌரவப் பரிசு விரைவிலேயே வடக்கில் லெனின்கிராட் முற்றுகையும், அதற்குத் தெற்கே மொஸ்கோ முற்றுகையும் சோவியத் ரஷ்யாவின் கொடூர உறைபனிக் காலத்தில் நாசிகளுக்குப் பாதகமாக மாறி முன்னேற்றமற்ற அழித்தொழிப்பு யுத்தமாக (war of attrition) மாறி விட்டது. பிரிட்டன் செய்தது போலவே, சோவியத் ரஷ்யாவும் துரிதமாக இராணுவ உபகரணங்களையும், தாங்கிகளையும் உற்பத்தி செய்து, ஒரு மில்லியன் வரையான சோவியத் செஞ்சேனையினரையும் களத்தில் இறக்கியதால் இந்த அவல நிலை ஹிற்லரின் படைகளுக்கு. இந்த நிலையிலும், ஸ்ராலினுக்கு மூக்குடைப்பது போல ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்த ஹிற்லர், உக்ரைனுக்கு கிழக்காக, மொஸ்கோவிற்கு தெற்காக இருந்த "ஸ்ராலின்கிராட்" எனும் வொல்கா நதிக்கரை நகரத்தைக் குறிவைத்து மூன்றாவது களமுனையொன்றை நாசிகளின் தெற்குப் படையணியைக் (Army Group South) கொண்டு ஆரம்பித்தார். 1942 ஆகஸ்டில், வொல்கா நதியின் மேற்குக் கரையில் அமைந்திருந்த ஸ்ராலின்கிராட் மீது முற்றுகையை நாசி, மற்றும் இத்தாலிய படைகள் இறுக்கின. அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்த இந்த ஸ்ராலின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்த போது, ஸ்ராலின்கிராட்டில் சிக்கியிருந்த ஐம்பதினாயிரம் மக்களில், பத்தாயிரம் பேர் வரை எஞ்சியிருந்தனர். பெரும்பாலானோர் முற்றுகை ஆரம்பிப்பதற்கு முன்னரே வொல்கா நதியைக் கடந்து கிழக்குக் கரைக்குச் சென்று விட்டதால், லெனின்கிராட் போன்ற இலட்சக் கணக்கான மக்கள் இழப்பு நிகழவில்லை. ஆனால், இன்றும் வரலாற்றில் எதிரொலிக்கும் சில அதிர்வுகளுக்கு ஸ்ராலின்கிராட் நோக்கி, நாசிகள் கிழக்கு ஐரோப்பா, உக்ரைன் ஆகியவையூடாக மேற்கொண்ட நகர்வுகள் காரணமாக இருக்கின்றன. உக்ரேனிய மக்களுக்கும், ஸ்ராலினுக்குமிடையே இருந்த வரலாற்றுப் பகை காரணமாக, உக்ரேனியர்கள் நாசிகளோடு ஒத்துழைக்கத் தலைப்பட்டனர். கீயெவ் ஊடாக முன்னேறிய நாசிப் படைகள் உக்ரேனிய யூதர்களைச் சுற்றி வளைக்கவும், கொலை செய்யவும், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருந்த வலது சாரி உக்ரைன் குழுக்கள் உதவின. உக்ரேனியர்கள் மட்டுமன்றி, கம்யூனிச ஆட்சியில் நிலமிழந்து அலைந்த கோசாக்குகளும் கூட நாசிகளோடு ஒத்துழைத்த பதிவுகள் இருக்கின்றன. ஸ்ராலினின் சோவியத் ரஷ்யா முன்னெடுத்த இன அடையாள அழிப்பு முயற்சிகளின் பிரதிபலன்களாக இந்த நடவடிக்கைகள் பார்க்கப் படுகின்றன. ஸ்ராலினின் களையெடுப்பு இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்க முன்னரே, ஸ்ராலின் அடிக்கடி தன் ஆதரவாளர்களிடையே களையெடுப்பு (purge) நடத்தி, ஆயிரக்கணக்கானோரை பனியுறைந்த சைபீரியாவில் திறந்த வெளிச்சிறைச்சாலைகளுக்கு (Gulags) அனுப்புவதும், கொல்வதுமாக இருந்தார். மூன்று முனைகளில் நாசிகள் முன்னேறி முற்றுகைக்குள்ளாக்கிய போதிலும், ஸ்ராலினின் களையெடுப்பு அதிகரித்ததேயொழிய, குறையவில்லை. யுத்த காலத்தில் NKVD எனப்படும் ஸ்ராலின் உளவுப்பிரிவு முன்னரங்குகளில் தீவிரமாக ஊடுருவி செஞ்சேனையின் சகல மட்டங்களிலும் துரோகிகள் இருக்கிறார்களா எனத் தேடிக் கொண்டேயிருந்தனர். இந்த துரோகம் என்பது மிக நொய்மையாக வரையறை செய்யப் பட்டிருந்ததால், ஏராளமான இராணுவ வீரர்களும், சாதாரண மக்களும் வலுவான காரணங்களின்றி சைபீரியாவுக்கோ, சவக்காலைக்கோ அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தனர். நாசிகளின் சோவியத் முனைத் தோல்விக்குப் பிறகு, ரெஹ்றான் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி றூஸவெல்ட், பிரிட்டனின் சேர்ச்சில், சோவியத் ரஷ்யாவின் மார்ஷல் ஸ்ராலின். பட உதவி: நன்றியுடன் Imperial War Museum, UK. நாசிக் கனவுகளின் முடிவிடம் 1815 இல் நெப்போலியனின் படைகளைப் பலிகொண்ட சோவியத் எனும் பனியுறைந்த பெருநிலம், 1943, பெப்ரவரியில், நாசிகளின் படைகளையும் சிதைத்து இலட்சக் கணக்கான நாசிப் படையினர் சோவியத்திடம் சரணடைய வைத்தது. சோவியத் வெற்றிக்கு வித்திட்ட ஒப்பரேசன் யுரேனஸ், ஒப்பரேசன் றிங் போன்ற நடவடிக்கைகள் பற்றி ஏராளமான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் ஏற்கனவே இருப்பதால், அந்த விபரங்களை இங்கே தவிர்க்கிறேன். 1943 நவம்பரில் ரெஹ்றான் மாநாட்டில், ஸ்ராலின்கிராட் மக்களின் வீரத்தைப் பாராட்டி "ஸ்ராலின்கிராட் வாள்-Sword of Stalingrad" எனப்படும் அடையாள வாளொன்றை பிரிட்டன் அரசர் சார்பாக சேர்ச்சில் ஸ்ராலினிடம் வழங்கினார். இந்த மாநாட்டில் தான் சேர்ச்சில், ஸ்ராலின், றூசவெல்ட் ஆகிய நேச நாடுகளின் தலைவர்களால் நாசி ஜேர்மனியைக் கைப்பற்றும் திட்டம் வகுக்கப் பட்டது. ஐரோப்பாவின் கிழக்கில் நாசிகள் சோவியத்தை நோக்கி நகர்ந்த அதே காலப் பகுதியில், 1941 டிசம்பர் 7 இல், பசுபிக் அரங்கில் ஜப்பானிய இராணுவம் அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையை வான்வழியாகத் தாக்கிப் பேரழிவை விளைவித்தன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா இறங்கக் காரணமாக இந்த தாக்குதல் அமைந்தது. இந்த தாக்குதலின் விளைவாக ஜப்பான் மீது 4 ஆண்டுகள் கழித்து உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் வீசப் பட்ட நிகழ்வை அடுத்த பகுதியில் பார்க்கலாம். -தொடரும்
  2. மூன்று லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச் செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும் என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும் யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன். உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என் போன் துலையாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது. மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில் அவங்களுக்கும் தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ? :அது என் கணனி :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? :அது அவர்கள் பிரச்சனை :இத்தனை பாரமாக இருக்கிறதே :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ? :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.
  3. இரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.
  4. நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் நான் வாழ நீயின்றி வேறேது காரணம் புதிய தாகம் இதுவோ காதல் பானம் பருக வருமோ நமது காதல் விளைய இது புதுமையான களமோ நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் காற்றுப் போலவே நெஞ்சம் சூழலுதே உன் கண்ணைக் கண்டதாலே பேதை என்னையே வாழ வைத்ததே நேசம் கொள்ளைக் கொண்டதாலே உன்னைப் பார்க்கையில் அன்னைப் பார்க்கிறேன் உந்தன் ஜீவக்கண்ணில் என்னைப் பார்க்கையில் உன்னைப் பார்க்கிறேன் உந்தன் வடிவந்தன்னில் அன்பைச் சொல்லியே என்னைச் சேர்க்கிறேன் இன்று உந்தன் வாழ்வில் அன்பே! எண்ணம் கூடுமோ இந்த மாய வாழ்வினில்.... அன்பே! நேசம் கூடுமோ உந்தன் ஞான வாழ்வினில்.... அன்னை நீ! தந்தை நீ! விண்ணும் நீ! மண்ணும் நீ! கீதை போலே உந்தன் பேரை ஓதும் பேதை நான்.... நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் கல்வி செல்வமும் அன்பு செல்வமும் வாரித் தந்தவன் நீயே! நாளும் என்னையே வாழவைத்திடும் பேசும் தெய்வம் நீயே! என்னை வணங்கிடும் என்னை ஏந்திடும் மோனவல்லியே வெள்ளை மனத்தில் அன்பை மேவியே என்னை ஆளும் கோதையே என் மன மேடையில் நீ தான் ராதையே என் நினைவில் வாழ்ந்திடும் என் சுவாச பாதையே என்னுயிர் நீ அல்லவா இன்னும் நான் சொல்லவா நீதான் மனைவி நீதான் காதலி நீதான் என் வசந்தம் நாள்தோறும் நான் வாழ கண்ணா நீ‌ காரணம் அன்போடு நின்றாடும் உன் நினைவு தோரணம் சரவிபி ரோசிசந்திரா
  5. பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் அனுபவத் தொடர் அருமை அண்ணா, தொடருங்கள். தவிச்ச முயல் அடிப்பவர்கள் அங்கும் உள்ளார்கள்!
  6. ‘ மலருக்குத் தென்றல் பகையானால்’ இல் சிந்திய முத்துக்களை சேகரிக்க சிப்பியொன்று தயாராகின்றது என்கிறீர்கள் ‘ தையல் கடையில்’ பூட்டிய அறையில் சூடான புரியாணி என்கிறீர்கள். எனக்கென்னவோ ‘தையலின் சூடான பிரியாணி’ என்று கதைக்கு தலைப்பை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
  7. அட பாவி. அவ இங்க களத்துக்கு வரட்டுக்கும். இருக்கிது சாத்து 😋
  8. பூபதித்தாயே வணங்குகின்றோம்! வாழ்வுத் தேடலில் சுழன்றிடும் தாய்மையின் வரம்பினை உடைத்து வரலாற்றுத் தாயாகி தேசத் துயரினை நெஞ்சினில் ஏந்தியே பாசத் தாயாகிப் பசியேற்று நோன்பிருந்து தமிழீழத்து வெளியெங்கும் நிறைந்தாயே தாயே! நீதிக்காய் இன்னும் கண்திறக்கவில்லை என்று நீதியே சாவுக்குள் நிலையிழந்து கிடந்தாலும் நீதிக்காய் நீண்ட காத்திருப்பு நிச்சயமாய் ஒருநாள் பெருந்தீயாய் எழுகின்ற வேளைவரும் காலமதில் மாமாங்க முன்றலிலே ஒளிதோன்றும் தாயே! நின் பசிதீரும் அப்போது பகலாகும் தாயகமே நிழலரசை இழந்த இனம் நிலையரைசைக் கையேற்கும் எம் இளைய தலைமுறையோ தாயகனின் சிந்தனையை புதிய திசைவழியே பதியமிடும் காலமதில் நின் முகமாக நிலம் பூக்கும்! நிலம் பூக்கும் நீர் நிலைகள் வழிந்தோடும் பாவலரும் ஆடலரும் கூடியுந்தன் புகழுரைப்பர் தமிழீழப் பெண்களது தனித்துவத்தின் குறியீடாய் தமிழ் உலகு உள்ளவரை வாழும் புகழ்படைத்த எழுச்சியின் வடிவான பூபதித்தாயே வணங்குகின்றோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. அமைதியான நீரோடடமாய் அவர்களது வாழ்வு சென்று கொண்டிருக்கையில், புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் , வயது வந்த பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் செய்ய ஆசைபடடனார். தமக்கு அறிந்தவர் தெரிந்தவர்களுக்கு சொல்லியும் வைத்தனர். செல்வி இரண்டு அண்ணா மா ருக்கு ஒரு செல்லத்தங்கை . புல ம் பெயர்ந்த தமிழ் தாய் தந்தைக்கு மகளாக வளர்ந்தவள். பெற்றாரும் பெண்பிள்ளை என்ற கிராமத்து வழக்கில் , ஜெர்மனியில் வாழ்ந்தாலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள் அவளு க்கு ஒரு நண்பிகளும் இல்லை . பாடசாலைக்கு கூட்டிப்போய் கூட்டி வரும் தந்தை , இவர்களது திருமணம் சற்று வயதான காலத்திலே நடந்தது. செல்வி பிறக்கும் போது தாய்க்கு நாற்பது வயது. சமய கடமைகளி ல் மிகவும் ஊறி போனவர்கள். ஒரு வகை போதகக் கூட்ட்ம் என்றும் சொல்லாம். ஞாயிற்றுக்கிழமை என்றால் முழுக் குடும்பமும் ஜெபக் கூட்ட்த்திலே இருப்பார்கள். மூத்தமகன் பியானோ வாசிக்க இளையமகன் மத்தளம் வாசிக்க பாட்டுக் குழுவில் செல்வியும் முக்கிய அங்கத்தவர். இப்படியாக சர்ச்சும் வீடுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கையில் அந்தக் கூட்ட்த்தில ஒரு குடும்பத்தினர் இவர்களுக்கு நண்பாராக்கினார். பேச்சு வாக்கில் தமது மகள் திருமணமாகி தமக்கு அருகில் குழந்தைகளுடன் வாழ்வதாகவும். , துபையில் வேலை செய்யும் மகன் தம்மிடம் வந்து சேர்ந்துவிடடால் தமது முழுக்குடும்பமும் ஒன்றிணைந்துவிட்ட் மகிழ்ச்சி எனக் கூறினார். பையனை பற்றி விசாரித்தபோது வயதும் பொருத்தமாக இருக்கவே செல்விக்கு மணமுடிக்க ஆயத்தமாகினர். எல்லா ஒழுங்கும் முற்றுப் பெற்று மாப்பிள்ளை துபாயிலிருந்து தாய் நாடு வந்து, இவர்களும் பெண்ணும் அங்கு சென்று பதிவு திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தனர். செல்வியையும் தொலைபேசியில் பேச செய்து இருவருக்கும் பிடித்து போக பதிவு திருமணத்துக்கான நாள் முடிவு செய்தனர் தாய கத்துக்கு சென்று , பெரியப்பா வீட்டில் வந்து தங்கியிருந்த மாப்பிள்ளை சகல ஆயத்தங்களும் செய்து இனிதே திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் இவர்கள் ஜெர்மனி திரும் பினார். ஜெர்மனி வந்ததும் சில வாரங்களில் மாப்பிள்ளையை குடும்ப ஒன்றிணைவு மூலம் எடுக்க செல்வி ஆயத்தங்கள் செய்தார் . பத்திரங்களை நிரப்பி தகவல்களை சேகரித்து ஆயத்தங்கள் நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் செல்வியை தங்கள் வீட்டுக்கு அழை த்தனர். அங்கு சென்று மதிய உணவு முடிந்து வீட்டுக்கு வர ஆயத்தமாகும் போது வருங்கால மாமியார் தனியே அழைத்து , செல்வியின் வேலை ,சம்பளம் என எல்லாம் விசாரித்தார். இறுதியில் மகன் இங்கு வந்து கலியாணம் சர்ச் இல் நடந்த பின் தங்களுடன் இருக்க வேண்டுமெ ன்றும் இருவரும் கடன் முடியுமட்டும் தனி க் குடித்தனம் செல்லா நினைக்க வேண்டாமென்றும் , மகனை துபாய்க்கு அனுப்பிய விடயத்தில் கடன் இருக்கு என்றும் மாமியார் செல்வியின் காதில போட்டு வைத்தார். ஏற்கனவே செல்வி கணவன் வந்து தங்க ,ஒழுங்கு செய்யும் போது விண்ணப்பத்துக்கு தேவை என்பதால் அவளது வேலை பார்க்கும் இடத்துக்கு அருகே வீடு பார்த்து அட்வான்ஸ் கட்டி அங்கிருந்து தான் வேலைக்கு செல்கிறாள். மாமியார் வீட்டுக்கு சென்ற செல்வி நேராக தாயிடம் வந்தாள். மிகவும் கோபமாக காணப்படடாள் அழுகையின் மத்தியில் "இவ்வளவு காலம் பொத் தி பொத் தி வளர்த்து ஊர் உலக நடைமுறை தெரியாமல் வைத்து என்னை இப்ப டி ஒரு இடத்தில் தள்ளி விடடீர்களே "என்று குமுறினாள் . தொடர்ந்து "குடும்ப ஒன்றிணைவு விண்ணப்பம் அனுப்ப மாடடேன்" என்றாள் . தாய் தந்தை க்கு இடிவிழுந்த்து போலானது . இப்படிப் பட்ட் மாமியாருக்கு தங்கள் மகளை கொடுத்து விட்டொமே என்று பெருங்கவலை கொண்டனர். மாப்பிள்ளை பெடியனோடு பேசிப்பார்ப்போம் என சமாதானம் செய்யப் பார்த்தனர் . மாப்பிளை வர முன்னமே இப்படி சட்ட்ம் போடும் மாமியாருடன் எப்படி வாழ்வது எம்மை நிம்மதியாக வாழ விடமாட்ட்ர்கள். என்று கோபித்து கொண்டு வேலை இடத்துக்கு அண்மையில் உள்ள வீட்டுக்கு சென்று விடடாள் .வார விடுமுறைக்கு தாய் தந்தையை பார்க்க வரவில்லை. கடைசியில் அவளிடம் சென்று தாய் தந்தை விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிந்தவர் மூலம் தாயகத்தில் ஒழுங்கு செய்தனர். இது இவ்வாறு இருக்கும் போது செல்வியின் தொலைபே சி யோ மடலோ ஒரு மாதத்துக்கு மேலாக வரவில்லை என மிகவும் கவலைப்பட்டு அவன் தாயிடம் தொடர்பு கொண்டு கேட்ட் போது தாய் மேலோட்ட்மாக சொன்னார். அதைக் கேட்ட பையன் மிகவும் கவலைப்படட துடன். தாய் தந்தையிடமே பேச்சு வார்தையற்று இருந்தான். செய்த வேலையையும் விட்டு வந்து ...கலியாணமும் குழம்பி ...என்ன செய்வதென அறியாது .யாருக்கும் சொல்லமால் இந்தியா சென்று விடடான் .. போலீசார் மூலம் தேடியும் ஆள் கிடைக்க வில்லை. என்ன செய்வதென அறியாது தாய் தந்தையர் கவலையோடு இருக்க , மூத்த அண்ணாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவ்ர்களைப்பார்க்க சென்றவளுக்கு இன்னும் துயரம் அதிகமானது . அண்ணி மீது வெறுப்பானது. இவர்களுக்கு எல்லாம் கால காலத்தில் திருமணமாகி குழந்தையுடன் வாழ்கிறர்கள் என மனக் குழப்பம் ஆனது . பொறியில் சிக்கிய மான் போன்ற நிலையில் இருந்தாள் .செல்வி . காலம் உருண்டோடியது ...இரு இளம் உள்ளங்களை மனம் நோக செய்த குற்ற உணர்வில் இரு குடும்பமும் பேச்சு வார்தையற்று இருந்தனர். செல்வியின் தாய் தந்தையர் நோய்யுற்றனர். இருவரும் மண வில க்கு பெறாமல் வேறு திருமணமும் செய்ய முடியாது .இரு உள்ளங்களை ஒன்று சேரவிடாமல் தவிக்க விடட பாவத்தை தே டிக் கொண்டனர். காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என புலம்பலாயிற்று . இவர்களின் வாழ்வை காலம் தான் மாற்ற வேண்டும். உலக நிலைவரம் தெரியாத பெற்றோர் , வெளிநாட்டு சென்றும் பண ஆசை பிடித்த , அறியாமை கொண்ட பெற்ற்வர்கள். இளம் உள்ளங்களின் மன உணர்வுகளைப் புரியாத பெற்ற்வர்கள் இன்னும் வாழ்கிறார்கள். காலம் கணனி மயமாகி விட்ட்து. மாற்றங்களை கிரகித்து மாறா விடடால் நாம் தான் மடையார் ஆவோம். தற்போது இளைய தலை முறை நன்றாக கணித்து விவரம் தெரிந்தவர்களாக உள்ளனர். பெற்ற்வர்கள் அவர்களை நம்ப வேண்டும். பெற்ற்வர்கள் பிள்ளைகளை தோழர்களாக பாவித்து பழக வேண்டும். அப்போது தான் அவர்களும் எதையும் மறை க்காமல் பகிர்ந்து கொள்வார்கள். உண்மை கலந்த கற்பனை .
  10. கால் நூற்றாண்டுகளாய் களம் கண்டு-நின்றியங்கும், யாழ் இணையம்- நூறாண்டு மேல் உயர வாழ்த்துக்கள் ! மச்சானின் நெல் வயலில் மகிழ்ந்திருந்த நெல் மணிகள், கச்சான் காத்தடித்ததனால் கதிர் விலகிச் சிதறினவே. அருகினிலே சில மணிகள் ஆழ மண்ணில் சில மணிகள் தெருவினிலே சில மணிகள் தேசம் விட்டுச் சில மணிகள். கலகலத்துச் சிரித்துவிட்டு கச்சான் காத்தோய்ந்து போக, வெலவெலத்துப் போன மச்சான் வெளிப்பட்டான்-செயற்பட்டான். பதறிப் போன மச்சானும் சிதறிப்போன மணிகளதைக், கதறிக் கொண்டு சேகரித்துக் கட்டிச் சேர்த்தான் கோணியிலே. சிதறிப் போன மணிகளாகச் சிறிலங்காத் தமிழர் இன்று. கட்டிச் சேர்த்த கோணியாக களம் இந்த யாழ் -இங்கு. ஒன்றாவோம் உரிமைகளை வென்றாவோம். நன்றாவோம் நாளை நமது என்றாவோம்.!
  11. மலர்............(12). நிர்மலாவின் குடும்பத்தினரும் அங்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்து பந்தல் எல்லாம் போட்டு சாமான்களை இறக்கி வைத்து அப்புவை காவலுக்கு வைத்து விட்டு மாதாவின் ஊர்வலம் பார்க்கப் போயிருந்தார்கள். பின் தரிசனம் முடிந்து அவர்கள் வந்து சமைக்கத் தொடங்கியதும் அப்பு கோயில் பார்க்கப் போகிறார். கதிரவனும் முகிலனும் விளையாட்டு சாமான்கள் வாங்குவதற்கு கடைகள் இருக்கும் பக்கமாகப் போகிறார்கள். சிவாங்கியும் சரவணனும் சிறுவர்களாதலால் தாயோடும் பேத்தியாரோடும் இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஆச்சியும் நிர்மலாவும் சமையல் வேலைகளை முடித்து விட்டிருந்தார்கள். இனி எல்லோரும் வந்து சாப்பிட்ட பின் ஊருக்கு கிளம்பு வேண்டியதுதான். ஆச்சி அங்கிருக்க நிர்மலாவும் பிள்ளைகளுக்கு பிராக்கு காட்ட இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு மூவருமாய் வீதியில் நடக்கிறார்கள். அப்போது ஒரு பந்தலுக்குள் இருந்த அம்மா அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு பிள்ளை நிர்மலா என்று சத்தமாய் கூப்பிடுகிறாள். உடனே நிர்மலாவும் திரும்பிப் பார்க்க அங்கு இராசம்மா ஒரு சிறிய கதிரையில் இருந்து எழும்ப முயற்சித்தபடி இவர்களை அழைக்கிறாள். ஓம் ...அம்மா நான் நிர்மலாதான், நீங்கள் இருங்கோ நான் அங்கு வாறன் என்று சொல்லி பிள்ளைகளுடன் அங்கே செல்கிறாள். அவளைக் கண்டதும் இராசம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. கண்களில் நீர் சொரிய அவளின் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். --- நிர்மலா எப்பிடியடி இருக்கிறாய். இவர்கள் உன் பிள்ளைகளோ என்று வினவுகிறாள். ---ஓம் அம்மா நான் நல்லா இருக்கிறன். இவன் என் மகன் சரவணன். இவள் என் புருசனின் மூத்த தாரத்து மகள் சிவாங்கி. இவ பிறக்கும்போது அவ தவறிட்டா. --- அப்ப நீ இரண்டாம்தாரமாகவோ அவரைக் கட்டியிருக்கிறாய். அவருக்கு வேறு பிள்ளைகளும் இருக்கோ என்று கேட்கிறாள். --- ஓம் அம்மா இவளுக்கு மூத்த சகோதரன் முகிலன் என்றொரு மகனும் இருக்கிறார். பின் இராசம்மாவும் அவள் வயிற்றைப் பார்த்து விட்டு கண்ணாலேயே விசாரிக்க அவளும் ம்....என்று சொல்கிறாள். --- எத்தனையாவது மாசம் என்று கேட்க நிர்மலாவும் ஆறுமாசமாகுது என்கிறாள். --- பிள்ளை அன்று நீ போனதில் இருந்து நாங்கள் உன்னைத் தேடாத இடமில்லை. உன்ர அப்பா அம்மாவுடன் கதைக்கிறனியே. --- இல்லையம்மா, இனிமேல்தான் அவையளோட தொடர்பு கொள்ள வேணும். --- கெதியா அவையளோட கதை பிள்ளை.அவையிலும் கலங்கிப்போய் இருக்கினம். நாங்கள்தான் உன்னை ஏதோ செய்து போட்டம் என்று சண்டை பிடித்து விட்டு போனவை. பிறகு ஒரு தொடர்பும் இல்லை. அதுசரி உன்ர புருசனும் அவை வீட்டுக்காரரும் உன்னை நல்லபடியா வைத்திருக்கினமோ. --- ஓம் அம்மா. அவர் மட்டுமன்றி அப்பு ஆச்சியும் என்மேல் நல்ல பாசமாய்தான் இருக்கினம். --- எனக்குத் தெரியும் பிள்ளை, நீ உன்ர குணத்துக்கு எங்கிருந்தாலும் நல்லா இருப்பாய் என்று சொல்லி சரவணனை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறாள். --- நான் அங்கு போகும்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. நான் அவையளது வீட்டில் வாடகைக்குத்தான் இருந்தனான். பின் அவரைத் திருமணம் செய்துதான் கடவுள் அருளால் எனக்கு இந்தப் பிள்ளைகள் கிடைத்தன. அது சரி அம்மா உங்களுக்கு பேரன் பேத்தி இருக்கினமோ. --- இராசம்மாவுக்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது. அவள் மூக்கை சிந்தி அங்கால வரப்பில் எறிந்து விட்டு, அதை என் பிள்ளை கேட்கிறாய், ஜோதியை கலியாணம் செய்து கொண்டு வந்து இப்ப நாலைந்து வருடமாகி விட்டது. இன்னும் கடவுள் கண் திறக்கேல்ல. நானும் கையடுத்துக் கும்பிடாத தெய்வமில்லை, செய்யாத பரிகாரமுமில்லை, இனி இந்த மாதாவாவது கண் திறக்க வேணும் குரல் கம்முகிறது. --- அழாதையுங்கோ அம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்குத் தெரிந்தவரையில அவருக்கு ஒரு குறையும் இருந்ததில்லை. நான் செய்த இந்தத் திருமணம் கூட நானே எனக்கு செய்து கொண்ட ஒரு சுயபரிசோதனைதான். ஒருவேளை இந்தப் பிள்ளைகள் கிடைக்காதிருந்தாலும்கூட நான் வளர்க்க அவர் மூலமா இரண்டு பிள்ளைகள் இருக்கு என்னும் மனநிறைவுதான். --- நீ சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு. ஆனால் என்ன செய்வது எல்லாம் விதிப்படிதான் நடக்கும். --- நிர்மலா தனக்குள் நினைக்கிறாள் "ஒருவேளை சங்கரும் யாராவது ஓரிரு பிள்ளையுடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் அவருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கக் கூடுமோ என்று. --- அதே எண்ணம் இராசம்மாவுக்கும் அதேநேரத்தில் தோன்றுகிறது. --- பின்பு நிர்மலாவும் சரியம்மா அவர்கள் வரும் நேரமாச்சுது, என்னையும் பிள்ளைகளையும் தேடுவார்கள். நாங்கள் போகிறோம் என்று சொல்லி பிள்ளையை அவளிடம் இருந்து வாங்கும் போது எதிர்பாராமல் இராசம்மாவும் தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி பிள்ளையின் கழுத்தில் போடப்போக நிர்மலா அதைத் தடுத்து வேண்டாம் அம்மா இது சிலநேரம் வீட்டில் பிரச்சினையாகி விடும், ஏதாவது இனிப்போ பலகாரமோ குடுங்கள் போதும் என்று சொல்ல இராசம்மாவும் ம்.....அதுவும் சரிதான் என்றுவிட்டு பைக்குள் இருந்து கொஞ்சம் சொக்கிலேட்டுகள் எடுத்து பிள்ளைகளிடம் கொடுக்கிறாள். நிர்மலாவும் சரியென்று சொல்லி விட்டு பிள்ளைகளுடன் போவதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க கோயில் மணியும் ஒலிக்கிறது. அவர்களின்தலைக்கு மேலால் மாதாவின் கோயில் தெரிகிறது. அவளையறியாமல் கைகள் கோயிலைப் பார்த்து கும்பிடுகின்றன. அதேநேரம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஒரு பெண்ணும் சிறு பையனும் வந்து அங்கிருந்த கடலை விக்கிற பெண்ணின் அருகில் பாதணிகளை கழட்டி வைத்து விட்டு கால் கை முகம் கழுவி பையனுக்கும் முகத்தை நீரால் துடைத்துவிட்டு அர்ச்சனைத் தட்டுடன் உள்ளே செல்கிறார்கள். அங்கு ஒருரூபாய் அர்ச்சனை சீட்டு பத்து வாங்கிக் அர்ச்சனைத் தட்டில் வைத்துக் கொண்டு தண்டாயுதபாணி சந்நிதிக்கு வந்து அய்யரிடம் தருகிறாள். --- ஐயா இன்று இவருக்கு பிறந்தநாள்.ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும். --- அதுக்கென்ன செய்திடலாம். துண்டில பையனின் பெயர் நட்ஷத்திரம் மற்றும் பெற்றோரின் பெயர்களையும் எழுதிவிடுங்கோ. அது சரி ஏனம்மா பிள்ளைக்கு பிறந்தநாள் என்று சொல்கிறாய், முன்னுக்கு மூலவர்,உற்சவர், ஆறுமுகசாமி எல்லாம் கல்யாண கோலத்தில் இருக்க இந்தப் பழனியாண்டியிடம் வந்திருக்கிறாய். --- அது வந்து ஐயா இந்த சாமிதான் தந்தையின் வீடும் வேண்டாம் சொத்து பத்து எதுவும் வேண்டாம் என்று தனியாக வந்து தனக்கென ஒரு இடம் பிடித்து கம்பீரமாய் எழுந்தருளிக் கொண்டு இருக்கிறார் அதுதான். --- அதுவும் சரிதான், அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டுபோய் முருகனுக்கு முன்னால் ஜெய்சங்கர் மூலநட்ஷத்திரம் சங்கர் தாயம்மாவின் ஏகபுத்திரன் என்று பெயர் சொல்லி தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்கிறார். பின் தட்டோடு வந்து அவனின் நெற்றியில் வீபூதி இட்டு சந்தனப் பொட்டும் வைத்து விட்டு தீர்த்தம் குடுக்கும்போது அவன் கையை கவனிக்கிறார் அதில் ஆறு விரல்கள் இருக்கின்றன. நீ ராஜாடா, நன்றாக வாழ்வாய், "ஆண் மூலம் அரசாளும்" என்று சொல்லி விட்டு போகிறார். சுபம்.......! 🌺 யாவும் கற்பனை......! யாழ் இணையம் 25 வது அகவைக்காக அன்புடன் சுவி.....!
  12. இச் சிறிய பறவை இப்போது, நீல வானத்தைப் பார்க்கிறது. முன்போல் அதனால் வானத்தை இன்னும், முழுமையாகச் சொந்தம் கொண்டாட முடியவில்லை. இப்பறவையை இப்போது யாரும் பார்க்க மாட்டார்கள். இப்போது இதனால் அரிதாகவே பறக்க முடிகிறது. அதன் உடைந்த சிறகுகளை சரிசெய்ய, அங்கு யாரும் வரமாட்டார்கள். ஒரு காலத்தின் சுதந்திர பறவை இது! காற்றின் மிதப்பில், வானத்தை உரிமை கொண்டாடியபடி, மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி மிதந்தது. -தியா-
  13. திரும்பும் வரலாறு- பாகம் 6 அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம், நாசிகள் சடுதியாக பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து, போலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம். லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீது, எட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லை. மாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி பெற்றது, ஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்தது. இந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும், உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்! பிரித்தானிய மக்களின் ஓர்மம் மக்கள் மயப்படுத்தப் படாத எந்த இராணுவ முயற்சியும் தோல்வியில் முடியுமென்பது வரலாற்றில் மீள மீள நிரூபிக்கப் பட்ட ஒரு கோட்பாடு. இதை ஆரம்பத்திலேயே வரலாற்றின் மாணவனான சேர்ச்சில் உணர்ந்து கொண்டதன் விளைவே பிரித்தானிய மக்களை இயலுமான வழிகளில் நாசி எதிர்ப்பு யுத்தத்தில் பங்களிக்க நடவடிக்கைகளை எடுத்தது. இந்த மக்கள் பங்களிப்பின் முதல் வடிவமாக, பிரித்தானியர்கள் நாசிகளின் கொடூரத் தாக்குதல்களை ஓர்மத்தோடு தாங்கிக் கொண்டனர். ஏனெனில், போருக்குப் பின் கைப்பற்றப் பட்ட கோயபல்சின் நாட்குறிப்புகளின் படி, நாசி விமானத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் பிரித்தானிய மக்களைத் துன்பத்திற்குள்ளாக்கி, பிரித்தானிய அரசின் மீது வெறுப்பேற்றுவதாகவே இருந்திருக்கிறது. இதனால், சேர்ச்சில் மீது எதிர்க்கட்சிகளே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்து சேர்ச்சிலை அகற்றி விட, நாசிகளுக்கு பிரிட்டனில் செங்கம்பளம் விரிக்கப் படும் என்று கோயபல்சே நம்பியிருக்கிறாரெனத் தெரிகிறது. இந்த நாசிக் கனவில் முதல் மண்ணை பிரித்தானிய மக்களே போட்டனர். ஏராளமான வதந்திகள், பொய் செய்திகள் கோயபல்சின் கட்டுப் பாட்டிலிருந்த ஆங்கில மொழி மூல வானொலிகள் மூலமும், ஐந்தாம் படையினர் மூலமும் பிரித்தானிய மக்களிடையே பரப்பப் பட்டாலும், எவையும் எதிர் பார்த்த மறை விளைவைத் தரவில்லை. இது எப்படிச் சாத்தியமானது? சேர்ச்சிலின் நிர்வாகம், மக்களைத் தம் பக்கம் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பிரான்ஸ் வீழ்வதற்கு முன்னரே உணர்ந்து சில திட்டங்களைச் செயல்படுத்தியது ஒரு காரணம். உதாரணமாக, பிரித்தானிய மக்களிடையே சில ஆயிரம் தொண்டர்களைக் தேர்த்தெடுத்து, அவர்களுக்கு மக்களின் உணர்வுகளைக் கிரமமாகப் பதிவு செய்யும் பணி வழங்கப் பட்டது. Mass observation diary என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டம் மூலம், பிரித்தானிய மக்களின் நாடித் துடிப்பை பிரித்தானியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பு துல்லியமாகக் கணித்து வந்தது. இதனை நவீன அரசுகள் தற்போது நடைமுறைப்படுத்தும் ஒட்டுக் கேட்டு உளவறியும் முயற்சியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த மக்கள் குறிப்புகள் மூலம் தனி நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப் பட்ட நிகழ்வுகள் நடக்கவில்லை. மாறாக, மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக மாறுவதற்கு முன்னரே அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி விடும் நோக்கமே இந்தப் பாரிய முயற்சியின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக, லண்டன் நகர வாசிகள் தினசரி இரவு நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து தப்ப நிலக்கீழ் காப்பிடங்களுக்குச் சென்று விடுவர். ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் அற்றிருந்த இந்தக் காப்பிடங்களை, அரச நிர்வாகம் ஒரு சீரான தரத்தில் வைத்திருக்கும் விதிகளை உருவாக்கி, மக்களின் இரவு வாழ்க்கையை இலகுவாக்கியது. இதன் விளைவுகள் அபாரமாக இருந்தன: லண்டன் வாசிகள் இரவை நிலக்கீழ் காப்பிடங்களில் கழித்து விட்டு, காலையில் வழமை போல தங்கள் தொழில்களைப் பார்க்கச் செல்லும் அளவுக்கு பிரித்தானிய மக்களின் நாளாந்த வாழ்க்கை சாதாரணமாக இருந்தது. இன்னொரு பக்கம், ஏராளமான பிரித்தானிய மக்கள் வெறுமனே பலியாடுகளாக இருக்காமல் தொண்டர்களாக நாசி எதிர்ப்புப் போர் முயற்சியில் இறங்கினர். நாசிகளின் இரவு நேரத் தாக்குதல்களில், நாசிகளுக்கேயுரித்தான குரூர நுட்பங்கள் பல இருந்தன. ஒவ்வொரு தாக்குதல் விமான அணிக்கும், முன்னணியாக இலக்குகளை அடையாளம் காணும் விசேட விமானங்கள் வரும். இந்த விசேட விமானங்கள் இலக்குகள் மீது எரி குண்டுகளை (incendiaries) வீசி, அந்த இலக்குகளை பிரகாசமாக எரியவைக்கும். பின் தொடரும் தாக்குதல் விமானங்கள், எரியும் இலக்குகள் மீது தங்கள் குண்டுகளை வீசும். எனவே, தீயணைப்புத் தொண்டர்கள் எரியும் இலக்குகளை அணைக்கும் வேலை முக்கியமான ஒரு பணியாக இருந்தது. இதனை, உயிராபத்திற்கு மத்தியிலும் சாதாரண தீயணைப்புத் தொண்டர்கள் செய்தனர், உயிரையும் கொடுத்தனர். இன்னொரு குரூர நுட்பமாக, நாசிகள் நேரங்கழித்து வெடிக்கும் குண்டுகளையும் வீசினர். உடனடியாக வெடிக்காத இந்தக் குண்டுகள், மீட்புப் பணியில் ஈடுபடும் மக்களைக் குறி வைத்து வீசப்பட்ட தாமதித்து வெடிக்கும் (delayed fuse) குண்டுகள். இந்தக் குண்டுகளாலும் ஏராளமான பிரித்தானிய போர் முயற்சித் தொண்டர்கள் பலியாகினர். ஆனால், பிரித்தானிய மக்கள் ஒவ்வொரு தாக்குதல் இரவின் பின்னரும் பிரித்தானியாவை நாசிகள் ஆழ அனுமதித்தால் என்ன நிகழும் என்ற எச்சரிக்கையை ஆழமாக உணர்ந்து கொண்டதால், எட்டு மாத நரகத்தினூடாக நடந்த படியே இருந்தனர். இந்த இடத்தில், சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும், போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும். உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில், ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமை, அவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்! பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோ, இத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறது. இது அனுபவங்கள், மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி. அலன் ரூறிங்கும் விஞ்ஞானிகளும் பிரித்தானியாவை நாசிகளின் தாக்குதல்கள் சுருள வைக்காமல் காத்த இரண்டாவது பெரிய சக்தி தொழில்நுட்பம். பிரித்தானியா, வரலாற்று ரீதியாக ஒரு தொழில்நுட்ப முன்னோடி என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்கா எதையும் பிரமாண்டமாக (பல சமயங்களில் காரணமில்லாமல்) செய்யும். ஆனால், பிரித்தானியா பிரமாண்டத்தை விட, செயல் திறனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் - இது பல விடயங்களில் அவதானிக்கக் கூடிய ஒரு இயல்பு. இதே தொழில்நுட்ப மேன்மையை, பிரித்தானியாவின் நாசி எதிர்ப்பு யுத்தத்திலும் பயன்படுத்தினார்கள். இது ஒரு பாரிய குழு முயற்சியாக இருந்தாலும், பின்னணியில் இருந்து பணியாற்றியவர்களில் கணிதவியலாளரான அலன் ரூறிங் (Alan Turing) முக்கியமானவர். அலன் ரூறிங்கின் முக்கியத்துவம் அறிவதற்கு, நாம் ஜேர்மனியின் இரகசிய செய்தித் தொடர்பு இயந்திரமான "எனிக்மா" இயந்திரம் பற்றிச் சிறிது பார்க்க வேண்டும் எனிக்மா எனும் "சிதம்பர சக்கரம்" நாசிகளின் பயன்பாட்டிலிருந்த ஒரு எனிக்மா இயந்திரம். பட உதவி: நன்றியுடன் சைமன் சிங் இணையத்தள விம்ப சேகரிப்பு. இரண்டாம் உலகப் போர் காலத்தில் வானலைகள் வழியாக மோர்ஸ் சமிக்ஞை (Morse code) மூலமே இராணுவத் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்த மோர்ஸ் சமிக்ஞையை யாரும் இடை மறித்துக் கேட்க முடியும். எனவே, சங்கேத மொழியொன்றை உருவாக்கும் முயற்சியாக ஜேர்மனியர்கள் எனிக்மா (Enigma) எனும் இயந்திரத்தை போர் ஆரம்பிக்க முன்னரே தயாரித்தார்கள். சம்பந்தமில்லாத சொற்களை சங்கேதக் குறிகளாகப் பயன்படுத்தும் முறையை மாற்றி, ஆங்கில மொழியின் 26 எழுத்துகளில் ஒவ்வொன்றும் வேறொரு ஆங்கில எழுத்தாக (cypher) இந்த எனிக்மா இயந்திரத்தால் மாற்றப் படும். மாற்றப் பட்ட தகவல் சாதாரண கண்களுக்கு அர்த்தமற்ற எழுத்துக் கூழாகத் (Alphabetic soup) தெரியும். ஆனால், மோர்ஸ் கோட் மூலம் இந்த எழுத்துக் கூழ் அனுப்பப் படும் இடத்தில் இருக்கும் ஒருவரிடம், இந்த எனிக்மா இயந்திரத்தின் எழுத்துக் கூழை, உண்மையான சொற்களாக மாற்றிக் கொள்ளும் குறியீட்டு வழிகாட்டி (code) இருக்கும். இத்தகைய இரகசிய நீக்கம் (decryption) செய்வதற்கும், ஒரு எனிக்மா இயந்திரத்தைப் பயனபடுத்திக் கொள்ளலாம். எனிக்மா இயந்திரத்தின் கட்டுமானத்தைச் சிக்கலாக்குவதன் மூலம், இதன் மூலம் உருவாக்கப் படும் செய்திகளை எனிக்மாவின் உதவியின்றி ஒருவர் இரகசிய நீக்கம் செய்து புரிந்து கொள்ளும் வாய்ப்பை “பில்லியனில் ஒன்று” என்ற அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், எனிக்மாவுக்கும் ஆப்பு வைக்கும் சில குறைபாடுகள் இருந்தன: ஒரு எனிக்மா இயந்திரத்தைக் கைப்பற்றினாலோ அல்லது எனிக்மா குறியீட்டுப் புத்தகத்தைக் கைப்பற்றினாலோ இதன் இரகசிய நீக்கம் சாத்தியமாகி விடும். பிரித்தானியா இந்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னரே, போலந்து விஞ்ஞானிகள் எனிக்மாவை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்தார்கள். இரகசியமாக போலந்து இராணுவக் கட்டமைப்பினருக்குக் கிடைத்த ஒரு எனிக்மா இயந்திரத்தை ஆராய்ந்து, தாங்களே ஒரு எனிக்மா இயந்திரத்தை போலந்து இராணுவம் வடிவமைத்தது. சில கணிதவியலாளர்களைப் பணியில் அமர்த்தி, சில ஜேர்மன் செய்திப் பரிமாற்றங்களையும் ஆராய்ந்து எனிக்மா செய்திகளை இரகசிய நீக்கம் செய்வதில் ஒரளவு வெற்றியும் கண்டார்கள். ஆனால், நாசிகள் தங்கள் மிக அடிப்படையான எனிக்மா இயந்திரத்தை மேலும் சிக்கலானதாக மாற்றி, தங்களது இரகசிய குறியீட்டுப் புத்தகத்தையும் தினசரி மாற்ற ஆரம்பித்த போது, போலந்தின் முயற்சிகள் முன்னேற முடியாமல் முடங்கின. ப்ளெட்ச்லி பார்க்- Bletchley Park ப்ளெட்ச்லி பார்க் அருங்காட்சியகத்தில் அலன் ரூறிங்கின் சிலை. 2011, யூலை 15, அரசி இரண்டாம் எலிசபெத்தினால் ப்ளெட்ச்லி பார்க் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப் பட்டது. பட உதவி: நன்றியுடன், பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பகம். போலந்து, போர் ஆரம்பிப்பதற்கு சில வாரங்கள் முன்னர் தனது எனிக்மா இயந்திரம் மீதான முயற்சிகளை பிரிட்டனிடமும், பிரான்சிடமும் பகிர்ந்து கொண்டது. போலந்து வீழந்த பின்னர், போலந்தில் இருந்த எனிக்மா இயந்திரங்களில் ஒன்று பிரிட்டனின் உளவுத் துறையிடம் வந்து சேர்ந்தது. இது மட்டுமல்லாமல், பின்னர் நோர்வேயில் குறுகிய காலம் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுப், பின்வாங்கிய போதும் நாசிகளிடமிருந்து எனிக்மா இயந்திரமும், குறியீட்டுப் புத்தகங்களும் கைப்பற்றப் பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஆரம்ப முதலீட்டை வைத்துக் கொண்டு எனிக்மாவின் இரகசியங்களை உடைக்கும் மிக ஆரம்ப காலக் கணணியை வடிவமைத்தவர் தான் அலன் ரூறிங். பற்சக்கரங்களும், மின் விளக்குகளும் கொண்ட இந்தப் பாரிய இயந்திரத்தை இன்று ப்ளெட்ச்லி பார்க் எனப் படும் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணலாம். சிக்கலான எனிக்மா இயந்திரத்தின் தகவல்களை, கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி இரகசியம் நீக்கும் வேலையை இந்த ஆரம்ப காலக் கணனி செய்ததால், பல லட்சம் உயிர்கள் காக்கப் பட்டன. பிரிட்டன் உட்பட, போரில் நாசிகளை எதிர்த்த நேச அணியின் வெற்றியும் இதனால் உறுதி செய்யப் பட்டது. ப்ளெட்ச்லி பார்க் என்ற மாளிகையின், நிலவறையில் நடந்த இந்த முயற்சிகள் அதி உயர் இரகசியமாகப் பேணப்பட்டதால், நாசிகளுக்கு போர் முடியும் வரை தங்கள் தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப் படுவது தெரிய வரவில்லை. அதே நேரம், இந்த அரிய பணியைச் செய்த அலன் ரூறிங்கின் பெயரும் அப்போது வெளியே தெரியவரவில்லை. இந்தப் பிரபலமின்மையின் ஒரு காரணமாக, ஓரினச் சேர்க்கையாளராக இருந்த அலன் ரூறிங்கை பிரித்தானிய அரசு ஆண்மை நீக்க மருந்துகள் மூலம் குணமாக்க முயன்றதும், அந்த மருந்தின் பக்க விளவினால் அவர் தற்கொலை செய்து கொண்டதும், பெரிதாகப் பேசப் படவில்லை. ஓரினச் சேர்க்கையாளராக நீதிமன்றினால் தண்டிக்கப் பட்ட அலன் ரூறிங்கை, அவாது மரணத்திற்குப் பின்னர் மிக அண்மையில் பகிரங்கமாக அந்தக் குற்றச் சாட்டிலிருந்து விடுவித்தது பிரித்தானிய அரசு. - தொடரும்
  14. பிரபாகரனின் இலட்சியம் பிரபாகரனின் இலட்சியம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கூறப்பட்டதுபோல இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவர்களுக்கான தனிநாடான ஈழத்தை அடையவேண்டும் என்பதாகவே இருந்தது.1977 இல் தமிழ் மக்கள் கூட்டணிக்கு வழங்கிய ஆணையின்படி தமிழ் ஈழத்திற்கான அரசியல் யாப்பினை வரையும்படியும், அதன் பிரகாரம் சமாதான வழியிலோ அல்லது போராட்ட வழிமுறைகளைப் பாவித்தோ அதனை அடையும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் ஆணையினை கூட்டணி உதாசீனம் செய்து தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியிலிருந்தும் விலகியிருந்தார்கள். அத்துடன், சமாதான வழிமுறைகளில் தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வது இயலாத காரியம் என்பதனையும் கூட்டணியினர் உணர்ந்திருந்தார்கள். மேலும், தந்தை செல்வா அதுவரை காலமும் பரீட்சித்துப் பார்த்துவந்த விட்டுக்கொடுப்புகள், ஒத்துப்போதல்கள், வன்முறையற்ற அகிம்சை ரீதியிலான நேரடியான மக்கள் போராட்டங்கள் என்று அனைத்துமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை தமிழ் மக்களுக்கு நன்கு உணர்த்தியே இருந்தது. அதனாலேயே, தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வு ஆயுத ரீதியிலான மக்கள் போராட்டம் மட்டும்தான் என்பதை பிரபாகரன் நன்றாக உணர்ந்திருந்தார். தமிழ் மக்கள் எதிர்கொண்ட சொல்லொணா துன்பங்களும் துயர்களும் பிரபாகரனை ஆயுதரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைக்கு உந்தித் தள்ளியிருந்தன. அதனாலேயே நகர்ப்புற கரந்தடிப்படையான புலிகளை அவர் உருவாக்கினார். அந்த கரந்தடிப்படையினை உருவாக்குவதில் அவர் பட்ட துன்பங்கள், அவர் பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட தோல்விகள், தனது கரந்தடிப்படையினை ஒரு மரபு வழி ராணுவமாக மாற்றியமைக்க அவர் செய்த வேலைத்திட்டங்கள், தியாகத்தின் உயரிய தற்கொலைப்படையினை உருவாக்கியமை, மிகப் பலமான கடற்படையொன்றினை உருவாக்கியமை, தமிழருக்கான காவல்த்துறையினை நிறுவியமை, தமிழருக்கான நீதிச்சேவைகள், மிகவும் திறன்வாய்ந்த நிர்வாகக் கட்டமைப்பு என்பவை அனைத்துமே ஒரு கரந்தடிப்படையொன்றினால் செய்யக் கூடியவை என்பதை இந்த உலகில் முன்னர் எவருமே கண்டிராதது. நான்காவது வாழ்க்கைச் சரித்திரத்தை நான் பிரபாகரன் தொடர்பாக எழுத ஆரம்பித்தபோது, பல இடர்களைச் சந்திக்க நேரிடும் என்று நான் எதிர்பார்த்தே இருந்தேன். இதற்கு முன்னர் நான் எழுதிய மூன்று வாழ்க்கைச் சரித்திரங்களும் ஒப்பீட்டளவில் இலகுவானவை. 1957 இல் இருந்தே தொண்டைமான், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் நான் பழகியே வந்திருக்கிறேன். அவர்கள் இறக்கும்வரை அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளை நான் கொண்டிருந்தேன். இதனாலேயே அவர்களின் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளை பதிவுசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களின் வாழ்வினைப் பாதித்த நிகழ்வுகள், காலங்கள் குறித்து பலமுறை அவர்களுடன் சந்திப்புக்களை நடத்திக் கலந்தாலோசித்திருக்கிறேன். ஆனால், நான் ஒருபோதுமே பிரபாகரனையோ அல்லது அவரது மூத்த உதவியாளர்களையோ சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அரச பத்திரிக்கை நிறுவனமான லேக் ஹவுஸில் பணிபுரிந்ததனால், ராணுவம் வெளியிடும் செய்திகளை அப்படியே வெளியிடுவது மாத்திரமே எனது தொழிலாக இருந்தது. இலங்கையில் மிகவும் தேடப்பட்ட மனிதரான பிரபாகரன் பற்றி நான் எழுதுவதென்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டே இருந்தது. ஆனாலும், பிரபாகரன் பற்றி எழுதும் வேறு எந்த எழுதாளருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் ஒன்று எனக்கு இருந்தது. நான் மிதவாதத் தமிழ்த் தல்கைவர்களுடம் மிக நெருக்கமாகவே பழகிவந்தேன். அதுமட்டுமல்லாமல் இனப்பிரச்சினையில் அதிகளவு பங்களிப்பைச் செலுத்திய சிங்களத் தலைவர்களான சிரில் மத்தியூ, லலித் அத்துதல்முதலி, காமினி திசாநாயக்க, ரஞ்சன் விஜேரத்ன, ரணசிங்க பிரேமதாசா, பேராசிரியல் ஜி எல் பீரிஸ் மற்றும் பலருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். மேலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை நெறிப்படுத்திய இந்தியர்களான ஜி கே சத்வால், ஜே என் டிக்ஷீட், எல் மெஹோத்ரா போன்றவர்களுடன் எனக்கு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 1996 இல் அமிர்தலிங்கம் பற்றிய எனது புத்தகத்தை வெளியிட்ட சில காலத்திலேயே பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு வந்தது. அமிர்தலிங்கம் தொடர்பான புத்தக் வெளியீட்டிற்கு நீலன் திருச்செல்வத்தை நான் அழைத்திருந்தேன். அச்சந்திப்பில்த்தான் அவர் நான் பிரபாகரன் பற்றியும் எழுதவேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் அப்படி என்னைக் கேட்டது என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது. "எங்கள் போராட்டத்தினை அவர் ஒரு முடிவிற்குக் கொண்டுவரப்போகிறார்" என்று நீலன் அன்று எதிர்வுகூறினார். கின்ஸி டெரேஸில் அமைந்திருந்த நீலனின் அலுவலகத்திலிருந்து குயீன் வீதியில் அமைந்திருந்த குமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்குச் சென்றேன். நீலனின் வேண்டுகோளை குமாரும் ஏற்றுக்கொண்டதுடன், பிரபாகரன் தொடர்பான எனது புத்தகத்திற்கு தன்னாலான் உதவிகளைச் செய்யவிரும்புவதாகவும் அவர் கூறினார். இது ஒரு மிகவும் சிக்கலான காரியம் என்பதை நான் உணர்வேன். பத்திரிக்கையாளனாக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, பக்கச்சார்பில்லாமல், நடுநிலை தவறாது, ஒருவிடயத்தைக் கூறவேண்டும் என்றே பழக்கப்பட்டிருக்கிறேன். நான் எழுதும் விபரங்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். அதனால, அவற்றில் தவறுகள் இருப்பின், அதற்கான முழுப் பொறுப்பினையும் நானே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதும் எனக்கு நன்கு தெரியும். இவ்விடயங்கள் குறித்து எவரும் சுட்டிக்காட்டும் தறுவாயில் அவற்றை தவறாது திருத்திக்கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். எமது காலத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த மேதையான பிரபாகரனின் வாழ்க்கைச் சரித்திரம் இதனால் மேலும் மெருகூட்டப்படும் என்பதில் எனக்கு துளியும் ஐய்யமில்லை.
  15. தமிழ் மக்களால் தூக்கியெறியப்பட்ட அமிரின் மாவட்ட அபிவிருத்திச் சபை டெயிலி நியுஸ் எனும் ஆங்கிலப் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த அமிர்தலிங்கம், "தமிழ் மக்கள், கூட்டணி மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வேறொரு தலைமை மீது ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்" என்று வெளிப்படையாகவே கூறினார். "மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாது என்கிற புலிகளின் பரப்புரையினை எம்மால் சமாளிக்க முடியாத நிலைக்கு நாம் இறங்கிவிட்டிருக்கிறோம். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்கிற வெற்றுக் கோதுகளை வைத்துக்கொண்டு நாம் மக்களிடம் போக முடியாது". என்று அவர் மேலும் கூறினார். அமிர்தலிங்கமும், கூட்டணியும் தாம் செய்யாப்போவதாக உறுதியளித்த எதனையும் செய்யப்போவதில்லை என்று இளைஞர்கள் தமிழ்மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், கூட்டணியினரை ஜே ஆர் தொடர்ந்தும் ஏமாற்றிவருவதாகவும், கூட்டணியினர் இதனைத் தெரிந்திருந்தும் அதற்குத் துணைபோவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். மேலும், கூட்டணியின் தலைவர்கள் தமது தொகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று என்றும் கடுமையாகக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தனர். அமிர்தலிங்கத்தின் யாழ்ப்பாண விஜயங்களின்போது, நகரின் பலவிடங்களிலும் "மக்கள் ஆணைக்கு என்ன நடந்தது? தமிழ் ஈழத்திற்கான தேசிய பாராளுமன்றக் கூட்டம் எப்போது?" போன்ற கேள்விகளுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதே காலத்தில் விரக்தியும், கோபமும் கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே பொலீஸார்மீதும், ராணுவத்தினர்மீதும் சிறி சிறு தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். தமிழ் மக்களுக்கும் அமிர் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே வளர்ந்துவரும் விரிசலை மேலும் பெரிதாக்க எண்ணிய ஜே ஆர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தையோ, சட்டமியற்றும் அதிகாரம், வரியை அறவிடும் அதிகாரம் போன்ற எவற்றையுமே ஒருபோதும் வழங்கமாட்டேன் என்று கூறிவிட்டார். கூட்டணியின் தமிழ் மக்கள் மீதான பிடியைப் பலவீனமாக்குவதனூடாக தமிழ் மக்களின் தனிநாட்டிற்கான கோரிக்கையினை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று ஜே ஆரும் அவரின் ஆலோசகர்களும் எண்ணியிருந்தனர். இதற்காக சிறில் மத்தியூ எனும் பேர்பெற்ற சிங்கள இனவாதியின் தலைமையில் பிரச்சாரக் குழு ஒன்றினை இயக்கிவிட்ட ஜே ஆர், தமிழ் ஆயுதக் குழுக்களின் பின்னால் அமிர்தலிங்கமே இருப்பதாக கடுமையான பிரச்சாரத்தினை சிங்களவர்களிடையே செய்யத் தொடங்கினார். எதிர்கட்சித் தலைவராக இருந்த அமிருக்கு எதிராக பாராளுமன்றத்தில் அரச பாராளுமன்ற உறுப்பினர்களால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டதுடன் , சிங்கள மன்னர் காலத்தில் துரோகிகளுக்கு வழங்கப்படும் தண்டனையான ஒருவரை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொல்வதுபோல், அமிரும் கொல்லப்படவேண்டும் என்று கோஷமிட்டனர். தமிழர்களைப் பலவீனப்படுத்தும் முகமாக ஜே ஆர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது குண்டர்களைப் பாவித்து தமிழர்கள் மீது இரு முறை தாக்குதல்களை மேற்கொண்டார். 1977 இல் இலங்கைத் தமிழர்கள் மீதும், 1979 இல் மலையகத் தமிழர்கள் மீதும் இந்த வன்முறைகள் ஜே ஆரினால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதே வழிமுறையினைப் பின்பற்றி, அரச ராணுவம் மற்றும் பொலீஸாரைப் பாவித்து 1983 இல் தமிழ் மக்கள் மிகவும் கொடூரமான இன்னுமொரு இரத்தக்களரியை ஜே ஆரும் அவரது ஆலோசகர்களும் நடத்தி முடித்தனர். பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு பற்றிய அத்தியாயம், மிதவாதியின் கொலை எனும் பதிவிலிருந்தே ஆரம்பிக்கிறது.
  16. மக்கள் ஆணையும் அமிர்தலிங்கத்தின் ஏமாற்றலும் மிதவாதியின் கொலை என்று நான் எழுதிய புத்தகத்தில் மிதவாதிகள் எவ்வாறு தமது தவறுகளாலும், சிங்கள இனவாதிகளின் அரசியல் சூழ்ச்சிகளாலும் ஓரங்கட்டப்பட்டார்கள் என்பது குறித்து எழுதியிருக்கிறேன். 1977 சித்திரை 5 ஆம் திகயன்று தந்தை செல்வா மரணைத்ததையடுத்து அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். அவரது முதலாவது இலக்கு 1977 ஆம் ஆண்டின் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதாக இருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மக்கள் ஆணையினை தமது தேர்தல் விஞ்ஞாபனமூடாக முன்வைத்து மக்களிடம் கோருவதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்மானமாக இருந்தது. இதன்மூலம் தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக புதிய அரசியல் நகலை வரைந்துகொள்வதும் அவர்களது நோக்கமாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறியிருந்தது, "இத்தேர்தல் மூலம் தெரிவாகும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்படுவர். இவர்களூடாக தமிழீழத்திற்கான அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதோடு அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை முறை மூலமாகவோ அல்லது போராட்டங்கள் மூலமாகவோ நாம் முயற்சிப்போம்". தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுக்கொண்டவாறே தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமது ஆணையை வழங்கினர். கூட்டணி நிறுத்திய வேட்பாளர்களில் 17 பேர் அதிகூடிய வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர். காங்கேசந்துறை தொகுதியில் போட்டியிட்ட அமிர்தலிங்கம் 31,155 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அதே தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் வெறும் 5322 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். தனது தேர்தல் வெற்றி உரையில் பேசிய அமிர்தலிங்கம் தமது கட்சி கேட்ட ஆணையை மக்கள் வழங்கி விட்டார்கள் என்று கூறியதோடு, பின்வருவனவற்றைச் செய்யப்போவதாக சூளுரைத்தார், "இனிமேல் நாம் பின்நோக்கிப் பார்க்கப்போவதில்லை. எமது இலட்சியமான தமிழீழத்தை அடையும் நோக்கில் நாம் முன்னோக்கி அணிவகுத்துச் செல்வோம்". ஆனால், தேதல் முடிவடைந்ததன் பின்னர், தான் கூறிய வாக்கிலிருந்து அமிர்தலிங்கம் பின்வாங்கினார். தமிழ் ஈழத்திற்கான பாராளுமன்றத்தை அமைப்பதாகவும், அதற்கான அரசியல் யாப்பை வரைவதாகவும் கூறிக்கொண்டு தேர்தலில் மக்களின் ஆணையைக் கோரிய கூட்டணி, அதனைத் தேர்தலின் பின்னர் முற்றாகக் கைவிட்டிருந்தது. அதற்குப் பதிலாக வவுனியாவில் கூடிய கூட்டணியினர், அரசால் தமக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதென்றும், பாராளுமன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நடந்துகொள்ளப்போவதாகவும் முடிவெடுத்தனர். 1977 , ஆவணி 4 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடியபோது கூட்டணியின் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். பிரேமதாசவினால் சபாநாயகராக முன்மொழியப்பட்ட ஆனந்த தீச டி அல்விஸின் பெயரினை அமிர்தலிங்கமே வழிமொழிந்து ஏற்றுக்கொண்டார். புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார், "இந்த பாராளுமன்றத்தின் அனைத்துச் சட்ட திட்டங்களையும் கூட்டணி ஏற்றுக்கொள்வதோடு, பிரதம மந்திரியுடன் ஒரும்னித்துச் செயற்பட விரும்புகிறோம்" பாராளுமன்ற பதவிகளை ஏற்றுக்கொள்வதில்லை, பாராளுமன்றத்திற்குச் சமூகமளிக்கப்போவதில்லை என்று தாம் நடத்திவந்த 20 வருட கால எதிர்ப்பினைக் கைவிட்ட அமிர்தலிங்கமும் கூட்டணியும், பாராளுமன்றம் புதிதாகத் திறந்துவைக்கப்படும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாமல், அரசுடன் சிநேகமான உறவினை உருவாக்கிக்கொள்வதற்காக பொறுமையுடன் செயற்படும் முடிவினையும் அது எடுத்துக்கொண்டது. இது தமிழ் இளைஞர்களுக்கும் கூட்டணிக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தியது. கூட்டணியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்திருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களினால் பெரிதும் விரும்பி மதிக்கப்பட்டு, "தளபதி" என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் அவர்களால் வெறுக்கப்படும் நிலைக்கு இறங்கினார். தமிழ் இளைஞர்களுக்கும், அமிர்தலிங்கத்திற்கும் இடையில் உருவாகி வரும் பிளவினை நன்கு உணர்ந்துகொணட் ஜே ஆர் ஜெயவர்த்தன, அதனை மேலும் ஆளமாக்கும் கைங்கரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். தமிழ் இளைஞர்களை மேலும் வெறுப்பேற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஜே ஆர், அமிர்தலிங்கத்திற்கு உத்தியோக பூர்வ வாசஸ்த்தலம் ஒன்றினையும், சொகுசு வாகனமொன்றையும் வழங்கினார். அத்துடன் அவருக்குத் தேவையான பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணிக்கு அமர்த்தினார். அமிர் மட்டுமல்லாமல் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் அரசிடம் கேட்டுக்கொண்ட சொந்த வேண்டுகோள்கள் உட்பட அனைத்துச் சலுகைகளும் கிரமமாக அவர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்டது. அரசுடன் புதிதாக தாம் ஏற்படுத்திக்கொண்ட ஸ்நேகத்தை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமிர்தலிங்கம் இறங்கினார். பாராளுமன்ற குழுக்களின் கூட்டங்களில் தாமாகவே பங்கேற்கத் தொடங்கிய கூட்டணியினர், மாதாந்த அமைச்சரவைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட சபைகளுக்கான தேர்தல்களில் பங்கேற்கலாம் என்று எண்ணிய கூட்டணியினர், ஆனி 1981 இல் இடம்பெற்ற மாவட்டசபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த 10 இடங்களையும் வென்றனர். இத்தேர்தல்களில் கூட்டணி 263,369 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 23,302 வாக்குகளையும், தமிழ் காங்கிரஸ் 21,682 வாக்குகளையும் பெற்றன. ஆனால், தமிழ் மக்களிடையே கூட்டணியின் ஆதரவு மிகக்கடுமையான வீழ்ச்சியினை அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் சந்தித்தது. 1983 வைகாசி 18 இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் அதுகடுமையான பின்னடைவினைச் சந்தித்தது. 1983 இல் இடம்பெற்ற தேர்தல்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முற்றாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள், அத்தேர்தல்களைப் பகிஷ்கரித்திருந்ததுடன் கூட்டணியினை முழுமையாகவும் புறக்கணித்திருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 86 வீதமான வாக்காளர்கள் வாக்களிப்பினை புறக்கணித்திருந்தனர். அதேவேளை பருத்தித்துறையில் 99 வீதமானவர்களை தேர்தலைப் புறக்கணித்திருக்க, பிரபாகரனின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையில் 98 வீதமான வாக்களர்கள் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கூட, புலிகளின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சிச் சபைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வுகளை புறக்கணித்திருந்தனர்.
  17. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் ஐக்கிய முன்னணி தனது முதலாவது வருடாந்த மாநாட்டினை வட்டுக்கோட்டை பிரதேசத்திலுள்ள பண்ணாகத்தில் வைகாசி 14, 1976 அன்று நடத்தியது. இளைஞர்கள், குறிப்பாக ரகசிய ஆயுதக் குழுக்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர்களில் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்கள். தமிழருக்கான தனியான நாட்டிற்கான பிரகடனத்தையும், தனிநாட்டிற்கான அரசியல் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கில் தமிழர் ஐக்கிய முன்னணியினை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் விடுதலைக்கான அமைப்பாக மாற்றும் நிகழ்வினையும் உறுதிப்படுத்தவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். இத்தீர்மானம் தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்டதோடு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் சரத்து பின்வருமாறு, தமிழர் ஐக்கிய முன்னணியின் முதலாவது வருடாந்த மாநாடு வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் வைகாசி 14, 1976 இல் கூடி பிரகடனம் செய்வது என்னவெனில், இலங்கைத் தமிழர்கள் மிகப்பெருமை வாய்ந்த மொழியினையும், மதங்களையும், கலாசாரத் தொன்மையினையும் கொண்டிருப்பதுடன், அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறும்வரை பல நூற்றாண்டுகாலமாக தமக்கே உரித்தான சுதந்திரமான இறையாண்மையுள்ள தாயகத்தையும் கொண்டிருந்தார்கள். அத்துடன், தாம் சுதந்திரமாகவும், சிங்களவர்களின் அதிகாரத்தின் கீழ் அல்லாமலும், தமது சொந்தத் தாயகத்தில் வாழுதலுக்கான பூரண உரிமையினையும் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்தத் தீர்மானத்தின் மூலம் தமிழர்கள் இந்த உலகிற்கு கூறுவது என்னவெனில், 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் தமிழர்கள் அடிமைகளாக்கப்பட்டு, சிங்களவர்களால் ஆளப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமது அரச அதிகாரத்தின் மூலம் தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை சிங்களவர்கள் கபளீகரம் செய்துவருவதோடு, தமிழரின் கலாசாரம், பொருளாதாரம், பிரஜாவுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் திட்டமிட்ட ரீதியில் அழித்து வருவதன் மூலம், தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள். ஆகவே இப்பிரகடனம் கூறுவது யாதெனில், இழக்கப்பட்ட தமிழரின் உரிமைகள் மீள பெறப்படுவதற்கும், சுதந்திரமான, இறையாண்மையுள்ள, மதச் சார்பற்ற சோசலிச தேசமான தமிழ் ஈழத்தை சுய நிர்ணய அடிப்படையில் உருவாக்குவதே இந்த நாட்டில் தமிழரின் இருப்பினைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஒரே வழியென்பதாகும்.
  18. தந்தை செல்வாவின் வெற்றியும் "தம்பியின்" வெளிப்படுத்தலும் 1972 ஆம் ஆண்டில் சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட அரசிய சட்டத்திற்கு எதிராகவும், தரப்படுத்தல்களுக்கெதிராகவும் தமிழ் மாணவர் பேரவை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்ற கூட்டணியான சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி என்பன இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தன. சமஷ்ட்டிக் கட்சியும் தனது பங்கிற்கு ஒரு அரசியலமைப்பு நகலை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு நகலின்படி இலங்கை ஒரு சமஷ்ட்டிக் குடியரசாக இருப்பதுடன் ஐந்து சுய அதிகாரம் பெற்ற பிரதேசங்களையும் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஐந்து சுயாட்சி பிரதேசங்களாவன, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஊவா, சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள், வடமாகாணமும், கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களும், இறுதியாக அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்குப் பிரதேசமும் ஆகும். சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த யோசனைகளை பாராளுமன்றம் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பின்வரும் அரசியலமைப்பினை அது முன்வைத்தது, "சிறிலங்கா குடியரசு ஒரு ஒற்றையாட்சி நாடாகும். சிங்களமே இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகும். பெளத்த மதம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களிலும் மேலானதாக போற்றிக் காக்கப்படும்" என்று கூறியது. இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள், உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு விலகுமாறு சமஷ்ட்டிக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவே, அக்கட்சியும் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று விலகிக் கொண்டது. இப்புதிய அரசியலமைப்புக் குறித்துப் பேசிய தந்தை செல்வா, "இது ஒரு அடிமைச் சாசனம்" என்று குறிப்பிட்டிருந்தார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, தமிழ் இளைஞர்களை தமிழர்களுக்கான தனிநாடு ஒன்றிற்கான போராட்டம் நோக்கித் தள்ளிவிட்டிருந்தது. புதிய அரசியலமைப்பு அமுல்ப்படுத்தப்படுவதற்கு சரியாக 8 நாட்களுக்கு முன்பு, வைகாசி 14, 1972 இல் தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கின. இதில் சமஷ்ட்டிக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாட்டுக் கட்சி மற்றும் சில தொழிற்சங்கங்கள் என்பனவும் பங்குகொண்டிருந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணி வைகாசி 22, 1972 இல் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது. இளைஞர்கள் இப்போராட்டத்தை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்றனர். கிராமங்கள் தோறும் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டதோடு சிங்கள பெளத்தத்தை பிரகடனப்படுத்தும் இலங்கைத் தேசியக்கொடியும், அரசியலமைப்பின் மாதிரிகளும் இளைஞர்களால் தமது எதிர்ப்பினைக் காட்டும் முகமாக எரிக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பிற்குத் தமிழர்களிடத்திலிருந்த எதிர்ப்பினை அரசு புரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக தந்தை செல்வா தனது பாராளுமன்ற பதவியினை ராஜினாமாச் செய்திருந்தார். செல்வாவின் தொகுதிக்கான இடைத்தேர்தலை 1975 வரை அரசு பின்போட்டுக்கொண்டே வந்தது. தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டத்தை அடக்க சிங்களத் தலைமை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. அதன்படி இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னால் நின்று செயற்பட்ட 70 இளைஞர்களை அது கைதுசெய்தது. இது அரச காவல்த்துறையுடனும், ராணுவத்துடனும் தமிழ் இளைஞர்கள் நேரடியாக மோதும் நிலையினை உருவாக்கியது. தரப்படுத்தலினால் மிகுந்த விரக்திக்கும், கோபத்திற்கும் உட்பட்டிருந்த இளைஞர்கள் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறைக்கெதிராகத் தீவிரமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அத்துடன், அகிம்சை ரீதியிலான போராட்டமும், அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படும் வழிமுறையும் முற்றாகத் தோற்றுவிட்டதனையும் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கத் தலைப்பட்டனர். வங்கதேசத்தில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியையும், தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆயுதக் கிளர்ச்சியையும் முன்னுதாரணமாகக் காட்டி, ஆயுதப் போராட்டம் ஒன்றினாலன்றி தமிழருக்கான சுதந்திரம் சாத்தியமில்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ரகசிய தமிழ் ஆயுத அமைப்புக்கள் உருப்பெறத் தொடங்கின. அவற்றுள் ஒன்றே பிரபாகரனின் புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பாகும். 1974 ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாடு மீது சிங்கள அரசு நடத்திய மிலேச்சத்தனமான படுகொலைகள் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரம் கொள்ள வைத்திருந்தது. சிவகுமாரன் அடங்கலாக பெருமளவு இளைஞர்கள் இத்தாக்குதலை அரசு திட்டமிட்டே நடத்தியதாக வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து வந்தனர். இதன் ஒரு கட்டமாக பெருமளவு ஆர்ப்பாட்டங்களை இளைஞர்கள் ஒழுங்குசெய்தனர். தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு பழிவாங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி சிவகுமாரன் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது. அவரின் இலக்குகளாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர், யாழ்ப்பாண மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர சந்திரசேகர ஆகியோரே இருந்தனர். ஆனால், 1974, ஆனி 4 ஆம் திகதி கோப்பாய் மக்கள் வங்கிக் கொள்ளையில் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்ப வழியின்றி சிவகுமாரன் தனது சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமாக வேண்டி ஏற்பட்டது. அவரது மரணம் வடபகுதி மக்களிடையே ஆற்றொணாத் துயரத்தையும், ஆத்திரத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. 1975, மாசி 6 ஆம் திகதி காங்கேசன் துறையில் நடந்த இடைத்தேர்தலில் தந்தை செல்வா அமோகமான வெற்றியடைந்ததையடுத்து, தனிநாட்டிற்கான கோரிக்கையும், விருப்பும் தமிழ் மக்களிடையே வெகுவாக அதிகரித்திருந்தது. தனது தேர்தல் வெற்றியினையடுத்து மக்களிடம் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், " சரித்திர கால்கம்தொட்டு இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி இறையாண்மையுள்ள இன மக்களாக வாழ்ந்தே வந்தனர். அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கும்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. கடந்த 25 வருடங்களாக இந்த நாட்டில் சிங்களவருக்கு நிகரான அரசியல் உரிமைகளை தமிழர்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கிலேயே போராடி வருகிறோம். ஆனால், துரதிஷ்ட்டவசமாக ஆட்சிக்கு வரும் அனைத்துச் சிங்களத் தலைவர்களும் தமது பலத்தினைப் பாவித்து தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றனர். எமது அடிப்படை உரிமைகளைத் தரமறுப்பதுடன், எமது உணர்வுகளையும் நசுக்கி வருகின்றனர். எனக்கு நீங்கள் இன்று தந்திருக்கும் மகத்தான வெற்றி கூறும் செய்தி ஒன்றுதான், அதாவது, தமிழ்மக்களுக்கு சரித்திரகாலம் தொட்டு இருந்துவரும் இறையாண்மையினைப் பாவித்து, எமக்கான தனியான நாடான தமிழீழத்தை உருவாக்கி, நம்மை மீண்டும் விடுதலைபெற்ற இனமாக உருவாக்க வேண்டும் என்பதுதான். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் சார்பாக நான் உங்களுக்குக் கூறும் உறுதிமொழி என்னவெனில், உங்களின் ஆணையான சுதந்திரத் தமிழீழத் தனிநாட்டினை உருவாக்கியே தீருவோம் என்பதுதான்". கூடியிருந்த இளைஞர் வெற்றிமுழக்கம் செய்ததோடு, தமிழீழம் மட்டுமே எமக்கு வேண்டும், வேறெதுவும் வேண்டாம்" என்று வானதிரக் கோஷமிட்டனர். ஒருசிலர் தமது சுட்டுவிரலை ஊசிகளால் துளைத்து, வெளிக்கசிந்த குருதியெடுத்து தந்தை செல்வாவின் நெற்றியில் இரத்தத் திலகமிட்டு, தாம் தமது இலட்சியத்தை அடைய எத்தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினர். இந்த ஒன்றுபட்ட விடுதலை உணர்வே 1976 இல் செய்யப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோட்டமாக அமைந்தது. 1976, வைகாசி 5 ஆம் நாளன்று, வட்டுக்கோட்டைத் தீர்மான நடைபெறுவதற்கு சரியாக 9 நாட்களுக்கு முன்னர், 21 வயதே நிரம்பிய, எல்லாராலும் தம்பி என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட பிரபாகரன் தனது ஆயுத அமைப்பான புதிய தமிழ்ப் புலிகளுக்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று பெயர் சூட்டி வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிதர்சனமாவதற்கான அனைத்தையும் செய்வேன் என்று சபதமெடுத்தார்.
  19. தமிழர்கள் பொறுமையிழந்த காலம் 1961 இல் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் சிங்கள இனங்களிடையிலான உறவில் ஒரு பாரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழர்கள் அரசியல் ஞானம் பெற்றவர்கள் என்பதும், அரசியல் ரீதியாக தீவிரமாகச் செயற்படக் கூடியவர்கள் என்பதனையும் இந்நிகழ்வு சுட்டிக் காட்டியது. அதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் தீவிரமான அரசியலில் ஈடுபட இந்த நிகழ்வு உந்தித் தள்ளியிருந்தது. அன்றிலிருந்து இளைஞர்கள் அரசியல் ரீதியான கேள்விகளைத் தமது தலைவர்களிடம் முன்வைக்கத் தொடங்கியதோடு, தமது கோரிக்கைகளுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும் தலைப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றுவிடலாம் என்கிற தந்தை செல்வாவின் முயற்சி தோற்றுப்போனதையடுத்து, தமது உரிமைகளுக்காக தாமே போராடவேண்டும் என்கிற மனநிலைக்கு இளைஞர்கள் அபோது வந்திருந்தனர். 1970 இல் டட்லியின் அரசைத் தொடர்ந்து சிறிமாவின் அரசு ஆட்சிக்கு ஏறிய தருணமே தமிழர்கள் தமது போராட்ட வழிமுறையினை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையினை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழர்கள் வெகுவாகக் காயப்பட்டுப் போன உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறிமாவின் அரசு வேண்டுமென்றே தமிழர்களைக் மேலும் மேலும் காயப்படுத்தும் நோக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அரச வேலைவாய்ப்பிற்கு கட்டாயமாக சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் தமிழர்கள் தமது பிரதேசங்களில்க் கூட அரச வேலைகளைப் பெற்றுக்கொள்வதை சிறிமாவோ அரசு முற்றாகத் தடுத்தது. அதுமட்டுமல்லாமல் மொழி அடிப்படையிலான தரப்படுத்தல்களை பல்கலைக்கழக அனுமதிக்கு கட்டாயமாக்கியதன் மூலம் பெருமளவு தமிழ் இளைஞர்களின் பல்கலைக்கழக தகுதியினை இல்லாமலாக்கியது. தமது கல்வியில் பாரிய தாக்கத்தை சிங்கள அரசு ஏற்படுத்தியமை தமிழ் மாணவர்களை சிங்களவர்களிடமிருந்து அந்நியமாக்கியதுடன், தமது தமிழ் அரசியல்த் தலைமைகளிடமிடுந்து அந்நியப்பட வைத்தது. தரப்படுத்தலின் பாதிப்புப் பற்றி தமிழ் அரசியல்த் தலைமைகள் காட்டிய அசமந்தப்போக்கும், அதன் தாக்கம் குறித்த போதிய அறிவின்மையும் தமிழ்த் தலைமைகளை இளைஞர்களிடமிருந்து அந்நியப்படுத்தக் காரணமாகின. தமிழர்களில் பலர் சமஷ்ட்டிக் கட்சியின் ஆதரவுடன் அரச அதிகாரிகளாக, ஆசிரியர்களாக பதவிவகித்து வந்தனர். பல தமிழர்கள் சமஷ்ட்டிக் கட்சியில் இணைவதன் மூலம் தமது வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு தரப்படுத்தல்பற்றி அதிக்க அக்கறைப்படாமல் இருந்ததுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களில் அது ஆறில் ஒன்று மட்டுமே என்கிற நிலைப்பாட்டிலும் செயற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தமது அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு தமக்கான பிரச்சினைகளை தாமே தீர்க்கும் முடிவிற்கு வந்தனர். அதன் முதற்படியாக தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக பொன்னுத்துரை சத்தியசீலன் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் இவ்வமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் பிரபாகரன், சிறிசபாரட்ணம், சிவகுமாரன் ஆகியோரும் செயற்பட்டனர். பின்னர் இவ்வமைப்பு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  20. பாதுகாப்பும் பந்தோபஸ்த்தும் 1968 ஆம் ஆண்டு, தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் மிகுந்த விரக்தியோடும், ஆத்திரத்தோடும், டட்லி சேனநாயக்கவின் அரசின் பங்காளிகள் எனும் நிலையிலிருந்து வெளியேறிச் சென்றனர். தந்தை செல்வாவின் கட்சி மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமுமே தாம் தொடர்ச்சியாக சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுவருவது குறித்து இதே காலப்பகுதியில் மிகுந்த சினங்கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது குறிப்பிடத்தக்களவு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்கு தமது அரச அதிகாரத்தையும், ராணுவ பலத்தையும், கூடவே சிங்களக் குண்டர்களையும் சிங்களத் தலைவர்கள் பாவிக்கத் தொடங்கியிருந்தனர். காலிமுகத்திடலில் தமிழ்த்தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரக நிகழ்வினை குண்டர்களைக் கொண்டு அடித்து அழித்த சிங்களத் தலைவர்கள், அதனைத் தொடர்ந்து கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் வேலை செய்துவந்த தமிழ் அதிகாரிகள் மீதும், தமிழ் விவசாயிகள் மீதும் கடுமையான வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருந்தனர். இருவருடங்களுக்குப் பின்னர், 1958 இல் தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள் இலங்கையின் பல பாககங்களிலும் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலாவது பொலொன்னறுவையூடாகச் சென்றுகொண்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு ரயில் மீது பதவியா குடியேற்றத்தில் வசித்துவந்த சிங்களக் குண்டர்களால் நடத்தப்பட்டது. பின்னர் இத்தாக்குதல்கள் அநுராதபுரம், தலைநகர் கொழும்பு, கண்டி உட்பட பல மலையகத் தமிழ்ப்பகுதிகளுக்கும் பரவியது. தமிழர்கள் சகட்டுமேனிக்குத் தாக்கப்பட்டதுடன், குழந்தைகள் கொதிக்கும் தார்ப் பீபாய்க்களுக்குள் வீசிக் கொல்லப்பட்டனர். பலர் தாம் உடுத்திருந்த உடைகளுடன் அவர்களின் வீடுகளிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்ட அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இப்படித் தஞ்சம் புகுந்த தமிழர்களை அரசு கப்பல்கள் மூலமும், ரயிகள் மூலமும் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் மீது சிங்களக் காடையர்களும், அரச இயந்திரமும் திட்டமிட்ட வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்க, இந்த வன்முறைகளுக்கான காரணம் தமிழ் சமஷ்ட்டிக் கட்சியினர் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டதுதான் என்றும் குற்றஞ்சாட்டிய பண்டாரநாயக்கா, சிங்களவர்களின் ஆத்திரத்தைத் தணிப்பதற்கு ஒரே வழி சமஷ்ட்டிக் கட்சியினரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் என்று கூறியதுடன் அவர்களை 1958 ஆனி 4 ஆம் திகதிலிருந்து 1958 புரட்டாதி 4 வரை சிறையில் அடைத்தார். அவ்வாறே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு சமஷ்ட்டிக் கட்சியினர் இலங்கையில் தமிழருக்கென்று தனியான நாடொன்றினை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற குற்றஞ்சாட்டி 1961 ஆம் ஆண்டு சித்திரை 17 இல் மீண்டும் சிறையில் அடைத்தது. அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட தருணத்தில் அரச வானொலியில் உரையாற்றிய சிறிமாவோ பின்வருமாறு கூறினார், "கடந்த வாரம் சமஷ்ட்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் தமிழர்களுக்கென்று தபால் சேவை ஒன்றினையும், காவல்த்துறை ஒன்றினையும், காணி கச்சேரியையும் உருவாக்கி, தமிழர்களுக்கு காணிகளுக்கான அதிகாரத்தினையும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது சட்டபூர்வமாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவமத்திக்கின்ற, அதன் அதிகாரத்திற்குச் சவால் விடுகின்ற நடவடிக்கையாவதோடு, தமிழர்களுக்கென்று தனியான நாடொன்றினை இலங்கையில் உருவாக்குவதனை நோக்காகக் கொண்டே இது நடத்தப்பட்டுவருகின்றது என்பதும் தெளிவு". சிறிமாவின் முக்கிய மந்திரிகளில் இருவரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மற்றும் சி பி டி சில்வா ஆகியோர் டட்லியின் அரசைத் தோற்கடிக்க தந்தை செல்வாவின் உதவியினை முன்னர் நாடியிருந்தனர். பின்னர் 1960 இல் தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் இருவரும் தனிச் சிங்களச் சட்டத்தினை தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் அமுல்ப்படுத்த 1961 இல் முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனைத் தொடர்ந்து, யாழ் கச்சேரிக்கு முன்பாக சமஷ்ட்டிக் கட்சியினர் இன்னொரு சத்தியாக்கிரக நிகழ்வினை 1961, மாசி 20 ஆம் நாள் ஒழுங்குசெய்தனர். ஆரம்பத்தில் சமஷ்ட்டிக் கட்சியினரால் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. யாழ் கச்சேரியின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் சிங்களத்தில் நிர்வாகம் நடத்தப்படுவதனை தடுக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் ராணுவச் சரித்திரத்தில் முதன்முறையாக பங்குனி 30 அன்று ஒரு தொகுதி கடற்படை வீரர்களை இலங்கையரசு வான்வழியாக யாழ்ப்பாணத்தில் தரையிறக்கியது. யாழ் கச்சேரியினைச் சுற்றிவளைத்து தமிழர்கள் இப்பகுதிக்கு வருவதனைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. ஆனால், தனியார் காணிகளுக்கூடாகவும், சிறுவீதிகள், ஒழுங்கைகளுக்கூடாகவும் பெருமளவு தமிழர்கள் கச்சேரிநோக்கி திரள் திரளாக வந்துகொண்டிருந்ததால் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. அகிம்சை ரீதியிலான தமது ஆர்ப்பாட்டத்தை ராணுவ ரீதியில் அடக்க அரசு முனைந்ததற்குப் பதிலடியாக சமஷ்ட்டிக் கட்சி தமது சத்தியாக்கிரக நடவடிக்கைகளை ஏனைய தமிழ்ப் பகுதிகளான வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருந்த கச்சேரிகளுக்கு முன்னாலும் விஸ்த்தரித்துக் காட்டியது. தமது அகிம்சை ரீதியிலான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வலுத்துவரும் ஆதரவினை உணர்ந்துகொண்ட சமஷ்ட்டிக் கட்சியினர், சில குறிப்பிட்ட சட்டங்களை வேண்டுமென்றே மீறுவதன்மூலம் சிறை செல்ல எத்தனித்தனர். அதன்படி சித்திரை 14 இல் தமிழ் அரசு தபால்ச் சேவை எனும் நடவடிக்கையினை அவர்கள் ஆரம்பித்தனர். தபால் அதிபராக தன்னை அமர்த்திக்கொண்ட தந்தை செல்வா அவர்கள் ஆயிரக்கணக்கான தபால்த் தலைகளை விநியோகித்தார். மேலும் சித்திரை 16 ஆம் திகதி தமிழ் அரசு காணிக் கச்சேரியையும் அவர் ஆரம்பித்தார். இதன்மூலம் தமிழ் விண்ணப்பதாரிகளுக்கு அரச காணிகள் உரிமையாக்கப்பட்டன. சமஷ்ட்டிக் கட்சி தனது சத்தியாக்கிரக போராட்டத்தை, அரசுக்கு அடிபணியாமைப் போராட்டமாக முன்னெடுத்திருப்பதைக் கண்ட சிறிமா அரசு இதற்குப் பதிலடி கொடுக்க நினைத்தது. உடனடியாக அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய சிறிமா, தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க ராணுவத்திற்கு சகல அதிகாரங்களையும் வழங்கி அனுப்பிவைத்தார். இதன் முதற்படியாக சமஷ்ட்டிக் கட்சியின் சத்தியாக்கிரக ஏற்பாட்டாளர்களையும், அதற்குத் துணையாக பணிபுரிந்த பல தொண்டர்களையும் ராணுவம் கைதுசெய்தது. சத்தியாக்கிரகப் போராட்டங்கள் அரச அடக்குமுறையினால் செயலிழக்க வைக்கப்பட்டாலும் கூட தமிழ் மக்களிடையே விடுதலைக்கான வேட்கை சிறிது சிறிதாக பற்றியெரிய இச்சத்தியாக்கிரக நடவடிக்கை காரணமாகியது. மேலும், தமது அகிம்சைவழிப் போராட்டத்தை கொடூரமாக அடக்க இறக்கப்பட்டிருக்கும் அரச ராணுவத்துடன் நேரடியாக மோதுவது எனும் மனநிலையினை தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் இது ஏற்படுத்திவிட்டிருந்தது.
  21. கூட்டணி முன்வைத்த நான்கு அம்சக் கோரிக்கை 1. இலங்கைச் சமஷ்ட்டி ஒன்றியத்திற்குள் மொழி அடிப்படையில் தமிழர்க்கென்று தனியான அதிகாரம் மிக்க பிரதேசத்தையோ அல்லது பிரதேசங்களையோ உருவாக்க வேண்டும். 2. தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்து மீளவும் கொடுக்கப்படுவதுடன், அரச அகரும மொழியென்கிற அந்தஸ்த்தும் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழிக்கும் வழங்கப்படுதல் அவசியம். 3. நடைமுறையிலிருக்கும் அநீதியான பிரஜாவுரிமைச் சட்டத்தினை ரத்துச் செய்து, மலையகத் தமிழருக்கான பிரஜாவுரிமையினை மீளவும் வழங்க வேண்டும். 4. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சமஷ்ட்டிக் கட்சியினருடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று தொடர்பாக ஒருமித்துச் செயற்படப்போவதாக பண்டாரநாயக்க அறிவித்திருந்தார். மொழிப்பிரச்சினை தொடர்பான சிக்கலுக்கு பண்டாவின் தனிச் சிங்களக் கொள்கையினை விட்டுக் கொடுக்காமலும், செல்வாவின் இரு மொழிக் கொள்கையினை ஏற்றுக்கொண்டும் பொதுவான இணக்கப்பட்டிற்கூடான தீர்வொன்றை எட்டுவதென்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின்படி தமிழும் தேசிய மொழியாக்கப்படுவதுடன், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழே நிர்வாக மொழியாக இருக்கும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த உடன்பாடும் சிங்களவர்களால் கைவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1956 இல் டட்லியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழே நிர்வாக மொழியாக இருக்கும் என்ற ஒப்புதலும் கைவிடப்பட்டது. மேலும், தமிழர்கள் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழில் உரையாடி தமது நாளாந்த அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்கிற உடன்பாடும் கைவிடப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.